Loading

பாகம் – 14

ஜெயலட்சுமி, சக்தியை பார்த்து அமைதியாக இருக்கும்படி கண்களைக் காண்பித்தாள். 

பிறகு ராஜலட்சுமி, ராஜேந்திரனை பார்த்து, “நீங்க இவ்வளவு தூரம் கட்டாயப் படுத்துவதால் மட்டும் நான் ஒத்துக்குறேன் என் தம்பிக்கும் நாளைக்கே ரிசப்ஷன் அங்கேயே வச்சுக்கலாம்” என்றாள்.

ராதிகா, “என்னக்கா இது எல்லாம் நல்லாவா இருக்கும். நம்ம வீட்டு விசேஷத்துக்கு பெரிய மனுஷங்க எல்லாம் வருவாங்க”.

“இவங்க குடும்ப ஆளுங்க எல்லாம் வந்தா நமக்கு அவமானமா இருக்காதா?” என்றாள் குத்தலாக. இவர்களுக்கு வசதி கம்மி என்னும்படி கூறினார். 

ஜெயலட்சுமிக்கு கோபம் தலைக்கு ஏறியது. ஆனால் அந்த வீட்டிற்குள் நுழைய வேண்டும் தன் மனதில் இருக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை நினைத்து அமைதியாக இருந்தாள்.

ராஜலட்சுமி, “நீ சும்மா இரு உனக்கு ஒன்னும் தெரியாது” என்று ராதிகா வாயை அடக்கினார்.

விக்ரம் சிரித்துக் கொண்டே, “தெரியும் ஜெயா ஆன்டி இவங்க ரொம்ப போர்ஸ் பண்ணதுனால் மட்டும் தான் நீங்க ஒத்துக்குறீங்க என்று எனக்கு நல்லாவே தெரியும்“ என்றான் நக்கலாக. 

ராஜலட்சுமி, “அப்படின்னா நாளைக்கு நீங்க கண்டிப்பா ரிசப்ஷனுக்கு வந்துடனும் ரெண்டு பொண்ணு மாப்பிள்ளைக்கும் ஒன்னாவே ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணிடலாம்“ என்றார்.

ராதிகா வீட்டை சுற்றி தன் கண்களால் ஸ்கேன் செய்தவள், “அக்கா சீக்கிரம் இங்க இருந்து கிளம்பலாம்”. 

“என்னால் இங்க மூச்சை கூட விட முடியல கொஞ்சம் கூட காற்று வசதியே இல்லை ரொம்ப ஸ்வெட் ஆகுது“ என்று வேண்டும் என்றே கூறினாள்.

ஜெயலட்சுமி, ராதிகா வை பார்த்து முறைத்தாள். ராதிகா எழுந்து, “சீக்கிரம் வாங்க கிளம்பலாம். அதான் சொல்லியாச்சு இல்ல வர சொல்லி” என்று விட்டு வெளியே சென்று விட்டால். 

பிறகு அனைவரும் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.

நிலா, கைகளை பிசைந்தபடி தன் அரையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தாள். 

விக்ரம் சட்டென்று கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். நிலா சித்தி என்ன சொன்னாங்க என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக விக்ரம் அருகில் சென்று “சித்தி” என்று ஆரம்பித்தாள்.

 

அதற்குள் விக்ரம் ஒரு துண்டை கையில் எடுத்துக் கொண்டு பாத்ரூம் உள்ளே நுழைந்து விட்டான்.

நிலா தலையில் அடித்துக் கொண்டு இப்போ உடனே குளிச்சு என்ன ஆகப்போகுது கொஞ்சம் ஆச்சு அறிவு இருக்கா பாரு. 

அங்க என்ன நடந்து இருக்குமோ தெரியலையே ஒரு வேலை ஏதேனும் பிரேச்சனை ஆகி இருக்குமோ. 

அதான் இவங்க கோவமா இருக்காங்கலோ என்று புலம்பிக் கொண்டு இருந்தாள் கொஞ்சம் சத்தமாகவே. 

அதை கேட்டு கொண்ட விக்ரம் மெதுவாக வெளியே வந்து அவள் பின்னால் கை கட்டியபடி நின்று சிரித்து கொண்டு இருந்தான். 

நிலா அவனை திட்டிக் கொண்டே சட்டென்று திரும்பினால். விக்ரம் , நிலாவை தான்டி முன்னே சென்று வேண்டுமென்றே அவலை அலைய விட்டான். 

விக்ரம் நிலா பின் தொடர்வது தெரியாதது போல் கண்ணாடியின் முன்னாடி நின்று விசில் அடித்துக் கொண்டும் ஸ்பிரே அடித்துக் கொண்டும் தன் ஆடைகளை சரி செய் கொண்டும் இருந்தான்.

அப்படியே கண்ணாடி வழியாக நிலாவை பார்த்து ரசித்து சிரிப்பை அடக்கிக் கொண்டும் இருந்தான். 

பிறகு சிறிது நேரம் கழித்து விக்ரம், “நிலா” என்று அழைத்தான். நிலா ஆவலாக இவன் ஏதோ கூற வருகிறான் என்று நினைத்து, “நா இங்க இருக்கேன” என்றாள் புன்னகையோடு. 

விக்ரம் சீரியஸ் ஆன முகத்துடன், “நிலா நான் வெளியே போகிறேன் நைட் டின்னருக்கு வீட்டுக்கு வந்திடுவேன் வீட்ல யாராவது கேட்டா சொல்லிடு” என்று சரசரவென வெளியே சென்று விட்டான். 

நிலா கோவமாக இவருக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது. ஒரு இடத்துக்கு போய்ட்டு வந்தா அங்க என்ன நடந்தது என்று சொல்லனும் என்று கூட தெரியல. அதுவும் என் வீட்டுக்கு போய் இருக்காங்க. 

அப்போ அங்க என்ன நடந்தது என்று நான் தெரிஞ்சுக்க ஆவலா இருப்பேன்னு கூடவா இவங்களுக்கு தெரியாது. 

இந்த பேசிக் ஃநாலேட்ஜ் கூடவா இல்ல என்று விக்ரமை வருத்தெடுத்துக் கொண்டிருந்தால். 

அந்த சமயம் சரியாக உள்ளே வந்த விக்ரம் ஒற்றை புருவத்தை ஏற்றியபடி, “மேடம் யாரை திட்டிக்கிட்டு இருக்கிங்க? என்றான். 

நிலா எதிர் பார்க்காமல் திடீரென விக்ரம் வந்ததில் வார்த்தைகள் தந்தி அடித்தது போல், “அஅ.. அது அது ஒன்னும் இல்லை” என்றாள். 

விக்ரம், “அப்படியா” என்று கூற்ந்த பார்வை பார்த்தான். அந்த பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல் நிலாவின் விழிகள் அங்கும் இங்கும் நடனம் ஆடிக்கொண்டு இருந்தது.

விக்ரம் மனதில் நிலா தன்னிடம் வாய் திறந்து அங்கு என்ன நடந்தது என்று அவளே கேட்க வேண்டும் என்று நினைத்தான். 

அதனால் நிலா படும் அவதியைப் பார்த்து சிரிப்பை கடின பட்டு அடக்கிக் கொண்ட விக்ரம், “நிலா உனக்கு என்னிடம் ஏதாவது கேட்கனுமா?” என்றான் ஒன்றும் தெரியாதவன் போல்.

நிலா மௌனமாக அவனைப் பார்த்து ஆமா என்று தலையை அசைத்தால். விக்ரம் சிரித்துக் கொண்டே கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டேன்.

பிறகு நிலாவை பார்த்து, “தெரியும் என் பின்னாடியே நீ சுத்தி சுத்தி வரும் போதே. உங்க வீட்டுக்கு போன இடத்துலே என்ன நடந்தது என்று உனக்கு தெரிந்துக் கொள்ளனும் அதானே” என்றான்.

நிலா, கண்களை அகல விரித்து அவனைப் பார்த்து தெரியுமா? “அப்புறம் ஏன் இவ்வளவு நேரம் என்னிடம் எதுவும் சொல்லவே இல்லை. நான் எவ்வளவு பயந்தேன் உங்களுக்கு தெரியுமா?” என்றாள்‌.

பிறகு சோகமான முகத்துடன், “உங்க அம்மா, அப்பா ரொம்ப நல்லவங்களா இருக்காங்க”. 

“என் வீட்டுக்கு போன இடத்தில் என் சித்தி அவர்களை ஏதேனும் அசிங்கப்படுத்தி பேசி விடுவார்களோ என்று பயந்துட்டே இருந்தேன். சரி அங்க என்ன நடந்துச்சு?” என்றாள் .

விக்ரம், “உனக்கு என்னிடம் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தைரியமா வாயைத் திறந்து கேட்க வேண்டியது தானே” என்றான். 

நிலா மறுபடியும் மௌனம் ஆகிவிட்டால். விக்ரம், “சரி உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லவா? உன் சித்தி எங்களை எல்லாம் பார்த்தவுடன் சந்தோஷமா வரவேர்த்தாங்க“ என்றான்.

நிலா அதிர்ச்சியாக, “அப்படியா? அப்போ ரிசப்ஷனுக்கு வரேன்னு ஒத்துக்கிட்டாங்களா?” என்றாள். 

விக்ரம், “ஆமாம் உன் சித்தி, அப்பா எல்லாரும் குடும்பத்தோட வருவாங்க நீ எதுக்கும் கவலைப்படாதே” என்றான். 

நிலா முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை விக்ரம் மிகவும் ரசித்துப் பார்த்தான். 

விக்ரம் மனதில் இதுவரைக்கும் நீ எவ்வளவு கஷ்ட பட்டிருந்தாலும் சரி இனி உன் வாழ்க்கை சந்தோஷத்தால் மட்டுமே நிறைந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.

விக்ரம், “சரி அதெல்லாம் விடு. உனக்கு ஷாக்கிங் ஆன ஒரு விஷயத்தை நான் சொல்லவா?” என்றான் அவள் முகத்தைப் பார்த்து. 

நிலா பயத்துடன், “என்ன ஆச்சு சொல்லுங்க?” என்றால். விக்ரம், “அது வந்து உன்னோட மாமா சக்திக்கு கல்யாணம் ஆகிடுச்சு” என்றான். 

நிலா அதிர்ச்சியாக, “நிஜமாகவா கல்யாணம் ஆகிடுச்சா?” என்று சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்று விட்டால்.

நிலா, “அப்படின்னா இனிமே என்ன அவங்க தொந்தரவு பண்ண மாட்டாங்க இல்ல“ என்று சிரித்தாள்.

பிறகு நிலா, “சரி ஜெயா சித்தி என்னை திட்டுனாங்களா?” என்றாள் குழந்தையைப் போல். விக்ரம் இல்லை என்று தலை அசைத்தான். 

நிலாவுக்கு அப்போது தான் உயிரே வந்தது போல் இருந்தது, “அவங்களுக்கு பிடிக்காத மாதிரி நான் ஏதாச்சும் பண்ணா அவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா?” என்று தன் தோள்பட்டையில் இருக்கும் தழும்பை காண்பித்து, “இதுபோல் சூடு வச்சுடுவாங்க”.

“ஒரு நாள் சுஜி கூட சேர்ந்து ரெஸ்டாரண்டுக்கு போயிட்டு மாலை நேரம் வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. சித்தி கோவத்துல இப்படி பண்ணிட்டாங்க” என்றால் அப்பாவியாக.

அதை பார்த்த விக்ரம் கண்கள் சிவக்க கோபம் கொண்டான். தன் மனதுக்குள் சிறுவயதில் எல்லாம் நீ எவ்வளவு தைரியமா பேசுவ. 

ஆனால் இப்போ இவ்வளவு பயந்து பயந்து பேசுகிறியே என்று நொந்து போனான். அவ்வளவு பயம் காட்டி வைத்திருக்கிறால் அந்த ஜெயலட்சுமி. 

அவங்களை நான் சும்மா விடமாட்டேன். இது எல்லாத்துக்கும் உன் சித்திக்கு நான் பாடம் கற்றுக் கொடுப்பேன் என்று நினைத்துக் கொண்டான்.

சிறிது நேரம் கழித்து நிலா தான் பேசும் நிலையை உணர்ந்து அச்சச்சோ நான் ஏதோ உளறிட்டு இருக்கேன் போலயே என்று யோசித்து அமைதி ஆகிவிட்டாள். 

சிறிது நேரம் மௌனமாக இருந்தவள் யோசனையோடு விக்ரமை பார்த்து, “நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கவா?” என்றாள் தயக்கத்துடன். 

விக்ரம், “எதுவாக இருந்தாலும் என்கிட்ட நேரடியாக நீ கேட்கலாம். அதுக்கான எல்லா உரிமையும் உனக்கு இருக்கு” என்றான். 

நிலா, “கீழே உங்க அம்மா கிட்ட நம்ப ரெண்டு பேரும் இரண்டு வருஷமாக காதலிக்கிறோம் என்று ஏன் பொய் சொன்னீங்க” என்றாள். விக்ரம், “அது உண்மை தானே” என்றான். 

நிலா முதல் முறையாக கோபம் கொண்டால், “எனக்கு உங்களை யார் என்றே தெரியாது‌. நான் உங்களை எப்பொழுது காதலித்தேன்?” என்றாள் சற்று குரலை உயர்த்தி. 

விக்ரம், “நீ இப்படி கோவமா எல்லாம் பேசுவியா?” என்றான் எழுந்து நின்று.  

நிலா கோபமாக, “ஆமா என் வாழ்க்கையை நீங்க அழிச்சுட்டிங்க. என் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காம நீங்க என் கழுத்துல தாலி கட்டுனது ரொம்ப பெரிய தப்பு” என்றாள்.

விக்ரம், “என்ன டி அன்னியன் மாதிரி மாத்தி மாத்தி பேசுற. இவ்வளவு நேரம் நீ நல்லா தானே பேசிக்கிட்டு இருந்த என்கிட்ட” என்றான். 

நிலா, “அது வந்து” என்று இழுத்தவள் சிறிது நேரம் கழித்து “உங்க குடும்பம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க”. 

“போன இடத்தில் என் சித்தி இவங்க எல்லாரையும் ஏதாச்சும் சொல்லி இருப்பார்களோ என்ற பயத்தில் தான் நான் கேட்டேன்” என்றாள்.

நிலா மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தாள், “நீங்க ஏன் என்னை கல்யாணம் பண்ணிங்க?. நீங்க இவ்ளோ பெரிய சிட்டியில் இருக்கிங்க என்னை எப்படி உங்களுக்கு தெரியும்?”. 

“எப்போது என்னை காதலிச்சீங்க? நான் இதுவரைக்கும் உங்கள பார்த்ததே கிடையாது என் வாழ்க்கையில்” என்றால் சற்று கரடு முரடாக. 

விக்ரம், “அது வந்து” என்று ஆரம்பிக்கும் பொழுது சித்ரா கதவைத் தட்டி, “பெரியம்மா உங்களை சாப்பிட கீழே வர சொன்னாங்க” என்றாள்.

    

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்