
அத்தியாயம் – 11
விக்ரம் மெல்லிய புன்னகையோடு “இப்படி பார்க்காத பேபி எனக்கு கொஞ்சம் வெட்கமா இருக்கு“ என்றான்.
நிலா பதட்டமாக நகர்ந்து அமர்ந்து கொண்டு, “இல்ல இல்ல சாரி” என்று கட்டிலில் இருந்து இறங்கி விட்டாள்.
விக்ரம், “இப்ப எதுக்கு நீ இவ்வளவு பதட்டமா இருக்க சில் பேபி நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என்றான் புன்னகையோடு.
நிலா எதுவும் கூறாமல் மொனமாக இருந்தாள். விக்ரம், “பேபி உனக்கு இந்த டிரஸ் எல்லாம் பிடிச்சிருக்கா பாரு உனக்கு பிடிக்கலைன்னா எல்லாத்தையும் டோட்டலா மாத்திடலாம் எல்லாம் உன் இஷ்டப்படி தான் இனிமே“ என்றான்.
நிலா அவனை லேசாக தலை சாய்த்து ஆச்சரியமாக பார்த்தால். ஆம், இது வரை அவளிடம் பாசமாக சுஜிதாவை தவிர்த்து யாரும் பேசியது இல்லை. அவனின் பேச்சு அவளுக்கு குழப்பத்தை தான் கொடுத்தது.
நிலா, “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்“ என்றாள் தயக்கமாக.
விக்ரம், “ என்ன கேளு பேபி?” என்றான்.
நிலா, “அது வந்து நீங்க“ என்று ஆரம்பிக்கும் பொழுதே கதவு தட்டும் சத்தம் கேட்டது.
விக்ரம், “ஓ மை காட் நீ இப்போ தான் முதல் முறை என் கிட்ட பேச ஆரம்பிச்ச அதுக்குள்ள யாரோ கதவை தட்டுராங்க“ என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்தான்.
அங்கு சித்ரா நின்று இருந்தாள், “ஐயா, உங்க அம்மா வந்து இருக்காங்க உங்களை கூப்பிடுறாங்க” என்றாள்.
நிலா புறம் திரும்பியவன், “ஒரு நிமிஷம் இரு பேபி அம்மா வந்திருக்காங்களாம் நான் போய் என்னன்னு பாத்துட்டு வந்துடறேன்” என்று திரும்பி வாசலை நோக்கி சென்றான்.
நிலா திருவிழாவில் தொலைந்து போன குழந்தையை போல் முழித்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தாள்.
நிலா பக்கம் திரும்பி பார்த்த விக்ரம, “பேபி உன்ன அம்மாக்கு இன்ட்ரோ பண்ணனும் இல்ல. இந்த வீட்டு பெரிய மருமகள் நீ தானே. சோ நீயும் வா கீழே போகலாம்“ என்றான்.
நிலா பயத்துடன் அவனைப் பார்த்து, “நானா” என்றாள் மெல்லிய குரலில் தயக்கத்துடன். அவளின் தயக்கம் அவனுக்கு சரியாக புரிந்து விட்டது.
விக்ரம், “பேபி நான் பார்த்துக்கிறேன் எல்லாத்தையும். நீ எதுக்கும் பயப்பட கூடாது நீ விக்ரம் தேவ் ஓட வைஃப்” என்று அவள் கைகளைப் பிடித்து கீழே அழைத்துச் சென்றான்.
ராஜலட்சுமி வீட்டிற்குள் நுழையும் பொழுதே ராதிகா, “அக்கா இங்க என்ன காரியம் நடந்திருக்குன்னு தெரியுமா? உனக்கு” என்றார்.
ராஜலட்சுமி, “இப்போ என்ன ஆகிடுச்சுன்னு நான் உள்ள வரும்பொழுதே இப்படி கூச்சல் போட்டுட்டு இருக்க? உனக்கு என்ன பிரச்சனை?” என்று ராதிகாவிடம் சிடுசிடுத்தாள்.
ராஜேந்திரன், “ராதிகா நீ கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இருக்கியா. அவ இப்போ தானே உள்ள வர்றா அதுக்குல்ல உனக்கு என்ன அவசரம் இரு வரட்டும்” என்றான்.
ராதிகா, “இல்ல மாமா என்ன நடந்துச்சுனு அக்கா கிட்ட சொல்லனும் இல்ல” என்றாள்.
ராஜேந்திரன், “ஆமா உனக்கு இந்த குடும்பத்து மேல ரொம்ப அக்கறை தான்” என்றான் குத்திக் காட்டும் படி.
ராதிகா, “பாரு க்கா மாமாவ… இந்த வீட்ல் நடக்கிற பிரெச்சனை எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் காரணம்ன்ற மாதிரி சொல்றார்” என்றார்.
ராஜேந்திரன், “அதான் உனக்கே தெரியுமே அப்புரம் நான் ஏன் அப்படி சொல்ல போறேன்” என்றார்.
ராதிகா, “அக்கா இப்போ நான் சொல்ல போறதை நீ கேட்க போறியா இல்லையா? அந்த விக்ரம் என்ன காரியம் பண்ணி இருக்கான்னு உனக்கு தெரியுமா?. இந்த வீட்டோட மரியாதையவே அவன் கெடுத்துட்டு வந்திருக்கான்“ என்றார்.
ராஜலட்சுமி, ராஜேந்திரன் பக்கம் திரும்பி, “என்ன ஆச்சுங்க?” என்றாள்.
ராதிகா, “அக்கா நான் சொல்றேன்” என்றாள்.
ராஜலட்சுமி ஒற்றை கையை நீட்டி வாய மூடு என்னும் படி கை காட்டினார்.
ராஜலட்சுமி யின் பார்வையில் ராதிகா கப்சிப் என்று ஆகிவிட்டார். ராஜேந்திரன் பக்கம் திரும்பிய ராஜலட்சுமி, “நீங்க சொல்லுங்க என்ன ஆச்சு?“ என்றாள்.
ராஜேந்திரன், “நீ முதல்ல பிரஷ் ஆகிட்டு வா அப்புறம் பேசிக்கலாம் எதுவா இருந்தாலும்” என்றான்.
ராஜலட்சுமி, “சரி” என்று விட்டு அரையை நோக்கி கால் எடுத்து வைத்தவள் திரும்பி ராஜேந்தீரனை பார்த்து, “விக்ரம் வந்துட்டானா?” என்றார்.
ராஜேந்திரன் பதில் உறைக்கும் முன்னே ராதிகா முந்திக் கொண்டார், “அக்கா அவன் தான் இந்த குடும்பத்தோட மானத்தையே வாங்கிட்டு வந்து இருக்கானே அவன் என்ன காரியம் பண்ணி இருக்கான்னு தெரியுமா உனக்கு?” என்று மறுபடியும் ஆரம்பித்தார்.
அதில் ராஜலட்சுமி அங்கேயே நின்று விட்டார். ராதிகா, “அக்கா அந்த விக்ரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கான் க்கா“ என்றாள்.
ராஜலட்சுமி, “என்ன?” என்று அதிர்ந்து போய் பார்க்க. ராதிகா, “ஆமா க்கா அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்” என்றாள்.
ராஜலட்சுமி, “என்னோட பையன் இப்படி என்கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ண மாட்டான் எனக்கு என் பையன் மேல நம்பிக்கை இருக்கு” என்று ராஜேந்திரனை பார்த்தார்.
ராஜேந்திரன் மற்றும் ராஜலட்சுமி கணவன் மனைவியை தாண்டி நண்பர்கள் போல் பழகுவார்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ராஜேந்திரன் சொன்னால் ராஜலட்சுமி தட்ட மாட்டாள்.
அதேபோல் ராஜலட்சுமி சொன்னாலும் ராஜேந்திரன் தட்ட மாட்டான்.
இது வரைக்கும் இருவருக்கும் நடுவில் எந்த ஒரு பிரச்சனையும் வந்ததே கிடையாது. ஈகோ, பொறாமை, பொய் பேசுதல் என்று எதுவும் கிடையாது.
இவர்கள் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் முழுமையாக நம்புவார்கள். ஆகையால் ராஜேந்திரன் அருகில் சென்ற ராஜலட்சுமி, “அவள் சொன்ன எல்லாம் உண்மையா?” என்றாள்.
ராஜேந்திரன் மௌனமாக இருந்ததில் உண்மை என்று தெரிந்து கொண்ட ராஜலட்சுமி, “என்ன ஆச்சு நீங்க சொல்லுங்க?. இதுக்காக தான் என்னை பிரெஷ் ஆக சொல்லி துரத்திட்டே இருந்திங்களா?” என்றாள்.
ராஜேந்திரன் எவ்வாறு சொல்வது என்று சிறு தாயக்கத்துடன் இருந்தான். ராஜலட்சுமி, “சித்ரா” என்று கர்ஜித்தார்.
அடுப்பறையில் இருந்து ஓடி வந்த சித்ரா, “சொல்லுங்க ம்மா” என்றாள்.
ராஜலட்சுமி கோபமாக, “நீ போய் விக்ரம கூட்டிட்டு வா” என்றார்.
சித்ரா சரி என்று படியில் ஏறி அவன் அறையை நோக்கி சென்று கதவை தட்ட ஆரம்பித்தாள், “விக்ரம் ஐயா.. விக்ரம் ஐயா.. அம்மா வந்துட்டாங்க உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றாள்.
நிலா கையைப் பிடித்து விக்ரம் கீழே அழைத்துச் சென்றான். முதல் படியில் இருந்து தன் அம்மாவின் முகத்தை பார்த்தவுடன் அவன் புரிந்து கொண்டான் தன் அம்மா பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்பதை.
ராஜலட்சுமி அவன் படியில் இறங்குவதை பார்த்து சிரித்தாள். அவன் பின்னே ஒலிந்த படி இறங்கி வந்த நிலாவை பார்த்து கோபம் அடைந்தாள்.
அவன் கை நிலாவின் கையை இறுகப் பற்றி இருந்தது. அதை பார்த்த ராஜலட்சுமி பற்களை கடித்து கொண்டு, “என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்க” என்று கர்ஜித்தார்.
விக்ரம் பதில் அளிக்காமல் ராஜலட்சுமி அருகில் வந்து நின்று, “அம்மா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்றான்.
ராஜலட்சுமி தன்னிடம் ஆசிர்வாதம் கேட்டதில் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய் விட்டர்.
இவன் கல்யாணம் பண்ணிட்டு வந்த கோபத்தையும் தாண்டி இவன் அம்மா என்று அழைத்தவுடன் அவள் கோபம் வெய்யிலில் பட்ட ஐஸ்கிரீமை போல் உருகிப் போனது.
ஏனெனில், விக்ரம் சில காலமாக ராஜலட்சுமி மற்றும் ராஜேந்திரனிடம் பேசுவதை நிறுத்தி விட்டான்.
ஏன் விக்ரம் இவர்களிடம் பேசாமல் இருக்கிறான் என்ற காரணம் இன்னும் இவர்களுக்கே புரியாத புதிர்.
பலவருடங்கள் கழித்து விக்ரம் தன்னை அம்மா என்று அழைத்தவுடன் ராஜலட்சுமி மிகவும் சந்தோஷமாகி போனாள்.
ராஜலட்சுமி, “என்னங்க இங்க வந்து நில்லுங்க விக்ரம ஆசிர்வாதம் பண்ணனும். சித்ரா ஓடிப்போய் சாமி அறையில் இருந்து குங்குமமும், மஞ்சளும் எடுத்துட்டு வா” என்றார்.
சித்ரா பூஜை தட்டுடன் வந்து நின்றாள். விக்ரம் நிலா கையை பிடித்து இவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.
ராதிகா, “அக்கா பாத்தியா இவதான் நம்ப விக்ரமை கட்டிக்கிட்டு வந்தவ எப்படி கைய விடாம பிடிச்சுக்கிட்டே இருக்கா பாரு. இப்படித் தான் நம்ம பையனையும் மயக்கி வச்சிருக்கா” என்றாள் கிசுகிசுப்பாக…. ராஜலட்சுமி யை ஏற்றி விடும் படி கூறினார்.
ஆனால், ராஜலட்சுமி ராதிகா எதிர்பார்த்ததற்கு மாறாக, “இவ வந்த நேரம் தான் என் பையன் என்கிட்ட பேச ஆரம்பிச்சிருக்கான்” என்று சந்தோஷமாக கூறினார்.
ராஜலட்சுமி மற்றும் ராஜேந்திரன் மனசார வாழ்த்தினார்கள். ஆனால், ராஜலட்சுமி மனதில் தங்கள் யாரிடமும் சொல்லாமல் ஏன் இவன் திருமணம் செய்து வந்தான்.
எங்களிடம் சொல்லி இருந்தால் நாங்களே பெரிதாக கல்யாணம் பண்ணி வைத்து இருப்போமே. ஆனால், இவன் ஏன் எங்களிடம் சொல்லவில்லை என்ற எண்ணம் மனதில் தோன்ற…. அதை வெளிக்காட்டாமல் ஆசீர்வாதம் செய்தார்.
ராஜலட்சுமி, “விக்ரம் இவள் யார்? எப்படி உனக்கு தெரியும்? ஏன் எங்ககிட்ட இவளை பற்றி இவ்வளவு நாளா சொல்லவே இல்ல?”
“எங்ககிட்ட சொல்லி இருந்தா நாங்களே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருப்போமே“ என்றார் கவலையாக.
விக்ரம், “அம்மா இவ பெயர் நிலா. எனக்கு இவளை ரொம்ப பிடிச்சிருந்துச்சு. இவ சித்தி இவலுக்கு வேறு ஒரு பையனுடன் கல்யாணம் பண்ணிவைக்க முயற்ச்சி பண்ணாங்க…”
“அதனால தான் என்னால் உங்ககிட்ட எல்லாம் சொல்லி பொறுமையா கல்யாணம் பண்ண முடியாம…. அவசரமா நான் அவ வீட்டிற்கே போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதனால என்னை மன்னிச்சிடுங்க” என்றான்.
நிலா விக்ரமையே பார்த்துக் கொண்டு இருந்தாள் இவனுக்கு எப்படி என் சித்தி எனக்கு மாப்பிள்ளை பார்த்த விஷயம் தெரியும் என்று யோசித்தாள் அதற்கு மேல் விக்ரம் அவர்களிடம் எதுவும் கூறவில்லை.
ராஜலட்சுமி, “என்னங்க சரி நடந்தது எல்லாம் நடந்து போச்சு கல்யாணம் தான் இவன் இஷ்டத்துக்கு பண்ணிக்கிட்டு வந்துட்டான். நம்ப ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணலாம்” என்றால் சந்தோஷமாக.
(ஹலோ நண்பர்களே… இந்த கதை படிக்கும் அனைவரும் மறக்காமல் உங்கள் கருத்தை பகிருங்கள் நண்பர்களே. உங்கள் கருத்து தான் எங்களை மேலும் கதை எழுத ஊக்குவிக்கும். இந்த கதையை தொடர்ந்து வாசிக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றிகள் பல🙏)
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
4
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அருமையா நகருது கதை … நிறைய கேள்விகள் இருக்கு மனசுக்குள்ள … தொடர்ந்து வாசிக்கிறோம் …
நல்ல அம்மா