Loading

அத்தியாயம் 10

 

அபர்ஜித்தின் நெஞ்சில் சாய்ந்து அழுது கொண்டிருந்த பர்விதாவிற்கு,

 

சிறிது நேரம் கழித்து தான் அவளையும் மறந்து அவனிடம் ஆறுதல் தேடியது புரியவும், அவனை தள்ளி விட்டு விலகியவள்,

 

“போதும் நீங்க என்ன பாத்ததும் போதும்.. என்னால பட்டதும் போதும்.. இனி என் முகத்துலயே முழிக்காதீங்க…” என்று கூறிவிட்டு எழுந்து வேகமாக வீட்டை விட்டு வெளியேறியவள்,

 

அந்த வழியாக வந்த ஆட்டோவை பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள்.

 

எப்படியாவது தன் மனதை அவளுக்கு புரிய வைத்து, உடனே சம்மதம் கூறவில்லை என்றாலும் அவளது வெறுப்பை சம்பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்தவன்,

 

வெற்றிகரமாக அவளது வெறுப்பை சம்பாதித்து இருந்தான்.

 

எந்த பெண் தான் தமக்கைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையை தான் கட்டிக் கொள்ள நினைப்பாள்,

 

எனவே தன் மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டு, அடுத்த முறை அவளை பார்க்கும் போது இன்னும் ஆழமாக தனது காதலை கூற வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

 

ஆனால் அவனது முடிவுக்கு பர்விதா இணங்க வேண்டுமே. அடுத்த நாள் அவள் காலேஜ் வரவில்லை. அதற்கு அடுத்த நாளும் அவள் காலேஜ் வரவில்லை.

 

கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் அபர்ஜித் அவளுக்காக காலேஜ் வாசலில் காத்திருந்து அதற்கு மேல் முடியாமல், நேரில் சென்று பார்த்து விடலாம் என்று பர்விதாவின் வீட்டிற்கு சென்றான்.

 

அவனை வரவேற்றது என்னவோ பார்கவி தான் “வாங்க சொல்லவே இல்ல.. ஒரு மெசேஜ் போட்டு இருக்கலாம் இல்ல…” என்று கேட்க

 

“இல்ல பார்கவி.. ஒரு வேலையா இந்த பக்கம் வந்தேன், சரி உங்க எல்லாரையும் பார்த்துட்டு போலாம்னு…” என்று அவன் இழுக்க,

 

பார்கவியின் மனதோ எப்போதும் போல் தன்னை பார்க்க வந்து விட்டு சாக்கு சொல்கின்றான் என்று எண்ணி சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.

 

“என்னங்க.. எதுவா இருந்தாலும் ஒரு வார்த்த சொல்லி இருந்தா உங்களுக்காக நான் ஏதாவது ஸ்பெஷலா செஞ்சு வச்சிருப்பேன்ல.. சரி உட்காருங்க, என்ன குடிக்க வேணும் சொல்லுங்க.. நானே என் கையால செஞ்சு தாரேன்…” என்று அவள் ஆவலாக கேட்க,

 

“இல்ல.. எதுவும் வேணாம் பார்கவி.. நான் அவசரமா கிளம்பனும்…” என்றவன் சுற்றி முற்றி பார்க்க, பர்விதா இருக்கும் தடயமே தெரியவில்லை. சமையலறையில் இருந்து சங்கரி தான் வந்தார்.

 

“வாங்க மாப்பிள்ள…” என்று வரவேற்றவர் “என்ன கவி.. மாப்பிள்ளய நிற்க வச்சு பேசிட்டு இருக்க.. உக்காருங்க மாப்ள.. நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வாரேன்…” என்று அவர் உள்ளே போக

 

அங்கே அமர்ந்து இருந்தால் தான் பர்விதாவை பார்க்க முடியும் என்ற காரணத்தால் சோபாவில் அமர்ந்து கொண்டான் அவர்ஜித்.

 

“அப்பா உள்ள தான் இருக்காங்க.. போன முறை நீங்க வந்தபோ பாக்க முடியலன்னு வருத்தப்பட்டாங்க.. நான் கூட்டிட்டு வாரேன்…” என்று சொல்லிவிட்டு பார்கவி வசந்தராஜனை அழைக்க அவர் அறைக்கு செல்லவும்,

 

உடனே எழுந்து கொண்ட அபர்ஜித், வீட்டை சுற்றி பார்ப்பது போன்று மற்ற இடங்களில் பர்விதாவைத் தேட, அவள் கிடைக்கவில்லை.

 

அவள்தான் இவன் கார் வரும் சத்தத்திலேயே வருவது யார் என உணர்ந்து கொண்டு, வராத ஃபோன் ஹாலை எடுத்துக்கொண்டு, ஷூம் மீட்டிங் கிளாஸ் இருப்பதாக கூறிவிட்டு மொட்டை மாடியில் இருக்கும் தனி அறைக்கு சென்று விட்டாளே.

 

கீழே உள்ள அறைகளில் அவள் இருப்பதற்கான எந்த அரவமும் இல்லாமல் போக, மாடிக்கு செல்லலாம் என்று அபர்ஜித் முன்னேறும் வேளையில் வசந்தராஜன் வந்து விட்டார் .

 

அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும், அவன் கண்கள் என்னவோ அவன் காதல் கிளியை தான் தேடியது. வெகு நேரம் பேசிவிட்டு, சங்கரி கொடுத்த காஃபியையும் அருந்தியவன்,

 

அதற்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் பார்கவிடம் “எங்க உன் வாலு தங்கச்சிய காணோம்…” என்று கேட்க

 

“அவளுக்கு ஏதோ ஸ்டடி ஹாலிடேஷம் காலேஜ் இல்ல.. ஆனா ஷூம் கிளாஸ் நடக்குது.. இப்போ நீங்க வாரத்துக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் ஸ்டார்ட் ஆச்சு.. மேல ரூம்ல இருக்கா…” என்று சொல்ல

 

அவளை பார்க்க வேண்டும் என்று எப்படி கூற முடியும். சரி என்று தலையை ஆட்டியவன் முன்பு போலவே பார்கவிக்காக அவளுக்கு பிடித்த சாக்லேட் வாங்கி வந்திருந்தவன், இப்போது அதனுடன் பர்விதாவுக்கு பிடித்த வையிட் சாக்லேட்டும் வாங்கி வந்திருந்தான்.

 

அதை மேலே வைத்து பார்கவியிடம் கொடுத்தவன் “இந்த வைட் சாக்லேட் பர்விக்கு பிடிக்கும் இல்ல…” என்று அசடு வழிந்த படி கொடுக்க,

 

“அட மச்சினிச்சி மேல பாசம் தான் போல.. எப்பவுமே நீங்க எனக்கு மட்டும் வாங்கிட்டு வருவீங்களா..

 

…அவ பாவமேனு நான் அப்பாகிட்ட சொல்லி அவளுக்கு வைட் சாக்லேட் வாங்கிட்டு வர சொல்லிக் கொடுப்பேன்.. இந்த முறை நீங்களே வாங்கிட்டு வந்துட்டீங்க.. நீங்க கொடுத்தீங்கன்னு நான் சொல்லிக் கொடுத்துடறேன்…” என்று புன்னகையுடன் பார்கவி கூற

 

கள்ளம் கபடம் இல்லாத அவளை ஏமாற்றுவதை நினைத்து தன்னைத்தானே வெறுத்துக் கொண்டான் அபர்ஜித்.

 

அவனுக்கும் வேறு வழியே இல்லாமல் போனதே. சரி என்று தலையாட்டியவன் அனைவரிடமும் விடை பெற்று, அவனவளைக் காண முடியாத அழுத்தத்துடன் அலுவலகம் வந்து சேர்ந்திருந்தான்.

 

தன்னை புரிய வைக்க நினைக்கின்றான். அதற்கான வாய்ப்பை கூட வழங்காமல் விலகி நிற்பவளை நினைத்து மனது வலிக்க, தலைவலியும் வந்தது.

 

எப்படி பர்விதாவின் மனதில் இடம் பிடிப்பது என்று புரியாமல், அன்றைய நாள் முழுவதும் சோகத்திலேயே சுற்றி வந்தான் அபர்ஜித். அவனை நன்கு கவனித்த அறிவழகி மாலை 6:00 மணி போல்

 

“சீனியர் எதுக்கு இப்போ சோகமா மூஞ்ச வச்சிருக்கீங்க…?”

 

“அறிவு! தயவு செய்து வாய மூடிட்டு போயிரு.. நானே அவள எப்டி கரெக்ட் பண்றதுன்னு தெரியாம மண்ட காஞ்சி போய் இருக்கேன்…”

 

“அட என்ன சீனியர் இதெல்லாம் சப்ப மேட்டர் சால்ட் வாட்டர் அறிவ பொருத்த வரைக்கும்…”

 

“ஓஹோ.. அப்போ ஐடியா சொல்லு…”

 

“இதுல யோசிக்க என்ன இருக்கு.. நீங்க வலுக்கட்டாயமா கிஸ் பண்ணியும் அத அவங்க யார்கிட்டயும் சொல்லல.. அப்படின்னா என்ன அர்த்தம்…?”

 

“என்ன அர்த்தம்..?”

 

“அவங்களுக்கு நீங்க கிஸ் பண்றது பிடிச்சிருக்கு.. பிடிக்கலைன்னா வீட்ல சொல்லி.. அவங்க அக்கா கிட்ட சொல்லி.. இத பெரிய ப்ராப்ளமாக்கி.. உங்கள நடு ரோட்டுல நிற்க வெச்சு நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்டு தூக்குல தொங்க வச்சிருக்க மாட்டாங்க…?”

 

“அவ பண்றாளோ இல்லையோ.. இதெல்லாம் நடக்கலன்னு உனக்கு கவல இல்ல…” என்று கேட்க

 

” அது.. உண்மை ஒரு பக்கமா இருந்துட்டு போகட்டும்…”

 

“என்னது..?”

 

“அகத்துல உள்ளத முத்துல படிக்கிறது தப்பு சீனியர்…”

 

“உனக்கு இன்னும் சம்பளம் நான் தரல இல்ல…”

 

“ஐயோ சீனியர் அப்டி எல்லாம் நடந்து இருந்தா.. குறுக்கால விழுந்துனாலும் உங்க குறுக்கு எழும்பு முறியாம காப்பாத்திருப்பேன்… என் குடும்பமே உங்கள நம்பி தானே இருக்கு…” என்று அவள் சொல்ல

 

அவன் அவளை முறைத்து பார்க்க “இப்ப எதுக்கு இப்டி பாசமா பாக்குறீங்க…?”

 

“எப்ப பாரு என் சம்பளத்த வெச்சித்தான் குடும்பத்த காப்பாத்தணும்.. நான் வேலைக்கு போயித்தான் என் குடும்பத்தை காப்பாத்தணும்னு சொல்றியே இது உனக்கே அடுக்குமா..? உன் குடும்பத்தில எத்தன பேர் இருக்காங்க…?”

 

“அது ..இப்போ என்ன.. நான் மட்டும் தான்.. அதுக்குன்னு குடும்பம் இல்லன்னு ஆயிடுமா.. வீடு இருக்கு, வாசல் இருக்கு, கவர்மெண்ட் ஆதார் கார்டு தந்திருக்கு.. வீட்டு தோட்டத்துல பூச்செடி எல்லாம் இருக்கு, வீட்டுக்குள்ள மீன் தொட்டி இருக்கு, அந்த மீன் தொட்டிக்குள ரெண்டு ஏஞ்சல் ஃபிஷ் இருக்கு..

 

…அப்புறம் வீட்டுக்கு பின்னுக்கு நாலு கோழி வளர்க்கிறேன்.. ஒரு பப்பி வளர்க்கிறேன், இரண்டு லவ் பேர்ட்ஸ் கூட வளர்க்கிறேன், அப்போ என் மொத்த குடும்பமும் என்ன நம்பி தானே இருக்கு சீனியர்…” என்று மூச்சை பிடித்து அவள் பேச

 

அபர்ஜித் மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து தான் குடித்துக் கொண்டான்.

 

“ப்ளீஸ் அறிவு என்ன விட்டுடு நான் வீட்டுக்கு கிளம்புறேன்…”

 

“அட இருங்க சீனியர் ஐடியாவ கேளுங்க…”

 

“சரி சொல்லித் தொலை.. அப்புறம் இருக்கு உனக்கு…”

 

“நீங்க வலுக்கட்டாயமா கிஸ் பண்ணது அவங்களுக்கு புடிச்சிருக்கு.. சில பொண்ணுங்களுக்கு சாஃப்ட் ஹீரோவ விட ரக்கர்ட் ஹீரோவோ இல்ல ஆன்டி ஹீரோவ தான் பிடிக்கும்…”

 

“அது என்ன ஆன்டி ஹீரோ…?”

 

“ஆன்டி ஹீரோவுக்கான வரைவிலக்கணம் சரியா எனக்கு தெரியல.. ஆனா ஒரு 32 குணாதிசயங்கள் எழுதி வச்சிருக்கேன் சொல்லட்டுமா…?” என்று ஆர்வமாக அவள் கேட்க

 

“விடிஞ்சிடும்.. வேணாம்.. நீ ஐடியாவ மட்டும் சொல்லு…”

 

“அதுதான் சீனியர்.. நீங்க முன்னாடி கிஸ் பண்ண மாதிரியே அவங்கள இழுத்து வச்சு திணற திணற கிஸ் பண்ணிடுங்க.. ஓட்டவா கரெக்டா ஆயிடுவாங்க… என்று அறிவழகி சொல்ல,

 

“ஒருவேள நீ சொல்ற மாதிரி இருக்குமோ.. சரி நான் ட்ரை பண்ணி பாத்துட்டு வாரேன்…” என்று அபர்ஜித் எழுந்து செல்ல

 

“சீனியர் ஆல் த பெஸ்ட்…” என்று அறிவழகி கத்தியது காற்றில் கரைந்து போனது.

 

*********

புயல் வேகத்தில் அலுவலகத்தில் இருந்து வந்தவனுக்கு நன்கு தெரியும் நேரடியாக சென்று பர்விதாவை பார்க்க முடியாது என்று .

 

திருட்டுத் தனமாக தான் செல்ல வேண்டும் என்று நினைத்தவன் அதை அவன் மட்டுமே செயல்படுத்தாமல், அறிவழகிக்கு ஃபோனில் விஷயத்தை கூற, பர்விதாவின் வீட்டின் அட்ரஸை கேட்டு வாங்கியவள் தன் ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள்.

 

புதிதாக ஜீன்ஸ் டாப் போட்டுக்கொண்டு காலில் அசிங்கத்தை மிதித்தது போல், நண்டு நடை நடந்து வந்தவளை பார்த்த அபர்ஜித் தலையில் அடித்துக் கொண்டான்.

 

“ஏய் அறிவு.. என்னாச்சு எதுக்கு ஒரு மார்க்கமா நடந்து வாற..?” என்று கேட்க

 

“சீனியர் அது என்னவோ புடவையில இருக்கிற கம்படபிள் இந்த மாடன் ட்ரெஸ்ல எனக்கு இல்ல.. ஆனாலும் நாம இப்போ போறது யாருக்குமே தெரியாம.. சுவர் எகிறி குதிச்சு திருட்டுத்தனமா உங்க லவ்வர பார்க்கிறதுக்கு..

 

…அதுக்கு சில பல சாகச வேலைகள் செய்ய வேண்டி இருக்கும்.. அதுக்கு புடவ சரியா வராது, அதுதான் ஜீன்ஸ் போட்டுட்டு வந்தேன்..

 

…ஆனா இத போட்டுக்கிட்டு ரெண்டு அடி சுவர கூட தாண்ட முடியுமான்னு தெரியல.. இதுவே நான் புடவ கட்டி வந்திருந்தேன்னா அப்டியே தூக்கி வேட்டி மாதிரி மடிச்சு கட்டிட்டு எட்டடி சுவர கூட அசால்டா தாண்டி இருப்பேன்..

 

…இப்போ பாருங்க இத போட்டுட்டு நான் தத்தி தத்தி நடக்க வேண்டியதா இருக்கு.. நான் எல்லாம் டூ கே கிட்ஸ்னு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா? மாடன் ட்ரெஸ் போட முடியல சீனியர்…”

 

“லூசு லூசு.. நான் எதுக்கு திருட்டுத்தனமா போய் பாக்கணும்.. நான் இந்த வீட்டோட மாப்பிள்ள தான் இன்னுமே.. கேட்ட திறந்துட்டு போனாலே வாங்க மாப்பிள்ளைன்னு மரியாத கொடுத்து ஹால்ல கூப்பிட்டு உட்கார வைக்க போறாங்க…” என்று சொல்ல

 

இப்போது அறிவழகி தலையில் அடித்துக் கொண்டு நெஞ்சிலும் அடித்தவள் “ஐயோ.. ஐயோ.. ஐயோ.. லவ் ஒன்ன பண்ணி தொலைச்சீங்க உங்க மூளையே மழுங்கி போச்சு சீனியர்…”

 

“ஏய் என்ன.. சைக்கிள் கேப்ல என்ன கிண்டல் பண்ற…”

 

“கிண்டல் எல்லாம் இல்ல.. உண்மைய தான் சொல்றேன்.. நீங்க உங்க ஆள சமாதானப்படுத்துறதுக்கு போறீங்க..

 

…எப்டி.. எப்டி.. உங்களுக்கு கல்யாணம் பேசி இருக்கிற பொண்ணோட தங்கச்சி உங்க ஆளு அவங்கள சமாதானப்படுத்த போறீங்க.. நீங்க ஸ்ட்ரெயிட்டா உள்ள போனதும், கூப்பிடு வச்சு உங்க மாமியார் நடு ஹால்ல விருந்து வைப்பாங்களே தவிர

 

…உங்க மச்சினிச்சியோட தனியா பேச விட மாட்டாங்க.. அப்புறம் எப்டி நீங்க உங்க ஆள சமாதானப்படுத்த முடியும்.. ஐயா செஞ்சிட்டு வந்திருக்கிற வேலை வேற லெவல்ல..

 

…உங்க இரண்டாவது பொண்ணுக்கு முத்தம் கொடுத்து கட்டி பிடிச்சு கசமுசா பண்ணிட்டேன்னு உங்க மாமியார்கிட்ட வாக்குமூலம் கொடுக்கப் போறீங்களா என்ன…?” என்று கேட்க

 

“நீ சொல்றது சரி தான்.. அத யோசிச்சு தான் உனக்கே ஃபோன் பண்ணேன்.. இப்ப பாரு நானே மறந்துட்டேன்…” என்று ஒற்றை விரலால் நெற்றியை நீவியவன்

 

“சரி நாம திருட்டுத்தனமா தான் போகணும்.. இது உனக்கு கம்பர்டபுளா என்ன.. சாரியோட வந்திருக்க வேண்டியதுதானே…” என்று கேட்க

 

“சாரி கம்பர்டபுளானதுதான் ஆனா அதுல சில பல சங்கட சிக்கல் இருக்கு.. அதனால தான் அத அவாய்ட் பண்ணிட்டேன்…”

 

“ஹேய் கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு சட்ட சிக்கல்னு சொல்லுவாங்க அது என்ன சங்கட சிக்கல்…”

 

“என்ன சீனியர் வக்கீல் என்கிறதால எல்லாத்துக்கும் குறுக்கு விசாரண பண்ணக்கூடாது.. சங்கட சிக்கல் எல்லாம் பொண்ணுங்களுக்கு தான் புரியும்..

 

…உங்களுக்கு எல்லாம் சொல்லி விளக்க முடியாது.. நீங்க முதல்ல ஏறி குதிங்க…” என்று அவனை பிடித்து பக்கத்தில் இருந்த குழியை கவனிக்காமல் தள்ள ,

 

“ஏய் எங்க தள்ளிவிட்டு கொல்ல பாக்கிற.. மதில் ஏற வேணும்னா மேல பாத்து ஏறனும்.. நீ பள்ளத்துல தள்ற…” என்று திட்டியவன்

 

பர்விதாவின் வீட்டின் பின்பக்க சுவரை ஏறி குதித்து மற்றைய பக்கம் வந்தவன் “அறிவு சீக்கிரமா ஏறி தாண்டி குதி…” என்று சொல்ல

 

“எங்கிருந்து ஏறி குதிக்கிறது.. ஒரு பொம்பள புள்ளைய கூட்டுக் களவாணியா கூட்டி வந்தோமே.. அவள முதல்ல ஏற விட்டுட்டு நம்ம ஏறுவுமேனு இல்ல..

 

…முந்திரிக்கொட்டை மாதிரி நீங்க முதல்ல ஏறி குதிச்சிட்டு என்ன ஏறு ஏறுனா எங்க இருந்து ஏறுறது?..தாவுறது இல்ல தவழ கூட முடியாது…” என்று சொல்ல,

 

தலையில் அடித்துக் கொண்ட அபர்ஜித் “உனக்கு ஃபோன் பண்ணி பிளான சொன்னேன் பாரு என்ன சொல்லணும்…” என்று திட்டிவிட்டு மீண்டும் மதிலில் ஏறி அமர்ந்து,

 

அவளுக்கு கை கொடுத்து தூக்கி விட்டு, மற்றைய பக்கம் இறக்கி விட்டவன், அவளை அழைத்துக்கொண்டு யாரும் அறியா வண்ணம் வீட்டின் பின்பக்கம் சென்று கதவைத் தள்ள அது லேசாக திறந்து கொண்டது.

 

“அட உள்ள பூட்டி வைப்பாங்கன்னு பாத்தேன்.. பூட்டல…” என்று சொன்னவன் ஜன்னலின் வழியாக ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்து, பர்விதாவின் அறையை கண்டு கொண்டவன் வெளியே அறிவழகியை நிக்க வைத்து விட்டு,

 

“அறிவு உன்னத்தான் நம்பி உள்ள போறேன்.. யாராச்சும் இந்த பக்கம் வந்தா என் ஃபோனுக்கு மிஸ்ட் ஹால் அடி புரியுதா…?” என்று கேட்க

 

“அட இது என்ன பழைய காலமா சீனியர்.. அதெல்லாம் பக்கவா பண்ணிடுவேன்.. நீங்க தைரியமா உள்ள போங்க.. ஆனா ஒன்னு ஃபோன்ல சார்ஜ் இருக்கு இல்ல…?”

 

“அதெல்லாம் இருக்கு…” என்று விட்டு அறைப் பக்கம் திரும்பியவன் மீண்டும் அவளிடம் திரும்பி “சரி உன் ஃபோன்ல பேலன்ஸ் இருக்கா..?” என்று கேட்க

 

“ஓஓ….” என்று அவள் ராகம் கூட்ட உன்ன நம்ப முடியாது ஃபோன் போடுன்னு…”சொல்ல “அட நம்புங்க சீனியர்…” என்றவள் தன் மொபைலில் இருந்து அவன் நம்பருக்கு மிஸ்டு ஹால் கொடுக்க,

 

“ஓகே வேற யாராச்சும் வார மாதிரி இருந்தா ஹால் பண்ணு ஓகே…” என்றவன் பூனை போல பர்விதாவின் அறையினுள் நுழைந்து கொண்டான். அவனுக்கு தெரியவில்லை இன்னும் அரை மணி நேரத்தில் அறிவழகி இருக்கப் போகும் நிலை என்னவென்று.

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்