Loading

அத்தியாயம் – 10

சக்தி வீட்டிற்கு சுஜிதாவை அழைத்துச் சென்றான். ஒரு வார்த்தை கூட அவளிடம் அவன் பேச விரும்ப வில்லை. வீட்டு வாசலில் அவள் கையை விட்டுவிட்டு அவன் உள்ளே சென்று விட்டான். 

சுஜிதா, சுற்றி முற்றி பார்த்துவிட்டு உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே நின்றிருந்தாள். 

மண்டபத்தில் ஜெயலட்சுமி கோபமாக நின்று இருந்த போது ஊர்காரர்கள் அனைவரும், “உங்கள் தம்பி பண்ணியது ரொம்ப தப்பு”. 

“அந்த பெண்ணை இப்போ வீட்டுக்கு கூட்டிட்டு போற மாதிரி போயிட்டு அப்புறம் வீட்டை விட்டு துரத்தி விடலாம் என்று கனவு காணாதீர்கள்”. 

“நாங்க பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டோம். அப்புறம் பின்னாடி நீங்க பெரிய விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும்” என்று மிரட்டுவது போல் கூறினார்கள்.

ஜெயலட்சுமி மனதுக்குள் என்னை பார்த்தாலே நடுங்கும் நீங்கள் எல்லாம் இன்று என்னை மிரட்டுகிறீர்களா என்று அதுவே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. 

ஜெயலட்சுமி எதுவும் கூறாமல் வண்டியை எடுங்கடா என்று விட்டு காரில் ஏறி வீட்டை சென்றடைந்தால். 

வீட்டு வாசலில் சுஜிதா நின்று இருப்பதை பார்த்து ஊர் காரர்கள் யாராவது பார்த்தால் தப்பாக போய்விடும் என்று எண்ணினால். 

ஜெயலட்சுமி சுஜிதாவை பார்த்து, “நீ ஏன் இங்கேயே நிக்கிற? உனக்கு ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிட்டு போவாங்கனு நினைப்பா“ என்று விட்டு ஜெயலட்சுமி சென்று விட்டாள். 

பிறகு சுஜிதா தானாகவே உள்ளே சென்றால். ஜெயலட்சுமி, “சக்தி….” என்று அடி குரலில் இருந்து கத்தினாள். 

சக்தி சரக்கு பாட்டிலுடன் குழறியபடி வந்து நின்றான். ஜெயலட்சுமி, “ஏண்டா மண்டபத்தில் இப்படி ஒரு காரியத்தை பண்ண” என்றார் கோபமாக. 

சக்தி, “நான் பண்ணது மட்டும் தான் உங்களுக்கு தப்பாக தெரியுதா?” என்றான் வெறுப்பாக.

சக்தி, “நீங்க ஆரம்பிச்ச பிரச்சனை தான் இவ்வளவு பெருசா வந்து நிக்கிது. நீங்க சும்மா இருந்திருந்தால் இந்நேரம் நான் ஆசைப்பட்ட மாதிரி நிலா எனக்கு கிடைத்து இருப்பா”. 

“நீங்க ஆசைப்பட்ட மாதிரி சொத்தும் கிடைத்திருக்கும். ஆனா, உங்களோட பேராசையால் இப்போ இரண்டுமே போச்சு” என்றான் அக்காவை பார்த்து. 

ஜெயலட்சுமி, “நான் என்ன இவனையா மாப்பிள்ளையா கொண்டுட்டு வர நினைத்தேன். எனக்கு தெரிந்தவன் ஒருத்தன் மாப்பிள்ளை இருக்கு நீங்க கேட்ட மாதிரி ரொம்ப ஏழ்மையான குடும்பம்”. 

“இப்போ கொஞ்சம் நாள் முன்னாடி அவன் குடும்பமே இறந்துடுச்சு. ஒரே ஒரு தம்பி தான் இருக்கான் அப்படின்னு சொன்னாங்க. ஃபோட்டோ கேட்டேன் ஆனா ஃபோட்டோ இல்ல ஃபோன் நம்பர் இருக்கு பேசறீங்களா அப்படின்னு கேட்டார்”.

“நானும் சரின்னு பேசினேன் பேரு விக்ரம் தான் சொன்னான். பெருசா எழுத்துக்கூட்டி படிக்கவும் தெரியாது அவனுக்கு என்று குடும்பமும் இல்லை”.

“சரி நம்ம எதை சொன்னாலும் தலை ஆட்டுற மாதிரி ஒரு வீட்டு வேலைக்காரன் ஆக வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்”. 

“கல்யாணம் முடிந்த பிறகு சொத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு இவனையும் நிலாவையும் வீட்டை விட்டு துரத்தி விடலாம் என்றும் நினைத்தேன்”. 

“நான் எதிர்பார்த்த மாதிரி இவன் இருந்ததால் பெண் பார்க்க வர சொன்னேன். அப்புறம் எப்படி ஆள் மாறுச்சு என்று எனக்கு எப்படி தெரியும்“ என்றால் இவளும் கோபத்தின் உச்சத்தில்.

சக்தி, “எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இவன் மேல் சந்தேகமாக இருந்தது” என்று விட்டு திரும்பும் பொழுது அங்கு சுஜிதா வந்து நின்றாள்.

சக்தி, “அவளை பார்த்தவுடன் என்னோட பத்து வயசு முதல் இருந்த காதல் இப்படி மண்ணோட போயிடுச்சு எல்லாத்துக்கும் இவ தான் காரணம் இவளை யாரு வீட்டிற்குள்ள விட்டது. என் வீட்டை விட்டு வெளியே போ டி” என்றான் கோபமாக. 

சுஜிதா அழுதபடி அங்கேயே நின்றிருந்தாள். சக்தி, “இந்த நீலி கண்ணீர் வடிக்கிற வேலை எல்லாம் இங்க வேண்டாம். நீ என் காதலை பிரிச்சு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட அதுக்கான தண்டனையை நீ காலம் முழுக்க அனுபவிக்கணும்”. 

“அதுக்காக மட்டும் தான் நான் உன் கழுத்தில் தாலி கட்டினேன். உயிரற்ற ஒரு ஜடம் போல் தான் நீ இந்த வீட்டில்” என்றான்.

சுஜிதா அதிர்ச்சியாக கண்களை விரித்து சக்தியை பார்த்தால். இந்த வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு எவ்வாறு இவன் இவ்வளவு பெரிய வார்த்தையை தன்னை பார்த்து கூறலாம் என்று பல கேள்விகள் அவளுக்குள் தோன்றியது . 

ஆனால், அதை எல்லாம் கேட்கும் மனநிலையில் அவள் இல்லை. 

ஜெயலட்சுமி, “நீ முதலில் அவளுக்கு ஏன் தாலி கட்டின? சம்பந்தமே இல்லாம ஏற்கனவே நமக்கு நிலா விஷயத்துல பெரிய பிரச்சனை இருக்கு இதுல இவளை வேற கட்டிக்கிட்டு வந்து தொலச்சிட்ட”. 

“உனக்கு காதலிச்சாலோ அல்லது கல்யாணம் பண்ணினாலோ பெரிய இடத்து பெண்களைப் பார்த்து பண்ண தெரியாதா?”.

“காதலிச்சதும் அந்த ஒன்னுத்துக்கும் உதவாத நிலா. இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கதும் ஒண்ணுமே இல்லாத பேங்க் மேனேஜர் பொண்ணு. ஏன்டா இப்படி படுத்துற” என்றார் எரிச்சலாக. 

சக்தி, “அக்கா உனக்கு தெரியாது நீயும் நானும் தான் நிலா விஷயத்துல முட்டாளா இருந்திருக்கிறோம். ஆனா, இவளுக்கு எல்லாமே தெரியும் அந்த விக்ரம் யார் என்று இவளுக்கு முன்னாடியே தெரியும்”.

“ஆனா, இவ நம்ம யார் கிட்டயும் சொல்லாமல் மறைத்து இருக்கா “ என்றான் நெருப்பை கக்கும் விழிகளோடு.

ஜெயலட்சுமி அதிர்ச்சியாக சுஜிதாவை பார்த்து, “உனக்கு முன்னாடியே விக்ரமைப் பற்றி எல்லாம் தெரியுமா?” என்றார். 

சுஜிதா அமைதியாக இருந்தால். சக்தி, “பார்த்தியா எப்படி மௌனமாக இருக்கா” என்று அவள் எதிர்பார்க்காமல் சட்டென்று அவள் கன்னத்தை பதம் பார்த்திருந்தான். 

அதில் கண்ணம் எறிய அவள் அங்கேயே மயங்கி போனால். அன்பான அம்மா, அப்பா கிடைத்ததில் இருந்து இவள் யாரிடமும் அடி வாங்கியது கிடையாது. இதுவே முதல் முறை அதில் மயங்கி விட்டாள். 

ஜெயலட்சுமி, “சரி விடு எல்லாம் முடிஞ்சு போச்சு. இதுக்கு அப்புறம் இவளை அடிச்சும், சாவடிச்சும் எந்த ஒரு பிரியோஜனமும் இல்லை. இதுக்கு அப்புறம் நடக்க வேண்டியதை பார்க்கலாம்” என்றாள்.

சக்தி, “இதுக்கு அப்புறம் நடக்கிறதுக்கு என்ன இருக்கு” என்றான் குளறியபடியே.

ஜெயலட்சுமி, “விக்ரமுக்கு இந்த வீட்டு பத்திரத்தில் நிலா விடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று நினைத்தது எல்லாம் தெரியும்”. 

“அதனால் ஏதாவது பிரச்சனை பண்ணுவானோ என்று எனக்கு சிறு அச்சமாக உள்ளது“ என்றார்.

சக்தி, “எனக்கு வாழ்க்கையே போச்சு அதைப் பற்றி உனக்கு கவலை இல்லை. ஆனால், உனக்கு இந்த சொத்து வேண்டும் அப்படி தானே”. 

“எனக்கு இந்த சொத்தும் தேவை இல்லை ஒரு மண்ணும் தேவையில்லை” என்று போதையோடு அறையை நோக்கி சென்று விட்டான். 

பிறகு ஜெயலட்சுமி தனியாகவே ஒரு பிளான் போட்டால். 

விக்ரம் வீட்டில்.

விக்ரம் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தான். நிலா, குட்டி போட்ட பூனையைப் போல் அங்கும் இங்கும் உலாவி கொண்டே இருந்தால். 

நிலா இவன் எழுந்தவுடன் முதலில் எதற்காக நம்மை திருமணம் செய்தான் என்று கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் பல சந்தேகங்களுடன் இருந்தால். 

விக்ரம் கண்களை சிமிட்டி சிமிட்டி லேசாக கண்களை திறந்தான். வானத்தில் இருக்கும் நிலவு போல் நிலாவின் முகம் அவன் கண்களுக்கு முழு நிலவாக தெரிந்தது.

புன்னகையோடு கண்களை விரித்தவன் கட்டிலில் இருந்து இறங்கி நிலா அருகில் சென்றான். நிலா நடந்து கொண்டு இருந்தாள். அவள் முன்பு நெருக்கமாக வந்து நின்றான். 

அவள் முகத்தில் சிறு தலை முடிகள் காத்தில் கலைந்து இருப்பதை காதோரம் ஒதுக்கி விட்டான்.

அவள் காதோரம் தொங்கும் ஜிமிக்கியை சுண்டி விட்டு “சோ க்யூட் டார்லிங். இன்னுமா நீ பிரஷ் ஆகவே இல்லை? அதே ட்ரெஸ்ல இருக்க” என்றான். 

நிலா கேட்க வந்த கேள்விகளை எல்லாம் விட்டுவிட்டு அவன் இவ்வளவு நெருக்கமாக வந்து கேள்வி கேட்டவுடன் பதட்டம் ஆகிப்போனால். 

இதுவரை எந்த ஆம்பளைங்களுடனும் அவள் பேசியதே கிடையாது அப்படி இருக்கும் போது இவன் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில் என்ன செய்வது என்று தெரியாமல் தலையை மட்டும் இல்லை என்று ஆட்டினாள். 

விக்ரம், “ஏன் பேபி” என்றான். நிலா, “மாத்திக்க துணி இல்லையே” என்றால் சிறு குரலில். 

விக்ரம் கையால் தலையை தேய்த்தபடி, “ஓ..ஷட்.. சாரி பேபி. நான் உன்கிட்ட டிரஸ்ஸ கொடுத்துட்டு பிரஷ்ஷாக சொல்லி இருக்கணும் தப்பு என் மேல் தான் சோ சாரி“ என்றான்.

அவள் கையை பிடித்து அவன் இருந்த அறையினுள் ஓர் கண்ணாடியின் முன்பு நிர்க்க வைத்தான். விக்ரம், “இந்த கண்ணாடியில் கை வைத்து தள்ளு பேபி” என்றான். 

நிலா என்ன என்பது போல் அவனையே பார்த்தால். விக்ரம் அவள் அப்படியே நிற்பதை பார்த்து. அவனே நிலா கைகளை பிடித்து கண்ணாடியின் மேல் வைத்து ஒருபுறமாக தள்ளினான்.

அது திறந்தவுடன் அங்கு ஒர் பெரிய அறை இருந்தது. ட்ரெஸ்ஸிங் ரூம் அந்த ட்ரெஸ்ஸிங் ரூம் முழுக்க நிலாவுக்கு பார்த்து பார்த்து வாங்கியது போல் பல வண்ணங்களில் பல டிரஸ் இருந்தது. சுடிதார் மற்றும் சாரீஸ் ஒருபுறம்.

மற்றொருபுறம் பல வண்ணங்களில் காலனி டிசைன் டிசைனாக இருந்தது. ஒரு பக்கம் ஸ்போர்ட்ஸ் ஷூ போல் இருந்தது மற்றொரு பக்கம் பல விதமான நகைகள் இருந்தது. நிலா இது அனைத்தையும் சுற்றி முற்றி பார்த்துவிட்டு அங்கேயே மயங்கி விட்டாள்.

விக்ரம் மயங்கி விழும் நிலாவை தாங்கி இடுப்பில் கை வைத்தபடி பிடித்தான். கன்னத்தில் தட்டி “பேபி என்ன ஆச்சு?. வாட் ஹேப்பன் பேபி. ஆர் யூ ஓகே?“ என்று தட்டிக் கொண்டே இருந்தான். 

ஆனால், நிலா கண் விழிக்கவில்லை. விக்ரம் தன் கைகளில் அவளை ஏந்தி கொண்டு கட்டிலில் படுக்க வைத்து தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்து, “பேபி எழுந்திரு பேபி என்ன ஆச்சு உனக்கு?” என்றான் பதட்டமாக .

பிறகு நிலா கண் விழித்து அவனை இவ்வளவு நெருக்கமாக பார்த்தவுடன் வாய் வார்த்தை எழவில்லை. இதுவரை அவனை இவ்வளவு நெருக்கமாக பார்த்ததே கிடையாது. 

இரண்டு வாரமாக ஒரே வீட்டில் இருந்தும் இவ்வளவு நெருக்கத்தில் அவன் கண்களை இவள் பார்த்தது கிடையாது. முதல் முறையாக அவன் கண்களை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவுடன் அவள் கண்கள் வேறுபுறம் செல்ல மறந்து விட்டது போல் அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

இரண்டு நிமிடம் கழித்து விக்ரம் அவள் கண்ணுக்கு நேர் சுடக்கிட்டு “பேபி“ என்றான். நிலா, எந்த அசைவும் இல்லாமல் அப்படியே இருந்தால். 

விக்ரம், “பேபி என்ன ஆச்சு?. ஏன் இப்படி பாக்குற?“ என்றான் பதட்டமாகமா. நிலா, “அது ஒன்றும் இல்லை” என்று திக்கியபடி கூறினாள். 

விக்ரம் மெல்லிய புன்னகையோடு, “இப்படி பார்க்காத பேபி எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருக்கு“ என்றான். நிலா பதட்டமாக நகர்ந்து அமர்ந்து கொண்டு, “இல்லை இல்லை சாரி” என்று கட்டிலில் இருந்து இறங்கி விட்டாள்.  

விக்ரம், “இப்ப எதுக்கு நீ இவ்வளவு பதட்டமா இருக்க சில் பேபி” என்றான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. நிலா உன் காட்டுல இனி மழை தான் … சுஜிதா பாவம் அவங்க கிட்ட மாட்டிக்கிட்டாளே

  2. சுஜி நிலா இரண்டு பேரும் மயக்கத்தில் நட்பு தான்