Loading

                                                                    அத்தியாயம் 1

பிளாக் ஜீன்ஸ் பேண்ட் , ஒயிட் டாப் , போனி டெயில் சகிதம் காலேஜிற்குள் நிமிர்வாக நடந்து வந்தவள் , ஐந்தரை அடி உயரத்தில் பேரழகியாக இருந்தாள் .

அந்த வளாகத்திலிருந்த அனைவரும் அவளின் கெத்தைப் பார்த்து வாய் பிளந்து இருக்க . ஒருவன் மட்டும் அவளை மிகுந்த அன்போடு பார்த்தான் . அவனின் நினைவுகளோ பின்னோக்கி அவளை முதல்முறை பார்த்த நாட்களுக்கு சென்றது. ஏனோ அதனோடு அவன் விரும்பாத விஷயங்களும் நினைவுக்கு வந்தது .

‘ நினைவுகள் …

” எனக்கு நீங்க…. இரண்டு பேரும் வேண்டாம் ”  என்று டீபாய் மேல் இருந்த  பிளவர் வாஸை தூக்கி உடைத்தான் சத்யா .

” சின்ன பையன் மாதிரியா நீ பேசுற …. கொஞ்சம் கூட மரியாதை இல்லை ” என்றார் அவனின் தாய் அருணா . ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறார் .

” பின்ன அவன் அப்படி தான் பேசுவான் . சின்ன பையன் முன்னாடி இப்படி தான் டிவோர்ஸ் வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்பார்களா …. யாராவது …. ” என்றார் அவளின் தற்போதைய கணவர் சசி . சென்னையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.

” உங்களுக்கு …. எப்பவும் என்னை குறை சொல்வதுதானே வழக்கம் …. ” .

” டிவோர்ஸ் ரொம்ப சென்சிட்டிவான விசயம் … உனக்கும், எனக்கும் மட்டும் இல்லை. இதனால் அதிகம் பாதிக்கப்பட போறது நம்ம பையன் சத்யா தான் “.

” சோ …. நீங்க டிவோர்ஸ் வேண்டாம் என்று சொல்லவர்றீங்களா…. ” என்றாள் அருணா .

” சீ…. மனுசன் பேசுவானா … டீ உன்கூட சொல்லு … அதான் இன்று டிவோர்ஸ்க்கான தீர்ப்பு வரப்போகுதே… ஆனால், சத்யா முன்னாடி சண்டைப் போடாதே …. அவனுக்கு நாம் தான் கொஞ்சம் கொஞ்சமா புரிய வைக்க வேண்டும் …. அதுக் கூட  தெரியாதா உனக்கு …. ” என்றார் சசி.

சசி , சத்யா இருவரையும் பார்த்துவிட்டு எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டாள் அருணா.

” சத்யா …. இந்த காலத்து பிள்ளைங்களுக்கு எல்லாமே தெரியும் … டீ.வி , ஸ்மார்ட் போன் என்று ரொம்ப அப்டேட்டடா இருக்கீங்க …. உனக்கே இப்போ டிவோர்ஸ்னா என்னனு தெரியும் …. ஆம் ஐ ரைட் ? “.

” எஸ் டாட் …. தெரியும் நிறைய மூவிஸ்ல பார்த்திருக்கேன் … எல்லார் முன்னாடியும் கோட் போட்ட தாத்தா … உங்களுக்கு அம்மா வேண்டுமா, ‌அப்பா வேண்டுமானு கேட்பார் “

” அது மூவி. இது நிஜம் . நீ எல்லாவற்றுக்கும் தயாராக இரு சத்யா “.

செல்லும் தந்தையை பார்த்தவன் மனதில் , ‘ பாசமா பேசினா …. நீங்கள் நல்லவர் ஆகமுடியாது டாட் ….. நானே உங்களை வேறு லேடி கூட பார்த்து இருக்கேன் ‘ .

சத்யா  சென்று பால்கனியில் நின்றான் . அங்கு ஒரு சிறுமி அவள் அண்ணன் , அன்னையோடு விளையாடிக் கொண்டிருந்தாள் .

‘ ஏன் எனக்கு இப்படி ஒரு குடும்பம் அமையவில்லை ‘ , என்று ஏங்கியது அந்த பாலகனின் உள்ளம் .

” சத்யா ….. சாப்பிட வா …. ” என்றார் அருணா .

மூவரும் அமைதியாக உணவு உண்டுக் கொண்டிருந்தனர் .

” அருணா ….. நீ சத்யாவ நல்லபடிய பார்த்துக்கொள் . ஃபைனான்ஷியல் சப்போர்ட்டா நான் இருப்பேன் . மாசம் மாசம் அவனோட பேங்க் அக்கௌன்ட்க்கு பணம் அனுப்பிடுறேன் ” சசி.

” என்னால் அவனை ஏற்றுக்கொள்ள முடியாது ” பத்து மாதம் சுமந்து ,பெற்ற மகனை நிராகரித்தாள் அருணா .

” அப்போ …. என்ன செய்றதா உத்தேசம் ” .

”  சத்யாவை பார்த்துக்கொள்ள கமலா என்ற கேர் டேக்கரை வேலையில் சேர்த்திருக்கேன் . அவருக்கு யாரும் இல்லை . உணவு , தங்குவது எல்லாம் நம்ம இடத்தில் தான்.  அதனால் சம்பளம் குறைவாக தந்தால் போதும் ” .

” கோர்ட் ஏத்துக்கிட்டா …. சரி ” என்று உள்ளே சென்றுவிட்டார் சசி .

‘ நான் இவர்களுக்கு பாரமாகிவிட்டேன் போல் . என்னை பார்த்துக்கொள்ள போகிறவராவது என் மேல் பாசம் வைப்பாங்களா? பெற்றவர்களிடமே இல்லை மற்றவரிடம் எதிர் பார்க்க முடியாது ‘ எண்ணியது சத்யாவின் உள்ளம் .

இவனின் குடும்ப சூழ்நிலை அவனை சிறுவயதிலே பக்குவப்படுத்தியது . அவனிடம் எப்போதும் வயதுக்கு மீறிய புரிதல் மற்றும் அறிவு உண்டு .

சசி ரீல்ஸ் இல் ஒரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தார் . முதலில் நட்பாகி பின், அது காதலாகி … இல்லை …. கள்ளக்காதலாகி இருவரும் விவாகரத்திற்கு பின் திருமணம் செய்துக் கொள்ளப் போகின்றனர்.

அருணா , அவள் வேலையில் உள்ள டென்ஷன் பின் வீட்டு வேலை , சத்யாவை பார்த்துக் கொள்வது . கணவன் மனைவியிடையே காதல் இல்லாததால் இந்த வாழ்க்கை, எல்லாமே அவளுக்கு சலித்துப் போனது . போதாத குறைக்கு தினமும் வீட்டில் சசியோடு சண்டை .

இந்த நிலையில் அருணாவின் அலுவலகத் தோழன் அவளை விரும்புவதாக கூற . முதலில் தயங்கியவள் பின் சசியிடம் கிடைக்காத அன்பை அவனிடம் பெற்றாள் . ஆனால் அவன் சத்யாவை ஏற்றுக் கொள்ளவில்லை . ஆகையால் தான் கேர் டேக்கர் ஏற்பாடு .

காலையிலே விரைவாக தயாராகி வீட்டிற்கு வெளியே நடந்துக் கொண்டிருந்தான் சத்யா .

அது மிகவும் அழகான தனித் தனி வீடு கொண்ட மிக பெரிய காலனி . மூன்று வீடுகளுக்கு சேர்த்தார் போல் காம்பௌண்ட் சுவர் , பூங்கா , சிறுவர்கள் விளையாட பார்க் இருந்தது .

சென்னைக்கு வெளியே என்பதால் இந்த வசதிகளோடிருந்தது . சத்யா பள்ளி அருகில் இருந்ததால் இந்த வீட்டை தேர்வு செய்தனர் அருணா மற்றும் சசி . அவர்கள் இங்கு வந்ததே நேற்று தான் .

” சத்யா …. வா போகலாம் ” அருணா .

மூவரும் காரில் கோர்ட் சென்றனர் . திருமணம் ஆகி பன்னிரண்டு வருடங்களாகியதால் விவாகரத்து வாங்குவதில் பெரியதாக ப்ராசஸ் இல்லை . சத்யா வெளியில் நின்றிருந்தான் .

சில நிமிடத்திற்க்கு பின் அவனை உள்ளே அழைத்தனர் .

” சத்யா …. நீங்க அம்மா கூட இருக்கீங்களா … இல்லை அப்பா கூட இருக்க விரும்புறீங்களா ” என்றார் ஜட்ஜ் .

” நான் கேர்டேக்கர்  கூடயே இருக்கிறேன் ” என்றான் சத்யா .

அவனின் பதிலில் அனைவரும் அதிர்ந்தனர்

” இவங்க உன்னை மிரட்டினாங்களா …. ” .

” இல்லை . இது நானா சொன்னது ” சத்யா .

ஜட்ஜே அசந்துவிட்டார் இந்த சிறிய வயதில் இவ்வளவு தைரியம் மற்றும் தெளிவான முடிவில் உறுதியாக இருப்பதை அவர் பார்த்ததே இல்லை .

இங்கு வரும் சிறுவர்கள் அழுதுக் கொண்டோ அல்லது பயந்துக் கொண்டோதான் இருந்தனர் இது வரை . இவன் வேறுபட்டவனாக இருந்தான் . பொடியன் வாழ்க்கையில் வென்றுவிடுவான் என்பதை உணர்ந்து ஜட்ஜ் அவன் விரும்பிய தீர்ப்பையே சில கோட்பாடுகளோடு விதித்தார் .

சத்யா வெளியே காத்திருந்தான் . அருணா மகிழ்ச்சியோடு போனில் யாரோடோ பேசிக் கொண்டுவந்தாள் . சசி ஒருபடி மேலே போய் அவர் மறுமணம் செய்யப் போகும் பெண்ணின் கையை பிடித்துக்கொண்டு வந்தார் .

திருமணம் வாழ்க்கை என்றால் இதுதான் போல் என்று சத்யாவின் மனதில் பதிந்து போனது .

” அருணா …. கேர் டேக்கர் பெயர் என்ன சொன்ன … ஹான் …. கமலா அவங்க போன் நம்பர் எனக்கு அனுப்பிடு … மாதம் மாதம் நான் என் பணத்தை சத்யா அக்கௌண்டில் போட்டுடுறேன் …. பாய் ” சசி.

” நன்றாக… படிக்கணும் சத்யா … எது வேண்டும் என்றாலும் அப்பாக்கு ஃபோன் செய் … பாய் “.

” ஹம் …. பாய் ” அவன் அப்பா என்பதை கூறவில்லை . அவரும் அதை உணரவும் இல்லை எதிர்ப்பார்க்கவும் இல்லை.

பெற்ற கடனுக்காக சத்யாவை வீடுவரை விடவந்தார் அருணா .

” ஹலோ …. கமலா எங்க இருக்கீங்க… பன்னெண்டு மணிக்கு உங்களை வர சொன்னேன் . மணி இப்போ ஒன்னாகுது ….. சரி சீக்கிரம் வாங்க …. ” என்று போனை வைத்தாள் .

சிறிது நேரத்தில் வந்த கமலாவிடம் , ” வா…. கமலா …. இதோ இவன் தான் சத்யா … இவனதான் நீங்க பார்த்துக்கணும் . இது தான் உங்க அறை . மளிகை சாமான் வாங்கி வைத்திருக்கேன் . இன்னும் வேண்டும் என்றால் வாங்கிக்கோங்க ….. பணம் சத்யா அக்கௌண்டில் இருக்கும் பயன்படுத்திக்கோங்க . பணம் நீங்கள் எடுக்கும் போது எனக்கு தகவல் வரும் . நீங்க செலவு பண்ற பணத்துக்கான கணக்கு என்னிடம் காண்பித்து நீங்க மாத சம்பளம் வாங்கிக்கோங்க … ” என்று இடைவெளியின்றி பேசிக் கொண்டே தனது பையை எடுத்து வைத்துவிட்டாள் அருணா.

” சரிங்க …. நான் பார்த்துக் கொள்கிறேன் ” கமலா.

” பாய் …டா … கண்ணா ” சத்யாவிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டார் அருணா .

சத்யா அருணா சென்ற பிறகு மூடியக் கதவில் இருந்த பார்வையை கமலா மீது செலுத்தினான் .

‘ நீங்க மட்டும் என்மீது அன்பை காண்பிக்கவா போகிறீர்கள் ‘ என்பதாக இருந்தது அவன் பார்வை  .

அதை உணர்ந்தே இருந்தார் கமலா , ‘ வாயால் நான் கூறவிரும்பவில்லை . என் செயலால் உனக்கு உணர்த்துகிறேன் ‘ என்று நினைத்தவர் , ” சாப்பிட்டியா …. பா ? ” என்று வெளியே கேட்டார் .

” இல்லை ” என்று கூறிக் கொண்டே தன் தலையை ஆட்டினான் .

கமலா நேரத்தை பார்த்தார் . மணி மூன்று என காட்டியது .

” என்ன ஜென்மங்க இதுங்கெல்லாம் …  ” என்று முணுமுணுத்துக் கொண்டே ” பத்து நிமிஷம் இருப்பா … என்ன இருக்குதுனு பார்த்து சாப்பிட ஏதாவது செய்து தரேன் ” .

இவன் அமைதியாக சென்று டைனிங் டேபிளில் அமர்ந்துக் கொண்டான் . கமலா நூடுல்ஸ் செய்து தந்தார் . சத்யா வயிறு நிரம்ப , அவர் மீது பாசம் உண்டானது .

அவரை எவ்வாறு அழைப்பது என்று தெரியாமல் , ” நான் கீழே பார்க்கில் விளையாடிட்டு வரேன் ” என்றான் சத்யா .

” சரி…. பா  பார்த்து ஜாக்கிரதையா விளையாடு . நானும் வேலைய முடிச்சிட்டு கீழே வரேன் ” .

சத்யா கதவை திறந்துக் கொண்டு கீழே சென்றான் . அப்பொழுது ஒரு சிறுமி படி அருகில் ஓடி வந்தாள் . அவள் ஓடி வந்த வேகத்தில் படியில் விழுந்திருப்பாள் . நல்ல வேளையாக அங்கே சத்யா இருந்தான் .

அவளை கீழே விழாதவாறு பிடித்துக் கொண்டான் . அவளை நேராக நிறுத்தியப் பிறகும் நடுங்கும் கையால் கண்களை மூடியிருந்தாள் .

சத்யா எதுவும் கூறாமல் கீழே சென்றுவிட்டான். அங்கே ஒரு ஊஞ்சலில் அமைதியாக அமர்ந்துக் கொண்டான் . இன்று நடந்திருந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக அவன் கண்முன் தோன்றியது.

இதுவரை அவன் அடக்கி வைத்திருந்த கண்ணீர் துளி . அவன் கன்னங்களை நனைத்தது. அப்பொழுது ஒரு கரம் அவன் கண்ணீரைத் துடைத்தது .

சத்யா யாரென்று பார்த்தான் . அவளை அவன் எதிர்பார்க்கவில்லை . இனி உனக்கு துணையாக நான் இருப்பேன் இறுதி வரை என்பது போல் நின்றிருந்தாள்.

அவளே தான் , சத்யா சற்று முன்பு கீழே விழாமல் பிடித்தானே அந்த சிறுமி தான் .

” ஏன் அழற….. ” என்றாள் சிறுமி .

” நான் அழல . கண்ணில் தூசி பட்டுடுச்சு ” என்றான் . ( நாங்களெல்லாம் கீழே விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டாத பரம்பரையாக்கும் )

” இரு… நான் ஊதிவிடுறேன் ” என்றுக் கூறிக் கொண்டே அவன் கண்ணில் ஊதினாள் .

எனது பொய்யை கூட நிஜம் என்று நினைத்து உதவி செய்கிறாளே . கவலையாக உணர்ந்தான் சத்யா.

” இப்போ ஓகேவா …. ” என்றாள்.

” ஓகே ” என்றான்.

அவள் சென்று அவனுக்கு அருகில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டாள்.

இருவரும் முன்னும், பின்னும்  தங்களது காலால் ஊணி ஊஞ்சலில் விளையாடினர் .

” உன்னோட பெயர் என்ன ? ” என்று கேட்டாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சின்ன வயசுல இருந்து லவ்வா 😍😍😍😍😍 பாவமான நல்ல ஹீரோ போல … கதைக்கு டைட்டில் கொடுங்க சகோ …