Loading

இங்க பாரு செந்தமிழ் எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல … உன்னை மட்டுமில்ல யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்கிற நிலைமையில இல்ல … என் அம்மா பேச்சை மறுக்க முடியாம தான் பொண்ணு பார்க்க வந்தேன் என்று இளமாறன் சொல்ல … வெட்கப்பட்டு குனிந்து அழகாக சிரித்துக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள் …

*************************************

அவள் கண்ணீர் அவனை ஏதோ செய்ய திரும்பவும் மெல்ல நடந்து அவள் அருகில் வந்தான் … இப்போ எதுக்கு அழற என்று கொஞ்சம் கடுப்பாக கேட்டான் … அவள் பதில் பேசாமலிருக்க … சொன்னா தான தெரியும் … சரி நான் போறேன் என்று அவன் திரும்ப …

அது வந்து … எனக்கு அம்மா இல்ல நான் பிறந்த கொஞ்ச நாள்ல இறந்துட்டாங்க … என் அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார் … என் சித்தியோட அண்ணன் மனைவி சமீபத்துல இறந்துட்டாங்க … அதனால என் சித்தி அவருக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாங்க …

***************************************

அவள் கண்களோ அவன் கண்களை பார்த்து ரசித்து … பின் அவன் இதழை பார்த்து உள்ளுக்குள் தடுமாற … ஹ்ம்ம் … உடம்புல இருக்கிறது குறை இல்ல … மனசுல இருக்கிறது தான் குறை … இவ்ளோ நேரம் பொறுமையா நீங்க என்கிட்ட பேசுறீங்க … என்னோட கருத்தை கேட்கிறீங்க … அதுனால நீங்க நல்லவர் … எனக்கு உங்களை பிடிச்சிருக்கு என்று சொன்னாள் செந்தமிழ் …

***************************************

வணக்கம் நான் அபிஶ்ரீ … இந்த தளத்திற்குள் புதியதாக நுழைந்திருக்கிறேன் … இந்த தளம் எனக்கு புதிய கதவுகளை திறந்து விட்டிருக்கிறது … என்னை போலவே வாசிப்பில் எழுத்தில் நாட்டம் உடைய ஒத்த மனிதர்கள் … அவர்கள் படைப்புகள் … அதை இங்கு பதிப்பிக்க எளிதாக சொல்லப்படும் வழிமுறைகள் … சந்தேகங்களுக்கு உடனடி பதில்கள் … சில புதிய நட்புகள் … ஊக்குவிப்புகள் எல்லாம் கிடைத்திருப்பதால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது …

ஓல்டு இஸ் கோல்டு போட்டிக்காக என் புதிய நாவலை பதிய போகிறேன் … ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்த நாவல்களின் இடையே திடீரென்று தோன்றிய கதைக்கரு … அதைத் தொடர்ந்து கதாபாத்திரங்கள் … நிகழ்வுகள் எல்லாம் எழுத ஆரம்பித்தேன் …

எனக்கு ஆன்டி ஹீரோக்கள் கதையை விட சூப்பர் ஹீரோக்கள் கதை தான் பிடிக்கும் … என் கதை ஹீரோக்கள் சூப்பர் ஹீரோக்கள் தான் … நான் முதல் முறையாக எழுதிய ஆன்டிஹீரோ கதை இது … ஒரு காதலால் ஆன்டிஹீரோ ஆக்கப்பட்டான் … ஒரு காதலால் மீண்டு வருவான் … ஒரு தாய்க்கும் தாயாக போகிறவளுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் தான் கதை …

காதல் … குடும்பம் … நட்பு … ரொமான்ஸ் எல்லாம் இருக்கும் … அதே போல ஹீரோ என்றால் சிக்ஸ் பேக் … கட்டுடல் … பெரிய பணக்காரனாக இருக்க வேண்டுமா … இந்த ஹீரோ கொஞ்சம் வித்தியாசமானவன் …

நாவலின் பெயர்

என்னுள் நீ காதலாய் …

டிசம்பர் 15 முதல் … உங்கள் தூரிகை இணையதளத்தில் … தொடர்ந்து ஆதரவுகளும் அன்புகளும் தாருங்கள் … நன்றி … நன்றி … நன்றி …

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இனிய ஆரம்பம். சூழ்நிலைகளின் தாக்கத்தால் ஏற்படும் உணர்வுகளின் குறைபாடு உள்ளவர்கள் தான் anti hero. அந்த வகையில் முதலிலேயே தெளிவுப்படுத்தி விட்டீர்கள். ஒரு சிறந்த குடும்பம் சார்ந்த கதைக்காக காத்திருக்கிறோம்.
    படைப்பாளருக்கு வாழ்த்துகள் 👏🏼

    1. Author

      தங்கள் கருத்துகளுக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி… அன்புகள் 💞💞💞