Loading

அத்தியாயம் 09

 

அடுத்த நாள் காலை சிறு தூரலுடன் இதமாக விடிய,

 

துள்ளளுடன் எழுந்து பர்விதா காரி துப்பினாலும் பரவாயில்லை, தன் காதலை சொல்லி விடுவது என்று உற்சாகமாக தயாராகி பர்விதாவின் காலேஜுக்கு வந்து சேர்ந்திருந்தான் அபர்ஜித்.

 

தெளிவாக, தான் நினைத்தவற்றை தீர்க்கமாக பேச வேண்டும். அதற்கு அவனுக்கு போதிய அளவு நேரம் வேண்டும். அதனால் காலையிலேயே பர்விதாவை தேடி வந்திருந்தான்.

 

அவன் எதிர்பார்த்து காத்திருந்தவள் காலேஜ் பஸ்ஸில், வெள்ளை நிற சட்டையும், கரு நீல நிற பாவாடையும் அணிந்து, தலை முடியை மொத்தமாக அள்ளி போனி ட்டையில் போட்டு,

 

அசர அடிக்கும் அழகுடன் அன்னம் என இறங்கி வர, அபர்ஜித் எட்டாம் அதிசயத்தை பார்ப்பது போன்று வாயை பிளந்து பார்த்துக் கொண்டேன் நின்றான்.

 

எப்போது இருந்து அவன் கண்களுக்கு அவள் மட்டும் தான் பேரழகி என்று தெரிய துவங்கியதோ அவனே அறியான்.

 

பர்விதாவோ எல்லா மன சஞ்சலங்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்ற நிம்மதியுடன், இனி தன் மனதை உருத்தும் அந்த சம்பவத்தை மனதை விட்டு அகற்ற வேண்டும் என முடிவெடுத்து, தெளிவான மனநிலையில் வந்தவள் காலேஜ் வாசலில் அபர்ஜித்தை பார்த்ததும் குழம்பினாள்.

 

‘எதுக்கு மாமா இன்னைக்கும் வந்து இருக்காரு.. அக்கா கிட்ட ஏதும் பேசணும்னா வீட்டுக்கு போயிருக்கலாமே..எத மறக்க நினைக்கிறோமோ அதுவே தான் கண்ணுக்கு முன்னுக்கு வரும்..’ என்று மனதில் நினைத்தவள் அவன் அருகில் செல்ல

 

அவள் பிம்பம் அருகில் வந்ததும் தான் உணர்வுக்கு வந்தான் அபர்ஜித். “என்ன மாமா…” என்று அவனை பார்க்காமல் தயக்கமாக பர்விதா கேட்க

 

“பர்வி கொஞ்சம் பேசணும்.. நேத்து…” என்று நெற்றியை தேய்த்தவன் “அது.. அது நான் சரியான பேசல.. ப்ளீஸ் இன்னைக்கு கண்டிப்பா பேசணும் முடியாதுன்னு மட்டும் சொல்லாத” என்று எங்கே வர மாட்டேன் என்று சொல்லிவிடுவாளோ என்று பதட்டமாக கேட்க

 

“என்ன விஷயம் மாமா.. எதுக்கு டென்ஷனா இருக்கீங்க.. என்று அவள் சாதாரணமாக கேட்க

 

” சில விஷயம் நான் உன்கிட்ட பேசணும் பர்வி.. வெளிய போய் பேசலாம்.. ப்ளீஸ் முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத…”

 

“மாமா காலேஜ் இருக்கு…”

 

“ப்ளீஸ் பர்வி…” என்று அவன் கெஞ்ச

 

“சரி மாமா ஒரு ஹாஃப் அண் ஹவர் போதுமா…?” என்று கேட்க

 

“ப்ளீஸ் பர்வி எனக்கு ஒரு டூ ஹவர்ஸ் வேணும்…”

 

“டூ ஹவர்ஸா.. எதுக்கு மாமா…?”

 

“ப்ளீஸ் பர்வி நேத்து அவசரத்துல.. உன்ன வீட்ட விடணும் என்றதுலயும் நீ பேசுனதும் நான் டென்ஷனாகி.. என்னால எதுவுமே பேச முடியல.. எனக்கு நிதானமா.. நான் என்ன பேச போறேன் என்கிறத சரியா யோசிச்சு பேசணும்..

 

…எனக்கு அதுக்கு பீஸ் ஃபுல்லான ஒரு இடம் வேணும்.. கொஞ்சம் டைம் வேணும்.. ஒரு டூ ஹவர்ஸ் என்னோட வா ப்ளீஸ்…” என்று அவன் கேட்க

 

வார்த்தைக்கு வார்த்தை ப்ளீஸ் போடும் அவனை நினைக்கும் போது சற்று சங்கடமாக இருக்க “சரி மாமா போலாம்..” என்று அவனுடன் காரில் ஏறிக்கொண்டாள்.

 

நேற்று போன்று கடற்கரையில் வைத்து பேசுவான் என்று அவள் எதிர்பார்க்க, கடற்கரை பக்கமாக சென்று அவனது கார் ஒரு வீட்டின் முன்பு நின்றது.

 

“என்னாச்சு மாமா..?” என்று கேட்க

 

“இது நம்ம வீடுதான்.. பீச் ஹவுஸ் இங்கேயே பேசலாமே.. பீச்ல கூட்டமா இருக்கும்.. கார்ல ரொம்ப நேரம் உட்கார்ந்து பேச முடியாது பர்வி.. அண்ட் உனக்கும் கம்பர்டபுளா இருக்கணும் அதுதான்…” என்று சொல்ல

 

அவளுக்கு வீட்டினுள் சென்று பேசுவது தான் தர்ம சங்கடமாக இருந்தது. அதை அவனிடம் கூற முடியாமல் “ஓகே மாமா” என்றவள் காரில் இருந்து இறங்க,

 

அபர்ஜித்தோ ‘அவள பக்கத்துல வச்சுட்டு பேச முடியாது.. உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது, மைண்ட் பிளாங்க் ஆயிடுது.. அதே நேரம் தூரத்தில வச்சு பேச முடியாது எதுவா இருந்தாலும் வீட்டுல வச்சு பேசுறது தான் கரெக்ட்…’ என்று நினைத்தான் .

 

வீட்டின் கதவை திறந்து கொண்டு அபர்ஜித் முன் செல்ல, அவனைப் பின் தொடர்ந்து சென்ற பர்விதாவிற்கு எவ்வளவு முயற்சித்தும் அன்று தனிமையில் அவன் அவளிடம் நடந்து கொண்டது நினைவு வந்து போனது.

 

இன்றும் யாருமில்லாத இந்த வீட்டில் அவனுடன் பேசுவது சற்றும் விருப்பமில்லை அவளுக்கு. இருந்தும் அவனிடம் முறித்து கூற முடியாத காரணத்தால் அமைதியாக பின் சென்றாள் .

 

பர்விதாவை ஹாலில் அமர வைத்தவன் “பர்வி வன் மினிட்.. குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு கிச்சன் சென்று, ப்ரிஜில் இருந்த டின்னில் அடைக்கப்பட்ட குளிர்பானம் இரண்டை கொண்டு வந்து, அவளிடம் ஒன்றை கொடுத்துவிட்டு அவளைப் பார்த்தது போன்று எதிர் சோபாவில் அமர்ந்து கொண்டான்.

 

பர்விதா இருந்த பதற்றத்திற்கு கையில் இருந்த கூல் ட்ரிங்க்ஸை வேகமாக அருந்தினாள். அவள் குடித்து முடியும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அபர்ஜித்.

 

அதன் பின் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு குரலை செறுமியவன் “பர்வி நான் சொல்லப் போறத கோவப்படாம கொஞ்சம் அமைதியா கேளு.. அது.. எனக்கு உன்ன புடிச்சிருக்கு பர்வி.. ஐ லவ் யூ.. என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?…” என்று அவள் கண்களை பார்த்து கேட்டு விட ,

 

அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டாள் பர்விதா. “பர்வி இது உனக்கு எவ்ளோ அதிர்ச்சியான விஷயம்னு எனக்கு தெரியும்.. ஆனாலும்.. கண்டிப்பா என்னால உன் அக்காவ கல்யாணம் பண்ணிக்க முடியாது..

 

…எப்போ? எப்டி?.. எதுவும் கேட்காத பர்வி நான் எந்த காரணம் சொன்னாலும் நீ நம்புவயானு தெரியல.. ஆனா என்னோட காதல் உண்மையானது.. ஆழமானது.. உன்ன தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது…” என்று சொல்ல

 

“என்ன சார் விளையாடுறீங்களா? உங்க விளையாட்டையெல்லாம் வேற எங்கயாவது வச்சுக்கோங்க…” என்று அவள் கோபத்தில் சீற,

 

“சாரா..?” என்று அவன் கேட்க

 

“ஆமா சார்.. இன்னுமே உங்களுக்கும் என் அக்காவுக்கும் கல்யாணம் ஆகல.. ஆனாலும் ஆகிடும் என்ற நம்பிக்கையில மாமானு கூப்பிட்டுடு இருந்தேன்.. ஆனா நீங்க இவ்ளோ கேவலமானவரா?.. இன்னும் மூணு மாசத்துல அக்கா கூட கல்யாணத்த வச்சுட்டு தங்கச்சிட்ட ப்ரொபோஸ் பண்றீங்க.. எவ்ளோ சீப்பான ஒருத்தங்க நீங்க…”

 

“பர்வி கோபப்படாத.. நீ சொல்றது எனக்கும் புரியுது.. ஆனா என்ன, என்ன பண்ண சொல்ற..

 

…உன் அக்காவ பொண்ணு பாக்க வரும்போது என் மனசுல எதுவுமே இல்ல.. ஆனா இப்போ நீ மட்டும் தான் இருக்க.. அப்டி இருக்கும்போது இந்த கல்யாணம் நடந்தா சத்தியமா எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா இருக்காது..

 

…அதே சமயம் திரும்பவும் இந்த கல்யாணம் நிற்க வேணாம்.. இங்க பாரு பர்வி என்னால பார்கவிய கல்யாணம் பண்ணிக்க முடியாது.. அதே சமயம் இந்த கல்யாணத்த நிறுத்தினா ரெண்டு குடும்பத்துக்குமே திரும்பவும் ஒரு அவமானம்..

 

…அதனால நீ சம்மதம் மட்டும் சொல்லு , ரெண்டு வீட்டுலயும் பேசி, எனக்கும் பார்கவிக்கும் நடக்க இருக்கிற கல்யாணத்த, உனக்கும் எனக்கும் நடத்த வேண்டியது என் பொறுப்பு…” என்று சொல்ல

 

“என்ன சார் பேசுறீங்க.. என் அக்காவுக்கு என்ன சக்காளத்தியா வர சொல்றீங்க இல்ல…” என்று அவள் கடும் கோபத்தில் கேட்க ,

 

“என்னடி பேசுற அசிங்கமா.. உன் அக்காவுக்கும் எனக்கும் இன்னும் கல்யாணம் நடக்கல.. அந்த கல்யாணத்த நிறுத்திட்டு முறையா உன்ன கல்யாணம் பண்ணிக்க தான் கேட்கிறேன்…”

 

“நான் என்ன சார் அசிங்கமா பேசுறேன்.. நீங்க சொல்றத விட அசிங்கமான ஒரு விஷயம் இருக்கா..என் அக்காவுக்கு என்ன பச்ச துரோகம் பண்ண சொல்றீங்க.. அவ இதயத்த சுக்கு நூறா உடைச்சிட்டு அதுல என்ன கோட்டை கட்டி வாழ சொல்றீங்க..

 

…கண்டிப்பா என்னால முடியாது.. உங்களுக்கு என் அக்காவ கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலையா…” என்று நிறுத்தியவள் மூச்சை இழுத்து விட்டு

 

“பரவால்ல இந்த கல்யாணத்த நிப்பாட்டுங்க.. ஆனா கனவுல கூட நீங்க நினைக்கிற மாதிரி உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்காது…” என்றவள் வீட்டை விட்டு வெளியேற முனைய,

 

அவளை வழி மறைத்து நின்ற அபர்ஜித் “ப்ளீஸ் பர்வி.. இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டாம நீ இங்க இருந்து போக முடியாது…”

 

“ஏன் சார்.. உங்களுக்கு என்ன பைத்தியமா.? என்ன முடிவு கட்ட போறீங்க..? நீங்க இப்போ கட்ட போற முடிவு என் அக்காவோட மனசுக்கான சமாதி.. அவ மனச பத்தி, அவ உணர்வுகள பத்தி, எதப்பத்தியும் யோசிக்க மாட்டீங்க இல்ல..

 

…என்ன சார் பொல்லாத காதல்.. அவ உங்க ஃபோட்டோவ பாத்த அந்த நிமிஷத்துல இருந்து உங்கள புருஷனா நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கா.. அவ காதல் முன்னாடி நீங்க சொல்ற இந்த காதல் எல்லாம் எதுவுமே கிடையாது..

 

…மனச போட்டு அலைபாய விடாதீங்க.. படிச்சு இருக்கீங்க, ஒரு அட்வகேட் அதுக்கு ஏத்த மாதிரி யோசிங்க.. வேணும்னா உங்க மனச சரி பண்ணிக்கிறதுக்கு இன்னொரு மூணு மாசமோ ஆறு மாசமோ கல்யாணத்த தள்ளி போடுங்க..

 

…சரியா யோசிச்சு சரியான முடிவு எடுத்துட்டு அதுக்கப்புறம் அவள கல்யாணம் பண்ணிக்கோங்க..

 

…இல்ல அது முடியாதா மொத்தமா உங்க குடும்பத்துக்கு ஒரு பெரிய கும்பிடு.. என் அக்காவையும் என்னையும் விட்ருங்க.. உங்களோட கிறுக்குத்தனமான முடிவுக்கு எல்லாம் நான் கட்டுப்பட முடியாது…”

 

“பர்வி ஆறு மாசம் இல்ல, ஒரு வருஷம் இல்ல, பத்து வருஷம் ஆனாலும் உன் இடத்துல இன்னொருத்திய வைக்க முடியாது பர்வி.. நீ சொல்ற மாதிரி உன் அக்காவோட காதல், அது எவ்ளோ பெருசா வேணும்னாலும் இருக்கட்டும்..

 

…என்னால பார்கவிய கல்யாணம் பண்ணிக்க முடியாது.. அதே சமயம் நம்ம ரெண்டு வீட்டுக்கும் நடந்த சம்மந்தம் நடந்தது தான்.. ஆனா எனக்கு பொண்டாட்டி நீ தான்.. மூணு மாசம் கழிச்சு நடக்க இருக்கிற கல்யாணம் கண்டிப்பா நடக்கும்.. அது உனக்கும் எனக்கும்…” என்று அபர்ஜித் அழுத்தமாக கூற,

 

அவன் வார்த்தைகளில் ஆக்ரோஷமான பர்விதா சத்தமாக “அப்டி என்னதான் பிரச்சன உங்களுக்கு.. நீங்க விரும்புன கல்யாணத்த நிறுத்திட்டு என்ன கல்யாணம் பண்ணிக்கோ என்கிற அளவுக்கு…” என்று கேட்க

 

“தெரியலடி.. தெரியல…” என்று கத்தியவன் அவளை இழுத்து அவள் இதழுடன் தன் இதழை அணைத்த்திருந்தான். ஒரு நொடி மட்டும் அழுத்தமாக முத்தமிட்டு விலகியவன், அதிர்ந்து நின்றவளிடம்

 

“இதோ இதுதான்.. இந்த ஒரு முத்தம்.. இது என்ன என்னவோ பண்ணிருச்சு.. என்னால கண்ண மூட முடியல.. மூடுனா அன்னைக்கு உனக்கு தந்த முத்தம் தான் ஞாபகத்துக்கு வந்து நிக்குது..

 

…கண்ணு முன்னாடி நீதான் வார..அப்டி இருக்கும் போது எப்டி உன் அக்காவ கல்யாணம் பண்ணிக்க முடியும்னு சொல்ற..

 

…ஏன் தான் அன்னைக்கு அப்டி ஒரு புத்தி எனக்கு போச்சோ..உன்னோட எச்சில், அது என் உயிரோட கலந்து என்ன என்னமோ பண்ணிருச்சு பர்வி.. உன்ன தவிர என்னால வேற எதையுமே யோசிக்க முடியல..

 

…சத்தியமா சொல்றேன் பார்கவிய என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.. அதே சமயம் உன்ன விட்டுட்டு இன்னொருத்திய கண்டிப்பா என்னால நினைச்சு கூட பாக்க முடியாது.. என் முதல் முத்தம் அது உனக்கு தான் தந்தேன்.. என் காலம் பூராவும் என் பொண்டாட்டினா நீ மட்டும் தான்…” என்று கூற

 

அவனது செயலில் கண்ணீர் வர அங்கேயே மடங்கி அமர்ந்து கைகளால் முகத்தை மூடி அழுதாள் பர்விதா. அவள் அழவும் தான் அவன் கட்டுப்பாட்டையும் மீறி மீண்டும் அவன் செய்த தவறு புத்தில் உரைக்க தலையில் அடித்துக் கொண்டவன்,

 

அவள் அருகே அமர்ந்து “பர்வி.. பர்வி ப்ளீஸ்.. என்ன என்னடி பண்ண சொல்ற.. இதெல்லாம் உன்னால தான்.. நீதான் என்ன இப்டி மாத்திட்ட.. இத்தன வருஷத்துல சத்தியமா என் உணர்ச்சிகளுக்கு நான் மதிப்பு கொடுத்ததே இல்ல பர்வி..

 

…ஆனா உன்கிட்ட மட்டும் நான் நானா இருக்க மாட்டேங்குறேன்.. உன்ன கைக்குள்ளேயே வச்சுக்கணும்.. மொத்தமா எனக்குள்ள உன்ன பொதச்சுக்கணும்னு தோணுது..

 

…எனக்கானவ நீ என்கிறதால தான் என்னையும் மீறி உன்கிட்ட உரிமை எடுத்துக்குறேன்.. அழாத பர்வி…” என்று அவள் பின் தலையில் கையை கொடுத்து தன் நெஞ்சோடு அழுத்திக் கொள்ள,

 

அவனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு அவன் மார்பிலேயே மருந்தை தேடினாள் போலும் அவளும் சாய்ந்து கொண்டாள்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
11
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. Abarjith பாவம்..தெரியாம தப்பு பண்ணி அதனால காதலிச்சு தவிக்கிறான்… முறைப்படி சரிசெய்ய நினைக்கிறான்..பர்வியும் ரொம்ப பாவம்…தேவையில்லாம பிரச்சினைல மாட்டி எதுவும் புரியாம, அக்காவுக்காக யோசிக்கிறா… பார்கவி ரொம்ப ரொம்ப பாவம்..இது எதுவும் தெரியாம அபர்ஜித் நினைச்சு உருகுறா.. விஷயம் தெரியும் போது என்ன முடிவெடுப்பாளோ..

    மது போதையும் நண்பர்கள் போதனையும் மூன்று பேர் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கி விட்டது..

    1. Author

      அதேதான் குடி குடியை கெடுக்கும் 🤗
      Thank you so much for your comment 💕