Loading

அகம் 14

தன் எதிரே நிற்கும் மணையாள், அனைத்தையும் கேட்டிருப்பாளோ.? என்ற பரபரப்பு அவன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது, அவந்திகையோ மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி அவனை மிரட்டும் தோரணையில் பார்த்துக்கொண்டிருந்தாள்.அவனாய் சொல்ல வேண்டும் என்று அவள் மௌனம் சாதிக்க, அந்த மௌன போரட்டத்திற்கு முற்றுபுள்ளி வைத்தான் அகன்.

“அவந்தி.! உன்கிட்ட சொல்லணும்னு தான் நினைச்சேன்” வார்த்தைகளை உள் இழுத்தான்.

“என்ன சொல்லணும் நினைச்சிய.?” முறைத்தபடி நின்றாள் அவந்திகை.

“அது வந்து” மீண்டும் அவன் தயங்க,

“நீங்க ஒன்னும் சொல்லாண்டாம், நானே எல்லாத்தையும் கேட்டுட்டேன், நீங்க ஒன்னும் விசனபடாதீய, சேர்ந்து சமாளிப்போம் அகன்” எனத் தன்னவனின் கைகளோடு, தன் கரம் சேர்த்து, தன்னவனுக்கு நம்பிக்கை கொடுக்க, உலகமே தன் கையில் வசப்பட்டதாய் உணர்ந்தான், ஒவ்வொரு முறையும் அன்பால் அகனின் மனதை கொய்துக்கொண்டே தான் இருந்தாள் அவந்திகை.

****************

அகன் எல்லையில் இருந்த காவல் தெய்வத்தின் மீது வாகனத்தை இடித்துவிட்டதால், அந்த ஊரில் எது நடந்தாலும் குறி சொல்லும் பாட்டியை வரவழைத்திருந்தார் முத்துவேல். வீட்டில் அனைவரும் சுற்றி அமர்ந்திருந்தனர், சந்தியா அவளுக்கு எதோ வாங்குவதற்காக அவந்திகையின் வண்டியை எடுத்துக்கொண்டு கடைவீதிக்குச் சென்றிருக்க, சிவசக்தி பள்ளிக்கு சென்றிருந்தாள். பெரியவர்கள் அங்கே இரு்க்க, மன்னராசாவும் அங்குத் தான் இருந்தான். அகனருகே அவந்திகை நின்றிருந்தாள்.

“ஆத்தா எங்க வீட்டு பிள்ளை எதோ தப்பு பண்ணிருச்சு, அதுக்கு என்ன பரிகாரம் செய்தாகணும்னு சொன்ன, உன் மனசு குளிர செஞ்சு தர்றோம்” என முத்துவேல் கேட்க, எதிரே சிவப்பு நிற புடவையும் வட்ட பொட்டும் வைத்திருந்த மூதாட்டி விழியை மெல்ல திறந்தார்.

“எய்யா நான் இதுக்கு வழி சொல்ல முடியாது பார்த்துக்க, அந்தக் காவக்காரி தான் சொல்லணும், இரு அவளை வர வைக்குதேன்” எனக் கூறி சில மந்திர வார்த்தைகளை உச்சரிக்க ஆரம்பித்தார் மூதாட்டி.

சில நொடிகள் விழிகளை மூடி யாரிடமோ பேச துவங்கினார் அவர், ஆனால் யாரிடம் பேசுகிறார் என்று யாருக்கும் புரியாத நிலையில்.

“ஆஆ.!”

“சரி சொல்லிடுதேன்”

“வேற என்ன வேணும் கேளு.?”

“ஆஆ சரி.!”

“இதெல்லாம் செஞ்ச பிறவு, பிள்ளைகளைத் தொந்தரவு பண்ண மாட்டியே”

“ஆஆ சரி நல்லது” என அந்த மூதாட்டி பேசி முடித்து விழி திறந்தார்.

“காவக்காரி கொடை கேக்குதா, அவளுக்குக் கோயில் எடுக்கணுமாம், வேற அவளோட மரத்தை வெட்டாம கோயில் எடுத்து, கருப்படியில பாயாசம் செஞ்சு படைக்கணுமாம்” என அவர் சொல்லி முடிக்க,

“இம்புட்டு தான காவக்காரிக்குச் செஞ்சிட்டா போச்சு” என ஜெயக்கொடி சொல்ல,

“பொறு தாயி.! இரண்டு ஊரும் சேர்ந்து அவ்வளவையும் செய்தாகணும், அவளோட பேரை ஊர் சொல்லுத மாதிரி,அவளோட பேரை கோவில்ல எழுதி வைக்கணுமாம்”

“இரண்டு ஊரும் சேர்ந்து செய்யணுமா.? எப்படிச் செய்யுறது, அருள்மிகு காவல்காரி கோவில் தானா, போட்டா போச்சு” எனக் கேட்டார் முத்துவேல்.

“காவல்காரியா ஹா ஹா, அது அவ பேரு கிடையாதாம் ஊரு சனம் அப்படிக் கூப்பிட்டு பழகிருச்சு” என மூதாட்டி சொல்ல,

“பிறவு என்ன பேரு பாட்டி.?” அவந்திகை கேட்டாள்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது தாயி, அவ பேரை விரச நீங்க தான் கண்டுபிடிக்கணும்” என அகனையும் அவந்தியும் பார்த்து மர்மமாய்ச் சிரித்து வைத்த, மூதாட்டி கிளம்ப முற்பட,

“காவக்காரி தான அவளோட பேரு” ஜெயக்கொடி கேட்க,

“யாரு சொன்னது காவக்காரின்னு, ஊர் எல்லைல இருக்காதால காவக்காரி சொல்லுவாவ, யாருக்கும் அவ பேரு தெரியாது” எனச் சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார் அந்த மூதாட்டி.

“அவி உனக்கு எதாவது தெரியுமாட்டி.?” ஜெயக்கொடி கேட்க,

“நீங்க சொன்னா தான எனக்குத் தெரியும், உங்களுவ யாருக்கும் தெரியாதப்போ எனக்கு எப்படித் தெரியும்” என உதட்டை சுழித்தாள்.

“காயத்ரி மைனி உங்களுக்கு.?” கேள்வி தாங்கிய விழியுடன் ஜெயக்கொடி கேட்க,

“இல்லை ஜெயா, உங்க அண்ணனுக்குத் தெரிஞ்சிருக்கும் நினைக்குறேன்” எனச் சொல்லிவிட்டார்.

“ஏலே மன்ராசா உனக்குத் தெரியுமோ டே” முத்துவேல் கேட்டார்.

“இல்லை மாமா, இந்தச் சாமி விசயமெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது. யாரையாவது அடி வெளுக்கணுமா சொல்லுக பொளந்து கட்டிட்டு வந்துடுதேன்” எனப் பேசிக்கொண்டிருந்த போதே மீண்டும் அந்த மூதாட்டி வீட்டிற்குள் நுழைந்தார்.

“என்ன பாட்டி எதையாவது மறந்து வச்சிட்டு போய்ட்டியா.?” அவந்திகை கேட்க,

“இல்லை தாயி நான் இப்போ தான வருதேன், நீ என்ன இப்படிக் கேக்குத.?”

“என்ன பாட்டி சொல்லுத இப்போ தான, காவக்காரிட்ட பேசி குறி சொல்லிட்டு போன, கோயில் கட்ட சொன்னான்னு சொன்ன” அவந்திகை அதிர்வுடன் கேட்க.

“என்ன மாதிரி வேசம் கட்டி வந்துட்டாளா.? அந்தக் காவக்காரி” என அந்த மூதாட்டி சிரிக்க.

“என்ன சொல்லுதிய.! எங்க வீட்டுக்கு வந்தது அந்தக் காவக்காரியா..?”

“ஆமா அவ உருமாறி வந்திருக்கா, அவ தான் உருமாறும் வித்தைக்காரியாச்சே, வீடு தேடி நியாயத்தைக் கேட்டிருக்கா, முறையா செஞ்சு கொடுத்திருக”எனச் சொல்லி விட்டு கிளம்பினார் மூதாட்டி.

அகனுக்கோ ஏற்கனவே தன்னிடன் அவந்திகை போல் வந்து ஊர் எல்லை வரை அழைத்துச் சென்றது நினைவு வர, சாமி கேட்டதைச் செய்தாக வேண்டும் எனத் தீவிரமானவன், மன்னராசவை அழைத்துக்கொண்டு, நரசிங்கபுரத்துக்குக் கிளம்பினான். மன்னராசாவின் வண்டியிலே இருவரும் கிளம்பினர். சில நிமிடங்கள் பயணத்தில் நரசிங்கபுரத்தை அடைந்திருந்தனர் இருவரும். நாராயணன் வீட்டின் வாசலிலே அடியாட்கள் நின்றுக்கொண்டிருக்க, அதைப் பொருட்படுத்தாது உள்ளே சென்றனர் இருவரும்.

“வாங்க தம்பி.! வாங்க.! அங்க வர தான் புறப்பட்டுட்டு இருந்தேன்,தெய்வமா வந்து சேர்ந்திய” என நாராயணன் வரவேற்றதே புதிதாய் இருந்தது அவருக்கு.

“காவக்காரிகாகத் தான் வந்தோம்” என மன்னராசா சொல்ல,

“சரிதான் தம்பி மோர் குடிக்கியளா.?” எனக் கேட்டவர் வேலையாளிடம் மோர் கொண்டு வரும் படி பணித்தார்.

“இல்லை அதெல்லாம் வேண்டாம், நீங்க வீட்டுக்கு வந்தப்ப, கோபத்துல எதோ பேசிட்டோம், ஊர் பிரச்சனையல்லாம் மறந்துட்டு, நம்ம சாமிக்குச் செய்ய வேண்டியதை செஞ்சிரலாமே” என அகன் மொழிந்தான்.

“சரி தான் தம்பி செஞ்சிரலாம், காவக்காரி உருமாறி வந்து எனக்கும் புத்தி கொடுத்துட்டா, ஊர் கூடி செய்துருவோம்” என நாராயணன் சொல்லியதை இருவராலும் நம்பவே முடியவில்லை.

“சரிங்க ஊர்காரவியிட்ட பேசி எடுத்துட்டு சொல்லுங்க, திருவிழாக்கு நாள் குறிச்சிடலாம்” என மன்னராசா நிதர்சனம் பேச, சரியெனத் தலையசைத்தார் நாராயணன்.

“சரி அப்போ நாங்க கிளம்புறோம்” என அகன் விடைபெற்ற போது.

“தம்பி உங்களைப் பாரத்தது போல இருக்கு, உங்க சொந்த ஊரு எது.?” என அகனை பார்த்துக் கேள்வி எழுப்பினார்.

“என்ன இப்படிச் சொல்லிட்டிய..? இவரு செந்தில்நாதன் பெரியப்பா மகன் தான்” என மன்னராசா விவரிக்க,

“செந்தில்நாதன் மகனா இது, அய்ய அவிய மகன்னு தெரியாம இம்புட்டுப் பிரச்சனை செஞ்சிட்டேனே, என்ன மன்னிச்சிருக தம்பி” எனத் தன் வயதையும் மீறி மன்னிப்பு வேண்டினார் நாராயணன், அதற்குப் புன்னகைத்த அகன்.

“எல்லாமே லேகா சொல்லி தான் நீங்க செஞ்சிங்கன்னு தெரியும், நீங்களா எதுவும் செய்யலையே, நான் உங்களை விடச் சின்னவன் என்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்க வேண்டாம், ஆசிர்வாதம் பண்ணுங்க என, அவர் கால்களில் விழுந்ததோடு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டான் அகன்.

“அப்படியே உங்க அய்யனை மாதிரியே இருக்கியேய்யா, நீ நல்லா இருப்ப” மனதார வாழ்த்தினார் நாராயணன். அதன்பின் இருவரும் வெளியே கிளம்பும் தருணம்.

“காவக்காரிக்கு வேற பேரு உண்டாமே உங்களுக்குத் தெரியுமா.?” மன்னராசா கேட்க,

“நான் சின்னவயசுல இருந்து கேக்குற பேரு காவக்காரி தான், எனக்குத் தெரியலையே” என அவர் சொல்ல, அவரின் வீட்டின் திண்ணையில் அமர்ந்தபடி வெத்தலை இடித்துக்கொண்டிருந்த பாட்டி.

“அவளுக்கு வேற பேரு உண்டே.? நினைவுல பிடிபட மாட்டேன்தே” எனத் தலையில் கைவைத்து வெகுநேரம் யோசித்தும் விடைக்கிடைக்காதல் சோர்ந்து போனார் அவர், அதன் பின் இருவரும் ஏமாற்றத்துடன் கிளம்பினார்.

இப்போது அனைவரின் யோசனையும் காவக்காரியின் பெயர் என்னவாக இருக்கும் என்ற யோசனையில் முழ்கி போயிருந்தனர்.

***************

இரு ஊரின் சம்மத்துடன் கோவில் கட்டும் பணியும் துவங்கியது, அனைத்திற்கும் அகன் பொறுப்பெடுத்துச் செய்ய ஆரம்பித்தான். அதே ஊரில் அவர்களுக்கான வீடும் கட்ட துவங்கியிருந்தனர். அனைத்தும் சுபமாய் நடந்துக்கொண்டிருந்த வேளை. அனைவரும் அவர் அவர் வேலையில் முழ்கிபோயிருக்க, ஜெயக்கொடி சமயலறையில் சமைத்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கே பார்வதியும் ராஜபூபதியும் வர, அன்புடன் வரவேற்றார் ஜெயக்கொடி. ராஜபூபதி முத்துவேலை தேடி செல்ல, பார்வதி ஜெயக்கொடியுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார்.

“என்ன செயா.! நாங்க ஊருக்குப் போன சமயம் பலதும் நடந்திருக்கும் போலயே”

“ஆமா மைனி.! எல்லாம் நம்ம காவக்காரி தான், இரண்டுபட்டு கிடந்த ஊரை, என் மருமகன் மூலம் சேர்த்துவச்சிட்டா பார்த்தியளா.?” என ஜெயக்கொடி உற்சாகத்தோடு சொல்ல,

“ஆமா கேள்விபட்டேன் செயா, கொடைக்கு யாரும் வரிக் கொடுக்காண்டாம், முழுப்பொறுப்பையும் உன் மருமவனே எடுத்துக்கிட்டானமே” எனப் பார்வதி கேட்டார்.

“ஆமா மைனி.! எங்க போயிருந்தாலும் இப்படியொரு மாப்பிளை நம்ம அவிக்கி கிடைச்சிருக்க மாட்டவ பார்த்துகிடுக, தங்கமாட்டம் இனியன் தம்பி தாங்குது அவிய, பெத்தவியளுக்கு இது போதாதா மைனி. அவளோட தொழிலுக்காக இங்கணையே வீட்ட கட்டுறாவ, இதெல்லாம் பார்க்க என் அண்ணேன் இல்லாம போயிட்டேன்னு தான் வருத்தமா இருக்குது மைனி” எனப் பெருமையுடன் தொடங்கிக் கவலையுடன் முடித்தார் ஜெயக்கொடி.

“எல்லாம் சரி தான் செயா.! காவக்காரிகிட்டேயே போய் வம்பு வளத்திட்டு வந்திருக்கானே, ஒரு வண்டியை சரிய ஒட்ட தெரியாதவன் வாழ்க்கையை எப்படி ஓட்டிகிட போறானோ.? அதே ரோட்டுல தான் மன்ராசாவும் நிதம் போயிட்டு வந்துட்டு இருக்குதான், வண்டி சரிய ஓட்டாம எங்கேயவது இடிச்சிருக்கானா என்ன.? பொறுப்பில்லாத பயலுவ தான் இப்படிச் சொய்வானுவ” என அகன் மீது பார்வதி குற்றம் சாட்ட, பேசினால் பிரச்சனை வருமென மௌனித்தார் ஜெயக்கொடி.

“உங்க வீட்டுல என்ன கறி வச்சிய மைனி” என ஜெயக்கொடி பேச்சை மாற்ற,

“செயா ஆயிரம் தான் இருந்தாலும் மன்ராசா மாதிரி வராது பார்த்துக்க”

“எம்மோ உனக்கெல்லாம் அறிவே இல்லைல, எங்க வந்து என்ன பேசிட்டு இருக்க.? உன் மவனைப் பத்தி உனக்கு என்ன தெரியும்.?” கோபமாய்ச் சாடினான் மன்னராசா.

“இப்போ என்னடே தப்பா சொல்லிபுட்டேன், உள்ளதை தான் சொல்லுதேன், வாய மூடிட்டு போயான்” கோபமாய்க் கத்தினார் பார்வதி.

“இங்க பாரு ஒன்னு தெரிஞ்சுக்க, குப்பையில விழுந்து புரண்டுவனை, எழுப்பி மனியனாக்குனது அவி தான், இப்போ எனக்குன்னு சில பொறுப்புகளைக் கொடுத்து, அதைச் சரியா பார்த்து கிட சொல்லுறது இனியன் அண்ணன் தான்., என்னை நம்பி இரண்டு லட்சம் கொடுத்து வச்சிருக்காவ இனியன் அண்ணன், என்னை நம்பி நீ ஒரு பத்து ரூவா துட்டு தருவியா.? கோவில் கட்டியதுக்குக் காசு கொடுக்குறதுல இருந்து வாங்கியது எல்லாமே, என்ன வச்சு தான் பண்ணியாவ, என்ன மனுசனா மாத்திருக்கவா, அவியள எதாவது பழிச்சு பேசுன, அம்மான்னு பார்க்க மாட்டேன் பார்த்துக்க, பிறவு பழையபடி போய்க் குப்பையில தான் புரளுவேன் பார்த்துக்க” என மிரட்டல் தொனியில் மன்னராசா சொல்லி நகர வாயடைத்துப் போனார் பார்வதி. மன்னராசாவோ விறுவினுவென அங்கிருந்து சென்றான்.

இதற்கு மேல் அவரால் என்ன பேச முடியும், இவ்வளவு பொறுப்பாக அவன் பேசி பார்த்ததே இல்லை, இன்று சரியாகத் தெளிவாகப் பேசுகிறான், என்ன தான் அவந்திகை, மன்னராசாவின் திருமணம் அரங்கேறவில்லை என்றாலும், மன்ன ராசாவிடம் இருந்த புதிய மாற்றம், பார்வதியுனுள் மாற்றத்தை ஏற்படுத்ததான் செய்தது.

*********************

நிலவு தனியாய்க் காய்ந்துக்கொண்டிருக்க, நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்த ரம்மியமான இரவு வேளையில், வீட்டின் எதிரே சுழன்றுக்கொண்டிருந்த காற்றாலையைப் பார்த்து நின்றுருந்தனர் அவந்திகையும், அகனும்.

“அவந்தி.!” மெல்ல அழைத்தான் அகன்.

“ம்ம்.! சொல்லுங்க அகன்”

“எல்லாமே சரியா தான போயிகிட்டு இருக்கு” எனக் குழம்பிய படி கேட்டான் அகன்.

“நீங்க எல்லாத்தையும் சரியா தான் செய்யுறீய, எதுக்கு உங்களுக்குச் சந்தேகம் வருது.?” கேள்வியாய் தன்னவனின் முகம் பார்த்தாள் அவந்திகை.

“இல்லை அவந்தி எல்லாமே சரியா போனாலும், அந்தச் சாமி பேரை கண்டுபடிக்க முடியலையேன்னு வருத்தமா இருக்கு, இத்தனை நாள் இந்த ஊர்ல இருக்கிங்க, ஒருத்தருக்கு கூடவா இந்தச் சாமி பேரு தெரியாமா போச்சு” அவன் முகம் வருந்தியதைக் கண்டு, தானும் வருந்தினாள், இப்போதெல்லாம் அகனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கும் அவந்திக்கு, அவனுடைய சின்ன முகச் சுணக்கம் கூடக் கலக்கத்தைக் கொடுத்தது. தனக்காக அவனிருந்த ஊரை விட்டு, தொழிலை விட்டு, அவளுக்காய் இந்தக் கிராமத்தில் இருக்கும் தன்னவனைப் பார்த்துக் கொஞ்சம் பெருமையாகவே இருந்தது, அவளுக்காக மாளிகையைக் கட்டிக்கொண்டிருக்கிறான் அவன்.

“அகன்.! சாமி பேரு தெரியலை ஆனா, நமக்கு நல்ல வழிய அந்தக் காவக்காரி காட்டுவான்னு எனக்குத் தெரியும் அகன்” ஆறுதலாய் அவள் சொன்னாள்.ஆனால் அவளுக்குத் தெரியும் காவல் தேவதை அவ்வளவு எளிதில் தன் பெயரை வெளிபடுத்தமாட்டாள் என அறிந்தே இருந்தாள். அவள் பெயர் தெரிய வேண்டும் என்றாள் அவள் உருவான கதை தெரியவேண்டும், அவள் உருவான கதை தெரிய வேண்டும் என்றாள் யாரவது பெரியவர்களுக்குத் தான் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது, என யூகித்துக்கொண்டே வந்தவளுக்கு, பால்கனி தான் மனதில் தென்பட்டார்.

“சரி அவந்தி அப்படிச் சாமி நல்ல வழிய காட்டினா, திருவிழாவ சிறப்பா நடத்திரலாம்” என அவன் சொல்லிக்கொண்டிருந்த போதே, அவனுடைய செல் பேசி இசைந்தது.

“ஷிட்..!” என அவன் எரிச்சலுடன் மொழிந்த தொனியிலே தெரிந்தது, அது லேகா தான் என்று.

“என்ன இனியன்.! ரொம்பப் பிஸியா..? இருக்கப் போல, ஒரு பக்கம் கோவில் கட்டுற வேலை, ஒரு பக்கம் உன் அருமை பட்டிக்காட்டானுக்கு, தாஜ்மஹால் கட்டுற போல.?” நக்கலாய் மொழிந்தாள் லேகா.

“ஹேய் யூ ப்ளடி ஷிட்” அவந்திகையைச் சொன்னதும் தாறுமாறாய் கோபம் அவனுள் எழுந்தது.

“கூல் டவுன் மை பேப்” அவள் சொன்னாள்.

“ஷட் அப் லேகா, என்ன டிஸ்டர்ப் பன்னாத” அவன் கோபமாய் மொழிந்ததில்.

“அதுக்கு நீ என்ன டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும் இனியன்” அவள் சொல்ல, மர்ம்மாய்ச் சிரித்தான் அகன்.

“ஹவ் யூ காட் தெட், ஹா ஹா” என அவளுக்குக் கேட்கும் படி சிரித்தான்.

“என்ன இனியன் நினைச்சிட்டு இருக்க, என்னோட கெரியர் முழுசும் போச்சு உன்னால, அதோட அபிஷேக்க் பிஸ்னஸ் டோட்டல் லாஸ், எல்லாமே உன்னால தான்” அவள் கோபமாய்ப் பேசினாள்.

“என்ன நினைச்ச லேகா.? இந்த மொட்டை பட்டிக்காட்டுல உட்கார்ந்திகிட்டு, என்ன பண்ணிருவான்னு நினைச்சியா.? நீ அவந்திகை பக்கம் வராம இருந்திருந்தா, நான் எதுவும் செஞ்சிருக்க மாட்டேன் பட்” என அவன் இடைநிறுத்த.

“திஸ் இஸ் டூ மச் இனியன், ஐ வில் பே ஃபார் யூ இனியன்” அவள் கோபத்தில் கத்தினாள்.

“யூ வில் பே ஃபார் மி யா.? எப்படி லேகா.? ஜெயிலுக்குப் போய்க் கல் உடைச்சு பே பண்ணுவியா.?” நக்கல் வழிந்தது அகனின் குரலில்.

“தெட்ஸ் தி லிமிட் இனியன்”

“நீ உன் லிமிட்ல இருந்திருக்கணும் லேகா, உன்கிட்ட சொல்லாம வந்தது நான். அதுக்காக என் வொய்ஃபா எப்படி நீ பழிவாங்கலாம், அவளோட சின்னப் பிஸ்னஸ் நடக்கக் கூடாதுன்னு நாராயணன் வச்சுப் பேரம் பேசினவ தான நீ, நீ செஞ்சத விட நான் கம்மியா தான் பண்ணிருக்கேன், கெட் லாஸ்ட் யூ இரிடெட்டிங் இடியட்” எனச் சொல்லி அழைப்பை துண்டிருந்தான் அகன்.

“அகன் என்ன இவ்வளவு கோபமா பேசுதிய, அவிய கோபத்துல எதுவும் பண்ணிர போறாவ” தயக்கத்துடன் சொன்னாள் அவந்திகை.

“அவ வெளிய இருந்தான பண்ணுறதுக்கு அவந்தி, அவ ஜெயிலுக்குப் போயிருவா நான் கேஸை லாயர் கிட்ட ஒப்படைச்சுட்டேன்” என அகன் சொல்லி முடிக்க.,

“அப்படி என்ன தப்பு செஞ்சாவ அவிய” வெள்ளந்தியாய் கேட்டாள் அவந்தி.

“அந்த டென்சன் உனக்கு எதுக்கு, உன் அகன் உன் பக்கத்துல இருக்கும் போது தேவையில்லாதெல்லாம் நினைக்கக் கூடாது, சரியா.?” அவன் கேள்வியாய் அவளின் முகம்தனை கரங்களில் தாங்க, அவனது அணைப்பில் சம்மதமாய்த் தலையசைத்தாள். அந்த இரவு நிலவே வெட்கம் கொண்டு மேகத்திற்குள் மறையும் அளவிற்கு, அவள் மீதருந்த புனிதமான காதலை, இல்லறமாய் மாற்றியிருந்தான் அகன். திகட்ட திகட்ட காதலை அவளுக்கு அள்ளிக் கொடுத்திருந்தான், திகட்டாமல் பெற்றுக்கொண்டாள் அவந்திகை.

மீட்டாத வீணையாய்

அவந்தியின் வதனத்தில்

விரல் நடனம் புரிந்து

அவளுக்குள் உணர்த்திய

முதல் ஸ்பரிசம்

கண்மூடி அவள் உணர

ரசாயன மாற்றமாய்

அடிவயிற்றில்

புதிதாய் புத்துயிர் பெற்று

கூடலில் இணைந்திருந்தனர்

அகனும் அவந்தியும்..!

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்