Loading

விதிமுறைகள்:

  1. மற்ற தளத்தில் எழுதும் கதைகளையும் இங்கே எழுதலாம். ஆனால் ஒரே சமயத்தில் அனைத்து இடங்களிலும் பதிப்பிப்பது அவசியம்.
  2. வார்த்தை வரம்புகள் எதுவும் கிடையாது. 100, 200 அத்தியாயங்கள் கூட எழுதலாம்.
  3. படைப்புகள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். தழுவல் கதையாகவோ, காபி செய்யப்பட்ட கதையாகவோ இருப்பின் பின் விளைவுகளுக்கு எழுத்தாளர் மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
  4. 18+, படுக்கையறை காட்சிகள், நான்கு வரிகளுக்கு மிகாமல் இருத்தல் நலம். பாலுணர்வு தூண்டும் காட்சிகளோ விரசமான பகுதிகளையோ எழுதுவதை தவிர்த்தல் நல்லது. (அதிகப்படியான விளக்கங்களை மட்டும் தவிர்த்துக் கொள்ளலாம்.)
  5. காதல், குடும்பம், சமூகம் சார்ந்த கதைகள், கொலை, கொள்ளை, திரில்லர், பேய், பிசாசு, ஆவி, இப்படி எந்தப் பிரிவுகளின் கீழும் கதைகள் இருக்கலாம்.
  6. ஆன்டி ஹீரோ, ஹீரோயின் கதைகளை தாராளமாக எழுதலாம். ஆனால், அபியூஸ் (abuse) காட்சிகள், பெண்ணடிமை, பெண்மையை இழிவு படுத்தும் காட்சிகள் இல்லாமல் ஆன்டி ஹீரோவை வடிவமைக்கவும்.
  7. ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால் தங்களுக்குள் பேசி தீர்த்துகொள்ளப் பாருங்கள், முடியாத பட்சத்தில் தளத்தின் அட்மினை தொடர்பு கொண்டு இருதரப்பினரும் பேசி நேர்மறை கருத்துடன் பிரச்சனையை முடித்துக் கொள்ளவும். சந்தேகங்களுக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

‘BLOG’ எழுத்தாளரின் ப்ளாக் பற்றிய விதிமுறைகள்:

  1. ‘BLOG’ (ப்ளாக்) பக்கத்தை எழுத்தாளர்கள் அவர்களே வடிவமைக்கும் படி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
  2. தூரிகை தளத்தின் எழுத்தாளராக இருந்தால் மட்டுமே இந்த பக்கத்தை செயல்படுத்த இயலும்.
    அதாவது குறைந்தது ஐந்து அத்தியாயங்கள் அல்லது ஒரு முழு தொடரினை தூரிகை தளத்தில் பதிவிட வேண்டும்.
    நாவலாசிரியர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது தான் இந்த பிளாக் பக்கம்.
  3. இதனை இரு வகையாக பிரித்துள்ளோம்.

(A) Basic Blog (அடிப்படை வலைப்பதிவு) :

  • இந்த வகை பிளாக் இல், ஆசிரியரின் குறிப்பு, முடித்த கதை மற்றும் தொடரும் கதைகளின் எண்ணிக்கை, அவரின் முகப்புப் படம், கிண்டில் திரிகள், ஆடியோ புத்தகத்தின் திரிகள் என இவை அனைத்தும் செயல்படும்.
  • ஏற்கனவே எழுதி முடித்த கதையை மறுபதிப்பு செய்பவர்களுக்கு இந்த வசதி செயல்படுத்தப்படும்.

 

(B) Featured Blog (சிறப்பு வலைப்பதிவு)

  • இந்த வகை பக்கத்தில், ஆசிரியரின் குறிப்பு, முடித்த கதை மற்றும் தொடரும் கதைகளின் எண்ணிக்கை, அவரின் முகப்புப்படம், கிண்டில் திரிகள், ஆடியோ புத்தகத்தின் திரிகள், பதிப்பித்த புத்தகத்தின் தகவல்கள், எழுத்தாளர் பெற்ற சிறந்த ஐந்து விமர்சனங்கள், தூரிகை சார்பாக ஒரு சிறிய பேட்டி என அனைத்தும் இப்பக்கத்தில் இடம் பெறும்.
  •  தூரிகை தளத்திற்கென புது கதை ஒன்றை தொடங்குபவர்களுக்கு இந்த வசதி செயல்படுத்தப்படும். அக்கதையை ஒரே நேரத்தில் மற்ற தளத்திலும் பதிவிடலாம். ஆனால், இதுவரை எங்கும் வெளிவராத தொடராக இருத்தல் அவசியம்.

கவனிக்க:

  •  புதிய எழுத்தாளர் ஒருவர், புதிய கதை ஒன்றை தொடங்குகிறார் எனில், குறைந்தது 3 கதைகள் எழுதி இருக்க வேண்டும். கிண்டில் அல்லது மற்றொரு மின் புத்தகத் தளத்தில் குறைந்தது இரு மின் புத்தகம் பதிவிட்டிருக்க வேண்டும்.

அப்படி இல்லையெனில் புதிய எழுத்தாளர்க்கு Basic Blog (அடிப்பதை வலைப்பக்கம்) – மட்டுமே செயல்படுத்த இயலும். மின் புத்தகம் மற்றும் ஆடியோ புத்தக தகவல் இல்லாதவர்களுக்கு ஆசிரியர் குறிப்பு, முகப்புப்படம், எழுதும் கதைகளின் எண்ணிக்கை மட்டும் பிளாக் பக்கத்தில் காண்பிக்கப்படும்.

கூடிய விரைவில் மேலே குறிப்பிட்ட விதிக்கு ஏற்ப புதிய எழுத்தாளர் மூன்று கதைகள் எழுதிய பின், இத்தளத்தின் சிறப்பு வலைப்பக்கத்தை கொண்ட எழுத்தாளராக மாறி விடுவார்.

  1. முதலில் மறுபதிப்பு கதைகளை பதிவிட்டு, அடிப்படை வலைத்தளம்(Basic Blog) கொண்ட எழுத்தாளர், சில நாட்களுக்கு பின் தூரிகை தளத்தில் புதிய தொடர் ஒன்றை தொடங்கினால், அவரும் சிறப்பு வலைத்தளம் (Featured Blog) கொண்ட எழுத்தாளர் வரிசையில் இடம் பெறுவார். ஆனால் அவர் விதி எண் (iii) ஐ பின்பற்றி இருக்க வேண்டும்.
  2. சிறப்பு வலைப்பக்கம் உருவாக்க, கொடுக்கப்பட்ட பட்டியலில் ஒரு பாரம்(Form) காட்டப்படும். அதில் தூரிகை தளம் சார்பாக எடுக்கப்படும் பேட்டிக் கேள்விகள் தவிர மற்ற அனைத்து விவரங்களையும் கொடுத்து, எழுத்தாளரே அவரின் பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம். அவருக்கு மின்னஞ்சலில் கேள்விகள் கொடுக்கப்பட்டு, அவரின் பதிலை நாங்களே அவரின் பக்கத்தில் காண்பிப்போம்.
  3. கதைகளை மறுபதிப்பு செய்யும் எழுத்தாளர்களோ அல்லது புது கதையினை பதிவிடும் எழுத்தாளர்களோ கதையை நீக்கினால், குறிப்பிட்ட கால அளவில் மற்றொரு கதையை தொடர வேண்டும். அப்படி அவரின் தூரிகை பக்கத்தில் எந்தவொரு தொடர்கதையும் இல்லையெனில் அவருக்காக வடிவமைக்கப்பட்ட Blog (வலைப்பக்கம்) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
  4. ஆனால், அவரின் தூரிகை பக்கம் நீக்கப்படாது. அதில் அவர் பதிவிட்ட சிறுகதை, கவிதைகள் அனைத்தும் அப்படியே இருக்கும். பிளாக் மட்டுமே நிறுத்தி வைக்கப்படும்.

அதனை எப்படி நிரப்ப வேண்டும் என்ற காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னஞ்சல் அனுப்பியும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.