
மெல்லினம் 20
ஆயிற்று கதிர் முல்லையின் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஓடிற்று.
மறுவீடு சம்பிரதாயம் எல்லாம் முடித்து நேற்று தான் கதிரின் வீட்டிற்கு திரும்பியிருந்தனர் மணமக்கள்.
முல்லை சமையலறையில் இருக்க “முல்லை, டீ…இஇஇஇஇ” என மாடியில் இருந்து கத்தியிருந்தான் கதிர்.
அப்போதே தான் மிக்ஸியை ஆன் செய்திருந்தவள், இவன் கத்தலில் திடுக்கிட்டு, சட்டென அதனை நிறுத்தியவளுக்கு, படபடப்பு இன்னும் நிற்கவில்லை.
இது, இவன் ஒரு வாரமாக செய்யும் வழக்கமான செயல் என்பதால், வீட்டினர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
ஆனால் முல்லைக்கு தான், அவன் ஒவ்வொரு முறையும் கத்தும் போது, படபடக்கும் நெஞ்சை மாற்ற முடியவில்லை.
எந்நேரம் எப்படி எங்கிருந்து அழைப்பான், என்றே தெரியாது. ஆனால் அவன் எழுந்து ஆபிஸ் கிளம்பும் வரை, இவளை அலற விட்டு கொண்டு தான் இருப்பான்.
அதனை பழகுவதற்கு தான் இன்னும் நேரம் எடுத்தது முல்லைக்கு.
நொடி நேரம் தாமதித்தாலும், அத்வியையும் சேர்த்து கத்த விடுவான், என்பதால் அவசர அவசரமாக டீயை எடுத்து கொண்டு சென்றாள்.
இவள் சென்று டீ யை கொடுக்க, பளீரென்ற புன்னகையுடன் அதனை வாங்கி அருகிலிருந்த டீபாயில் வைத்தவன், முல்லையை இழுத்து தன் அருகில் அமர வைத்தவன் “குட்மார்னிங் முல்லை” என்றவாறு அவளை இறுக அணைத்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட, எப்போதும் போல், அவள் காது மடலில் இருந்து உள்ளங்கால் வரை இருந்த முடிகள் கூசி சிலிர்த்து நின்றன.
அவன் எப்போதடா விலகுவான் என்று காத்திருந்த அத்வி, அவன் விலகிய அடுத்த நொடி, அவனும் கதிர் முத்தமிட்ட இடப்பக்க கன்னத்திலயே முத்தமிட்டு “குட்மானிங் ம்மா” என்ற சிரிப்புடன் கூற,
“நோ! அத்வி குட்டி இந்த பக்கம் என்னோட ப்ளேஷ். நா கொடுத்த பக்கமே நீயும் கொடுக்க கூடாது, நீ அந்த பக்கம் தான் கொடுக்கணும்” என அவன் வழக்கம் போல் பொய்யாய் மிரட்ட,
“நோ….நோ….அங்கி…பக்கம் தான் நானும்” என அவனும் போர்க்கொடி உயர்த்தி, மீண்டும் முல்லையின் கன்னங்களில் இதழ் பதிக்க,
“டேய்!! சொன்னா கேளு அது என்னோட இடம்” என மீண்டும் அவன் மிரட்ட,
அவன் மிரட்டலில் களுக்கி சிரித்தது குழந்தை.
“உன்னை இரு” என்றவாறு கதிர் அருகே வர, அடுத்து நடக்க போவதை உணர்ந்த முல்லை, இருவரையும் தள்ளி விட்டு எழுந்து ஓட,
அவள் தள்ளிய வேகத்தில், கட்டிலின் மறுபுறம் உருண்டு இறங்கியவன், முல்லை வாசலை அடையும் மடக்கி பிடித்து தூக்கியிருந்தான்.
“என்னங்க, விடுங்க மொதல்ல கீழ அத்தை எல்லாம் தேடுவாங்க. டெய்லியும் இது என்ன விளையாட்டு” என அவள் தவிப்புடன் பரிதவிக்க,
“நோ! நோ! நோ….” என்றவாறு கதிர் முல்லையை தூக்கி கொண்டு கட்டிலிற்கு செல்ல,
அதனை கண்டே அத்விக்கு குஷியோ! குஷி! அடுத்து நடக்க இருக்கும் விளையாட்டு அவனிற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாயிற்று.
இனி விடமாட்டான் என புரிந்த முல்லை “ஐயோ சீதா க்கா” என கூறி தப்பிக்க பார்க்க.
அவளை பார்த்து நக்கலாக சிரித்தவன், இரண்டெட்டுகள் பின் எடுத்து வைத்து கதவினை கால்களால் உதைத்து சாற்றியவன்,
அவளை கட்டிலில் கிடத்தி அவள் கண்களை உற்று நோக்கியவன் “ஏற்கனவே உன்னை விட்ட மாதிரி இனியும் உன்னை விட நான் முட்டாள் இல்லை முல்லை” என ஆழ்ந்து கூறியவன்,
அவள் அவன் கூறியதை கிரகித்து உணரும் முன், “ஆரம்பிக்கலாமா அதி குட்டி” என புருவம் உயர்த்தி கேட்டு,
முல்லையின் வலதுப்பக்க கன்னத்திலும் தன் மீசை முடிகள் குத்த அழுந்த முத்தமிட்டவன் “குட்டுமார்னிங் முல்லை” என அவன் கேலியாக சிரிக்க,
“நான்…நான்…நான்” என தாவிய அத்வியும் அவனை போலவே செய்து “குட்டுமோனிங்ம்மா’ என கதிரை போலவே பேச,
“டேய் நீ அந்த பக்கம் வச்சுக்கோ நா இந்தப்பக்கம்” என நிலத்தை பிரிப்பது போல் அவளை இருவரும் பிரிக்க,
“நோ….நோ….அதி தான்” என அவனும் மல்லுக்கு நிற்க,
“அப்படியா இந்த நெத்தி எனக்கு தான் ” என கூறி அங்கே அவன் முத்தமிட,
“நான் இங்க” முல்லையின் வலப்பக்க புருவத்தில் அத்வி முத்தமிட,
“இந்த பக்கம் எனக்கு” என கதிர் இடப்பக்க புருவத்தில் முத்தமிட என அவர்களின் குட்மார்னிங் முத்தம் முல்லையில் கண், காது, மூக்கு, மீண்டும் கன்னம் என இருவரின் முத்தங்களாலும் வலம் வர,
முல்லைக்கு தான் தவிப்பு கூடிற்று.
வேண்டாம் என கூறி எழுவும் அவளிற்கு அனுமதில்லை.
ஏன் என்றால் இந்த குட்மார்னிங் முத்தம், இருவருக்கும் அவள் மேல் எத்தனை பாசம் இருக்கிறது, என காட்டும் போட்டியாம், என்று கூறியவன் யாராக இருக்க முடியும் கதிரழகனே தான்.
திருமணம் முடித்த மறுநாளிலயே கதிர் முல்லைக்கு முத்தமிட்டு “குட்மார்னிங்” கூறி திடுக்கிட செய்ய,
அதனை கண்ட அத்விக்கு என்ன தோன்றியதோ தானும் முல்லையின் கன்னத்தில் முத்தமிட்டவன் “குட்மார்னிங்” சொல்ல,
அன்றிலிருந்து ஆரம்பித்து விட்டது இருவருக்குமான போட்டி….
அத்வியின் உரிமை போராட்டத்தினை லேசாக தூண்டி விட்டு அதில் சுகமாக குளிர் காய்ந்து கொண்டிருந்தான் அக்கள்வன்.
முதலில் தடுமாறி அதனை ஏற்க முடியாத முல்லையை விடேன் என்பது போல் அத்வியும் கதிரும் அவளை படுத்த,
அதுவும் அத்வியிடம் என்ன கூறினானோ தெரியாது….இந்த விளையாட்டினை விளையாடாது அத்வி பெட்டை விட்டு கூட நகர மாட்டேன் என கூறி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய,
அந்நேரம் “பாவம் குழந்தை ஆசைப்படுறானுல” என பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கூறுபவனை கண்டு பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது முல்லையால்.
போதக்குறைக்கு அத்வி வீட்டில் உள்ளவர்களிடம் எல்லாம் “ம்மா…விளையாட, நோ! நோ பாட்டி, பெய்யம்மா, தாத்தா, ரேஷ்மி” என அனைவரிடமும் பஞ்சாயத்தை வைத்து விட,
ஏதோ விளையாட அழைக்கிறான் என புரிந்து கொண்ட குடும்பத்தினர் “அவன் சொல்றத கேட்டா தான் என்ன முல்லை,விளையாட தான கூப்பிடுறான் போயேன்.பாரு அழுதது புள்ளை முகம் எல்லாம் வீங்கி போயிருக்கு” என சொல்லி வைத்தாற் போல் அனைவரும் ஏன் ரேஷ்மி கூட “விளையாடுங்க சித்தி” என கூற,
அவர்களிடம் உண்மையை கூற முடியாது தவித்து போய் நின்று விட்டாள் முல்லை.அவளின் தவிப்பை உணர்ந்த கதிரும் உள்ளுக்குள் அமைதியாக சிரித்து கொண்டான்.
ஏனெனில் செயல் மட்டுமே அத்வியுடையது. ஆனால் சொல் எல்லாம் கதிருடையது ஆயிற்றே.
குடும்பத்தினர் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது “என்னவோ போங்கடா” என்ற மனநிலையில் அவர்களுக்கேற்ப வளைந்து விட்டாள். ம்ஹூம்..வளைத்து விட்டான் கதிர்.
நினைவுகளின் ஊடே இருந்தவளை “இங்க நான் ” என்றவாறு அத்வி எதிர்பாரத விதமாய் அவள் நெஞ்சினில் முகம் புதைத்து முத்தமிட்டு விட,
ஆடித்தான் போய்விட்டாள் முல்லை.
சட்டென கதிரை பார்த்தவள், அவனின் பார்வையின் குறுகுறுப்பை தாங்க இயலாது, பதறி அடித்து கொண்டு எழுந்தவள் அறையை விட்டு ஓடியிருந்தாள்.
அவளின் ஓட்டத்தினை கண்டு வாய்விட்டு கதிர் சிரித்து விட, அவனை கண்ட அத்விக்கும் அவனின் சிரிப்பு தொற்றி கொள்ள கதிர் மேல் பாய்ந்து கட்டி கொண்டு சிரிக்க இருவரும் கட்டிலில் உருண்டு பிரண்டனர்.
சமையலறையில் வந்து நின்ற விட்ட முல்லைக்கு இன்னமும் படபடப்பு நீங்கவில்லை. அதிலும் அவன் பார்த்த பார்வை…அப்பப்பா!!!!!விட்டிருந்தால் ஏடாகூடமாய் ஏதாவது செய்திருப்பான். செய்ய கூடியவனும் தானே!
அத்வியின் பல் வரிசையினால் கன்னங்கள் அங்காங்கே கன்றி லேசாக சிவந்திருக்க, முல்லையில் முகமும் அதற்கு போட்டியாக சிவந்திருந்தது.
திருமணம் ஆகி ஒருவார காலம் தான் ஆயிற்று என்ற உணர்வினை விட காலகாலமாக அவளுடன் இணக்கமாக நடப்பவனை போல தான் இருந்தது கதிரின் செய்கைகள்.
இதோ ஆரம்பத்தில் அவன் அருகில் கூட வர தயங்கியவளை இப்போது அவனின் இதழ் முத்தத்தினை இயல்பாக ஏற்று கொள்ளும் அளவிற்கு அத்வியை வைத்தே தனது காரியத்தை சாதித்திருந்தான்.
முல்லையை நெருங்க அவன் பயன்படுத்திய உத்தி அத்வி மட்டுமே.
கதிரின் உலகம் அத்வியாகியிருக்க அந்த உலகத்திற்குள் அத்வியை கொண்டு முல்லையையும் இழுத்து போட்டிருந்தான்.
கதிரின் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நெருக்கம் முல்லை அறிந்த ஒன்றே…அதிலும் அவன் அடிக்கடி பார்க்கும் பார்வைகள் அவளிடம் எதையோ உணர்த்த படிக்க முடியாமல் திண்டாடினாள்.
இதோ இப்போது கூட ஏதோ கூறினானே என அவள் யோசிக்க ம்ஹீம் என்னவென்று சத்தியமாக நினைவில் வரவில்லை.
இப்படி தான் அடிக்கடி எதையோ கூறுகிறான். ஆனால் அதனை உணர்ந்து புரிவதற்குள் மறக்கடித்தும் விடுகிறான்.
ஏதோ ஒரு ரகசியம் அவனிடம் இருப்பது மட்டும் தெள்ள தெளிவாக புரிந்தது முல்லைக்கு.
அது என்னவென்று தான் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கதிரை பற்றிய சிந்தனைகளில் இவள் இருக்க ஸ்ருதி வந்ததையோ இவளை பார்த்து நின்றதையோ அவள் சுத்தமாக உணரவில்லை.
முல்லையின் சிவந்த முகம் ஸ்ருதிக்கு பல கற்பனைகளை உருவாக்க,
ஒரு நாள் கூட சுரபி இந்த வீட்டில் இருந்த நாட்களில் அவளிடம் இத்தகைய சிவந்த முகத்தினை கண்டதில்லை அவள்,
எந்நேரமும் இறுகி கோபத்துடனே வலம் வருவாள். அதற்கு முழு முதற் காரணம் கதிர் என்றால் மிகையில்லை.
‘என் தங்கையிடம் ஒரு நாளாவது இப்படி இணக்கமான இருந்தானா அவன்’ என மூளை ஏடாகூடமாக யோசிக்க, அதில்,
“ச்சீ….ச்சீ…..என்னமோ புதுசா கல்யாணம் ஆனது போல தான்” என வார்த்தைகள் கொட்ட,
அதுவரை இருந்த சந்தோஷ மனநிலையில் சூடு நீரை ஊற்றியது போல் துடித்து போனாள் முல்லை.
அவள் மறக்க நினைக்கின்ற ஒன்றை விடாது ஞாபகப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறாள் ஸ்ருதி.
முல்லையின் முகத்தில் இருந்த சிரிப்பே மறைந்து சுண்டி போக அங்கிருந்து அவள் வெளியேற,
“கொஞ்சம் கூட மனசாட்சி குத்தலை போலயே, வெட்கமா இல்லையா?? இப்புடி வீட்டுக்குள்ள இருக்க??” என அவள் மேலும் பேச,
“கரக்ட்டு என் அருமை அண்ணி அவர்களே. என் கஷ்டத்தை புரிஞ்சுகிட்டவங்க நீங்க மட்டும் தான். நீங்களே சொல்லுங்க எப்புடி தான் நாங்க வீட்டுக்குள்ளயே இருக்குறது? வெட்கமா இருக்கா இல்லையா” என அங்கு வந்த கதிர் நாணி கோணி சொல்ல,
அவனை கண்டதும் தெம்பு வந்ததுமில்லாமல் அவனின் செய்கையில் சிரிப்பு வந்திட்டது முல்லைக்கு.
தீடிரென அவனை அங்கே எதிர்பார்க்காது அதிர்ந்த ஸ்ருதி அவனின் வாயிற்கு பயந்து வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர போக,
“அட இருங்க என்ன அவசரம் அண்ணியே, வீட்டுல யாருக்காச்சும் இந்த யோசனை தோணிச்சா உங்களுக்கு தெரிஞ்சுருக்கு பாருங்களேன். வாங்க மொத இதை வீட்டுல சொல்லுவோம்” என அவளை இழுத்து சென்று ஹாலின் முன் விட்டவன்,
“சேச்சே, உங்களுக்கெல்லாம் கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா? கல்யாணம் பண்ணி வச்சிட்டா மட்டும் போதும்னு நெனைச்சீட்டிங்களா” என அவன் அனைவரையும் பார்த்து எகிற,
அவனின் பேச்சு புரியாது “டேய் என்னட உளறிட்டு இருக்க” என ராகேஷ் கடுப்பாக”.
“ஏதே, உளருறேனா! நீயெல்லாம் ஒரு அண்ணனாடா? உனக்கு கொஞ்சமாச்சும் என் மேல் அக்கறை இருந்துருந்தா இந்நேரம் நீ இப்புடி அமைதியா இருந்துருப்பியா?” என்க,
“ஹோ, எங்களுக்கு அக்கறை இல்லை சரிதான். அதுசரி அப்போ உன் மேல யாருக்கு ரொம்ப அக்கறை சக்கரையாம், உன் பக்கத்துல பேயடிச்ச மாதிரி நிக்கிறாங்களே நம்ம அண்ணி அவுங்களுக்கா” என ராகேஷ்
கதிரின் கண் ஜாடை புரிந்து ஸ்ருதியை பேச்சில் இழுக்க,
“ஆமாடா உங்களுக்கு இல்லாத அக்கறை அவுங்களுக்கு இருக்கு நீங்க சொல்லாதது அவுங்க சொல்லியிருக்காங்க??”
“பார்ரா அப்புடி என்ன சொன்னாளாம் எம் பொண்டாட்டி??” என பிரகாஷ் வர,
“கல்யாணம் ஆகி ஒரு வாரம் ஆச்சே. சின்ன சிறுசுங்க தனியா எங்கயாவது போயிட்டு வரட்டும்னு நெனச்சீங்களா. நானா எப்புடி வாய் விட்டு கேட்குறது? கூச்சமா இருக்காதா???
ஆனா என் அண்ணி என் மனசை புரிஞ்சுகிட்டு, “வெட்கமா இல்லையா இங்க இருக்கன்னு” கேட்டு எங்கயாவது போயிட்டு வாங்கன்னு மறைமுகமா சொல்லுறாங்க,என்றவன்
“ஆமா தானா அண்ணியே??” என கேட்க, அங்கிருந்தவர்களுக்கே அவன் அழைப்பது “பன்னியே! பன்னியே” என்ற தோரணையில் தோன்ற வந்த சிரிப்பை அடக்க கடைசியில் ஸ்ருதி தான் “ஙே” என விழித்தவாறே நின்றிருந்தாள்.
அவள் கேட்டதோ முல்லையை கஷ்டபடுத்தும் விதமாக, ஆனால் இவனோ அதனை மாற்றி அவனின் இஷ்டமாக்கி கொள்ள பல்லை கடிப்பதை தவிர அவளால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
“அப்பறம் என்ன என்னோட அண்ணியே சொல்லிட்டாங்க. அவுங்க பேச்சை மீறுவோனா நான்? என் அம்மாக்கு அப்பறம் அவுங்க தான என் அம்மா ஸ்தானத்துல இருக்காங்க. அவுங்க ஒண்ணு சொல்லி அதை நான் செய்யாம இருப்பேனா, அப்பா நாளைக்கே,
இல்லை, இல்லை நல்ல விஷயத்தை தள்ளி போட கூடாது. இன்னைக்கே ஏற்காடுக்கு ரெண்டு டிக்கெட் புக் பண்ணுங்க” என விடாது பேசி,
வழக்கம் போல் கதிர் அவளை காமெடி பீஸாகி விட, கொதித்து போனவள் விருட்டென்று அங்கிருந்து சென்று விட்டாள்.
“டேய்,டேய் அடங்குடா, அவ்வளவு நல்லவனா நீ??” என ராகேஷ் அவனை வார,
“அண்ணி என் மேல வச்சுருக்குற பாசத்தை பார்த்து பொறாமையில பேசாதடா பொறாமை பிடிச்சவனே!!” என ராகேஷை பதிலுக்கு வாரியவன்,
“நீ வா முல்லை நம்ம போய் பேக்கிங் பண்ணுவோம்” என கையோடு அவளையும் இழுத்து கொண்டு செல்ல, அவனின் அடாவடியில் விழி பிதுங்கி நின்றவளுக்கு அவனுடன் செல்வதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.
அவன் செய்த அட்டகாசத்தில் வீட்டில் உள்ளவர்கள் அனைவர் முகத்திலும் புன்னகையே!
இது தானோ, இது தான் அவர்களின் பழைய கதிர் எப்போதும் அடுத்தவரை வாரி கொண்டு செல்ல சண்டை இட்டு கொண்டு வீட்டினை உயிர்ப்பாக வைத்திருந்தவன்.
அவனின் கல்லூரி காலக்கட்டங்களில் கூட இப்படியே தானே இருந்தான்.
அதன் பின்னான இரண்டு வருடங்கள் இறுகி போய் இருந்தவனை கண்டு பயந்து,
ஸ்ருதியின் பேச்சை கேட்டு, அவனிற்காக தற்கொலை வரை சென்ற சுரபியை, மணமுடித்து வைத்தனர். சுரபியின் நேசம் அவனை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையில்.
ஆனால் அது தவறோ என அவர்களுக்கு புரியும் வகையில் தான் இருந்தது அவர்களின் திருமண வாழ்க்கை. எந்நேரமும் முகத்தில் முள்ளை கட்டி வைத்தாற் போல் தான் இருந்தனர் இருவரும். ஒரு பாசமான பார்வை அக்கறையான பேச்சு இருந்ததில்லை அவர்களிடம்.
ஆனால் இந்த ஒரு வார காலமாக சரியாக சொல்ல வேண்டும் என்றால் என்று முல்லையை இவன் சந்தித்தானோ அன்றிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவனது இயல்பு திரும்ப, இதோ முற்றிலும் பழைய கதிரழகனாக மாறி நிற்பவனை கண்டு குடும்பத்தாருக்கு அளவற்ற மகிழ்ச்சியே.
அவனின் மகிழ்ச்சி என்றுமே நிலைக்க வேண்டும் என்பது தான் அப்போதைக்கு அங்குள்ளவர்களின் வேண்டுதலாக இருந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
37
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

என்னப்பா இது அப்பாவும் மகனும் முத்தம் வச்சு முல்லையை டார்ச்சர் பண்றீங்க🥰🥰🥰🥰🥰🥰 சூப்பர் கதிர்.. உன்னோட காதல்.. முல்லையை நீ நடத்துற விதம்.. பிரச்சனைகளை சமாளிக்கிற விதம் எல்லாமே சூப்பர் தான்.. Pure Soul கதிரழகன்..
இதுக்கே இப்படி. கதிர் அவளை காதல் பண்ணின கதை தெரிஞ்சா முல்லை அவ்வளவுதான் ஃப்ளாட் ஆகிடுவா