Loading

முசுடும் முயலும் – 18 😾❤️😻

“யமுனா தான் பாலா லவ்ராம்ல ” மைத்ரேயி கேட்க, உத்ரா எச்சில் விழுங்கினாள்.

“இங்கு பாரு உத்ரா! மாம்ஸ் உன்கிட்ட சும்மாவே ஒழுங்கா பேசவே மாட்டேங்கிறாரு! ஆனா, நேரா வேற மாதிரி இருக்கு! என் கண்ணை நம்புறதா இல்லை மூளையை நம்புறதானு  தெரில …… இதுல என் பிரச்சனையும் சேத்து இன்னும் குழப்பத்துக்கு போக வேண்டாமேனு யோசிக்கிறேன் ” பாலா பொறுமையாக அதே சமயம் கவலையுடன் கூறினான் .

அவனின் அன்பில் அகம் மகிழ்ந்தவள் “எனக்கு எப்படி சொல்லுறதுனு தெரில அக்கா ! அவரு என்கிட்ட …. “

“ஹம்க்கும் …… “

அனைவரும் திரும்ப , அங்கு அபி நின்று கொண்டிருந்தான். அனைவருக்கும் தர்ம சங்கடம் ஆகியது.

” உத்ரா கொஞ்சம் தண்ணி வேணும் “எனக் கூறி வாட்டர் பாட்டிலை நீட்டினான்.

அதனை வாங்கி அவனை கடந்து செல்ல முயல , அவளின் கையைப் பிடித்துக் கொண்டு ” யமுனாக்காக உத்ராவையோ உத்ராகாக யமுனாவையோ விட மாட்டேன். ரெண்டு பேருகிட்டயும் எந்தளவுக்கு அன்பு காட்ட உரிமை இருக்கோ அந்த அளவு கோபம் காட்டவும் எனக்கு உரிமை இருக்கு ! அதோட பாலாவை நல்லா தெரியும்னு சட்டுனு முடிவுலாம் எடுக்க முடியாது! அதுல என் வைஃப் என் கூட இருந்து எனக்கு சப்போட்டடா முடிவு எடுப்பா” எனக் கூறியவன் எங்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம் எனவும் அவள் என்னவள் என்று  சொல்லாமல் சொல்லி விட்டு சென்றான்.

பாலா முழிக்க, மைத்ரேயிக்கு அனுபவத்தினால் புரிந்தது அவனின் அன்பு. அதனால், அமைதியாக கடந்து விட்டாள். பாலா தான் ஏக்க பெருமூச்சு விட்டு உத்ராவிற்கு தலையாட்டி விட்டு சென்று விட்டான்.

தண்ணீரை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைய ஓடும் ஃபேனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

” ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி யோசிக்கிறவங்க ஃபேன் பார்ப்பாங்க. இப்போ தான் ஏசி இருக்கே. ஃபேன் ஆஃப் பண்ணிட்டு , அதை ஆன் பண்ணிட்டு பாருங்க. நம்மளும் அப்கிரேடடா இருப்போம் ” எனக் கூறி கட்டிலின் விளும்பில் அமர்ந்தாள்.

அவளைப் பிடித்து இழுக்க, அவள் அவனின் மேலேயே விழுந்தாள்.

” இந்த  வாய் இருக்கே வாய் அது இல்லைனா ….. ” என அவளின் அதரத்தை பிடித்து இழுத்தான். அவனின் திடீர் செய்கையில் அதிர்ந்தாள். இருந்தும்  தன் எடை அவனுக்கு கனமாக இருக்கும் என நினைத்து அவள் ஒதுங்க , அவனோ அவளுக்கு தயக்கம் என்று நினைத்து விலகினான். இவளுக்கு அது ஏமாற்றமாக இருந்தது. அவளுக்கு என்ன வேண்டும் என இவனும், இவனுக்கு என்ன வேண்டும் என அவளும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டால் இங்கு பிரச்சனை இல்லை.

பின்பு சிறு நேர அமைதி ! அதன் பின் இருவரும் அமைதியாக அருகில் படுத்திருக்க, இருவருக்கும் முன்பிருந்த நெருக்கம் தேவைப்பட்டது. ஒரு நிமிடம் சட்டென்று யோசித்தான். ஆழ மூச்செடுத்தவன் “உத்ரா உனக்கு இதலாம் இஷ்டமா இல்லையா ? “

“நான் இல்லைனுலாம் சொல்லல ! ” என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தவள் “நீங்க தான் என் மேல கோபமா இருக்கீங்க! “

“கோபமா இருந்தா எதாச்சும் பண்ணி சரி பண்ணலாமே ? ” இரட்டை அர்த்தத்தில் அவன் கூற ,

நிமிர்ந்தவள் “இங்க பாருங்க…. ஒரு வேளை இதுக்கு அப்புறம் நமக்குள்ளேயே சண்டை வந்தாலும் இது மூலமா சமாதானம் ஆக கூடாது ! “

“ஏன்” ஒற்றை புருவம் தூக்கி அவன் கேட்க, அதில் மயங்கி தான் போனாள். அவளை மறந்து அவனைப் பார்க்க, அவனுக்கு கர்வமாக இருந்தது. அதனால் ஒரு மேனரிசத்தில் அவளைக் காண , டக்கென்று தலையை உலுப்பி ” நம்ம வாய் சண்டை தான போடுறோம் …… “

“அதே தான் …… வாயிலேயே சமாதானம் ஆகிக்குவோம்னு சொல்லுறேன் “

” அட ராமா ராமா…….. இப்படி என்ன சொன்னாலும் முட்டு சந்துக்கே போனா நான் என்ன பண்ணுறது ? சண்டைப் போட்டா மனசு தான் காயப்படும் . அப்போ மனசு தான சமாதானம் ஆகனும் ? “

“சரி அப்போ இனிமே உடம்பால சண்டை போடுவோம் “

” என்ன? ” முழி பிதுங்கி கேட்டாள்,

“அதான் கத்தி சண்டை, வாள் சண்டை, குஸ்தி அந்த மாதிரி “

“நீங்க எந்த மாதிரியும் போட வேணாம் …. பேசாம தூங்குனாலே போதும் ” எனக் அவனை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே கூறி எழ, அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அதோடு அவளின் எண்ணிற்கு அழைப்பும் வந்தது.

அதில் யமுனா என்று பளிச்சென்று வர, சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனோ ” வடை போச்சே ” ரீதியில் அமர்ந்து , “எல்லாம் உன் தோஸ்த்து தான் போட சொல்லிருப்பான் . போய் என்னனு கேளு ” எனக் கூறி குப்புற படுத்துக் கொண்டான்.

ஒரு சில நொடிகளுக்கு பின்பும் அவளின் அரவம் தெரிய நிமிர்ந்து “என்ன ” என்று கேட்க, “இல்லை உங்ககிட்ட நிறைய கேட்கனும் ? ஆனா இப்போ ஒன்னே ஒன்னு கேட்கனும் ? “

😾❤️😻

“சாரலா சாரலா “

” என்ன அம்மா ? எதுக்கு கூப்பிடுற ? என்ன வேணும் ? ” தனது தாய் பங்கஜம் அழைக்க, இவர் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.

“எதுக்கு சலிக்சுக்கிட்டே வர்ற? இந்தா இதை எடுத்து வச்சுக்கோ! கல்யாணத்துக்கு வந்தது பிரிச்சேன் ! பேத்திகளுக்கு இனிப்பு பிடிக்குமே ! அதான் எடுத்து வச்சேன் ! அப்புறம் இது உன் அம்மாக்கு ! அக்கா நேத்தே கிளம்புறேனு கிளம்பிடுச்சு ! அதான் உன்கிட்ட கொடுக்குறேன் ! எடுத்து வச்சுக்கோ “

அனைத்தையும் பார்த்த சாரலா சிரித்துக் கொண்டே “சரிம்மா ” எனக் கூறி , அவர்களுக்கு என ஒதுக்குப்பட்ட அறைக்கு சென்றார்.

அனைத்தையும் வேடிக்கை பார்த்த அகல்நிலா அறையில் நுழைய , தன் அன்னையின் எதிர்வினையைக் கண்டு தலையில் அடித்து ” இப்போ எதுக்கு இவ்ளோ சந்தோஷப்படுற ? “

“என்னடி இப்படி சொல்லிட்ட ? சித்தி ஏதோ மனசு வந்து தந்துருக்கு “

“கடவுளே!  விசேஷம் முடிஞ்சிருச்சு நீ வீட்டுக்கு கிளம்புனு சொல்லாம சொல்லுறாங்க ! புரியுதா ? ” நிரல்யா கூறி விட்டு, அவளின் நீட் தேர்வுக்கு படித்து கொண்டிருந்தாள்.

ஒரு நிமிடம் அதிர்ந்தவர், பொறுமையாக யோசித்த பின்னரே அவரின் உள்ளர்த்தம் புரிந்தது. சட்டென்று அகல்நிலாவை கண்டவர் கண் கலங்கினர்.

“என்ன பெத்தவங்க ஒத்த பிள்ளை போதும்னு இருந்துட்டாங்க. அதுக்கு எதுக்கு இவ்வளவு சொத்துனு சித்தப்பாக்கிட்ட  முக்காவாசியை தூக்கி கொடுத்துட்டாங்க. பொட்ட பிள்ளை வீடு வாச இருந்தா போதும்னு குடிகாரனுக்கு கட்டி கொடுத்தாங்க. அந்தாளும் ரெண்டு பொட்ட பிள்ளையை கொடுத்துட்டு போயிட்டாரு . கூடவே சொத்தையும் அழிச்சுட்டு போய்ட்டாரு. உங்களை கரை சேக்க பயந்து இங்க கட்டிக் கொடுக்கலாம்னு பாத்தா அதுக்கும் கொடுப்பினை இல்லை. இப்போ ரெண்டு நாளைக்கு மேல தங்க கூட இந்த வீட்ல உரிமை இல்லை . என்ன சொல்லுறது “

இயலாமையில் சாரலா எப்பொழுதும் இதையே தான் புலம்புவார் . சாரதராஜனுக்கு அண்ணன் பிள்ளை மேல் பாசம் இருந்தாலும் பங்கஜம் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களுக்கு செய்ய விட மாட்டார். சாரலா ஆறு வருடம் கழித்து பிறந்த பிள்ளை. அதனால், சாரதராஜனுக்கு சங்கரன் பிறந்ததோடு , அவருக்கு விரைவிலேயே திருமணம் செய்ததால் அகில் நிலா முன் அபி பிறந்து விட்டான்.

அகில் நிலா அன்னையை கண்டு விட்டு வெளியில் நின்று கொண்டிருந்த கெளதமியிடம் “அத்தை நாங்க நாளைக்கு மறுநாள் ஊருக்கு போறோம் ! டிக்கெட் கிடைக்கல எங்களுக்கு “

“ஏன் இப்படி பேசுற? அவங்கள பத்தி தான் உனக்கு தெரியும்ல ? விடு …. ரோஷப்படாத “

அகில் சலனமே இல்லாமல் பார்க்க “சரி சரி…. போ…. போய் வேலையைப் பாரு ” என்று கூறி செல்லும் கெளதமியே பார்த்துக் கொண்டிருந்தவள் அலைப்பேசியில் உயிர்ப்பு வந்து அதில் பேச சென்று விட்டாள்.

“சொல்லு “

“…….. “

“நாளைக்கு தான் மறுவீடு முடிஞ்சு வருவாங்க “

“…….”

“தெரில கேட்கனும் “

…….

“சரி வச்சுடுறேன் “

😾❤️😻

“என்னடி போனை எடுத்தாளா இல்லையா ? “

“இல்லை …. அண்ணா பக்கத்துல இருப்பான் போல பாலா “

“திரும்ப கால் பண்ணு ?”

“டேய் நீயும் லவ் பண்ண மாட்டுற கல்யாணம் ஆனவங்களையும் லவ் பண்ண விட மாட்டுற “

“கரெக்ட்…… ஆனா, நீங்க கொஞ்சம் அடங்கி இருக்கிறதால தான் நான் கொஞ்சமே கொஞ்சம் அமைதியா இருக்கேன் “

கான்ஃபரன்ஸ் காலில் சேர்ந்த உத்ராவின் அலைபேசியில் ,ஸ்பீகரை  ஆன் செய்த அபி இவர்களின் உரையாடலை கேட்டு கூற, திக்கென்று ஆகியது யமுனா மற்றும் பாலாவிற்கு . உத்ராவிற்கோ தர்ம சங்கடம் ஆகியது.

” உன் ப்ரண்ட் நல்லா தான் இருக்கா …. நொய் நொய்னு கூப்பிடாதா ” எனக் கூறி
பட்டென்று வைத்தான்.

” இருந்தாலும் ஓவரா பண்ணுறான் டி இவன் ….. எனக்கும் காலம் வரும் ….. அப்போ இருக்கு அவனுக்கு ” என்று அபி கூறியவுடன் , பளிச்சென்று முகம் பிரகாசமாகியது உத்ராவிற்கு .

“அப்போ உங்களுக்கு பாலா ஓகேவா ? ” என மலர்ந்த முகத்துடன் கேட்டவளை அள்ளி அணைக்க தான் தோன்றியது. கடினப்பட்டு அவளின் வார்த்தைக்கு கட்டுபட்டான். இதே தன் வீடாக இருந்தாலும் ஏதேனும் வம்பமாவது இழுத்திருக்கலாம். இப்பொழுது அதற்கும் வழி இல்லையே என நொந்து கொண்டான்.

“என்னங்க என்னங்க “

“ஏன்டி …. இப்படி அடிக்கிற ? ” முகத்தை சுளித்து கூற,

“ஆமா கேட்டதுக்கு பதிலே சொல்லல ? “

“நீ என்னமோ கேட்கணும்னு சொன்ன அத மொத கேளு ? “

” இல்லை நீங்க சொல்லுங்க “

கால் மேல் கால் போட்டு அவள் சொன்னது போல் ஏசியை பார்த்தான். “முசுடன் …… ச்சை…. நம்ம சொல்லைனா விட மாட்டான். விடாக்கொண்டன் “என மனதிற்குள் அர்ச்சித்து  விட்டு,

“இல்லை ….. என்னை லவ் பண்ணுறீங்களா ? “

“ஹாங்…… ” எனக் கூறி அவளின் முகம் பார்த்து திரும்பி இரு புருவங்களை ஏற்றி பார்க்க,

“ஹக்கும் …. இல்லை என்னை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணீங்களானு கேட்டேன் “

அவளையே ஆழ்ந்து பார்த்தவன் ” உன்னையை பாலா பாத்துக்கிறத வச்சு தான் அவனைப் பத்தி விசாரிச்சேன். எல்லா நல்ல விதமா தான் ஏஜென்சில சொன்னாங்க. அப்புறம் தாத்தாவும் அவங்க சொந்தக்காரங்கள வச்சு விசாரிச்சு வீட்ல பாக்குற கல்யாணம் மாதிரி கொண்டு போகுறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காங்க “

தான் கேட்ட கேள்விக்கு  இது பதில் இல்லையே என ஒரு புறம் வருந்தினாலும், நண்பனின் காதல் ஜெயமாக போகிறது என்ற பேரானந்த அலைகள் உள்ளுக்குள் சுனாமியாகியது.

“யாஹூ ……. சூப்பர் …. சூப்பர் …. ” என கட்டி அணைத்தாள் அவனை . அவனுக்கோ சூடேறியது. இருந்தும் கட்டுக்குள் வந்து,

“தாத்தா பாக்குற வரைக்கும் இதை அவங்கிட்ட சொல்ல வேண்டாம் “

ஒரு நிமிட மகிழ்ந்தவள் மறு நிமிடமே திருட்டு முழி முழித்து விட்டு, பின்பு  சிரித்தாள். ஒரு நொடிக்குள் செய்தவள் கைகள் அனிச்சையாக அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருந்தது.

அதில் பட்டென்று அலைபேசியை வாங்க , பாலா தான் அழைப்பில் இருந்தான் .

அதில் கடுப்பாகிய அபி  பல்லிடுக்கில் “உத்ரா …. “

“மாமா……. “

பாலா தான் அழைத்தான்.

“ச்சீ…. வைடா போனை ” எனக் கூறியவன், விழி பிதுங்கி நின்ற உத்ராவை அனல் பார்வை பார்த்தான்.

கீர்த்தி ☘️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
17
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்