344 views

அத்தியாயம் – 1

கணினி, வெண்பலகைகள், படம் காட்டும் கருவிகள், சிறப்பு மென்பொருட்கள் கருவிகள், காணொளி கருத்தரங்குக்களை பதிவு செய்து வைக்க தனியாக கருவிகள் பொருத்தப்பட்டிருந்தது அந்த அறை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு மெய்நிகர் கற்றல் வகுப்பறைக்கு தேவையான அனைத்து கருவிகள் அங்கு இருந்தது.

அதன் எதிரறை அதே கட்டமைப்பில் ஹை-டெக் ஹேக்கிங் டிவைசஸ் மட்டும் சாட்டிலை சாதனங்கள் என தாராளமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது அவ்விடம்.

இயற்கையின் வாசமோ சற்றும் இல்லாத அந்த சிட்டியின் மையத்தில் இருந்து அந்த எழுபது மாடி கட்டிடத்தின் அறுபத்தி நாலாவது தளத்தில் இருந்த அறையில் இருந்து எட்டிப்பிடித்தால் மேகம் கையில் சிக்கிக்கொள்ளும். ஆனால் அது கூட செயற்கையாக உருவாக்க பட்டிருப்பது என்பது பார்ப்பவர்களுக்கு தெரியாத வகையில் வடிவமைக்க பட்டிருக்கிறது என்று சொன்னால் யாரும் அதை நம்ப முடியாது. அந்த அளவிற்கு செயற்கையை உருவாக்கி இருந்தான் அந்த இடத்தை உருவாக்கியவன்.

ஆறு ஆண்டுக்கு முன்பு வரை இந்த இடம் தற்போது இருப்பது போல் கட்டமைப்பு கொண்டு காட்சியளிக்கவில்லை என்று அவனே சொன்னால் கூட அங்கு இருப்பவர்கள் யாரும் ஒற்றுக்கொள்ள மாட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு புது உலகத்தையே உருவாக்கி இருந்தான் அதுவும் அவனது நாட்டின் கைதிகளுக்காக, அத்தனை ஆடம்பரமாக வடிவமைத்து இருந்தான்.

அங்கு ஒருவன் ஒரு நாள் தங்கவேண்டுமென்றால் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் ஏழு லட்ச ரூபாய் செலவிட வேண்டும். அந்த இடம் கைதிகள் சூழ்ந்திருக்கும் இடம் வருடத்தின் ஒரு முறை மட்டுமே மற்றவர்களுக்கு அனுமதி அளிக்க படுகிறது அதுவும் குறிப்பிட்ட அளவு மட்டுமே.

கைதிகளாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக இங்கே வந்துவிட முடியாது பணம் மட்டுமல்லாது இங்கு அனுமதிக்க ப் படவேண்டும் என்றால், மாயோன் பொழில் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வருடம் ஒருமுறை மட்டுமே அந்த தேர்வு நடத்தப்படும், அதுவும் ஒரு நபர் ஒருமுறை மட்டுமே எழுத அனுமதி. இத்தனை கட்டுப்பாடு எதற்கு அதுவும் கைதிகளுக்கு என்று அரசு பலதரப்பட்ட கேள்விகளை முன்வைத்த போது அனைத்தையும் தன் பதிலால் கட்டுப்படுத்தி அனுமதி வாங்கி இருந்தான் இந்த இடத்தின் உரிமையாளன்.

அவனின் வருகைக்காக அந்த எழுபது மாடி கட்டிடமே காத்திருக்க, அவனோ விடியலை கூட செயற்கையாக உருவாக்க முடியுமா? என்ற ஆராய்ச்சியில் அவன் அறையில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.

அதனை கலைக்கும் விதமாக அங்கே வந்தாள் ஒருத்தி, அவளின் காலடி ஓசையில் அவன் கவனம் சிதறினாலும் கண்ணை மூடி அமர்ந்திருந்தான்.

‘நான் வந்தது உனக்கு தெரியாது? இப்போ உன்னை நான் எழுப்பனும் அதுவும் நீ தூங்கிட்டு இருக்கன்னு நினைச்சு! எல்லாம் என் தலையெழுத்து.’ என்று மனதில் பேசியபடி அவனருகே வந்தவள்,

“சார்! சார்!” என்று அவனை தட்டி எழுப்பினாள். அவனும் அப்பொழுது தான் விழிப்பது போல் நெட்டி முறித்து அவளை பார்த்து,
“என்ன மிஸ்.ஆதிரை?” என்றான். யாராவது இருக்கிறார்களா என்று சுற்றி கண்களை அலைய விட்டாள்.

யாருமில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு, “இன்னைக்கு இளவரசியை அறிமுகம் செய்யணும்!” என்றாள் எங்கோ பார்த்தப்படி,
“தெரியும் மேடம். இந்த இடத்தின் உரிமையாளர் நான் தான் என்பதை உங்களுக்கு அப்போ அப்போ நினைவுப்படுத்துவதே எனக்கு வேலையாக போய்விட்டது. இப்போ இந்த இடத்தை காலி செய்தால் நான் கிளம்ப முடியும்!” என்று கேலியாய் முடிக்க,
“ஷிட்!” என்று வேகமாக அவ்விடம் விட்டு அகன்றாள் ஆதிரை.

“கோபத்தில் ஹெல்மெட் போடாமல் போறீங்க மிஸ்.ஆதிரை!” என்று கூற காலை உதைத்து ஹெல்மெட்டை அணிந்து வெளியே சென்றாள்.

அவள் சென்றதும் அவன் முன்னே இருந்த கணினி மூலம் அந்த செயற்கை நகரத்தில் ஆங்காங்கே பொருத்தப்பட்ட ஒலிப்பெருக்கியின் வாயிலாக அங்கிருந்த கைதிகளிடம் பேச ஆரம்பித்தான்.

“மாயோன் பொழில் மக்கள் அனைவருக்கும் துரியோதனனின் காலை வணக்கம். நீங்கள் ஒரு வருடமாக காத்திருந்த அந்த நன்னாளை முன்னிட்டு, உங்கள் விடுதலையை நிர்ணயம் செய்யவிருக்கும் போட்டியின் அறிவிப்பும் அதன் முடிவை தேர்வு செய்யவிருக்கும் இளவரசியும் இன்னும் சிலமணி நேரத்தில் உங்களை சந்திக்க வருகிறார்கள். அடுத்த அழைப்பு வருவதற்குள் மாயோன் பொழில் சிறப்பு வளாகம் முன் கூடவும். தாமதிக்க படும் ஒவ்வொரு நிமிடமும் உங்களின் கணக்கில் பல டாஸ்க்குகள் பதிவு செய்யப்படும். நன்றி” என்று அறிவிப்பை முடித்து குளியல் அறைக்குள் புகுந்து அன்றைய நாளுக்காக ஆயத்தமாகினான்.

வெளியே வந்தவள் காவலாளி உடையில் இருந்த ஒருவனிடம் சைகையில் ஏதோ சொல்ல அவனோ சரியாக ஒரு பொத்தானை அழுத்த அந்நகரம் முழுவதும் தனித்தனியாக பிரித்து வைத்திருந்த பதினோரு எல்லையில் இருந்தும் பதிலாக ஒரு ஒலி வர, நிம்மதியுடன் அவள் அறைக்கு சென்றாள்.

பதினோரு பிரிவிலும் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தவறுகளை செய்து அதன் தண்டனையில் இருந்து தப்பிக்க இவ்விடத்தில் அடைக்கலம் ஆகியிருக்கிறார்கள்.

அறிவிப்பு வந்ததும் அனைவரும் அவசரமாக கிளம்ப, ஒருத்தன் மட்டும் கதவை திறக்கும் நொடிக்காக காத்திருந்தான்.
சரியாக பத்து நிமிடத்தில் ஒவ்வொரு அறையின் கதவும் திறக்கப்பட முதலாளாக சிறப்பு வாயிலுக்கு வந்தான்.

அவன் வந்த நேரம் காவலுக்கு இருந்த கமண்டர் பணி முடிந்து சென்றிருக்க, அவன் கையில் இருந்த ஒரு வாட்சை கழட்டி வெளியே வீசினான். அது விழுந்த தடம் தெரியாத அளவிற்கு லேசர் பீம் அதை பொசுக்கியது. மீண்டும் லோட் ஆகி வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை கணிக்க ஒரு பேனாவை தூக்கி போட்டு அதை தொடர்ந்து ஒரு நோட்டை போட்டான்.

இரண்டுக்கும் நடுவே பத்து மில்லி செகண்ட் தாமதம் ஆகியதை நோட் செய்தவன், கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தை போட்டவன் அது முழுமையாக எறிந்து முடிக்கும் நொடியில் அதை கடந்தான். நூலிழையில் அவன் தப்பிருந்தாலும் அவன் காலை லேசர் பீம் பதம் பார்த்திருந்தது.

வலியை பார்த்தால் உயிர் போய்விடும் என்று வேகமாக அடுத்த வாயிலுக்கு ஓடினான்.
இதையெல்லாம் கணினியில் பார்த்திருந்தவன்,
‘எவ்வளவு தூரம் போக போற போ! உன் உயிரை குடிக்க போற சாத்தான் உன்னை கண்காணிக்கும்ன்னு தெரிந்தும் தப்பு பண்ணிட்ட! பரவாயில்லை கொஞ்ச நேரம் நீ உயிர் வாழப்போற அப்படிங்கிற ஆசையோட ஓடு. அப்போ தான் சாகும் போது உன் கண்ணில் அந்த வலியை பார்க்க முடியும்!’
என்று மனதோடு பேசி அடுத்த அறிவிப்பை அறிவிக்க மைக்கை எடுத்தான்.

“மாயோன் மக்கள் அனைவரையும் வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. மன்னிக்கவும் சிறப்பு வாயிலில் தொழில்நுட்ப கோளாறால் அனைவரும் கேளிக்கை வாயிலில் கூடவும். இரண்டு மணி நேரத்தில் உங்களுக்கான இடத்தில் அமரவும்” என்று பேசியவன், கண்கள் சிவக்க அவனது தளத்தில் இருந்து லிப்ட் மூலம் ஆதிரை தளத்திற்கு வந்தான்.

பல அடுக்கு பாதுகாப்பிற்கு நடுவே அவள் அமர்ந்திருக்க அவளை பார்த்தவன், “MP01 உங்களோட பாதுகாப்பை கருதி உங்களை இங்க இருந்து வேற இடத்துக்கு ஷிப்ட் செய்யணும்” என்றதும் அவளின் பாதுகாவலர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட கையில் இருந்த ரிமோட் மூலம் விற்சுவல் அறையை உருவாக்கி அதில் அவள் அனுமதியின்றி தள்ளி, “சீக்கரம் இளவரசியோட வா!” என்று அழுத்தமாக கூறி சிறப்பு வாயிலுக்கு விரைந்தான்.

ஒவ்வொரு பிரிவில் இருந்தும் கைதிகள் வெளியே வர, இருபதின் இறுதியில் இருந்த இருவர் அசத்தும் அழகில் கிளம்பி வந்தனர்.

இருவரும் ஒரே குற்றத்துக்காக கைதாகி ஒரே நேரத்தில் தேர்வில் தேர்ச்சியடைந்து இங்கே வந்திருந்தனர். மற்றவர்களை காட்டிலும் தங்களின் அனைத்து டாஸ்க்கிலும் முதன்மையாக விளங்கினர்.

“மச்சி நான் எப்படி இருக்கேன்!” என்ற விஜயை அதிர்ந்து பார்த்த செழியன்,
“டேய் நம்ப என்ன பொண்ணு பார்க்கவா போறோம்! வாழ்வா சாவான்னு இருக்கோம். நீ என்னடா புது மாப்பிள்ளை மாதிரி வர”

“அதெல்லாம் விடு மச்சி. எப்படியாவது அந்த இளவரசியை கரெக்ட் பண்ணி இங்க இருந்து தப்பிச்சு போகணும் டா!” என்றவனை அதிர்ச்சியாக பார்த்த செழியன்,
“டேய் ஆசைப்படலாம் மச்சி நீ படுறது பேராசை. முதலில் நாம் ஆயிரம் பேரோடு போட்டி போட்டு முதல் பதினோரு நபருக்குள் வரவேண்டும். அப்பறம் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் தான் இந்த மரணக்குழியில் இருந்து நமக்கு நிரந்தர விடுதலை. ஆனால் நீ என்னடானா நேரா அந்த இளவரசியை இம்ப்ரெஸ் பண்ண பார்க்கிற. ரூல்ஸ் மறந்து போயிருச்சா?”

“அதெல்லாம் ஞாபகம் இருக்கு. இந்த சாபத்தில் வாழ எனக்கு விருப்பமில்லை, என்னைக்கோ செய்த சின்ன தப்புக்கு இவ்வளவு வருசம் நான் அனுபவித்தது போதும்” என்றான் விஜய்.

“டேய் புரியது ஆனால் இப்போ கிடைச்சிருக்க ஒரு வாய்ப்பையும் நீ நழுவ விட்டால், இந்த ஜென்மத்தில் இந்த மாயோன் பொழில் விட்டு நம்மளால தப்பிக்கவே முடியாது”

சுற்றி ஒரு முறை பார்த்தவன் இங்கிருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதல்ல அதே போல் சிறு தவறு செய்தாலும் யோசிக்காமல் மரணதண்டனை அளிக்கப்படும் என்று உண்மை அவனை சுட்டது.

என்னதான் அவர்களை இங்கு சுதந்திரமாக வைத்திருப்பது போல் வெளியே தெரிந்தாலும் அவர்களுக்கு மட்டுமே தெரியும் இது பூமியின் நரகமென்று. கண்ணசைவில் ஒருவருக்கு மரணதண்டனை அளிக்க முடியுமா என்று நாம் யோசித்தால் இங்கு முடியும் அப்படி பட்ட இடம் தான் இந்த மாயோன் பொழில்.

“சரி மச்சி நீ போய் உன் இடத்தில் இரு நான் என் இடத்தில் உட்காருறேன். இந்த மீட்டிங் முடிச்சிட்டு மத்ததை பேசலாம்” என்று செழியன் கூற விஜய் அவன் இடத்திற்கு சென்றான்.

இவர்கள் அனைவரும் பார்க்க காத்திருக்கும் துரியோதனன் வேட்டைக்கு சென்றிருக்க, அந்த செயற்கை நகரத்தின் நடுவே திடிரென்று புகைமூட்டமாக காணப்பட்டது. அதை கலைக்கும் விதமாக அதன் நடுவே இருந்து வந்த வான்தேவதையாக மின்னினாள் அந்த மாயோன் தேசத்து இளவரசி.

பெரிய படைசூழ கேளிக்கை வாயிலுக்குள் அடியெடுத்து வைத்த நேரம் எண்ணிலடங்கா தோட்டாக்கள் சத்தம் அவள் காதைக்கிழித்தது.

அவளோ சலனமின்றி நுழைய, அவ்வாயிலில் கூடியிருந்தவர்கள் தங்களில் ஒருவன் தான் அந்த ஒலியில் ஜோதி அடைத்திருக்கின்றான் என்று மனம் கனத்தனர்.

மூன்று பிரிவு கைதிகள் இளவரசி வந்த பிறகு மூன்றடுக்கு பாதுகாப்பிற்கு நடுவே அழைத்து வர மற்ற பிரிவு கைதிகள் அவர்களை ஒருவித பயத்தோடு பார்த்தனர்.

ஏழடுக்கு பாதுகாப்பிற்கு நடுவே நின்றிருந்தாலும் இளவரசியின் கண்கள் பயம்கொள்ள, சிறு மைக் மூலம் இளவரசியிடம் பேசினான் துரியோதனன்.

“பயம்கொள்ள வேண்டாம் இளவரசியே. அனைவரும் இருக்கையில் அமரும் முன் உங்களுக்கு துணையாக நானிருப்பேன்” என்று சொன்னது போல அவளிடம் வந்து சேர்ந்தான் அவன்.

தொடரும்……. 

I am devil of my world – துரியோதனன் 

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் வரலாம்னு நினைச்சேன் 🙊🙊🙊. சரி வந்துட்டேன் நீங்களும் படிச்சுட்டு நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க 

– சிலுக்கு வெடி 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
10
+1
1
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  13 Comments

  1. Sangusakkara vedi

   Late ah vanthalum latest thn sis…. Semma starting…. Vijay pakki enna elaraiya iluthu vida poghuthunu teriyala…. Thuriyothanan character mela rmba interest ah iruken…. Devil of his world ah irunthalum en manasula strong ah iruparunu thonuthu pakkalam…. Virtual world ah kondu vanthurukinga vetriyoda poganum nu ennoda vazhthukkal sagi…. Aprm late ah ayest ah varuvennu ud late pannirathinga … I am waiting….

   1. Silukku Vedi
    Author

    😍😍😍😍 namba mayon pozhil devil mela interest ah 🤩🤩🤩. Vijay ena pana porano 🙊🙊🙊 solakudathu solakudathu

   2. Sangusakkara vedi

    Ama sis….. Devil mela oru Kannu Patti tingaring lam panni hero vijay ku munnadi en chlm devil ahyum super ah katunga…. Ithu request ila order …. Ilati unga per veliya vanthathum thedi varuven…. Sedharathuku Nan porupu ila … En chlm tha ketennu sollunga….

  2. Archana

   வாவ்😍😍😍 ஆரம்பமே கலக்…… கலக்…… கலக்கலா தானே இருக்கு, இவ்வளவு பெரிய நரகத்தை உருவாக்க மோட்டிவ் வெறும் தண்டனை கொடுக்கிறதுக்கா🙊 துரியோதனன் பேரு நிஜமாவே துரியோதனனா இல்ல இந்த மாயோன் பொழில்காக அவன் வெச்ச பேரா? தப்பு செஞ்சவங்களே தவரே தெரிஞ்சே இந்த நரகத்தைக்கு எதுக்கு நீட்,jee மாறி எக்சாம் எழுதி வரணும் 🤔🤔🤔🤔 நட்டு கழண்டவங்களா இருப்பாங்களோ இல்ல மாயோன் பொழில் பெரிய இடம்ன்னு தண்டனை பத்தி விஷயம் தெரியாம ரூமர்ஸாலே போயிருப்பாங்களோ, எது எப்படியோ நாம எல்லாரும் ஒரு எக்சாம் இல்லாம பாஸ் பண்ணாம மாயோன் பொழிலுக்கு வந்தாச்சு💃💃💃💃💃💃

   1. Silukku Vedi
    Author

    🙊🙊🙊 ivangaloda exam syllabus pathi kekanum apo than ivanungaluku coaching kuduthu pass pani release pani antha ilavarasi vera yarkudavachum korthu vidanum vera

  3. Janu Croos

   அடேய் என்னடா சுட்டுட்டீங்க….கொலை பண்றத எல்லாம் கொக்கோலா குடிக்குறமாதிரி அசால்ட்டா பண்றீங்களேடா…..
   சரியான பேருதான் துரியோதனன்…. அந்த இளவரசி யாரு…
   இந்த மாயோன் பொழில்ல இருக்கவங்க எல்லாம் ஏதாவது ஒரு தப்பு பண்ணி தண்டனை அனுபவிக்க வேண்டயவங்க….ஏதோ ஒரு காரணத்தால இங்க வந்திருக்காங்க….
   ஆனா இந்த இடம் அத விட் கொடூரமாவுல இருக்கு….இதுல இத சுத்திபாக்க வேற ஆளுங்க வாராங்க….

   1. Silukku Vedi
    Author

    👻👻👻 ama ama athalam engaluku sudurathu soup sapdra mathiri. Ithu entha mathiriyana idamnu poga poga theriyum

  4. ஏது கைதிகளுக்காக வடிவமைக்கப்பட்டதா🙄🙄🙄🙄…மாயோன் பொழிலுக்கு entrance veraiya…….இது எல்லாத்தையும் விட வருஷத்துக்கு ஒரு டைம் வைக்கிற தேர்வுல ஒருத்தன் ஒருமுறை தான் எழுதணுமா(நம்ம எதுவும் தப்பா படிச்சிருப்போமோ🧐🧐🧐)…அடே துரியோதனா உன்னை பத்தி தெரிஞ்சும் அந்த ஒருத்தன் ஓடிருக்கான் பாரு..விஜய் இளவரசியை கரெக்ட் பண்ண வாழ்த்துக்கள் பா…

   1. Silukku Vedi
    Author

    Entrance exam vachu edukra alavuku ivanunga ambutu periya aalanu theriyala. Sari parpom ena than panranunganu

  5. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். மிகவும் திகிலாகவும் மர்மமாகவும் உணர வைப்பது போன்று அமைந்துள்ள தங்களின் எழுத்து நடையும், வசனமும். மிகவும் அசத்தல். பயமாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  6. Uma Sumiravan

   மாயோன் பொழில். அழகான தமிழ்ப்பெயர். அருமையான எழுத்துநடை. புது உலகிற்கு கைப்பிடித்து கூட்டிச் சென்றது எழுத்துக்கள். அந்த விர்சுவல் வேர்டில் இனி என்னென்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். செழியன் இளவரசியை கரெக்ட் பண்ணுவேன்னு சொன்ன இடம் சிரித்துவிட்டேன். துரியோதனன் என்னனெலாம் செய்து நம் நாட்டு இளவரசியை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான் என பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

  7. Oosi Pattaasu

   ‘மாயோன் பொழில்’ எப்டி இதெல்லாம் யோசிக்குறன்னு, இத எழுதுன ஆத்தர பார்த்து கேக்க வைக்குற, வேற லெவல் ஸ்டோரி.
   இதோட பாசிட்டிவ்ஸ்,
   1. இந்த ஸ்டோரியோட பெரிய ப்ளஸ் பாயிண்ட், எடுத்துக்கிட்ட வித்தியாசமான கான்செப்ட். உண்மைலயே இந்த கான்செப்ட் டிஃப்ரண்டா இருக்கதாலயே, செம இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு.
   2. படிக்கிறவங்க ஸ்டோரி இது தான்னு கெஸ் பண்ண முடியாதளவுக்கு, ஒரே எபில ட்விஸ்டுகள அள்ளித் தெளிச்ச, ரைட்டிங் ஸ்டைல்.
   3. நடுல வந்து, போற காமெடி. இந்த கதைய அந்த காமெடி, செம லைவ்லியா வச்சுருக்கு.
   அப்புறம் நெகட்டிவ்ஸ்,
   1.ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் கொஞ்சம் இருக்கு.
   2.பட்டு பட்டுனு போட்டுத் தள்ளுறத, கொஞ்சம் கொறச்சுக்கோமா. பாக்கவே திக்குனு இருக்குல்ல… நானே ஒரு பயந்த பிள்ள… 😜😜
   3.துரியோதனன் பேசுற டையலாக்ஸ்லாம் வேற, நமக்கு அல்லு விடுது. அதெல்லாம் இந்த பச்ச மண்ண பயமுறுத்தாத மாதிரி எழுது, ஓகே…
   ஓவர் ஆலா, ஒரு வித்தியாசமான எக்ஸ்பீரியன்ஸ் ‘மாயோன் பொழில்’ல கெடைக்கும்னு நெனைக்கிறேன். அல்டிமேட் ஸ்டோரி…

  8. Sangusakkara vedi

   1. இதுவரைக்கும் நான் பார்த்த படங்கள்லயே பிரம்மாண்டமான படம்னா பாகுபலி. பல விசயங்கள் என்னை வியக்க வச்சது. கிராபிக்ஸ் ஆகட்டும், நடிப்பு ஆகட்டும், கதை ஆகட்டும்.. எல்லாமே அருமை. உங்க டீஸர் , ஃபர்ஸ்ட் எபி பார்த்ததுக்கு அப்புறம் அதை விட அதிகமாக என்னை உணர வச்சது இந்த கதை.

   2. ஒரு எபிலயே இவ்வளோ வித்தியாசம் கொடுக்க முடியுமா ன்னு யோசிக்க வச்சது மட்டுமில்லாமா இன்னும் வர்ற எபில என்னென்ன லாம் வரும்னு எதிர்பார்ப்ப தூண்டும் கதை இது.

   3. எழுத்தாளரோட கற்பனை, கதை சொல்லும் விதம், கதாபாத்திரம்னு எல்லாமே அல்டிமேட்…

   குறைன்னா

   எபி எங்க பாஸூ ங்குற கேள்வி மட்டும் தான்.

   ஒரு நாள் விட்டு ஒரு நாள் எபி போடுறேன்னு சொன்ன ஜீவன தான் தேடிட்டு இருக்கேன்…