காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தாள் யாழினி.தன்னை சரி செய்துக்கொண்டு கதவை திறந்தாள்.”கதவ தட்ட வேணாம்னுதான் நினைச்சேன்மா “ஆன நேரம் ஆச்சு பாரு நீ எழுந்தாதான மாப்ள எழும்ப சாப்பிட சரியா இருக்கும் அதான்.”என்னம்மா நீ எனக்கு போய் விளக்கம் கொடுதுக்கிட்டு நீ போ நான் மாத்து துணி எடுத்துகிட்டு வரேன் குளிசிட்டு வரேன் பேசலாம்.என்றவாறு உள் செல்ல பவானி வேலை பார்க்க கிளம்பினாள்.
“பவானி,பவானி’, டிபன் ரெடியா,?”என்ற சிவசந்திரன் குரல் கேட்டு வந்த பவானி “எல்லாம் ரெடியா டேபிள் மேல வச்சாச்சுங்க எல்லாரும் வந்ததும் சாப்பிட வேண்டியதுதான்.”சம்பந்தி எங்கே காண”… என முடிப்பதற்குள் எதிர்ரே வந்து நின்றனர் கிருஷ்ணவேனியும் அவர் கணவன் சுந்தரராமனும்.”இதோ வந்துட்டாங்களே இனி மாப்ளயும் யாழினியும்தான் வரனும்”,..”அதோ அவங்களும் வந்தாச்சு”,.. என்று பவானி உறைக்கவும் ,அவர்கள் நெருங்கி வரவும் சரியாக இருந்தது.பத்து நிமிடம் அங்கு மெளனம் பாய்போட அவர்கள் பந்தி முடிவடைந்தது.”அப்புறம் சம்பந்தி கல்யாணம் திருப்தியாழினியின் தந்தை. இருந்திருக்கும் நம்பறேன்” என்றார் யாழினியுடைய தந்தை.”இதுல திருப்தினு என்ன இருக்கு கல்யாணம்னா நாலுபேரு சந்தோச பட்றதும் சங்கடபட்றதும் சஙஜம்தான”..ஏன் கேட்டோம் என்றானது அவருக்கு யாழினியின் நிலமை அதற்கும் மேல்.மதிதான் பேச்சை மாற்றினான்,.”அடுத்த ப்ரேகிறாம் என்னமா?,’என்ன இருக்கு நாங்க முதல்லபோய் அங்க மிச்சம் இருக்கிற சம்பிரதாயத்துக்கான வேலய பாக்கனும் நீயும் யாழுமாவும் இரண்டுநாள் இருந்து பார்துட்டு வாங்க.,”சரி சம்பந்தி நாங்க கிளம்பறோம் ஊர்ல பார்போம்”, என்றவாறு மஞ்சள் குங்குமம் வாங்கி விடைபெடற்றனர்.