Loading


 

ஜாலம் 14

கண்களை கடினப்பட்டு திறந்த மீனாட்சிக்கு, இடமே மங்களாய் தான் தெரிந்தது… பலமணிநேரம் மூடப்படிருந்த கண்கள் திறந்ததும் சற்று இடத்துக்கு பழக்கப்பட வேண்டி இருந்தது…

யோசனைகள் எல்லாம் சற்று முந்தய நிகழ்வுக்கு சென்றது..

_________________________________________

வேந்தனுடன் பேசி அழைபேசியை துண்டித்தவள்… “வாத்தி மூஞ்ச பாக்கணுமே இப்போ… என்னையவே வெச்சு செஞ்சாருல அனுபவிக்கட்டும்..” என்று தனக்கு தானே சொல்லி கொண்டவளது வயிரோ, தான் ஒருத்தர் இருப்பதை உணர்த்தியது…

நேற்றிரவும் சாப்பிடவில்லையே இருவரும்.. அந்த தித்திப்பான கேக்கை தவிர, அதையும் கள்வன் இவளுக்கு எங்கே விட்டுக்குக்கொடுத்தான்… 

அந்த எண்ணங்களுடன் வெக்கப்பட்டு ஒருவழியாய் சாப்பிட்டு அமர்ந்தவளுக்கு, தனியே என்ன செய்வதென்றே குழப்பம்.. கடைக்கு செல்லவும் மனது வரவில்லை.. அவன் ஏற்படுத்திய காதல் சின்னம் தான் உதட்டில்  அப்பட்டமாய் தெரிகிறதே.. இதோடு ஸ்ருதி முன் போய் நிற்க வெக்கம் வேறு வந்துதொலைத்தது…

விக்ரமுக்கு அழைத்து விடுமுறை என்பதை சொல்லியவள் மனதோ வேந்தனுடன் இன்னும் விளையாடிப்பார்க்க எண்ணியது..

நேரே வரையும் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.. அவனும் அவளும் காதல் மிகுதியில் கரை சேர்ந்த நேற்றைய இரவின் தாக்கம் இன்னும் மீதம் இருக்க.. அதனை படமாகவும் வரைந்து கொண்டாள்…

அதிலோ, மன்னவனின் இதழ்கள் மங்கையின் இதழ்களை கொய்ய, கரங்களோ அவளுடலில் தன் ஆதிக்கத்தை செலுத்தியப்படி இடையில் தவழ்ந்தது… நாணம் கொண்ட தேவியின் விழிகள் மூடி இருக்க, விரல்களோ காளையவனின் கேசத்தை வருடி வெக்கத்தை மறைத்துக்கொண்டது…

இருவரின் உணர்வுகளையும் அத்தனை தத்ரூபாமாக வரைந்திருந்தாள்.. “பூரி இத பாத்து வெக்கபடுறத பாக்கணுமே.. எங்க வைக்கலாம்..” என்ற யோசனையின் இறுதியில் அவனது அறையில் வைப்பதாக முடிவெடுத்து அவன் அறைக்குள் நுழைந்துகொண்டாள்..

அங்கே அவனது அலுமாரியில் வைத்து அதன் கதவை மூட போன நேரம் அவள் கண்ணில் சிக்கியது அந்த தங்க சங்கிலி..  கைகளில் எடுத்துக்கொண்டாள் சிறு நடுக்கத்துடன்…

அவள் எதிர்பார்த்தது போல.. அவள் அவளது மாமாவுக்கு கொடுத்த அதே பரிசு தான் இது, சந்தேகமே இல்ல.. அவள் அவனுக்காகவென்றே வடிவமைத்தது… 

அவர்களது மூன்றாவது திருமண நாளுக்கான மீனாட்சியின் பரிசு அது… அவர்கள் இருவரின் பெயரின் முன்னெழுத்தை கொண்டு வடிவமைத்து அதனை கடையில் சொல்லி செய்தும் எடுத்துக்கொண்டாள்.. நிச்சயம் இது அது தான் என்பதில் சந்தேகம் இல்லை… 

ஆனால் அது வேந்தனிடம் எப்படி.. என்ற கேள்வி மண்டைய குடைந்தது.. “இது எப்படி சாத்தியம்?.. மாமாவ இவங்களுக்கு முன்னவே தெரியுமா?.. அப்பறம் ஏன் என்கிட்ட சொல்லல?.. இது கிப்ட்டா கொடுத்து டு வீக்ஸ்ல மாமா இறந்துட்டாங்களே.. அதுக்குள்ள மாமாவ பாரி பாத்திருப்பாங்களா?…” இப்படி ஏராளமான கேள்வி மனதுக்குள்..

எதையும் யோசிக்கவில்லை போட்டது போட்டப்படி அதையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டாள்.. வேந்தனை நோக்கி… 

போகும் வழியில் விஜய் அவளை கண்டு அழைக்க, வண்டியை நிறுத்தியிருந்தாள்…

அவன் அருகில் வந்தது வரைதான் ஞாபகம் இருந்தது… அதன் பின் இப்போது இங்கே கண்களை திறந்திருந்தாள்… 

_________________________________________

யோசனையில் அமர்ந்திருந்தவளை கலைத்தது அங்கே உள்ளே வந்து விளக்கை ஒளிரவிட்டவனின் சத்தம்… 

கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இடம் அவளுக்கு பழக்கப்பட எதிரே அமர்ந்திருந்தவன் மீது பார்வை மொத்தமும் குவிந்தது.. கருமணிகள் ஒருமுறை விரிந்து சுருங்க.. உதடுகளோ “விஜய் அண்ணா..” என சத்தம் வராமல் உச்சரிக்க, என்னவென்ற யோசனையில் புருவங்கள் மேலெழுந்தது….

“இப்படி நொடிக்கொரு ரியாக்ஷன் குடுத்தா நான் என்ன பன்றது மீனாட்சி… சும்மாவே புடவைல கும்முனு தான் இருக்க.. இது வேற பண்ணனுமா?…”

“அண்ணா என்ன பேசுறீங்க.. எதுக்கு என்ன இங்க அழைச்சிட்டு வந்தீங்க.. பசங்க தேடுவாங்க..” என்றவள் எழப்போக, அப்போதுதான்,  தான் கட்டிவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே புரிந்தது அவளுக்கு…

“என்னடி அண்ணா அண்ணான்னுட்டு இருக்க? நான் என்ன உன்கூட பொறந்தனா?.. இல்லைல.. அப்பறம் என்னடி அண்ணா?.. ஒருவேள உன் அப்பா என் அம்மாவ வெச்சிருந்தாரா?… என்ன இல்லையா?? அப்போ உன் அம்மா தான் என் அப்பாவ வெச்சிருந்தாளா?…” என்றவன் கொடூரமாய் சிரித்தான் ஏதோ பெரிய நகைச்சுவை சொன்னது போல..

யாரை கேவலப்படுத்துகிறோம் என்றே உணராமல் தாய் தந்தையின் நடத்தையை கீழ் தரமாக பேசிய அவன் பேச்சிலேயே புரிந்தது.. எதிரில் இருப்பவன் மனிதன் அல்ல கேவலமான ஜந்து என்பது…

அவனை பார்க்க பிடிக்காதவள் போல முகத்தை வேறு பக்கம் திருப்ப, கால்களால் அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பினான் கொடூரன் விஜய வரதன்..

“என்னடி அக்காக்கும் தங்கச்சிக்கும் என்ன பாத்தா எப்படி தெரியுது.. என்ன பார்க்கவே அருவருப்பா இருக்கோ??.. அவன் மட்டும் ரொம்ப இனிக்கிறானோ??.. ஒரு நைட் என்கூட இருந்து பாரு.. அந்த சுகத்துலேயே மெய்மறந்து போய்டுவ..” என்றவன் கால்களை அப்படியே அவள் கழுத்துவலியே கீழிறக்க.. மீனாட்சிக்கு உள்ளம் நடுங்க தொடங்கியது…

அவன் தொடுகையும் பார்வையும் கொடுத்த அருவெறுப்பையும் மீறி அவன் சொன்ன அக்கா என்ற வார்த்தையில் மீனாட்சியின் இதயம் நின்று துடித்தது…

“அக்காவா?… மஞ்சு.. மஞ்சுவ என்ன பண்ண நீ?…”

“அடடே அண்ணா காணாம போயிடிச்சு போல.. குட் குட்..” என்றவன் அவளில் இருந்து காலை எடுத்துக்கொண்டு நேராய் அமர்ந்தான்..

“ம்ம்ம் ரொம்ப பாசம் போல அக்கா மேல…” என்று நாடியை நீவியவன்  “சும்மா சொல்ல கூடாது உன் அக்கா செம தெரியுமா?.. ஒரு நாள்தானாலும் சொர்க்கத்தை கட்டிட்டா…” அந்த நாள் ஞாபகத்தில் கண்மூடி சொன்னான் கேடுகெட்டவன்…

“டேய்ய்ய்ய்ய்…”

அவனோ காதில் ஒற்றை விரலை விட்டுக்கொண்டு  “இஷ்.. என்ன சத்தம்.. இப்படி சத்தம் போட்டு எனர்ஜி வேஸ்ட் பண்ண போறியா?.. அப்பறம் எப்படி நாம கட்டில் விளையாட்டு விளையாடுறது சொல்லு…”

“ஓஓஓஓ மேடம் கண்ணால எரிக்கிறீங்களா?.. ஐயையோ எரியுதே ஹாஹா… எனக்கும் உன்ன இப்போவே எடுத்துக்கணும்னு தான் தோணுது.. பட் எதுக்கு சஸ்பன்ஸோட என்ஜோய் பண்ணனும்… என் வீர தீர செயல்களையும் தெரிஞ்சிகிட்டே என்ஜோய் பண்ணுவோமே… நைட் ஆக டைம் இருக்கு… பர்ஸ்ட் நைட் பீல் வேணும்ல..” என்று அவள் முகத்துக்கு அருகில் குனிந்தான்.. 

“செஞ்ச விஷயத்தை சம்மந்தப்பட்டவங்க கிட்ட சொல்லும் போது அவங்க கண்ணுல வர பயம் விரக்தில உள்ள கிக்கே தனில…” என்றவன் அவன் கொடூர பக்கத்தை சொல்ல ஆரம்பித்தான்… 

_________________________________________

மூன்று வருடங்களுக்கு முன்..

“ஏண்டி படுத்துற… நான் உனக்கு வேண்டாதவன் ஆகிட்டேன்ல.. இப்போலாம் என்ன பாக்குறதே இல்ல நீ…” என்று முகத்தை தூக்கி வைத்து அமர்ந்திருக்கும் கணவனை பார்க்க சிரிப்பு தான் வந்தது மஞ்சரிக்கு…

“ஏங்க இப்படி அநியாயம் பண்ணிட்டு இருக்கீங்க?..” 

“பின்ன உனக்கு ஒரு டெடிகேஷன் இருக்கா?.. புருஷன கண் கலங்காம பாத்துக்கணும்னு கூட உனக்கு தோணல.. ஒரு கிஸ்ஸுக்காக அலைய விடுறியே…”

மடித்துக்கொண்டிருந்த ஆடையை அப்படியே வைத்துவிட்டு, மெத்தையில் படுத்துக்கொண்டு கால்களை ஆட்டியவண்ணம் தன்னிடம் வாயடித்துக்கொண்டிருக்கும் கணவன் அருகில் வந்தவள், “அடடே ரொம்ப பொறுமையானவரு தான் நீங்க… நைட்லாம் அந்த பாடு படுத்த வேண்டியது.. மீனு கூட கலாய்க்கிறா தெரியுமா?.. எப்ப பாரு நீங்க இங்க தங்குற நேரம் குழந்தைங்கள அவ கூட அனுப்பிட வேண்டியது… இதுக்குள்ள சாருக்கு கிஸ் இல்லனு கவலை வேற…”

தன் எதிரே நின்று கோபமாய் பேசும் மனைவி கொள்ளை அழகாய் தான் தெரிந்தாள் அவன் கண்களுக்கு.. பேசுகொண்டிருந்தவளை அப்படியே இழுத்து மெத்தையில் போட்டவன், உருண்டு அவள் மேல் படர்ந்து, “அது மேடம் இவ்வளவு அழகா பிறக்க முதல் யோசிச்சிருக்கணும்.. நீதான் மயக்கி வெச்சிருக்கியேடி மாயக்காரி… நான் தான் கம்பளைண்ட் பண்ணனும் இந்த அழகான ரெண்டு விழிக்குள்ள என்ன அர்ரெஸ்ட் பண்ணி வெச்சிருக்கிறதுக்கு…” என்றவன் அவளோடு இழைய.. 

“டாக்டருக்கு காதல் ஹார்மோன் ரொம்ப அதிகமா வேலை செய்து போலயே… நமக்கு ரெண்டு வயசுல ரெண்டு பிள்ளைங்க இருக்கு அதாவது ஞாபகம் இருக்கா?..”

 

“இருக்கட்டுமே இன்னும் நாளு வேணா பெத்துக்கலாம்… உன் பக்கத்துல வந்தாலே மூச்சு முட்டுதுடி.. நர்ஸம்மா மனசுவெச்சா இந்த டாக்டரோட உயிர காப்பாத்தலாம்..” என்றவன், சிறிதும் தாமதமின்றி அவள் இதழ்வழி மூச்சுகாற்றை கடன் வாங்கிக்கொண்டான்…

“ரொம்ப மோசம் எழில் நீங்க…”

“என்னாது அப்போ நான் குட் கிஸ்ஸர் இல்லையா??..” என்றவன் மீண்டும் அவளில் அவன் தாக்கத்தை செலுத்த விழைய, அவனை ஒரே தள்ளாக தள்ளி எழுந்துகொண்டாள்…..

அப்படியே சிறிது நேரம் அமர்ந்தவள் முகம் வாட, மனைவியின் சோகமான முகத்தை பார்த்தவனுக்கு புரிந்து போனது என்னவென்று  “டேய் மஞ்சு, சேட்ட கல்யாணம் என் பொறுப்புனு உனக்கு சொல்லி இருக்கேன்ல.. என் வேந்தன் வந்ததும் பேசலாம்டா…”

“அப்போ அவ லவ்.. என்னங்க புரியாம பேசுறீங்க.. அவ அந்த பையன ரொம்ப லவ் பண்ணுறாங்க.. அந்த பையன தான் கண்டுபிடிக்கணும்…”

“உனக்கும் சரி எனக்கும் சரி அந்த பையன் யாருன்னே தெரியாதேடா.. அதான் சேட்ட உன்கிட்ட கூட சொல்ல மாட்டேங்குறாளே.. அப்பறம் எப்படி கண்டுபிடிக்கிறது…”

“அதாங்க என் கவலையே.. அதப்பத்தி பேச போனாலே பேச்சை மாத்திடுறா.. பாக்கலாம் எங்க போய்டப்போறா.. அவ ஆசைப்பட்ட வாழ்க்கையே அவளுக்கு கெடச்சிடனும் கடவுளே…” என்று அவள் கடவுளிடம் வேண்டுதல் வைக்க

பதிலுக்கு எழிலோ, “என் வேந்தனுக்கு சேட்டை கூடவே கல்யாணம் நடந்துடனும் கடவுளே…” என்றவன் மனைவியின் கைகளில் நான்கு அடிகளையும் பெற்றுக்கொண்டான்…

“எப்போ பாரு உங்களுக்கு இதே வேல.. கடவுளே கன்பியூஸ் ஆக போறாரு பாருங்க…” என்றிருந்தாள் கோபமாய்… அதன் பின் எழில் அவளை சமாதான படுத்தியதெல்லாம் தனிக்கதை…

இப்படியே நாட்களும் அதன் பாட்டுக்கு சென்றுகொண்டிருக்க, ஒருநாள் மஞ்சரியின் அலைபேசிக்கு அந்தரங்க புகைப்படங்கள் தெரியாத எண்ணில் இருந்து வரத்தொடங்கியது… அவளும் அதனை பெரிதாக எண்ணவில்லை.. இன்று நேற்று என்றில்லை.. கடந்த இரண்டு வாரங்களாக நடப்பதுதான்.. ஏன் என்றும் அவள் அறிவாள்… எண்ணை பிளாக் செய்தாலும் வேறு எண்ணிலிருந்து வந்துகொண்டு தான் இருக்கிறது… 

வழமையாக சில கீழ்தரமான ஆண்கள் இப்படியும் உண்டு தானே… ஒரு பெண்ணாக எத்தனை நபர்களை இதுபோல் கடந்து வந்திருப்போம்.. கடந்து ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் சமூகம் நம்மை வைத்திருக்கிறது.. 

முதலில் “ஹாய்” என்று ஆரம்பிப்பவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுப்பது இயல்பு.. நாளாக இப்படி சில மோசமான படங்களை அனுப்புவதும் உண்டு… பல பெண்கள் இதனை கடந்து வந்தாலும் சிலர் இன்றளவிலும் மாட்டிக்கொள்ளவே செய்கின்றனர்…

இப்படித்தான் அவள் வேலை செய்யும் மருத்துவமனை வந்தாள் ஒரு பெண்… தற்கொலைக்கு முயன்றிருந்தாள் அந்த பதினெட்டு வயது இளம் சிட்டு… அவள் பெயர் காவ்யா… மஞ்சரியுடன் கொஞ்ச நாளில் ஒட்டியும் கொண்டாள்..

அவளிடம் பேசியதில் மஞ்சரி அவளை பற்றி அறிந்துகொண்டது இவற்றை தான்… தாய் தந்தை இருவரும் பெரிய வேலையில் இருப்பவர்கள்.. இன்றைய பணக்கார வர்க்கத்தினர்… குழந்தைகளை விட பணத்தின் பின் ஓடும் பெற்றோர்களில் அவர்களும் ஒருவர்.. அன்புக்காக ஏங்கும் அளவில் பதின்ம வயது யுவதியை விட்டுவைத்திருக்கும் மேல் தட்டு மக்கள்… 

பேச யாருமில்லை என்றிருந்த அவளுக்கு கிடைத்த உறவு இந்த கயவன்…

முதலில் ஏதோ ஒரு பொதுவான குழு ஒன்றில் இருந்து இவள் எண்ணை எடுத்து, தவறுதலாக ஏதோ பெண் தோழியிடன் பேசும் இன்னொரு பெண் போல் ஒரு செய்தியை அனுப்பி இருக்கிறான்.. காவ்யாவும், தான் நீங்கள் என்னும் நபர் இல்லை என பதிலுக்கு அனுப்ப… மன்னிப்பு கோருவது போல் ஆரம்பித்திருந்தது பேச்சு வார்த்தை..

பெயர் கேட்கும் படலம் ஆரம்பமாக முதலில் அவன் தான் என் பெயர் காவ்யா என ஆரம்பித்திருக்கிறான்.. பொதுவாக நம் வாட்ஸ்ஆப்பில் சிலர் நம் பெயர்களையே வைத்துக்கொல்வதுண்டு அப்படி இருந்த காவ்யாவில் பெயரை தெரிந்து கொண்டு விளையாடி இருக்கிறான்… ஆரம்பகால வாட்ஸப் பாவனையும் என்பதால் பெரிதாக எதுவும் தெரிந்திருக்கவில்லை அவளுக்கு… 

தன் பெயரில் இன்னொருவர்.. இல்லையென்றால் தன் பிறந்த தினத்தில் இன்னொருவர்.. இப்படி யாரையேனும் சந்தித்தாள் பெண்களுக்கு விரைவில் ஒரு ஈர்ப்புவருவதுண்டு.. அதுதான் காவ்யா விடயத்திலும் நடந்திருக்கிறது… 

அவனிடம் மாட்டிக்கொண்ட இன்னொரு பெண்ணின் படத்தை அனுப்பி இது தான் என்றும் இவளுடையதை அனுப்புமாறும் கேட்டிருக்க இவளும் ஆர்வமாய் அனுப்பி இருக்கிறாள்.. பெண் தானே என்ற நம்பிக்கையுடன்..

அதன் பின் தான் அவன் சுயரூபம் வெளியே வந்துருக்கிறது… இவள் முகத்தை பல அந்தரங்க புகைப்படத்துடன் இணைத்து.. பணம் பறித்திருக்கிறான்.. அதனையும் கடந்தவள் தன்னையே கேட்கும் போது தாங்க முடியாமல் இந்த முடிவுக்கு வந்துவிட்டாள்…

மஞ்சரி தான் அவளுக்கு எடுத்துச்சொல்லி புரியவைத்திருந்தவள், எதிர்த்து வாழும் நம்பிக்கையையும் அளித்திருந்தாள்.. அதோடு விடாமல்,

இப்படியானவர்களை வெறுமனே சும்மா விடுவதா என்ற கோபத்துடன் அந்த எண்ணையும் வாங்கி இருந்தாள்… இது முதல் முறை அல்ல கடந்த இரண்டு மாதத்தில் மூன்று பெண்கள் அப்படியென்றால் வெளியே சொல்லாமல் இன்னும் எத்தனை பேரோ…

அதுவும் ஒரு தாதியாக இப்படி எத்தனை பெண்களின் நிலையை பார்த்திருப்பாள்.. இதற்கு தன்னாலான முடிவை கொடுக்க வேண்டும் என்றே இதில் இறங்கி இருந்தாள்…

ஆனால் அவள் செய்த முதல் தவறு, கணவனிடம் சொல்லாமல் விட்டது… தானே பார்த்துக்கொள்ள முடியும் என்று நம்பினாளோ என்னவோ அவனிடம் தெரியப்படுத்தவில்லை… இரண்டாவது தவறு , தெரிந்தவன் காவல்துறையில் இருப்பவன் என்ற நபிக்கையுடன் விஜயிடம் சென்றது..

அவன் தான் இவற்றுக்கு மூலகாரணம் என்று அறியாமல் விட்டது அவள் தவறா??.. தனக்கு வேண்டாத வேலை என்று யோசிக்காமல் நல்லது நினைத்தது கூட அவள் அழிவுக்கு காரணமோ???? 

அன்று தொடங்கியது இவளுக்கு தொல்லை… அவ்வப்போது விஜயிடம் கேட்பதுண்டு.. அவனும் தான் பார்த்துகொள்வதாக சொல்வதுண்டு..

அவளும் அதனை நம்பி விட்டுவிட்டாள்.. விஜயிடம் அவளுக்கு இருந்த நல்ல எண்ணம் கூட இதற்கு ஒரு காரணம்…

திருமணத்துக்கு முதலே அவளிடம் காதலை சொன்னவன் அவன்… இன்னொருவரை விரும்புவதாக சொன்னதும் கண்ணியமாக ஒதுங்கியும் கொண்டான்… அதிலிருந்து அவன் மீது தனி மரியாதை இருந்தது மஞ்சரியிடத்தில்.. ஆனால் அந்த குள்ளநரி பதுங்கியிருக்கிறான் என்பதை அன்று அறியாமல் போனாளே….

இப்படி நாட்கள் கடக்க.. அன்று எப்போதும் போல் தொலைபேசிக்கு படம் வந்திருந்தது… ஆனால் இன்று அதில் அவள் முகம்.. மஞ்சரிக்கோ யோசனை.. தன் படம் என்றால் அவளை தெரிந்தவர் யாரோவாக தானே இருக்க முடியும்.. அவள் புகைப்படம் எங்கும் அவள் போடுவது கிடையாது… மீனாட்சியிடமும் அந்த பழக்கம் இல்லை… யாரோ கூட இருக்கும் நபர் என்பது புரிய, இப்போது மீண்டும் அவனிடம் தான் சென்றாள்…

“நான் பாத்துக்கிறேன் மஞ்சு.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க… கிட்ட நெருங்கிட்டோம்.. பெரிய நெட்வேர்க் அவங்களோடது… நிறைய பொண்ணுகளை அதுவும் டீனேஜ் ஸ்டார்ல உள்ளவங்கள தான் டார்கெட் பண்ணி இருகாங்க… சீக்கிரமே பிடிச்சிடலாம்… நீங்க சில்லா இருங்க.. நேத்து தானே செகண்ட் அணிவசரி கொண்டாடி இருக்கீங்க.. இன்னைக்கு இதெல்லாம் தலைக்குள்ள போடணுமா???.. நான் பாத்துக்க மாட்டேனா???..” என்றான் அத்தனை நல்லவன் போல…

அவளும் இவன் பேச்சை நம்பி அங்கிருந்து செல்ல… விஜய் முகம் கோரமாய் மாற தொடங்கியது…

யாருக்கோ அழைத்தவன்.. “ப்ளடி ***** அங்க என்னத்த பண்ணிட்டு இருக்க.. அவளுக்கு சந்தேகம் இருக்கு அடக்கி வாசினு சொன்னேன்ல.. ஏன்டா அவ படத்தை அட்டாச் பண்ண..”

“பாஸ் அவ ரொம்ப துள்ளுறா பாஸ்.. எத்தன போட்டோ அனுப்பினாலும் அசரவே மாட்டேங்கிறா.. அவளுக்கு பயம் வரனும்னு தான் அதெல்லாம் பண்ணேன்…”

“கிழிச்ச… அத தூக்கிட்டு எங்கிட்டயே வந்து நிக்கிறாடா.. யாரோ தெரிஞ்சவனா தான் இருக்கும்னு… சொல்லவா நான் தான் நீ தேடுற ஆள்னு… அவ போட்டோ உங்கிட்ட தந்தது தப்பா போயிடிச்சு…”

“இப்போ என்ன பண்றது பாஸ்..” என்றான் எதிரில் இருந்தவன் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்துடன்… 

“இந்த ஒரு புள்ளபூச்சிக்காக வீட்ட கொழுத்த முடியுமா??.. காசுக்கு காசு பெண் சுகத்துக்கு பொண்ணுன்னு எந்தவித முதலீடும் இல்லாம லாபம் வர்ற தொழில்.. நான் எவ்வளவு பெரிய நெட்வேர்க்க உருவாக்கி வெச்சா இவ வந்து ஒரு கம்பளைண்ட்ல பிடிச்சிடுவாளாமா?… இதோட இவ விடமாட்டா மேலிடத்துக்கு போகவும் வாய்ப்பு இருக்கு… சோ பெட்டர் புள்ளபூச்சிய வேரோட அழிச்சிட வேண்டியது தான்…”

இதனை எதனையும் அறியாது குடுபத்துடன் நேரத்தை கடத்தியவளுக்கும் நிம்மதியாக இருக்க முடியவில்லை… யோசனையுடனே வலம் வந்தாள்.. மீனாட்சியும் எழிலும் எவ்வளவோ கேட்டும் ஒன்றுமில்லை என்பதாய் தான் சொல்லி இருந்தாள்…

இப்படியே வாரம் ஒன்று கடந்திருக்க.. மனது சரியில்லை என அவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவதாக சொன்னவளை யாரும் தடுக்கவில்லை… குழந்தைகளை விட்டு செல்ல சொல்லியும் தந்தையின் இந்த நிலையில் இவர்களையும் பார்த்துக்கொள்வது கஷ்டம் என அவளே அழைத்தும் சென்றிருந்தாள்..

இதுதான் அவளது கடைசி நாள் என்பதை தெரிந்திருந்தால் விட்டு சென்றிருப்பாளோ என்னவோ?…

கோவிலுக்கு சென்று வரும் வழியில் அந்த காட்டு வழிபாதையில் ஒருவர் மனைவிக்கு உடம்பு முடியவில்லை பார்க்க போகவேண்டும் மிகவும் அவசரம் என்று வாகனத்தில் ஏறிக்கொண்டார்…

விளைவு விஜயிடத்தில் மாட்டி இருந்தனர் அந்த கட்டுக்குள் நால்வரும்…

“வாங்க மேடம்… இப்படி இருக்கீங்க…”

“நீதான் அப்போ அதுக்கெல்லாம் காரணமா?..”

“வெரி சார்ப் மஞ்சு நீங்க… இப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்சிடீங்க… வேலில போன ஒணான இப்படி வேட்டிக்குள்ள விட்ட கதையா ஆகிடுச்சுல.. உங்களால ஒரு பொண்ணு எனக்கு லாஸ்.. அந்த லாஸ நீங்க தான் ஈடுகட்டணும் சொல்லிட்டேன்..” என்றவன் கட்டிவைக்கப்பட்டு மயக்கத்தில் இருக்கும் எழிலின் முகத்தை காலால் அப்படியும் இப்படியும் திருப்பி பார்க்க

“டேய் அவர விடு..”

“ம்ம்ம் லவ்வு… அப்படி என்ன எங்கிட்ட இல்லாதது இந்த மூஞ்சிகிட்ட இருக்காம்…”

“நேர்மை…” என்று வந்து விழுந்தது அவள் வார்த்தை…

“அட அட அட.. அப்போ இங்க நடக்க போறத.. அந்த நேர்மையானவரு பாக்கணுமே டேய் அவனுக்கு தண்ணியடிச்சு எழுப்புங்கடா..” என்றவன் அவள் அருகில் சென்றான்..

“சாரி மிஸ் மஞ்சரி… நைட் எபெக்டும், பர்ஸ்ட் நைட் செட்டப்பும் மிஸ்ஸிங்..” என்றவன் அவள் புடவையை உருவி எடுக்கவும் எழில் முழித்துக்கொள்ளவும் சரியாக இருந்தது..

அங்கு நடப்பது அவனுக்கு புரிய, “டேய்ய்ய் அவள என்னடா பண்ணுறீங்க… விடுங்கடா அவள…” என்று கத்த அங்கிருந்த அவனுடைய ஆட்கள் நால்வரும் சத்தமாய் சிரித்தனர்…

முடிந்தமட்டும் மஞ்சரியும் போராடி பார்த்துவிட்டாள் அவன் பலத்தின் முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை… எழில் பார்த்துக்கொண்டிருக்கிறானே என்ற எண்ணமே கொன்றது அவளை…

“மாமா… பாக்காத மாமா… ப்ளீஸ் பாக்காத மாமா..” என்ற அவள் சத்தமும்.. “மஞ்சரி… டேய் அவளை விடுடா…” என்ற எழிலின் சத்தமுமே அந்த இடத்தை நிறைந்தது…

தன் வேலை முடிந்து அவளில் இருந்து எழுந்தவன்… “செம போ.. குடுத்து வெச்சவன் டா நீ.. என்ன இருந்தாலும் எச்சில் பிலேட்ல அது மட்டும் ஒரு சின்ன வருத்தம்.. ஆனா என் மேல கடவுளுக்கு ரொம்ப பாசம்னு நினைக்கிறேன்.. இவள போலவே இன்னொரு பீஸ எனக்கே எனக்குன்னு ப்ரஷா வெச்சிருக்காரு..” என்றான்..

“இப்படி எனக்கு சுகத்த குடுத்துட்டு சாக்கப்போறியே மஞ்சு.. அதான் கவலையா இருக்கு.. வாட் கேன் ஐ டூ..” என்றவன் அவள் வயிற்றில் கத்தியை சொருகி, அங்கு மயக்கத்திலிருந்த மகியை தூக்கிக்கொண்டான்…  

அத்தனை நேர போராட்டத்தில் கட்டப்பட்ட கயிறை அவிழ்த்திருந்த எழில், வந்த வேகத்தில் அவனை வெறி கொண்டு தாக்கி குழந்தையை தூக்கிக்கொண்டான்..

சடுதியில் நடந்தவற்றை தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்த அவனது அடியாட்களோ எழிலை பிடித்துக்கொள்ள.. 

வாயில் வடிந்த இரத்தத்தை துடைத்த விஜயோ, “என்னையே அடிக்கிறியா??.. தப்பாச்சே.. எப்படியும் சாகாதான் போற ஓகே என்ன அடிச்ச கை இல்லாமலே சாவு..” என்றவன் அவன் வலது கையை வெட்டியிருந்தான்…

எழிலுக்கு வலி மரத்துப்போய் இருந்ததோ என்னவோ.. அழவே இல்லை அவன்.. தன் கண் முன்னே தன்னவளுக்கு நடந்த கொடுமையை விடவா?.. அதிலும் ஏனென்றே காரணம் புரியாத விரக்தி தான் அவனுக்கு…

விஜயோ, “டேய் வாகனத்துல வெச்சு மலைல இருந்து தள்ளி விட்டுங்க மூனையும்… அப்பறம் நானே பாடி கிடைக்கலனு கேஸ கிளோஸ் பண்ண வெச்சிடுறேன்…” என்றவன் மகியுடன் கிளம்பி இருந்தான்…

குழந்தை மகிழன் மயக்கத்தில் இருக்க எழிலும் மஞ்சரியும் அரைமயக்கம்… மூவரையும் வாகனத்தில் தூக்கி போட்டவர்களில் ஒருவனோ.. “மச்சான்.. பக்கத்துல குளம் இருக்கும் போல இருக்கு.. தண்ணி குடிச்சிட்டு ஒரு தம்ம போட்டுட்டு வருவோமா?..”

இன்னொருவனோ, “டேய் அதெல்லாம் வேணா யாராச்சும் வந்தா சிக்கல்…”

“அட இங்க இந்த நேரம் யாருடாவரப்போறா… போய் அஞ்சு நிமிசத்துல வந்துடலாம்…” என்க நால்வரும் கிளம்பினர்…

எழில் கஷ்டப்பட்டு கண்களை திறந்தவன்… “மஞ்சு டேய் மஞ்சு..” என்று அவன் முகத்தால் அவள் முகத்தில் தட்ட.. சிறிது நேரத்தில் அவளுக்கும் உணர்வு வந்தது… “சாரி மாமா… சாரி மாமா…” என்று முனுமுனுத்தவள் கண்களில் கண்ணீர் வடிந்தது… அதனை துடைக்க கூட எதிரில் இருக்கும் கை எட்டவில்லை அவனுக்கு… வெட்டும் போது வலிக்காதது, இப்போது அவள் கண்ணீரை துடைக்க முடியவில்லை என்றதும் வலித்தது…

“கண்ணா அழாதடா… ஒன்னுமில்ல ஒன்னுமில்ல…” என்றவனுக்கும் இரத்த போக்கில் மயக்கம் வரும் போல தான் இருந்தது…

“மாமா மகி, மகிழ்.. அவங்கல காப்பாத்துங்க.. ப்ளீஸ்.. ஐ லவ் யூ மாமா…” என்ற இறுதி வாக்கியத்துடன் மனம் நிறைய வலிகளுடன் அந்த உயிர் உலகைவிட்டு பிரிந்திருந்தது…

“மஞ்சுமா.. டேய் மஞ்சு…” என்ற எழிலுக்கு கத்தி அழக்கூட முடியவில்லை… போனவர்கள் எந்நேரமும் வரக்கூடும்.. மகிழனையாவது காக்க வேண்டும் என்று ஒற்றை கையை வைத்துக்கொண்டு ஒருவழியாய் குழந்தையை தூக்கி, இறங்கி ஓடியவன் தான்… வேந்தனை சந்தித்தது அதன் பின் நடந்தது எல்லாம்….

__________________________________________

விஜயோ தான் செய்தவற்றை சொல்லி முடிக்க, மீனாட்சி பட்ட கவலை ஒருவார்த்தையில் அடக்கி விட கூடியாதா?… கண்களில் கண்ணீர் கோடாய் இறங்கியது… பேச வார்த்தை இல்லாமல் பார்வை விஜயிடத்தில் நிலைத்தது… அவனை கூறு போடும் கோபம் கண்ணில் இருந்தும் கையாளாகாமல் இருக்கும் நிலை..

“மகிய கூட்டிட்டு வந்து கொஞ்ச நாள்லயே உன்ன கட்டிக்கலாம்னு ஐடியா போட்டா, என்ன பெத்த **** அந்த நாய் இப்போ வேணா கொஞ்ச நாள் போகட்டும்னு தொல்ல பண்ணிடுச்சி…”

“அப்பறம் உங்க வீட்ல மாப்பிள பாக்கிறப்போ வருவோம்னு பார்த்தா?? நீ வேற கல்யாணம் ஆனவரத்தான் கட்டிக்குவியாமே.. சரி ஒரு கல்யாணத்த பண்ணி பொண்டாட்டிய கொல்லுவோம்னு பாத்தா.. நம்ம கிரைம் ரேட் வேற கூடிட்டே போகுது..”

“சரி கழுதை எங்க போய்ட போற.. ஆளே கிடைக்காம கடைசியா எங்கிட்ட வருவேன்னு வந்த சம்பந்தம் பூரா களைச்சு விட்டா… எவனோ ஒருத்தன் வரான்.. யோசிக்க நேரம் கொடுக்காம உன்ன கட்டிட்டு போய்ட்டான்..”

“அப்போ இவ்வளவு நாள் காத்துட்டு இருந்த நான் என்ன கேன பயலா.. தூக்கிட்டோம்ல… என்ன பண்றது.. ரெண்டாவது தடவையும் எச்சி தட்டாகிடுச்சு… பட் அதுவும் வேர்த் தான்..” என்றவன் பார்வை அவள் மேனியை அளக்க.. அவளிடமோ ஒரு வெறித்த பார்வை… 

“முறைச்சதுலாம் போதும் நைட்டுக்கு ரெடியா இரு.. உன் பிரண்ட்ஸ் வேற உன்ன காணோம்னு எனக்கு தான் கால் பண்ணி தேட சொல்லுறாங்க… செம காமெடில… நானும் போய் கொஞ்சம் தேடுற போல ஆக்டிங் போட்டுட்டு வர்றேன்…” என்றவன் அவள் இருந்த அறையை மூடி சாவி எடுத்து கிளம்பியிருந்தான்…

_____________________________________________

மீனாட்சி காணாமல் போய் இதோ அடுத்த நாளும் விடிந்திருந்தது.. எந்த தகவலும் இல்லை… எல்லோரும் அங்கே மீனாட்சியின் வீட்டில் தான் இருந்தனர்…

வேந்தனோ நேற்று எப்படி அமர்ந்திருந்தானோ அப்படியே அதே நிலைக்குத்திய பார்வையுடன் தான் அமந்திருந்தான்… இம்மியும் அசைவு இல்லை…

அப்படியே அவரவர் அமர்ந்திருக்க.. விக்ரமின் தொலைபேசி அதன் இருப்பை உணர்த்தியது…

ஸ்ருதி தான் முதலில் நிதானத்துக்கு வந்தவள் எழுந்து வேந்தன் அருகில் இருந்த செல்லை பார்க்க.. அதிலோ விஜய் என்ற பெயரை தாங்கி தான் அழைப்பு வந்திருந்தது…

அழைப்பை ஏற்று காதில் வைக்க… “விக்ரம்.. விக்ரம்..” என்ற மீனாட்சியின் குரல் அது…

“மீனு மீனு எங்க இருக்கடி..” என்று சத்தமிட்டு கத்த.. எல்லோரும் அங்கே கூடிவிட்டனர்… வேந்தன் என்ற உடலுக்கு அப்போதுதான் உயிர் வந்திருந்தது…

ஸ்ருதியிடம் இருந்து அழைபேசியை கிட்டதட்ட பறித்தெடுத்தவன் “சிட்டுமா..” என்றான் அத்தனை ஏக்கத்தை குரலில் தாங்கி…

அந்தபக்கமிருந்தவளுக்கோ உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை…. “பாரி… வா… பயமா இருக்கு வா…” என்றவள் சொன்னதையே சொல்ல…

“டேய்… எங்க இருக்கடாமா… விஜய் பக்கத்துல இருக்காரா போன குடேன்…”

“ம்ம்ம்கூம் நீ வா… நீ மட்டும் வா…” மீண்டும் அவளிடம் உளறல்…

“ஐயோ…” என்று அழுதவன்.. “அந்த போன்ல லொகேஷன் ஒன் பண்ணுடா.. இதோ உன் பாரி வந்துட்டே இருக்கேன்…”

“நான் ரொம்ப மோசமா இருக்கேன் பாரி.. நீ மட்டும் வா… என்ன யாரும் பாக்க வேணாம்…” என்றாள் உயிரை உருக்கும் குரலில்…

வேந்தனோ நொடியும் தாமதிக்காமல் கிளம்பி இருந்தான்.. அவன் மறுப்பையும் மீறி கௌரவ் விக்ரம் இருவரும் அவனுடனே சென்றனர்…

“வந்துடு பாரி… வந்துடு…” என்று மீண்டும் மீண்டும் அவள் உதடுகள் மொழிந்து கொண்டிருக்க, விழிகளோ எதிரே இரத்தம் வழிய மயங்கி கிடந்த விஜயின் உருவத்தை வெறித்தபடியிருந்தது….

ஜாலம் தொடரும்….

                     

                     …ஆஷா சாரா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
55
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. Dei ennada panna அவள.. இப்படி கதருறா பாவம் டா en பூரி 🤧🤧🤧

      1. Author

        மஞ்சுக்காக பீல் பண்ணிட்டு இருக்கேன் அந்த நாய் விஜய்க்கு நம்ம மீனு கையாள தண்டனை உண்டு

      2. அச்சோ என்னடா பண்ண மீனுவ அப்படி கதறுகிறா ஃபோன்ல? மீனுக்கு ஒன்னும் ஆகலல்ல??

        அந்த விஜய் வெறும் ரத்த களறியோட மட்டும் தான் இருக்கானா இன்னும் சாகலையா??😡😡😡

        1. Author

          அந்த நாய்க்கு இன்னைக்கே தீர்ப்பு எழுதிறோம்… இனி எல்லா கெட்டதும் அவனுக்கு தான்

    2. Ada paaviii vijayyyyy😱😱😱😱😱

      Pesama avana konnuru meenuuu