ஜன்னல் நிலவு 04.
பத்மா சொன்னவற்றை கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வருக்கு அது எவ்வளவு தூரம் சரியாகவரும் என்று தெரியாத குழப்பத்தில் இருந்தான்..
அவன் முகத்தில் இருந்த யோசனையை பார்த்த பத்மா “ என்னடா மகனே..! கடும் யோசனையா இருக்கு?..” என்றார்..
“ அப்படியெல்லாம் ஒரு பெரிய யோசனையும் இல்ல பத்து. நானும் ஆரம்பத்துல அவளை அங்க விட்டுட்டு வர விருப்பமில்லாமத்தான் இருந்தேன். சீனி சில விஷயம் பேசினான். அதுக்கு அப்புறம் தான் நான் எடுத்த முடிவுல உள்ள தவறை புரிஞ்சுகிட்டேன்..
சுயநினைவு இல்லாமல் இருக்கும்போது நாளைக்கு கல்யாணம் பண்ணி அழைத்து வந்ததுக்கு அப்புறம் இங்க வந்து சுய நினைவு வந்து ’ ஏன் எனக்கு நினைவு இல்லாத நேரம் கல்யாணம் பண்ணிகிட்டிங்க? ’ என்று கேட்டு நிலா பொண்ணு சண்டை பிடிக்க வாய்ப்பு இருக்கு..
அடுத்து அவங்க எதிர்பார்த்த பொண்ணுங்க இல்லாம நீங்க சொல்ற மாதிரி வேற மாதிரி பொண்ணுங்களை கல்யாணம் பண்ணி வச்சா ‘ எங்க அண்ணன் – களோட வாழ்க்கையை கெடுத்து. என்னோட வாழ்க்கையும் கெடுத்துட்டீங்க. ’ அப்படின்னு சண்டை பிடிக்க நிறைய வாய்ப்பு இருக்கு பத்துக்குட்டி..
இப்பவே நான் தான் இங்க இருக்கேன் என் நினைவு எல்லாமே அங்க தான் இருக்கு அவ கிட்ட..
கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்தா இனி ஒரு பிரிவு என்னால தாங்கிக்க முடியும் என்று எனக்கு தோணல..
எல்லாத்தையும் டேக் இட் ஈசியா எடுத்துக்கிற எனக்கு இப்படி ஒரு மாற்றத்தை அவ தருவாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை..
நிலா பொண்ணு நல்லா தலை வாரி இல்ல, மேக்கப் இல்ல , அழகா மாடலாவோ இல்ல நாகரீகமாவோ சுத்தமான டிரஸ் பண்ணல, நான் அவளை பார்த்த கோலமே ரொம்ப ரொம்ப வித்தியாசமானது. அப்படி இருந்தாலும் என்னை இந்த அளவுக்கு இம்ப்ரஸ் பண்ணி தன்னோட கைக்குள்ள வைப்பானு நான் எதிர்பார்க்கவே இல்லை ..
இங்க ரொம்ப ரொம்ப சம்திங் ஏதோ பண்ணுறாமா. நான் அங்க சொன்ன மாதிரி நாளைக்கு ஒரு நல்ல நர்ஸ் ஏற்பாடு பண்ணி அங்க அனுப்பனும். அவங்க கைபேசி மூலமா தான் நான் வீடியோ காலில் அவளை பார்க்கணும்..
இப்ப நல்லா என்டர்டைன்மென்ட் தான் இருக்கும் நீங்க சொல்ற விஷயம். ஆனா பிற்காலத்தில் அது ஒரு பெரிய பிரச்சினை கொண்டு வந்தால் என்னால எப்படி சமாளிக்க முடியும் தெரியல..
நான் தான் சொல்றேனே இனி அவளுக்கு எதிரா எதுவும் பண்ண மாட்டேன்..
பிசினஸ் விஷயமா இருந்தா எனக்கு எந்த கஷ்டமும், சஞ்சலமும் இல்லை. அடிச்சு தூக்கிட்டு போயிட்டே இருப்பேன்..
ஆனா என் நிலா பொண்ணு விஷயம்ன்னு வரும்போது சின்ன விஷயமா இருந்தாலும் நான் ரொம்ப கேர்ஃபுல்லா தான் டீல் பண்ணனும்.. நான் இவ்வளவு சொல்லிட்டேன்..
நீங்க கதையோட ரைட்டா இருக்கலாம் நெனச்சா சேர்த்தும் வைப்பீங்க., பிரித்தும் வைப்பீங்க ஆனா லைஃப்ல அது உங்களால் முடியாதே..
நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன். இனி நீங்க சரியான முடிவு எடுத்தீங்கன்னா ஓகே பத்து.. ” என்று அவள் தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தாய்க்கு விளக்கமாக எடுத்து கூறிவிட்டான்..
“ டேய் மகனே வாழ்க்கை என்னைக்குமே சுவாரசியமா இருக்கணும். நாளைக்கு என்ன நடக்கும்னு நமக்கு தெரிந்தால் அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு?. நாளைக்கு நாள் எப்படி இருக்குமோ? என்பதில் தான் ஆர்வம் இருக்கும். அவங்களுக்கு கண்டிஷன் படி மதுரையில் பிறந்து வளர்ந்த மதுரை கல்ச்சர் கொண்ட பொண்ணு தேவை..
நாம அந்த விஷயத்துல எந்த பொய்யும் பிரட்டும் பண்ணலையே..!
சந்திரா எனக்கு தங்கச்சி முறை தான் வேணும். அப்ப சந்திராவோட பொண்ணுங்க உனக்கு தங்கச்சி முறை அப்ப அவங்களுக்கு கட்டிக்கிற முறை தானே..!
என்ன பொண்ணுங்க இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி சிக்கனம், பொறுமை இல்ல. எதுக்கும் கோபம், அவசரம், நிதானமா எந்த ஒரு விஷயத்தை யோசித்து முடிவு எடுக்க தெரியாது.
வரவுக்கு மீறின செலவுகள்.. ரொம்ப ரிச்சா வாழணும்னு நினைக்கிற பொண்ணு மூத்தவ திவ்யா ..
இளையவ காவியா சரியான ராங்கி பிடிச்சவ.
ஒன்னு செய்யணும்னு அவ தீர்மானிச்சுட்டா அதை செஞ்சு ஆகணும் அப்புறம்தான் அடுத்த எந்த வேலையா இருந்தாலும்.
இப்ப மாப்பிள்ளை சமைச்சு சாப்பிடறது எப்பவுமே அவங்க தான் சமைச்சு சாப்பிடணும். இவளுங்க ரெண்டு பேருக்குமே சமையல் கட்டே எங்க இருக்குன்னு தெரியாது..
அவ்வளவு ஏன் அடுப்பு பத்த வைக்க தெரியுமா அப்படின்னு எனக்கு தெரியாது?..
அழகா குடும்பப்பாங்கான பொண்ணு தேவைன்னு அவங்க ஆர்டர் போடுறதுக்கு இது ஒன்னும் சந்தை இல்லை. வாழ்க்கை அவங்க வாழ்க்கை சுவாரசியமா போகட்டுமே இவங்களோட மல்லுக்கட்டுமே அப்ப ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரும் புதிரும் இருந்தால் தான் ஈசியா பிடிப்பு வரும்..
காலைல அங்கே எழும்பி குளித்து வீடு சுத்தம் பண்ணி, கோலம் போட்டு, அவங்களுக்கு காபி கொடுத்து, டிபன் பண்ணி கொடுத்து,வேலைக்கு அனுப்பி, அடுத்து மதியம் சமையல் பண்ணி கொடுத்து, இனி நைட்டுக்கு வந்து அவங்களுக்கு ஜட்டி வரை எல்லாம் கழட்டி விட்டு அவங்க குளிக்கறதுக்கு சுடுதண்ணி வெச்சு கொடுத்து அப்புறம் அவங்க சாப்பிட்டதும் எல்லாம் சுத்தம் பண்ணி அவங்களுக்கு தேவையான *** பண்ணி ஒரு வருஷத்துல அவங்களுக்கு பிள்ளை பெத்து அப்புறம் அதுங்களுக்கு எல்லாம் பண்ணுறதுக்கு பொண்ணுங்களை என்ன குத்தகைக்கு எடுத்துட்டு போறாங்களா?.. இல்ல மொத்தமா விலை பேசி வாங்கிட்டு போறாங்களா?..
வருஷம் 365 நாளும் இதே ரொட்டின் லைப்ல இருந்தா எப்படி லைஃப் இன்ட்ரஸ்டா போகும்.. இதுக்கு நடுவுல எங்க பொண்ணுங்க அவங்க விருப்பப்படி வாழுறாங்க.. இப்படியே வாழ்கை போனால் போர் அடிக்காது..
டெய்லி ஒரு சண்டை, நைட் சமாதானம் ஒரு அடி பிடி, அவளை அவன் புரிஞ்சுக்கணும். அவனை அவ புரிஞ்சிக்கணும். இப்படி எல்லாம் சுவாரசியமா இருந்தா தானே லைஃப் நல்லா ஜாலியா போகும்..
நீ வேணும்னா பாரு நான் அவங்களுக்கு நல்லது தான் செய்றேன்..
ஒரு டைம் அவங்களே இதை என்கிட்ட சொல்லுவாங்க..
விடு மகனே கவலையை விடு. பூந்து விளையாடுவோம்.. ஒரு முடிவு வரத்தானே வேணும்..
அவங்க விருப்பப்படி எல்லாம் இங்க பொண்ணு தேடி கட்டி வைக்கிறதுக்கு எனக்கு டைம் இல்ல. அதுக்கு பொறுமையும் இல்லை. என் மருமக என் வீட்டுக்கு சீக்கிரம் வரணும். என் மைண்ட் ஃபுல்லா அதுதான் ஓடுது.. உறுதியா முடிவெடுத்துட்டேன் மகனே..
நாளைக்கு சந்திராவை சந்தித்து பேசி அடுத்தடுத்த வேலையை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ? அவ்வளவு சீக்கிரம் முடிக்கணும்.. ” என்று பத்மா பேசி முடித்ததும் அவர் எழுந்து அறைக்கு சென்று விட்டார்..
ஈஸ்வர் சற்று நேரம் அந்த தோட்டத்தில் நடந்தவன் ‘ சரி வருவது வரட்டும். அவள் எனக்கானவள் அப்படி அவ்ளோ சீக்கிரம் போக விடமாட்டேன்.. அம்மா சொல்றது ஒரு வகைல நல்லது தான். பொண்ணுங்களை பத்தி அவங்க என்ன நெனச்சிட்டு இருக்காங்க மனசுல. அப்படி வேணும். இப்படி வேணும்னு அவங்க ஒரு லிஸ்ட் போடலாம்.. அவங்க சொன்னதுக்கு எதிர்மறையான பொண்ண தான் கொண்டு போய் நிப்பாட்டுறது. வாழ்ந்து பார்த்து தெரிஞ்சுக்கட்டும், புரிஞ்சிக்கட்டும். இப்படிப்பட்டவங்களுக்கு இதுதான் சரியான ஒரு பாடம்..’ என்று நினைத்து கொண்டு சிகரெட் எடுத்து புகைத்து அதை கீழே போட்டு விட்டு அவனது அறைக்குள் சென்று கைபேசியில் இருந்த அவன் அழ(ழு)கி முகத்தை பார்த்தவாரே கண்ணுறங்கினான் ஈஸ்வர்..
வாழ்க்கையில துணை கிடைக்கிறது நம்ம விருப்பப்படி கிடைச்சா வாழ்க்கை சுவாரசியமா காலத்துக்கும் போகாது..
நம்ம எதிர்பார்பிற்கு எதிரா கிடைச்சா தான் அதோட எதிர்நீச்சல் போட்டு அடி பிடி பட்டு வாழும் காலம் வரைக்கும் ஓட முடியும்..
அடுத்த நாள் காலை எழுந்ததும் ஈஸ்வர் செய்த முதல் வேலை 40 வயது மதிக்கத்தக்க நர்ஸ் பெண் ஒருவரை திருச்செந்தூருக்கு தன் அழகிக்கு பாதுகாப்பாகவும் உதவிக்கும் அனுப்பி வைத்தான்..
பத்மா தீவிரமாக வேட்டையில் இறங்கி விட்டார்..
சந்திராவிற்கு வாழ்க்கையில் இதை போல் ஓர் அழகிய பொன் நாள் இருக்கவே இருக்காது..
அவர் தன் பெண்களை எவ்வளவோ திருத்த முயற்சி செய்தும் திருந்தாமல் தந்தையின் பேச்சுக்கும் செல்லத்திற்கும் ஆடும் பெண்களை தண்ணீர் தெளித்து கை கழுவி விட்டுவிட்டார்.. இனி அவர்கள் பாடு அவர்களோடு என்று ஒதுங்கிக்கொண்டார்..
இரவு முழுவதும் அவன் அழுக்கி கனவில் வந்து ஒரே ரகளை..
அந்தக் குஷியில் ஈஸ்வர் தாமதமாகத்தான் உறங்கினான்.. அப்படி இருந்தும் அவன் வழமையாக எழும் நேரத்திற்கு எழுந்து காலை வேலைகளை முடித்துவிட்டு காலை உணவிற்காக வீட்டிற்கு வந்தான்..
சாப்பிடுவதற்கு அமர்ந்ததும் “ மகனே சந்திராக்கு கால் பண்ணி பேசிட்டேன். இன்னைக்கு சாயந்திரம் நாம அவங்க வீட்டுக்கு போகலாம்.. ” என்றார்..
“ ஐயோ அம்மா அதுகளை பாக்குறதுக்கு நான் அவங்க வீட்டுக்கு வரணுமா? எல்லாம் நீங்களே பாத்துக்கோங்க. ஆளை விடுங்க என் நிலா பொண்ணுக்கு தாலி கட்டுறதுக்கு மட்டும்தான் நான் இந்த கல்யாண திட்டத்திற்குள் வருவேன்..
தவிர வேற எதுக்கும் என்னை கூப்பிடாதீங்க எனக்கு வேலையும் அதிகமா இருக்கு. புது பிசினஸ் ஸ்டார்ட் பண்றது பத்தி பேச்சுவார்த்தை நடத்தணும்..
இந்த பிஸ்கோத்து விஷயத்துக்கெல்லாம் என்ன இழுக்காதீங்க..
உங்களுக்கு உதவிக்கு ஆள் தேவையா சீனி பைய வெட்டியா தான் சுத்துறான்.. அவனை இழுத்துட்டு போங்க. எனக்கு பி ஏ வா இருக்கான்னு பேருக்கு தான். ஆனா எல்லா வேலையும் நான் தான் பார்க்கிறேன். உங்களுக்காவது உதவியா இருக்கட்டும்..
சரி நான் இப்ப ரைஸ் மில் வரைக்கும் போயிட்டு அப்படியே மற்ற எல்லா வேலையும் பார்த்துட்டு லஞ்சுக்கு வருவேன். செய்ய வேண்டியதை பார்த்துக்கோங்க.. ” என்று கூறிவிட்டு தட்டில் கை கழுவி அதை எடுத்து சிங்கிள் வைத்துவிட்டு சென்றுவிட்டான் ஈஸ்வர்..
பத்மாவதி சந்திராவின் வீட்டுக்கு புறப்பட்டு வந்துவிட்டார்..
என்ன செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும். என விளக்கமாக சந்திராவிடம் கூறியதும் அவர் சொன்னதை கேட்ட சந்திரா மயக்கம் போடாமல் இருந்தது தான் அதிசயம்..
அவருக்கு தான் தெரியுமே ஒரு நேரம் கோயிலுக்கு செல்வதற்கு புடவை கட்டு என்றால் கூட பெண்கள் இருவரும் பண்ணும் ரகளை..
அப்படிப்பட்ட பெண்களை புடவை கட்டு பூவை, பொட்டு வை அடக்கமாக காபி கொண்டு வந்து கொடு. பெண் பார்க்க வருகிறார்கள் என்று கூறினால் சந்திராவை ஓட விட்டு அடிப்பார்கள்..
ஆனாலும் அவர்கள் தொல்லை இல்லாமல் இனியாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் இந்த ரிஸ்கை எடுத்து எப்படியாவது அவர் பெண்களுக்கு திருமணம் செய்து அனுப்பி வைக்க வேண்டும். என அவரும் முனைப்பாக இறங்கிவிட்டார்..
“ என்ன சந்திரா நாம பார்க்காததா? நான் சொல்ற மாதிரி அப்படியே உன் பொண்ணுங்க கிட்ட சொல்லு. அவங்க உடனே நீ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுவாங்க..
நாம அவங்களை பெத்தவங்க நம்ம கைக்குள்ள எப்பவுமே வச்சுக்கணும்..
ஒவ்வொருத்தரோட வீக் பாய்ண்ட் எதுன்னு தேடி பிடிச்சி அதுல அடி விக்கெட் தன்னால் விழுந்துடும்..
சரி உங்க வீட்ல பேசிட்டு நீ முடிவெடுத்துட்டு சொல்லு. நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாத..
நீ நோ சொன்னா எனக்கு வேற ஆயிரம் வழி இருக்கு..
உனக்கு இதை விட்டா சரியான வழியே இல்ல..
எல்லாத்தையும் யோசிச்சு உன் பொண்ணுங்களையும் உன் புருஷனையும் கன்வின்ஸ் பண்ணி சரியான முடிவு எடுத்துட்டு எனக்கு சொல்லு. அடுத்த கட்ட வேலையை கூடிய சீக்கிரம் நான் ஆரம்பித்து வைக்கிறேன்..
நாம ரெண்டு பேரும் சேர்ந்து உன் பொண்ணுங்களுக்கு சிறப்பான ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கப்போறோம்..
அங்க அவங்க சீரும் சிறப்புமா வாழப் போறாங்க. அதை மட்டும் மனசுல வச்சுக்கோ.. வேற எதைப்பத்தியும் யோசிச்சு குழப்பிக்காமல் தெளிவான முடிவு எடு. சரி நாங்க போயிட்டு வரோம்.. ” என்று சந்திராவை எவ்வளவு குழப்ப முடியுமோ அவ்வளவு குழப்பி சந்திராவை சரி இது நல்ல முடிவு தான் என தீர்மானிக்க வைத்துவிட்டு அவர் வந்த வேலை முடிந்தது என்று சந்தோஷத்தில் சென்றுவிட்டார் பத்மாவதி..
“ அம்மா நீங்க இருக்கீங்க பாருங்க சரியான ஜெகஜால கில்லாடி.. இனி சந்திரா ஆன்ட்டி அந்த பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்றதுக்கு உங்களை விட தீவிரமா இறங்கிடுவாங்க. கல்யாணம் பண்ணி வச்சுட்டு தான் அடுத்த கட்ட வேலை பார்ப்பாங்க..
இப்படி எல்லாரையும் குழப்பி விட்டு நீங்க ஜாலியா இருக்கிறது ஒரு தனி கலை போல தான் இருக்கு..
ஈஸ்வர் அந்த பொண்ண இவ்வளவு சின்சியரா சீரியஸா லவ் பண்ணுறான்.. எனக்கு ஏதோ பயமா இருக்குமா..
அந்த பொண்ணுக்கு சின்னதா ஒன்னுனா அவனால தாங்கிக்க முடியும்னு எனக்கு தோணல..
இப்ப கூட ஈஸ்வர் போன் எங்கேஜ் தான் இருக்கு அவன் அனுப்பின அந்த நர்ஸ் அங்க போய் சேர்ந்ததும் அவனுக்கு கைபேசியில் அழைச்சு சொன்னதும் அவளை வீடியோ கால்ல பார்க்க ஆரம்பிச்சவன் தான். இன்னமும் பார்த்துக்கிட்டு தான் இருப்பான்.. நீங்க போடுற திட்டம் யாருக்கு சாதக பாதகமாக இருக்குமோ தெரியல. ஆனா ஈஸ்வருக்கு சாதகமாக மட்டும்தான் முடியணும்.. அதனால அந்த பொண்ண பிரிக்கிறதை பத்தி நினைச்சு கூட பாக்க முடியாது அப்படித்தான் எனக்கு தோணுது.. நீங்க பார்த்து சந்தோசமா இரண்டு பேரையும் வாழ வைங்க..
பார்த்ததும் ஒருத்தர் மேல இவ்வளவு லவ் வருமா என்பதற்கு எனக்கு ஈஸ்வர்தான் பதில்.. அந்த பதிலுக்கு கேள்விக்குறி வந்துடக்கூடாது..” என்று ரெண்டு பேரும் பேசிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்..
இதோ சந்திராவும் , பத்மாவும் சேர்ந்து துரித கதியில் கூடிய சீக்கிரமே திருமணத்திற்கு நாள் பார்க்கும் வேலையில் இறங்கி விட்டார்கள்..
பெண்கள் இருவரையும் ஓரளவிற்கு பேசிப்பேசியே சம்மதிக்க வைத்து விட்டார் பத்மா..
பத்மா எடுத்திருக்கும் இந்த தீர்மானம் யாரின் வாழ்க்கைக்கு பாதிப்பாக அமையும்?..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
+1