Loading

”  அப்பா   அப்பா “என்ன வினோ “

“ரெடியாகுங்க   பட துக்கு போய்ட்டு

வரலாம் ” என்னடா  அதான் வேணும்னு

சொன்னேனே “அப்பா என் ப்ரண்ட

ஒருத்தன்  வரலை வேற யாரு ன்னு

யோசிக்கும் பொழுது உங்க நினவுதான்

வந்துச்சு  நாம் படத்துக்கு போய் எத்தன

வருஷம் ஆச்சு ப்ளீஸ்பா  ஏதாவது

காரணம் சொல்லிகிட்டு இருக்காதீங்க  “

“சரிடா “போவோம் ” முத்து “அங்கிள் “

இருவரும் ஒருசேர அழைக்க சிரிப்பு

வந்தது இருவருக்கும். “என்னய்யா,

சொல்லுங்க  தம்பு” அங்கிள்

ரெடியாகுங்க சினிமா க்கு போலாம்  “அட

சினிமா லாம் எனக்கு பிடிக்காது தம்பு

நீங்க போய்ட்டு வாங்க ” தனியா

இருப்பியே முத்து “அட நான் என்ன

சின்ன குழந்தையா  நீங்க போய்ட்டு

வாங்க ” என்ன அங்கிள்  எனக்கு

சங்கடமா இருக்கு “அட இதுல சங்கட பட

என்ன இருக்கு  தம்பு  என சற்று இழுத்து

யோசித்தவர் ஏதோ நியாபகம் வர “ஹ

எனக்கு ரொம்ப நாளா பக்கத்து ஊர்

மாரியம்மன் கோயிலுக்கு போகனும்னு

ஆச இன்னிக்கு அத 

நிறைவேத்திக்கறேன்  நீங்க போய்ட்டு

வாங்க  ” ம் சரி போய்ட்டு வாங்க அவசரம்

இல்ல டைம் ஆச்சுனா அங்கயே

தங்கிக்கங்க  காலையில வரலாம் “சரி

தம்பு ” இந்தா முத்து கை செலவுக்கு “அட

இது எதுகுங்க, இருக்கு ” வாகிகங்க

அங்கிள்  உங்களுக்கு  சொந்தம்

சொல்ல எங்கள தவிர யாரு இருக்கா

காசே இருந்தாலும் பரவாயில்ல

வாகிக்கங்க  எங்களுக்கு மட்டும் யார்

இருக்கா வாங்குங்க” என வினவ முத்து

வாங்கிக் கொண்டார். சரி தம்பு நான்

கிளம்பறேன் நீங்களும் பத்திரமா 

போய்ட்டு வாங்க “அதெல்லாம் நாங்க

பாத்துக்கறோம் நீங்க ஜாக்கிரத,

ஒழுங்கா சாப்பிடுங்க  டைம் ஆனா

தங்கிடுங்க நாங்க சமாளிசிப்போம் சரியா? “

“சரி தம்பு “என நகர்ந்து விட  “சரிப்பா 

நானும் போய் ரெடி ஆகிறேன் ” சரி பா

நானும் கிளம்பிட்டேன்  . சிறிது

நேரதிற்கெல்லாம் இருவரும்

கிளம்பிவிட்டனர் வினோ காரை ஸ்டார்ட்

செய்து காரை முன்னுக்கு நகர்த்த

ராகவன் நினைவு பின்னோக்கி

பயணித்தது. பெரியோர்கள்

நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால்

மீனா தன்னோட பழக அவளை பற்றி

தான் தெரிந்துகொள்ள என ராகவன்

மிகவும் மென கெட்டார் நேரம் கிடைக்கும்

பொழுதெல்லாம் சினிமா பார்க் பீச்சென

நேரம் செலவிட்டார். கல்யாண ஆன

அந்த சில மாதங்கள் பேசிய

வார்தைகளை விட தயகத்தில்

தத்தளித்த நிமிடங்கள் பல. இருவரும்

ஊட்டி சென்றனர்  தேன் நிலவுக்கு.

  தூங்கி கொண்டிருந்த ராகவனை

“என்னங்க எந்திரிங்க  என  அவள்

எழுப்ப  ” என்னமா “ராத்திரி 

சைட்சீயிங்ஸ்  பார்த்து  தூங்கினதே லேட்

ஆனதால் ராகவனால்  கண்விழிக்கூட

முடியவில்லை . “தூங்கறதுக்கா

வந்தோம் ஒரு நாள்  தூக்கம் குறஞ்சா

என்னங்க நா  அழகான  ஒரு இடத்த நம்ம

ரூம்ல இருந்தே காட்றேன் வாங்க.” “ப்ச்

என்ன மீனா “என்று சினுங்கலோடு

எழுந்தவர்  பெட்டை விட்டு  இறங்க சற்று

தூக்கம் கலைந்தது. “இந்த ஜன்னல் கிட்ட

இருந்து வெளியில பாருங்க என வினவ

” அவரும் பார்வையை  தவழ விட்டார் 

அழகான மலையின் உச்சியில்

மேகங்கள் நகர வெட்கம் துளைத்த

வெளிச்சம் வெளிவந்து

கொண்டிருந்தது. அந்த  வேலி கிட்ட

பாருங்க பூ ஒன்னு மலர போகுது என

யதேச்சியாக ராகவனை பார்க்க அவன்

அவளையே பார்துக்கொண்டிருந்தான். “ம்

என்னங்க பூவை பாக்கறத விட்டுட்டு

என்ன பாத்து கிட்டு இருக்கிங்க”, என

செல்ல சினுங்கலோடு ஆசையாய்

கோபம் கொள்ள அவள் தோளில் கை

போட்டு அணைத்தவாரு “உன் சிரிப்பை

விடவா அது நல்லா இருக்கு?! ” வெட்

கத்தில் அவன் மார்பில் சாய அந்த காட்சி

இன்னும் பசுமையாய் அவனுள்.

டக்கென  கார் குலுங்க  நினைவிற்கு

வந்தவராய் ,”என்னாச்சு வினோ  ?”

“ஒன்னும் இல்லபா ஸ்பீட் ப்ரேக்கர்அதோ

தியேட்டர் வந்தாச்சு,அப்பா இது

கொஞ்சம் மீடியமான தியேட்டர்தான்

எனக்காக கொஞ்சம் அட்ஜட் 

பண்ணிக்கங்க “டேய் நான் கீழ இருந்து

மேல வந்தவன்பா  எல்லா  லெவல்லும்

எனக்கு தெரியும் ராஜா” எனவும் கார்

பார்கிங்கில் நுழையவும் கரெக்டாக

இருந்தது.
      
                  ”   ஆதி உனக்கு சாப்பிட ,அம்மா

உங்களுக்கு என்ன வேனும்? என்னது

சாப்பாடா?இப்பதான்  பஜ்ஜி  மீன்லாம்

சாப்டேன். எனக்கு ஒன்னுமே

வேணாம் அம்மா உனக்கு? எனக்கும்

வேணாம். சூர்…. என ஆரம்பித்தவளை

கையால் தடுத்து “இங்க நா

கேட்டுக்கறேன் ? “சூர்யா குட்டி

உனக்கென்ன வேணும் ?,”இப்போதைக்கு

பாப்கார்ன் போதும் அப்புறம்

இன்டெர்வெல்லப்ப பாத்துக்கலாம்”, “நீ

என் இனமடா  ,வா நம்ம ரெண்டு பேரும்

போவோம்”  ம்ம் ஆதி ?..”நாங்க இங்கயே

இருக்கோம் நீங்க போய்டு  வாங்க”.

“ஆதி நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு

வரேன்”.”இருமா நான் வந்து விசாரிக்க

றேன் ” இல்லடா நீ இரு நான் போய்ட்டு

வரேன் ஒன்னும் பயம் இல்ல”சரி

பத்திரம்” சற்று நேரத்திற்க்கெல்லாம்

அங்கு சில்லென்று காசு வீசியது

அவளுக்கு மட்டுமே வீசியகாற்றின் வழி  விழி

நோக்க   அவன்  வந்துக்

கொண்டிருந்தான்  . அவனோட சில

நண்பர்களும் அவன் தந்தையும் வந்து

கொண்டிருந்தனர்.” சில்லுனு காத்து

வீசுது  இல்ல  “தலையசைக்க

முனைந்தவள்  டக்கென்று திரும்ப நித்தி

நின்று கொண்டிருந்தாள். சட்டென

கோபம் எட்டி பார்க்க சமாளித்துக்

கொண்டு  ” என்னடி உளறுற? “ப்ச்  உன்

கிட்ட போய் சொன்ன பாரு அங்க பாரு டி

ஹாண்ஸம் “, இவள் தன் பக்கம் திரும்பி

பார்த்து ” ப்ச் அம்மா….. “என

ஆரம்பித்தவளை “ப்ச்  அவங்கள  நான்

உள்ள உட்காரவச்சிட்டேன். ,இரு நான்

போய் ஒரு ஹாய் சொல்லிட்டு வர்றேன், “

என சொல்லி நகர ஆதிரைக்கு  என் ன

செய்ய எப்படி கோபம் கொள்ள  என

தோன்றாமல் விழிக்க  அவள் வேதனை

கடவுளுக்கு புரிந்ததோ என்னவோ

வினோ வேகமாய் கூட்டத்தில் கலந்து

விட்டான். “ச்சை  மிஸ்ஆயிட்டான்டி”

“அப்ஆடா” லேசாய் வாய் உளர “என்ன

என்ன சொன்ன?? ” இல்லயே அடடானு

சொல்ல வந்தேன் சரி வா உள்ள

போலாம்

படம் ஆரம்பிக்க போகுது”என அவளை

இழுத்த படி நகர உச்சு கொட்டியபடியே

பின்தொடர்தாள் அவள்.

  •  
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்