Loading

ராகவன் காபி குடித்துக்கொண்டிருக்க 

வினோ  அப்பொழுதுதான்  உடற்பயிற்சி

முடித்துவிட்டு  வந்துக்கொண்டிருந்தான்

ராகவன் உள்பக்கம் திரும்பி வாய்

திறக்கவும் முத்து வரவும் சரியாக 

இருந்தது “என்ன  முத்து நா  ஏதும்

சொல்றதுக்கு முன்னாடியே டக்குனு 

வந்து நிக்கிற  எனக்கு வேலயே

தரமாட்டேங்குற போ”என ராகவன்

பொய்யாய்  அலுக்க ” அய்யா  உங்க

தேவை என்னன்னு தெரிஞ்சு வேலை

செய்யறதவிட எனக்கு என்ன வேலை

இருக்கப் போகுது  சொல்லுங்க? “

தந்தையும் மகனும் இதழ்

விரித்தனர்.”அப்பா  உங்களுக்கு ஒரு

ஹாப்பி நியூஸ்!” என்ன வினோ?

“இன்னும் ஆறே மாசம் நா

வெளிநாட்டுக்கு போக போறேன்” அவர்

அவனை பார்த்து முறைக்க “சரி  எனக்கு 

ஹாப்பி நியூஸ்” இதுக்கு மேல பேசாமல்

இருப்பது சரியல்ல என நினைத்தவர்

“சரி எப்ப பெண் பார் கட்டும்? ” யார்க்கு ?

” “விளையாடாத  வினோ ” நான் ஏன்பா

விளையாட போறேன் ப்ளீஸ்பா நோ

ஆர்கியூமென்ட்ஸ்?  மேலும் பேச ஆரம்பிக்கும் முன்  கரெக்டா போன் மணி

அழைக்க மனதிற்குள்” அப்பாடா” என

நினைத்தபடி ஓடி விட்டான். ராகவன் 

பழைய நினைவுகளை அசைபோட

ஆரம்பித்தார் “குட் மார்னிங் அம்மா “

என்றான்  பூஜையறையில் இருந்த

மீனாவின் தோளில் தொங்கியபடி “ப்பா

வலிக்குது வினோ பதினெட்டு

வயசாகுது  இன்னும் சின்ன

குழந்தையாட்டமா” ஏன்மா பெரிய

பையனா ஆய்டா நான் உன் பையன்

இல்லையா? “என அப்பாவி யாய் முகம்

வைத்துக்கொண்டு வினவ” அறுபது

வயதானாலும் நீ என் பையன் தான்

இந்தா கற்பூரம்  ஒத்திக்க””அம்மாவும்

பையனும் என்ன மீட்டிங் போடுட்டு 

இருக்கிங்க?பாருங்கபா நான்

பெரியவனாய்டேனா அதனால அம்மா

கூட விளையாடகூடாதாம் “,ஆமா

இன்னும் பத்து வருஷம் போனா

பெண்டாடிகூட விளையாடுவியோ ? உன்

பிள்ளகூட விளையாடுவியோ? இப்ப

மட்டும் இந்த அம்மாவா ?,”கல்யாணாமா

நானா நோ சான்ஸ்  நா படிச்சு  புதுசா

பெருசா சாதிக்கனும் ” சரி தான் இப்ப

எல்லாம் அப்படிதான் சொல்விங்க”,நான்

எப்பவும் இப்படிதான் சொல்வேன்”,சரி

சரி நாம அப்புறமா பேசி முடிவு

செய்வோம் இப்ப அப்பாவும் பையனும்

வந்து  சாப்பிடுங்க”,. “இல்ல மீனா
எனக்கு

டைம் ஆச்சு நா கிளம்பனும் “,”ரெண்டே

ரெண்டு இட்லி சாப்பிடுங்க வெறும்

வயித்தோட வேலை செய்ய கூடாது,

இட்லி யும் நல்ல சூடா ரெடியா இருக்கு”,

” ப்ளீஸ் மீனா புரிஞ்சிக்க” என அவர்

சொல்ல, மீனா தன் மகனை ஓர

கண்ணில் பார்க்க அவன் சென்று 

தட்டோடு வந்தான்  . ” சொன்னா கேட்க

மாட்டியா? “ப்ச்  இப்ப எதுக்கு  டென்சன்,

எல்லாம் எடுத்துக்கிட்டிங்களா? ” ம்ம்ம்

ஆனா கார் சாவி….!?” இந்தாங்க நீங்க

பாட்டிக்கு தேடுங்க நா பாட்டுக்கு

ஊட்டிவிடறேன் என்ன கஷ்டம் இதுல?

“விடமாட்டியே என வாய் திறக்க இரண்டு

மூன்று நிமிடங்கள் தேடுதலோடும் 

சாபாட்டோடும்  நடந்தது ” ம்ம் சாப்பிட்டாச்சு,

“வினோ”, “இதோ மா”, என சாவியை தந்தை

முன் நீட்ட “இதெல்லாம் உங்க

வேலதானா? ,”பின்ன ஒரு ரெண்டு நிமிசம்

ஆகியிருக்குமா? அதுக்கு இவ்வளோ 

கெடுபிடி  இப்ப பாருங்க இரண்டு இட்லி

போன இடம் தெரிஞ்சதா ?” என்ன இரண்டு

இட்லி சாப்டேனா?”, “போதும் நீங்களே

கண்ணு வச்சது ,”வினோ முத்து அங்கிள்

கூப்பிடறார்  பாரு? “,திரும்பி அவன்

பார்க்க மீனா கண்ணத்தில்  அவர் இதழ்

பதிக்க, “இல்லையே “,என திரும்ப

நினைக்கையில் அவன் கண்ணில்  இது

பட்டு   நகர நினைக்கையில் “நில்லுடா

நல்லவனே  ,கல்யாணம் வேணானு

சொன்னியே   செஞ்சுகிட்டா  பாத்தியா

  என்ன என்ன போனஸ்னு  , “என்னங்க

இது பிள்ளகிட்ட போய்”?,அட இவனா

பிள்ளை   விட்டா   நமக்கே

பாடமெடுப்பான் என்னடா பெரிய

மனுசா?

  “போங்கப்பா ஒரு இட்லிகாக

கல்யாணம் பண்ணிப்பாங்களா எங்க

அம்மாவே  எனக்கும் ஊட்டு வாங்க 

என்னம்மா, ” ஆமாமா நினைப்பு தான்

பொழப்ப கெடுக்கும் “என்னமா இப்படி

சொல்லிடிங்க? ” சரி சரி சாயங்காலம்

வந்து உங்க ரெண்டு பேரையும்

பேசிக்கறேன் எனக்கு டைம் ஆச்சு பை

பை”அய்யா  “குரல் கேட்டு  நிழல் உலக

திற்கு வந்தவர் ” சாப்பிட வாங்க”, என

முத்து அழைக்க  “இல்ல கொஞ்ச நேரம்

போகட்டும்” சரிங்க”என்றவாறு சென்று

விட்டான்.
   
      “ஹாப்பி பர்த்டே ” சாப்பிட்டு

கொண்டிருந்தவளுக்கு புறையேரியது

“இந்தாகா தண்ணி குடி ” என சூர்யா

நீட்ட  “டிவி வால்யூம குற  சூர்யா

அதுலயே அவளுக்கு  புறை

ஏறியிருக்கும்” என லஷ்மி சொல்ல

சூர்யா குறைத்தாள்.ஒரு நிமிடம் தாயை

நினைத்து ஆச்சரித்தவள் பின்பு

சுதாகரித்து அதெல்லாம் ஒன்னும் இல்ல

சூர்யா நீ வச்சிக்க “பரவாயில்லக்கா

இருக்கட்டும்” ஆதிமா  நாளைக்கு நா

வேல பாக்குற வீட்ல ஏதோ அவுட்டிங்

போறாங்கலாம் அதனால

வரவேண்டாம்னுடாங்க கம்பெனியில

யும் ஒன்னும் பெரிசா வேல இல்ல

உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லனா

நாளைக்கே போய் பொங்கல் வச்சிட்டு

வரலாமா? “ம்ம போலாம் மா ஒன்னும்

பிரச்சனை இல்ல” சூர்யாமா உனக்கு

“-லஷ்மி.எனக்கும் ஓகேதாமா ஒரு சன்டே

கிளாஸ் அடண் செஞ்சா சரி ஆகிடும்.

அப்ப சரி நா போய் நாளைக்கு

வேண்டியதை எல்லாம் எடுத்து

வைக்கிறேன் நீங்க ரெண்டு பேரும்

சீக்கிரம் படுங்க காலையில சீக்கிரம்

கிளம்பனும்  அப்புறம் எப்படி போறோம்

ஆதிமா பஸ்சா லோக்கல் டெரியினா?

அதெல்லாம் இல்ல நா ஆட்டோ

சொல்றேன் போகலாம் ஒன்னும்

பிரச்சனை இல்ல ” அப்ப சரி “என்றவாறு

அவள் சென்றுவிட்டாள். “அப்பாடா

இடிபாடு  இல்லாம கொஞ்சம் நிம்மதியா

போலாம் தேங்ஸ்சக்கா” போடி

பெரியமனுசி போய்  போய்படு

“குட்நைட்கா  ” என்றவாறு சென்றுவிட

ஆதி கிடசனுக்குள் புகுந்தாள்.என்னமா

என்ன என்ன வாங்கனும்னு சொல்லு

ஒரு லிஸ்ட் போட்டு  போகும் பொழுது

அப்படியே வாங்கிட்டு போயிடலாம்”,

பெரிசா ஒன்னும் இல்லமா  பொங்க

வைக்க தேவாயான பொருள்லாம்

இருக்கு  பூவும் பழமும் வாங்கிக்கனும்

அவ்வளவுதான். சரிமா ஆட்டோவ  எத்தன

மணிக்கு வர சொல்லட்டும்  நித்தி

தெரிஞ்ச ஆட்டோகாரர் இருக்கிறதா

சொன்னா அதனால அவர்கிட்டயே

சொல்லி டலாம்”சரிடாமா  ஒரு ஆறு

மணிக்கெல்லாம் வர சொல்லிடு

வெய்யிலுக்கு முன்னாடி போய்ட்டு

வந்துரலாம். சரிமா அப்பா நா

சொல்லிடறேன் என்ன

எடுத்துவைக்கனும்னு சொல்லி

வச்சிடலாம்”அது ஒன்னும் பெரிய

விசயம் இல்ல நீ போய் படு பத்து

பதினஞ்சு நிமிஷ  வேல நானே

முடிச்சிடுவேன் ஒன்னும் சிரமம் இல்ல நீ

போ  போய் படு ” சரிமா  நா போய்

படுக்கறேன் குட் நைட்”என்றவாறு

சென்றுவிட்டாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்