கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-5
பரீட்சை முடிந்த கையுடன் ஶ்ரீ மார்ச் பாஸ்ட் பயிற்சிக்கு NCC மாணவர்களை அழைத்து இருந்தான். சாதாரணமாகவே அவன் பயிற்சியின் போது கடுமையாக நடந்துக் கொள்பவன் இப்பொழுது அனைவரையும் வாட்டி வதைக்கிறான். அவன் மட்டுமா கல்லூரியை சேர்ந்த பல துறைகளைச் சார்ந்த மாணவர்களும் குழுவாக மார்ச் பாஸ்ட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றோடு மூன்றாவது நாள் பயிற்சியில் இருக்கிறாள். இன்னும் இரண்டு நாட்களில் விளையாட்டு விழா நடக்க இருக்கிறது. ஒரு பக்கம் விளையாட்டு போட்டிகள் நடந்துக் கொண்டு இருக்க இன்னொரு பக்கம் தன்னார்வலர்கள் குழு விழாக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார்கள். ஆக மொத்தத்தில் கல்லூரியில் வகுப்புகள் எதுவும் நடவாமல் விழாவை எதிர்நோக்கி மாணவர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
செம்மண் நிறைந்த கிரவுண்டில் ஒரு பக்கம் ஓட்ட பந்தையம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் என பல போட்டிகள் நடந்துக் கொண்டு இருந்தது. இன்னொரு பக்கம் கூடை பந்து, இறகு பந்து போட்டிகள் நடைபெற்றது. பின் பக்கத்தில் ஒவ்வொரு குழுவும் தீவிரமாக மார்ச் பாஸ்ட் செய்துக் கொண்டு இருந்தார்கள்.
உட்சி வெயில் மண்டையை பிழக்க குழுவில் இருக்கும் இருபது பேரின் உயிரையும் வெயிலில் வதைத்துக் கொண்டு இருந்தான் ஶ்ரீ.
அந்த குழுவில் பத்து மாணவர்களும் பத்து மாணவிகளும் இருக்க, அவர்களை தலைமை தாங்கி வழி நடத்தினான். அனைவருமே பயிற்சியில் இருப்பதனால் டி ஷர்ட் அணிந்து டிராக் பண்ட் அணிந்து இருந்தார்கள். ஶ்ரீ கையில் பிரம்பு உடன் அவர்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தான். அனைவருக்கும் வெயிலின் களைப்பு வாட்டினாலும் சிறப்பாக செய்ய வேண்டுமே என்று தலையை நிமிர்த்திக் கொண்டு நின்ற இடத்தில் மார்ச் பாஸ்ட் செய்துக் கொண்டு இருந்தார்கள்.
“Squad vishram” சத்தமான குரலில் ஶ்ரீ கூறிய பின்பு தான் அனைவரும் ஒன்று போல் நிறுத்தினார்கள். நிறுத்தியதில் ஒருவன் தோள்பட்டையை தளர்வாக்கி நின்றிட அவனை முறைத்தான் ஶ்ரீ.
“நான் சொன்ன கமாண்ட் காதுல விழலை? நான் vishram சொன்னேன்.. அப்படின்னா ஸ்டண்ட் அட் ஈஸ்.. உங்களை நான் ரிலக்ஸ்ஸா நிக்க சொல்லலை… நம்பர் 18 பத்து புஷ் அப்ஸ் எடு.” அழுத்தமாய் ஶ்ரீ சொல்ல அனைவருக்கும் பயத்தில் தொண்டை வறண்டது. பதினெட்டாவது இடத்தில் இருந்தவன் தன்னை நொந்து கொண்டு குழுவை விட்டு வெளியே வந்து தண்டனையை செய்தான்.
“வருசா வருசம் NCC டீம் பரேட் பாக்க நிறைய பேரு வெயிட் பண்ணுவாங்க.. மத்த டீம் தப்பு பண்ணா அது பெருசா இருக்காது.. ஆனா நம்ம NCC டீம்.. நம்ம தப்பா பண்ணவே கூடாது. எல்லாரும் ஒரே மாதிரி ஈவன்னா பண்ணனும். சொல்ற கமெண்ட் படி தான் பண்ணனும். சின்னதா தப்பு பண்ணிங்க பனிஷ்மன்ட் தான்” அழுத்தமாய் கூற அனைவரும் மனதிலே அழுதார்கள். அனைவருமே காலையில் ஐந்து மணிக்கே பயிற்சிக்கு வந்து விட்டார்கள். எட்டரை மணிக்கு காலை உணவு உண்ண இடைவெளி விட்டான். அதன் பின் ஒன்பதரைக்கு ஆரம்பித்தான். மணி பன்னிரெண்டு தாண்டி போகிறது. நடுவில் ஒரு முறை தண்ணீருக்காக இடைவெளி விட்டான். அதுவும் ஐந்து நிமிடம் கூட அவர்களை அமர விடவில்லை. இப்பொழுது நேரம் கூட அவர்களுக்கு தெரியவில்லை. கைக்கடிகாரத்தை பார்த்தாள் திட்டுவான் என அறிந்து அவர்கள் கையில் இருந்தும் பார்க்காமல் நின்றார்கள்.
“வேடிக்கை பார்த்தது போதும் squad savdhaan” கணீர் என்ற குரலில் ஶ்ரீ கட்டளையிட அனைவரும் காலை ஒன்றாய் சேர்த்து அட்டென்சனில் நின்றார்கள்.
“Samandar, dhakkad saamne chal” சத்தமாய் கட்டளையிட அனைவரும் மார்ச் பாஸ்ட் செய்ய ஆரம்பித்தார்கள்.
“யாருக்காவது தோள்பட்டை நகந்துச்சு அடி விழும்” அதில் பயத்துடனே முன்னே நகர்ந்தார்கள்.
“தலைய நிமிர்த்தி ஒரே மாதிரி பண்ணுங்க.. நான் முன்னாடி நின்னு பாக்குறப்போ முதல்ல இருக்குறவன் கை அசையரது தான் எனக்கு தெரியணும்.” கட்டளையாக கூறியவன் முன்னே நின்று பார்த்தான். அனைவரும் சரியாக செய்தார்கள் ஆனால் இரு பெண்கள் மட்டும் கையை இடித்துக் கொண்டதை கவனித்து விட்டான் ஶ்ரீ.
“Ruk” என்றதும் காலை ஓங்கி அடித்து அப்படியே நின்றார்கள்.
“பொசிஷன் 7 அண்ட் 8 வெளிய வாங்க..” என்க இரு பெண்களுக்கும் அடி வயிற்றில் கிலி உருண்டது.
“ஒன் ஆர்ம் டிஸ்டன்ஸ்ல நிக்கணும்ன்னு தெரியாதா? காலைல இருந்து பிராக்டீஸ் பன்றீங்கள்ள.. இன்னும் தப்பு பண்றீங்க.. போங்க ரெண்டு பேரும் பத்து சிட் அப்ஸ் பண்ணுங்க” கட்டளையாக கூறியவன் மற்றவர்கள் பக்கம் திரும்பினான்.
“இருந்தாலும் கடல முத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட் பா..” கேலியாக சிரிக்காமல் கூறினான் சரண். ஆனால் அருள் வாய் சும்மா இல்லை. பக்கென்று சிரித்து விட்டான். அனைவர் கவனமும் சரண் மற்றும் அருள் பக்கம் திரும்பியது.
“சனியனே சிரிச்சி கோத்து விடுது பாரு” என அருளை முறைக்க இருவரும் ஒன்றாய் வெளியே வந்தார்கள். எப்படியும் ஶ்ரீ அவர்களுக்கு தண்டனை குடுப்பான் என்று தெரியும் அதனால் தான் அவர்களே வந்து விட்டார்கள்.
“இருவது புஷ் அப்ஸ்” அழுத்தமான குரலில் கூற மூக்கால் அழுதுக் கொண்டு எடுத்தார்கள். ஶ்ரீ மற்றவர்கள் பக்கம் திரும்பி கட்டளையை பிறப்பித்தான்.
“எழவு எடுத்த மாடே… எதுக்கு டா சிரிச்சி மாட்டி விட்ட.. பண்ணாட உன் கூட சேர்ந்த பாவத்துக்கு எங்க கொண்டு வந்து இருக்க பாத்தியா..” அருளை வசை பாடியபடியே புஷ் அப்ஸ் எடுத்தான் சரண்.
“நீ சொன்னது மொக்க காமடி தான்.. ஆனா சீனியர்க்கு கடல முத்துன்னு பேரு இருந்தா எப்படி இருக்கும்ன்னு நினைச்சி பாத்தேன் சிரிப்பு வந்துருச்சு..” என்று விளக்கம் கூறினான் அருள். அப்பொழுது இன்னொருவள் களுக்கென்று சிரிக்கும் சத்தம் கேட்க இரண்டு பேரும் படுத்திருந்த வாக்கில் திரும்பி பாத்தார்கள். ருத்ரா கையில் அட்டை பெட்டி உடன் சிரித்துக் கொண்டு இருந்தாள். சரணும் அருளும் அவளை பார்த்து அசடு வழிந்தார்கள். திரும்பி ஶ்ரீ எங்கு இருக்கிறான் என்று தேட அவனோ முன்னே மார்ச் பாஸ்ட் செய்துக் கொண்டு சற்று தள்ளி இருந்தான்.
ருத்ராவுன், ஜூலியும் தன்னார்வலர்கள் குழுவில் இருப்பதனால் தினமும் இவர்களுக்கு குடிக்க தண்ணீர், ஜுஸ், குளுக்கோஸ் என ஏதாவது குடுக்க வருவார்கள். ருத்ரா ஶ்ரீயின் வகுப்பை சேர்ந்தவள் என அறிந்த இருவருக்கும் எங்கே அவனிடம் சொல்லி விடுவாளோ என்ற தயக்கம் இருந்தது.
“உண்மையிலேயே உங்க கடலை முத்து ரொம்ப ஸ்டிரிக்ட் தான்” என சிரித்தாள் ருத்ரா. அப்பொழுது அங்கு வந்த ஜூலி, “அவன சொல்லி நிருத்துங்களேன் டா.. விட்டா போயிட்டே இருக்கான்”
“ஆமா நாங்களும் ப்ரேக் விடுவாருன்னு பாக்குறோம் ஆனா விடவே மாட்டிங்குறான்.” என கடுப்பில் கூறினான் சரண்.
தூரத்தில் ருத்ரா வந்ததை பார்த்த ஶ்ரீக்கு இதயம் வேகமாய் துடித்தது. உடனே அவளிடம் வேகமாய் ஓடி செல்ல துடித்த மனதை கட்டுப்படுத்தி குழுவை மீண்டும் அவர்கள் இருந்த இடத்திற்கே திரும்ப கட்டளையிட்டான். ருத்ரா விழிகள் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தது. அவனின் கட்டளையில் அனைவரும் ஒன்று போல் வர ரசனை உடன் பார்த்தாள். ஶ்ரீ அவள் பார்ப்பதை கண்ட உடன் அவன் சிறகில்லாமல் வானில் பறந்து. அவன் கவனம் மாற உடனே முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். அதில் சட்டென்று நடப்பதற்கு வந்தாள் ருத்ரா.
“எப்போ டா உங்களுக்கு ப்ரேக் சொல்லி இருக்கான்?” என சரணிடம் கேட்டாள் ஜூலி.
“க்கா… அந்த ஆளு இப்போதைக்கு நிப்பாட்டுற மாறி இல்ல.. நாங்க பணிஷ்மன்ட் கேப்ல குடிச்சறோம்.” என்று அருள் டப்பாவை தொட வர ருத்ரா தட்டி விட்டாள்.
“எல்லாரும் ஒன்னா வந்தா தான்.” என கூறியவள் ஶ்ரீயை பார்த்து ஜுஸ் பாட்டிலை காட்டினாள்.
“Ruk” சட்டென்று கட்டளையிட்டான் ஶ்ரீ. உடனே அனைவரும் நின்றார்கள்.
“Aram se” என ஶ்ரீ கூறியதும் தான் தாமதம் உடனே அனைவரும் சிட்டாய் ஜூலி மற்றும் ருத்ரா பக்கம் ஓடினார்கள். ஜூலியும், ருத்ராவும் அனைவருக்கும் ஜூசும், மாச்சிலும் (பிஸ்கட்) குடுத்தார்கள். அனைவரும் வாங்கி விட்டு அமர்ந்து அயர்வாக உண்ண ஶ்ரீ தனக்கு இல்லையா என்பது போல் இருவரையும் பார்த்தான். ஜூலி காலி அட்டடப்பாவை தூக்கி போட்டாள்.
“எல்லாம் சரியா போச்சு.. ட்ரில் மாஸ்டருக்கு இல்ல” என கேலி செய்தாள் ஜூலி.
“ஜூலி கடல முத்து தான் சார் புது பேரு” என நமட்டு சிரிப்புடன் ருத்ரா கூற சரணுக்கு புறை ஏறியது. ஶ்ரீக்கு முழுதாய் புரியவில்லை ஆனால் இவர்கள் தான் இதற்கு காரணம் என மனதில் கருவினான். ருத்ரா ஒரு பாட்டீல் ஜூசும் மாச்சிலும் ஶ்ரீயிடம் நீட்டினாள்.
“காலின்னு சொன்னிங்க?”
“அது ருத்ரா ஏற்கனவே உனக்கு தனியா எடுத்து வச்சி இருந்தா.” கேலியுடன் அழுத்தமாய் கூற ருத்ரா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். ஶ்ரீ கேலி நிறைந்த விழிகளுடன் ருத்ராவை பார்த்தான்.
“ஶ்ரீ வொர்க் அவுட் ஆகுது டா..” என காற்றிலே கூறினாள் ஜூலி.
“டேய் சரணு.. சீனியர்க்கு இந்த அக்கா மேல ஒரு கண்ணு போல டா.. பாரு அவங்க கிட்ட மட்டும் எப்படி இளிச்சிட்டே நிக்குறான்னு..” என மென்றுக் கொண்டே கூறினான் அருள்.
“வாய மூடி தொலை டா.. இப்போதான் வாங்கி கட்டிக்கிட்டோம்.. மூடிட்டு தின்னு” என்றவன் அருள் பிஸ்கட்டையும் பிடிங்கி தின்றான்.
ருத்ரா ஜூலி ஶ்ரீ மூவரும் அமர்ந்து பேச ஜூலி ஶ்ரீ ஜூசை பிடுங்கி குடித்தாள்.
“சும்மா கத்துறவனுக்கு ஜூசு இல்ல” என்றவள் மடமடவென குடித்தாள்.
அங்கு கார்த்திக் வகுப்பாசிரியர் உடன் மாணவர்களுக்கு வழங்கும் பரிசை பற்றி குறிப்பு எழுதிக் கொண்டு இருந்தான். பரிசு என்றால் அன்று இருந்து இன்று வரை டிஃபன் பாக்ஸ் தானே. எத்தனை பாக்ஸ் எவ்வளவு விலையில் வாங்க வேண்டும் என கூறிய ஆசிரியர் உடன் யாரையாவது அழைத்து செல்ல கூறினார். வெளியே வந்த கார்த்திக் யாரை அழைக்கலாம் என யோசித்தவனுக்கு ருத்ரா நினைவு வந்தது. உடனே அவளுக்கு அழைத்தான்.
அங்கு ஶ்ரீ ருத்ராவிடம் பிஸ்கட் பாக்கெட்டை நீட்டி இருக்க அவள் எடுக்க வரும் நேரம் அவள் ஃபோன் அடித்தது.
“சொல்லு கார்த்திக்” என அழைப்பை ஏற்றதும் ருத்ரா கூறிட ஶ்ரீ பல்லை கடித்தான்.
“கரடி வாயன் எங்க இருந்தாலும் குறுக்க வரான்” ஶ்ரீ கடுப்பில் கூறியதை சரணும் அருளும் கேட்டு விட்டார்கள்.
ஸ்ரீ ஆனாலும் நீ இவ்ளோ ஸ்ட்ரிக்டா இருக்க வேண்டா.
அடேய் கார்த்தி அவனே இப்பதான் ஸ்ரீ கிட்ட பேசி பிஸ்கட் கொடுக்கிற அளவுக்கு வந்து இருக்கான் அதுக்குள்ள நீ குறுக்க வந்துட்டியா
Hahah thanks ka😍