Loading

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல் -4 

ஶ்ரீகாந்த் பயங்கர கடுப்பில் அமர்ந்து இருந்தான். அவன் காதில் இருந்து புகை வராதது தான் குறை. அமர்ந்து இருந்த இடத்திலேயே எறிந்து கொண்டு இருந்தான். ஜூலி, ருத்ரா, கார்த்திக் மூவரும் பேசி சிரித்துக் கொண்டு இருந்தார்கள். இதில் ருத்ரா அருகில் கார்த்திக் இருந்தது தான் அவனுக்கு பயங்கர கோவத்தை கொடுத்தது. ஒன்றாய் படிக்கலாம் என்று வந்தவர்கள் இடையே கார்த்திக் சேர்ந்துக் கொள்ள அவர்கள் மூவர் மட்டுமே அந்த இடத்தில் இருப்பது போல் பேசி சிரித்துக் கொண்டு இருந்தார்கள். இதில் ஶ்ரீ அவன் அருகே இருக்கும் ராஜேஷை மறந்து விட்டான். அவன் கருமமே கண்ணாக படித்துக் கொண்டு இருந்தான். ஶ்ரீ கோவத்தில் அவன் பக்கம் திரும்பி அவனை சொரண்ட ராஜேஷ் தூசி தட்டி விடுவது போல் தட்டி விட்டு படித்துக் கொண்டு இருந்தான். அமர்ந்து இருந்த வாக்கில் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டு படித்துக் கொண்டிருந்தான். ஶ்ரீ மீண்டும் கடுப்புடன் அழைக்க அவனை கண்டுக் கொள்ளவில்லை. 

“டேய் ராஜேஷ் உன்ன தான் கூப்புட்ரேன்ல..” எரிச்சலில் அழைத்தவன் கையை தட்டி விட்டு, 

“என்ன டிஸ்டர்ப் பண்ணாத.. நான் படிச்சிட்டு இருக்கேன்..” என்று கூறி விட்டு மீண்டும் தீவிரமாய் படித்தான்.

“அடிங்.. கொப்பன் மவனே… நாளைக்கி மேத்ஸ் எக்ஸாம் டா கேன.. உக்காந்து ஜாவா படிச்சிட்டு இருக்க” ராஜேஷ் தலையில் தட்டினான்.

“என்ன??? நாளைக்கி மேத்ஸ்-ஆ.. சொல்லவே இல்ல..” வாயை பிளந்த ராஜேஷ் முகத்திலே அவன் நோட்டால் அடித்தான்.

“நீ எதுக்கு கிளாஸ்-ல இருக்கியோ..”

“டேய் அப்போ ஜூலி-ய வர சொல்றா அவ தான் சொல்லி தரணும்..” பதட்டத்தில் ராஜேஷ் கூறினான். இவர்கள் கூட்டத்தில் எந்நேரமும் ஒரு பதட்டத்தில் இருக்கும் ஒரு முந்திரி கொட்டை இவன். 

“ம்ம்.. அவளுக்கு புது ப்ரெண்ட் வந்தாச்சுல்ல நம்மளை கண்டுக்க மாட்டா..” 

“ரெண்டு தட்டு தட்டினா வந்துருவா.. இரு நான் கூப்புட்ரேன்” வீம்பாக கூறிய ராஜேஷ் ஜூலி-யை அழைத்தான். ஆனால் அவளோ தீவிரமாய் பேசிக் கொண்டு இருந்தாள். 

“இந்தாடி எரும..” என நோட்டை அவள் மீது விட்டெரிய அது ருத்ரா மேலே விழுந்தது. ஶ்ரீக்கும் ராஜேஷ்க்கும் பதட்டம் ஆனது. ருத்ரா ராஜேஷை பார்த்து என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினாள். 

“சாரி அது ஜூலிய மேத்ஸ் சொல்லி குடுக்க கூப்டேன்.” என அசடு வழிந்தான் ராஜேஷ். 

“ஜூலி அவங்க கூடவும் சேர்ந்த இதை சால்வ் பண்ணலாம்..” 

“மம்கும்… அப்போ உருப்ட்ட மாறி தான்.. இவனுங்களுக்கு இதை புரிய வைக்குறதுக்குள்ள எனக்கு வயசாகிரும்… உனக்கு தெரியும்ல நீயே சொல்லி குடு ருத்ரா..” என்று கூறி மீண்டும் கணக்கில் புதைந்தாள்.. அவளின் எண்ணமோ வேறு.. அதனை அறியாத ருத்ரா சம்மாதமாய் தலை அசைத்து ஶ்ரீ பக்கம் சென்றாள். ஶ்ரீக்கு ஜூலி தெய்வமாக தெரிந்தான்.

“குட்டி சாத்தான்.. நீ என்ன கேட்டாலும் நான் வாங்கி தரேன் டி…” என நினைத்தவன் மனதிலே குத்தாட்டம் போட்டுக் கொண்டான். இதில் கார்த்திக்கை பார்த்து மிதப்பாய் காலரை தூக்கி விட்டுக் கொண்டான். அவனோ இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. 

“ருத்ரா தேங்க்ஸ்…” என்று கூறிய ராஜேஷ் அவனுக்கும் ஸ்ரீக்கும் இடையே இடைவெளி விட ஶ்ரீ சர்ரென்று ராஜேஷ் பக்கத்தில் அமர்ந்து அவனுக்கு இடது பக்கம் ருத்ராவை அமர இடம் விட்டான்.

“டேய் அல்ப மாதிரி பண்ணாத டா.. அந்த பொண்ணுக்கு உன் நெனப்பு தெரிஞ்சி சவகாசமே வேனாம்ன்னு போனா என்ன பண்ணுவ?” ராஜேஷ் கேட்டதை அலட்டிக் கொள்ளவில்லை ஶ்ரீ. அவள் தன்னருகே அமர்ந்தாள் போதும் என்று விட்டான். ருத்ரா அமர்ந்ததும் அவனுக்கு இதயத்துடிப்பு வேகமானது. எங்கே வெளி வரை சத்தம் கேட்டு விடுமோ என்று பதட்டத்தில் இருமி தன்னை சமாதானம் செய்ய முயற்சித்தான். 

“என்ன இவன் இப்படி மாறிட்டான்.. இவன திருத்த முடியாது… இவனுங்கள நம்பி படிக்க வந்த என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்..” என்று மனதிலே புலம்பிய ராஜேஷ் ஜூலி பக்கம் திரும்பினான். அங்கு அவளோ கார்த்திக் சொல்லி குடுப்பதை தீவிரமாய் கவனித்துக் கொண்டு இருந்தாள்.

“என்ன இது புது டிராக்கா ஓடுது.. இவளுக்கு என்ன ஆச்சு?? இந்த ஸ்ரீயும் கண்டுக்காத மாறி இருக்கான்.. ஏதாவது சண்டையா? நம்ம தான் கூட்டத்துல இல்லாம போய்ட்டோமா? இந்நேரம் ஜூலி நமக்கு சொல்லி குடுக்க வந்து இருக்கணும்.. ஏன் வரல?” என களிமண் போல் யோசித்துக் கொண்டு இருந்தான். வழமையாய் ஜூலி அவர்கள் இருவரையும் தாண்டி மற்ற மாணவர்களிடம் வெகுவாய் பழகிட மாட்டாள். ஆடவர்களிடம் அவ்வளவாய் நட்பு பாராட்டிட மாட்டாள். இளங்கலையில் இருந்து மூவரும் ஒன்றாய் படிப்பதனால் தான் அவர்களிடம் இவ்வளவு பேச்சு.. மற்றபடி வகுப்பில் சில பேரிடம் மட்டும் தான் வாயாடுவாள். இப்பொழுது திடீரென்று கார்த்திக் உடன் அவள் அமர்ந்து படிப்பது அவனுக்கு யோசனையை குடுத்தது. 

குழப்பமாக ஶ்ரீ பக்கம் திரும்பினான். அவனோ ருத்ரா சொல்லி குடுக்க அதனையே கவனித்துக் கொண்டு இருந்தான். ஆனால் என்ன அவை எதுவும் அவன் மண்டையில் ஏறவே இல்லை.. எல்லாம் காற்றில் பறப்பது போல் இருந்தது. அவளின் நெருக்கத்தில் இருந்தவனுக்கு முகம் எல்லாம் பல்லாய் இருந்தது. மிகவும் சிரமப்பட்டு பாடத்தில் கவனம் செலுத்தினான். ராஜேஷ் மீண்டும் ஶ்ரீயை அழைக்க அவனோ அவனை தட்டி விட்டான். மீண்டும் மீண்டும் அழைக்க ருத்ரா அமைதியாய் ராஜேஷ்யை பார்த்தாள். அதில் ஶ்ரீக்கு தான் கடுப்பானது.

“என்ன டா பிரச்சனை… ஏன் டா எனக்குனே வரிங்க..” நொந்து போன குரலில் கேட்க ருத்ராக்கு சிரிப்பு வந்தது. ஶ்ரீயின் சட்டை காலரை இழுத்து அவன் காதில், “டேய் மச்சான் ஜூலிக்கு என்ன ஆச்சு? அவ நம்ம மேல கோவமா இருக்காலா? ஏன் நம்ம கிட்ட பேசாம கார்த்திக் கூட படிக்குறா? ஏதாவது சொன்னியா அவளை?” ருத்ராவிற்கு கேட்காமல் கேட்டான். 

“அது நேத்து அவ கூப்ட்டப்போ நான் வரலைன்னு சொல்லிட்டேன்.. அந்த கோவமோ என்னவோ.. விடு சாரி கேட்டு ஜூஸ் வாங்கி குடுத்தா சமாதானம் ஆகிருவா..” என்று லேசான வருத்தத்துடன் கூறினான் ஶ்ரீ. அவனுக்கே அவள் தன்னை ஒதுக்குகிறாலோ என்று எண்ணம் தோன்றியது. 

ஶ்ரீ கூறியது ருத்ராவின் காதில் தெளிவாய் விழுந்தது. அவளுக்கு ஏதோ நெருடலாய் தோன்ற தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். முயன்றவரை அதனை காட்டிக்காமல் இருக்க பார்த்தாள். மாலை நான்கு மணி வரை ஐவரும் ஒன்றாய் படித்தார்கள். படித்து முடித்து வட்டமாய் அமர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்தார்கள்.

“ருத்ரா நீ எந்த ஏரியா?” என்று பட்டென கார்த்திக் கேட்டான்.

“திருவள்ளூவர் நகர்”

“இவன் ஏன் டா நான் கேக்க வேண்டிய கேள்வி எல்லாத்தையும் கேட்டு இருக்கான்” என்று அடிக்குரலில் ராஜேஷ் காதை கடித்தான்.

“நீ கேக்கல அதான் அவன் கேட்கிறான்.. விடேன் டா.. இப்போ அவ ஏரியா தெரிஞ்சிடுச்சுல..” என சாதாரணமாய் கூறியவன் நொறுக்கு தீனியை தின்றுக் கொண்டு இருந்தான்.

“உன் ஏரியா தாண்டி தான் என் வீடு இருக்கு… அப்போ நம்ம ஒன்னா போலாம்” என்றாள் ஜூலி. 

“எனக்கும் கம்பனிக்கு ஆளு கிடைச்சிது..” என்று புன்னகைத்தாள் ருத்ரா. 

“எக்சாம் முடிஞ்சதும் ஸ்போர்ட்ஸ் டே வருது.. யாரெல்லாம் என்ன பண்ண போறீங்க?” என்று கேட்டான் கார்த்திக்.

“வேறென்ன.. ஜாலியா சைட் அடிச்சிட்டு சுத்த வேண்டியது தான்..” கேலியாக கூறினான் ராஜேஷ்.

“அப்போ நம்ம ஒரு ஒரு டிபார்ட்மென்ட்டா சுத்தலாம்” என்றான் கார்த்திக்.

“உனக்கு இத விட்டா வேற வேலை இல்ல.. பக்கி” என்று ராஜேஷை திட்டினாள் ஜூலி.

“ஆமா ஶ்ரீ நீ என்ன பண்ண போற?” என ஒரு வித எதிர்பார்ப்பு உடனே கேட்டாள் ருத்ரா.

“மார்ச் பாஸ்ட்ல இருக்கேன்.. NCC டீம் லீட் பண்றேன்..” என சலனம் இல்லாமல் கூறினான் ஶ்ரீ. ருத்ராவிற்கு குழப்பம் ஆனது.. இதற்காக அவன் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஆனால் ஏன் விரக்தி உடன் கூறுகிறான் என்று யோசித்தாள். வாய் வந்த வார்த்தைகளை கேட்க முடியாமல் அப்படியே விட்டாள். 

“அவன் சரியான ட்ரில் மாஸ்டர்.. இந்த தடவை அவன் டிரெய்னிங் குடுக்குறப்போ போய் பாரு அப்போ தெரியும் அவனோட உண்மையான முகம்” என கேலியாக கூறினாள் ஜூலி. அதில் அவளை முறைத்தான் ஶ்ரீ. 

“நீ லீட் பண்ண போறன்னா நீ தான் ஸ்போர்ட்ஸ் டே அன்னிக்கு பெஸ்ட் கேண்டிடெட் அவார்ட் வாங்க போறியா ?” என எதார்த்தமாக கேட்டாள் ருத்ரா. உடனே ராஜேஸ் மற்றும் ஜூலியின் சிரிப்பு மட்டுப்பட ஶ்ரீ முகம் இறுகியது. அவர்கள் அமைதியில் புரியாமல் மற்றவர்களை பார்த்தாள். 

“ஏன் என்ன ஆச்சு? தப்பா கேட்டுட்டேனா?” என தயங்கினாள். ஜூலிக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை. 

ஶ்ரீ மறுப்பாக தலை அசைத்தான்.

“இல்ல.. நான் இல்ல.. எனக்கு நேரம் ஆச்சு நான் கிளம்புறேன்..” என்று கூறியவன் ராஜேஷையும் ஜூலியையும் பார்த்து தலை அசைத்தவன் ருத்ரா பக்கம் திரும்பி வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் தலை அசைத்தது விட்டு கிளம்பினான். 

“நானும் கிளம்புறேன் பை” அவசரமாக கூறிய ராஜேஷ் ஶ்ரீ பின்னே ஓடினான். ருத்ராவிற்கு மேலும் வருத்தம் ஆனது.

“ஒன்னும் இல்ல ருத்ரா வா நம்ம போலாம்..” என்று கூறிய ஜூலி அவளை அழைக்க இருவரும் கார்த்திக்கிடம் இருந்து விடைபெற்று  கிளம்பினார்கள். அவர்கள் உடனே கார்திக்கும் செல்ல வேண்டும் என்பது போல் இருந்தது. ஆனால் அந்த எண்ணத்தை விட்டு வேறு பக்கம் சென்றான்.

ஶ்ரீ அமைதியாய் ராஜேஷ் உடன் நடந்து சென்றுக் கொண்டு இருந்தான். அவன் எண்ணத்தில் பழைய கசப்பான நிகழ்வுகள் ஓடியது. கடந்த வருடம் அவன் வாழ்க்கையே தலை கீழாய் மாற்றி விட்டது. ஒரே ஒரு பிரச்சனையினால் அவன் இன்று வரையும் வலியை அனுபவிக்கிறான். அவன் மனதில் அவன் தலையில் இருந்து குருதி வழியும் காட்சியும் எதிரில் ஒருவனின் கை உடைக்கப்பட்ட காட்சியும் ஓடியது. அன்று நடந்த கலவரம் தான் அவன் கனவு மொத்தத்தையும் தரைமட்டம் ஆக்கியது. அவன் எதிரில் நின்றவனின் முகம் அவனுக்கு தெளிவாய் நினைவில் இருக்க கோவத்தில் பல்லை கடித்தான் ஶ்ரீ. அவன் ஒருவனால் தான் இன்று அவனின் ஆசை எல்லாம் நிராசையாய் இருக்கிறது. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. அவன் யாரு 🤔🤔🤔 அப்படி என்ன பிராப்ளம் இவனுக்கு 🤔super darlu ❤️❤️

    2. யாரு கை உடைந்தது யார் அவன் அப்படி என்ன பிராப்ளம்??