2001 முதல் முதலில் அலைபேசியில் ஒரு குரல் ஹலோ யார் பேசுறது நான்தான் பாலாஜி பேசுறேன்♠ஆரம்பித்தது உன்னை காண வேண்டும் என்ற தேடல்💕
அதன் பின்பு ஓர் இரு சந்திப்புகள் ஆனால் அத்தை மகனாகவே தெரிந்தாய் அதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை உணரவில்லை💕
சில மாதங்கள் கழித்து பள்ளி விடுமுறை நாட்கள் ஆரம்பித்தது எப்பொழுதும் இல்லாமல் இந்த வருடம் அத்தை வீட்டுக்கு போகலாம் என்று அழைத்துச் சென்றார்கள் அப்பொழுதும் அத்தை மகனாகவே தெரிந்தாய் அதை தவிர வேறு எதுவும் உணரவில்லை தோன்றவில்லை💕
ஊருக்கு பயணிக்கும் அந்த நாள் வந்தது பேருந்தில் மிகவும் மகிழ்ச்சியாக புறப்பட்டு என் தம்பியிடம் அடித்து பிடித்து ஜன்னல் ஓரத்தில் சீட்டை வாங்கிக்கொண்டு இளையராஜாவின் பாடல்களை கேட்டுக் கொண்டு சென்றோம்💕
ஜன்னலோர அந்த கதவை பார்த்துக் கொண்டே இறங்கினேன் தூரத்தில் ஒரு மெரூன் நிற சட்டை வேகமாக என்னை நோக்கி வந்ததும் ஜன்னலோர காற்றின் வேகத்தை விட அதிகமான ஒரு காற்று என் மீது வீசத் தொடங்கியது கொஞ்சம் முழுங்கியும் கைகள் வேர்த்தும் நல்லா இருக்கீங்களா என்று தொடங்கினோம்.அதுவரை அத்தை மகனாக தெரிந்தவன் என் மனதிற்குப் பிடித்தவனாக மாறினான்.ஒரு வருட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் சந்திப்பு அதன் பிறகு இடைவேளை இல்லாமல் என் மனதிற்குள் வர தொடங்கினாய்💕
முதல் முதலில் நீ வேலை பார்க்கும் அழகை பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன் சிகை அலங்காரம் பண்ணி கொள்ள வந்த வாடிக்கையாளரை அலங்காரம் பண்ணும் உன்னை நான் மிகவும் ரசித்தேன் நீ என்னை கண்ணாடியில் பார்த்து கொண்டு இருந்ததையும் நான் கவனித்தேன் அதுவரை குழந்தையாக நினைத்த என்னை குமரியாக உணர்ந்தேன்💕அன்று முதல் தொடங்கியது உன்னை காண வேண்டும் எப்பொழுதும் என்ற என் தேடல்💕
அது காதலா உன் மீது உள்ள பாசமா இல்ல அத்தை மகன் என்ற உரிமையா என்னவென்று புரியவில்லை ஆனால் ஏதோ ஒரு உணர்வு என்னுள் தோன்றுகிறது…
தினமும் காலையில் எழுந்து கடைக்கு போகும் போது என்னிடம் ஏதோ சொல்ல வருகிறாய் என்று நானும் அறிவேன் ஆனால் நீ சொல்லாமலே சென்று விடுவாய், நானும் தினமும் காலையில் எழுந்திருப்பதும் உன்னை பார்ப்பதுமாக இருந்தது கடைசியில் ஒரு நாள் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்துக் கொடுத்த அதுதான் நம் காதலுக்கு முதல் பத்திரம் (காதல் கடிதம்)
முதல் முதலில் என்னிடம் நீ எழுதி கொடுத்த காதல் கடிதம் என் கண்களையும் புருவத்தையும் தத்துரூபமாக வரைந்து என் கால் கொலுசுகளை பற்றி அவ்வளவு அற்புதமாக எழுதியிருந்தாய்💕 கொடுத்த கடிதத்தை திரும்ப கேட்டோம்னா கொடுக்க மாட்டீங்க ஏன்னா ரகசியம் உங்களுக்கு ரொம்ப பிடிச்சது💕அந்த கடிதத்தை உனக்குள்ளே மறைத்துக் கொண்டாய் ஆனால் எழுதிய வார்த்தைகள் எனக்குள் புதைந்து விட்டது இப்பொழுது அதை நினைத்தாலும் நீ எழுதிய அந்த கையெழுத்து எனக்கு மனசுல கல்வெட்டு போல் புதைந்திருக்கிறது. சரி கேட்டதுக்காக இன்னொருவாட்டி எழுதி கொடுக்கிறேன் அப்படின்னு திரும்பவும் நீ எழுதி கொடுத்த கடிதம் இன்னும் வந்து ஞாபகம் இருக்குது.
அன்று நான் முழுமையாக உணர்ந்தேன் நீங்கள் மட்டும் தான் என் கணவனாக இருக்க வேண்டும் என்று💗
கொஞ்சம் இரவு
கொஞ்சம் காற்று
கொஞ்சம் மழை
கொஞ்சம் பயணம்
நிறைய காதல்
..தொலைபேசி இல்லாத காலம் உன்கிட்ட பேசணும் உங்களோட குரலை கேட்கணும் பல நாள் தூக்கம் இல்லாமல் யோசிச்சுட்டே இருந்திருக்கேன் அப்போதுதான் வீட்ல லேண்ட்லைன் வந்துச்சு வாரத்துல ஒரு நாள் ஹலோ எப்படி இருக்கீங்க அவ்வளவுதான் அது போதும் இரண்டு வாரத்துக்கு இருக்கும் அப்போ போக போக பேசுறது தினமும் பேசுவதாக மாறிப்போச்சு♥
கனா இருந்தாலும் விரல் தொடாமல்
விலகி இருப்பதில்
வினோத சுகம்
உன் மீது உள்ள அன்பு இன்னும் அதிகரிக்கிறது
தொலைதூர காதலின் வலி
நேசிக்கும் ஒருவரை
நினைத்த நேரம்
பார்க்க முடியாமல்
பேச முடியாமல் போவது தான்
அப்படியாக நாட்கள் ஓட ஆரம்பித்தது மூன்று வருடங்கள் கழித்து தங்கையின் திருமணத்திற்காக இந்தியாவுக்கு வந்தாய் ஆனால் என்னால் உன்னை ஒரு மாதமாகியும் பார்க்க முடியவில்லை பிறகு உன்னை பார்க்க நேர்ந்தது அதுவும் ஒரு அண்ணனுடைய இறப்பில் தான் உன்னை பார்த்த அந்த நொடியில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வயிற்றுக்குள் ஓடுவது போல் ஒரு இனம் புரியாத சந்தோஷமும் அழுகையும் கலந்து இருந்தது அன்று இரவு சிறிது நேரம் கிடைத்தது உன்னிடம் பேசுவதற்கு ஒரு மணி நேரம் ஆகியும் இரண்டு பேரும் மௌனமாகவே இருந்தது தொலைபேசியில் மணி கணக்கில் பேசிய நமக்கு நேரில் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை உன் பார்வை மட்டுமே போதுமாக இருந்தது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே தான் இருந்தோம் இப்படியாக அன்று இரவு 3 வருடங்களில் காத்திருந்ததற்கு கிடைத்த பரிசு நீ கொடுத்த முத்தம் அதன் அதன் நினைவை சுமந்து கொண்டு மீண்டும் ஒரு நான்கு வருடங்கள் உன் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்தேன்♥
நினைத்துக் கொண்டு தொலைவில் இருப்பதும் காதல் தான்
பிரியவும் முடியாது
ஆனால் ஒன்றாகவே பயணிப்பது
தண்டவாளங்கள் மட்டுமல்ல
காதலும் தான்
வாழ்க்கைக்கு
அர்த்தம் தந்தவன்♥
அன்பென்ற வார்த்தைக்கு
இலக்கணமானவன்♥
செல்லமாய் கொஞ்சுபவன்♥
தவறுகளை கண்டிப்பவன்♥
உறவாய் வந்து உயிராகி
எனக்காய் வாழ்பவன்♥