Loading

என் உயிர் – 14 🧬

செழியன்  இவ்விரு நாட்களிலும் அந்த ரிசர்ச்சிற்கான  வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு மாதத்திற்குள் அதற்கான தியரியை தயார் செய்வதற்கும் ஆறு மாதத்திற்குள் ரிசர்ச்சை முடிப்பதற்கான வேலையைத் தொடங்கினார்.

வழக்கம் போல் ஆதவ் தனது தந்தையிடம் அவரின் வேலைகளைப் பற்றி விசாரிப்பதற்காக அவரின் தனித்துவமான அறைக்கு உள்ளே சென்றான். அவனுக்கே ஆச்சர்யம் வந்து அரை மணி நேரம் ஆகியும் அவரது அலைபேசி அறையிலிருந்து வெளியில் வரவே இல்லை.

ஏனென்றால், அவர் நன்முறைக்கு வந்தவுடன் அவர் உருவாக்கிய பிரத்யேகமான அறை தான் இவ்வராய்ச்சி அறை. இந்த அறையில் 600 சதுரடியில் அவரின் ஆராய்ச்சி குடுவைகள் வகையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

பின்பு, கணினி சம்மந்தப்பட்ட பொருட்கள் , குறிப்பேடுகள் அனைத்தும் 300 சதுரடியில் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும். அங்கு சுமார் 25 கணிணிக்கு மேல்  இருக்கும். ஒவ்வொரு கணிணியும் ஒவ்வொரு பயனிற்காக உள்ளது. பின்பு, லைப்ரேரி என்று  தனி அறையாக 400 சதுரடியில் உருவாக்கி இருந்தார்.

இதில் 100 சதுரடியில் அலைபேசி அறை என்று தனியாக ஒதுக்கி வைத்திருப்பார். அதனை ஒட்டி வெளி நபருக்கு அனுமதி இல்லை என்று அச்சிடப்பட்ட தனிப்பட்ட அறை ஒன்று இருக்கும். அதற்குள் ஆதவ்விற்கு செல்லக் கூட அனுமதி இல்லை. அது தான் மனிதர்களை வைத்து ஆராய்ச்சி செய்வதற்கான இடம்.

இவ்வறைக்கு வந்தால் வேறு எதிலும் கவனம் செல்லக் கூடாது என்பதற்காகவே அங்கு பிரத்யேகமாக உபயோகப்படுத்தும் அலைபேசி ஒன்றை வைத்திருப்பார். அதில் முன்பே தன்னிடம் ஆராய்ச்சி சம்பந்தபட்டவர்கள்  மட்டுமே பேசுவதற்கும், அவர்களது அழைப்பு மட்டுமே தனக்கு வருமாறு ஒரு சாஃப்டுவேரும் தயார் செய்துள்ளார். அன்றைய பொழுதில் யார் யார் பேச வேண்டும் என்று முன்பே அலைபேசி அறையில் பதிவு செய்து விட்டு, அலைபேசியையும் அவ்வறையில் வைத்து விடுவர்.

இந்த அறைக்குள் வந்தால், அவர் அதிகபட்சமாக அலைபேசி அறையை ஐந்து நிமிடத்திற்கு மேல் உபயோகப்படுத்த மாட்டார்.

இன்றோ அவர் அரை மணி நேரமாக பேசிக் கொண்டிருப்பது வித்தியாசமாக இருந்தது. ஒருவழியாக முக்கால் மணி நேரம் கழித்து வெளியில் வந்தவர் தலையில் கையை வைத்துக் கொண்டு சில தாள்களை வைத்து கொண்டு போராடிக் கொண்டிருந்தார். அங்கு ஆதவ் நிற்பது கூட தெரியாமல் அவர் உலகில் லயித்துக் கொண்டிருந்தார்.

ஆதவ் தான் ஒரு சில நிமிடங்கள் காத்துக் கொண்டிருந்து விட்டு  , பின்பு அவரின் தோளில் கை வைத்து “என்னாச்சுப் பா? ” என பொறுமையாகக் கேட்டான்.

அதன் பின்பே ஆதவ் நிற்பது தெரிந்து ,  கையில் வைத்திருந்த தாள்களை கீழே வைத்து விட்டு, அவரது லாப்டாப்பையும் மூடி விட்டு, அவனின் புறம் நன்கு திரும்பி அமர்ந்தார்.

பின், முகத்தை தேய்த்து விட்டு, தொண்டையை செருமி ” அது ஒண்ணுமில்லை. ஒரு ரிசர்ச் போய்க்கிட்டு இருக்குல . அதுக்கான தியரில தான் சில குளறுபடி . அதான் “

“ஆமா , நானே கேட்கனும்னு நினைச்சேன் . நீங்க தியரி எப்பவும் ஒன் வீக்ல (ஒரு வாரம்) முடிச்சிருவீங்க. இப்ப ஏன் இந்த தியரிக்கு மட்டும் ஒன் மன்த் ? “

“ஏன்னா இந்த தியரி  என்னோட கண்டுபிடிப்பு இல்லை. ஒரு ஸ்கூஸ் ஸ்டுண்ட் உடையது. அவங்களோடதுனு சொல்லுறத விட , அவங்க கேட்ட கேள்வி இது? கண்டுபிடிப்பு இல்லை”

“சரிப்பா ….. அதான் கேள்வி என்னனு தெரிஞ்சிருச்சு இல்லையா அது மூலமா நீங்க பாக்க வேண்டியது தானா? “

“ஆதவ் …. நீ கோபப்பட்டாலும் இதுதான் உண்மை. அதுனால தான் நீ இந்த நிலைமைல இருக்க ! “

ஆதவ் எந்தவொரு எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக அவரையே வெறிக்க,  பின்பு செழியனே யோசித்து “ஆதவ் சாரி…. எனக்கு டென்சன் அதான்…. “என கூறிவிட்டு  , லாப்டப்பை திறந்து அதில் சில விஷயங்களையும், சில தாள்களையும் காண்பித்தார். அதில் உள்ள ஒரு சில ஃபார்முலாக்கள் குளறுபடியாக இருப்பது ஆதவ்விற்கே புரிந்தது. அதனால், ஒன்றும் கூறாமல் செழியனை கவனித்துக் கொண்டே அனைத்து தாள்களையும் கவனமாக படித்துக் கொண்டான் .

பின்பு, தனது அலைபேசியில் உள்ள சில புகைப்படங்களை காண்பித்தார். அதில் சிறு சிறு தாள்களில் க்ரோமோசோமில் ஜெனிடிகல் ரி- பிலேஸ்மெண்ட் , கிரேயிடிங் இது போன்ற டெக்னாலஜிகல் மூலம் கரு வளரும் முன் அதனது மரபணு தன்மையை மாற்றலாம் என்று போடப்பட்டிருந்தது.

அதனையும் படித்து விட்டு, “இந்த டெக்னாலஜிஸ் மூலம் செய்யலாம் தான போட்டிருக்கு . ஆனால், உறுதியா இல்லையேப்பா “

“கரெக்ட் ஆதவ் !! இந்த டெக்னாலஜிஸ் மூலம் பண்ணாலாம்னு தியரி கூட தெளிவா இல்லை. அதனால், நம்ம கண்டுபிடிக்கலாம் அப்புடினு நினைச்சு தான் இறங்குனேன். அதன்படி நான் ஒரு டெக்னிக் உபயோகப்படுத்தி அரசாங்கத்துக்கு அனுப்சேன். ஆனா, அவங்க இதவிட சிம்பிளா அந்த கிராமத்து ஸ்டுடண்ட் சொல்லி இருக்காங்க. சோ, நாங்க அவங்களுக்கு படிக்கிறதுக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்து இதை பாத்துக்கிறோம் னு சொல்லிட்டாங்க “

“சரி டாடி விடுங்க பாத்துக்கலாம் “

“நோ ஆதவ் ! இது ஒரு பெரிய வாய்ப்பு. அரசாங்கம் எனக்கு ஒரு பெரிய தொகை கொடுக்கிறதோடு ஒரு பெரிய பதவியும் கிடைக்கும். அதோட , நான் ஒரு பிரஸ் மீட் வச்சு நான் கண்டுபிடிக்க போறேனு சொல்லிட்டேன். என் மதிப்பு, புகழ், திறமை எல்லாம் போய்டும். அதுக்கு முன்னாடி நான் காப்பத்தனும் “

ஆதவ் தனது தகப்பனுக்கு ஆறுதல் கூறி விட்டு , வெளியில் வந்து சிலருக்கு தகவல் கூறி அந்த ஸ்டுடண்ட்டின் ஃபார்முலாவை வாங்குவதற்கான வேலையைச் செய்ய தொடங்கி இருந்தான்.

வெளியில் எதார்த்தமாக வந்த செழியனுக்கு ஆதவ்வின் செயல் திருப்தியை தந்தது. அதனை உடனே பகிரும்படி அவனின் தோள் தட்டினார். திரும்பி பார்த்த செழியன் புன்னகை சிந்தி , “அப்பா எனக்கு ஒரு ரெண்டு நாள் கொடுங்க. ஒன்னு அந்த ஸ்டுடண்ட் தியரி எடுக்கிறதுக்கு. இன்னொன்னு நம்மளோடைய தியரி கண்டுபிடிக்கிறதுக்கும் “

செழியன் புரியாமல் பார்க்க, “இல்லப்பா அந்த ஸ்டுடண்ட் தியரியை அப்படியே எப்படியும் எக்ஸிகியூட் பண்ண (செயல்படுத்த) மாட்டீங்க. சோ, அந்த மாற்றத்தை பண்ணாம, உங்களுடையை தியரில மாற்றம் பண்ணி நம்ம தனித்துவமா பண்ணலாம்னு சொல்லுறேன் அப்பா “

முதன் முறையாக ஆதவ்வின் முதிர்ச்சியான வார்த்தை மனதை குளிர வைத்தது அவருக்கு . அதனால் , ஒன்றும் கூறாமல் அவ்வறையின் சாவியை கையில் கொடுத்தார். ஆதவ் எதிர்ப்பார்த்ததோ  தியரின் குறிப்புகள் மட்டுமே. இவ்வாறு நடந்தது அவனுக்கே ஆச்சர்யம் தான் .

இருந்தும் ஒன்றும் கூறாமல் உள்ளே சென்று குறிப்புகளை மட்டும் எடுத்து விட்டு சாவியை அவரின் கையில் கொடுத்து விட்டு, செழியன் கூற வருவதைக் கூட கேட்காமல் அவனின் அறைக்கு சென்று விட்டான்.

❤️❤️❤️❤️❤️

சஞ்சய் அனைவருக்கும் உணவு வாங்கி வந்தவன், கவிக்கும் நிலவனுக்கும் கண்மணியின் உதவியுடன் நிலவனிடம் கொடுத்து விட்டான்.

வனஜாவிற்கு கண்மணியும், திருமலைக்கு தீரனும் அவர்தம் உணவுடன் எடுத்துக் கொண்டு அவரவர் அறைக்கு சென்று விட்டனர்.

சஞ்சய் ஒரு தட்டில் இரு சப்பாத்தியை வைத்து, மாடிக்கு சென்றான். அங்கு ஒரு ஓரத்தில் கீழே அமர்ந்து பெஞ்சில் சாய்ந்து வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் அருகில் தட்டை வைத்து விட்டு, தள்ளி அமர்ந்து கொண்டான். அவன் வருகை தெரிந்தாலும் செல்வியினாலும் மாலில் நடந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. அதனை யாரிடம் வெளிக்காட்டுவது என்று தெரியாததால் அமைதியாக மாடிக்கு வந்து விட்டாள். அதனால் அவனிடம் பேசவும் தோன்றவில்லை. அதோடு அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் இருப்பதாலும் பேசாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு பிடிக்கும் என்பதற்காக சிக்கன் கிரேவி அவளுக்கு மட்டும் வாங்கி வந்தான். கண்மணி முன்பே கவனித்ததால் கண்டும் காணாமல் தனது தமையனிடமும் கண் காட்டி விட்டு அவரவர் அறைக்கு சென்று விட்டனர்.

இவனும் அவளுக்கான உணவு பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு மேலே வந்துவிட்டான். இவள் பேசுவாள் பேசுவாள் என்று காத்துக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் கிரேவியை திறந்து வைத்தான். அதில் வரும் வாசத்திலாவது வாயைத் திறப்பாள் என்கின்ற எண்ணத்தில்.

அதே போல் அவளும் திரும்பி தட்டை பார்த்து விட்டு வாயை ஆவென திறந்து காட்ட , அவனுக்கே ஆச்சர்யம். நாம் ஏதாவது பேசி காரியத்தை கெடுக்க வேண்டாம் என நினைத்து இவனும் படக்கென்று தட்டை எடுத்து அவளின் வாயில் பிட்டு வைத்தான்.

இரு வாய் அமைதியாக வாங்கியவள் , “நீ தான அந்த பாடிகார்ட்ஸை மெசேஜ் பண்ணி வர சொன்ன? “

அவனின் முகத்தில் அரை நொடிக்கும் கீழ் ஒரு சலனம் ஏற்பட்டது. ஆனால், அதைக் காட்டிக் கொள்ளாமல், சட்டென்று

“நாளைக்கு என்ன நாள் தெரியுமா? ” என அவன் ஒரு கேள்வி எழுப்ப, அவளுக்கு கோபம் தாளவில்லை.

ஆனால், அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் “நாளைக்கு எக்ஸாம் ரிசல்ட் ” என அவன் கூறிய நொடி , செல்வியின் முகம் பீதியானது. வேகமாக அருகில் இருந்த தனது அலைபேசியை எடுத்து முதல் வேலையாக கவி மற்றும் செல்வியின் மதிப்பெண் பார்த்துக் கூறுவதற்கு தனது தோழிக்கு அடித்து பதட்டத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.

சஞ்சய் அவளது அலைபேசியை வாங்கி அணைத்து விட்டு, “நாமளே இங்க பாக்கலாம் ” எனக் கூறியவுடன் ,

” நீ பாஸ் பண்ணும்னா நான் பாஸ் பண்ணணும் இல்லை “

சஞ்சய் ஒரு நிமிடம் புரியாமல் முழித்து விட்டு , சட்டென்று அவளை கட்டியணைத்து கொண்டான். அவளின் கண்ணீர் அவனின் தோளை நனைப்பதற்கு முன் அவனின் கண்ணீர் அவளின் தோளை நனைத்தது.

❤️❤️❤️❤️❤️

பிப்ரவரி 24, 2029

என கேலண்டரில் இருந்த தாளை பார்த்து கிழிக்கவும் மனம் இல்லாமல் கிழிக்காமல் இருக்கவும் மனம் இல்லாமல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் கவி.

அவனின் நினைப்பு வந்து வந்து போக, கண்கள் தானாக கலங்கியது. அவனை மறக்கும் மருந்தாக பின்னிருந்து ” அம்மா ……. ” என சிறு மொட்டு அழைத்துக் கொண்டே ஓடி வந்தது . 

அதனில் தன் நிலை அறிந்து அயானாவை தூக்கி கொஞ்சினாள்.

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்