ஹாய் Buddies, நான் தான் கீர்த்தி ! முசுடு பயலும் பாச முயலும் ரைட்டர் ! இப்போ ஒரு புது கதையோட வந்து இருக்கேன் ! படிச்சுட்டி கமெண்ட் செய்யுங்கோ !
என் உயிர் – 1 🧬
அத்திரி பத்திரி கத்திரிக்கா…
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா…
என் படிப்ப…
ஓஹோ ஓஹோ…
நான் தொலைச்சேன்…
ஓஹோ ஓஹோ…
என் மனச…
ஓஹோ ஓஹோ…
நான் தொலைச்சேன்…
ஓஹோ ஓஹோ…
கணக்கு புக்க தொறந்தா…
உன் காதல் முகம் தோணும்…
காம்பஸ் போலதானே…
என் கண்ணு உன்ன சுத்தும்…
என் மாமா மகன் நீங்க….
என் அத்தான் முறை தாங்க …..
ஹே டும் டும் பீப்பீ……
டும் டும் பீப்பீ……
எப்போ………
என்று தனது பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வின் கடைசி பரிட்சை முடிந்த மகிழ்வோடு இன்னும் ஓரிரு மாதங்களில் தனது மாமன் மகனுடன் நடக்க இருக்கும் திருமணத்தையும் நினைத்து உள்ளம் மகிழ்ந்து பாடிக் கொண்டிருந்தாள் நமது நாயகி கவிதாயினி.
விழுப்புரம் சாலமேட்டு கிராமத்தில் வளர்ந்தவள் தான் கவிதாயினி . சிறு வயது முதல் விழுப்புரம் தாண்டாதவள். அவள் உலகின் வட்டத்தில் சிறு கூட்டம் தான் உள்ளது. அவர்களைத் தவிர்த்து எவரிடமும் பழக முற்படாதவள் என்பதை விட பழக அஞ்சுவாள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்தவள் இவள்.
இவளின் அப்பா நடுத்தர வர்க்கத்திற்கும் , உயர்தர வர்க்கத்திற்கும் நடுவில் இருப்பவர். தனது சுய சம்பாயத்தில் சாலமேட்டில் எம்டன் மகன் நாசர் போல் ஒரு மளிகை கடையை உருவாக்கியுள்ளார். அவரின் பெயரும் அவரைப் போலவே திருமலை தான்.
நாசர் போல் உயர்ந்தாலும் அவரின் குணம் முற்றிலும் வேறுபட்டது. அவர் பால் மணம் மாறாத சிறு குழந்தையின் குணத்தைக் கொண்டவர். அன்பால் அனைத்தையும் பெற முடியும் என்று நம்புவர். ஆனால், அவர் வெகுளி இல்லை.
அன்புக்கு அடங்கவில்லை எனில் அதிரடிக்கு செல்பவர். சிறு வயதில் கம்பு சண்டையில் அவ்வூரில் பேர் போனவர். காலங்களும் , பொறுப்புகளும் அவரை மாற்றியுள்ளது. அதோடு அவரின் மனைவி
கண்மணியும் கூட அவரின் மாற்றத்திற்கு காரணம்.
விடலைப் பருவத்தின் வேகம், வயது ஏற ஏற விவேகமாக மாறியது. அங்குள்ள மனிதர்களிடம் இவர் அடக்கம், அன்பு, உண்மை அதை விட நேர்மையானவர் என்ற பெயர் வாங்கியுள்ளார்.
கண்மணி ஒன்றுவிட்ட அத்தை மகள் திருமலைக்கு . அவரும் அன்பானவர் அது போல் பொறுப்பானவரும் கூட . வீட்டிற்கும், கணவனின் உழைப்பிற்கும் சேர்ந்து உழைப்பவர். ஆம், கல்யாண ஆன காலத்தில் இருந்து இப்பொழுது வரை கணவனின் உதவிக்கு வீட்டு வேலை முடிந்து ஓடி விடுவார்.
இல்லதரசிக்கே உண்டான புரளி பேசுவது, நாடகம் பார்ப்பது , ஏன் தொலைக்காட்சியைக் கண்டு புதிது புதிதாக சமைக்கக் கூட மாட்டார். வீட்டு வேலை, கடை வேலை இதிலேயே இவருக்கு பதினெட்டு வருடமும் சென்று விட்டது.
இவரின் சமையலை என்றும் திருமலை குறையும் சொல்ல மாட்டார். அதே போல் நிறையும் சொல்ல மாட்டார். ஆனால், அதற்கு எதிர்மாறாக இவரின் மாமியார் வனஜா கடித்துக் குதறுவார்.
திருமலைக்கு பதின் பருவத்தில் இருந்து அன்னை மட்டுமே. அவரின் உழைப்பில் இருந்து மட்டுமே, ஒரு சில கால படிப்பு , கல்யாணம், இக்கடை அனைத்தும். அதனால் , அன்னை மேல் தனிப்பிரியம்.
கணவன் இழந்து தனியாக நின்றதாலா இல்லை இயல்பா என்று தெரியவில்லை அனைவரிடமும் மனம் புண்படும்படியும் அதிகாரமாக பேசுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனை வந்த அன்றிலிருந்து பொறுமையாக கையாண்டார் கண்மணி. கணவனுக்கு உள்ள குணத்தையும் கூட மாற்றினார். ஆனால், எதிர்பாராத விதமாக கடவுள் கொடுத்த விதியே கவிதாயினி . துடுக்குத்தனமாக வளர்ப்பவள் அவள் பாட்டியின் செல்லப்பிள்ளை. ஏனென்றால், அவள் வனஜாவின் நகல்.
அதனால் கண்மணியின் சமையலினை குறை சொல்வது இவ்விருவர் மட்டுமே .
🛕 வராஹி அம்மன் கோவில்
விழுப்புரம் அடுத்த சாலாமேட்டில் உலகிலேயே வராஹி அம்மனுக்காக முதன் முதலில் அமைக்கப்பட்ட கோவில் அஷ்டவராகி கோவிலாகும்.வராஹி தான் இந்த பூமாதேவி என்பதால், வராஹி அம்மனை வழிபட்டாலே பிறவி பிணி அகலும்.
வராஹி தாய் ராஜ ராஜேஸ்வரியின் குதிரை படைதலைவியாகவும், திருப்பதி அலர்மேல் மங்கா என்று அழைக்கப்படும் பத்மாவதி தாயின் அந்தப்புற காவல் தெய்வமாய் இருப்பவளே வராஹி என புராணத்தில் கூறப்படுகிறது.அ
அருள் ஆற்றலையும், அஷ்டமாதி சித்தியையும் தரும் மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி ஆக இந்த எட்டு வராகி தேவிகளுக்கு கட்டப்பட்டுள்ள கோவில் ஸ்ரீ அஷ்டவராகி கோவிலாகும்.
விழுப்புரம் அடுத்த சாலாமேடு செல்லும் வழியில் அமைந்துள்ள இக் கோவிலில் வராகி சிலை அத்தி மரத்தால் 8 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ளது.இது வராகி அம்மனுக்காக கட்டப்பட்ட முதல் கோவில்.
இக்கோவிலில் என்ன வேண்டினாலும் அது நடக்கும் என்பது விழுப்புரத்தை சுற்றியுள்ள கிராமத்தின் நம்பிக்கை ஆகும்.
அதனால் தான் , பரிட்சைக்கு கூட வராதவள் பரிட்சை முடிந்தவுடன் கல்யாணம் என்று வீட்டில் கூறியதை வைத்து விழுப்புரம் அரசுப் பள்ளியில் பரிட்சை எழுதி விட்டு, வராஹி அம்மன் கோவிலுக்கு ஆஜராகி விட்டாள் கவிதாயினி. அவள் மட்டும் இல்லாமல் அவளின் ஆருயிர் தோழியான செல்வியையும் அழைத்து சென்று விட்டாள்.
அங்கு கடவுளிடம் ஒரு மனுவை இட்டு விட்டு, கோவிலின் பின் புறம் முழுவதும் வயலாக அமைந்திருந்தது. அங்கு சென்று, இடப் புறம் திரும்பினால், இவள் அப்பாவின் வயல் இருக்கிறது. அவளின் சிறுவயது முதல் இங்குள்ள ஒரு ஆலமரத்தின் மேல் அலாதி பிரியம். அவள் இங்கு வந்தால் ஆலமரத்தை குறைந்தபட்சம் அதனின் அருகில் ஒரு நிமிடமாவது நின்று அதை தொட்டு உணர வேண்டும் அவளுக்கு .
அவளின் குழந்தை குணம் முதல் சிதம்பர ரகசியம் வரை அனைத்தும் தெரிந்த இரு உயிர்கள் செல்வி மற்றும் இந்த ஆலமரமே.
அதனாலேயே பரிட்சையில் எவ்வாறு எழுதியுள்ளாள் என்றதோடு கல்யாணக் கனவையும் அந்த ஆலமரத்திடம் கூற வந்தாள் . அங்கு அமர்ந்து தான் பாடி மகிழ்ந்தாள்.
அவள் பாடியதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட செல்வி, “ஆமா, சும்மாவே படிப்பு வராது. இதுல பாட்டும் அப்படி பாடு “
“பரீட்சை எழுதும் நேரம்…
உன் சிரிப்புதானே…
நெனச்சாலே… ” என்று கூறி அவள் சுற்றிக் கொண்டு ஆட,
“ஆமா, நீ பாடத்தை நினைச்சு எழுதானாலே ஒழுங்க எழுத மாட்ட, இதுல அவனை நினைச்சு ச்சீ…… “
“ஸ்ரீ ராமஜெயம் எனக்கு எனக்கு…
உன் பேர்தான் பேர்தான் இனிமேலே…
கிளி பிள்ளையாய் தினமும் தினமும் அதை…
சொல்வேன் சொல்வேன் தன்னாலே…
திருக்குறளாய் திருக்குறளாய்…
உந்தன் குரல்தான்…
எனக்கு எனக்கு…
தலைநகரம் தலை நகரம்…
உந்தன் தெருதான்…
எனக்கு எனக்கு…
உயிரே உயிரே……… “
“ஏய் நான் போறேன் டி ” என்று செல்வி பொங்கி கொண்டு எழ ,
“டி …. டி ….. டி …… ” என்று அழைத்து கொண்டே அவளைத் தடுத்தாள் கவிதாயினி .
திரும்பி முறைத்துப்பார்த்த செல்வியை, கொஞ்சி மறுபடியும் அமர வைத்தாள் ஆலமரத்தடியில். இன்னும் அவளின் முறைப்பு அனலாக பறக்க ,
” நான் யாருகிட்ட போய் என் மனசுல உள்ளதை சொல்வேன். உனக்கே தெரியும். நான் உடனேலாம் யாருகிட்டையும் பேச மாட்டேனு . என் மனசுல உள்ளது இந்தோ இந்த மரத்துக்கும் உனக்கும் மட்டும் தான் தெரியும். நான் மாமாவை விரும்புறது உங்கிட்ட சொன்னா சந்தோஷப்படுவனு நினைச்சேன். ஆனால், நீ என்னடானா முறைச்சுக்கிட்டே இருக்க? ” கவிதாயினி ஆதங்கத்துடன் முடித்து விட்டு கைகளை கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.
” அது தாண்டி என் பயமே…. உன் மனசுல உள்ளதை யார்டையும் சொல்லாம இருக்கிறது ? “என்று கவலை தொய்ந்த முகத்துடன் கூறினாள் செல்வி.
புருவ முடிச்சோடு திரும்பி பார்த்தவளைக் கண்டு ஏக்கப் பெருமூச்சை மட்டுமே விட முடிந்தது. இருந்தும் அவளைப் புரிய வைக்கும் நோக்கத்துடன் ” நீ உன் அத்தான் மேலே ஆசை வைக்கிறது வீட்டுக்கு தெரியாம இருக்கிறது தப்புனா. அது உன் அத்தானுக்கே தெரியாமல் இருக்கிறது மிகப் பெரிய தப்பு ” என்று செல்வி கிலியை உருவாக்கினாள்.
“என்னடி தப்பு ? என் வீட்டைப் பத்தி தெரிஞ்சும் இப்படி சொல்லுற . என் அப்பாக்கு காதல்னு சும்மா டிவில ஓடுனாலே பிடிக்காது. அவருக்கு மட்டுமா என் வீட்டு தாய் கிழவிக்கும் பிடிக்காது. எங்க அம்மா அப்பாக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. என் அத்தை தாய் கிழவி பேசிறதுக்கு மறு பேச்சு பேசாது “
“திருத்தம் டி உன் அப்பத்தா தான் அது மக பேசுறதுக்கு மறு பேச்சு பேசாது “
“ஏதோ ஒன்னு டி…… அதுங்கல விடு”
“என்ன விட…… நீ உன் அத்தானை கல்யாணம் பண்ணால் உன் அத்தை வீட்டுக்கு தான் போகனும். அந்த அம்மா சரியில்லை டி ….. ” பீதியுடன் கூறினாள் செல்வி.
“அத்தை கூட எவ்வளவு நாள் இருக்க போறேன் ? “
“உன் அத்தான் வெளியூரில் இருக்கான். ஆனால், என்ன வேலை பாக்குறானு தெரில டி “நிதர்சனத்தை புரிய வைக்க முயன்றாள் செல்வி.
“ஹே…. அதெல்லாம் நல்ல வேலையில் தான் இருக்கு மாமா… அது உழைப்பாளி டி …. படிப்பு தான் வராது”
“அய்யோ அதை தாண்டி நானும் சொல்லுறேன் . அவனுக்கு படிப்பே வரல…. இதுல எங்க வேலை கிடைச்சிருக்கும்னு நினைக்கிற “
“ஏண்டி படிக்கலைனா வேலைக் கிடைக்காதா ? ” மெலிதாக கோபம் வெளிப்பட்டது கவிதாயினிக்கு .
“அப்படி இல்லை கவி ….. வேலை கிடைக்காதுனு சொல்லலை …. அவனுக்கு சம்பளம் எவ்வளவு வரும்னு தெரில.அதோட….. “
“அதான் அத்தான் 70000 வாங்குதுனு அத்தை சொன்னுச்சுல “
“உன் அத்தை எதுக்கு சொல்லுதுனு எனக்கு தெரியாது. உங்க அப்பாவுடைய வளர்ச்சி பாத்து வெந்துக்கிட்டு இருக்கு ” என்று மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது. அதை மனதில் நினைத்து கொண்டு வெளியில் “படிக்காதவருக்கு எப்படி இவ்ளோ சம்பளம் அதுவும் ஒரு வருஷத்தில் “
” ஏய் செல்வி ” என்று கை நீட்டி தடுத்து செல்வி கூறிய செய்தியில் லேசாக கிலி பிடித்தது கவிக்கு . யோசிக்க ஆரம்பித்தாள் .
நாயகனோ ஒருத்தியுடன் இதழ் சண்டை போட்டுக் கொண்டிருந்தான் .
இவர்கள் இருவரில் வெற்றி யாருக்கு?
கீர்த்தி ☘️