பூஐை நல்லப்படியாக நடந்து முடிந்தது.
நிற்க முடியாமல் தள்ளாடிய கால்களை முடிந்த வரை கட்டுப்படுத்தி நேத்ரனிடம் “எல்லாம் ஓவர் தானே…. நான் கிளம்பவா” என்று சோர்வான குரலில் விபி கேட்க,
“மேடம் கிட்ட கேட்காமல் சொல்ல முடியாது சார். இருங்க கேட்டு வரேன்” என்று வேகமாக மோகியை நோக்கி சென்றான்.
சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி விபியிடம் வந்த நேத்ரன், “விபி சார் இன்னும் பிரஸ் கூட போகலை. வெயிட் பண்ண சொன்னாங்க” என்று தன் வேலையை பார்க்க செல்ல,
‘ப்ச்…… கண்ணு வேற இருட்டுது…. கடவுளே!! கீழ விழுந்து மானம் போகாம காப்பாத்து’ என்று புலம்பிக் கொண்டு சுவற்றில் சாய்ந்து நிற்க,
உதவி இயக்குநரில் ஒருவரான சஞ்சய் “ஹாய் சார்…. நான் உங்க பெரிய ஃபான் தெரியுமா… சும்மா சொல்ல கூடாது… அடிபொலி” என
“சஞ்சய் ரைட்….. சஞ்சய் யாருக்கும் தெரியாத மாதிரி என்னை கை தாங்கலா கூட்டிட்டு போய் எதாவது சீட்ல உட்கார வையேன்”
“ஹான்…. எதுக்கு சார். இப்படியே நில்லுங்க டக்கரா இருக்கும்”
“அடேய் நான் நிற்கிறதா பார்த்து ஸ்டயில்னு நினைச்சியா…. சுவரை விட்டு தள்ளி நின்றால் விழுந்துடுவேன் டா” என்று அழும் குரலில் சொல்ல,
“சார்” என்று கண் விரிய சொன்னவன் “காலையே மட்டையா… என்ன சார் இது” என்று முறைப்புடன் கேட்க,
“ஐய்யோ ஆண்டவா…. என் நிலைமை புரியாம பேசறானே” என்று காலையில் நடந்ததை மேலோட்டமாக கூற,
“இவ்வளவு நடந்து இருக்கா…. சரி வாங்க. நான் வேண்டும்னா மேடம் கிட்ட சொல்லவா” என்ற சஞ்சயை பார்த்து,
“அவ்வளவு தைரியமாடா…. எனக்கு இந்த உதவி மட்டும் பண்ணு போதும்” என சஞ்சய் ஒரு நாற்காலியில் விபியை அமர வைத்து விட்டு, “எதாவது வேண்டும் என்றால் கூப்பிடுங்க” என சென்றுவிட்டான்.
நேரம் செல்ல செல்ல கண்கள் இருட்டிக் கொண்டே வர ‘இதுக்கு மேல முடியாது போலயே’ இன்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே தன் முன்னே நிழலாட நிமிர்ந்து பார்த்தான்.
எதிரே மோகித்ரா முறைத்துக் கொண்டிருந்தாள். எதற்கு முறைக்கிறாள் என்றே தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தான் விபி.
பற்களைக் கடித்துக் கொண்டே எதிரே இருந்த விபியை முறைத்துக் கொண்டு “கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கா உங்களை விட இந்த ஃபீல்ட் இருக்குற பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் அங்க நின்னுட்டு இருக்காங்க நீ என்னன்னா ஹாயா வந்து உட்கார்ந்துட்டு இருக்க இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் நீ பாலிவுட் என்ட்ரி ஆக்குற இவ்வளவு திமிரு இருக்க கூடாது” என
“மேடம் என்ன பார்த்தா திமிர்ல உக்காந்துட்டு இருக்க மாதிரியா இருக்கு. சத்தியமா அப்படி எல்லாம் இல்லை முடியாமல் உட்கார்ந்து இருக்கிறன் மேடம் இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே விட்டீங்க கண்டிப்பா கீழே மயக்கம் போட்டு விழுந்துடுவேன் அதான் உண்மையான நிலவரம் அது தெரியாம நீங்க இப்படி முறைச்சிட்டு இருக்கீங்களே கொஞ்சம் என்ன ரூமுக்கு வரைக்கும் விடுறீங்களா” என்று பாவமாக சொல்லும் போதே அவனின் வார்த்தைகள் தடுமாறியது.
“இடியட் என்ன பேசிட்டு இருக்க இங்க என்ன நடந்துட்டு இருக்கு நீ என்ன சீரியஸ்நெஸ் கொஞ்சமும் இல்லாமல் பேசிட்டு இருக்க” என்று பேசிக்கொண்டே நேத்ரன் இங்கே என்று கண்களால் தேடிக் கொண்டிருக்க,
அதற்கு மேல் தன்னால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் இருண்டு கொண்டு வர தலையை இப்படியும் அப்படியமாக சிலிப்பிக் கொண்டு கண்களை விரிவுபடுத்தி பார்த்துக் கொண்டிருந்தான் வி பி.
அவனின் செயல்களைப் பார்த்து ஏதோ தவறாக உள்ளது என்று புரிந்து கொண்ட மோகி “ஹே!! மேன் வாட் ஹேப்பண்ட் என்னாச்சு எனிதிங் சீரியஸ்” என்று கேட்டுக் கொண்டே யாரின் கவனத்தையும் கவராமல் விபியை நிற்க வைத்து மெதுவாக பக்கத்தில் இருக்கும் கதவு வழியாக வெளியே கொண்டு வந்தாள்.
வெளியே வந்ததும் போன் எடுத்து நேத்ரனுக்கு கால் செய்து “ஹலோ நேத்ரன் நான் கொஞ்சம் வேலையாக வெளியே வந்திருக்கேன். நீங்க அங்க இருக்குற எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணிக்கோங்க எனிதிங் சீரியஸ் ஆர் எனிதிங் எல்ஸ் எனக்கு கால் பண்ணி இன்பார்ம் பண்ணுங்க” என்று போனை வைத்துவிட்டு மெதுவாக நடக்க முடியாமல் இருக்கும் விபியை தள்ளிக்கொண்டே தன் கார் வரை சென்றாள்.
மயக்கமோ போதையோ ஏதோ ஒரு சொல்ல முடியான நிலையில் இருந்த விபி தன்னை தாங்கியவாறு அழைத்து செல்லும் மோகியை பார்த்து “மேடம் இவ்ளோ குட்டியா இருக்கீங்க எப்படி இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை தனியா கட்டி காக்க போறீங்க எனக்கு தெரியலையே பட் கவலைப்படாதீங்க நான் கூட இருக்கேன் நான் பாத்துக்குறேன்” என்று நிலை இல்லாமல் தடுமாறிக் கொண்டே சொல்ல,
“நீ பார்த்துக்க போற… ஃபர்ஸ்ட் தனியா நிற்க முடியுதா உன்னால முதலில் என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்க இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தே இப்ப சடனா என்ன ஆச்சு” என்று அவனை சீட்டில் அமர வைத்து சுற்றி கொண்டு டிரைவிங் சீட்டில் அமர,
“எனக்கு பெயின் கில்லர் எல்லாம் செட் ஆகாது மேடம் சரக்கடிச்சா கூட எப்படி ஆகுமா என்று தெரியாது. ஆனா பெயின் கில்லர் போட்டா இப்படித்தான் ஆகிடுவேன்” என்று சொருகும் கண்களுடன் பேச,
“ஜஸ்ட் செட்டப் ஹோட்டல் போகிற வரைக்கும் என்ன டென்ஷன் பண்ணாத” என்று தனக்குள் ‘பெயின் கில்லர் போடுகிற அளவுக்கு இந்த இடியட் எங்க போய் விழுந்து தொலைஞ்சது தெரியல’ அவன் தங்கி இருந்த ஹோட்டல் நோக்கி சென்றார்.
***
இரண்டு மணி நேரங்கள் முன்பு,
“நீங்க சொல்றதெல்லாம் உண்மையா” என்று எதிரே நிற்கும் மனிதனிடம் ஜெய தேவ் கேட்க,
எதிரே நிற்கும் நபரோ “ஆமா சார்…. மொத்த சொத்தும் வேற பெயருக்கு மாறி இருக்கு. ஆனா ரொம்ப ரகசியமா எல்லா வேலையும் பண்ணி இருக்காங்க. யார் பெயரில் இருக்கு என்று கண்டு பிடிக்க முடியல. இப்ப எதோ நியூ ஃபேஸ் வைத்து புது மூவி பண்ண போறாங்க” என்று தான் பாதி அறிந்த விவரத்தை சொல்ல,
“எனக்கு தெரிந்து அவள் பெயரில் தான் மொத்த சொத்தும் இப்ப மாற்றி இருப்பாங்க. அவள் கதையை முடிச்சுட்டு அந்த சொத்து மொத்தத்தையும் என் பெயருக்கு மாற்றிடனும். என்ன சொன்ன புது படம்….. ம்… அந்தப் படத்தோட பூஜை நடக்கக்கூடாது. ஹீரோ யாரு புதுமுகமா அவன தூக்கி….. இல்ல இல்ல வேண்டாம் அவன் பூஜைக்கு போக முடியாதபடி பண்ணிட்டு சொல்லு”
“சரிங்க சார்” என்றவன் அடுத்து பேசியது மும்பையில் இருக்கும் சில அடியார்களிடம் தான்.
‘இவ கிட்ட கேட்டதுக்கு கேட்காமலே இருந்து இருக்கலாம். எனக்கு பிடிக்காத டிரஸ் நான் போடுவதா… நெவர்’ என பக்கத்தில் தான் எடுத்து வைத்து இருந்த சிகப்பு நிற முழு கை சட்டையை அணிந்து கொண்டு, வேகமாக லிஃப்ட் நோக்கி ஓட,
அவனை இடிப்பது போல் ஒருவன் அவன் மேல் விழ, அவனை தாங்கி பிடித்தான் விபி.
விழ இருந்தவன் “சுக்கிரியா” என்று சென்று விட,
‘எதுக்கு இப்ப கண்ணு மண்ணு தெரியாம இடிச்சிட்டு போகுதுனு தெரியலையே’ என்று அடுத்த அடி வைக்க நினைக்க சுருக்கு என்று அடி வயிறு வலித்தால் கையை வைத்து தடவி பார்க்க, அவனது குருதியே அவனை பார்த்து சிரித்தது.
‘ஐயோ இரத்தம். இதை நான் இப்ப வர சொல்லலையே’ என்று தனது ஷர்டை தூக்கி பார்க்க கத்தியால் அந்த இடத்தில் ஒரு கொடு போடப்பட்டு இருந்தது.
ஆழமாக இல்லை என்றாலும் பெரிதாக இருந்தால் இரத்தம் சற்று வேகமாகவே வெளியேற, ஹாஸ்பிடல் போகனும் என்று நினைக்கும் போது,
நேத்ரன் போன் செய்து “கிளம்பிடிங்க தானே சார். ரொம்ப நேரம் ஆகுது. மேடம் இப்பவே கோவமா இருக்காங்க” என
“கொஞ்சம் நேரத்தில் அங்க இருப்பேன்” என்று திரும்பி தன் அறைக்கு சென்று அவசரத்துக்கு ஒரு துண்டை எடுத்து இருக்க கட்டி கொண்டவன், வெறுத்த வெள்ளை குர்தாவை அணிந்து கொண்டு கிளம்பினான்.
வரும் வழியில் வலியின் காரணமாக பக்கத்தில் இருந்த சின்ன கிளினிக் சென்று ஒரு பெயின் கில்லேர் மட்டும் போட்டுக் கொண்டு வந்தான்.
ஆரம்பத்தில் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. வலியும் தெரியவில்லை. ஆனால் நேரம் செல்ல செல்ல பெயின் கில்லெர் அதன் வேலையை காட்ட, விபியின் நிதானம் தவற ஆரம்பித்தது.
இதோ தன்னை விட அதிக எடை கொண்டவனை தாங்கி பிடித்து அவன் அறையின் முன் நின்றாள், மொகித்ரா.
“ஹே மேன் உன்னை கட்டிகிட்ட பாவத்துக்கு கழுதை பொதி சுமக்கிறா மாதிரி உன்னை சுமந்துட்டு வரேன். நாளைக்கு இருக்கு உனக்கு” என்று அவனது பண்ட் பாக்கெடில் இருந்த ரூம் அக்சஸ் காட் எடுத்து ரூமை திறப்பதிற்குள் ஒரு வழி ஆகி விட்டாள்.
“பாரின் பேபி தமிழ் பழமொழி எல்லாம் சூப்பரா சொல்ற. சூப்பர் பேபி” என்று அவள் கண்ணத்தை தட்ட,
“மேல கை வெச்சி செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்” என்று அவனை படுக்கையில் தள்ளி விட்டு, “பழமொழியாம் பழமொழி… இடியட் எங்க அடி பட்டுசோ” என்று முணுமுணுப்பாக அவனை திட்டி கொண்டே காயத்தை தேட, அது கிடைக்காமல்,
“டேய் எங்கடா வலிக்குது” என்று அவனிடம் கேட்க, அவனோ சொர்கத்தில் மிதக்கும் நினைப்பில் இருந்து கொண்டு “வலிக்குதா… ஆமா ஆமா… என் இதயம் தான் வலிக்குது. உனக்கு தெரியுமா….. நல்லா போயிட்டு இருந்த என் வாழ்க்கையில் ஒரு கொடுமைக்காரி வந்தா. அப்ப இருந்து ஒரே வலி தான்” என
‘எல்லாத்துக்கும் சேர்த்து நாளைக்கு பார்த்துக்கிறேன்’ என்று கோவமாக அறையின் கதவை மூடிவிட்டு சென்றவளுக்கு தெரியவில்லை நாளை அவளை தாக்க இருப்பவரிடம் இறுதி அவளது உயிரை காக்கும் ரட்சகனே இவன் தான் என்று.
காரணம் இல்லா காரியம் நடப்பதில்லை இந்த உலகில். நடக்கும் அனைத்து காரியத்திலும் நன்மையும் ஒளிந்து இருக்கும் தீமையும் ஒளிந்து இருக்கும். பார்க்கும் கண்ணிலே வேறுபாடு உள்ளது. கண்ணில் படும் வேறுபாடு கருத்தில் பதியுமா???
தொடரட்டும்
நிலானி