சென்னை வளரும் நகரமா இல்ல வளர்ந்த நகரமா என்று தெரியாமல் மாதத்திற்கு மாதம் பல மாற்றங்களுடன் வளர்ந்து கொண்டே இருக்கும் நகரம். தொழில்கள், தொழிற்சாலைகள், கலைக் கூடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சினிமா என அனைத்திலும் முதன்மையான மாவட்டம். வருடத்தின் பாதி நாட்கள் வெயிலில் வதங்கிப் பாதி நாட்கள் அடைமழையில் நீந்தி மீதி நாட்கள் குளிரில் நடுங்கி எனப் பல பரிமாணத்தைக் கொண்ட ரம்மியமான நகரம். காற்று மாசு, ஒலி மாசு, ஒளி மாசு, நீர் மாசு எனப் பல இன்னல்களையும் சந்திக்கும் சாதனைக்குரிய நகரம்.
இரவின் காதலி மௌனத்தைத் தொலைத்து விட்டு சற்றே பரபரப்பாக, வாயிலே நுழையாத பாடலுடன் மேற்கத்திய நடனம், தங்களை மறந்த நிலையில் இருக்கும் இளமையின் அழகு கொட்டி கிடக்கும் இளம் ஆண்கள் பெண்கள், வேலையின் மன அழுத்தத்தை மறக்கத் துடிக்கும் நடு வயது மனிதர்கள், வயதையும் மீறி தங்களை இளமையாகக் காட்ட முயன்று கொண்டு இருக்கும் சில மனிதர்கள் எனப் பல தரப்பட்ட மக்களுடன் பல கேளிக்கை விருந்திலிருந்தது இந்த சொகுசு பப்.
தன் முன்னே எந்த வித கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளாமல் கையில் இடத்திற்கு சம்மந்தமே இல்லா வகையில் பழரசத்தை வைத்துக் கொண்டு இருக்கும் தன் நண்பனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் கார்த்திக், வளரும் நடிகரில் ஒருவன்.
விபி என்னும் விஸ்வ பிரசாத் இருபத்தி ஐந்து வயதில் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை குறுகிய காலத்திலே பிடித்த மிக திறமையான நடிகன். நடித்தது என்னவோ ஐந்து படங்கள் தான். ஆனால் ரசிகை படையோ மிக பெரியது.
ஆளை அசர அடிக்கும் அழகு. ஆறடி உயரம் நேர்த்தியான அலை அலை கேசம், படர்ந்த நெற்றியின் ஒரத்தில் சிறுவயதில் உண்டான காயத்தின் சிறிய வடு, கூர்மையான காந்த விழி, எடுப்பான நாசி, ஆளை மயக்கும் புன்னகையை நிரந்தரமாக கொண்ட அதரம், பேசும் போதே விழும் கண்ண குழி. அதில் விழுந்தோர் எழும் நிலையில் இல்லை. அதனாலே பெண் ரசிகைகள் ஏராளம்.
கார்த்திக் “இந்த பழரசத்தை குடிக்க நீ இவ்வளவு தூரம் வரனுமா… சும்மா பப் வந்த பெயருக்காவது இந்த டக்கிலாவை டீரை பண்ணலாம்ல” என
“நோ மேன். நமக்கு ட்ரீங்ஸ் எல்லாம் சுத்தமா சேட் ஆகாது. இந்த பார்ட்டியே பிரேம் கூப்பிட்டதால் மட்டுமே வந்தேன். மத்தபடி வந்தே இருக்க மாட்டேன்” என்று விபி சொல்ல, பிரேம் இளம் தயாரிப்பாளர். விபியின் தற்போது நடிக்கும் படம் இவர் தயாரிப்பதே.
“இந்த ஒழுக்கம் தான் விபி உன்னை இவ்வளவு சீக்கிரமே இந்த இடத்திற்கு கொண்டு வந்து இருக்கு. சரி இந்த மூவி முடிய போகுதுல அடுத்த ப்ளான் என்ன?” என
“எஸ் டா. ஒன் மந்த் பிரேக் தான் அடுத்து மேத்தா புரொடக்ஷன்ஸ் கூட கமிட் ஆகி இருக்கேன். மும்பை, புனே, சிம்லா, கல்கத்தா இப்பத்திக்கு இந்த ப்ளேஸ் தான் ஃபஸ்ட் ஸ்கேடியுல் டா. அஃபிசியலா இந்த வீக் இல்ல நெக்ஸ்ட் வீக் தகவல் வந்திடும். பட் ஜெனி தான் கொஞ்சம் மக்கர் பண்ணிட்டு இருக்கா”
“என்னடா எதாவது பிரச்சினையா” என்று நண்பனின் கவலையான முகத்தை கண்ட கார்த்திக் கேட்க,
“பெருசா எல்லாம் எதுவும் இல்லைடா. உனக்கே என் அம்மா பத்தி தெரியும் தானே. அவங்க எவ்வளவு கட்டுப்பாடு போட்டு வாழறாங்க. ஜெனி கிரிஸ்டியன் இல்லையா நான் அம்மா கிட்ட நேரம் பார்த்து பொறுமையா சொல்றேன். இன்னும் கொஞ்ச வருசம் போகட்டுமேனு சொன்னா அவ எங்க கேட்கிறா” என்று சலித்து கொண்டு சொல்ல,
“ரொம்ப தான் டா. இப்ப ஜெனிக்கு தமிழ்ல மட்டும் இல்ல தெலுங்குல கூட நல்ல மார்கெட். இந்த மாதிரி டைமில் யாராவது மேரேஜ் பத்தி யோசிப்பாங்களா. அந்த பொண்ணுக்கு உன் மேல அவ்வளவு லவ். அதான் உடனே கல்யாணம் பண்ணிக்க சொல்லுது. இருந்தாலும் நீ கொடுத்து வைத்தவன் தான்” என்று பெருமூச்சு விட,
விபி முகத்தில் தன் காதலியை நினைத்து மெலிய புன்னகை அரும்பியது.
ஜெனி, ஜெனிபர் ஜார்ஜ் 22 வயதான இளம் நடிகை. பூர்விகம் கேரளா. கேரளத்து அழகு மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்து பார்ப்பவரை அசரடிக்கும் பேரழகி. தன் திறமையால் தமிழ் தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் பிசியாக இருக்கும் கெட்டிக்காரி. அவளது பலவீனம் அவளது காதல் மட்டுமே. சிறுவயதிலிருந்தே ஆசை பட்ட அனைத்தும் கிடைத்து வளரவில்லை. நிராகரிக்கபட்டு வளர்ந்தவள்.
பிடிக்காமல் பண தேவைகாக முதலில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இப்போது பெயர் சொல்லும் நடிகையாக இருக்கிறாள். தெலுங்கு படத்தில் தொடர்ந்து நடிப்பதால் தற்போதிய இருப்பிடம் ஹைதராபாத்.
மதுரா “மேம் நெக்ஸ்ட் வீக் ப்ரேக். எனி பிளானிங்?” என்று ஆர்வமாக கரவேனில் இருக்கும் ஜெனியிடம் கேட்க,
“மது நீ எனக்கு முதலில் நல்ல ப்ரெண்ட். பெயர் சொல்லியே கூப்பிடு. எப்ப பார்த்தாலும் மேம் மேம்னு கடுப்ப கலப்பிட்டு” என்று ஜெனி கடுப்புடன் போனை பார்த்து கொண்டு சொன்னாள்.
இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு முன்னேறிய நிலையில் மதுவின் குடும்ப நிலையை அறிந்து தன் அருகிலே வைத்து கொண்டாள். வேலை நேரத்தில் மேம் என்றே அழைப்பேன் என்று பிடிவாதக்காரி.
மது “என்னப்பா இவ்வளவு ஹாட்டா இருக்க என்ன ஆச்சு. சார் போன் பண்ணலையா” என
“உங்க சார் இருக்கிறாரே.. என்னை பதற வெக்கிறத்தில் கில்லாடி. என் அப்பா நிலைமை தெரியும் தானே. அவருக்கு பயம் எங்க என் கல்யாணத்தை பார்க்க முடியாமல் போய்டுவேனோனு. விபி கிட்ட சொன்னா இன்னும் இரண்டு வருசம் போகட்டுமேனு சொல்றார்” என்று பெருமூச்சுடன் சொல்ல,
“பணம் வந்தா குணம் மாறிப் போகிற காலம் மேம். ஆனால் சார் எப்படி எல்லாம் இல்லையே. உங்களை உண்மையா விரும்புறார். கண்டிப்பா கைவிட மாட்டார். எதோ ஒரு விசயம் அவரை தடுக்கலாம். எது என்னனு கண்டுபிடிங்க” என
“சென்னை போனதும் முதலில் அவனை தான் பார்க்கனும். போனில் பேசவே முடியறது இல்ல எப்பவும் எதாவது வேலை வந்திட்டே இருக்கு” என்று பல நாட்களாக சரியாக போனில் கூட பேச முடியாத ஏக்கத்தில் சொல்ல, அவளின் ஏக்கம் புரிந்து அமைதியாக இருந்தால் மது.
காதல் ஒருவரை உயர்த்தினால் ஒருவரை விழுந்தும், ஒருவரை பொறுமையாக மாற்றினால் ஒருவரை மூர்க்கமாக மாற்றும், ஒருவரை புத்திசாலியாக மாற்றினால் ஒருவரை முட்டாளாக மாற்றும், என்ன மாற்றங்கள் நடந்தாலும் காதல் அழிவதில்லை. மாற்றங்களோடு காதலும் மாறுகிறதோ????
தொடரட்டும்….
நிலானி