Loading

அத்தியாயம் 41

 

தீப்ஷி  ஒன்னும் புரியாமல் திகைத்து நின்றதெல்லாம் ஒரு நிமிடம் தான் . பிறகு வேகமாக அந்த காலை கட் செய்தவள் .

 

ஶ்ரீதருக்கு அழைத்து , சந்தரனுக்கு ஃபோன் வந்த நம்பரை சொல்லியவள் , ” உடனே இந்த நம்பர் எந்த லொகேஷனில் இருக்குதுனு எனக்கு மெசேஜ் அனுப்பு ஶ்ரீதர்.  எமர்ஜென்சி. ” என்ற தீப்ஷீ ஃபோனை வைத்தாள் .

 

” சார் , இங்கே நீங்க பார்த்துக் கொள்ளுங்கள் . ஒரு முக்கியமான வேலை இருக்கு. ” என்று வெளியே வந்த தீப்ஷீ காரில் ஏறினாள் .

 

ஐந்து நிமிடத்தில் ஶ்ரீதர் மெசேஜ் அனுப்ப  , டிரைவரிடம் இடத்தை சொன்னவள் ,  ” அண்ணா வேகமா போங்க. ” என்றாள் .

 

ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள ஏரியாவிற்குள் வண்டி சென்றது .

 

கட்டிட வேலை பாதி முடிந்த ஒரு பில்டிங் இருந்தது . ஶ்ரீதர் அனுப்பிய லொகேஷன் அந்த பில்டிங்கை தான் காண்பித்தது .

 

” அண்ணா , இங்கே இருங்க . யாராவது மாடியில் இருந்து ஓடி வந்தால், அவங்களை பிடிச்சு கைல விலங்கு போட்டு காரில் ஏத்துங்க. ”

 

” சரிங்க மேடம். ”

 

மறைந்து, மறைந்து உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக தேடினாள் தீப்ஷீ .

 

கீழ்தளத்தில் யாருமில்லை . பின் ஒவ்வொரு மாடியாக தேடியவள் கடைசியாக மொட்டை மாடி வந்தாள் .

 

அங்கு பேச்சு சத்தம் கேட்க . எத்தனை பேர் இருக்கிறார்கள் , கையில் ஆயுதம் இருக்கா என்று மறைந்திருந்து பார்த்தாள் தீப்ஷீ .

 

கத்தி , உருட்டுக்கட்டையை தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்ட தீப்ஷீ, அவர்கள் முன் சென்று நின்றாள் .

 

” பாப்பா இங்க எல்லாம் வரக்கூடாது போயிடு. ” என்றான் ஒருவன் , அவளின் போலீஸ் யூனிபார்மை சரியாக பார்க்காமல் .

 

பதில் ஏதும் சொல்லாமல் அவனை அடிக்க தொடங்கினாள் . முதலில் பெண் என்று அசால்டாக நினைத்தவர்கள் அவளின் அடியின் பலத்தை கண்டு பயந்தனர் .

 

வர்ம கலை தெரிந்த தீப்ஷீ சரியாக அவர்களின் வர்ம புள்ளியில் தாக்க ஐந்தே நிமிடத்தில் மூவரும் வலி தாங்காமல் கீழே விழுந்தனர் .

 

ஒருவனின் தலை முடியை பிடித்த தீப்ஷீ , ” சத்யா எங்க டா?” என்று சிங்கம் போல் கர்ஜித்தாள் .

 

” அந்த ரூமில். ” என்றான் வலி தாங்க முடியாமல் .

 

படபடக்கும் இதயத்தோடு வேகமாக அந்த அறை அருகே சென்றாள் தீப்ஷீ .

 

வெளியே பூட்டு போட்டிருக்க அருகில் இருந்த கல்லை வைத்து வேகமாக உடைத்த தீப்ஷீ .

 

அவளின் பலம் முன் பூட்டு உடைய கதவை திறந்து உள்ளே சென்றாள் தீப்ஷீ .

 

” சத்யா ??? ”  என்றவளின் குரலில் வலியும் மகிழ்ச்சியும் இருக்க .

 

அரை மயக்கத்தில் இருந்த சத்யா , பல நாட்கள் பின் கேட்ட வார்த்தையில் மகிழ்ந்தவன் , ” அம்மு… ” என்றான் .

 

வேகமாக அவன் அருகே சென்ற தீப்ஷீ அவனை கட்டி போட்டிருந்த கயிற்றை அவிழ்த்தாள் .

 

சத்யாவின் முகத்தை கையில் ஏந்தியவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய…

 

‘ இது கனவாக இருக்கக் கூடாது’ என்று பல முறை மனதில் வேண்டினாள்.

 

” சத்யா நீ என்ன… விட்டு போயிட்டனு நினைச்சு நான்… எவ்வளவு கஷ்டப்பட்டேன்…”

 

” அம்மு … நான் நல்லா இருக்கேன் டா . இன்னும் பல வருஷம் நம்ம நட்பு தொடரும். ” என்றான் திக்கி திணறி.

 

” சத்யா நான் உன்ன போக விடமாட்டேன். ” என்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

 

சத்யா அவளின் தலையை ஆதரவாக தொட நினைக்க அரை மயக்கத்தில் அவனால் செய்ய முடியவில்லை .

 

வலியையும் மீறி ஒருவன் கத்தி எடுத்துக் கொண்டு வர . தீப்ஷீ சத்யாவை தாங்கிக் கொண்டு நின்றாள் . சத்யாவால் நிற்க முடியவில்லை .

 

அவர்கள் அருகே கத்தியோடு வர . மனதை அமைதிப்படுத்திய தீப்ஷீ அவனின் கண்களை வசப்படுத்தினாள் .

 

அவளின் நோக்கு வர்ம சக்தி முன் அந்த ரவுடி கத்தியை கீழே போட்டான் .

 

சத்யாவை கீழே உட்கார வைத்த தீப்ஷீ . அந்த ரவுடியை மீண்டும் அடித்தாள் . அவன் கீழே விழுந்ததும்  . சத்யாவை தூக்கிக் கொண்டு கீழே சென்றாள் தீப்ஷீ . காரில் சத்யாவை படுக்க போட்ட தீப்ஷீ. வேகமாக காரில் ஏறினாள் .

 

ஒருவேளை சத்யா நோக்கு வர்மம் கற்றிருந்தாள்.  அவனை கட்டி போட்டிருந்த ரௌடிகளிடம் நோக்கு வர்மம் பயன்படுத்தி முன்பே அவர்களிடமிருந்து தப்பித்திருப்பானோ ???

 

” அண்ணா சீக்கிரமா ஹாஸ்பிடல் போங்க. ”

 

ஶ்ரீதருக்கு அழைத்த தீப்ஷீ , ” ஶ்ரீதர் நீ அனுப்பிய லொகேஷனில் மூணு ரவுடியை அடிச்சி போட்டிருக்கேன். ஆள் அனுப்பி அவங்களை உன் கஸ்டடியில் வெச்சிரு. நானே வந்து அவங்களை கூட்டிட்டு போறேன். ”

 

” நான் அவனுங்களை பார்த்துக்குறேன் . ஆனால் , நீ ஏன் பதட்டமா பேசுற? ”

 

” எனக்கு ஒன்னுமில்லை . நான் உன்ன பார்க்க வரும் போது சொல்றேன் .” என்ற தீப்ஷீ போனை வைத்தாள் .

 

அரை மயக்கத்தில் இருந்த சத்யா , ” அம்மு , நான் நல்லா இருக்கேன் . நீ பயப்படாதே. ” என்றான் .

 

” சரி சத்யா .” என்றவளின் கண்களில் கண்ணீர் .

 

மருத்தவமனை உள்ளே அழைத்துச் சென்றவள் .

 

” டாக்டர். ” என்றாள் தீப்ஷீ .

 

அவளின் யூனிஃபார்மை பார்த்த நர்ஸும் வேகமாக டாக்டரை அழைத்து வர .

 

” மேடம் , டாக்டர் பார்பாங்க . நீங்க வெளிய நில்லுங்க. ” என்றார் நர்ஸ் .

 

தீப்ஷீ வெளியே போக நினைத்து திரும்ப , அவளின் கையை பிடித்த சத்யா , அங்கிருந்த நர்ஸிடம் , ” இவங்க கையில் இரத்தம் வருது. ” என்றான் சத்யா .

 

” மேடம் நீங்க வாங்க முதல்ல. ” என்ற நர்ஸ் தீப்ஷீயை அழைத்து சென்று அவளின் கைகளுக்கு தையல் போட்டார் .

 

சத்யா இருக்கும் அறைக்கு வெளியே நின்றிருந்தாள் தீப்ஷீ.

 

வெளியே வந்த டாக்டர் , ” பயப்படும்படி எதுவும் இல்லை . மயக்கம் மருந்து தந்ததால் கொஞ்சம் சோர்வா இருக்காங்க.”

 

” டாக்டர் இருந்தாலும் ஃபுல் பாடி செக்கப் பண்ணுங்க. ”

 

” குளுக்கோஸ் ஏறுது . ஏறிமுடிச்சதும் எல்லா டெஸ்ட்டும் எடுக்க சொல்றேன் . நீங்க வீட்டிக்கு கூட்டிட்டு போலாம். ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தால் போதும் . நல்லா ஆரோக்கியமான உணவை கொடுங்கள் . ரிப்போட்ஸ் வந்ததும் என்ன வந்து பாருங்க.”

 

” தேங்க்ஸ் டாக்டர். ”  என்றாள் தீப்ஷீ .

 

வீட்டில் உள்ளவர்களுக்கும் சந்தியாவிற்கும் தகவல் சொன்னாள் தீப்ஷீ .

 

சத்யா இருக்கும் அறைக்கு சென்ற தீப்ஷீ , சத்யாவை அணைத்துக் கொண்டு அழுதவள். அவனது கையை பிடித்துக் கொண்டாள் .

 

” எனக்கு ஒன்னும் இல்லை அம்மு. நீ அழாதே. ”  என்றான் சத்யா .

 

அவள் கேட்கவே இல்லை அழுதுக் கொண்டே இருந்தாள் .

 

” அம்மு , நீ அழுவது கஷ்டமா இருக்கு. ”

 

வேகமாக எழுந்த தீப்ஷீ தன் கண்களை துடைத்தவள் , ” சத்யா எதுக்காக உன்ன கடத்தி , அடைச்சி வெச்சிருந்தாங்கனு சொல்லு . நான் அப்படியே வீடியோ எடுத்துக்குறேன் .”  என்றாள் தீப்ஷீ .

 

” ஓகே அம்மு .”

 

” நான் வேலை செய்யும் ஆபீஸ்ல தப்பு நடப்பதை நான் கண்டு பிடிச்சேன் . என்னால அவங்களுக்கு பிரச்சனை வரும்னு  நினைச்சாங்க .

 

அதனால , ஒரு நாள் என்னை வேலையை காரணம் காட்டி எல்லோரும் போகும் வரை வேலை வாங்குனாங்க .

 

எல்லோரும் போனதும் , என்னையும் வேலை முடிஞ்சதுனு போக சொன்னாங்க .

 

நான் பார்க்கிங் போய் என் காரை திறந்தேன் . பின் யாரோ என் மூக்கில் துணிய அமுக்குனாங்க .

 

நான் கண் திறந்த போது என்ன  ரூமில் ஒரு சேரில் கட்டி வெச்சிருந்தாங்க .

 

சந்தரன் , எம்டியோட பையன் என் முன் வந்தான் .

 

‘ இங்க பாரு சத்யா , இந்த ஊர் உலகத்தை பொருத்தவரை நீ இறந்துட்ட . நான் ஏன் உன்ன கொல்லலனு தெரியுமா . அதுக்கு மூணு காரணம் இருக்கு . எங்கள பற்றிய தகவலை நீ எங்கோ ஒளிச்சி வெச்சிருக்க. அது எங்கனு சொல்லிடு .

 

இரண்டாவது , எப்படி நீ எங்க சிஸ்டத்தை ஹாக் பண்ணனு சொல்லு . மற்றும் உன்னைப் போல வேற யாரும் நாங்க செஞ்சதை கண்டுபிடிக்காம இருக்க நாங்க என்ன செய்யணும்னு சொல்லிடு .

 

மூன்றாவது , எனக்கு உன் உதவி வேணும் . நீ என்னோடு சேர்ந்தால் . நான் இது போல் பெருசா கிரிமினல் வேலை செஞ்சி நிறைய பணம் சம்பாதிப்பேன்‌. ‘ என்றான் .

 

நான் முடியாதுனு சொன்னேன்.

 

‘ அப்போ நீ சாகுறவரை இந்த ரூம்ல தான் இருக்கணும் . தனியா இருக்க பிடிக்காமல் நீயே தற்கொலை செய்துக்கணும் . இல்லணா  என்னோடு சேர்ந்து நான் சொல்ற வேலை செய்யணும் . நான் உன்ன கொல்ல மாட்டேன். உன்ன மாதிரி அறிவாளி எனக்கு தேவை. ‘  என்றவன் சென்றுவிட்டான் .

 

நான் அந்த சின்ன ரூம்ல தான் இருப்பேன் . அவங்களுக்கு தோணும் போது எனக்கு சாப்பாடு தருவாங்க .

 

சந்தரனை தவிர வேற யாரும் ரூமிற்குள் வரமாட்டாங்க . அவன் என்ன பார்க்க வரும் போது மட்டும் எனக்கு மயக்க மருந்து கலந்த உணவை தந்துடுவாங்க .

அவன் வரும் போது என்ன சேரில் கட்டி போட்டு வைப்பாங்க . அவன் என் கிட்ட பேசிட்டு போகும் போது  மயக்கம் மருந்த ஸ்பிரே பண்ணிடுவான். நான் கண் திறக்கும் போது ரூம் பூட்டிருக்கும் , கட்டு அவிழ்த்திருக்கும் .

நான் இருந்தது சவுண்ட் ப்ரூப் ரூம் , ஜன்னல் கிடையாது , தப்பிக்க வழி கிடையாது .

சந்தரன் கேட்ட எதுக்கும் நான் சம்மதிக்கவில்லை  . வாழ்வே வெறுப்பா இருந்தது . இருந்தும் என் குடும்பத்துக்காக நான் பொறுமையா காத்திருந்தேன். எனக்கு தெரியும் என் அம்மு ஒரு நாள் , நான் அவளுக்கு விட்டு சென்ற க்ளுவை வெச்சு என்ன காப்பாற்ற வருவாள்னு . அந்த நாளுக்காக தான் நான் காத்திருந்தேன். ” என்றான் சத்யா .

வீடியோவை நிறுத்திய தீப்ஷீயின் கண்களில் கண்ணீர்.

” அம்மு , எல்லாம் முடிஞ்சிடிச்சு. இன்னும் எதுக்கு அழற? ஆனா மாஸ்டரும் , நீயும் நோக்கு வர்மம் கத்துக்க சொன்னீங்க . நான் கற்றுக்கொண்டிருந்தால் அந்த சந்தரனை வசப்படுத்தி எப்பொழுதோ தப்பித்திருப்பேன் . என் கை , காலை கட்டாமல் இருந்திருந்தால் அவனை எப்பொழுதோ அடித்திருப்பேன் , அதுவும் என்னால் செய்ய முடியல்லை. ”  என்றான் சத்யா .

” சத்யா … ”  என்று ஓடி வந்தார் கமலா .

எல்லோரும் அவர் பின் வந்தனர்.

எல்லோரும் கண்கலங்க மகிழ்ச்சியோடு சத்யாவிடம் பேசினர் .

சத்யாவை உயிரோட பார்த்த ராஜன் , ஈஸ்வரியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . இனி மகள் வாழ்க்கை என்னாகுமோ என்று கவலையில் இருந்தவர்களின் வேண்டுதலுக்கு இறைவன் பதில் தந்துவிட்டார் .

 

சந்தியா மட்டும் அமைதியாக சத்யாவை பார்த்துக் கொண்டு நின்றாள்  .

 

அவளை சத்யாவும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான் .

 

” சத்யாவை பார்த்து வீட்டிற்கு கூட்டிட்டு போங்க. ”  என்று பொதுவாக எல்லோரிடமும் சொல்லிய தீப்ஷீ சத்யாவிடம் , ” சத்யா வேலை இருக்கு நைட் வரேன். ”  என்று சொல்லிவிட்டு , தீப்ஷீ செல்ல திரும்பினாள் .

 

” அம்மு , ஒரு நிமிஷம். ” என்றான் சத்யா .

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்