Loading

 

 

அத்தியாயம் 27

 

“ ரொம்ப சந்தோஷமா இருக்கு சரண்யா ‌.” என்றுக் சொல்லிக் கொண்டே சத்யாவோடு வந்தார் கமலா .

 

 

 

“ எனக்கு என்ன செய்றதுனே ஒன்னும் புரியலை கமலா . இந்த தீபு வேற அழுதுட்டே இருக்கா. “ என்றார் சரண்யா .

 

 

 

“ முதலில் அண்ணனுக்கு ஃபோன் செஞ்சு சொல்லுங்க . எங்கிருக்கா தீப்ஷீ ? “ என்றுக் கேட்டார் கமலா .

 

 

 

“ அவர் வந்தா தான் எனக்கு புரியும் . தீப்ஷீ அவ ரூமில் இருக்கிறாள் , அவளை சமாதானம் செய்யுங்க கமலா. “  என்ற சரண்யா போனை எடுத்தார் தினேஷிற்கு போன் செய்வதற்கு .

 

 

 

கமலா உள்ளே போக , அவரை பின் தொடர்ந்து சத்யாவும் வந்தான் .

 

 

 

“ நீ எங்கு வர சத்யா ? “  என்றுக் கேட்டார் கமலா.

 

 

 

“ கமலாமா , அம்மு அழறா என்னால தாங்க முடியலை , நான் சொன்னா தான் அவ அழமாட்டாள் . நானும் வரேன் உங்களோடு அவ ரூமுக்கு. “  என்றான் சத்யா .

 

 

 

“ சத்யா… இப்போ நீ அவளைப் பார்க்க கூடாது. வீட்டிக்கு போறீயா இல்லை இங்கு சோஃபாவில் உட்கார்றியா ? “ என்றுக் கேட்டார் கமலா .

 

 

 

“ நான் இங்கே இருக்கேன் கமலாமா. “   என்ற சத்யா அமைதியாக சென்று சோஃபாவில் உட்கார்ந்தான் .

 

 

 

ரூம் உள்ளே சென்றார் கமலா , “ ஏன் தீப்ஷீ அழுற ? “  என்றுக் கேட்டார் .

 

 

 

தீப்ஷீ ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டாளே தவிர ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை தீப்ஷீ .

 

 

 

ரூமிற்குள் வந்த சரண்யா , “ நீங்க வாங்க கமலா . இவளை அவங்க அப்பா வந்து திட்டினால் தான் சரிபட்டு வருவாள் . உங்களுக்கு மருந்து செய்ய தெரியுமா கமலா ? “  என்றுக் கேட்டார் சரண்யா .

 

 

 

“ தெரியும் சரண்யா. “ என்றார் கமலா .

 

 

 

“ சரி வாங்க. மருந்து செய்ய உதவி செய்யுங்க கமலா.” என்றார் சரண்யா . இருவருமாக சமையல் அறை சென்றனர்.

 

 

 

வேகமாக வீட்டிற்குள் நுழைந்த தினேஷ் . அங்கு சோபாவில் உட்கார்ந்திருந்த சத்யா , சர்வேஷ் மற்றும் தேவ்வை அதிர்ச்சியாக பார்த்தவர் .

 

 

 

‘ இவனுங்களுக்கு இங்கு என்ன வேலை ? ‘ என்று மனதில் நினைத்தவர் . வெளியே , “ சரண்யா. “ என்று அழைத்தார் .

 

 

 

ஹாலிற்கு வந்தார் சரண்யா .

 

 

 

“ எங்க தீப்ஷீ ? “ என்றுக் கேட்டார் தினேஷ் .

 

 

 

“ அவ ரூமில் அழுதுட்டு இருக்கா , நீங்க தான் அவ அழுகையை நிறுத்தணும் . அவ அழுவதை நிறுத்தலைனா ஜுரம் வந்துடும். முதல்ல அவளை சமாளிங்க. பின் யார் யாருக்கு ஃபோன் செய்யணும் , எப்போ ஃபங்ஷனு அப்புறம் முடிவு செய்யலாம். “ என்றார் சரண்யா .

 

 

 

ரூம் உள்ளே சென்றார் தினேஷ் .

 

 

 

“ தீபு ஏன் டா அழுற? “ என்றுக் கேட்டார் .

 

 

 

அவள் அவரின் கையை பிடித்துக் கொண்டு அழுதாளே தவிர ஒரு வார்த்தை கூட பேசவில்லை .

 

 

 

‘ இவளிடம் பொறுமையாக பேசினால் சரிப்பட்டு வராது .’ , என்று நினைத்தவர் , “ தீப்ஷீ அழுகையை நிறுத்து . எதுக்கு அழுறனு சொன்னா தானே தெரியும் . மெச்சூர் ஆவது இயற்கை தான் அதற்கெல்லாம் நீ பயப்பட தேவையில்லை .” என்றார் தினேஷ் .

 

 

 

“ நான் அதுக்கு பயப்படலை பா . எங்க மிஸ் கூட ஏஜ் அட்டன் பண்றதைப் பத்தி சொல்லிக் கொடுத்திருக்காங்க. “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

“ அதான் தெளிவா சொல்றீயே . பின் எதுக்கு அழுறனு சொன்னா நான் தெரிஞ்சிப்பேன்? “  என்றார் தினேஷ் .

 

 

 

“ என் கிளாஸ்மேட் ஏஜ் அட்டன் பண்ணதுக்கு அப்புறம் , அவங்க வீட்டில் அவளை பாய்ஸ் கிட்ட பேசக் கூடாதுனு சொன்னார்களாம் . அதுப் போல் நீங்களும் சொல்லிடுவீங்களோனு   பயப்படுறேன் . என்னால சத்யாவோடு பேசாம இருக்க முடியாது பா. “  என்றாள் தீப்ஷீ .

 

 

 

‘ இதுக்கு தான் இவ்வளவு அக்கபோரா. ‘  என்று மனதில் நினைத்தவர் . அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார் .

 

 

 

“ ஏங்க அவளை வெளிய கூட்டிட்டு வரீங்க . இந்த மாதிரி நேரத்தில் இவ ஆண்களை பார்க்க கூடாது .” என்றார் சரண்யா .

 

 

 

“ நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த எல்லாவற்றுக்கும் பின் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று நான் நம்புறேன் . இருந்தும் இப்போ நான் இவளை வெளியே கூட்டிட்டு வந்தது இவளோட பயத்தை போக்கவே. “ என்றார் தினேஷ் .

 

 

 

பின் அவர் சத்யாவை பார்க்க , அவனும் கண்களில் நீரோடு , பயந்த நிலையில் இருப்பது புரிந்தது தினேஷிற்கு .

 

 

 

“ இங்க பார் தீபு . உனக்காக யார் வர்மக் கலை கத்துக்க முன்வந்தது? “ என்றுக் கேட்டார் தினேஷ் .

 

 

 

“ சத்யா. “  என்றாள் தீப்ஷீ .

 

 

 

“ உன்ன எல்லா இடத்திற்கும் பாதுகாப்பாய் அழைத்து செல்வது யார் ? “ தினேஷ் .

 

 

 

“ சத்யா .” தீப்ஷீ .

 

 

 

“ இப்போதுக் கூட யார் உன்னோடு இந்த இக்கட்டான நிலையில் இருந்தது ? “ என்றுக் கேட்டார் தினேஷ் .

 

 

 

“ சத்யா. “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

“ பின் என்ன பயம் உனக்கு ? இது ஜஸ்ட் ஸ்மால் சேஞ்ச் தான். எல்லாருக்கும் நிகழ்வது தான். அதனால, உங்க இரண்டு பேரின் நட்புக்கு எந்த தடையும் இல்லை சரியா . ஒரு வாரமோ பத்து நாளோ அது வரை நீ வெளியே போகக் கூடாது . பின் எப்போதும் போல உன் நண்பன் சத்யாவோடு எங்கு வேண்டுமானாலும் போகலாம் . ஆனா தனியா எங்கும் போகக்கூடாது புரியுதா தீப்ஷீ? “ என்றார் தினேஷ் .

 

 

 

“ ரொம்ப தேங்க்ஸ் பா. “  என்ற தீப்ஷீ அவரை அணைத்துக் கொண்டாள்  .

 

 

 

“ சரி சத்யா , நான் சீக்கிரமா வந்துவிடுவேன் . அதுவரைக்கும் டெய்லியும் நீ என்ன பார்க்க இங்கு வரணும். “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

“ நான் வராமல் இருப்பேனா அம்மு . டெய்லியும் உன் கிளாஸில என்ன நடக்குதுனு  கேட்டு வந்து உனக்கு சொல்றேன் . அதனால, நீ எந்த கிளாஸையும் மிஸ் பண்ண மாட்ட. “ என்றான் சத்யா .

 

 

 

‘ முன்பு பயத்தில் அழ தயாராக இருந்தான் இப்போது பேச்சை பார் . என்றுமே நீ நட்பில் உயர்ந்தவன்னு நிரூபிச்சிக்கிட்டே இருக்க சத்யா. ‘  என்று மனதில் நினைத்தார் தினேஷ் .

 

 

 

அனைவரும் மகிழ்ச்சியில் இருக்க . ‘ இவள் என்று என்னை புரிந்துகொள்ள போகிறாள் என்று தெரியவில்லை . இவளுக்கு சத்யா மட்டும் தான் முக்கியம். நான் என்றுமே இவள் கண்களுக்கு தெரியமாட்டேன். ‘  என்று வருந்தினான் தேவ் . ஊட்டியில் பல பெண்களின் கனவு நாயகன் மற்றும் சாக்லேட் பாய் தேவ் இங்கு தீப்ஷீயின் பார்வைக்கு ஏங்கினான் .’

 

 

 

 

 

 

அந்த பெண்ணும் ஃபோன் பேசி விட்டு வர . தீப்ஷீ தன் நினைவுகளிலிருந்து வெளி வந்தாள் . தேவ்வும் அப்போ தீப்ஷீ பெரியவள் ஆன நிகழ்வை தான் நினைத்தான் . ‘எது எப்படியோ தீப்ஷீ எனக்கு வாழ்க்கை துணையாகக் கிடைத்தாளே. அதுவே போதும்.’ என்று நினைத்து பெரு மூச்சு விட்டான் தேவ் .

 

 

 

“ அக்கா , ரொம்ப தேங்க்ஸ். நீங்க இல்லணா நான் என்ன பண்ணியிருப்பேனே தெரியலை . அப்பா வந்துடு வாங்க . நீங்க கிளம்பறதுணா கிளம்புங்க. “

 

 

 

“ இல்ல மா . அவங்க வந்ததும் நாங்க போறோம். “ தீப்ஷீ ‌.

 

 

 

அந்த பெண்ணின் அப்பா வர , தீப்ஷீக்கும், தேவ்விற்கும் உதவியதற்கு நன்றி சொல்லியவர் தன் மகளை அழைத்துச் சென்றார் .

 

 

 

இருவரும் காருக்கு சென்றனர்.

 

 

 

“ அடுத்து , சில்வர் கேஸ்கேட் நீர்வீழ்ச்சி போலாமா ? “  என்றுக் கேட்டான் அசோக் .

 

 

 

“ ஓகே .” என்றான் தேவ் .

 

 

 

இருபது நிமிட பயணத்தில் நீர்வீழ்ச்சி வர மூவருமே இறங்கினர் .

 

 

 

நீர்வீழ்ச்சியின் சத்தம் இனிமையாக இருந்தது , நீர்வீழ்ச்சியில் நனைய அனுமதியில்லை . கம்பிகளுக்கு பின் நின்று ரசிக்க மட்டுமே முடியும் .

 

 

 

கம்பிகள் அருகே வந்து நின்றாள் தீப்ஷீ , கீழே விழும் நீரின் சாரல் அவள் மேல் விழுந்தது .

 

 

 

அவள் முகத்தில் விழுந்த நீர் துளியை பார்த்த தேவ்விற்கு ரோஜா பூவின் இதழில் விழுந்த பனித்துளி போல் தெரிந்தது .

 

 

 

தீப்ஷீ நீர்வீழ்ச்சியை பார்க்க , தேவ் அவளை பார்ப்பது போல் இருந்த காட்சியை அழகாக போட்டோ எடுத்தான் அசோக் .

 

 

 

“ மிஸ்டர் தேவ் , போட்டோ எடுக்கணும் இரண்டு பேரும் ஒன்னா நில்லுங்க. “ என்றான் அசோக் .

 

 

 

போட்டோ எடுக்க விருப்பம் இல்லை என்றாலும், அசோக் முன்பு எதையும் காண்பிக்க விரும்பாத தீப்ஷீ அமைதியாக தேவ் அருகே நின்றாள் .

 

 

 

பின் அவர்கள் ,  கோடாய் ஏரிக்கு சென்றனர் .

 

 

 

தேவ் , தீப்ஷீ , படகோட்டி மட்டும் இருபது நிமிடம் ஏரியை படகில் சுற்றி வந்தனர் .

 

 

 

தீப்ஷீ இந்த திடீர் கல்யாணத்தால் இருந்த மன அழுத்தம் குறைந்தது போல் உணர்ந்தாள் . தேவ்வோ , தீப்ஷீயோடு ஆன இந்த பயணத்தை விரும்பி நேசித்தான் .

 

 

 

பின் அங்கிருந்த ஹோட்டலில் ,  நால்வரும் லன்ச்சை ஆர்டர் செய்து உட்கார்ந்திருந்தனர் .

 

 

 

“ மிஸ்டர் தேவ் இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு ஒன் டே ட்ரெக்கிங் போறாங்க . கொஞ்சம் நேரம் மலையில் ஏறுவது. இருட்டிய பின் ட்ரெக்கிங் வந்தவர்களோடு  கேம்ப் ஃபயர் அமைத்து பேசுவது , விளையாட்டு பின் இரவு உணவு . டென்ட் அமைத்து இயற்கையோடு இரவு தூக்கம் . காலைல சூரிய உதயத்தை பார்க்கலாம் பின் மீண்டும் மலை மேல் ஏறுவது . மாலையில் மீண்டும் கீழே வரலாம் . நீங்க போறீங்களா?” என்றுக் கேட்டான் அசோக் .

 

 

 

‘ இவனோடு டென்ட்டில் என்னால் தூங்க முடியாது .’ என்று நினைத்த தீப்ஷீ வேகமாக , “ இல்ல வேண்டாம் , ஐ எம் வெரி டயர்டு ஐ காண்ட் கோ ட்ரெக்கிங் .”  என்றாள் தீப்ஷீ .

 

 

 

அசோக் கேள்வியாக தேவ்வை பார்க்க “ ட்ரெக்கிங் வேண்டாம். “ என்றான் தேவ் .

 

 

 

“ ஓகே இன்னும் நிறைய இடம் இருக்கு நாம பார்க்க . இன்னைக்கு தூண் பாறைகள் , பிரையன்ட் பார்க் போலாம்.” என்றான் அசோக் .

 

 

 

“ ஓகே. “ என்றான் தேவ் .

 

 

 

“ நாளைக்கு டால்பின் நோஸ் , கரடி ஷோலா நீர்வீழ்ச்சி , குக்கல் குகைகள் , பைன் காடு , ஷெம்பகனூர் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பார்க்கலாம் . கடைசியா குறிஞ்சி கோயில் போலாம் , பன்னிரண்டாண்டிற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூவிற்கு தொடர்புடைய கோவில் அதுமட்டுமில்லாமல் அங்கிருந்து பார்த்தால் பழனி முருகர் கோவில் நமக்கு தெரியும் “ , என்றான் அசோக் .

 

 

 

“ வாவ். “ என்று ஆச்சரிய பட்டாள் தீப்ஷீ .

 

 

 

“ மிஸ்டர் தேவ் , நீங்க விரும்பினால் இன்னும் இரண்டு நாள் ட்ரிப்பை எக்ஸ்டன் செய்யலாம். “  என்றான் அசோக் .

 

 

 

“ இல்ல , கண்டிப்பாக நாளைக்கு சாயங்காலம் சென்னை கிளம்பணும். “  என்றான் தேவ் .

 

 

 

“ கார் பயணம் ஒரு புதுவித அனுபவத்தை தரும்னு தான் சத்யா நீங்க வரும் போது கார் அரேஞ்ச் பண்ணான் . நாளைக்கு நைட் மதுரைல உங்க இரண்டு பேருக்கும் பிளைட் டிக்கெட் புக் செஞ்சிடுவோம் . சென்னை ஏர்போர்ட்டில் சத்யா உங்களை பிக்கப் பண்ண வருவான்.  “ என்றான் அசோக் .

 

 

 

“ ஓகே. “ என்றான் தேவ் . மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர் ,  இவர்களின் கார் தூண் பாறைகளை நோக்கி சென்றது .

 

*****

 

சென்னை விமானநிலையம் ,

 

” அம்மு. ” என்றான் சத்யா .

 

தீப்ஷீயும், தேவ்வும் அவன் அருகே வந்தனர் .

 

” தேவ் , எப்படி இருந்தது ட்ரிப் ? ” என்றுக் கேட்டான் சத்யா .

 

” சூப்பர் ட்ரிப் . ஐ என்ஜாய்டு இட். ” என்றான் தேவ் .

 

பேசிக் கொண்டே மூவரும் வெளியே வர அங்கு சத்யா புக் செய்த கேப் வர , மூவரும் ஏறினார்கள் .

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்