Loading

அத்தியாயம் 18

 

” ரொம்ப நல்லவர் பா . ” என்றார்  . வெகுளியான மனிதன் என்பதால் கேட்டதும் எதையும் யோசிக்காமல் பதில் அளித்தார் .

 

” பெண்களிடம் எப்படி ? எதாவது கெட்ட பழக்கம் இருக்கா ? ” என்றுக் கேட்டான் சத்யா .

 

” உள்ள என்ன நடக்குதுனு எனக்கு தெரியாது . ஆனா எனக்கு தெரிந்தவரை பெண்களிடம் அவர் தள்ளியே இருப்பார் . அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல அது எனக்கு நல்லா தெரியும் . அதோ அங்க பாருப்பா அந்த பெட்டி கடைல தான் இங்கு வேலை செய்றவங்க போய் சிகரெட் ஊதி தள்ளுவாங்க . தமிழ் சார் அங்கு போய் நான் பார்த்ததே இல்ல . ” என்றார் .

 

” ரொம்ப தேங்க்ஸ் ணா.   ” என்ற சத்யா கிளம்ப போக .

 

” தம்பி ஒரு நிமிஷம் , நீ ஏன்பா தமிழ் சார் பத்திக் கேட்ட? ” என்றார் செக்யூரிட்டி  .

 

‘ இப்போதாவது இவருக்கு இந்த கேள்வியை கேட்க தோனிச்சே . ‘ என்று நினைத்த சத்யா .

 

” என் தோழிக்கு அவரை தான் மாப்பிள்ளையா பார்த்திருக்கோம் , அதான் அவரைப் பத்தி தெரிஞ்சிக்க வந்தேன் . ”  என்ற சத்யா வீட்டை நோக்கி சென்றான் .

 

செக்யூரிட்டிற்கு பயத்தில் கை நடுங்க வேகமா அன்பனுக்கு போன் செய்தார்.

 

ரிங்டோன் சத்தம் கேட்டு , தன் போனை எடுத்து பார்த்த தமிழன்பன் , ” எக்ஸ்க்யூஸ் மீ . ” என்று தீப்ஷீயிடம் சொன்னவன் போனை எடுத்து , ”

ஹலோ சொல்லுங்க . ”  என்றான் தமிழன்பன் .

 

” ஹலோ தமிழ் சார் யாரோ வந்து உங்களப் பத்திக் கேட்டாங்க , எனக்கு தெரியாம நான் எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டேன் கடைசியாதான் யாருணு கேட்டேன் உங்கள கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கு தெரிஞ்சவங்கணு சொன்னாங்க . ” என்றார் .

 

” நீங்க ஏன் பதட்டப்படுறீங்க . உண்மைய தான சொன்னீங்க. ஒன்னும் கவலை இல்ல . எப்போ வந்து விசாரிச்சாங்க ? ” என்றுக் கேட்டான் தமிழன்பன் .

 

” இப்போ தான் சார் ” .

 

” பார்க்க எப்படி இருந்தாங்க ? ”

 

” உங்க வயசு தான் இருக்கும் , பார்க்க அழகா தான் இருந்தார் . ப்ளூ ஜீன்ஸ் , ரெட் ஷர்ட் போட்டு இருந்தார் . ”

 

அது சத்யா தான் என்பது தமிழன்பனுக்கு புரிய, ” சரி நான் பார்த்துக்குறேன் . ”

என்ற தமிழன்பன் ஃபோனை வைத்தான் .

 

” எதாவது பிரச்சனையா ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” ஒரு பிரச்சனையுமில்லை . ” என்றான் தமிழனபன் .

 

காம்பவுண்ட் உள்ளே வந்த சத்யா , வீட்டிற்கு போகாம  அங்கிருந்த பார்க் சென்றவன் இன்னும் தமிழன்பனைப் பற்றி தெரிந்துக்கொள்ள தன் போனை கையில் எடுத்தான் . முகநூல் மற்றும் இன்ஸ்டவில் சென்றான் அங்கு தமிழன்பன் பெயர் , அவன் வேலை செய்யும் இடம் போட அவன் ப்ரோபைல் கிடைத்தது .

 

அதை திறந்துப் பார்த்தான் சத்யா . அவனின் தகவல் எல்லாம் மறைவாக இருப்பது புரிய , சரியாக அஞ்சே நிமிஷத்தில் தமிழன்பனின் அக்கவுண்ட்டை  ஹேக் செய்து அவனின் நண்பர்கள் , அவன் பேஜ்ஜில் உள்ள  போட்டோ , வீடியோ , ஷேட் ஹிஸ்டரி என்று எல்லாவற்றையும் பார்த்தான் சத்யா .

 

முன்பு ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதில்லை. ஆனா , இப்போ அவங்க முகநூல், இன்ஸ்டா சொல்லிடும் அவர்கள் பற்றி .

 

சத்யாவுக்கு தமிழன்பன் மேல் முழு நம்பிக்கை வர , எழுந்து தீப்ஷீ வீட்டிக்குச் சென்றான் .

 

வீட்டிக்குள் நுழைந்த சத்யா , தீப்ஷீ மற்றும் தமிழன்பன் தனியாக இருப்பதைப் பார்த்து , ‘ தப்பான நேரத்தில் வந்துவிட்டேனோ ? ‘ என்று நினைத்த சத்யா வேகமாக வெளியே செல்ல நினைத்து திரும்பினான் .

 

” சத்யா வாங்க . ” என்றான் தமிழன்பன் .

 

வேறு வழியில்லாத காரணத்தால் உள்ளே வந்த சத்யா , தமிழன்பன் அருகில் உட்கார்ந்துக் கொண்டான் .

 

பின் ஒவ்வொருவராக வெளியே வந்தனர் . ” உனக்கு என்னை பிடிச்சிருக்கா தீப்ஷீ ? யாரைப் பத்தியும் கவலைப் படாம உன் விருப்பத்தை வெளிப்படையா சொல் . ” என்றான் தமிழன்பன் .

 

தீப்ஷீ , சத்யாவை பார்க்க . சத்யா சம்மதம் என்பதுப் போல் தலை ஆட்டினான் , ” உனக்கு பிடிச்சிருந்தா சம்மதம் சொல் அம்மு . ” என்றான் சத்யா .

 

இவர்களின் உரையாடலை முதல் முறையாக பார்த்த மூவருக்கும் மனதில் சிறு நெருடல் இருந்தது .

 

” எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம் . ” என்றாள் தீப்ஷீ .

 

‘ தன்னை பிடித்திருப்பதாக சொல்லல்லையே . ‘ என்று நினைத்தான் தமிழன்பன் பின் அவனாக , ‘ ஒரே நாளில் அவள் என்னை விரும்ப வேண்டும் என்று நான் எதிர்ப்பார்ப்பதே தப்பு . இது சினிமா இல்லையே. ‘ என்று மனதை ஆறுதல் படுத்திக் கொண்டான் .

 

” ஆனா எனக்கு இரண்டு கண்டிஷன்ஸ் இருக்கு . உங்களுக்கு சம்மதம் என்றால் மேற்கொண்டு பேசலாம் . ” என்றாள் தீப்ஷீ .

 

” என்ன தீபு கண்டிஷன் அது இதுனு . இப்படியெல்லாம் பேசக் கூடாது ‌. ”  என்றார் தினேஷ் .

 

” அங்கிள் அவங்களை தடுக்காதீங்க . நீ சொல் தீப்ஷீ . ” என்றான் தமிழன்பன் .

 

” எனனோட கனவு ஐ.பி.எஸ் . நான் ஐ.பி.எஸ் ஆவதை நீங்க தடுக்க கூடாது . ” என்றாள் தீப்ஷீ .

 

” எங்க அப்பா நான் போலீஸ் ஆகணும்னு தான் ஆசைப்பட்டார் ஆனா , எனக்கு அதில் ஆர்வமில்லை அதனால் நான் வேறு வேலையை தேர்ந்தெடுத்தேன் . என் மனைவி ஒரு ஐ.பி.எஸ் என்பது எனக்கு மட்டுமில்ல நம்ம குடும்பத்துக்கே பெருமை தான் . என்ன அப்பா சரிதான ? ” என்றான் தமிழன்பன் .

 

” ஆமா தீப்ஷீ , நீ போலீஸ் ஆனா நான் தான் முதலில் சந்தோஷப்படுவேன் . ” என்றார் முரளி .

 

” தேங்க்ஸ் அங்கிள் . ”

 

” தீப்ஷீ , இரண்டாவது கண்டிஷன் என்ன ? ” என்றுக் கேட்டான் தமிழன்பன் .

 

” சத்யா என்னோட உயிர் நண்பன் . கல்யாணத்துக்கு அப்புறம் எங்க நட்புக்கு தடையா இருக்க கூடாது . நான் எப்பவும் போல தான் சத்யா கிட்ட பேசுவேன் . என்ன மாத்த முயற்சி செய்யக்கூடாது .”

 

” உன் நலனுக்காக ஓடிப் போய் என்னப் பத்தி பேங்க்கில் விசாரித்து வந்திருப்பதிலேயே தெரியுது உன் மேல் எவ்வளவு அன்பு , அக்கறை இருக்குனு எனக்கு புரியுது . கண்டிப்பா உங்க நட்புக்கு தடையா இருக்க மாட்டேன் . ” என்றான் தமிழன்பன் .

 

” சாரி சார் . எதாவது கஷ்டப்படுத்திருந்தால் . ”  என்று சத்யா முடிப்பதற்குள் .

 

” சார் என்று சொல்லதீங்க , பெயர் சொல்லியே கூப்பிடுங்க . நீங்க விசாரித்ததில் தப்பில்லை. ” என்றான் தமிழன்பன் .

 

” அன்பா , இதுக்காக தான் நான் நேத்து நைட் உன்னைப் பத்தி இரண்டு பேர் கிட்டையும் சொல்லல்லை . சொல்லியிருந்தால் நைட் என்றுக் கூட பார்க்காமல் இந்த சத்யா , உங்க வீட்டிற்கே வந்திருப்பான் ‌‌. ”  என்ற தினேஷின் வார்த்தை குறை சொன்னாலும் குரல் பெருமையை காட்டியது .

 

” உண்மை தான் அங்கிள் . ”  என்று தமிழன்பனும் சத்யாவை கேலி செய்தான் .

 

” அப்பா , முதலில் மோதிரம் மாத்த சொல்லுங்க . ”  என்றான் சத்யா .

 

தீப்ஷீ , தமிழன்பன் அருகருகே நிற்க வைத்து மோதிரம் மாற்றினர் . சத்யா போட்டோ எடுத்தான் . அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியிருக்க கவிதா மட்டும் கோபமாக இருந்தார் .

 

கவிதாவிற்கு , சத்யாவை பிடிக்கவில்லை போல் . ‘ திருமணம் மட்டும் முடியட்டும் உன்ன இவன் பக்கம் கூட அனுப்ப மாட்டேன் . ‘ என்று நினைத்தவர் தீப்ஷீயை பார்த்து சிரித்தார்  .

 

” கல்யாணம் சீக்கிரமா செய்யணும்  . இன்னும் பத்து நாளில் ஒரு முகூர்த்தம் இருக்கு .  அன்னைக்கே கல்யாணத்தை வெச்சுக்கலாமா ? ” என்றுக் கேட்டார் தினேஷ் .

 

” எங்களுக்கு சம்மதம் தான் ஆனா , அதுக்குள்ள எல்லா வேலைகளையும் உங்களால் செய்ய முடியுமா ? ” என்றுக் கேட்டார் கவிதா .

 

” எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க . அதெல்லாம் தடபுடலா செஞ்சிடலாம் .” என்றார் தினேஷ் பெருமையாக .

 

” ஒரு வாரத்துக்குள்ள புடவை , நகை எல்லாம் வாங்கணும் . நாளையிலிருந்து ஷாப்பிங்கை ஆரம்பிக்கலாம் . இன்னைக்கே பத்திரிகை டிசைன் முடிவு செய்திடலாம் , மண்டபமும் பார்த்திடலாம் . ” என்றார் தினேஷ் .

 

” தினேஷ் , மண்டபம் எனக்கு தெரிந்த இடத்திலே பேசிடலாம் .”  என்றார் முரளி .

 

” சாயந்தரமா நீயும் நானும் மண்டபம் பார்க்க போலாம் . சத்யா , நீ மாப்பிள்ளையோடு போய் பத்திரிகை முடிவு செய்து , ஆர்டர் கொடுத்துவிட்டு வா . ” என்றார் தினேஷ் .

 

” சரிப்பா . ” என்ற சத்யா , தமிழன்பன் போன் நம்பரை வாங்கிக் கொண்டான் . அவனுக்கு ஏற்கனவே ஹாக் செய்த போது நம்பர் தெரியும் இருந்தாலும் யாரும் சந்தேகப்படக்கூடாது என்று தமிழன்பனிடம் நம்பர் கேட்டுக் கொண்டான் .

 

தினேஷ் சரியாக எல்லாவற்றையும் திட்டமிட்டார் . எல்லாம் பேசி முடித்தப் பின் விடைப்பெற்றனர் தமிழன்பன் குடும்பத்தினர் . தமிழன்பன் கண்களால் தீப்ஷீயிடம் விடைப்பெற்றான் . தீப்ஷீயும் தலை ஆட்டினாள் .

 

வேகமாக தன் போனை எடுத்துக்கொண்டு ரூமிற்க்கு போனாள் தீப்ஷீ .

 

அவள் பின்னே வந்த சத்யா , ” என்ன அம்மு அதுக்குள்ள உன் உட்பிய மிஸ் பண்றியா அதான் ஃபோன் பேச போறீயா ? இப்போ வண்டியில் இருப்பார் கொஞ்ச நேரம் கழிச்சி போன் செய் . ” என்று வம்பிழுத்தான் .

 

” நான் ஏன் அவருக்கு ஃபோன் பண்ணணும் சத்யா . நான் நேத்திருந்த டென்ஷன்ல சந்தியா கிட்ட உன் சம்மதத்தை சொல்லவே இல்லை .  நேர்ல போய் சொல்லி அவளின் சந்தோஷத்தை பார்க்க தான் எனக்கு ஆசை ஆனா , இனிமேல் என்ன வெளியில் விடமாட்டாங்க அதான் ஃபோனில் சொல்ல வந்தேன் . ”

 

” அம்மு , உனக்கு தமிழன்பனை பிடிச்சிருக்கா ? ” .

 

” எனக்கு சரியா சொல்ல தெரியலை சத்யா . ஆனா , அவரை வேண்டாம் என்று சொல்ல என்க்கிட்ட காரணம் இல்லை . எனக்கு வேண்டிய இரண்டு கண்டிஷனுக்கும் சம்மதம் கிடைச்சாச்சு, பிறகென்ன கவலை‌. அதான் சம்மதம் சொன்னேன் அதுவும் இல்லாமல் என் சத்யாவுக்கு அவரை பிடிச்சிருக்கே . கண்டிப்பா நீ சூஸ் பண்ணவங்க தப்பானவரா இருக்க மாட்டாங்க . ”

 

” ஆமா அம்மு , தமிழன்பன் ரொம்ப நல்ல டைப் . ”

 

” சரி சத்யா , நான் சந்தியா கிட்ட பேசப் போறேன் . நீயும் பேசுறியா ? ”

 

” நீயே பேசிக்கொள் , என்ன விட்டுடு . ”  என்ற சத்யா வெளியில் ஓடிவிட்டான் .

 

அதைப் பார்த்து சிரித்துக் கொண்டே சந்தியாவுக்கு போன் செய்தாள் தீப்ஷீ .

 

” ஹலோ சந்தியா , நல்லாயிருக்கியா ? ” .

 

” நான் நல்லா இருக்கேன் . சத்யா எப்படி இருக்கிறார் ? நீ எப்படி இருக்க ? ” .

 

” இந்த உலகத்திலே நீ மட்டும் தான் டி இப்படி நலம் விசாரிப்ப . மற்ற எல்லோரும் நான் நல்லா இருக்கேன் , நீ எப்படி இருக்க ? என்று தான் கேட்பாங்க .”

 

” ஆமா நான் இப்படி தான் . ”

 

” சத்யா , கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான் . ”

 

” பொய் சொல்லாத தீபு . ”

 

” நிஜமா சந்தியா . நான் உண்மைய தான் சொல்றேன் . ”

 

” எப்படி தீபு . ”

 

நேற்று நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொன்னாள் .

 

” எனக்கு இன்னைக்கு என்கேஜ்மெண்ட் நடந்தது . ”

 

” என்ன திடீரென்னு ? ”

 

” ஆமா சந்தியா ஏதோ ஜாதகத்தில் நேரம் சரியில்லையாம் அதான் பத்து நாளில் எனக்கு அவசர கல்யாணம் . அதான் என்னால உன்ன நேர்ல பார்த்து சத்யா சம்மதம் சொன்னதை சொல்ல முடியலை. இனி பத்திரிகை வைக்க வீட்டுக்கு வருவேன் அப்போ தான் உன்ன பார்க்க முடியும் . ”

 

” சரி தீபு ” .

 

” என்ன சந்தியா இவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லியிருக்கேன் , உன் குரல சந்தோஷமே இல்ல . ”

 

” இப்போ கூட சத்யா என் கிட்ட பேசலையே . ”

 

” அதெல்லாம் நேரம் வரும்போது பேசுவான் . அதான் என் கல்யாணத்துக்கு நீ வரும்போது அவன் கிட்ட பேசு . ”

 

” எனக்கு பயமா இருக்கு தீபு . ”

 

” அப்போ நான் வேற ஆளை பார்த்து சத்யாவுக்கு கட்டிவைக்குறேன் . ”

 

” வேண்டாம் தாயே , நானே சத்யா கிட்ட பேசுறேன் . ”

 

” அது , அந்த பயம் இருக்கணும் . ” என்ற தீப்ஷீ நேரம் செல்வது தெரியாமல் தன் தோழியோடு பேசிக் கொண்டிருந்தாள் .

 

*****

 

மாஸ்கோவிலோ தேவ் ,

 

” நான் இங்கே

நீயும் அங்கே இந்த

தனிமையில் நிமிஷங்கள்

வருஷம் ஆனதேனோ ”

 

என்று அவனின் நிலையை உணர்த்தும் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான் .

 

” தீப்ஷீயோடு தான் பேச முடியலை , சரி என் மச்சானோடாவது பேசலாம் . ”  என்று தனக்கு தானே பேசியவன் , போனை எடுத்து சர்வேஷிக்கு போன் செய்தான் தேவ் .

 

” ஹலோ சர்வேஷ் . ”

 

” தேவ் , நல்லாயிருக்கியா ? டோர்னமெண்ட் எப்படி போகுது ? ”

 

” சூப்பரா போகுது சர்வேஷ் . நீ எப்படி இருக்க ? என்ன ஃபிசியா ? நான் போன் பண்ணால் தான் நீ பேசுவியா , நீயா ஃபோன் பண்ணமாட்டியா ? ”

 

” கொஞ்சம் ஃபிசி தான் தேவ் . இன்னைக்கு தீப்ஷீக்கு எங்கேஜிமெண்ட் டா அதான் என்னால் போன் பண்ண முடியலை . பத்து நாளில் கல்யாணம் டா இனி நான் ஃபிசி தான் . ”

 

ஒரு நிமிடம் தேவ்விற்கு ஒன்னும் புரியவில்லை , ” என்ன டா சொல்ற ? ”

 

” தீப்ஷீக்கு ஏதோ ஜாதகத்தில் டைம் சரியில்லைனு  அவசரமா கல்யாணம் செய்றோம் . ”

 

” எப்போ கல்யாணம் ? ”  என்று குரல் கடுமையாக வந்தது .

 

” இன்னைலிருந்து சரியா பத்து நாளில் கல்யாணம் . ”

 

” அந்த பையன் பெயர் ? ”

 

” ஓ ! மாப்பிள்ளை பெயரையா  ? தமிழன்பன்  .”

 

இதுக்கு மேல் இயல்பாக பேச முடியாது என்பதை உணர்ந்த தேவ் , ” நான் ஒரு வாரத்தில் வந்துடுவேன் சர்வேஷ் . வந்ததும் உன்கிட்ட முக்கியமான விசயத்தைப் பத்தி பேசணும் .”

 

” சரி டா . வந்ததும் பார்க்கலாம் . ” என்ற சர்வேஷ் போனை வைத்தான் .

 

கோபத்தில் எதையாவது உடைக்கலாமா என்று நினைத்த தேவ் , தன் கையில் இருந்த ஃபோனை உடைக்க நினைத்த தேவ் ஃபோனை மேலே உயர்த்தினான்.

 

‘ இதில் தானே என் தீப்ஷீ இருக்கிறாள் . ‘  என்ற நினைவு வர ஃபோனை உடைக்காமல் அதில் தீப்ஷீ படத்தை திறந்தான் .

 

” நான் உயிரோடு இருக்கும் வரை உன்ன யாருக்கும் விட்டுத் தரமாட்டேன் . ஒரு வாரத்­தில் கப்பை ஜெயிச்சி அங்கு வருவேன் வந்து  உன்னையும் வெல்வேன் . ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச் ஸ்வீட் ஹார்ட் . ”  என்றான் தேவ் .

 

விதி எதுவும் கூறாமல் அமைதியாக நின்றது . தேவ்வுக்கு ஏதோ பெருசா காத்திருக்கு போல் .

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அப்போ தேவ் க்கு தீப்ஷி இல்லையா … அது சரி தமிழன்பன் நல்ல பையன் தான் … ஆனா மாமியார் சரியில்லையே … என்ன நடக்க போகுதோ சஸ்பென்ஸா இருக்கே …

  2. தோழிக்காக அவளின் பாதுகாப்பிற்காக விரைந்து செயல்படுகின்றான் சத்யா.

    தீயின் இரண்டு விருப்பங்களையும் ஏற்றுக்கொண்டது நன்று.

    மாதக்கணக்கில் கூட நேரம் எடுத்துக்கொள்ளாமல் எதற்காக இத்தனை விரைவான திருமணம்?

    தீ மற்றும் சத்யாவின் நட்பை தேவ் மட்டுமே நன்கு புரிந்து மனதார ஏற்றுக்கொள்ள முடியும்.

    தமிழன்பன் என்னதான் அவர்கள் நட்பை எண்ணி வியந்தாலும் இயல்பான ஒன்றாக அவர்களது செயல்பாடுகளை எல்லா நேரமும் ஏற்க முடியாது.