குளிர் ஊசி – 4 ❄️
அவன் ஸ்டீயரிங் அழுத்தி கண்கள் மூடி திறந்து திரும்பியப் பின் தான் அனைவரும் கவனித்தனர் அவன் மாஸ்க் அணிந்திருந்ததை.
ஆனால் , யாருக்காக அணிந்திருந்தானோ அவள் கண்கள் மூடி லயித்திருந்தாள். அதுவே அவனுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதை சார்லியும் கண்டுகொண்டு மித்ரனை நக்கலாக கண்டான்.
அதை கவனித்தாலும் கருத்தில் கொள்ளாமல் “ஸாரி மேம் ” என்று கூறி, வண்டியை கிளப்பினான். இச்செயல் இன்னும் அதிர்வலையை ஏற்படுத்தியது அனைவருக்கும்.
“சரி சரி பொழச்சு போ தம்பி…… ஆங்…. நான் எங்க விட்டேன் ” என்று ஜனனி கேட்டதற்கு, லாரா ” டிரஸு ஃபிட்டு (fit) ” என்று இழுத்தாள்.
” அதே அதே என்ன ஃபிட், டிரஸ் மட்டும் இல்லை ஆளே ஃபிட் தான் . எப்படி தான் இப்படி சாப்பிடாம டயட்லாம் இருக்காங்க. இந்த மனுஷனுக்கு சுகர், பிரஷர், பிபி லாம் இருக்காதோ ” என்று கண் திறந்து சரணைப் பார்த்துக் கேட்டாள்.
“ஏண்டி இதுலாம் நமக்கு தேவையா ? ” என்று பரிதாபமாக கேட்டான்.
“ச்சீ…. போடா…. ஒரு கிரஷூனா எல்லாம் தான் தெரியனும் “
அனைத்தும் கேட்க கேட்க, கோபம் தலைக்கேறியது அவனுக்கு . இருந்தும் அமைதி காத்தான். அது ஏன் என்ற காரணம் தான் தெரியவில்லை. அவனுக்கே அது வியப்பாக தான் இருக்கின்றது.
“ஆனால், சொல்லக்கூடாது அப்படி ஒரு ஸ்மார்ட் பையன். என்ன முகம், என்ன கலரு, என்ன ஃபிட்டு (fit) , என்ன டிரஸு….. ஹே அவன் இவ்ளோ டிப்டாப்பா இருந்தும் பையன் ஃபாஸ்ட்டிராக் வாட்ச் தான் போட்டிருந்தான். நான் அவன் பெரிய ஆளுனு நினைச்சேன். ஆனா , அவன் ஒரு பில்டப் பார்ட்டி போல ” என்று யோசனையுடன் கூற, சார்லி அவன் கையில் அணிந்திருக்கும் ஃபார்டிஸ் வாட்ச்சையும், அவனையும் மாறி மாறி ஒரு நிமிடம் பார்த்தவன் நிமிர்ந்து மித்ரனை பாவமாக பார்த்தான்.
மித்ரனும் அவனைப் பார்த்து புருவம் உயர்த்தி கண்கள் சுருக்கி பார்த்தான். அதில் மித்ரன் சங்கடப்படுவது புலப்பட்டு சிரிக்க ஆரம்பித்தான் சார்லி. அதில் சுயநினைவு பெற்ற ஜனனி “சார்லி எதுக்கு சிரிக்கிற? ”
என்று கேட்டாள்.
“பம்கின் அதான் சொன்னேன்ல பேரை சொல்லாதனு . திரும்ப திரும்ப ஏன் இப்படி பேசுற? “என்று சரண் விதண்டவாதம் செய்யும் ஜனனியை அடக்க முயற்சி செய்தான்.
“டேய் நீ நிறுத்து, மாயா நீ சார்லியை எப்படி கூப்பிடுவ?”
மாயா முறைத்தாள். “ரொம்ப முறைக்காத . உனக்கும் எனக்கும் ஒரே வயசு தான். அதோட இந்த சரண் பயலுக்கும் எனக்கும் கூட தான் ஒரே வயசு. என்னமோ என்ன மட்டும் பேசக் கூடாதுனு சொல்லுறான் ” என்று அவள் பாட்டிற்கு புலம்ப , சரண் ஏனடா கேட்டோம் என்று தலையில் அடித்துக் கொண்டான்.
இருந்தும் விடாமல் கடைசி முயற்சியாக சரண் “அதுக்கில்லை டி …… ” என்று கூற வரும் முன் “நீ மூடு ” என்று கூறி கையை வாயில் வைத்து கூறிவிட்டு சார்லியின் பக்கம் திரும்பினாள்.
எங்கு மித்ரனை கண்டு விடுவாளோ என்று நினைத்து திசை திரும்பும் பொருட்டு “சரி உன் கிரஷ் பத்தி வேற ஏதாச்சும் இருந்தா சொல்லு ” என்று அவளிடம் கேட்டு விட்டு, சரண் புறம் திரும்பி “அவளுக்கு எப்படி கூப்பிடனுமோ அப்படியே கூப்பிடட்டும் . என்கிட்ட உரிமையா பேச எனக்கு யாரு இருக்கா . ஃபிரெண்ட்ஸும் கிடையாது. ஃபேமிலியும் கிடையாது “
“மச்சான்…. நோ சேட் (Sad) டாக்ஸ். பாப்பா லவ் மோடில் இருக்கேன். சோ, டிஸ்டர்ப் செய்யாம கம்முனு இரு “
“ஓகே ஓகே மச்சி…. நம்ம கிரஷ் பத்தியே பேசுவோம் ” என்று தனக்கு நண்பன் கிடைத்த ஆனந்தத்தில் திக்குமுக்காடி சார்லி கூற, அவனின் புது அவதாரத்தை பக்கவாட்டில் இருந்து கண்ட மித்ரனுக்கு வியப்பாக இருந்தது. ” இவனுக்கு சிரிக்கக் கூட தெரியுமா? “என்று நினைப்பவர்கள் மத்தியில் வாழ்ந்தவன் , இன்று இத்தனை பேர் முன்பு சிரிப்பது ஆச்சரியமாக இருந்தது . இவ்வாறு நினைத்துக் கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவன் காதில் ஒலித்தது கண்.
“ஏய் இதுலாம் ஒரு விஷயமா …… அதிகமா பசங்க தான் கண்ணு பத்தி சொல்லுவாங்க. நீ சொல்லுற? ” லாரா அவளின் தனித்துவமான ரசனையை கண்டு ஆச்சர்யம் கொண்டு கேட்டாள்.
“அது என்ன பசங்க? சைட் ரெண்டு பேருமே தான் அடிக்கிறோம். என் தங்கம் என் உரிமை….. ” என்று சரணின் கூலர்ஸை மாட்டிக் கொண்டே கூறினாள்.
“ஆமா ஆமா….உங்க கண்ணு தான் உங்க உரிமை தான் யாரு இல்லைனு சொன்னா? ” என்று மித்ரனும் திரும்பாமலேயே கூற, அனைவரும் அதிர்ச்சி ஆகினர் என்றால், சார்லி மட்டும் கடுப்பாகினான். அதை முகத்தில் காண்பிக்காதவாறு சட்டென்று தனது இயல்பை மாற்றிக் கொண்டான்.
“ஏப்பா நான் என் தங்கம்னு சொன்னது என் சைட்டை ” என்று அவள் கூறிய நொடி அவனின் வில்லான புருவம் ஏறி இறங்கியது.
“ஓஓஓ…….”என்று லாரா சிரித்துக் கொண்டே கூறி அவளின் தலையை தட்டிக் கொடுத்து, கையில் சூப்பர் என்று செய்து காண்பித்தாள்.
மாயா யோசித்துக் கொண்டே வந்தவள் சட்டென்று “உன் தங்கம் வைரமாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டா மகாராணி அவர்களே “
சார்லி” என்ன மேஜிக் சொல்லுற?”
மாயா சார்லியை கண்டு அர்த்த பார்வை வீச, அதில் ஏதோ புரிந்துக் கொண்ட சார்லி ” மச்சான் மேஜிக் என்ன சொல்லுறா? ” என்று ஜனனியின் புறம் நன்கு திரும்பி கொண்டு கேட்டான்.
” பெரிய விஷயம் எல்லாம் இல்லை. தங்கம்னா சைட்டு, வைரம்னா லவ்வு…. நீ நினைச்சது தான் ” என்று அசட்டையாக கூறினாள் ஜனனி.
“வைரம்மா மாறிடுச்சா ? ” என்று ஆர்வம் பொங்க கேட்டான் சார்லி. சரணுக்கு இப்பேச்சுகள் எதுவும் பிடிக்கவில்லை. தேவையில்லாததை கிளப்பி விட்டதற்காக தனது மனைவியை முறைத்து விட்டு கண்ணாடி புறம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
ஜனனி ” அதுக்குலாம் நிறைய கண்டிஷன்ஸ் இருக்கு “
” உனக்குமா? ” என்று சார்லி நொந்து கொண்டு கூற, “ஏன் வேற யாருக்கு இருக்கு? ” என்று கண் திறந்து இப்பொழுது தான் கவனித்தாள் சார்லியை .
ஆனால், அவன் நுணக்கமாக அதை உணர்ந்து சட்டென்று திரும்பி கொண்டு “இல்லை , எல்லாருமே கண்டிஷன் கண்டிஷனு சொல்லுறாங்க அதான் கேட்டேன் . நீ சொல்லு உனக்கு என்ன கண்டிஷனு ” என்று அப்பேச்சை மாற்றி விட்டான்.
ஜனனி” எனக்கு வரப்போறவன் வழக்கம் போல படிச்சிருக்கனும், ஆனால், சொந்த தொழில் வச்சிருக்க கூடாது “
சார்லி மற்றும் லாரா “என்ன? ” என்று அதிர்ந்து கேட்க, சரண் தலையில் அடித்துக் கொண்டான்.
“முழுசா கேட்டுட்டு அப்புறம் உங்க சந்தேகத்தைலாம் கேளுங்க ” என்று மாயா கூறிவிட்டு அலைபேசியில் தன்னை உள்ளிழுத்துக் கொண்டாள்.
லாராவும் சார்லியும் ஆர்வத்துடன் காண்பதை கண்டு அகம் மகிழ்ந்து, தனது நண்பர்களை பார்த்து ஏளனப் புன்னகை வீசி விட்டு, நன்கு நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள். பின்பு, கூற ஆரம்பித்தாள்.
“படிச்சு வேலை பார்க்கனும், ஆனா தொழில் வச்சிருக்கக் கூடாது.
அழகா இருக்கனும் ஆனால் பொண்ணுங்க கிட்ட பேசவே தெரிய கூடாது.
சமைக்க தெரியனும்னு அவசியம் இல்லை. ஆனால், கத்துகனும்.
நைட் ஷாக்கிங் கிப்ட்லாம் கொடுக்கனும் ”
“மூதேவி அது ஷாக்கிங் கிப்ட் இல்லை சர்ப்ரைஸ் கிப்ட் ” என்று கூறி சரண் அவளின் தலையில் அடித்தான்.
“ஹே …. நான் கரெக்ட்டா தான் சொல்லுறேன். எனக்கு ஹாரர் ஃபிலிம் தான் பிடிக்கும். அது மாதிரி தான் இதுவும் இருக்கணும் “
“வித்தியாசமான டேஸ்ட் தான் பா உனக்கு ” என்று லாரா கூற, ஜனனியை பற்றி தெரிந்து இருவரும் அவளை ஏற இறங்க கண்டு விட்டு திரும்பினர்.
” அப்போ இந்த கண்டிஷனுக்கு உண்டான காரணம் ? ” என்று மித்ரன் கேட்க,
“இன்னும் கண்டிஷனே முடியல தம்பி …. முழுசா கேளு ……
நான் கேட்கும் போதெல்லாம் எனக்கு ஃபூட் வாங்கி கொடுக்கனும்.
ஆளு எந்த கலரா வேணா இருக்கலாம் ஆனா கண்ணு ……. ☺️ “
“கண்ணு…… ” சார்லியும் அதே போல் இழுக்க…..
❤️❤️❤️❤️….
அவள் கூறியதில் சார்லி வெளிப்படையாகவே கடுப்பாகி விட்டான்.
கீர்த்தி☘️