Loading

அத்தியாயம் -23

நால்வரும் நிரஞ்சன் சொன்னதை ஆமோதித்தனர்.இவர்களுக்கு போட்டியாக வந்த இன்னொரு குழுவும் மற்ற இரண்டு வேறு குழுக்களும் அங்கே வந்து இருந்தனர்.இவர்களுக்கு கிடைக்கக் கூடிய ஆதரவைப் பார்த்து எல்லோருக்கும் ஒருவிதமான கலக்கமாகவே இருந்தது.

இங்கே பெரிய விஷயமே நடந்துக் கொண்டிருக்க சிற்பியோ நன்றாக தூங்கி எழுந்து நேரத்தைப் பார்க்க அது மணி பன்னிரெண்டு என்று காட்டியது.

நேரத்தைப் பார்த்து விட்டு “இவ்வளவு நேரமாகவா தூங்கிட்டேன் அத்தையும் என்னை எழுப்பவே இல்லை’ என்று நினைத்தவாறே அவளின் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.அதில் நிரஞ்சன் அனுப்பி இருந்த புகைப்படம்,குறுஞ்செய்தி என்று எல்லாவற்றையும் பார்த்தவள் ‘நைட் ரொம்ப நேரமாக தூங்காமல் இருந்ததினால் அசந்து தூங்கிட்டேன் சாரி’ என்று பதில் அனுப்பி  விட்டாள்.

அடுத்து அவளும் மியூசிக் லவ்வர்ஸ்  ரசிகர்கள் குழுவில் இருப்பதால் இதுவரை நடந்த எல்லா விஷயத்தையும் பார்த்தாள்.அதில் கிடைத்த ஆதரவை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தாள்.

இங்கே முதலில் இவர்களுக்கு எதிரான குழுவின் இசைக்கச்சேரி முடிந்தது.அடுத்து இவர்களின் பாட்டு கச்சேரி நடந்தது.எல்லோரும் இவர்களின் வித்தியாசமான முயற்சியின் பாட்டில் லேசாக தலையசைக்க ஆரம்பித்து அவர்களும் கலந்துக் கொண்டனர்.

கடைசியில் மற்ற இரு குழுக்களின் பாடல்களும் பாடி முடிக்கப்பட்டன.நான்கு குழுக்களும் முடிவிற்காக காத்திருந்தனர்.அப்போது அங்கே சாம்பவியும்  வந்து இவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்துக் கொண்டாள்.

நிரஞ்சன் தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.அதில் சிற்பி அனுப்பியிருந்த குறுஞ்செய்தியைப் பார்த்து லேசாக புன்னகைத்தவன்  “ஹேய் தூங்குமூஞ்சு  ஒழுங்கா என்ன நடக்குதுன்னு பாரு” என்று அனுப்பி விட்டு கைப்பேசியைப் பார்த்து சிரித்தான்.

பார்த்தியும் நிரஞ்சனின் செயல்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.எப்போதும் இல்லாத புத்துணர்வு அவனிடம் இருந்தது.

சிற்பியோ நிரஞ்சனின் குறுஞ்செய்தியைப் பார்த்து மனதினுள் ‘எவ்வளவு  திமிரு நான் தூங்குமூஞ்சியாமே? சிடுமூஞ்சி அதை சொல்லுறாங்க ஆளைப் பாரு’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது திரும்பவும் அவனே “சிற்பி நல்லா ரெஸ்ட் எடு  இப்போ உனக்கு அது தான் முக்கியம் எங்களைப் பற்றி கவலைப்படக் கூடாதுன்னு தான் நாங்க நல்லா இருக்கோம்னு காட்டத் தான் போட்டோ எடுத்து அனுப்பினேன் நீ சிக்கிரம் திரும்பி வந்துடு” என்று நிறுத்தியவன் “எங்களோடு” என குரல் பதிவு ஒன்றை  அனுப்பி இருந்தான்.

அதைக் கேட்டு சிற்பி இன்னும் ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப் போனாள்.அவன் குரலில் எப்போதும் இருக்கும் கடினம் இல்லை.மாறாக அதில் மென்மைத் தான் தெரிந்தது.அதோடு இந்த மாதிரி போட்டிக்கு செல்லும் பொழுதெல்லாம் மற்றவர்கள் கைப்பேசியை எடுத்தாலே அவனுக்கு கோபம் வரும்.ஆனால் இன்று அவனே அவளிடம் பேசிக் கொண்டிருப்பது இன்னும் அவளுக்கு யோசனையைத் தந்தது.போட்டியின் முடிவுக்காக காத்திருக்கும் நேரத்தில் தான்  பேசிக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

பிறகு அடுத்தடுத்த தொலைக்காட்சியில் உள்ள நிறுவனத்தில் நேர்காணல் வேறு இருந்தது.அதனால் அதோடு கைப்பேசியை ஓரமாக வைத்து விட்டான்.

அடுத்து இன்னும் சில தனிநபர் பாடல்கள் சுற்றுகள் வேறு இருந்தது.இன்று போட்டியின் அரையிறுதி சுற்று என்பதால் போட்டிகள் ரொம்ப கடுமையாக இருந்தன.இறுதியில் இவர்களின் குழு அரையிறுதி சுற்றிற்கு முதல் குழுவாக தேர்வானது.இந்த முடிவுத் தெரியவே மாலைப்பொழுதையும் தாண்டி இருந்தது.

சாம்பவி மகிழ்ச்சயின் மிகுதியில் நிரஞ்சனின் கரங்ளை பிடித்து ஆதரவாக தட்டவும் அவனும் பதிலுக்கு அப்படியே செய்தான்.எல்லாம் இவர்களுக்கு ஏற்றார் போல வரவும் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர்.

இதனால்  சாம்பவி எல்லோரையும்  வெற்றியின் அன்பளிப்பாக இரவு சாப்பாட்டிற்காக வெளியே அழைத்து இருந்தாள்.அதனால் எல்லோரும் ஒன்றாக உணவு விடுதிக்கு சென்றார்கள்.

அங்கே வந்ததும் காந்தன் இவர்களின் மகிழ்ச்சியினை ஒரு வீடியோவாக எடுத்து சிற்பிக்கு அனுப்பினான்.

அதைப் பார்த்த சிற்பி இவ்வளவு நேரம் என்ன பதில் வந்ததோ? என்று அவள் நினைத்துக் கொண்டிருந்ததற்கு காந்தன் அவர்களின் வெற்றியை காட்டியதில் உடனே வீடியோ அழைப்பு போட்டு எல்லோரிடமும் பேசினாள்.

இங்கே நிரஞ்சனை சாம்பவி அழைத்து தனியாக பேச ஆரம்பித்தாள்.அவர்களின் புது நிறுவனத்தின் ஸ்பான்சர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.இதன் மூலமாக அவர்களுக்கும் அவளுக்கும் ஏற்படும்  இலாபமும் அதனால் கிடைக்கும் இன்னும் அவர்களின் குழு  நிறைய மக்களிடம்  சென்று அடைவதைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தாள்.

இதை எல்லாம் நிரஞ்சனும் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் தான் அவர்களின் தலைவன் என்பதால் அவனுடைய நண்பர்களுக்கு இதைப் பற்றிய விளக்கத்தையும் அவன் தான் சொல்ல வேண்டி இருந்தது.அதனால் பல கேள்விகளையும் அதைப் பற்றிய விளக்கங்களையும் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

இங்கே சிற்பி காந்தனிடம் பேசிவிட்டு “நிரஞ்சன் சார் எங்கே?” என்று கேட்டாள்.

காந்தன் இருவரும் பேசிக் கொண்டிருந்த இருக்கும் பக்கம் தன்னுடைய கைப்பேசியை திருப்பி “நிரஞ்சனும் சாம்பவி மேடமும் ஏதோ பேசிட்டு இருக்காங்க அங்கே பார்” என்று கொஞ்சம் தள்ளி இருந்த இடத்தைக் காட்டினான்.

இருவரும் ரொம்ப மும்மூரமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது சஹா இடையினில் வந்து “ஹே…ஹேய் அவங்க இரண்டு பேரைப் பார்த்தால் ஜோடி பொ…பொருத்தம் எப்படி இருக்கும் சிப்பி சொல்லு? செமையா இருக்குல்ல” என்று அவர்களைக் காட்டியபடியே கேட்டான்.

சஹாவின் கேள்வியில் ஒருநொடி என்னச் சொல்வதென்று தெரியாமல் அதை சுதாகரித்து “ஆமாம் ரெண்டுபேரும் பார்க்க நல்லா அழகான ஜோடியாகத் தான் தெரியுறாங்க” என்றாள்.

அதைக்கேட்ட சஹா மற்ற இருவரிடமும் “நா…நான் சொன்னப்ப நீங்க யாரும் நம்பல இப்ப பா…பாருங்க சிப்பியை சொல்லி விட்டாள் சரியா தான் இருக்கும்” என்றதும் மற்ற இருவரும் அதற்கு ஆமாம் என்பது போல் தலையசைத்தார்கள்.

இங்கே சாம்பவி நிரஞ்சனிடம் “நான் உங்ககிட்ட இன்னொரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும் கேட்கலாமா?” என்று அவனிடம் அனுமதி கேட்டாள்.

நிரஞ்சன் புரியாமல் சாம்பவியைப் பார்த்து “இவ்ளோ நேரம் நீங்க கேட்டதுக்கு எல்லாம் நான் பதில் சொல்லிட்டு தானே இருக்கேன் இப்போ இதுக்கு மட்டும் ஏன் அனுமதி கேக்குறீங்க?” என்று அவன் யோசனையாகக்  கேட்டான்.

உடனே சாம்பவி “இவ்வளவு நேரமா நாம  ப்ரோபஷ்னல் பத்தி பேசினோம் இப்ப நான் உங்க தனிப்பட்ட விஷயத்தை கேட்கிறேன்” என்று ஒரு பீடிகைப் போட்டாள்.

நிரஞ்சனம் யோசனையாக “ம்ம்… சொல்லுங்க விருப்பம் இருந்தால் பதில் சொல்லுவேன் இல்லைன்னா என்னால பதில் முடியாது கட்டாயப்படுத்தி கேட்கிறதையும் நான் விரும்ப மாட்டேன்” என்றான்.

சாம்பவி  அவனுடைய பதிலைக் கேட்டு சிரித்துக் கொண்டே “எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு நிரஞ்சன்” என்று அவனைப் பார்த்து நேராக சொன்னாள்.அவள் கேட்டதைப் பார்த்து நிரஞ்சன் ஒருநொடி அதிர்ச்சியில் அப்படியே அசையாமல் அவளையே  பார்த்தான்.

நிரஞ்சனின் முகத்தைப் பார்த்து சாம்பவி “என்ன ஆச்சு நிரஞ்சன்? நான் என்ன கேட்டுட்டேன்னு அப்படியே ஷாக் ஆகிட்டீங்க?” என்று அவளோ அதே புன்னகையோடு கேட்டாள்.

நிரஞ்சன் மெதுவாக  “என்ன திடீர்னு இப்படி சொல்லுறீங்க?  இவ்வளவு நாளாக நமக்கான உறவு வேற மாதிரி இருந்தது.இப்போ இப்படி சொன்னால் நான் அதை  என்னன்னு புரிஞ்சுக்கிறது?” என்று அவளிடமே விளக்கம் கேட்டான்.

“இந்த எண்ணம் எனக்கு இப்போ வந்தது இல்லை நிரஞ்சன் ரொம்ப நாட்கள் இல்லை இல்லை வருஷத்துக்கு முன்னாடின்னு சொன்னால் சரியாக இருக்கும்” என்று அவனை இன்னும் யோசிக்கும் விதத்தில் பதிலைச் சொன்னாள்.

அவள் சொன்ன பதிலைக் கேட்டு கொஞ்சம் நிமிர்ந்தவாறே அமர்ந்த நிரஞ்சன் “எப்படின்னு நீங்களே  சொன்னால் சரியாக இருக்கும்” என்று சாம்பவியிடமே தன் கேள்வியைக்  கேட்டான்.

அவளோ இப்போது யோசித்தவாறே “யாழினி” என்று  அவள் பெயரைச் சொல்லவும் நிரஞ்சனின் முகம் மொத்தமாக மாறிப் போனது.கைககளை அழுந்த மூடிக் கொண்டான்.அவனது முகம் கோபத்தில் இருக்கிறது என்று வெளிப்படையாக காட்டிக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்ததும் சாம்பவிக்கு அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் அவள்  யோசித்துக் கொண்டிருக்க அவனோ “அவங்க மூலமாகத் தான் இந்த வாய்ப்பு எங்களுக்கு வந்துச்சா?” என்று கோபமாக கொஞ்சம் காட்டமாகவே கேட்டான்.

அவளோ “இல்லை நிரஞ்சன் இதுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”

“அப்போ எதுக்காக அவங்களை பத்தி பேசுறீங்க?”

“எனக்கு உங்களை  பிடிச்சதுக்கான காரணத்தை தான் நான் சொல்ல வந்தேன்” என்று தயங்கியபடியே சொன்னாள்.

அவனோ எழுந்து செல்லவும் முடியாமல் கோபத்தை அடக்கிக் கொண்டு  “ம்ம்… சொல்லுங்க” என்றான்.

“யாழினியும்  நீங்களும்  எவ்வளவு காதலிச்சீங்கன்னு எனக்குத் தெரியும்” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது  தடுத்த நிரஞ்சன் “நான் காதலிச்சேன்னு வேணும்னா சொல்லுங்க ஆனால் அவங்களும் காதலிச்சாங்கன்னு சொல்லி என் காதலை களங்கப்படுத்தாதீங்க சாம்பவி அப்புறம் இந்த பேச்சை இன்னும் பேசுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை,அதோடு என்னால உங்க காதலை ஏத்துக்க முடியாது ஏன்னா  இப்போ எனக்கு  வேற ஒருத்தரை பிடிக்க ஆரம்பிச்சிடுங்க அது எனக்கு போதும்னு நினைக்கிறேன்” என்று வேகமாகச் சொன்னான்.

சாம்பவியால் இதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. அவனுக்கு இப்பொழுது இன்னொருவரை பிடித்து இருக்கிறது என்று சொல்லும் போது அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.

நிரஞ்சன் “இதுக்காக உங்களை விட்டு விலகியோ இல்லைன்னா போட்டியில் இருந்தும் போகப் போறது இல்லை உங்க நட்பு எனக்கு எப்பவும் அது மதிப்பானது தான் சாம்பவி மற்ற விஷயங்களை நாம இன்னொரு நாள் பேசலாம் இப்போ நான் இங்கிருந்து கிளம்புறேன் காரணம் உங்களுக்கேத் தெரியும்னு நினைக்கிறேன்” என்று சொன்னவன் வேகமாக எழுந்து நேராக தன் நண்பர்கள் பக்கம் சென்றான்.

அவள் எதிர்பார்த்த பதில் தான்.இருந்தாலும் விருப்பத்தை வெளியே சொல்லாமல் உள்ளே புதைத்துக் கொண்டு வேதனைப்படுவதை விட அதை வெளிப்படையாகச் சொல்லி  உண்மை நிலைமையை அறிந்துக் கொள்வதே நல்லது என்று அவள் வளர்ந்த விதம் சொல்லிக் கொடுத்ததால் நேராக பேசி அதற்கான பதிலையும் இயல்பாகவே ஏற்றுக் கொண்டாள்.

காந்தனிடம் “காந்தா நீங்க எல்லோரும் சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க நான் நம்மளோட காரை எடுத்துட்டு வெளியே போறேன் கொஞ்சம் தனியா இருக்கனும்னு நினைக்கிறேன் நீங்க கார் புக் பண்ணி வீட்டுக்கு போயிடுங்க நான் வந்து விடுகிறேன்” என்றான்.

அவன் பேசியதைக் கேட்டு பதறிய மூவரும் “என்னாச்சு நிரஞ்சன் எதாவது பிரச்சினையா?”

“இல்லை”

காந்தன் “அப்போ ஏன் திடீர்னு பாதியிலே போறேன்னு சொல்லுறே?”

நிரஞ்சன் “மனசு சரியில்லைடா புரிஞ்சுக்கோங்க நான் கிளம்புறேன்” என்று அங்கிருந்து வேகமாகச் சென்றான். மூவரும் செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மூவருக்கும் ஏதோ ஒன்று சரியில்லை என்று  விளங்கியது.அதனால் நேராக சாம்பவியிடம் பேசலாம் என்று அவளுக்கு அருகில் சென்று அமர்ந்தனர்.சாம்பவி இவர்கள் வந்து அமரவும் திருதிருவென்று விழித்தவள் அவர்களைப் பார்த்து “என்னாச்சு எல்லோரும் இப்போ எதுக்காக என்னைச் சுற்றி நிற்கிறீங்க?” என்று புரியாமல் கேட்டாள்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

5 Comments

  1. நான் கூட சாம்பவி வில்லியா மாறுவாங்க அப்படின்னு நினைச்சேன் .. அப்போ நிரஞ்சன் சிற்பி தான் லவ் .. ஆமா யார் அந்த யாழினி ..

  2. அப்ப யாழினியும் நிரஞ்சனும் முன்பு விரும்பி காதல் தோல்வியில் மாட்டியதால் தான் இவன் சிடுமூஞ்சியாக இருந்தானோ…