Loading

அத்தியாயம் -21

நிரஞ்சனுக்கு செழியன் எடுத்துக் கொண்ட உரிமையும் அவள் மேல் எடுத்துக் கொண்ட அக்கறையும்  அவன் கண்களில் தெரிந்தது வெறும் உறவுமுறைக்கானது மட்டுமல்ல.அதற்கும் மேலானது என்று நிரஞ்சன் அவர்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே சிற்பி அவனை தள்ளி தன் மேல் அத்தனை பொருட்களையும்  விழ வைத்துக் கொண்டதும் சட்டென்று  நினைவில் வந்து வந்து போனது.

இங்கே வீட்டிற்கு வந்ததும் சிற்பியை அவளுடைய அறையில் செழியன் படுக்க வைத்தான்.பூர்ணாவிடம் ஏற்கனவே சபரி விவரங்களை சொல்லி இருந்ததால் அவர் அதற்கான தயாரிப்பில் இருந்தார்.பூர்ணாவிடம் சபரி “சிற்பி வீட்டுக்கு இதைப் பத்தி எதுவும் தெரிய வேண்டாம் அம்மா.முதல்ல நாம ஸ்கேன் எடுக்கலாம் அதுல வர்ற பதிலைப் பொறுத்து பேசிக்கலாம்” என்று கவலை தோய்ந்த முகத்தோடு சொன்னான்.பூர்ணாவிற்கும் அதுவே சரியெனப்பட்டது.

அதனால் அவரும்  அமைதியாக இருந்தார்.

செழியனும் பூர்ணாவும் சிற்பியை நன்றாக கவனித்துக் கொண்டனர்.இருவரும் அவளுக்கு அருகிலேயே இருந்தனர்.செழியன் சிற்பியை கழிவறைக்கு செல்லக்  கூட உதவினான்.

இதற்கிடையில் சபரி நடந்த விவரங்களை எல்லாம் சாம்பவியிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்தவர் அதைப் பற்றி பேசலாம் என்று  நினைத்தால் அவளோ வேலையின் சுமை காரணமாக அவருடைய அழைப்பை எடுக்காமல் நாளை பேசுவதாக குரல் பதிவு மட்டும் அனுப்பியிருந்தாள்.

மறுநாள் காலை எப்போதும் போல் விடியல் ஆரம்பித்தது.ஆனால் காந்தனுக்காத் தான் சிற்பி இல்லாமல் ஏதோ வேலைச் செய்ய வேண்டுமே என்று செய்துக் கொண்டிருந்தான்.அவனுடன் பேசி சிரித்தப்படியே அவளோடு காலை உணவை தயாரிக்கும் போது இருக்கும் உற்சாகம் இப்போது அவனுக்கு  இல்லை.

அவன் தான் அப்படி இருக்கிறான் என்று நினைத்தால் பார்த்தியும் சஹாவும் சோர்வாக வந்தனர்.அவர்களை காந்தன் கேள்வியாகப் பார்க்க பார்த்தியோ “நாங்க சீக்கிரமா எழுந்திருக்கனும்னு சிற்பி காலையிலே பாட்டு எல்லாம் போட்டு வைப் பண்ணி விடுவா சூப்பரா இருக்கும் தெரியுமா?” என்று விரக்தியாகச் சொன்னான்.

சஹாவோ “அவள் எ…என் மேல தண்ணீர் எல்லாம் தெளிச்சு எழுப்பி விடுவாள். அதுக்கூட பர..பரவாயில்லை அவளுடைய சாப்பாட்டை எடுத்து வந்து என்கிட்டே வைச்சு சத்தமாக சாப்பிடுவாள்.அப்பொழுது வரும்  சாப்பாட்டு வாசனையோடு சிப்பியையும்  நான் மிஸ் செய்றேன் காந்தா” என்று கவலையாகச் சொன்னான்.

காந்தன் என்னசொல்வதென்று தெரியாமல் அவனும் அமைதியாக இருந்தான்.நிரஞ்சன் வந்து “சீக்கிரம் ரெடி ஆகுங்க ப்ராக்டீஸ் இருக்கு” என்றான்.

மூவரும் வேறு வழியில்லாமல் தங்களது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.பூர்ணாவும் செழியனும் சிற்பியை சக்கர நாற்காலியின்  மூலமாக மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

சபரி சாம்பவியை நேரில் சந்தித்து பேசுவதற்காக அலுவலகத்திற்கு சென்றார்.அங்கே அவளைச் சந்தித்தவர் முதலில் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் பற்றிச் சொன்னார்.அதைக் கேட்டு பதறிய சாம்பவி “சிற்பி இப்போ எப்படி இருக்காங்க? பரவாயில்லையா? நான் நேர்ல போய் பார்க்கிறேன்” என்று அக்கறையாகக் கேட்டாள்.

அதைக் கேட்ட சபரி  தயங்கியவாறு “அம்மா சிற்பிகா நல்லா இருக்காம்மா அவளை ஹாஸ்பிடல் கூடிட்டு போய் இருக்காங்க”

“அப்படியா! அவங்களோடு  யார் இருக்காங்க?” என்று ஆவலாகக் கேட்டாள்.சபரி கொஞ்சம் தயங்கியவாறு “மேடம் சிற்பி” என்று எல்லா விவரங்களையும் சொன்னார்.அதைக் கேட்ட சாம்பவி “இப்போ எதுக்காக இந்த விஷயத்தை சொல்லுறீங்க அங்கிள்? உங்களைப் போலவே தான் சிற்பிகா ரொம்ப டெடிகேஷன் நாளைக்கு நிரஞ்சன் மற்றும் அவங்களுடைய குழுவிற்கு முக்கியமான போட்டிக்கு இருக்கு நாம அதை தள்ளிப் போட முடியாது அதை தெரிஞ்சிக்கிட்ட சிற்பி அவளுக்கு  என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு நிரஞ்சனை காப்பாற்றியது பெரிய விஷயம். அதனால அங்கிள் நீங்க மறைச்சிட்டீங்கன்னு எனக்கு எந்தவிதமான கோபமும் கிடையாது. ஏன்னா நீங்க இந்த வேலை சிற்பிக்கு வேணும் அப்படின்னு சொன்னாலும் நான் கண்டிப்பா கொடுத்து இருப்பேன்  நீங்க எனக்கு எப்பவும் நல்லது தான் நினைப்பீங்க அந்த நம்பிக்கை போதும் அங்கிள் அதனால தேவையில்லாத யோசனைகளை விட்டுட்டு சிற்பிகா சீக்கிரம் குணமாகுற வேலையை பாருங்க அவளோட வேலை இங்க நமக்கு முக்கியம் அது மட்டும் நினைவில்  வைச்சுக்கோங்க சிற்பிக்கு இன்னும் இரண்டு நாட்களில் உடல்நிலை சரியானால் ஓகே இல்ல நான் நேர்ல வந்து பார்க்கிறேன்  இது எல்லாத்தையும் ஏற்கனவே நிரஞ்சன் என்கிட்ட  போன்ல பேசிட்டாரு  அவங்களும் சிற்பியை பார்க்க வரனும்னு சொல்லி இருந்தாங்க” என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த விஷயத்தை நிரஞ்சன் ஏற்கனவே பேசி அதை சரி செய்ததை எண்ணி மகிழ்ந்தார்.

சிற்பியின்  வாழ்க்கையும் இதை நம்பித் தானே  இருக்கிறது.அதனால் நிம்மதி பெரூமூச்சு விட்டார் சபரி.இங்கே மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்ததில் சிற்பிகாவிற்கு முதுகில் லேசான பிடிப்போடு வீக்கமும் மட்டுமே அதனால் இன்னும் ஐந்து நாட்களில் சரியாகி  விடும் என்று சொல்லவும் மூவரும் வீட்டுக்கு வந்தனர்.

சிற்பிகாவை மெத்தையில் படுக்க வைத்த செழியன்  தன் அம்மாவிடம் “அம்மா நான் கொஞ்ச நேரம் வெளியே போய்ட்டு வரேன் எதாவது அவசரம்னா போன் பண்ணுங்க உடனே வரேன்” என்று சொல்லி விட்டு சிற்பியை கவனமாக இருக்கச் சொல்லி அவன் அங்கிருந்துச் சென்றான்.

சிற்பிவிற்கோ இப்பொழுது தன்னை விட தன் வேலையைப் பற்றி கவலையாக இருந்தது.அதனால் அவள் யோசனையிலேயே இருந்தாள்.சிறிது நேரம் சென்ற நிலையில் வீட்டின்  அலாரமணி அடிக்கும் சத்தம் கேட்டது.

சிற்பிகாவும் சபரி மாமாவோ இல்லை செழியனாக இருக்கும் என்று அவள்  விழிகளை மூடி படுத்து இருந்தாள்.அப்படி படுத்து இருந்தவளுக்கு யாரோ தன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை போல் எண்ணம் வரவும் ஒரு கண்ணை மட்டும் மெதுவாக திறக்க எதிரே நிரஞ்சன் உட்கார்ந்துக் கொண்டிருந்தான்.

சிற்பியோ தன்னுடைய எண்ணமாக இருக்கும் என்று தலையை திருப்பி மெதுவாக விழிகளைத் திறக்க அங்கே காந்தன் இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.இப்போது சிற்பியோ தன் தலையில் ஒரு கையால் தட்டி விட்டவள் “எதுக்கு இந்த தேவையில்லாத யோசனை?’’ என்று சொல்லவும் சிரிப்பின் சத்தம் கேட்டு விழிகளை திறந்தவளுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருந்தது.

நால்வரும் அவளைச் சுற்றி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.இவள் செய்தவைகளைப் பார்த்து அத்தை சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தார்.அவர்களை அங்கே பார்க்கவும் கொஞ்சம் பதற்றத்தோடு “நீங்க எல்லோரும் எப்போ இங்கே  வந்தீங்க?” என்று சிற்பி  கேட்கவும் காந்தனோ “காலிங் பெல்  அடிச்சதே நாங்க தான்” என்று சொல்லி சிரித்தான்.

பார்த்தி “ஹய்யோ நம்ம சிற்பிக்கு ரொம்ப முடியாமல் இருப்பாள் நேர்ல பார்க்கலாம் வந்தால் இங்கே நீ என்னடான்னா சின்னப் பசங்க மாதிரி உடம்பு சரியில்லைன்னு  பொய் சொல்லிட்டு கண்ணை மூடி திறந்து விளையாடிட்டு இருக்கே” என்றதும் நால்வரும் சிரித்தனர் அவளும் தான்.

முதலில் நலம் விசாரிப்புகள் நடந்தது.நிரஞ்சன் எதுவும் பேசவில்லை.அவளையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.சஹாவோ அன்பாக நிரஞ்சனைப் பார்த்தான்.அவர்களின் மனதை மாற்றுவதற்கு பயிற்சி செய்ய அழைத்தும் யாரும் மனம் அதிலே ஒன்றாததால் நேராக இங்கே சிற்பியின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.அதனை அவன் நினைத்துக் கொண்டிருக்க காந்தன் நிரஞ்சனின் அருகில் வந்து “ரொம்ப தாங்ஸ் மச்சான் சிற்பிக்கு என்னாச்சுன்னு ஒரே கவலையா இருக்கவும் எதிலேயும் கவனம் செலுத்த முடியலை இப்போத் தான் ரிலாக்ஸா இருக்கு அவளும் இன்னும் ஐந்து நாளில் நார்மல் ஆகிடுவா” என்று கொஞ்சம் நிம்மதியாக சொன்னான்.

நிரஞ்சன் சிரித்துக் கொண்டே “தாங்ஸ் எல்லாம் எதுக்கு? எனக்கும் அவ மேல அக்கறை இருக்கு” என்றான்.பூர்ணாவோ அவர்கள் சாப்பிடுவதற்காக சமையலறையில்  சாப்பாடு தயார் செய்வதற்கு  செல்ல காந்தனும் பார்த்தியும் அவருக்கு உதவி செய்துக் கொண்டிருந்தனர்.

அந்த வீடே இப்பொழுது இவர்களின் வரவால் கலகலப்பாக இருந்தது.சஹாவோ சிற்பியிடம் விடாமல் பேசிக் கொண்டிருந்தான்.ஒருநாள் தான் அவளைப் பார்க்கவில்லை.ஆனால் அவர்களுக்குள் பேசுவதற்கு நிறைய இருந்தது.

நிரஞ்சன் எழுந்து அந்த அறை முழுவதும் சுற்றிப் பார்த்தவன் வரவேற்பறைக்கு வந்தான்.அங்கே செழியனும் சிற்பியும் அவர்களோடு கனிகாவும் சிறுவயது முதல் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் அங்கே இருந்தது.அதைப் பார்த்து சிற்பியின் புகைப்படத்தை மட்டும் தன் கைப்பேசியில் எடுத்துக் கொண்டான்.

பூர்ணா அவர்கள் நால்வரையும் முதலில் கண்டதும் தன் கண்களால் நம்ப முடியாமல் திணறித் தான் நின்றார்.நால்வரும் சிற்பிக்கு சின்னதாக ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று தான் நால்வரும் அமைதியாக நின்று அவளைப் பார்த்தது எல்லாம்.

இவர்களின் பாடல்கள் பூர்ணாவிற்கு ரொம்ப பிடிக்கும் அதனால் அவர்களை கட்டாயப்படுத்தி  சாப்பிடச் சொன்னார்.வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு அவர்களும் ரொம்ப வருடங்களானதால் இப்போது பூர்ணா எளிமையாக தயாரித்த இட்லி,சப்பாத்தி,சாம்பார்,முட்டை என்று சாப்பிட்டுக் கொண்ருந்தனர்.

சிற்பிகா கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.நிரஞ்சன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எழுந்து சிற்பிக்கு அருகில் உட்கார்ந்து அவளுக்கு தன் சாப்பாட்டை எடுத்து ஊட்டி விட்டான்.அவனின் இந்த செய்கையினில் ஒருநொடி அவளும் அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியில் பார்த்தனர்.

உடனே நிரஞ்சன் சிரித்துக் கொண்டே “நம்ம சாப்பிடும் போது பார்த்துக் கொண்டே இருந்தால் வயித்து வலி வந்துடும் நாளைக்கு போட்டி வேற இருக்கு” என்றதும் சிற்பி அவனைப் பார்த்து முறைக்க மற்றவர்கள் எல்லோரும் சிரித்தனர்.ஆனால் நிரஞ்சன் அவளுக்கு சாப்பாட்டை ஊட்டுவதிலேயே இருந்தான்.

அவள் போதும் போதும் என்று மறுத்தும் அவன் அன்பாய் ஊட்டி விட்டான்.அவளுக்கு புறை ஏறவும் அவனே தண்ணீரையும் கொடுத்தான்.இதை எல்லாம் பூர்ணாவும் காந்தனும் யோசனையாக இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் பூர்ணாவோ பாராட்டுமழையில் நனைந்துக் கொண்டிருந்தார்.சஹாவோ “நா…நாங்க இனிமேல் அடிக்கடி வீட்டுக்கு வருவோம். எங்களுக்கு இ…இந்த மாதிரி நல்ல சாப்பாடு கொடுக்கனும் ப்ளீஸ்” என்று கேட்டான். பூர்ணாவும் புன்னகையோடு “கண்டிப்பா செழியனை மாதிரி நீங்களும் எனக்கு பசங்க தான் எப்போ வேணும்னாலும் வீட்டுக்கு வாங்க” என்று அன்பாகச் சொன்னார்.

இத்தனை நாட்களாக உறவுகளை இழந்து இருந்தவர்களுக்கு புதுஉறவாக மாறினார் பூர்ணா.

நால்வரும் சிற்பியிடம் அவளது உடல்நிலையை கவனிக்க சொல்லி விட்டு வெளியே வர நிரஞ்சன் “ஒரு நிமிஷம் என் போனை வைச்சுட்டு வந்துட்டேன்” என்று உள்ளே சென்றான்.அங்கே  படுத்துக் கொண்டிருந்த சிற்பியின் கைகளில் தன் பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த சாக்லெட்டை  எடுத்து அவள் கையில் கொடுத்தவன்  “உனக்கு உடல்நிலை சரியானதும் சீக்கிரமா  வீட்டுக்கு வந்திடு நான் வெயிட் பண்றேன்” என்று சொல்லி விட்டு வேகமாக வந்தான்.அவன் என்னச் சொல்கிறான் என்று புரியாமல் செல்பவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சிற்பி.

நால்வரும் மிகுந்த திருப்தியோடு நாளைய போட்டிக்கான வாழ்த்துக்களோடு அங்கிருந்து சென்றனர்.அவர்களின் வரவால் சிற்பிகாவின் மனதும் ஒருவிதமான நிம்மதியில் நிறைந்து இருந்தது.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. அடேங்கப்பா நிரஞ்சன் பயங்கரமா லவ் பண்ற போல … நல்லா தான் இருக்கு … ஆனா காந்தன் பூர்ணா செழியன் சபரி அதை விட சிற்பி அப்பா அம்மா இவங்க எல்லாம் ஒத்துக்கணுமே

    1. Author

      பெரிய விஷயம் தான் ஆனால் இன்னும் சில பிரச்சினைகள் இருக்கு மனமார்ந்த நன்றிகள்

  2. அருமையான பதிவு

    சும்மா இருந்த பெண்ணை முதுகு எலும்பை உடைத்து போட்டாச்சு

    1. Author

      ஆமாம் உண்மைதான் மனமார்ந்த நன்றிகள்