இமை 62
ஓ..வந்தது பெண்ணா
வானவில் தானா
பூமியிலே பூப்பறிக்கும்
தேவதை தானா
காதலிலே என் மனதை
பறித்தது நீதானா
உன் பேரே காதல் தானா..!
மேடையை நோக்கி வந்து கொண்டிருந்த எழிலை இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்த விஜய்யின் மனம் இந்த பாடல் வரிகளை முணுமுணுத்தது..
“அண்ணி நீங்க மட்டும் இப்போ அண்ணா பக்கத்தில் போனிங்க உங்களை கண்ணாலேயே ஸ்வாகா பண்ணிடுவாங்க போல..” இரு பெண்களும் கேலி பேச.. “எல்லார் முன்னாடியும் இதென்ன இப்படி பார்க்கிறாங்க..” எழில் செல்லமாக சலித்தபடி
“ஓ உங்க கல்யாணத்தப்போ என் அண்ணாங்க மட்டும் உங்களை கோபமாக பார்த்தாங்களாக்கும்..” என்று பதிலுக்கு அவர்களிடம் வாயடித்த எழிலை இரு பெண்களும் அசடு வழிய பார்த்தனர்..
“ஏம்மா பொண்ணு கொஞ்சம் நில்லு..” சுமித்ராவின் உறவுக்கார பெண் எழிலை நிறுத்த
“மதிம்மா மாப்பிள்ளை உன்னை பார்த்துட்டே இருக்காங்க பாரு.. நீ மாப்பிள்ளை கிட்ட போ..” சிவகாமி எழிலை அனுப்ப
“இவங்க ஏதோ சொல்ல வராங்க..” அந்த பெண்மணியை பார்த்து தயங்கி நின்ற எழிலிடம் அவங்க எங்கேயும் போகல ஃபங்ஷன் முடியுற வரைக்கும் அவங்க இங்க தான் இருப்பாங்க.. நேரம் ஆகுது பாரு.. மாப்பிள்ளை மட்டும் அங்க தனியா நிக்கிறாங்க.. நீ போ. என எழிலை வற்புறுத்தி அனுப்ப
“நான் என்ன சொல்ல வரேன்..” என்று அந்த பெண்மணியிடம் “நீங்க இன்னும் சாப்பிடலயே வாங்க நான் உங்களை சாப்பாடு உங்க உட்கார வைக்கிறேன்..” அவரின் கைப்பிடித்து உணவு உண்ணும் இடத்திற்கு வேறு பக்கம் இழுத்துச் சென்ற சிவகாமியை குழப்பமாக பார்த்தபடி விஜய் அருகில் வந்து நின்றாள்..
தன் இடையில் ஏதோ குறுகுறுக்கவும், திடுக்கிட்டு தன் சிந்தனை கலைந்து, திரும்பி பார்க்க, நான் இங்கே உன் பக்கத்தில் இருக்கும் போது வேறு என்ன சிந்தனை என் ராங்கிக்கு?..” எழில் காதில் முணுமுணுக்க
“அது நான் இங்க வரும்போது ஒரு ஆன்ட்டி என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாங்க.. அவங்க பேசவர்றதுக்குள்ள அம்மா அவங்களை கூட்டிட்டு போய்ட்டாங்க.. அதான் என்ன பேச வந்தாங்க என்று யோசிச்சேன்..” என்றவளை முறைத்து பார்த்த விஜய்
“போய் கேட்டுட்டு வா ராங்கி.. ஏதாவது உலகப் போர் பற்றி பேச நினைச்சிருப்பாங்க போ..” என்று எழிலை அனுப்ப “சே..சே அவங்களை பார்த்தால் அப்படி தெரியல உலகப் போர் பத்தி என்கிட்ட என்ன பேச போறாங்க வேற ஏதாவது இருக்கும்.. நான் கேட்டுட்டு வரவா..? எழில் விஜய்யின் கேள்வி புரியாமல் எழில் உண்மையாகவே கேட்க விஜய் தன் நெற்றியில் அறைந்து கொண்டான்..
“என்னாச்சு ஹோட்டல் கார்?. தலை வலிக்குதா? நான் அந்த ஆண்ட்டியை கூப்பிட்டு வரவா தைலம் தேச்சு விட??. கேட்ட எழில் குரலில் குறும்பு கூத்தாடியது.. அதை உணர்ந்து கொண்ட விஜய்யும் சே சே தைலம் தேச்சு விட அந்த ஆன்ட்டி எதுக்கு.? இந்த கூட்டத்தில் நல்ல பிகர் யாராவது இருப்பாங்க அவங்களை பாரேன்..” விஜய் வம்பிழுக்க, அதற்கு எழில் அவன் இடுப்பை கிள்ள..
“போதும் போதும் ரெண்டு நீங்க பேர் மட்டுமே பேசுனது.. உங்க ரொமான்ஸ் எல்லாம் தனியாக உங்க ரூம்ல வச்சிக்கோங்க.. இப்போ உங்கள பார்த்து விஷ் பண்ண தான் இங்க இத்தனை பேர் வந்திருக்காங்க.. அவங்களுக்கு உங்க முகத்தை காட்டுங்க..” என்று இருவரையும் நிகழ்காலத்திற்கு இட்டு வந்த குரல் யார் என்று நான் சொல்வதற்கு முன் நீங்களே கண்டுபிடிச்சிருப்பிங்க..
விஜய், எழில் ரிசப்ஷன் விமரிசையாக தொடங்கியது.. சுமித்ராவும், மணிகண்டனும் மேடைக்கு வந்து இருவரையும் அணைத்து வாழ்த்தியவர்கள் சுமித்ரா எழில் கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்த, கீழே நின்று இதை பார்த்து கொண்டு இருந்த சிவகாமி மனம் குழம்பினார்..
“என் பொண்ணுகிட்ட இவ்வளவு அன்பாக இருக்கும் இது இவங்க உண்மையான முகமா.? இல்லை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தவங்க வேற மாதிரி கிட்ட பேசினார்களே..! அது உண்மையான முகமா..? எது இவங்க நிஜ முகம் என்று தெரியலையே..என குழம்பிய சிவகாமி அங்கு மேடையில் எழில் தலை அலங்காரத்தை சரி செய்து கொண்டு இருந்த சுமித்ராவை பார்வையால் அளவிட
“ஆனா அவங்க முகத்தை பார்த்தா தப்பானவங்க மாதிரியும் தெரியலையே.. கடவுளே என் குழப்பத்துக்கு ஒரு தீர்வு கொடுங்களேன்..? என மனதில் புலம்பி கொண்டு இருந்தார்
விருந்தினர் ஒவ்வொருவராக வந்து வாழ்த்தி பரிசு கொடுத்து செல்ல.. விஜய் ஒவ்வொருவராக எழிலுக்கு அறிமுகப்படுத்தியவன் யாரையும் நீ மனசுல வச்சுக்க வேணாம் என்னோட நட்பு விதுவும” ஷக்தியும்” மட்டும் இவங்க எல்லாம் திரும்ப நீ பார்க்கிற வாய்ப்பு வராது.. நம்ம கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாம் நம்ம ரிலேஷன்ஸ்..” என்று விஜய் சொல்லி கொண்டு இருக்க
ஏன்டா இன்னைக்கே மருமகளுக்கு எல்லாமே சொல்லிக் கொடுக்கணுமா?. அவ போக போக மெதுவாக கத்துக்கட்டும்.. என சுமித்ரா விஜய் அதட்டி விட்டு “அவன் சொல்றதை காதில் வாங்காமல் நீ ரிலாக்ஸாக இருடா.. அத்தை உனக்கு எல்லாம் மெதுவாக சொல்லி தரேன்..” என எழிடம் பரிவாக கூறிவிட்டு கிழே இறங்கிய சுமித்ரா நேராக சிவகாமியிடம் வந்து நின்றார்..
“என்ன அண்ணி அப்போது இருந்து உங்க பார்வை என்னையவே சுத்திக்கிட்டு இருக்கு?.. நான் அவ்வளவு அழகா இருக்கேனா என்ன.? சுமித்ரா விளையாட்டாக கேட்க, சிவகாமி திரு திரு என முழித்தார்..
அவர் பாவனையில் வாய்விட்டு சிரித்த சுமித்ரா “நீங்க ஏதோ என்கிட்ட கேட்கணும்னு நினைக்கிறீங்க.. ஆனா கேட்க முடியாமல் தயங்குறீங்க.. என்கிட்ட என்ன தயக்கம்?.. சும்மா கேளுங்க அண்ணி” என சிவகாமியை ஊக்க
ஏனோ சற்று முன் தோன்றிய கேள்வி இப்பொழுது சுமித்ரா தன்னிடம் பேசியதும் சிவகாமிக்கு அதை கேட்க தோன்றவில்லை. அந்த உறவுக்கார பெண்ணிடம் சுமித்ரா அப்படி பேசியதற்கு விளக்கம் சொல்லவில்லை என்றாலும் இப்பொழுது சிவகாமி அவரை முழுமையாக நம்பினார்..
சிவகாமி தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை உணர்ந்து “இல்லை எதுவும் இல்லை அண்ணி நீங்க மதிக்கிட்ட பேசிட்டு இந்ததை பார்த்து மனசு சந்தோஷமாக இருந்துச்சு அதான் உங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டே இருந்தேன்..” சிவகாமி சமாளிக்க
“நீங்க மேடைக்கு போகலயா எழில் தேட போறா..” சுமித்ரா வேறு எதுவும் தூண்டி துருவாமல், வேறு பேச்சு பேசவும்
“நீங்க யாரோ உங்க அண்ணி என்று சொல்லி ஒரு உறவுக்காரவங்க கிட்ட பேசினது கேட்டேன்.. அப்போ தப்பாக தெரிஞ்சது இப்போ இல்ல..” என்ற சிவகாமியை சுமித்ரா திகைப்பாக பார்த்து
“அவங்க பேச்சுக்கு நான் பதில் சொல்றதை விட என் மருமக பதில் சொன்னா நல்லா இருக்கும் என்று நினைச்சு தான் நான் அப்படி சொன்னேன்.. மத்தபடி மதி எனக்கு இன்னொரு மகள் தான்..
பொண்ணுங்க இல்லாத வீட்டில் கொஞ்ச நாள் மலர் எனக்கு மகளா வந்து இருந்தா அவளுக்கு கல்யாணம் ஆகி அவ கணவன் கூட போனதும் மறுபடியும் வீடு வெறிச்சோடி இருந்தது.. இனி அப்படி இருக்காது என்ற சந்தோஷத்தில் நான் இருக்கேன்.. அவங்க கூட வாதாடி இந்த சந்தோஷத்தை இழக்க வேண்டாம் என்றும் அவங்க கிட்ட எதுவும் பேசாமல் வந்துட்டேன்..” என்று விளக்கம் கொடுக்க சிவகாமி நெகிழ்ந்து போய் சுமித்ராவின் கரத்தை பிடித்து கொண்டு
“இத்தனை வருஷத்துக்கு பிறகு இப்ப தான் என் மக சந்தோஷமாக இருக்கா.. நீங்க அவங்க கிட்ட அப்படி பேசவும், கொஞ்சம் பயந்தது உண்மை தான் ஆனா கொஞ்ச நேரத்தில் அந்த பயம் குழப்பம் எல்லாமே காணாமல் போய்டுச்சே.. இப்போ நீங்க இன்னும் விளக்கி சொல்ல மனசு நிறைஞ்சு போச்சு அண்ணி..” என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்ல
“ஒரு அம்மாவாக உங்க நினைப்பு தப்பே இல்லை அண்ணி.. ஆனால் நான் சொன்னது உண்மை மதி எனக்கு மருமகள் இல்லை மக தான்.. சோ நீங்க பயப்படாமல், குழப்பிக் கொள்ளம உங்க பொண்ணோட சந்தோஷத்தை பார்த்து நீங்களும் நிம்மதியாக இருங்க அண்ணி.” என்ற சுமித்ராவை யாரோ அழைக்க
“நீங்க பாருங்க அண்ணி இதோ வர்றேன்..” என்று கூறி சென்றவர் மீண்டும் சிவகாமியிடம் வந்து, “நீங்களும் வாங்க அப்படியே எங்க சொந்தக்காரங்க மையும் நீங்க பார்த்த மாதிரி இருக்கும்..” என்றபடி சிவகாமியை தனியே இருக்க விடாமல் தன்னோடு அழைத்துச் சென்றார்..
தன் அருகில் நின்றிருந்த எழிலை அடிக்கடி திரும்பி பார்த்தபடி நின்றிருந்த விஜய்யிடம், “என் முகத்தில் என்ன தெரியுது.. முன்னாடி பாருங்க..” என்று எழில் கண்களால் ஜாடை செய்ய,
“இவ்வளவு அழகா இருந்துட்டு என்னை தப்பு சொல்ல கூடாது ராங்கி.. எறும்பு பக்கத்தில் சக்கரையை வச்சா அந்த எறும்பு சக்கரையை தேடி தான் போகும்..” என்று தத்துவம் பேசி எழிலை ரசனையுடன் பார்த்த விஜய் அவளை ஆழ்ந்து பார்த்து மயக்கிறடி ராங்கி..” அவள் காதில் கிசுகிசுப்பாக கூறியவன்
யாரும் அறியாமல் அவள் உடைகளுக்கு இடையில் சிறு கோடு போல் தெரிந்த அவள் இடையை வருட, அவன் செய்கையிலும், பேச்சிலும் சிவந்த தன் முகத்தை மறைக்க பெரும்பாடு பட்டாள் எழில்..
அவள் அவஸ்தையை ரசனையுடன் பார்த்து கொண்டிருந்த விஜய் நம்ம ரெண்டு பேருக்கான நேரம் எப்ப வருமோ.. இன்னும் எவ்வளவு நேரம் இங்க நிக்கணுமோ..” என்று ஏக்க பெருமூச்சுடன் கூற, அவன் இடுப்பில் எழில் நறுக்கென்று கிள்ளி விட்டு, நான் பட்ற அவஸ்தையை நீங்களும் அனுபவிங்க..” என்று முணுமுணுத்து மீண்டும் அவன் இடுப்பில் இன்னும் அழுத்தி கிள்ளி வைத்தாள்..
“ஓவ்!!” என்று துள்ளியவனை அனைவரும் கேள்வியாக பார்க்க, “இல்லை தேள் கடிச்சு..
“வேற பொய் சொல்லுடா..” விதுரன் சொல்ல
”சட்டுன்னு வரல மச்சி நான் என்ன செய்ய?..”
“அது ஒண்ணும் இல்லை மாப்பிள்ளை இப்போ டான்ஸ் ஆட போறார் அதுக்கு தான் இப்ப ஸ்டெப் போட்டு பார்த்தாங்க..” ஷக்தி விஜய்யை மாட்டி விட
“அடேய் நான் எப்போடா சொன்னேன்?.. எனக்கு யாரையாவது அடிக்க தெரியும் ஆட தெரியாது டா..” என்று மறுக்க
“அவ்வளவு தான இப்ப பாரு..” என்ற ஷக்தி “மாப்பிள்ளை கூட சேர்ந்து பொண்ணும் சேர்ந்து ஆட போறாங்க..” மீண்டும் அறிவிக்க, இப்போது எழில் ஷக்தியை திகைத்து பார்த்து, “இல்லை நான் ஆடலை..” எழில் மறுக்க
“அண்ணி பிளீஸ்..!! நீங்க காலேஜ் டேஸ்ல சூப்பரா ஆடுவிங்க என்று சிவாகாமி ஆண்ட்டி சொல்லிருக்காங்க.. எங்களுக்காக சின்ன டான்ஸ் பிளீஸ்.. வெண்பாவும், மலரும் எழிலிடம் கேட்க
“ம்மா நீங்க சூப்பரா டான்ஸ் ஆடுவிங்க நான் பார்த்திருக்கேன் ஆடுங்கம்மா..” நேத்ராவும் சொல்ல
எழில் விஜய்யை பார்த்தாள் அவன் கண்களில் ஆர்வம் தெரியவும் சிறு வெட்கத்துடன் சம்மதமாக தலையசைத்தாள்..
“டி ஜே சூப்பரான சாங் போடுங்க..” விதுரன் சொல்ல
உன்ன போல ஒருத்தன
நான் பார்த்ததே இல்ல…
உன் ஒசரம் பாத்து வானம்
கூட குறுகுமே மெல்ல…
சாமி போல வந்தவனே…
கேட்கும் முன்னே தந்தவனே…
நான் வணங்கும் நல்லவனே…
நல்ல உள்ளம் கொண்டவனே
என் ஒட்டுமொத்த ஜென்மத்துக்கும்…
சொந்தம் நீதானே…
பாடல் ஒலிக்க பாடலின் ஒவ்வொரு வரிகளும் தனக்காக கூறியது போலவே இருந்தது எழிலிற்கு.. ஒவ்வொரு வரியையும் உள்வாங்கி விஜய்யை பார்த்து கொண்டே ஆட
விஜய்யின் கால்கள் தன்னை அறியாமல் எழிலை நோக்கி சென்றது.. விஜய் செல்வதை பார்த்த ஷக்தி டி ஜே யிடம் ஒரு பாடலை கூறி போட சொல்ல
கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்
பாடல் ஒலிக்க தன் முகபாவனையில் அந்த பாடலுக்கேற்ற உணர்வுகளை விஜய் காண்பிக்க
இல்லை இல்லை விஜய்யின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை தான் அந்த பாடல் அறிவிப்பது போல் இருந்தது..
இருவரும் தங்களை மறந்த நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க
பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
ஹே பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி
இப்போது ஷக்தி அன் கோ பாடி ஆட அதில் மணமக்கள் சுற்றுப்புறம் உணர்ந்து இருவரும் தாங்கள் இருக்கும் நிலை எண்ணி சிறு வெட்கத்துடன் விலகி நின்றனர்..
ரிசப்ஷன் நல்லபடியாக கலகலப்பாக நடந்து முடிந்தது..
எழில் ரெஸ்ட் ரூம் சென்று வருவதாக சொல்லி செல்ல இரு பெண்களும் அவளுடன் துணைக்கு சென்றனர்..
அவள் அங்க சென்ற அதே நேரம் சுமித்ராவின் அந்த உறவுக்கார பெண் வெளியே வர, எழில் சிறு புன்னகையுடன் அவரை கடந்து செல்ல
“ஏன் மா உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு என்று எங்க வீட்டு பையனை நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட?.. உன் முகத்தை நீ கண்ணாடில பார்ப்ப தானே.. அப்பறம் எந்த தைரியத்தில் நீ சம்மதிச்ச?..” எடுத்ததுமே எழிலை திட்ட
அவரின் பேச்சில் ஒரு நொடி திகைத்த எழில், அடுத்த நொடி தன்னை சுதாரித்து கைகளை மார்பின் குறுக்கே கட்டி கொண்டு அவரை அழுத்தமாக பார்த்து
“உங்களுக்கு என்னங்க பிரச்சினை?.. என் புருஷன் என்னை விரும்பி கல்யாணம் பண்ணிருக்காங்க இதுல உங்களுக்கு என்ன வந்தது.. அதோட நான் தினமும் கண்ணாடி பார்க்கிறேன் தான் அதுக்கு எதுக்கு தைரியம் வேணும்.. என் புருஷன் ரசிச்சு பார்க்கிற என் முகத்தை நான் இன்னும் ரசிச்சு பார்க்கிறேன்.. இதுல உங்களுக்கு என்ன பிரச்சினை..
ஆமா இதெல்லாம் சொல்ல நீங்க யாரு..? என்னை பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கு கல்யாணத்துக்கு வந்தோமா பந்தியில் முதல் ஆளாக உட்கார்ந்து சாப்பிட்டோமா.. மொய்யை வச்சிட்டு கிளம்பினோமா என்று இல்லாமல் என்னை குறை சொல்ல நீங்க யாருங்க..
இனி ஒரு தடவை என்னை இப்படி பேசினிங்க..”என்று விரல் நீட்டி எச்சரித்த எழில்
“நான் ரெஸ்ட் ரூம் போகணும் போய்ட்டு வந்து உங்களை என்ன செய்வேன் என்று சொல்றேன்..” அலட்சியமாக சொல்லி விட்டு உள்ளே சென்ற எழிலை அதிர்ந்து பார்த்து கொண்டு இருந்தவரின் தோளில் ஒரு கரம் விழ அதில் திடுக்கிட்டு திரும்பியவர்
“சுமித்ரா நின்றிருப்பதை பார்த்து பார்த்தியா உன் மருமக எவ்வளவு வாய் பேசுறான்னு.. அவ முகம் இப்படி இருக்கப்பவே இவ்வளவு வாய் பேசுறா இவ கொஞ்சம் அழகா இருந்துட்டா அவ்வளவு தான்..” என்று வம்பு பேச
“அவளா இருக்க போய் வாய் பேச்சோடு விட்டா நானாக இருந்தால் என் கை பேசிருக்கும்.. உங்களுக்கு கொஞ்சம் இருக்கிற மரியாதை காப்பாத்தணும்னா இனியும் இங்கு இருக்காதிங்க.. அப்பறம் ஏற்கனவே உங்க மருமக கிட்ட சொல்லி ரெண்டு நேரம் சாப்பாட்டை ஒரு நேரமாக குறைக்க சொல்லிடுவேன் சுமித்ரா எச்சரிக்க
“உனக்கு நல்லது சொன்னேன் பாரு.. என்னை சொல்லணும்..” என்று புலம்பிக் கொண்டே தன் இரண்டு நேரம் உணவை தக்க வைத்துக் கொள்ள அந்த இடத்தை விட்டு அகன்றார்..
அன்று இரவு விஜய்க்கும், எழிலுக்கும் முதல் இரவு
ஏற்பாடாகி இருக்க
மிகுந்த ஆவலும் எதிர்பார்ப்புடனும் அறைக்குள் செல்ல இருந்த விஜய்யை இருவர் கடத்தி சென்றனர்..
இமை சிமிட்டும்
போன பதிவிற்கு கருத்துக்கள் ஸ்டிக்கர் கொடுத்த அனைத்து நட்பூக்களுக்கும் மிக்க நன்றி ❤️