Loading

இமை 60 

 

எழிலை கடத்திய அஷ்வினிடம் போனில் விஜய் கெஞ்சி கொண்டு இருக்க, விஜய் கெஞ்சுவதை பார்த்த அஸ்வினுக்கு பார்க்க அத்தனை சந்தோஷமாக இருந்தது.. “நீ கெஞ்சறைத பார்க்க பார்க்க அப்படியே ஜிவ்வுன்னு இருக்கு..” என்று கண்களை மூடி கூறி அஷ்வின் 

 

 

 

“இன்னும் கூட கெஞ்சு விஜய்.. அப்படி கெஞ்சினா ஒரு வேளை என் மனம் இறங்கி இவளை அனுப்பி வச்சாலும் வச்சிடுவேன்..” என்று அஷ்வின் நக்கலாக சொல்லி கொண்டு இருக்க அஷ்வினின் அலைபேசி சத்தம் கொடுக்க, “இன்ட்ரெஸ்டிங்கா பேசிட்டு இருக்கும் போது இவனுங்க வேற..” என்று சலித்தபடி அழைப்பது யார் என்று பார்க்காமல் போனை அணைத்து வைத்து விட்டு மீண்டும் அலைபேசியில் விஜய்யை பார்க்க விஜய் திரையில் தெரியவில்லை…

 

 

 

“டேய் டேய் எங்கடா போன?! அதுக்குள்ள காணாமல் போய்ட்ட என்னை பார்த்து பயந்துட்டியா?.. இப்படி நீ பயந்தவன் என்று தெரிஞ்சிருந்தா இவளை இவ்வளவு கஷ்டப்பட்டு தூக்கியிருக்க மாட்டேனே..” என்று நக்கலாக கூற கொண்டு இருந்த அஷ்வினை யாரோ ஓங்கி கன்னத்தில் அறைய 

 

 

 

விட்ட அறையில் இரண்டு அடி தள்ளி விழுந்த அஷ்வின் தன்னை அடித்தது யார் என்று கோபமாக நிமிர்ந்து பார்க்க, அங்கே தயாளன் கோபமாக இவனை முறைத்து பார்த்தபடி நின்றிருந்தார்..

 

 

 

ஏற்கனவே காயம் பட்ட கன்னம் இப்போது தான் மிக லேசாக காயம் ஆற தொடங்கி இருந்தது.. அந்த காயத்திலேயே மீண்டும் அடி விழவும் அதுவும் தன் தந்தையே தன்னை அடித்தார் என்று தெரியவும் 

 

அப்பா..?! என்றபடி அவரை அதிர்ந்து பார்த்தவன், தயாளன் பின்னே நின்றிருந்த விஜய்யை பார்த்ததும் இன்னும் அதிர்ந்தான்..

 

 

அடுத்து சில மணி நேரங்கள் நடந்த அனைத்திற்கும் விஜய் மட்டுமே பொறுப்பானான்.. ஆட்டம் போட்ட தந்தையையும் மகனையும் தன் வழியில் சிறப்பாக கவனித்த பிறகே இருவரையும் காவல்துறையில் ஒப்படைத்து விட்டு எழிலிடம் எல்லாம் சரியாகிருச்சு லிட்டில் கேர்ள்.. இனி எதுவும் பிரச்சினை இல்லை” என்று புன்னகையோடு கூறியவனின் கன்னத்தில் எழில் ஓங்கி அறைந்திருந்தாள்..

 

 

ஒரு மாதம் கழித்து..

 

 

நடந்து முடிந்த நிகழ்வுகளை எண்ணி நம்ப முடியாத வியப்பில் திளைத்திருந்தாள் எழில்.. தான் காண்பது கனவா..! இல்லை நிஜமா..! என்று உணர முடியாத மாயை உலகில் இருந்த எழில் சற்று குணிந்து தன் மார்பில் ஊஞ்சல் ஆடி கொண்டு இருக்கும் மாங்கல்யத்தை கையில் எடுத்து பார்த்தாள்..

 

 

 

மல்லிகை பூக்களால் சுற்றி இருந்த அந்த தாலியையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்த எழிலிற்கு தன் மனதில் எழும் உணர்வுகளை வார்த்தையில் வடிக்க இயலாததாக இருந்தது..  இதெல்லாம் உண்மையானதா?.. என்று இமைகளை தட்டி விழித்து பார்க்க தன் கண்களில் இருந்து விழுந்த இரு சொட்டு கண்ணீர் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் உண்மை என்பதை பறைசாற்றியது.. 

 

 

 

அதை மேலும் நிரூபிக்கும் வகையில்  வலிய கரம் ஒன்று எழிலை தன் தோளில் சாய்த்து அவள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து விட்டு அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டது.. 

 

 

 

சற்று நிமிர்ந்து அந்த கரத்திற்கு சொந்தக்காரனை பெரும் காதலுடன் பார்த்து கொண்டிருந்தவளிடம்.. “இப்படி பார்த்த.. அப்பறம் ஆளுங்க இருக்காங்க என்று கூட பார்க்க மாட்டேன்.. அப்படியே லிப் லாக் செஞ்சிடுவேன்..” என்று கண் சிமிட்டி காதலாக மிரட்டவும் 

 

 

 

“ஹான்..!!” திகைத்து விழித்த எழிலை பார்த்து குறும்பாக கண்சிமிட்டி சிரித்த விஜய், தான் குங்குமம் வைத்த நெற்றியில் அழுந்த முத்தமிட்டு விலகினான்.. லவ் யூ டி ராங்கி..” என்று தான் காதலை கூறி விட்டு விலகி அமர்ந்தான். ஆம் இன்று விஜயேந்திரனுக்கும், எழில் மதிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் விஜய் குல தெய்வம் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்று கொண்டிருக்கிறது..

 

 

திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மலர் தன் குழந்தைகளுடன் வந்திருக்க  ஷக்தி, விதுரன் வெண்பா அனைவரும் இரண்டு நாட்கள் முன்பு வந்திருந்தனர் விஜய் வீடே கலகலப்பாக இருந்தது.. மலரும் வெண்பாவும் அவர்கள் குழந்தைகளும் எழில் வீட்டிற்கும் சென்று வந்தனர்.. பெண்கள் கடைகளுக்கு செல்ல

 

 

 

“அப்பாடா இன்று ஒரு நாள் ஃப்ரீயாக இருக்கலாம்..” என்று கைகளை உயர்த்தி சோம்பல் முறித்த விதுரனின்  கரங்களை பின் பக்கம் வளைத்து முறித்த வெண்பா என்ன சொன்னிங்க வினு?..” என்று ராகமாக இழுத்து கேட்க “அது அது வந்து.. விதுரன் பதில் சொல்ல முடியாமல் திணற 

 

 

”அது ஒண்ணும் இல்லை மா எங்கள் தொல்லை இல்லாமல் நீங்க மட்டும் ஃபீரீயா இருப்பிங்க.. அப்படி விட கூடாது நாமளும் அவங்க கூட போகணும் என்று சொல்ல வந்தான்.. அதுக்குள்க நீங்க இடையில் பிரேக் போட்டுட்டிங்க சிஸ்டர்..” என்று சாமாளித்த ஷக்தி 

 

 

 

“சரி சரி கிளம்புங்க இப்ப கிளம்பினால் தான் நீங்க புடவை எல்லாம் தேடி எடுத்து இவங்க மேரேஜ் அன்னைக்கு வீட்டுக்கு வர சரியாக இருக்கும்..” என்ற ஷக்தியை பெண்கள் மூவரும் முறைக்க இன்னும் அந்த இடத்தில் நிற்பானா அவன் மலரின் சொல் அம்பில் இருந்து தப்பிக்க காரின் அருகில் சமத்தாக நின்று கொண்டான்.. பிறகு என்ன பெண்கள் பின்னோடு ஆண்களும் துணைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்..

 

 

 

 

இதில் நேத்ராவிற்கு தான் சந்தோஷம் தாளவில்லை.. தனக்கு பிடித்த அப்பா இனி தன் கூடவே இருக்க போவதில் பெரும் மகிழ்ச்சி குழந்தைக்கு 

 

 

 

எழில் நெற்றியில் முத்தம் கொடுப்பதை பார்த்து “அப்பா எனக்கு?.” எனக் கேட்டபடி நேத்ரா அருகில் வர, “உனக்கு இல்லததா பேபி..” என்றபடி விஜய் நேத்ராவின் கன்னத்தில் முத்தமிட வரவும் “வெயிட் வெயிட் என்று விஜய்யை தடுத்த நேத்ரா “இப்போ இல்லை நான் ஒன் , டூ, த்ரீ சொல்லுவேன் சொல்லி முடிக்கும் போது ஐஸ் க்ளோஸ் பண்ணிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு முத்தம் கொடுக்கணும்..” என உத்தரவு போடவும் 

 

 

 

“சரிடா.. பேபியோட கட்டளை எங்கள் சாசனம்..” என்று கேலி பேசி புன்னகையோடு இருவரும் அதற்கு ஒத்து கொள்ள, இருவருக்கும் இடையில் வந்த தன் கன்னத்தை காட்டிய நேத்ரா, “ரெடி ஒன், டூ, த்ரீ..” என்று கூறி முடிக்க,  எழிலும் விஜய்யும் கண்களை மூடி கொண்டு நேத்ராவிற்கு முத்தம் கொடுக்க வர 

 

 

 

ஸ் ஆ..” என்று எழிலும், விஜய்யும் தங்கள் நெற்றியை நீவி விட்டு கொண்டே நிமிர்ந்து பார்க்க “ஹேய்..” நேத்ரா துள்ளி குதித்தாள்..  ஆம் விஜய்யும், எழிலும் நேத்ராவிற்கு முத்தம் கொடுக்க நெருங்க கடைசி நொடியில் நேத்ரா இருவரிடமிருந்து சட்டென்று விலகி கொள்ளவும், இருவரும் ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டனர்.. 

 

 

 

“ஹேய் வாலு.. உன்னை.!!” என்று விஜய் மிரட்ட அங்கிருந்து ஓடிய நேத்ராவை விஜய் இழுத்து பிடித்து தன் மடியில் அமர வைத்து கொள்ள, “மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் சடங்கு இருக்கு பாப்பாவை கீழே இறக்குங்கோ..” அய்யர் சொல்ல, ”இல்ல  அய்யரே பாப்பா என் மடியிலே இருக்கட்டும்.. நீங்க நான் என்ன செய்யணும் சொல்லுங்க நான் அதை செய்கிறேன்..” என்று நேத்ராவை தன் மடியில் இருந்து இறக்க மறுத்த தன் ஹோட்டல்காரின் மீது இன்னும் காதல் பெருக,

 

 

 

சற்றும் யோசிக்காமல் சுற்றுப்புறம் மறந்து விஜயின் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்திருந்தாள் எழில்.. 

 

 

“ஹோ..ஹோ 

நெஞ்சில் ஜில் ஜில் ஜில்  

காதல் தில் தில் தில் 

கன்னத்தில் முத்தமிட்டால் 

 

ஷக்தி அன்கோ சத்தமாக பாட்டு பாட 

 

 

நண்பர்களின் ஆரவாரக் கூச்சலில் தான் சுற்றுப்புறமும் உணர்ந்தாரள் தான் செயல் உணர்ந்த மிகவும் வெட்கமாகி போனது எழிலிற்கு  அவர்களை பார்க்க கூச்சப்பட்டு விஜய் தோளில் தன் முகத்தை மைறைத்து கொள்ள அதற்கும் அவர்கள் கேலி செய்ய

 

 

 

தன்னவள் கொடுத்த முதல் இதழ் ஒற்றலில் தன்ன மறந்து இருந்த விஜய் நண்பர்களின் “டேய் போதும்டா ரொம்பத்தான் கிண்டல் செய்யாதீங்க.. என் ராங்கி எனக்கு தானே முத்தம் கொடுத்தா.. இதெல்லாம் தாண்டி தானடா நீங்க வந்திங்க. இனி யாராவது என் லிட்டில் கேர்ளை கிண்டல் செஞ்சிங்க அவ்வளவு தான்..”  என்று குரல் அதட்டல் இருந்தாலும், முகம் மலர்ந்து இருக்க 

 

 

 

“நீங்க அவங்ளை மிரட்டினிங்களா..” எழில் வியப்பாக  கேட்க “எஸ் கேர்ள்..” என்ற விஜய்யின் காதை பிடித்து வலிக்காமல் திருகிய எழில் நீங்க பேசாமல் இருந்திருந்தால் கூட அவங்க கொஞ்ச நேரம் பேசிட்டு விட்டிருப்பாங்க.. நீங்க எனக்கு சப்போர்ட செய்யவும் இன்னும் அதிகமாக கேலி செய்ய போறாங்க..” என்று விஜய்க்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுக்க

 

 

 

இதெல்லாம் ஒரு ஜாலி டா கேர்ள்.. இனி இந்த மாதிரி நாள் வருமா சொல்லு?..  பியூச்சர்ல நாம நினைச்சு பார்க்க ஸ்வீட் மெமரி வேணும் தானே சோ வரும்போது அனுபவிச்சுக்கணும்..” என்று சொல்லவும் தான் எழில் கொஞ்சம் இலகுவாகி பதிலுக்கு பதில் தானும் பேசலானாள்..

 

 

 

மலரும், வெண்பாவும் எழிலின் கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து கூறியவர்கள் “நாங்க அன்னைக்கு உங்க கிட்ட ஒரு விசயம் சொன்னோம் ஞாபகம் இருக்கா?.. என்று கேட்க 

 

 

“என்ன சொன்னிங்கடா?..  எனக்கு ஞாபகம் இல்லையே..”  எழில் யோசித்தபடி சொல்ல 

 

 

“நீங்க கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவீங்க..  என்று உறுதியாக சொன்னோம் தானே  நாங்க சொன்ன மாதிரியே நடந்துச்சுல்ல..” என்று உற்சாகமாக சொல்லி புன்னகைக்க எழிலும் புன்னகையுடன் அவர்களை பார்த்து கொண்டு இருந்தாள்..

 

 

 

எங்களோட இந்த நம்பிக்கைக்கான காரணத்தை உங்க கல்யாணத்தப்போ சொல்லுவோம் என்று  சொன்னோம் இல்ல?..” என்று எழிலுக்கு நினைவுபடுத்த 

 

 

 

அன்று அவர்கள் கூறியது இப்போது நினைத்து பார்த்த எழில் “ஆமால்ல அது எப்படி அவ்வளவு உறுதியாக சொன்னிங்க..?” எழில் வியப்பாக கேட்க, 

 

 

“அதுக்கான காரணம் நீங்க தான் அண்ணி..” 

 

 

“நானா?!.. நான் உங்களுக்கு நம்பிக்கை தர்ற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்?.” எழில் வியப்பாக கேட்க 

 

 

“அன்றைக்கே உங்க கண்ல விஜய் அண்ணுக்கான உங்கள் தேடலை நாங்க கண்டு கொண்டோம்.. அதனால் தான் நாங்க அவ்வளவு உறுதியாக சொல்லிட்டு வந்தோம்.. நாங்க சொன்ன மாதிரியே நடந்துருச்சு எங்களுக்கு ரொம்ப சந்தோசம் என இரு பெண்களும் கூறியபடி எழிலை அனைத்துக் கொள்ள..” 

 

 

“அவ்வளவு வெளிப்படையாக தெரிஞ்சது?” எழில் சிறு வெட்கத்துடன் கேட்க 

 

 

“அப்கோர்ஸ்..” என்று இரு பெண்களும் கோரசாக சொல்லி எழிலை கேலி செய்ய அவர்களின் கேலியில் முகம் சிவக்க இருவரையும் விரட்டி விட்டாள் 

 

 

இளவட்டங்களின் கலாட்டாக்களை மனம் நெகிழ்ந்து மகிழ்ந்து பார்த்து கொண்டு இருந்தனர் இருவரின் பெற்றோர்கள்.. திருமணத்திற்கு மிக நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்திருந்தனர்.. 

 

 

 

திருமணம் நல்லபடியாக முடிந்து அதனை தொடர்ந்து அனைத்து சடங்குகளும் நல்லபடியாக முடிந்தது.. 

 

 

மாலை ரிசப்ஷன் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்..  அதுவரை மணமக்களை ஓய்வு எடுக்கும் படி கூறிவிட்டு விஜய்யையும், எழிலையும் தனி தனி அறையில் ஓய்வெடுக்கும் படி கூறி விட்டு செல்ல

 

 

“இப்படி தனித்தனி ரூம்ல இருக்கிறதுக்காவா இவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணினேன்..? போங்கடா டேய் நான் என் ராங்கி கிட்ட போறேன்..” என்றபடி எழில் இருந்த அறைக்கு சென்றவன், அங்கு போர்வை போர்த்தி படுத்து கொண்டிருந்த எழிலை பார்த்ததும் 

 

 

“அடி ராங்கி நல்லா தூங்குறியா?.. இங்க ஒருத்தன் படுக்க முடியாமல் தவிச்சுட்டு இருக்கேன் நீ தூங்கிற..” என்று மெதுவாக முணுமுணுத்தபடி எழிலை நெருங்கியவன், அவளை அணைத்தபடி கட்டிலில் படுத்தவன் அடுத்த நொடி படுக்கையில் இருந்து துள்ளி குதித்து கீழே இறங்கியவன்,

 

 

“ஹேய் யார் நீ?..!” என்று கோபமாக கேட்க 

 

 

“என்ன அத்தான் இன்னைக்கு காலையில தான் கல்யாணம் ஆச்சு அதுக்குள்ள என்ன மறந்து யாருன்னு கேக்குறீங்களே இது உங்களுக்கே நியாயமா?.” ஒரு குரல் குழைந்து கேட்க 

 

 

“ஒழுங்கா இப்ப முகத்தை காட்ட போறியா இல்லையா..? என விஜய் அதட்ட 

 

 

“சீ போங்க எனக்கு வெட்கமாக இருக்கு..” மீண்டும் குரல் குழைந்து ஒலிக்க  விஜய் சட்டென்று அவள் போர்த்தி இருந்த போர்வையை விலக்கியவன், ஒரு நொடி அதிர்ந்து மறு நொடி கோபமாக அந்த உருவத்தின் மீது பாய்ந்திருந்தான்.. 

 

 

“டேய் டேய் விடறா..” ஷக்தி விஜய்யிடம் இருந்து திமிறி விலக இருவரும் கட்டிலில் உருண்டு கொண்டு இருக்க 

 

 

எங்களை விட்டு நீங்க மட்டும் விளையாட்றிங்க நாங்களும் வர்றோம் என்று குதூகலமாக கத்தியபடி குழைந்தைகளும் கேளும் சேர்ந்து கொள்ள.. சிறிது நேரத்தில் மற்றவர்களும் கலந்து கொள்ள 

 

 

அப்பறம் எங்கே அவர்கள் ஓய்வெடுப்பது.. அங்கு குழந்தைகளின் சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்டு கொண்டு இருந்தது..

 

 

இமை சிமிட்டும் 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்