விஜய் வீட்டிலிருந்து கிளம்பிய அதே நேரத்தில்.. எழில் வீட்டில் ஏதோ சிந்தனையில் இருந்தாள்.. “அங்க ஹோட்டல்ல ஏதோ ரெய்டு ன்னு சொன்னாங்க அங்க என்ன ஆச்சுன்னு தெரியலயே..” தனக்குள் கவலையாக நினைத்திருக்க, “அம்மா அப்பா எப்போ வருவாங்க?.. நான் தூங்கின பிறகு என்னை விட்டு போய்ட்டாங்க..” அழுத நேத்ராவை சமாதானம் செய்து கொண்டு இருந்த எழில் முன்னே அவளை முறைத்தபடி வந்து நின்றாள் சங்கவி..
தன் தோழியை பார்த்ததும், “கவி..” என்று சந்தோஷமாக அழைத்தபடி சங்கவியின் கரம் பிடிக்க வர, “அடேங்கப்பா மேடத்துக்கு என் பேர் எல்லாம் நியாபகம் இருக்கா?..” சங்கவி கோபமாக கேட்க
“என்னடி கோப பட்ற?.” எழில் புரியாமல் கேட்க
“பின்னே கோப படாமல் கொஞ்ச சொல்றியா? விஜய் சாருக்கு அடிபட்டிருக்குன்னு சொல்லி ஸ்கூல்ல இருந்து அப்படியே கிளம்பினவ.. அதுக்கு பிறகு உன்னை ஆளையே காணோம்..”
“ஓய் அதான் அப்போவே உனக்கு கால் செஞ்சு சொன்னேன்ல அவருக்கு எதுவும் இல்லை என்று.”
“அது மட்டும் தான் சொன்ன அதுக்கு பிறகு என்ன ஆச்சு என்று எதாவது சொன்னியா.. நான் போன் போட்டாலும் எடுக்கல அதான் சுமித்ரா மேடம் கிட்ட நீ எங்கே இருக்க என்று கேட்டு இங்க வந்தேன்..” என்ற சங்கவியை ஏகத்துக்கும் முறைத்த எழில்
“மேடம் அப்படி எத்தனை போன் போட்டிங்க?.. எழில் நக்கலாக கேட்க சங்கவி திருதிருவென முழித்தாள்.. நீ போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு என்னை சொல்றியா?.. எழில் அதட்டலாக கேட்க
“என் பழைய போன் காணம போய்டுச்சு.. நேத்து அதே நம்பர் மறுபடியும் வாங்கினேன்.. உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும் என்று தான் உன் கிட்ட அட்ரஸ் கேட்காம சுமித்ரா மேடம் கிட்ட வாங்கிட்டு வந்தேன்..
“அப்புறம் எதுக்குடி எனக்கு போன் போட்டேன்னு சொன்ன?.. என சங்கவியை முறைத்தபடி ஏழில் கேட்க “அதுவா சும்மா நீ எனக்கு போன் போட்டியா இல்லையான்னு செக் பண்றதுக்கு..* என சமாளித்த சங்கவியின் தலையில் வலிக்காமல் கொட்டிய எழில் அவளை உள்ளே அழைத்து சென்றாள்..
தன் பெற்றோருக்கு சங்கவியை அறிமுகம் செய்து விட்டு விஜய்யை காணாமல் தேடிய நேத்ராவை சமாதானம் செய்த எழில் பொம்மை ஒன்றை கையில் கொடுத்து விளையாட அனுப்பி வைத்து விட்டு சங்கவியின் பக்கம் திருப்பி
“சொல்லு கவி ஸ்கூல் ஃபங்சன் எப்படி போய்ட்டு இருக்கு?” நீ ஒரு ஆளாக சமாளிக்கிறியா..? இல்லை உனக்கு துணைக்கு வேற யாராவது இருக்காங்களா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் சமாளிச்சிடு நான் நாளையிலிருந்து ஸ்கூல் வந்திடுவேன்..” என்று வாய் ஓயாமல் பேசி கொண்டு இருந்த எழிலை ஆச்சரியமாக பார்த்த சங்கவி
“நீ என் ஃப்ரெண்ட் எழில் மதி தான இல்லை வேறு யாருமா?!” சங்கவி நம்ப முடியாமல் கேட்க
“என்னடி உளர்ற?. என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு..” முறைத்தபடி கேட்ட எழிலிடம்
“ அதுவா எனக்கு தெரிந்த ஒரு எழில் இருக்கா.. அவ எப்பவும் ஒரு அழுத்தமாக கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தைல பதில் சொல்லுவா.. இப்படி உண்டியல் குலுக்கிற மாதிரி கலகலப்பாக பேச மாட்டா.. அதான் அவளா இவள் என்று சின்ன சந்தேஏஏகம்..” என்று இழுத்து கூறிய சங்கவியை எழில் துரத்த சங்கவி அவளிடம் இருந்து தப்பி ஓட
“நேத்ரா பேபி உன் அம்மா என்னை அடிக்க வரா காப்பாத்துடா..” சங்கவி நேத்ராவை தன்னோடு அழைத்து கொண்டாள்.. சிவகாமி வந்து அதட்டிய பிறகு தான் அவர்களின் ஆட்டம் அடங்கியது..
“உன்னை இப்படி பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு எழில்.. இதுக்கெல்லாம் காரணமான விஜய் சாருக்கு ஒரு பெரிய கோவில் கட்டி கும்பிடணும்.. விஜய் சாரும் நீயும் சேர்ந்து சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க.. ஐயம் வெய்ட்டிங்..” என்றபடி எழிலை அணைத்து வாழ்த்த தோழியை தானும் அணைத்து விடுவித்த எழில் முகத்தில் சிறு வெட்கம்
“ஆத்தாடி இதென்னடா இந்த புள்ள முகம் இப்படி சிவக்குது..! கன்னத்தில் கை வைத்தபடி போலி ஆச்சரியத்துடன் கேட்ட சங்கவியிடம் “போதும் டி ரொம்ப கிண்டல் செய்யாத..” எழில் மிரட்டவும் சற்று அமைதியான சங்கவி
நான் நேத்ரா பேபிக்கு இன்னும் எதுவும் வாங்கித் தரவில்லை.. பாப்பாவை கடைக்கு கூட்டிட்டு போய் ஏதாவது வாங்கி தரலாம் நினைச்சேன்.. நம்ம எதாவது கடைக்கு போகலாமா?.. சங்கவி கேட்க
“எழிலுக்கும் வீட்டுக்குள்ளே இருப்பது ஒரு மாதிரியாக இருந்தது.. விஜய்யை தேடும் நேத்ராவிற்கு சற்று மாறுதலாக இருக்கும் என்று நினைத்தாலும், “எதுக்குடி இந்த ஃபார்மாலிட்டிஸ் அதெல்லாம் எதுவும் வேண்டாம்..” எழில் மறுக்க “ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் எதுவும் இல்லை பேபிக்கு எதாவது வாங்கி கொடுக்கணும் என்று எனக்கு ஒரு ஆசை
நீ வர்றியா? இல்லையா? சங்கவி பிடிவாதமாக கேட்க, “இல்ல கவி எங்கேயாவது வெளிய போனால் அவர்கிட்ட சொல்லிட்டு போக சொன்னாங்க அவர் போன் போட்டேன் எடுக்கல அதான் கொஞ்சம் தயக்கமாக இருக்கு..” எழில் தயங்கியபடி சொல்ல
“அவ்வளவு தான.. சார் எதாவது முக்கியமான வேலை இருப்பாங்க நம்ம வெளியே போறோம்னு சாருக்கு வாட்ஸப்ல ஒரு வாய்ஸ் மெசேஜ் போட்டுவிட்டு.. சார் ஃப்ரீயாகிட்டு உன் மெஸேஜ் பார்த்துட்டு தெரிஞ்சுக்கவாரு உனக்கு கால் பண்ணுவாரு.” என்று தீர்வு சொல்ல நீ சொல்றதும் சரி தான்..” என்ற எழில் விஜய்க்கு
உடனே அதை கேட்டுக் கொண்டு “ரொம்ப பிடிவாதம் தான் கவி உனக்கு என்று அலுத்து கொண்டாலும் “சரி பொறு வர்றேன்..” என்றபடி சிறிது நேரத்தில் நேத்ராவோடு கிளம்பி வர, மூவரும் கிளம்பி வெளியே சென்றனர்..
பெரிய ஷாப்பிங் மால்லிற்கு சென்றவர்கள் அங்கு ஒவ்வொரு இடமாக சுற்றி பார்த்தபடி பிளே ஸ்டோரில் சிறிது நேரம் விளையாடி விட்டு நேத்ராவிற்கு உடையும் பொம்மைகளும் வாங்கி கொடுத்த சங்கவியிடம் “எதுக்குடி இவ்வளவு?..” எழில் மறுக்க
“எனக்கு மேரேஜ் ஆகி குழந்தை வருமே அப்போ இதுக்கெல்லாம் சேர்த்து எல்லாம் ரெண்டு மடங்காக திரும்பி வசூல் செஞ்சிடுவேன் நீ கவலைப்படாதே..” விளையாட்டாக சொன்ன சங்கவி அலைபேசியில் அவள் வருங்கால கணவன் அழைத்து ஒரு இடத்தை கூறி அவளை அங்கு வர சொல்லவும்,
“நான் என் ஃப்ரெண்ட் கூட வந்திருக்கேன்.. கொஞ்ச நேரம் ஆகும்..” சங்கவி மறுக்க
“ஹேய் கவி எங்களுக்காக நீ தயங்காத.. அதான் எல்லாம் வாங்கியாச்சே.. நானும் அம்முவும் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறோம். நீ கிளம்பு..” தயங்கிய சங்கவியை வர்புறுத்தி அனுப்பி வைத்துவிட்டு சாலையில் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி நேத்ராவை ஏற்றி விட்டு தானும் ஏறி கொள்ள சில நிமிடங்களில் இருவரும் ஆட்டோவில் மயங்கி விழுந்திருந்தனர்..
தன் ஹோட்டல் முன் காரை நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே சென்ற விஜய்யை மறித்தனர் பத்திரிகையாளர்கள் சிலர்,
அவர்களின் கேள்விகளுக்கு “ உங்க எல்லா கேள்விகளுக்கும் நான் வந்து பதில் சொல்றேன் அது வரை யாரும் எங்கேயும் போக வேண்டாம்..” ஆளுமையான குரலில் கூறிவிட்டு உள்ள சென்றவன் அங்கிருந்த அதிகாரிகளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு
“என்ன ரெய்டு?.. எதுக்காக ரெய்டு?.. யார் கம்ப்ளெயிண்ட் கொடுத்தது?.. விஜய் அழுத்தமாக வரிசையாக கேள்வி கேட்க
“யார் கம்ப்ளெயிண்ட் கொடுத்தாங்க என்று உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை சார்.. உங்க ஹோட்டல்ல பிராஸ்டியூசன் நடக்குது என்று எங்களுக்கு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு எங்களுக்கு வந்த கம்ப்ளைன்ட் உண்மையா?. பொய்யா.? என்று சரி பார்க்கிறது தான் எங்க வேலை நீங்க கோ ஆபரேட் பண்ணீங்கன்னா நல்லா இருக்கும்..” ஒரு அதிகாரி குரலில் நக்கல் தொணிக்க கேட்க..
“ஓ.. தாரளமாக கோஓஓ ஆப்ரேஷன் செய்யலாமே.. என்று படு நக்கலாக கூறிய விஜய், “சரி எந்த ஃப்ளோர் எந்த ரூம்ல நடக்குது என்று சொல்லிருப்பாங்களே..” என்று ஏளனமாக கேட்க அந்த அதிகாரி பார்வையை வேறு பக்கம் திருப்பி கொள்ள விஜய் தன் மேனேஜரிடம் கண்ணை காட்டவும் அவர் அந்த அதிகாரிகளை அழைத்து சென்று ஒவ்வொரு அறைகளாக காண்பித்து கொண்டு வந்தார்..
அவர் எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் போக.. ஒரு குறிப்பிட்ட ஒரு அறையை மட்டும் தூண் துரும்பு இண்டு இடுக்கு விடாமல் தேடிய அந்த அதிகாரி குழப்பத்துடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தார்..
“வேறு எங்காவது செக் செய்யணுமா சார் சொல்லுங்க அங்கேயும் கூட்டிட்டு போறேன்..” இப்போது மேனேஜரின் குரலிலும் ஏகத்திற்கும் நக்கல் இருந்தது.. முகத்தில் ஏமாற்றத்தோடு வெளியே வர இருந்த இடத்தில் இருந்து இம்மியளவும் நகராமல் கால்மேல் கால் போட்டு கொண்டு கம்பீரமாக அமர்ந்து இருந்தான் விஜயேந்திரன் ..
“நீங்க எதிர்பார்த்தது கிடச்சுதா?.” உதடு வளைய இகழ்சியாக கேட்ட விஜய்யை அந்த அதிகாரி திகைத்து பார்க்க
“சரி நீங்க எதிர்பார்த்து வந்தது நடக்கல.. ஆனால் நீங்க எதிர்பார்க்காதது நடக்க போகுது..” இருக்கையில் விரல்களால் தாளம் தட்டியபடி கூறிய விஜய்யை அந்த அதிகாரி புரியாமல் பார்க்க
“வெளியே பத்திரிகைகாரங்க இருப்பாங்க அவங்களை உள்ள வர சொல்லுங்க..” விஜய் மேனேஜரிடம் உத்தரவிட, அவரும் பத்திரிகைகாரர்களை வர சொல்லவும்
எல்லாரும் வந்துட்டிங்களா? ரொம்ப நேரம் வெய்ட் பண்ண வச்சிட்டேன்.. முதல்ல ஜூஸ் குடிங்க அப்புறமாக என்ன நடந்தது என்று நான் சொல்றேன்.. என்றபடி அவர்களுக்கு குடிப்பதற்கு பழச்சாறுகள் கொடுத்க்குமாறு பணித்தவன் அவர்கள் அதை குடித்து முடிக்கும் வரை காத்திருந்து விட்டு
“இப்போ கேளுங்க உங்க கேள்வியை..” பத்திரிகை காரர்களிடம் சொல்ல,
“உங்க ஹோட்டல்ல பிரான்ஸ் டியூசன் நடக்குது என்று சொல்லி ரெய்டு வந்ததாக எங்களுக்கு நியூஸ் வந்திருக்கு.. அது உண்மையாக?. பொய்யா?” ஒருவர் கேட்க
“இதுக்கு நான் பதில் சொல்றதை விட என் ஹோட்டலுக்கு ரெய்டு வந்திருக்காங்களே அவங்களே சொல்வாங்க..” விஜய் அதிகாரிகளை பார்த்தபடி சொல்ல,
“சொல்லுங்க சார் இந்த ஹோட்டல்ல அந்த மாதிரி எதாவது நடந்ததா?..
“இல்லை அப்படி எதுவும் நடக்கவில்லை யாரோ ராங் இன்ஃபர்மேசன் கொடுத்திருக்காங்க.. சாரி ஃபார் இன்கன்வீனியன்ஸ்..” அதிகாரிகள் விஜய்யிடம் மன்னிப்பு கேட்க
“அதெப்படி இவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு ரெய்டு வந்திருக்கிங்க.. எதுவும் இல்லாமலா இருக்கும்.. வரும் போதே இவருக்கு இன்ஃபார்ம் செஞ்சிட்டு வந்திருப்பிங்க நினைக்கிறேன்.. அதான் நீங்க இங்க வர்றதுக்குள்ள எல்லாரையும அனுப்பி வச்சிருப்பாங்க.. பணக்காரர்களுக்கு தான் பணம் இருந்தால் போதுமே அவங்க எல்லாத்தையும் சரிகட்டிடுவாங்க..” பத்திரிகையாளர் கூட்டத்தில் ஒரு நிரூபர் எடக்காக பேச
“நீங்க சொல்றது உண்மை தான்..” விஜய் ஆமோதிக்கவும கூட்டத்தில் சலசலப்பு
“சார் நீங்க என்ன சொல்றிங்க.. அப்போ இந்த அதிகாரிகளுக்கு பணம் கொடுத்ததை நீங்க ஒத்துக்கிறிங்களா?.. இதை நாங்க எங்க பத்திரிகையில் எழுதலாமா..?” ஒரு நீரூபர் உறுதிபடுத்தி கொள்ள கேட்க
“ஹலோ என்ன நீங்க ஒரு நேர்மறையான அதிகாரிங்க கிட்ட பேசிட்டு இருக்கிங்க ஞாபகம் இருக்கட்டும்.. எங்களுக்கு வந்த கம்ப்ளைன்ட் வச்சு தான் நாங்க இங்க ரெய்டுக்கு வந்தோம்.. இங்க அது மாதிரி எதுவும் நடக்கல சோ இப்போ நாங்க கிளம்பறோம்..” ஒரு அதிகாரி கோபமாக கூறிவிட்டு அந்த ஹோட்டல் விட்டு வெளியேற போக
“சார் ஒரு நிமிசம்..!! அவரை தடுத்த விஜய்
“பணம் கொடுத்தது உண்மை.. ஆனால் அதை நான் கொடுத்தேன் என்று சொல்லவே இல்லையே.. அதே மாதிரி அந்த பணத்தை உங்கள்ல ஒருத்தர் வாங்கினதும் நிஜம்.. ஆனால் அது நீங்க இல்லை.. இதோ இந்த ரெய்டுக்காக ரொம்ப ஆர்வமாக இங்க வந்தாரே இவர் தான்..” இங்கு வந்தது முதல் விஜய்யிடம் நக்கலாக பேசி கொண்டு இருந்த மற்றொரு அதிகாரியை காண்பித்து கூறிய விஜய்யை அந்த அதிகாரி கோபமாக முறைத்து
“ ஹலோ சார் உங்க ஹோட்டல்ல தப்பு நடக்காம போயிருக்கலாம்.. ஆனா அதுக்காக என்ன நீங்க தப்பு சொல்ல கூடாது நான் ஒரு..” கோபமாக பேசிக்கொண்டு இருந்த அதிகாரியின் முகம் விஜய் காண்பித்த காணொளியில் அவருக்கு பதட்டத்தில் பயத்திலும் வேர்த்து விறுவிறுத்தது..
“ஆம் அது தயாளன் அந்த அதிகாரியிடம் பேசிய காட்சிகள் ஓடி கொண்டிருந்தது.. அதில் விஜய் ஹோட்டல் ரெய்டு வருவதற்கும் குறிப்பிட்ட ரெண்டு மூணு அறையில் ஜோடிகளை போக சொல்லிட்றேன்.. நீ தேட்ற மாதிரி தேடி அந்த ரூம்குள்ள இருக்கிறவங்களை வெளியே பத்திரிகை காரங்க கிட்ட காட்டுங்க மத்தெல்லாம் அவங்க பார்துப்பாங்க..” தயாளன் கூறியபடி அந்த அதிகாரியிடம் பணத்தை கொடுக்க
“நீங்க கவலையே படாதிங்க பொறுப்ப என்கிட்ட விட்டுட்டிங்கள்ல நான் எல்லாம் பார்த்துக்கிறேன்..அந்த விஜயேந்திரன் ஹோட்டல் சீல் வைக்கிறது உறுதி நீங்க நம்பிக்கையோடு போய்ட்டு வாங்க..” நம்பிக்கை கொடுக்கும் அந்த இரண்டு நிமிடம் காணொளி காட்சி நிறைவு பெற
அடுத்து என்ன அந்த அதிகாரி கையும் களவுமாக மாட்டி கொள்ள பத்திரிகை காரர்களுக்கு சுட சுட செய்தி கிடைக்க.. அடுத்த அடுத்த நிகழ்வு எல்லாம் கிரீஸ் போட்ட இயந்திரம் போல் இலகுவாக சென்றது..
தயாளன் முன்ஜாமீன் வாங்கி வைத்திருக்க அவரை கைது செய்வது தள்ளி போனது..
அனைத்து வேலைகளும் முடித்து விட்டு விஜய் தன் அலைபேசியை பார்த்தவன் எழில் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்து விட்டு எழிலுக்கு அழைக்க.. அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டு வீடியோ கால் வரவும்
“ராங்கிக்கு என்னை பார்க்காமல் இருக்க முடியலயா?..” என்று உல்லாசமாக நினைத்தபடி அழைப்பை ஏற்றவன் திரையில் அஷ்வின் முகம் தெரிய லிட்டில் கேர்ள் போன் இவன் கிட்ட எப்படி வந்தது?.. என்ற யேசனையோடு அஷ்வினை விஜய் கண்கள் இடுங்க பார்த்து கொண்டு இருந்தான்..
இமைசிமிட்டும்
தயாளன் அந்த அதிகாரியிடம் பேசிய காணொளி விஜய்யிடம் எப்படி வந்தது என்று அடுத்த பதிவில் சொல்றேன்..