இமை 49
முகத்தில் காயங்களுடன் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தான் அஷ்வின்.. அவன் அருகில் மிகுந்த கோபத்துடன் அமர்ந்திருந்தார் அவன் தந்தை தயாளன்.. சற்று முன் இந்த மருத்துவமனையில் எழிலிடம் விஜய் நடந்து கொண்டது கண்முன்னே வர
“செய்றது எல்லாம் செஞ்சிட்டு நீ அவ்வளவு சந்தோஷமா இருக்கியா? என்கிட்ட எவ்வளவு நல்லவனாக நடிச்ச உன்னை விட மாட்டேன்டா..” என்று கோபத்தில் கொந்தளித்து அமரந்திருந்தார்
சில நாட்களுக்கு முன் அதாவது அன்று அஷ்வின் கிளையண்ட் மீட்டிங்கை விஜய் குளறுபடி செய்த அன்று..
அஷ்வினிடம் சண்டை போட்ட இருவரில் ஒருவன் அஷ்வின் இரு கன்னத்திலும் ஆழமாக கீறி விட்டிருந்தான்… இன்னும் சிறிது விட்டிருந்தால் இரண்டு பக்க கன்னங்கள் சதை கிழிந்து தொங்கியிருக்கும்.. ஆனால் காரில் இருந்து ஒருவன் மறுப்பாக தலையசைக்கவும் அதோடு விட்டு சென்றனர்
வலியில் துடித்துக் கொண்டு இருந்த அஷ்வினை கண்களில் கூலர்ஸ் அணிந்தபடி நக்கல் சிரிப்புடன் பார்த்து கொண்டே காரில் ஏறி சென்றான்..
அங்கிருந்த சிலர், வலியில் துடித்துக் கொண்டு இருந்த அஷ்வினை மருத்துவமனை கொண்டு சென்றனர்.. கன்னத்தில் இருக்கும் காயத்தின் காரணமாக அவனால் வலியில் வாய்திறந்து கத்தவும் முடியவில்லை.. அதிக வலி காரணமாக கத்தாமல் இருக்கவும் முடியவில்லை.. பெரும் அவஸ்தையில் துடித்து கொண்டு இருந்தான்..
ஒரு கட்டத்தில், அஷ்வின் வலி மிகுதியில் மயக்கத்திற்கு சென்று விட, அவன் மயக்கத்தில் இருந்து விழிக்கும் போது தான் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்து நான் இங்க எப்படி வந்தேன் என்று சிந்தித்து கொண்டு இருக்க, நடந்த விசயங்கள் அனைத்தும் மனதில் வலம் வந்தது.. தன்னை தாக்க வந்த இருவரும் வேண்டுமென்றே தன்னை தாக்கியது போல் இப்போது தோன்றியது அவனுக்கு.
இப்படி வலியே வந்து சண்டை போடுற அளவுக்கு எனக்கு அவனுங்களுக்கும என்ன சம்பந்தம்? அவன் யோசிக்க சிந்தனையில் வந்து நின்றவன் விஜய், அவனால் தான் அன்றைக்கு வரவிருந்த பிஸினஸ் டீலிங் கேன்சல் ஆச்சு என்று கோபத்தில் பற்களை கடிக்க இரண்டு கன்னத்தில் இருந்த காயங்களும் நான் இங்கு தான் இருக்கிறேன் என்று உணர்த்துவது போல வலி கொடுக்க அவன் வலியில் முணங்கவும், அந்த சத்தத்தில்
யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்த அவன் தந்தை தயாளன், “எழுந்துட்டியா?.. இப்போ வலி எப்படி இருக்கு?.. என்று விசாரிக்க அவன் பேச முடியாமல் திணறி வலியில் முகம் சுளிக்க, “சரி சரி நீ பேச வேணாம் அப்படியே இரு” என்று அவனே சமாதானம் செய்த தயாளன்
“ஆமா எப்படி ஆச்சு இந்த காயம்?.. யார் உன்னை இப்படி செஞ்சது?.. என்று மீண்டும் விசாரித்த தந்தையை” அஷ்வின் முறைத்து பார்க்க, முகம் முழுவதும் வீங்கி இருக்க அஸ்வினின் முறைப்பை அவரால் உணர முடியவில்லை.. “நீங்க எப்படி இங்க வந்தீங்க நான் இங்க இருக்கிறத உங்களுக்கு யார் சொன்னது?” என அஸ்வின் சைகையில் விசாரிக்க
அவன் சொல்வது தயாளனுக்கு புரியவில்லை “நீ என்னடா கேட்கிற?” எனக்கு ஒன்னும் புரியலையே?” என புருவம் சுருக்கி கேட்க “ஒரு பேனாவும் நோட்டும் அஸ்வின் கேட்க அடுத்த நொடி அது அவன் கைக்கு வந்து சேர தான் கேட்க நினைத்ததை அதில் எழுதி தந்தையிடம் காண்பிக்க
“விஜயேந்திரன் தான் சொன்னாரு.. உங்க பையனை யாரோ அடிச்சிட்டாங்க.. அவரை இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்கன்னு தகவல் சொல்ல நான் பதறி அடிச்சுட்டு இங்க வந்து பார்க்கிறேன் எனக்கே உன்ன அடையாளம் தெரியல.. மற்ற இடத்துல எந்த அடியும் இல்லாமல் எப்படி முகத்தை மட்டும் காயப்படுத்தினாங்க என்று தெரியலையே..” என்று சத்தமாக யோசிக்க
அஸ்வினுக்கு தந்தை கூறிய விஜயேந்திரன் யார் என்று புரியவில்லை? அதைப் பற்றி தெரிந்து கொள்ளவும் இப்பொழுது ஆர்வம் இல்லை.. எனவே தயாளன் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் அந்த நோட்டில் எழுதி காண்பித்தான்.. அதை படிக்க படிக்க தயாளன் முகம் கொடூரமாக மாறியது.. “ஓ உன் மேல கையை வைக்க ஒருத்தனுக்கு தைரியம் இருக்கா?. அவன் குழந்தையை தூக்கின தால உன்னை இவ்வளவு டார்ச்சர் செஞ்சிருக்கானா?..
அவன் குழந்தையை தூக்கினதனால அவனுக்கு கோபம் வந்து உன்னை இவ்வளவு டார்ச்சர் பண்ணி இருக்கான்னா.. இத என் குழந்தையை தொட்டால் அவனுக்கு எவ்வளவு துன்பம் வரும் என்று நான் காட்ட வேணாமா..? அவன் குழந்தையை அவன் கண்ணு முன்னாடி தூக்கி அந்த குழந்தையை என்ன செய்றேனு பார்..” என்று சபதம் செய்து
“அந்த ஆள் யார் என்று சொல்லு?..” “எனக்கே என் மகனை அடையாளம் தெரியாம செஞ்ச அவனை நான் சும்மா விட மாட்டேன்..” என்று சூளுரைத்து கொண்டு இருக்க, எனக்கு அவன் யார் என்று தெரியல அவனை நேரில் பார்த்தா மட்டும் தான் அடையாளம் காட்ட முடியும்..” என்ற அஷ்வின்
“ரம்யா எங்க அவளை காணோம்..” என்று அஷ்வின் தன் மனைவியை விசாரிக்க தயாளன் முகம் இறுகியது.. அவர் முகம் மாற்றத்தை கண்டு ஏதோ சரி இல்லை என்று உணர்ந்த அஸ்வின் என்னாச்சுப்பா என மீண்டும் கேட்க
“உன் மனைவிக்கு உன் முகத்தை பார்த்து அருவருப்பாகவும் பயமாகவும் இருக்காம் அவ வந்து அஞ்சு நிமிஷம் கூட இங்கே தங்கல.. உடனே கிளம்பிட்டா.. அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா நீ சரியானதும் திரும்பி வரளாம்..!” என்று குரல் இறுக சொன்ன தந்தையை அதிர்ந்து பார்த்தான்.. என் மேல அவ்வளவு அன்பாக இருந்த ரம்யாவா என்னை பார்த்து அருவருப்பாக இருக்கு என்று சொல்லிட்டு போனா?..” என்று நம்ப முடியாத திகைப்போடு கேட்க தயாளன் ஆம் என்று தலையசைத்தார்..
நான் அவளை பார்க்கணும் ரம்யாவை வர சொல்லுங்கப்பா.. நான் பேசினா அவ மனசு மாறுவா..” என்று கேட்க ஒரு பெருமூச்சுடன் அஷ்வின் மனைவிக்கு அழைத்து விட்டு ஸ்பீக்கரில் போட
“இப்போ எதுக்கு கூப்பிட்டிங்க?” எடுத்ததுமே ரம்யா சிடுசிடுப்புடன் கேட்க உன் வீட்டுக்காரருக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சு அவன் உன்னை பார்க்க ஆசைபட்றான்.. என்று கூற, “எனக்கு தான் அவரை பார்க்க அருவருப்பாக இருக்கு சொன்னேன்ல அப்பறம் எதுக்கு வர சொல்றிங்க?
கொஞ்சம் அதி பணம் கொடுத்து நர்ஸை அவரை பார்த்துக்க சொல்லுங்க அவரை அப்படி பார்த்ததில் இருந்து எனக்கு சாப்பிட முடியல ஒரே வாமிட்டிங்கா இருக்கு.. இனி என்னை கூப்பிடாதிங்க நானே அவரை பார்க்க வருவேன்..” என்றபடி இணைப்பை துண்டிக்க, இத்தனை நாள் தன்னிடம் ஆசையாக அன்பாக கொஞ்சி பேசிய மனைவி இன்று தன்னை அருவருப்பாக நினைப்பது உணர்ந்த அதிர்ந்து அஷ்வின் தன் தந்தையை பார்க்க
“அவ பிரச்சினையை நாம அப்பறம் பாக்கலாம் இப்ப உன்னை யார் இப்படி செஞ்சது..? அந்த ஆளை பத்தி எதாவது அடையாளம் சொல்லு..” என்று தயாளன் அஸ்வினிடம் கேட்க விஜய்யை பற்றி யோசித்த அஸ்வினுக்கு விஜய்யை முதன் முதலில் பார்த்த அந்த ஹொட்டல் நினைவு வந்தது,
அது வந்து அவன் ஏதோ ஹோட்டல் முதலாளி என்று சொன்னான்.. அது வந்து..” என்று அஷ்வின் சொல்ல வர
“நான் உள்ளே வரலாமா?..” என்று கேட்டபடி கையில் பூங்கொத்துடன் நின்றது சாட்சாத் விஜயேந்திரன் தான்.. விஜய்யை பார்த்ததும் அதிர்ந்த அஸ்வின் அந்த லெட்டர்பேடை கீழே நழுவ விட்டான்.. “என்ன தம்பி நீங்க அனுமதி எல்லாம் கேட்டுட்டு இருக்கிங்க உள்ள வாங்க” என்று தயாளன் விஜய்யை அழைக்க
சிறு புன்னகையுடன் உள்ளே வந்த விஜய் அஸ்வினிடம் தான் கொண்டு வந்த பூங்கத்தை கொடுத்து கெட் வெல் சூன் என்று நக்கலாக சொல்லி விட்டு சற்று தள்ளி நிற்க, “ரொம்ப நன்றி தம்பி அன்னைக்கு நீங்க மட்டும் சொல்லாமல் என்னை நேரம் ரோட்ல தான் கிடந்திருப்பான்.. என்று தயாளன் விஜய்க்கு நன்றி கூற
“பரவால்ல சார் இருக்கட்டும்.. ஏதோ என்னால் முடிந்த உதவி.. நான் கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கணும் அப்படி வந்திருந்தா உங்க மகனுக்கு இப்படி அடி பட விட்டிருக்க மாட்டேன்..” என்று வருத்தமாக கூற
“என்னை அடிக்க வச்சதே நீ தானே டா.! என்று மனதில் பொறுமிய அஷ்வின், விஜய்யை காண்பித்து தன் தந்தையிடம் ஏதோ சைகை காட்ட, அவன் சைகை பாசை புரியாமல் தயாளன் முழிக்க, “உங்க பையனும் எனக்கு நன்றி சொல்றாங்க போல.. இதுக்கே நன்றி சொன்னா எப்படி.. இன்னும் நான் இவருக்கு செய்ய வேண்டியது எவ்ளோ இருக்க..” என்று பூடகமாக பேசிய விஜய்யை தயாளன் புரியாமல் பார்க்க,
“அது ஒண்ணும் இல்லை இவர் முகத்தில் இவ்வளவு பெரிய காயமா இருக்கே அதான் இன்னும் கொஞ்சம் பெரிய ஹாஸ்பிடல் பார்த்து சேர்க்கலாம் சொன்னேன்.. என்று சமாளித்த விஜய்யை புன்னகையுடன் பார்த்த தயாளன், “இருக்கட்டும் தம்பி நீங்க உதவி செய்யணும் நினைச்சதே பெரிய விசயம் நான் பார்த்துக்கிறேன்..” என்ற தயாளனிடம் விடைபெற்று சென்ற விஜய்யை வியப்பாக பார்த்து கொண்டிருந்த தயாளன்
“இந்த சின்ன வயசுல தொழில்ல எவ்வளவு வெற்றி அடைஞ்சிருக்கார் தெரியுமா?.. நீயும் இவரை மாதிரி பிசினஸ்ல எப்போ முன்னேற போற என்று ஆவலா இருக்கு டா..” என்று தயாளன் பேசிக்கொண்டே செல்ல தன் கையில் வைத்திருந்த பேனாவை கோபத்தோடு தயாளன் மீது எறிந்தான்.. அவர் என்ன என்று திரும்பி பார்க்க அஷ்வின் கீழே கிடந்த லெட்டர்பேடை காண்பிக்க
“அட லூசு பயலே உனக்கு முகத்தில் தான அடிபட்டிருக்கு.. கை கால் நல்லா தானே இருக்கு குணிஞ்சு எடுக்க வேண்டியது தானே..” என்று திட்டி கொண்டே அந்த லெட்டர் பேடை எடுத்து கொடுத்தார்.. அதை வாங்கி விறுவிறுவென எழுதி தயாளனிடம் காட்ட, அதை வாங்கி படித்து பார்த்தவர்
“என்ன உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கினது இந்த விஜயேந்திரனா?.. என்று திகைப்பாக கேட்க அஷ்வின் ஆம் என்று தலையசைக்க.. இனி நான் கவனிச்சிக்கிறேன் இவனை மனதில் கறுவிக் கொண்டு அஷ்வின் அருகில் அமரந்திருந்தார்..
நடந்ததை எல்லாம் நினைத்து கோபத்தில் அமர்ந்திருந்த தயாளனுக்கு இன்று விஜய்யும் எழிலும் காதல் செய்து கொண்டு இருப்பதை கண்டு அவர் கோபத்தில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆனது..
எழிலின் இதழ்கள் இன்னும் குறகுறுத்து கொண்டிருந்தது.. அடிக்கடி தன் இதழ்களை அழுந்த துடைத்துக் விட்டு கொண்டு இருந்தாள்.. உங்களுக்கு எவ்வளவு தைரியம் பேசிட்டு இருக்கும் போதே இப்படி முத்தம் கொடுக்குறிங்க?.” என்று எழில் கோபமாக கேட்க
“அடி ராங்கி முத்தம் கொடுக்கிறதுக்கு தைரியம் தேவை இல்லை காதல் இருந்தால் போதும்..” என்று கண்சிமிட்டி கூறிய விஜய்யை விறகு கட்டையால் நாலு சாத்த வேண்டும் போல் இருந்தது.. “ஆமா இந்த உதட்டில் என்னடி வச்சிருக்க அவ்வளவு டேஸ்ட்டா இருக்கு..” என்று சப்பு கொட்டி கூறிய விஜய்யின் நெஞ்சில் கை வைத்து தள்ளிய எழில்
“போடா அங்கிட்டு உனக்கு அடிபட்டிருக்கு என்று எவ்வளவு பதட்டமாக உன்னை வந்து பார்த்தால் நீ எல்லாம் நடிப்பு சொல்லி என்னை ஏமாத்திட்ட எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?. என்று அழுகையுடன் சொல்ல எழிலை தன்னோடு அணைத்துக் கொண்ட விஜய்
“அச்சோ என் செல்ல குட்டி.!! அழாதடா உன் மனசை வெளியே கொண்டு வர எனக்கு வேற வழி தெரியலைடா உன்னை பார்க்க வந்தா செத்து போய்ருவேன் சொல்லி மிரட்டி வச்ச.. என்னை பார்க்காமல் நீயும் சந்தோஷமா இல்லை என்று தெரிஞ்சது.. அதான் இப்படி நடிக்க வேண்டியதாயிற்று.. யாரோ ஒரு மூணாவது மனுசங்க சொன்னாங்க என்று நாம வாழ வேண்டிய வாழ்க்கையை அவர்களுக்காக விட்டு போகலாமா?.
“ஒரே ஒரு முறை வாழ்ந்து தான் பாரேன் லிட்டில் கேர்ள்.. இந்த உலகம் ரொம்ப அழகானது.. நீ நிஜம் என்று நினைக்கிற எதுவும் உண்மை இல்லை.. உன்னோட நம்பிக்கையை யாரும் கெடுக்கல..” என்ற விஜய்யை எழில் புரியாமல் பார்க்க
“உள்ளே வாங்க..” என்று விஜய் வாசலை பார்த்து யாரையோ அழைக்க, “யாரை பார்த்து கூப்பிட்றாங்க” என்று எழிலும் வாசலை பார்க்க.. அங்கு உள்ளே வந்து கொண்டிருந்த தன் பெற்
றோரை பார்த்து அதிர்ந்து நின்றாள் விஜய்யின் ராங்கி..