Loading

இமை 44

 

இரண்டு நாட்களாக தன் சாக்லேட் அங்கிள் காணாமல் விஜய்யை ஏக்கமாக தேடிய நேத்தராவை சமாதானம் செய்து குழந்தையை உறங்க வைத்த எழிலிற்கு மனம் குழம்பி கிடந்தது.. விஜய்யை இரண்டு நாட்கள் காணவில்லை.. யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை.. 

 

 

 

பள்ளியில் சுமித்ரா விடம் கேட்கவும் தயக்கம் அன்னிக்கு சுமித்ரா ஆண்ட்டிக்கிட்ட அவ்வளவு பேசிட்டு இப்போ எப்படி அவங்களை பற்றி கேட்பது?. என்று தயக்கத்துடனே அவரிடம் விஜய் பற்றி கேட்கும் எண்ணத்தை விட்டு விட்டாள்..

 

 

நேத்ரா அவள் சாக்லேட் அங்கிளை தேடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.. ஆனால் நீ ஏன் அவங்களை தேட்ற?..  அவங்களை பார்க்காததால் உனக்கு ஏன் கோபம் வரணும்?.. அவள் மனம் கேள்வி கேட்க, எழிலிடம் பதில் இல்லை..

 

 

 

 

“இப்போ ஏன் அவங்கள தேட்றேன்.. அவங்க வராமல் இருந்தால் நான் சந்தோஷம் தான படணும்.. ஆனால் ஏன் கோபமாகவும், எரிச்சலாக வருது?.. என்று சற்று சத்தமாக புலம்பி கொண்டு இருந்த எழிலுக்கு லேசாக தலை வலிப்பது போல் இருக்க நெற்றி பொட்டை நீவியபடி அமர்ந்திருந்தாள்.. 

 

 

 

உறக்கம் வராமல் சண்டித்தனம் செய்ய, தன் அருகில் உறங்கி கொண்டு இருந்த நேத்ரா உறக்கத்தில் கிழே உருண்டு விழாமல் இருக்க அருகில் தலையணையை வைத்து விட்டு,   வீட்டின் பின்புறம் சென்று அங்கிருந்த கல் ஒன்றில் அமர்ந்தாள்.. 

 

 

 

 

இரவு சில்லென்ற காற்று, மேகத்தின் இடையே மறைந்து கண்ணாமூச்சி விளையாடி கொண்டு இருந்த வெள்ளி நிலா.. இவை அனைத்தும் குழம்பி கொண்டு இருந்த எழில்  மனதை மிக லேசாக மாற்ற.. தன் மனதில் இருந்த குழப்பங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இந்த இரவின் ஏகாந்ததை ரசிக்க தொடங்கினாள்.. இது போல் நிதானமாக இயற்கையை எப்போது ரசித்தோம் என்று எழிலுக்கு மறந்தே போய்விட்டது.. 

 

 

 

சூறாவளியாக அவளை சுழற்றி அடித்த வாழ்க்கையில் இயற்கையை ரசிப்பதற்கெல்லாம் நேரமும் இல்லை.. அதற்கு மனமும் இல்லை.. ஆனால் இன்று நிறுத்தி நிதானமாக இந்த இரவை ரசித்து கொண்டு இருந்தாள்.. முதலில் எல்லாம் நேத்ரா உறங்கும் போது அவளை விட்டு இம்மியளவும் நகராமல், எப்போது இங்கு அஷ்வின் வந்து விடுவானோ என்று சிறு அச்சத்துடன் குழந்தை அருகிலேயே அமர்ந்திருப்பாள்.. 

 

 

 

ஆனால் இப்போது அவள் அறியாமல் அந்த பயத்தை போக்கி இருந்தான் விஜய்.. ஏனோ எழிலிற்கு முதலில் இருந்த அந்த பாதுகாப்பற்ற உணர்வு வெகுவாக குறைந்திருந்தது.. அவள் இறுக்கம் சற்று தளர்ந்து இருந்தது.. இயற்கையை ரசிக்க தோன்றியது.. இயற்கையோடு சேர்ந்து இசையையும் கேட்க வேண்டும் போல் தோன்ற 

 

 

 

தன் அலைபேசியை எடுத்த எழில் சில வருடங்களுக்கு பிறகு தனக்கு பிடித்த பாடல் ஒன்றை ஒலிக்க விட்டாள்..

 

 

நிலவு தூங்கும் நேரம் 

நினைவு தூங்கிடாது

இரவு தூங்கினாலும் 

உறவு தூங்கிடாது

இது ஒரு தொடர்கதை 

தினம் தினம் வளர்பிறை

 

 

கால்களை கட்டி கொண்டு முழங்காலில் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து கண் மூடி அந்த பாடலை ரசித்து கொண்டு இருந்த எழிலிற்கு இந்த பாடல் வரிகள் அவள் ஹோட்டல்காரை நினைவுபடுத்தியது பூவை மறைத்து வைத்தாலும் அதன் வாசத்தை மறைக்க முடியாதது போல,  விஜய்யை பிடிக்கவில்லை என்று வெளியே கூறினாலும், மனதில் அவன் நினைவுகள் வருவதை அவளால் தடுக்க முடியவில்லை..

 

 

நான்கு கண்ணில் இன்று 

ஒரு காட்சியானதே

வானம் காற்று பூமி 

இவை சாட்சியானதே

 

 

“முதன் முதலில் அன்று ஹோட்டலில் விஜய்யை பார்த்த நாளை நினைத்து பார்த்தாள்.. அன்று சில நொடிகள் மட்டுமே சந்தித்து கொண்ட அந்த கூர் விழிகள் இன்று  அவள் இதயத்தை துளைத்து சென்றது..‌ ஆனால் அது அவள் வியக்கத்தக்க வகையில் அவளுக்கு வலிக்கவில்லை..

 

வாழ்விலும் தாழ்விலும் 

விலகிடாத நேசம்

வாலிபம் தென்றலாய் 

என்றும் இங்கு வீசும்

ஏன் மயக்கம் ஏன் தயக்கம்

கண்ணே வா இங்கே‌..

 

 

இந்த வரிகளை கேட்கையில் விஜய்யை இப்போதே பார்க்க வேண்டும் போல் தோன்றியது எழிலுக்கு.. 

 

 

விஜய் பெயரை ஒவ்வொரு விதமாக சொல்லி கொண்டு இருந்த எழில் இறுதியில் தீரன்.. என்று உச்சரிக்க 

 

 

“என்னை கூப்பிட்டியா லிட்டில் கேர்ள்!?” மீசை முடி அவள் காதில் உரசியடி காந்த குரல் ஒன்று காதில் கேட்க அதில் திடுக்கிட்ட எழில் தான் அமர்ந்திருந்த நிலை மறந்து எழுந்தவள் அந்த கல்லில் இருந்து கீழே விழ போக.. வாய்ப்பை விடுவானா நம்ம ஹீரோ?.. அவள் இடையோடு சேர்த்து பிடித்தவன் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.. 

 

 

 

தன் இடையில் பதிந்த வலிமையான கரங்கள் அவள் உடலை விதிர்க்க செய்ய, “விடுங்க..” என்று விஜய் கையில் இருந்த திமிறய எழிலை, “மை லிட்டில் கேர்ள்..” என்ற விஜய்யின் கரகரப்பான குரலில் அவனை நிமிர்ந்து பார்த்த எழில் விஜய்யின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றில் தன்னை மறந்து அவன் கண்களை இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்..

 

 

நான்கு கண்ணில் 

இன்று ஒரு காட்சியானதே

வானம் காற்று பூமி 

இவை சாட்சியானதே

நானுனைப் பார்த்தது 

பூர்வ ஜென்ம பந்தம்

நீண்ட நாள் நினைவிலே 

வாழுமிந்த சொந்தம்

நான் இனி நீ… நீ இனி நான்

வாழ்வோம் வா கண்ணே..!!

 

 

விஜய் குரல் பெரும் காதலோடு சிறு தவிப்போடு பாட.. அவன் கண்களில் தெரிந்த காதலிலும், அவன் குரலில் இருந்த தவிப்பிலும்.. அவனை உதடு துடிக்க பார்த்த எழில் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது..

 

 

அவள் கண்ணீரை கண்ட விஜய் மனம் இளக “அம்மா ஏன் அழறிங்க?.” விஜய்யின் கைய்யில் இருந்த நேத்ரா அழுகையுடன் கேட்க, அதுவரை தங்கள் உலகத்தில் சஞ்சரித்து கொண்டு இருந்த இருவரும் நேத்ராவின் அழுகை குரலில் தங்களை சுதாரித்துக் கொண்டு இருவரும் விலகி நின்றனர்..

 

 

“பேபி அது அம்மா கண்ணுல தூசிடா அதான் அம்மா கண்ணுல தண்ணி வருது.. நீங்க அழாதிங்க செல்ல குட்டி..” என்று விஜய் நேத்ராவை சமாதானம் செய்ய, “ஆமாட அம்மு என் கண்ணுல தூசி விழுந்திருச்சு அம்மு. என்று எழில் நேத்ராவை சமாதானம் செய்துவிட்டு 

 

 

“ஆமா.. நீ தூங்கிட்டு தான் இருந்த அப்புறம் எப்படி எழுந்த?.! என வினவ அது நான் தூங்கிட்டு இருந்தப்போ சாக்லேட் அங்கிள் என்னை கூப்பிட்டாங்க நான் முழிச்சிட்டேன்..” என்று சொல்ல எழில் “தூங்குற குழந்தை எழுப்பிட்டு வந்தீங்களாக்கும்?.. என்று அவனை முறைத்து பார்க்க “அச்சோ நான் பேபியை எழுப்பல என அவசரமாக மறுத்த விஜய்யை எழில் நம்பாமல் பார்க்க 

 

 

 

“அட நிஜமா தான் ராங்கி.. நான் வரும்போது பாப்பா முழிச்சு உட்கார்ந்து இருந்தா.. அதான் நான் தூக்கிட்டு வந்தேன்..” என்று சொல்ல “ஆமாம்மா சாக்லேட் அங்கிள் என்னை கூப்பிட்டாங்க நான் கண்ணு முழிச்சே பார்க்கும்போது அங்கிள் காணோம்.. 

 

 

 

உங்களையும் தேடினேன் காணோம்.. அப்பறம் தான் அங்கிள் வந்தாங்க.. நானும் அங்கிளும் உங்களை தேடி இங்க வந்தோம்..” என்று நேத்ரா நீண்ட விளக்கம் அளிக்கவும் இருவருக்கும் புரிந்து போனது.. குழந்தை உறங்கும் போது தன்னை தேடி இருக்கிறாள் என்று உணர்ந்து கொண்ட விஜய் 

 

 

“சாரி பேபி அங்கிள் வேலை விசயமாக வெளியூர் போய்ருந்தேன்..” என்று சமாதானம் செய்து கொண்டிருக்க, குழந்தை மேல அக்கறை இருந்திருந்தால் சொல்லிட்டு போய்ருக்கணும்..‌ அப்படி இல்லேன்னா அங்க போன பிறகாவது சொல்லி இருக்கணும்.. எதுவும் சொல்லாம ஆள் அடையாளமே இல்லாம போனால் நாங்க என்ன நினைக்கிறது?..” என்று படபடவென பேசிய எழிலை வியப்பாக பார்த்த விஜய் 

 

 

 

“பேபியை விட பேபியோட அம்மா என்னை ரொம்ப தேடி இருப்பாங்க போலயே..” என குறும்பு குரலில் கூற, அதில் முகம் சுருக்கிய எழில் யாரும் யாரையும் தேடல சின்ன குழந்தை தேடி ஏமாந்து போறாளே என்று அந்த கோவத்துல சொன்னது..” என்ற எழிலை அழகான முறுவலுடன் பார்த்த விஜய் உதடு குவித்து கண்சிமிட்ட, அவன் செய்கையில் எழில் உடல் சிலிர்த்து முகம் சிவக்க தன் முகத்தை அவனுக்கு காட்டாமல் மறுபக்கம் திரும்பி நின்று கொண்டாள்..

 

 

 

“பேபி அங்கிளை ரொம்ப தேடுனிங்களா?..” விஜய் நேத்ராவிடம் கேட்க குழந்தை ஆம் என்று சொல்லவும்,  “இனி நான் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.. அப்படி போனாலும் உங்க கிட்ட சொல்லிட்டு தான் போவேன்..”என்று உறுதி அளித்த விஜய், “இப்போ நாம எங்கேயாவது வெளிய போகலாமா?.” கேள்வி நேத்ராவிடம் என்றாலும் பார்வை எழிலிடம் இருந்தது..

 

 

அவனுடன் வெளியே செல்ல ஆசை இருந்தாலும்,  அதை வெளியே காண்பிக்காமல்  “இப்போ எங்க வெளியே போறது.. மணியை பாரத்திங்களா?.. நாளைக்கு நான் ஸ்கூல் போக வேண்டாமா?.. என்று கேட்க.. “ம்மா மா ப்ளீஸ் மா நாம அங்கிளோட வெளியே போகலாம்..” என்று நேத்ரா கெஞ்சவும்,

 

 

 

“இப்போ இந்த நேரத்தில் எங்கடா அம்மு போறது?.. கேட்ட எழிலை பார்த்து அதை பத்தி உனக்கு என்ன.. நான் கூட்டிட்டு போற இடம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.. என்னை நம்பி வா..” என்று எழில் கண்களை பார்த்து ஆழ்ந்த குரலில் அழைக்க அந்த குரலில் கட்டுண்டு, முதன் முறையாக மறுப்பு கூறாமல் விஜய்யுடன் வெளியே சென்றாள்… 

 

 

 

அந்த இரவு நேரத்தில் வாகன நெரிசல் எதுவும் இல்லாத அந்த ஈ சி ஆர் சாலையில் விஜய்யின் வழுக்கி கொண்டு சென்றது.. விஜய்யுடன் முன் பக்க இருக்கையில் நேத்ராவை மடியில் அமர்த்தி கொண்டு எழில் விஜய் அருகில் அமர்ந்திருந்தாள்.. கார் ஜன்னல் வழியாக தெரிந்த நிலவினை கண்டு குதூகலித்த நேத்ரா 

 

 

 

“அம்மா நிலா நம்ம கூடவே வருது..” என்று உற்சாகமாக சொல்ல, ஆமா நிலாக்கள் என் கூடவே வருது..” என்று தன் அருகில் அமர்ந்திருந்த எழிலையும் நேத்ராவையும் ஓரக்கண்ணால் பார்த்தபடி கூற “அச்சோ அங்கிள் அது நிலாக்கள் இல்லை.. நிலா மட்டும்தான்.. பாருங்க ஒன்னே ஒன்னு தான் நம்ம கூடவே வருது.. என நேத்ரா மறுத்து கூற

 

 

 

“நான் சொன்னது அந்த நிலாவ இல்லையே பேபி..” என்று உல்லாச குரலில் கூறிய விஜய்யை முறைக்க முடியாமல் சாலையை வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருந்த எழிலின் இதழ் புன்னகையில் லேசாக விரிந்திருந்தது..

 

 

 

சில்லென்ற காற்று முகத்தில் மோத, அதி வேகமாக இல்லாமலும், மிக மெதுவாக இல்லாமலும் மிதமான வேகத்தில் காரை லாவகமாக செலுத்தி கொண்டு இருந்த விஜயின் வலிமையான கரங்களை பார்த்து கொண்டு இருந்தாள் எழில் மணிக்கட்டில் விலை உயர்ந்த வாட்ச், ஆட்காட்டி விரலில் பிளாட்டின மோதிரம்.. கழுத்தில் என்ன போட்டிருப்பாங்க தங்க செயினா?.. இல்லை இது போல் பிளாட்டினமா?.. என்று ஆராய்ச்சியாக அந்த கரங்களில் பயணித்த எழிலின் பார்வை விஜய் கழுத்திற்கு சென்றது

 

 

அங்கு அவன் போட்டிருந்த சட்டை காலர் அவன் கழுத்தை மறைத்திருக்க சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டாள்..

 

 

வழக்கமா எல்லாரும் மோதிர விரல்ல தான் மோதிரம் போடுவாங்க இவங்க என்ன ஆட்காட்டி விரலில் போட்டு இருக்காங்க?. என சிந்தித்தவாறே விஜய் முகத்தை பார்க்க, “அந்த விரல் என் வருங்கால மனைவி மோதிரம் போட்றதுக்காக வெய்ட்டிங்..” என்று சிறு புன்னகையுடன் கூறிய விஜய்யை திகைத்து பார்த்த எழில், 

 

 

 

“நான் நெனச்சது இவங்களுக்கு எப்படி தெரியும்.?” என குழப்பமாக விஜய் முகத்தை பார்க்க நிமிர்ந்தவள் “இல்லை வேண்டாம் அவங்க முகத்தை பார்த்தால், என் முகத்தை பார்த்தே ஏதாவது கண்டுபிடிச்சு  சொல்லுவாங்க.. எதுக்கு வம்பு?.” என்று தனக்குள் நினைத்துக் தலையை குனிந்து கொண்டாள்.. 

 

 

 

நேத்ரா காரை பற்றி சந்தேகம் கேட்டு கொண்டு இருக்க, குழந்தையின் கேள்விக்கு சலிக்காமல் பதில் சொல்லி கொண்டு வந்த விஜய் இன்று எழில் மனதை வெகுவாக ஆட்டுவித்து கொண்டு இருக்க, “இன்னிக்கு எனக்கு என்ன தான் ஆச்சு?.. இவங்க பக்கத்தில் ஏன் மனசு தடுமாறுது..?” என்று குழம்பி கொண்டு இருக்க 

 

 

 

“ரொம்ப யோசிக்காத லிட்டில் கேர்ள்.. நீ யோசிச்சாலே தப்பா முடிவெடுப்ப.. இந்த யோசனை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு இப்போ இந்த நிமிடம் என்ன நடக்குது அதை மட்டுமே நினைச்சிக்கோ..” எனக்கும் ரெண்டு நாளாக உங்களை பார்க்காமல் மனசே சரியில்லை அதான் கொஞ்ச நேரம் உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணும் போல இருந்தது..  

 

 

 

நம்ம மூணு பேர் மட்டுமே ஒரு லாங் ட்ரைவ்..” என்று சொல்லி கொண்டு வந்த விஜய் எழிலிடம் இருந்து பேச்சு வராமல் இருக்கவும்.. அவளை திரும்பி பார்க்க, எழில் எப்போதோ உறங்கி விட்டிருந்தாள்.. இரண்டு நாட்களாக உறக்கம் வராமல் தவித்து கொண்டிருந்த எழில் விஜய்யின் அருகாமையில் ஆழ்ந்து உறங்கி கொண்டு இருந்தாள்..

 

 

 

எழில் மடியில் அவள் மார்பில் தலைசாய்த்து நேத்ராவும் உறங்க, ஒரு கணம் நேத்ரா இருக்கும் இடத்தில் தான் இருப்பது போல் கற்பனை செய்து பார்த்த விஜய் அந்த நாள் எப்போது வருமோ..” சிறு ஏக்கத்துடன் நினைக்க..‌ நீ நினைப்பது வெகு விரைவில் நடக்கும் என்று கூறுவதைக்

போல் உறக்கத்தில் எழில்  விஜய்யின் தோள் சாய்ந்திருந்தாள்..

 

 

இமை சிமிட்டும் 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்