இமை 43
மதியின் பெற்றோரிடம் பேசிட்டு வந்த விஜய்க்கு மனம் வெகுவாக காத்திருந்தது.. இந்த நொடியில் அந்த அஷ்வினை சில்லு சில்லாக உடைத்து விட கைகள் பரபரத்தது.. நினைத்தை உடனே செய்யாமல் விட்டால் அவன் விஜயேந்திரன் அல்லவே..!!
தன் ஆட்களுக்கு அழைத்தவன் அஷ்வின் போட்டோவை அவர்களுக்கு அனுப்பி வைத்து அவன் இப்போது எங்கிருக்கிறான் என்று விசாரித்து அந்த இடத்தின் லொகேஷன் தனக்கு அனுப்புமாறு உத்தரவிட்டு இணைப்பை துண்டித்தான்..
விஜய்க்கு திவ்யாவை நினைத்து பிரமிப்பாக இருந்தது.. இந்த காலத்தில் பாசத்திற்காக உயிரையே கொடுக்கும் உறவு கிடைப்பதெல்லாம் வரம்.. அந்த வரம் பெற்ற மதியை நினைத்து சற்று பொறாமையாக இருந்தது.. ஆனால் அதை உணராமல், தன்னை சுற்றி வட்டம் போட்டு கொண்டு அதை விட்டு வெளியே வர மறுக்கும் அவள் மடத்தனத்தை நினைத்து கோபமாகவும் வந்தது..
“எல்லாம் சரி ஆனால் இந்த அஷ்வின் எதுக்கு நேத்ரா பேபியை தேட்றான்?.. அவனுக்கு தான் திவ்யா மேல அன்பும் இல்லை அக்கறையும் இல்லை ஆனால் பேபியை எதுக்கு தேட்றான்?..” என்று தனக்குள் யோசித்தபடி காரை ஓட்டிக் கொண்டு இருந்த விஜய்க்கு.. தற்போது அஷ்வின் இருக்கும் இடம் பற்றிய விவரம் அவன் அலைபேசிக்கு வர, ஓ சார் என் இடத்தில் தான் இருக்கிங்களா?!..” என்று ஏளனமாக சிரித்தபடி தன் காரை அஷ்வின் இருக்கும் இடம் நோக்கி செலுத்தினான்..
அஷ்வின் இருக்கும் இடத்திற்கு வருவதற்குள், தன் ஆட்களை அழைத்து சில விசயங்களை கூறியவன், நான் சொன்னதெல்லாம் இன்னும் ஒரு மணி நேரத்தில் நடக்கணும்..” என்று கட்டளையிட்டபடி இணைப்பை துண்டித்தான்..
அஷ்வின் அவன் அலுவலக சம்பந்தமாக கிளையண்ட் மீட்டிங் ஒன்றிற்காக ஹோட்டல் வந்திருக்க, விஜய்யும் அங்கு தான் வந்திருந்தான்.. மீட்டிங் நடந்து கொண்டு இருக்க, இருபக்கமும் ஒப்பந்தம் தயாராகி கையெழுத்து போடும் நொடியில், “அஷ்வின் மாமோய் நீங்க எங்க இருக்கிங்க?..” என்று ஒரு பெண் குரல் அந்த மீட்டிங் ஹால் முழுவதும் எதிரொலிக்க, மீட்டிங் இடையில் நிறுத்தப்பட்ட எரிச்சலில், அனைவரும் அந்த குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தனர்..
அங்கு கசங்கிய சேலையுடன் வாயில் வெற்றிலையை குதப்பி கொண்டு கையில் ஒரு குழந்தையுடன் பெண்ணும், அவளோட சேர்ந்து ஒரு ஆடவனும் உள்ளே வந்து கொண்டிருந்தனர்.. வேகமாக உள்ளே வந்த அந்த பெண், “மாமோய் நீங்க இங்கன தான் இருக்கியளா? உங்கள எத்தனை வருஷம் தேடினேன்..
இன்னிக்கு தான் என் கண்ணுல பட்டிய.. இத்தனை வருஷம் எங்க மாமா போனிக? உங்களை காணாம இத்தனை வருஷம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா”.. என்று அஷ்வினிடம் வந்து அவனை அணைத்து கொண்டு மூக்கில் வழிந்த நீரை தன் சேலை முந்தானையில் துடைத்து வாயில் எச்சில் ஒழுக கேட்க,
அந்த பெண்ணையும், அந்த குழந்தையையும் அருவருப்பாக பார்த்த அஷ்வின் “ஹெய் யார் நீ?.. யாருக்கு யார் மாமா?..”, என்று கோபமாக கேட்டபடி தன்னை அணைத்திருந்த பெண்ணை விலக்க,
“என்ன சொல்றிய மாமா என்னை தெரியலயா?.. ஆறு வருசத்துக்கு முந்தி எங்க ஊருக்கு வேலை விசயமா வந்தியளே.. அங்க வேலையும் பார்த்துட்டு என் வாழ்க்கையில விளையாடிபுட்டியளே நீங்க அப்படி விளையாடினதுல இதோ உங்க மவன் எப்படி வளந்து நிக்கிறான்னு பாருங்க..” என்று குழந்தையை காட்டியபடி பூரிப்பாக சொல்ல
மூக்கில் நீர் வழிந்தபடி வாயில் எச்சில் ஒழுக நின்று இருந்த அந்த குழந்தையை பார்த்த அஷ்வின் முகம் சுளித்து “ ஹேய் என்ன ஃப்ராடு வேலை பார்க்கிறிங்களா யார் நீங்க?.. உங்களை யார் அனுப்பினா?.. என்கிட்ட இப்படி நடிக்க சொல்லி யார் சொன்னது?.” என்று அஷ்வின் மிரட்டலாக கேட்க,
“அய்யோ என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டிய.. அய்யா கோட்டு சட்ட போட்ட பெரிய மனுசங்களே நீங்களே இந்த நியாயத்தை கேளுங்க.. இவிய ஏதோ வூடு கட்டணும் சொல்லி எங்க ஊருக்கு வந்தாக.. அந்த கிராமத்தில எங்கூடு தான் செத்த பெரிசா இருக்கும் அதனால் இவக எங்க வூட்டுல தான் தங்கினாக.. எங்க வூட்ல தான் சாப்பிட்டாக…இவக ஆசை வார்த்தை பேசி என்னை மயக்கினாக..
இவக வெள்ள தோல் பார்த்து நானும் மயங்கிப்புட்டேன்.. அப்படி மயங்கனதுலதே இதோ என் இடுப்பில இருக்க எங்க பையன்.. ரெண்டு மாசம் தான் அங்கன இருந்தாக.. சொந்த ஊர்ல ஏதோ அவசர வேலை என்று கிளம்பி வந்தாக அப்பறமா ஆளவே காணோம்.. நானும் இவக மேல இருக்க ஆசையில இவகள பத்தி சரியா விசாரிக்காமல் இருந்து போட்டேன்.. இவக சென்னைல இருக்காக என்று மட்டும் தான் தெரியும்..
வருசத்துக்கு ஒரு முறை இங்க வந்து இவகள தேடுவேன்.. ஆள் கிடைக்காம ஏமாந்து போவேன்.. இந்த மொறை எங்க குல சாமிக்கிட்ட வேண்டுதல் வச்சிட்டு வந்தேன்.. என் வேண்டுதல் வீண் போகல.. எங்க சாமி ஒரு சார் உருவத்தில் வந்து இவகள காட்டி கொடுத்துச்சு.. அந்த சார் கூட. இதோ இங்க தான இருந்தாக..” என்று வாசலை பார்த்தபடி அந்த பெண் சொல்லி கொண்டு இருக்க
அந்த மீட்டிங் ஹால் கதவை திறந்து கொண்டு கண்களில் கூலர்ஸ் அணிந்து இரண்டு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி சிங்கம் போல் கம்பீரமாக உள்ளே வந்து கொண்டிருந்த விஜய்யை பார்த்ததும்,
“இவனா..!? இவன் வில்லங்கம் பிடிச்சவனாச்சே” என்று அஷ்வின் தனக்குள்ளேயே முணுமுணுத்தபடி விஜய்யை திகைத்து பார்த்து கொண்டு இருந்த அஷ்வின் தன்னை சுதாரித்துக் கொண்டு, விஜய்யை கண்டு கொள்ளாமல்
“செக்யூரிட்டி..!! என்று கத்தி அழைத்தான்.. செக்யூரிட்டி உள்ளே வரவும், “மொதல்ல இதுகள வெளியே அடிச்சு துரத்து.. யார் வந்து கேட்டாலும் உள்ள விட்ருவியா?.. ஹோட்டல் பெருசா அழகா இருந்தா போதாது கஸ்டமருக்கும் செக்யூரிட்டி வேணும்.. இங்க அதெல்லாம் எதுவும் சரியில்லை.. முதல்ல உங்க மேனேஜரை வர சொல்லு..” என்று அதட்ட
நீங்க மேனேஜர் கிட்ட சொல்றதை விட எங்க முதலாளிக்கிட்டேயே சொல்லுங்க சார்.. ஏன்னா இவங்களை இங்க கூட்டிட்டு வந்ததே எங்க முதலாளி தான்..” என்று அந்த செக்யூரிட்டி விஜய்யை காண்பித்து சொல்ல, “என்ன இது இவன் ஹோட்டலா?! அப்படி எத்தனை ஹோட்டல் தான் இருக்கு இவனுக்கு..?” மனதில் சலிப்பாக நினைத்தபடி,
“இங்க பாருங்க சார் நான் இங்கே கஸ்டமர்.. கஸ்டமரோட பர்சனல் லைஃப்ல தலையிட உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்லை..” அஷ்வின் விஜய்யை பார்த்து சொல்ல, “அச்சோ மாமா அவகள திட்டாதிக அவக எனக்கு உதவி செஞ்ச சார்..” என்று அந்த பெண் இடையில் வர,
“ஏய்..!! இன்னொரு தடவை என்னை மாமான்னு சொன்ன உன்னை இங்கேயே கொண்ணு புதைச்சிடுவேன்..”என்று விரல் நீட்டி எச்சரித்த அஷ்வின் விரலை பின்னால் வளைத்து பிடித்து, “நான் இருக்கும் போதே என் தங்கச்சியை கொண்ணு புதைச்சிருவியோ.. நீ கொல்ற வரைக்கும் என் கை மாங்காய் பறிச்சிட்டு இருக்கமா?.. என் தங்கச்சி வாழ்க்கையாச்சே என்று பொறுமையாக பேசிட்டு இருக்கேன்.. இல்லை உன் தலையை இளநீ வெட்ற மாதிரி சீவிட்டு போய்ட்டே இருப்பேன்..” என்று அந்த பெண்ணுடன் வந்த ஆடவன் மிரட்ட
“மிஸ்டர் அஷ்வின் ஒரு பொண்ணு இத்தனை பேர் முன்னாடி உங்களை கணவர் என்று சொன்னால் அதுல உண்மை இல்லாமல் இருக்காது.. சோ நீங்க உங்க பெர்சனல் மேட்டர் எல்லாம் முடிச்சுட்டு வாங்க.. நாம அப்பறம் பிஸினஸ் பத்தி பேசுவோம்.. அப்பறம் இந்த டீலிங் இதோட கேன்சல் பணாணிக்கலாம்..” என்றபடி அந்த கிளையண்ட்ஸ் எழுந்து செல்ல அஷ்வின் திகைத்து நின்றான்..
இது பெரிய அளவில் லாபம் தர கூடிய பிஸினஸ் டீலிங் இது மட்டும் தனக்கு கிடைத்தால் தான் தொழிற்துறையில் பலமடங்கு முன்னேற்றம் அடையலாம் என்று கனவு கோட்டை கட்டி அந்த கிளையண்ட்டிடம் வெகு நாட்கள் போராடி இன்று மீட்டிங்கில் ஒப்பந்த பத்திரத்தில் இருவரும் கையெழுத்த போடும் நொடியில் அனைத்தையும் தலைகீழாக மாற்றிய அந்தப் பெண்ணை கொல்லும் வெறியுடன் முறைத்து பார்த்த அஷ்வின்
“இப்போது அந்தப் பெண்ணிடம் சண்டை போடுவதை விட தன் கிளையன்ட் டைம் சமாதானம் செய்வதே முக்கியமாக பட வெளியே சென்று கொண்டிருந்த அவரின் பின்னே சென்ற அஷ்வின், “சார் பிளீஸ் ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க எனக்கு அந்த பொண்ணு யார் என்றே தெரியாது.. யார் சொல்லியோ இங்க வத்து நடிக்கிறாங்க நம்பாதிங்க சார்..” என்று விஜய்யை ஓரக்கண்ணால் பார்த்தபடி கூறிய அஷ்வினை நம்பாமல் பார்த்த அந்த கிளையண்ட்
“நீங்க முதல்ல உங்க பர்சனல் பிராப்ளம் எல்லாத்தையும் சரி பண்ணிட்டு வாங்க.. பர்சனல் வாழ்க்கையில பிராப்ளம் இருந்தால் பிசினஸ்ல மைண்ட் போகாது எனக்கு தொழில் சுத்தமாக இருக்கணும்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க மேல இருந்த நம்பிக்கை இப்போ எனக்கு இல்ல இது எல்லாம் சரி பண்ணிட்டு வாங்க நாம அடுத்த மீட்டிங்ல பார்ப்போம்..” என்று கூறிவிட்டு அஷ்வின் அழைப்பதை பொருட்படுத்தாமல் செல்ல
தன் இத்தனை நாட்கள் உழைப்பு தான் கண்ட கனவு அனைத்தையும் தரைமட்டமாக்கிய அந்த பெண்ணை கொலை வெறியுடன் முறைத்துப் பார்த்த அஷ்வின்
“எல்லாரும் போய்ட்டாங்க இப்ப உண்மை சொல் யார் நீ?.. எதுக்காக இப்படி நடிக்கிற?.. நான் உன்னை இதுக்கு முன்னாடி பார்த்தது கூட இல்லை.. ஒழுங்கா உண்மையை சொல்லு..” என்று அந்த பெண்ணை மிரட்ட, “என்ன மாமா நான் இவ்வளவு சொல்றேன் நீங்க நம்ப மாட்டேங்கறீங்களே..” என்று குறைபட
“நான் உன்னை ஏமாத்தினேன் அப்படிங்கிறதுக்கு என்ன ஆதாரம் இருக்கு காட்டு..” என்று கோபமாக அஸ்வின் கேட்க “நம்ம அன்பு தான் மாமா சாட்சி..” என்ற பெண்ணை முறைத்து பார்த்த அஷ்வின், “நான் போட்டோ மாதிரி எதாவது ஆதாரம் இருக்கா கேட்டேன்..” பற்களின் இடையே வார்த்தைகளை கடித்து துப்ப,
“ஓ.. போட்டோ வேணுமா.? இத மொதயே கேட்கிறதுக்கு என்ன?.” என்று நொடித்தபடி இந்தா பாருங்க எங்க ஊர்ல கரும்பு காட்டுக்குள்ள நம்ம எடுத்த போட்டோ.. இது அந்த மல்லிகை தோட்டத்தில் எடுத்த போட்டோ.. இது அந்த வைக்கப்போர்ல எடுத்த போட்டோ..அங்க தான் நீங்க… சீ போங்க மாமா..” ஒவ்வொரு புகைப்படத்தை காண்பித்து சொல்லி கொண்டு வந்த அந்த பெண் கடைசி புகைப்படத்தை காட்டும் போது வெட்கம் கொள்ள, அஸ்வினுக்கு எங்கேயாவது முட்டி கொள்ளலாம் போல் தோன்றியது..
“இது உன் வேலை தான?..” அங்கு நடப்பதை கைகளை மார்பின் குறுக்கே கட்டி கொண்டு டேபிளில் சாய்ந்து நின்றபடி சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விஜய்யிடம் அஷ்வின் கோபமாக கேட்க..
“நான் இல்லை.. இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..” என்று மறுத்த விஜய்யை அஷ்வின் குழப்பமாக பார்த்து கொண்டு இருக்கும் போதே,
“அப்படின்னு சொன்னா ஒத்துக்கவா போற?..” என்று நக்கலாக கேட்ட விஜய், “அங்கிருந்து பெண்ணை பார்த்து கண்ணை காட்ட, “நீங்க கொடுத்த வாய்ப்புக்கு ரொம்ப நன்றி சார்.. இன்னும் வேற எதாவது ரோல் இருந்தாலும் கொடுங்க நான் நல்லா நடிச்சு தர்றேன்..” என்று அதுவரை இருந்த வெகுளித்தனம் மறைந்து தெளிவாக பேசிய அந்த பெண்ணை அஷ்வின் அதிர்ந்து பார்க்க
“கண்டிப்பாக தர்றேன் மா இப்போ நீங்க செஞ்ச உதவிக்கு மிக்க நன்றி..” என்று அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு ஒரு கவரை கொடுக்க அவர்களும் சந்தோஷமாக வாங்கி கொண்டு சென்றனர்.. இங்கு நடப்பதை அனைத்தும் நம்ப முடியாமல் பார்த்து கொண்டு இருந்த அஷ்வின் அருகில் வந்த விஜய்
“இந்த மீட்டிங் உனக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரியும்..அதே போல் அந்த கிளையண்ட் பத்தியும் ஓரளவு விசாரிச்சேன்.. எல்லாம் நான் நினைச்ச மாதிரி தான் நடந்திருக்கு..இனி உனக்கு இந்த பிசினஸ் டீல்.. “ஊஊஊஊ சங்கு தான்..” என்று படு நக்கலாக கூறிய விஜய்யை
“என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற.. இதுக்கு நிச்சயமாக நீ பதில் சொல்லியே ஆகணும்..” என்று எச்சரித்த அஷ்வினை அலட்சியமாக பார்த்த விஜய், நான் டீச்சர் கேட்ட கேள்விக்கே சரியாக பதில் சொல்ல மாட்டேன்.. உனக்கா பதில் சொல்ல போறேன்..போடா என் டொமேட்டோ.. போ போய் வேற புது கிளையண்ட் பிடிப்பியாம் நான் அதை வந்து கலைச்சு விடுவேனாம்..” என்று கேலி பேசிய விஜய்யை அடிக்க வந்த அஸ்வினின் கரத்தை முறுக்கி பின்னால் பிடித்து வைத்தவன்,
“இதுக்கே இவ்வளவு கோபம் வந்தால் எப்படி உனக்கு இன்னும் இருக்கே அதை நீ பார்க்க வேணும் தானே அதான் உன்னை விட்றேன்.. நீ போ..” என்று அஷ்வினை அனுப்பி வைக்க தன் கையை உதறியபடி வெளியே சென்ற அஷ்வின் வாசல் வந்து நின்று ஒரு முறை விஜய்யை பார்த்து செல்ல அவன் பார்வையை அலட்சியமாக கடந்த விஜய் தன் கூலர்ஸ் அணிந்து கொண்டு அஷ்வினை கடந்து சென்றான்..
“இவன் ரொம்ப ஓவரா போறான்.. எல்லாத்துக்கும் இருக்கு அவனுக்கு..” என்று மனதில் கறுவியபடி தன் கார் அருகில் வர, அங்கு யாரோ இரண்டு பேர் பயங்கரமாக சண்டை போட்டு கொண்டு இருந்தனர்..
“ஹலோ ரெண்டு பேரும் தள்ளி நின்று சண்டை போடுங்க இருக்கிற கடுப்பில் உங்களை எதாவது செஞ்சிட போறேன்..” என்று கடுப்பாக சொல்ல,
“ஏய் யார்கிட்ட வந்து என்ன பேசற.. நாங்க யார் தெரியுமா?.. நாங்க மாமன் மச்சான் இன்னிக்கு அடிச்சிபாபோம் நாளைக்கு சேர்நாதுப்போம் நீ யார் எங்களுக்கு இடையே வர..” என்று ஒருவன் அஸ்வினிடம் எகிறி கொண்டு வர
விஜய் மீது இருக்கும் கோபத்தை எல்லாம் திரட்டி அஷ்வின் அவனை ஓங்கி அறைந்திருந்தான்..
“என் மச்சானையா அடிச்ச?.. உன்னை என்ன செய்றேன் பார் என்று மற்றொருவன் அஷ்வினை அடிக்க வர, அஸ்வினிடம் அடி வாங்கியவன் அஷ்வின் இரு கைகளையும் பின்னால் பிடித்து கொண்டு, “மாப்பிள்ளை நாம் யாருன்னு இவனுக்கு காட்டணும்டா அவன் வாழ்க்கையில் இவன் நம்மள மறக்கவே கூடாது.” என்று சொல்ல
நீ சொல்றது சரிதான் மாமே..” என்றவன், தன் சட்டையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தவன் அஷ்வின் சுதாரிக்கும் முன் அவன் முகத்தில் இரண்டு கன்னத்திலும் அழுத்தமாக கிழித்து விட்டிருந்தான்..
இதை எல்லாம் தன் காரில் சாய்ந்தபடி இளம் புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்த விஜய் சிறு திருப்தியுடன் தன் காரை தன் ராங்கி வீட்டை நோக்கி செலுத்தினான்..
“அம்மா சாக்லேட் அங்கிள் எங்க போனாங்க.. அங்கிள் என்னை பார்க்க வரவே இல்லை..” என்று நேத்ரா அழுவது போல் கேட்க, “என்கிட்ட சொல்லிட்டா போனாங்க உன் சாக்லேட் அங்கிள்?. நினச்சா வராங்க போறாங்க.. நீயோ, நானோ நினச்சா உன் அங்கிள் வர மாட்டாங்க.. அவங்க நினைச்சா தான் வந்து உன்னை பார்ப்பாங்க..” இரண்டு நாட்கள் விஜய் இவர்களை பார்க்க வரவில்லை அந்த கோபத்தில் தான் நேத்ராவின் கேள்விக்கு கோபமாக பதில் சொல்லி கொண்டு இருந்தாள் எழில்..
அவள் மனம் குழம்பிய குட்டையாக தெளிவில்லாமல் கலங்கி கிடந்தது.. விஜய் அருகில் இருக்கும் போது அவனை விலக்கி வைப்பதில் மட்டும் குறியாக இருப்பவள், அவன் அருகில் இல்லை என்றால் அவளை அறியாமல் அவள் மனம் விஜய்யை தேடுகிறது.. அவன் தன் அருகில் இருக்க வேண்டும்.. ஆனால் தான் மறுத்தாலும் தன்னை மீறி அவன் தன்னுடனே இருக்க வேண்டும் என்று அவளின் ஆழ்மனம் எதிர்பார்த்தது..
“ஹோட்டல்கார்..!! விஜயேந்திரா..!! விஜய்..!! தீரா..” விஜய்யின் பெயரை ஒவ்வொரு விதமாக சொல்லி கொண்டு வந்த எழில் கடைசியாக கூறிய பெயரை உச்சரிக்கும் போது உடல் சிலிர்த்தது.. தான் உணர்ந்து நிஜமா அல்லது கனவா? என்று அறிய
மீண்டும் அவன் பெயரை தீராஆஆ..” என்று அழைக்க இப்போதும் எழில் உடல் சிலிர்க்க அவள் அறியாமல் சிறு புன்னகை அவள் இதழ்களில் ஒட்டி கொண்டது..
தீரா.!! சற்று சத்தமாக மீண்டும் அழைத்து பார்த்த மதியின் காதருகே, “என்னை கூப்டியா லிட்டில் கேர்ள்..?” என்று மயக்கும் ஆண் குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்க்க
எழிலின் வெகு அருகில் அவளை உரசியபடி நேத்ராவை கையில் வைத்துக் கொண்டு மயக்கும் புன்னகையுடன் தன் ராங்கியை பார்த்து கொண்டு இருந்தான் எழிலின் தீரன்..
இமை சிமிட்டும்