Loading

இமை 38

 

மதிய நேரம் அந்த உணவகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது.. எழிலும், சுமித்ராவும் சற்று ஒதுக்கு புறம்பான ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர்..சில  நிமிடங்கள் அங்கு மௌனமே ஆட்சி செய்தது 

 

 

 

“மேடம் என்ன வேண்டும்?.” என கேட்டபடி சர்வர் வந்து அமைதியை கலைக்க “உனக்கு என்ன ஆர்டர் செய்ய எழில்?..” சுமித்ரா மெனு கார்டை பார்த்தபடி கேட்க, “எனக்கு எதுவும் வேண்டாம் நீங்க சாப்பிடுங்க..” எழில் மறுக்க, “எனக்கு பசி தாங்காது எழில், கரெக்டா அந்த நேரத்துக்கு சாப்பிடணும்.. என் பையனும், அவன் அப்பாவும் என்னை அப்படி வளர்த்துட்டாங்க.. இப்போ எனக்கு பசிக்குது..”என்று சொல்ல

 

 

 

“அச்சோ மேடம் நீங்க சாப்பிடுங்க… உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க..” என்று  அவசரமாக சொல்ல, நீ சாப்பிடாமல் நான் எப்படி சாப்பிட்றது?.. உனக்கு வேண்டாம்னா எனக்கும் வேண்டாம்.. நீ ஏதோ என்கிட்ட பேசணும் சொன்னியே.. என்ன பேசணும்?. என்று கேட்க 

 

 

 

“மேடம் அது மெதுவா பேசிக்கலாம் இப்ப நீங்க முதல்ல சாப்பிடுங்க..” என எழில் பரபரப்பான குரலில் சொல்ல நீ சாப்பிட்டா நான் சாப்பிடுறேன் நீ சாப்பிடலைன்னா எனக்கும் வேண்டாம்..” என அழுத்தமாக கூறிய சுமித்ராவை ஒரு கணம் ஆழ்ந்த பார்த்து எழில், இவங்க கிட்ட இருந்து தான் இந்த பிடிவாத குணம் அந்த ஹோட்டல் காருக்கும் வந்திருக்குமோ எனது தன் போக்கில் நினைத்தபடி,

 

 

“சாப்பிட்றேன் மேடம்..” எழில் சொல்ல 

 

 

“இது ஸ்கூலும் இல்ல நான் ஹெச் எம் இல்ல சோ நீ என்ன அத்.. ஆன்ட்டின்னு கூப்பிடு.. ஆர்வத்தில் அத்தை என்று கூப்பிடுமாறு சொல்ல வந்த சுமித்ரா எழிலின் பார்வையில் ஆன்ட்டி என்ற மாற்றி சொல்லிவிட்டு தங்கள் அருகில் நின்றிருந்த சர்வரிடம் பனீர் ப்ரைட் ரைஸ் பெப்பர் அதிகமாக போடுங்க..‌அப்பறம் பெப்பர் சிக்கன்..” என்று சுமித்ரா ஆர்டர் போட..

 

 

 

எழில் விழிகள் வியப்பாக விரிய சுமித்ராவை பார்க்க உனக்கு பிடிச்ச டிஷ் எல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு நினைக்கிறியா எழில் இதெல்லாம் என் பையன் என்கிட்ட சொன்னது.. உன்ன பத்தி சொல்றதுன்னா அவனுக்கு பலாப்பழத்துல தேன் தட்டு சாப்பிடுற மாதிரி.. அவ்வளவு ஆசையா சொல்வான்..” என்று சுமித்ரா கூற 

 

 

 

 

சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்த எழிலுக்கு பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.. கைகளை கோர்ப்பதும் பிரிப்பதுமாக அமர்ந்திருந்த எழிலை பார்த்துக் கொண்டிருந்த சுமித்ரா “உனக்கு ஏம்மா என் பையன பிடிக்காம போச்சு?..” என்று நேரடியாக அவரே பேச்சை தொடங்க அதில் எழில் விலுக்கென நிமிர்ந்து சுமித்ராவை திகைப்போடு பார்த்தாள்..

 

 

“கோபமா எதுவும் கேட்கல டா.. இது அம்மாவாக ஒரு ஆதங்கத்தில் கேட்டேன்.. என் பையனுக்கு என்ன குறை அந்த பொண்ணு எதுக்கு வேணாம்னு சொல்றா இந்த மாதிரி ஒரு ஆதங்கம்தான்.. இது எனக்கு மட்டும் இல்லை பையனை பெத்த எல்லா அம்மாக்களும் நினைக்கிறது தான்.. அவன் ஃப்ரெண்ட்ஸ் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோட இருக்காங்க இவன் மட்டும் இப்படி தனியா இருக்கான் என்று எனக்கு ரொம்ப வருத்தம்.” 

 

 

 

“நான் அவன்கிட்ட எத்தனையோ முறை சொல்லிட்டேன் கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஆனா அவன் தான் நான் கல்யாணம் செஞ்சா அது காதல் கல்யாணம் தான் நான் அவளை உயிராக நேசிக்கணும்.. அவ இல்லை என்றால் என்னால் வாழவை முடியாது என்று நான் நினைக்கிற அளவுக்கு அவளை நேசிக்கணும்.. அவ்வளவு உறுதியாக இருந்தான்..”  

 

 

 

“அவன் மனசுக்கு பிடிச்ச உன்னையும் பார்த்தான்.. அதுக்கு பிறகு தான் அவனுக்கு கல்யாண ஆசை வந்தது. இதோ அவன் வாழ்க்கைகாக போராடிட்டு இருக்கான்.. பிசினஸ்ல வெற்றிகரமாக ஜெயித்த என் மகன் வாழ்கையில் தோற்று விடுவானோ என்று கொஞ்சம் பயமாக தான் இருக்கு..” என்று வேதனையோடு சொல்ல..  அவரின் வேதனை பார்த்து எழிலிற்குமே வேதனையானது.. அந்த வேதனையில் தான் பேச வந்ததையே மறந்து போய்விட்டது எழிலுக்கு.. 

 

 

 

ஏன் ஆண்டி உங்க பையன் கிட்ட குறை இருக்கு நினச்சா நான் அவரை மறுக்கிறேன்..?! குறை இருக்கு தான் ஆனால் அது அவருக்கு இல்லை எனக்கு..” என்று எழிலை சுமித்ரா “உனக்கு என்னடா குறை?..!” என்று புரியாமல் கேட்க “என்கிட்ட தான் குறை இருக்கு ஆண்ட்டி..‌ அந்த குறையால் தான் எனக்கு இந்த வாழ்க்கை மேல இருந்த நம்பிக்கை மனுசங்க மேல இருந்த நம்பிக்கை எப்பவோ போய்டுச்சு ஆண்ட்டி இப்போ நான் அம்முக்காக மட்டும் தான் இருக்கேன்… எனக்கு இது போதும் என்று தோணுது..” என்று தலைகுனிந்து சொன்ன எழிலை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த சுமித்ரா 

 

 

 

“அப்படி என்ன குறை உன்கிட்ட இருக்கு என்று புரியாமல் கேட்க நானே ஒரு குறை தான் ஆண்ட்டி என் முகத்தை பாருங்க எப்படி கோரமாக இருக்கு‌..? உங்க பையனோட அழகுக்கும் கம்பீரத்துக்கும் நான் எப்படி பொருத்தமாக இருப்பேன். இப்போ காதல் மயக்கத்தில் அவங்களுக்கு நான் அழகாக தெரியலாம் ஆனால் கல்யாண வாழ்க்கை நிறைய பிரச்சினை சந்திக்க நேரிடும்..‌” 

 

 

 

“அதுமட்டுமல்ல எனக்கு எது மேலயும் பிடிப்பு வரல..? அவங்களுக்கு என்ன தலையெழுத்து?.. என்னை கல்யாணம் செஞ்சிட்டு இப்படி கஷ்டப்படணுமா நீங்களே சொல்லுங்க..‌?” என்று எழில் சுமித்ராவிடம் கேட்க, “நான் என்ன செய்யணும்?..” சுமித்ரா கேட்க 

 

 

“தயவு செய்து உங்க பையன் மனசை மாத்திக்க சொல்லுங்க ஆண்ட்டி.. நான் ஊரை விட்டு போறேன் அவர் அந்த அக்ரீமெண்ட் கேன்சல் செய்ய சொல்லுங்க.. நீங்க சொன்னா உங்க பையன் கேட்பாங்க” என்று சொல்ல, “அதாவது என் விரல் வச்சு என் கண்ணையே குத்த சொல்ற அப்படி தான?..” என்று  சுமித்ரா கூர் பார்வையுடன் கேட்க, எழில் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க 

 

 

 

“சரி மா நான் சொல்றேன்.. ஆனால் நீ அவனுக்கு வேண்டாம் என்று தான் தோணுது..” என்று சுமித்ரா யோசனையாக சொல்ல எழில் திகைத்து அவரை பார்க்க, அழகு என்பது அகத்தை பொறுத்தது.. என்று நாங்கள் உறுதியாக நம்பறவங்க என் பையனுக்கும் நான் அப்படி தான் சொல்லி வளர்த்தேன்.. அவன் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஆள் இல்லை.. ஆனால் நீ அப்படி நினைக்கிற எழில்.. ஒரு வேளை உன் முகத்தில் இருக்கும் இந்த தழும்பு கல்யாணத்துக்கு பிறகு வந்திருந்தா என்ன செஞ்சிருப்ப?..” என்று கேட்க 

 

 

“இந்த கேள்வியை தான் ஆண்டி நானும் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அந்த அஷ்வின் கிட்ட கேட்டேன்..” என்று அழுகையில் குரல் நடுங்க கூறிய எழிலை சுமித்ரா அதிர்ந்து பார்த்தவர், “என்ன சொல்ற டா எனக்கு புரியல.. என்று கேட்க 

 

 

 

“இந்த முகத்தை பார்த்து தான் என்னை பார்த்தா அருவருப்பாக இருக்கு என்று சொல்லி நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தினான் அந்த அஷ்வின்.. என் நம்பிக்கையில் விழுந்த முதல் அடி.. என்னை வேண்டாம் என்று சொன்ன அந்த அஷ்வின் மேஜர் ஆகாத என் தங்கசியை கல்யாணம் செஞ்சிக்கிறேன் என கேட்டதும் கொஞ்சம் கூட யோசிக்காமல் பணக்கார சம்பந்தம் கை விட்டு போக கூடாது என்று 

 

 

 

ஸ்கூல் படிக்கிற பிள்ளையை அந்த அயோக்கியனுக்கு கொடுக்க சம்மதிச்சாங்களே.. என்னை பெத்தவங்க‌ அதுல விழுந்தது ரெண்டாவது அடி அதிலும் பெரிய அடி.!!” இப்படி நான் யாரை எல்லாம் நம்பினேனோ அவங்க எல்லாரும் என் முதுகில் குத்தி என் நம்பிக்கையை அடியோடு சாச்சிட்டாங்க, என்னை பெத்தவங்களே எனக்கு துரோகம் செய்யும் போது நான் யாரை நம்புவேன் ஆண்ட்டி..”  எனக்கு யாரை நம்பவும் பயமாக இருக்கு.. இத்தனை பயத்தோட உங்க பையன் கூட நான் எப்படி வாழ முடியும் 

 

 

 

அது அவங்களுக்கு நரகம் ஆகாதா?. உங்க பையன் சந்தோஷமாக வாழ வேண்டாமா ஆண்ட்டி.. இது எல்லாம் யோசிச்சு தான் நான் அவரை மறுக்கிறேன்.. ஒரு உண்மை சொல்லவா எனக்கு உங்க பையனை பிடிக்கும் அவங்க பக்கத்துல இருக்கும் போது நான் ரொம்ப பாதுகாப்பாக உணர்றேன்.. ஆனால் இது நிலைக்கும் என்று நம்பிக்கை வர மாட்டிங்குதே..!!” 

 

 

 

“பெத்தவங்களே என்னை, என் உணர்வுகளை புரிஞ்சிக்காத போது,  மத்தவங்க எப்படி என்னை புரிஞ்சிப்பாங்க..? நான் எல்லாம் யோசிச்சு தான் எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன்.. என்று தன்னை மீறி தன் கடந்த காலத்தை கூறிய எழில்..  நான் அழகை பார்க்கல ஆண்ட்டி ஆனால் மத்தவங்க பார்ப்பாங்க என்று சொல்ல வந்தேன்..”என்று நீளமாக பேசிய எழில் தன் கண்ணீரை துடைத்து கொண்டு, 

 

 

 

“நான் உங்க கிட்ட பேசணும் நினைச்சது பேசிட்டேன் ஆண்ட்டி.. உங்க பையன் கிட்ட கூட சொல்லாத விசயங்களை உங்க கிட்ட சொல்லிட்டேன்.. ஏன்னா அவங்களுக்கு இப்போ நான் மட்டும் தான் கண்ணுக்கு தெரிவேன்.. நான் சொல்ற காரணங்கள் எதுவும் தெரியாது..‌ ஆனால் நீங்க அப்படி இல்லை உங்களுக்கு சில விஷயங்கள் புரியும்.. அதான் உங்கிட்ட சொன்னேன்..” என்று இருக்கையில் இருந்து எழுந்தவாறே எழில் கூற

 

 

 

“சாப்பிடாமல் போறடா எழில் சாப்பிட்டு போ..” என்று அவள் கை பிடித்து அமர வைக்க, “இல்லை மேடம் பசிக்கல அவள் மறுக்க நீ சாப்பிடாமல் போனா பின்னால் இருக்கிறவன் என்னை சும்மா விட மாட்டான்..” என்று சுமித்ரா சொல்ல, “ஆண்ட்டி என்ன சொல்றிங்க எனக்கு புரியல..” என்று புருவம் சுருக்கி கேட்க “உன்ன சாப்பிடாம அனுப்புனா உள்ள இருக்க மனசாட்சி என்னை குத்தி கொன்னுடும்.. அதனால தான் சாப்பிட சொன்னேன்..” என்று சுமித்ரா சமாளிக்க,

 

 

 

“நீங்களும் சாப்பிடுங்க ஆண்ட்டி அப்போவே பசிக்குது சொன்னிங்க.. என்று சுமித்ராவிற்கு பரிமாறினாள்.. இருவரும் பொதுவாக பேசிக்கொண்டு உண்டு முடிக்க எழில் கை கழுவ எழுந்து செல்லவும் அதுவரை அவர்கள் பின்னால் தலையில் தொப்பி போட்டு அமர்ந்திருந்த ஆடவனின் முதுகில் வலிக்காமல் அடிக்க “வளர்ந்த பையனை அடிக்கிறது நாட் ஃபேர் மம்மி..” என்று முகம் சுளித்தபடி திரும்பிய விஜய்யை முறைந்தார் சுமித்ரா சுமித்ரா, 

 

 

டிவி சீரியல் பார்க்கிறேன்னு கேலி செஞ்சியே இப்போ அதான் எனக்கு கை கொடுத்துச்சு.. என்ன பார்க்கிற நான் பார்த்த சீரியல்னால தான் என்னால் அழுது நடிக்க முடிஞ்சது.. நீ பாவமா டா.. என் வாயால இதை சொல்ல வச்சிட்டியே..”என்று ஆதங்கமாக கூறிய அன்னையை போலியாக முறைத்து பார்த்த விஜய்யின் தோளில் தட்டி 

 

 

“எல்லாம் கேட்டியாடா  எழில் மனம் முழுக்க நீ தான் இருக்க.. அவ்ளோட மறுப்பிற்கு முக்கிய காரணம் நீ தான்.. உன் சந்தோஷத்தை நினச்சு தான் அவ மறுக்கிறா..” என்று சொல்ல விஜய்யின் முகத்தில் பெருமிதம் மின்ன அவ மனசில் நான் இருக்கேன் தெரியுமே ஆனால் அவ மறுப்பிற்கான காரணம் தெரியாமல் தானே முடிச்சிட்டு இருந்தேன்.. இப்போ ஓரளவுக்கு புரியுது..” என்று சிந்தனையில் கூறியவன் , எழில் தங்களை நோக்கி வருவதை பார்த்து அம்மா உங்க மருமக வாரா என கூறிவிட்டு அவசரமாக பழையபடி திரும்பி அமர்ந்து கொண்டான்..

 

 

 

இருவரும் பேசியபடி வெளியே செல்ல அவர்கள் போவதை புதிரான புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்தான் விஜய்..  

 

 

 

எழில் தன்னிடம் தனியாக பேச வேண்டும் என்ற கூறியதுமே சுமித்ரா விஜய்க்கு அழைத்து விஷயத்தை சொல்ல அவன் தான் அருகில் இருந்த ஹோட்டலுக்கு வருமாறு கூறினான்.. எழில் சுமித்ரா விடம் கூறியதை முழுவதுமாக கேட்டவன் ஒரு பெருமூச்சுடன் அன்னிக்கு ஹாஸ்பிடல்ல உன்னை விட்டு வந்திருக்க கூடாது லிட்டில் கேர்ள்.. இப்போ நான் தான் அவஸ்தை பட்றேன்..” எப்போதும் போல மீண்டும் அந்த எண்ணம் தோன்றியது விஜய்க்கு..

 

 

இருவரும் வெளியே செல்வதை பார்த்து கொண்டிருந்த விஜய் தன் அன்னைக்கு அழைத்து எழிலை முன்னே போகுமாறு சொல்ல,  சொல்ல 

 

 

“ஏன்டா..?” சுமித்ரா குழப்பமாக கேட்க..‌ “அது ஒரு வீம்புக்கு இனி நான் அந்த ராங்கி முன்னாடி வர மாட்டேன் சொல்லிட்டேன்.. அதுக்காக நான் அப்படியே இருக்க முடியுமா?.. அதுக்கு தான் ஒரு ஆட்டோ பாம் ஒண்ணு ஸ்கூல் என்டரென்ஸ்ல வச்சிருக்கேன்..‌ அது வெடிக்க போற நேரம் நீங்க அங்க இருந்தா அந்த ராங்கி உங்க கிட்ட தான் வருவா.. அதான் நீங்க போகாதிங்க சொன்னேன்..” புதிர் போட

 

 

“இவ்வளவு தானடா உன்னோட வீம்பு?.” என்று கேலி பேசிய போதும்” நீ என்னமோ சொல்ற நான் செய்றேன்.. இதனால் மருமகளுக்கு எதாவது ஆச்சு உன்னை சும்மா விட மாட்டேன்..” என்று எச்சரித்து விட்டே எழிலை முன்னே அனுப்பி வைத்தார்..

 

 

விஜய் சொன்ன ஆட்டோ பாம் அஷ்வின் உருவத்தில் அவளை நோக்கி வர அவனை பார்த்த எழில் மனம் தடதடக்க அவன் பார்வையில் படாமல் இருக்க ஒரு ஆடவன் முதுகின் பின்னால் மறைந்து நின்றபடி, “பிளீஸ் ஒரு ரெண்டு நிமிஷம் ஆடாமல் அசையாமல் இப்படியே நில்லுங்க சார்..” என்று கெஞ்சல் குரலில் கூறிவிட்டு அந்த ஆடவனை நிமிர்ந்து பார்த்தவள் ஸ்தம்பித்து நின்றாள்..

 

 

 

இமை சிமிட்டும்…

 

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்