இமை 37
“நானும், என் குழந்தையும் இந்த ஊரை விட்டு போறோம்..”என்று எழில் கூற, சில நிமிடங்கள் அந்த இடமே நிசப்தமாக இருந்தது.. விஜய் எதாவது சமாதானம் செய்து எழிலை தடுப்பான் என்ற எதிர்பார்ப்போடு எழிலை தவிர்த்து அனைவரும் விஜய்யை எதிர்பார்ப்போடு பாரக்க, “நீ தாராளமா போ ராங்கி.. வீட்டில் இருக்கிற திங்ஸ் எடுக்க எதாவது ஹெல்ப் வேணும்னா என்னை கேள்..” என்று அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கினான்..
அனைவரும் விஜய்யை அதிர்ந்து பார்க்க, எழில் தான் என்ன உணர்கிறாள் என்று தெரியவில்லை.. அவன் தன்னை தடுக்க வேண்டும் என்று நினைக்கிறாளா.. இல்லை அவன் தடுத்து அதையும் மீறி சென்று தன் மறுப்பை அவனுக்கு தெரிவிக்க நினைக்கிறாளா.. இல்லை உண்மையாகவே அஸ்வினுக்கு பயந்து ஊரை விட்டு செல்ல நினைக்கிறாளா.. என்று அவளுக்கே தெரியவில்லை.. மனம் குழம்பி தவித்தது..
“விஜி என்ன பேசற நீ அந்த பொண்ணு தான் ஏதோ பயத்தில் குழப்பத்தில் பேசிட்டு இருக்கான்னா நீயும் அவள போக சொல்ற.. கொஞ்சம் பொறுமையாக இருடா..” என்று மணிகண்டன் மகனை அதட்ட, “ப்பா.. அவங்க போகவா?.. என்று பர்மிஷன் கேட்கலப்பா.. போறேன்னு இன்பர்மேசன் சொல்றாங்க அவங்கள தடுக்க நாம யார்..?!” கைகளை மார்பின் குறுக்கே கட்டி கொண்டு புருவம் உயர்த்தி கேட்க, எழில் நேத்ராவை அணைத்தபடி அமைதியாக நின்றிருந்தாள்
“ஹேய் எழில் உனக்கு என்ன பைத்தியமா?!.. மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்ட காலி செஞ்ச கதையால்ல இருக்கு யாருக்கோ பயந்து நீ ஊரை விட்டு போறேன்னு சொல்றது.. அதான் இத்தனை பேர் இருக்கோம்ல எங்களை மீறி என்ன நடக்க போகுது.. நீ எங்கேயும் போக வேண்டாம்..” என சங்கவி அங்கலாய்க்க, அப்போதும் எழில் அமைதியாக இருந்தாள்..
சிஸ்டர் அவங்களை யாரும் எதுவும் சொல்லாதிங்க..” என்று தடுத்த விஜய் எழிலை அழுத்தமாக பார்த்து ”நீங்க எங்க வேண்டுமானாலும் போங்க.. ஆனால் இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு போங்க..” என்ற விஜய்யை எழில் கேள்வியாக பார்க்க ”அதாங்க நமக்குள்ளே ஒரு மூணு மாசம் அக்ரீமெண்ட இருக்கே.. அதை மறந்துட்டிங்களா?..” என்று விஜய் நக்கலாக கேட்க,
“எந்த அக்ரீமெண்ட்டும் என் மனசை மாத்தாது..” என்று எழில் மெதுவாக முணுமுணுக்க, “அதான் எனக்கு தெரியுமே..! என்று அதே நக்கல் குரலில் பேசிய விஜய், அந்த அக்ரீமெண்ட் முடிஞ்சதும் எனக்கு உங்களை பிடிக்கல என்று சொல்லிட்டு நீங்கள் தாரளமாக எந்த ஊரூக்கு வேண்டுமானாலும் போகலாம்..
“இல்லை அதையும் மீறி நீங்க போகணும் நினைச்சா நீங்க எங்க போறிங்களோ அங்க உங்களுக்கு முன்னாடி நான் நிற்பேன்.. அதுவும் நீங்க யாருக்கு பயந்து ஊரை விட்டு போறேன்னு சொல்றிங்களோ அந்த அஷ்வினோடு வந்து நிப்பேன்.. என்று தெனாவெட்டாக கூறியவனை அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்..
“என்ன நான் ஏதோ தப்பு செஞ்ச மாதிரி எல்லாரும் என்னை வில்லன் மாதிரி பார்க்கறிங்க.. ? போட்ட அக்ரீமெண்ட் மீறி ஊரை விட்டு போறேன்னு சொன்னது அவங்க.. நான் தோற்றாலும் அதுல நியாயம் இருக்கணும்.. இல்லேன்னா இவங்க வேற ஒரு விஜயேந்திரனை பார்ப்பாங்க.. இதை இவங்க வார்னிங் என்று நினைச்சாலும் சரி.. இல்லை மிரட்டல் என்று நினைச்சாலும் சரி.. ஐ டோண்ட் கேர்.!!” என்ற விஜய்
“எதுவும் தேடாமல் தானாக ஈசியா கையில் கிடைச்சா அதோட அருமை தெரியாதாம்.. அப்படி தான் என் அன்பும், காதலும் உங்களுக்கு அலட்சியமாக தெரியுது..” என்று உணர்வில்லாமல் கூறிவிட்டு
“இனி நான் அவங்களை தொல்லை செய்ய மாட்டேன்.. அந்த அஷ்வின் வந்து உங்களை தொல்லை செஞ்சாலும் நான் கண்டு கொள்ள மாட்டேன்..” என்று அலட்சியமாக கூறியவன்
“நீங்களாக வந்து என்கிட்ட உதவி செய்ங்க என்று கேட்கும் வரைக்கும்..ம்கூம் இல்லை உதவி செய்ங்க என்று கேட்க கூட வேண்டாம்.. என்னை நிமிர்ந்து பார்த்து என் கண்களை நேராகப் பார்த்தாலே போதும்.. உங்களுக்காக நான் நிற்பேன்.. அதுவரைக்கும் இனி எப்பவும் உங்க கண்ல படமாட்டேன்.. என் காதல் மேல் நம்பிக்கை இருக்கு நிச்சயம் நீங்களாக என்னை தேடி வருவிங்க…” என்று உறுதியாக கூறியவன்
சோ என்ன ஆனாலும் இன்னும் ரெண்டு மாசம் நீங்க இங்க இந்த ஊர்ல இருந்தே ஆகணும்..” என்று கடுமையாக கூறிவிட்டு மருத்துவமனையை விட்டு சென்ற விஜய்யை எழில் நம்ப முடியாத திகைப்போடு பார்த்து கொண்டு இருந்தாள்.. இத்தனை நாள் தன்னிடம் கனிவாக, அக்கறையாக பேசிய ஹோட்டல் கார் இன்று யாரோ போல் கோபமாக பேசியது அவள் மனதில் வலி கொடுத்தது.. ஏதோ ஒன்று தன்னை விட்டு விலகுவது போல் தோன்ற,
அப்போ இவங்களும் எல்லார் மாதிரி தானா.. அவங்களுக்கு நான் தேவை என்றால் மட்டும் தான் இந்த பாசம் பரிவு எல்லாம் கிடைக்கும் போல.. இல்லேன்னா இப்படி தான் யாரோ போல மிரட்டுவாங்களா..இங்க யாருமே உண்மையாகவே இல்லை எல்லாம் சுயநலம்..” என்று எழில் மனம் தன் போக்கில் விரக்தியாக நினைத்தபடி நின்றிருக்க, “யாரோ போல என்றால் என்ன அர்த்தம்? நீ யார் அவருக்கு?..” என்று மனசாட்சி கேள்வி எழுப்ப, பதில் தெரியவில்லை அவளுக்கு..
“ஹலோ யாராவது இருக்கிங்களா?.. ஒழுங்கா வந்து என் கட்டை அவுத்து விடுங்கடா.. என்னை பத்தி தெரியாமல் உங்க முதலாளி பேச்சை கேட்டு ஆட்ற அப்பரசண்டிங்களா..! கட்டை அவிழ்த்து விடுங்கடா.. நான் அசந்த நேரம் பார்த்து என் கையை கட்டி போட்டு இங்க கடத்தி வச்சிருங்களே.. வெட்கமாக இல்லையா..
தைரியமான ஆளா இருந்தால் என் கட்டுக்களை அவிழ்த்து விடுங்கடா.. பிளடி இடியட்ஸ்..!!” என்று ஆளில்லாத அறையில் அஷ்வின் கத்தி கொண்டு இருக்க, “கட்டை அவிழ்த்து விட்டா மட்டும் சார் என்ன செஞ்சிட போறிங்க?..” என்று நக்கலாக கேட்டபடி அங்கு வந்தான் விஜய்..
விஜய்யை பார்த்ததும் கோபமாக அவனை முறைத்து பார்த்த அஷ்வின் இங்க பாரு நீ என்னை அடிச்ச அதுக்கு பதில் நான் உன் பொண்ணை கடத்தினேன் பதிலுக்கு பதில் சரியாகிருச்சு.. ஒழுங்கா என்னை விட்ரு இல்லன்னா நீ ரொம்ப வருத்தப்படுவ..” என்று எச்சரிக்க
“என்ன வருத்தப்படுவேன்..?” என்று நிதானமாக கேட்டு கொண்டே அதைவிட நிதானமாக அஷ்வின் கட்டுக்களை அவிழ்த்து விட்டான் விஜய்… “கட்டுகள் அவிழந்ததும், மரத்து போன கை கால்களை ஒரு முறை உதறிவிட்டு கொண்டவாறே விஜய்யை முறைத்து பார்த்தவன்
“அதான் எனக்கு பயந்து கட்டை அவுத்து விட்டியே அப்பறம் உன்னை நான் என்ன செய்ய போறேன்?. இனி ஒரு முறை உன்னை நான் பார்க்க கூடாது அப்பறம் இது போல் நான் சின்ன விசயம் எதுவும் செய்ய மாட்டேன்.. நீ துடிச்சு அழற மாதிரி செஞ்சிருவேன்.. பார்த்து இருந்துக்கோ..” என்று விஜய்யை மிரட்டி செல்ல,
அஷ்வின் பின் பக்க சட்டை காலரை பிடித்து இழுத்த விஜய், “நான் உங்களை போகவே சொல்லலயே..” என்று நக்கல் பேச்சில், அஷ்வின் திகைத்து பார்க்க, ஒரு சின்ன குழந்தையை கடத்தினியே உனக்கு மனசு உறுத்தவே இல்லையா..? என்ற விஜய்யிடம்,
“எனக்கு அது குழந்தையாக தெரியல.. நீ தான் அந்த குழந்தையாக தெரிஞ்ச.. எனக்கு உன்னை அழ வைக்கணும் நினைச்சேன்.. நான் நினைச்சது நடந்திருச்சு..? என்று என்ன பார்க்கிற உன் குழந்தை காணோம் என்று கொஞ்ச நேரமாவது நீ பரிதவிச்சு நின்னுருக்க மாட்ட.. எனக்கு அது போதும்..” என்று சிறு உறுத்தல் கூட இல்லாமல் கூறிய அஷ்வின் குரல்வளை பிடித்து அப்படியே அந்தரத்தில் தூக்கி இருந்தான் விஜய்..
எழில் மீது இருந்த கோபத்தை எல்லாம் கைகளில் தேக்கி கண்கள் சிவக்க அஷ்வினை அந்தரத்தில் தூக்கி சுவற்றோடு மோதி நிறுத்தி இருந்தான்.. எதிர்பாராத தாக்குதலில் அஷ்வின் நிலைகுலைந்து கண்கள் மேலே ஏறி மூச்சு காற்றுக்கு தவித்து, கால்கள் உதறி கொண்டு விஜய்யின் கரத்தில் இருந்து விடுபட போராடினான்.. ஒரு கட்டத்தில் அஷ்வின் தலை தொய்வதை கண்டு தன் பிடியை தளர்த்த அப்படியே கீழே விழுந்தான்..
தொண்டையை பிடித்து இருமி கொண்டு இருந்த அஷ்வினை அற்பமாக பார்த்து “உன்னை அவ்வளவு சீக்கிரம் சாக அடிக்க மாட்டேன் டா ரெண்டு மாசத்துக்கு நீ எனக்கு தேவைப்பட்ற.. அதுக்காக மட்டும் தான் இப்போ நீ உயிரோடு இருக்க.. இனி நீ நடந்துக்கிறதை வச்சு தான் ரெண்டு மாசத்துக்கு பிறகு உன்னை விடறதா.? இல்லை உன் உயிரை எடுக்கிறதா என்று யோசிக்கிறேன்..
“இப்போ நீ போ.. இனி என் பார்வை எப்போதும் உன்னை சுத்தி தான் இருக்கும்.. எனக்கு எதிராக ஒரு துரும்பை அழைத்தாலும், அதுக்காக நீ ரொம்ப வருத்தப்படுவ அஷ்வின்..” என்று இறுகிய குரலில் எச்சரித்து அவனை அனுப்ப, “இப்போ நான் போறேன் டா.. ஆனால் உன்னை நான் சும்மா விட மாட்டேன்..என்னையவே உயிர் பயம் காமிச்சேல்ல அதுக்கு உனக்கு இருக்கு..என் அப்பா கிட்ட சொல்லி உன்னை என்ன செய்கிறேன் பார்..” என்று மனதில் கறுவிக்கொண்டு அந்த இடத்தை விட்டு செல்ல
“அடே அஷ்வின் நீ மைண்ட் வாய்ஸ் நினச்சு சத்தமாக பேசற.. பேச்சை குறை.. இன்னும் பத்து நிமிஷம் நீ இங்க இருந்தா அடுத்த நொடி உன் உயிர் உடம்பில் இருக்காது.. என்று விஜய் எச்சரிக்க பின்னங்கால் பிடறியில் பட விழுந்தடித்து ஓடினான் அஷ்வின்.. ஒடி கொண்டு இருந்த அஷ்வினை ஏளனமாக பார்த்த விஜய், “உன்னை மன்னிச்சி விட்றேன் நினைக்கிறியா?.. எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கே போக போக தெரிஞ்சிக்குவ உன்னை நான் ஏன் விட்டேன் என்று..” என்று விஜய் பொருள் விளங்காத சிறு புன்னகையுடன் தன் காரை நோக்கி சென்றான்..
எழில் மருத்துவமனையிலிருந்து வந்து ஒரு வாரம் கடந்து இருந்தது.. சங்கவி எழிலுடன் இருந்து அவளை நன்றாக பார்த்து கொண்டாள்.. இடையேயிடையே சுமித்ராவும், மணிகண்டனும் அவ்வப்போது எழிலை பார்த்து சென்றனர்.. சில சமயம் நேத்ராவை தங்களுடன் அழைத்து சென்றனர்.. ஆனாலும் எழில் மனம் எதையோ எதிர்பார்த்து தவித்தது.. ஆனால் அது என்ன என்று அவளுக்கே தெரியவில்லை அன்று மருத்துவமனையில் விஜய் அவளிடம் சொன்னது போல அவன் எழில் கண்களில் படவில்லை..
ஆனால் நேத்ராவிடம் மட்டும் எப்போதும் போல பேசி கொண்டு இருந்தான்.. ஆடு பகை குட்டி உறவா?.” என்று மனதில் முணுமுணுக்க மட்டுமே முடிந்தது அவளால்,
தலை காயம் சற்று ஆறி இருக்க இன்று பள்ளிக்கு வேலைக்கு வந்திருந்தாள்.. பாடம் எடுக்க புத்தகத்தை திறந்து வைத்து கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தாள்.. எழிலுக்கு கவனம் அதில் போகவில்லை.. பாடத்தில் மட்டும் அல்லாமல், சுற்றுப்புறம் எதிலும் கவனம் இல்லாமல், பார்வையை இலக்கில்லாமல் எங்கையோ வெறித்தபடி பார்த்து கொண்டு இருக்க,
“மேம்..!!” மாணவர்களின் கூச்சல் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்து, சுற்றுப்புறம் உணர்ந்தவள், “சாரி காய்ஸ்..” என்று அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு பாடம் எடுப்பதில் கவனம் வைக்க, ஆடவன் ஒருவனின் இறுக்கமான முகமே மனதில் வந்து போனது.. நீ போறேன்னா போ. இனி உன்னை தேடி வர மாட்டேன்.’ என்ற கடுமையான குரல் அவள் செவியில் இப்போதும் கேட்பது போல் பிரமை தோன்ற
தன் செவிமடலை ஒரு முறை அழுத்தி தேய்த்து கொண்டாள்.. சில நிமிடங்களுக்கு மேல் எழிலுக்கு பாடம் நடத்தவே முடியவில்லை.. மனதை ஒரு நிலைப்படுத்தி பாடம் எடுக்க முயற்சி செய்ய அதுவும் வெற்றிகரமாக தோல்வியில் முடிந்தது.. எழிலிற்கு இனியும் பாடம் எடுக்க முடியும் என்று தோன்றவில்லை பட்டென்று புத்தகத்தை மூடி வைத்தவள், மாணவர்களுக்கு சிறு தேர்வு ஒன்றை வைத்து விட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..
மாணவர்கள் தேர்வு முடிக்கவும், உணவு இடைவேளை வரவும் சரியாக இருக்க இருக்கையில் இருந்து எழுந்த எழில் மாணவர்களுக்கு முன்பாகவே வகுப்பறையை விட்டு வெளியே செனாறிருந்தாள்.. நேராக சுமித்ரா இருக்கும் அறைக்கு வந்தவள், “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்று சொல்ல
சிறு புன்னகையுடன் எழிலை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த சுமித்ரா, “ஒரு தலைமை ஆசிரியர் கிட்ட டீச்சர் பேசணுமா..? இல்லை விஜயோட அம்மாவாக என்கிட்ட பேசணுமா?..” என்று கேட்க சில நொடிகள் தயங்கிய எழில், அவங்களோட அம்மாக்கிட்ட பேசணும்..” என்று மெதுவாக கூற, “இது ஆஃபிஸ் இங்க வச்சு நம்ம பர்சனல் விசயம் எதுவும் பேச வேண்டாம்.. ஒரு மணி நேரம் பிரேக் டைம் இங்க பக்கத்தில் இருக்க ரெஸ்டாரன்ட் போகலாமா..? என்று கேட்க எழில் சம்மதமாக தலையசைத்தாள்..
இருவரும் பேசிவிட்டு வெளியே வர சுமித்ராவிற்கு ஏதோ அழைப்பு வரவும், “நீ முன்னாடி போ எழில்.. நான் கால் பேசிட்டு வர்றேன்..” என்று எழிலை அனுப்பி விட்டு போனில் பேசிக் கொண்டு இருக்க, பள்ளியை நோக்கி சென்ற எழில் அங்கு பள்ளி வாசலில் தன்னை பார்த்தபடி வேகமாக வந்து கொண்டிருந்த அஷ்வினை கண்டு அதிர்ந்து நின்றாள்..
இமை சிமிட்டும்..