அத்தியாயம் 19
இருவருக்குமான அன்றைய சந்திப்பு மென்மையிலும் இனிமையிலும் நிறைந்ததாக இருந்தது..அத் தருணம் அவர்களின் மனதில் நிலைத்த ஒரு நினைவாக மாறியது..
இரவு உணவை வசந்தாவும் ஜெனனியும் சேர்ந்து சமைத்து ஒன்றாகவே அவர்கள் அமர்ந்து பேசியபடி உணவை அருந்தினார்கள்…
அதன் பின் இரவில் மெத்தையில் வீழ்ந்த போது கண்மூடி இருந்தாலும் சன்ஜீவனுடனான அவளின் நெருக்கம் நினைவூட்டுவதாய்!
அவள் எந்த நினைவில் இருந்தாளோ அதே நினைவில் அவனும் மெத்தையில் வீழ்ந்தவாறு தலைக்கு இரு கைகளையும் கொடுத்து விட்டத்தை பார்த்தவாறு அவளை நினைத்து மெல்லமாக சிரித்தான்…
“ அறிவு கெட்டவனே! ” அவள் சீற்றத்தில் சொன்ன வார்த்தை அவனுக்கு பிடித்திருந்தது..
அதனை நினைத்து சிரித்தும் கொண்டான் அவன்.. இன்று இருவருக்குமாக இருக்கும் மெல்லிய அசர்வம்..இதுவே அவர்களுக்கு இறுதி நாள் என்பதை எப்படி உணர்வார்கள்..
இவர்களுக்கு இதழ் முத்ததின் மூலம் காதலும் நெருக்கமும் மாறுபட்டு..
அந்த தருணம் காலமும் இடமும் மறந்திடும் அளவிற்கு அவர்கள் மனதை கவரும் அனுபவமாக இருக்கட்டும்..
இத் தருணத்தை நினைத்து மகிழ்ந்து விட்டு போகட்டுமே!
இனி வரும் நாட்களில் அவர்கள் கசப்பானதாகவும் வலியை தரக்கூடியதாக இருக்கும்..
இருவருக்குமான இன்றைய தினம் முக்கியமான நாளாக மன பெட்டகத்தில் பதிந்து விட்டு செல்லட்டுமே!
சன்ஜீவ அவனின் ஜெனியின் நினைவிலே ஃபோனிலே அவளுக்கு அழைத்திருந்தான்..
அவன் நினைவுகள் கலைந்தவளாய் ஃபோனின் அழைப்பு ஏற்று காதில் வைத்தாள்..
“ சன்ஜு ” அவளின் அழைப்பே மேனியில் ஜிவ்வென்று உணர்வு அவனுக்கு..
“ மெனிக்கே! (ரத்தினமே!) ” உருகிய குரலில் அழைத்தான்..
புது விதமான அழைப்பு அன்றொரு நாள் அவளின் வீட்டு தோட்டத்தில் அவனிடம் அகப்பட்ட போது அவளை ‘ மெனிக்கே! ’ என்றல்லவா அழைத்திருந்தான்..
அவ்வழைப்பும் அவளுக்கு பிடித்திருந்தது..
“ சாப்டீங்களா? நித்திரை கொண்டுடீங்களா சன்ஜு? ” அவள் கேட்க..“ மெனிக்கே இதெல்லாம் எப்பவும் செய்றது தானே.. இன்டைக்கு நடந்தது என்னால மறக்க முடியல ஜெனி..நிலா வெளிச்சத்துல களைப்பான உன் முகம் , வியர்வைல நலைஞ்சி கன்னத்துல ஒட்டி இருக்கும் ஓரிரண்டு முடிகள் , அந்த கண்ணு , அந்த முத்தம் ”
“ ஹைய்யோ ச்சீ என்ன சன்ஜு கதைக்கிறீங்க எனக்கு கூச்சமா இருக்கு..” இடது கையால் முகத்தை மூடிக் கொண்டு வெட்கப்பட்டாள் ஜெனனி..
“ என்னை பார்த்தா சில்க் ஸ்மிதா போல இருக்கா உங்களுக்கு? ” சம்மந்தமே இல்லாமல் இருவரின் பேச்சு நடுவில் நடிகை சில்க் ஸ்மிதாவை இழுத்திருந்தால் அவள்..
“ யாரது சில்க் ஸ்மிதா ? ” யார் என்று அறிந்து கொள்ள அவன் கேட்க..“ இருங்க அவங்க பிக் அனுப்புறேன் பாருங்க ” என்றாள்.. வாட்சப்பில் நடிகை சில்க் ஸ்மிதா படத்தை அனுப்பி வைத்தாள்..
அவனும் அவள் அனுப்பி படத்தை பார்த்துவிட்டு “ அவங்க பழைய நடிகை சில்க் ஸ்மிதா தானே முக்கியமா? பொடியனுங்களுக்கு கனவு கன்னியாம் எண்டு கேள்வி பட்டு இருக்கேன்..
நானே அவங்கள பத்தி சொல்றேன் கேளு..என்னா லிப்ஸ், என்னா கண்ணு ப்பா! பொடியனுங்க முன்னுக்குப் போய் நின்னா போதுமே அவங்க கண்ண பார்த்தே மயங்கி விழுந்திருவாங்க தெரியுமா ஜெனி ? ” தலையணையில் முகம் புதைத்து தோள்கள் குலுங்க சத்தமாக சிரித்தான் சன்ஜீவ..
அவளோ நெஞ்சு கூடு மேல் கீழ் இறங்க கோபத்தை உண்டாக்கி இருந்தான்..“ ஓஹோ..அவங்க அழகை வர்ணனையா வர்ணிக்க தெரியுது.. உங்களுக்கு லவ் பண்றதை மட்டும் வீட்டுல சொல்ல முடியாது அது தானே?..” கடுப்புடன் அவனிடம் பேசினாள்..
“ ஹேய்! ஜெனி இப்ப என்னதுக்கு கடுப்பாக்குற பூமில இல்லாத சில்க ஸ்மிதா பத்தி கதைச்சா இவளுக்கு பொஸசிவ் வருது ? இத தொடங்கி வச்சது நீதானே இல்ல எண்டு மட்டும் சொன்ன தாப்பேல (மதில்) ஏறி குதிச்சி வந்த உங்க அப்பா கிட்ட உன்ன லவ் பண்றேன் எண்டு சொல்லிடுவேன் ” பொய்யாக மிரட்டலாக அவளிடம் சொன்னான்…
“ தைரியசாலியா இருந்தா வாங்க பார்ப்பம் ” சும்மா இருந்தவனை சீண்டிவிட..
அவன் அறை கதவை திறந்து படிகளில் இறங்கி செல்ல..“ சன்ஜு ” பின்வாசல் கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் , அவளுக்கு கை கால்கள் உதறல் எடுக்க துவங்கியது..“ சன்ஜு நா.. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் ” ஃபோனில் மெல்ல அவள் கூறினாள்..
“ தாப்ப வரைக்கும் வந்து நிக்கிறன் உங்க வீட்டுக்கு வராம எப்படி ஜெனி ” என்றதும் “ அறிவு கெட்டவனே லூசு தனமா எதுவும் செஞ்சிறாத மரியாதையா ரூம்க்கு போ..” அவளுக்கு பயம் காட்டிட நினைத்தானோ..
காம்பவுண்ட் சுவரில் இரு கைகளையும் சிறு இடைவெளி விட்டு காலை ஊன்றி சுவற்றில் வைத்து எகிறி குதித்து ஏறினான்..காவல் துறையில் பணியாற்றுபவனுக்கு காம்பவுண்ட் சுவரில் ஏறுவது ஒன்றும் சிரமம் இல்லையே..
அவன் வந்து விடுவானோ என்ற அச்சம் இதயத்துடிப்பை அதிகரித்து இருக்க பட்டென்று அழைப்பை துண்டித்து இருந்தாள் அவள்…
ஃபோனை வைத்துவிட்டு தலைவரை போர்வை போர்த்தி ஜன்னல் பக்கமாக பார்த்தாள் ஆறடி உயரத்தில் ஒருவனின் உருவம் நிழல் போல் செல்வதை கண்டவளுக்கு அத்தனை பயம் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்து போனது..
அவனின் நடை ஜன்னல் அருகில் நின்றதும் பயத்தில் நெஞ்சிலே கைவைத்து விட்டாள்..மின்விசிறி காற்று வீசினாலும் அவளின் உள்ளங்கை குளிர்ந்து போனது..
விழிகளை மூடிக் கொண்டு ‘ சன்ஜு வந்துராத ’ என்றே ஜபம் போல் எத்தனையோ தடவை மனதில் சொல்லிக் கொண்டு இருந்தாள்..
அவனும் சிறிது அவளுக்கு பயத்தை காட்டிவிட்டு காம்பவுண்ட் வழியாக எப்படி வந்தானோ அது போலவே சென்றான்…
வீட்டுக்கு சென்றதும் அவளுக்கு அழைப்பு விடுத்த போது ஃபோன் சுவிட்ச் ஆப் என்று வந்ததும் “ பயந்துட்டா போல ” சிரித்துக் கொண்டே உறங்கியும் போனான்..
இரவில் முடிந்த பின்னர் அடுத்த நாள் காலை வேளை அழகாக புலர்ந்தது..
இருவரும் தங்கள் வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த சமயம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள நேரிட்டது..
அவன் அவளைப் பார்த்து ஒற்றை கண்சிமிட்டி பைக்கில் ஏறிக் கொள்ள..அவளோ அவனை முறைத்து விட்டு ஸ்கூட்டியில் ஏறி புறப்பட்டு விட்டாள்..
அவனின் ஒற்றை கண் சிமிட்டலும், அவளின் முறைப்பையும் பெற்றுக் கொண்ட அவளுக்கும் அவனுக்கும் காலை தரிசனம் போதுமானதாக இருந்தாலும் இதே இதமான நிலை இருக்காது என்பதை எவரால் கூறிவிட முடியும்…
இரவில் அவனின் பணி முடிந்து வீட்டுக்கு தெருவில் தன் பைக்கில் வந்து கொண்டு இருந்த போது, ஜெனனி அவளின் வீட்டின் கேட்டை திறந்து அழுது கொண்டே சாலைக்கு ஓடி வந்தாள்..
அவள் வீட்டில் இராஜேந்திரனுக்கும் குமாரசிங்கனுக்கும் வாக்கு வாதம் சென்று கொண்டிருந்தது..
“ இங்க பாரு உன்ட மக தான் என் மகனை மயக்கி போட்டுட்டாள்..”
“ உன்ட மகன் பெரிய போலீஸ் பதிவில இருக்கான் எண்டு என்ட மகளை காதலிக்கல்லன்னு சொல்ல முடியுமா ? ”
“ நல்ல தமிழ் ஆக்கள் எண்டு நினைச்சு உங்களோட பழகுனது பிழையா போச்சு.. அவனுக்கு பெரிய இடத்துல கல்யாணம் கட்டி குடுக்க நினைச்சா அதுக்கு இடைல உன்ட மக என்னத்த குடுத்தாளோ தெரியாது..என் மகன் உன்ட மக பின்னாடி சுத்திட்டு இருக்கான்..நீங்க எல்லாம் நல்ல மனுஷனா உங்க மகளுக்கு புத்தி சொல்லி குடுக்க தெரியாதா? ”
“ அவ மேல முழு நம்பிக்கையும் வச்சி இருந்தேன் நான் இந்த அளவு உங்க மகனோட நெருக்கமாகி லவ்வுல விழுவா எண்டு நான் கனவா கண்டேன்..தேவையில்லாம என்ட மக மேல பழியை சுமாத்தாதீங்க..” இராஜேந்திரன் கோபத்தில் படபடக்க..
இரு வீட்டுப் பெண்களும் செய்வதறியாது ஆண்கள் இருவரின் நடுவில் நின்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளாதவாறு பிடித்துக் கொண்டனர்..
சாலைக்கு வந்தவளுக்கு அவனைத் தேடி செல்ல வேண்டும் என்கிற எண்ணமே இருக்க..
அழுகையும், அச்சமுமாக வேதனையுடன் வெறுங் காலில் பாதணி கூட அணியாது ஓடினாள் ஜெனனி..
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த நேரமே இராஜேந்திரன் ஆயம்பித்துவிட்டார்.. அவளிடம் கை ஓங்கி இருந்தவர் பெல்ட்டை எடுத்து மகள் என்றும் பாராது விலாசி இருந்தார்..
வலி தாங்க முடியாமல், இத்தனை வருடங்களாக அன்பும் பாசமும் பாதுகாப்பும் கொடுத்து வளர்த்த தந்தையின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியதாக இருந்தது..
வசந்தாவால் கூட அவர் கணவனை நிறுத்த முடியவில்லை..அவரும் இருவருக்கும் நடுவில் சென்றிருந்தாள் அவர் கொடுக்கும் அடியையும் தகாத வார்த்தைகளும் கேட்க வேண்டியதாக இருந்து இருக்கும்..
“ அப்பா , அம்மா என்னதுக்கு உயிரோட இருக்கோம் உன்னை படிக்க வச்சதுக்கு நல்ல ஒருத்தன் கைல பிடிச்சி குடுக்க தெரியாது எண்டு நினைச்சி தானே நீயே போய் பக்கத்து வீட்டு சிங்கள பொடியனை காதலிச்சு இருக்கு..இத மட்டும் என்னோட குடும்பம் அம்மா குடும்பமும் கேள்விபட்டு இருந்தா எவ்ளோ அசிங்கம் தெரியுமா ? எங்காள வெளிய தலை காட்டத்தான் முடியுமா ? உன்னால எங்களுக்கு தான் அவமானம் உன்னை முழுசா நம்புனதே பிழை போச்சி..அவனை காதலிச்ச எண்டு குமாரசிங்க போட்டோ காட்டுறான் நீ அன்டைக்கி அவன் கூட பைக்ல போய் வந்து தானே பஸ் ஸ்டாண்ட் நின்ட நீ..” அவர் நினைகூர்ந்து அவளின் மனதை சில்லு சில்லாக உடைத்து நொருக்க துவங்கினார்..
“ அவன் கூட தனியா தானே போன ஹோ*****” வயித்துல பிள்ளையும் எதுவும் கொடுத்துட்டானா? ” அவர் கேட்க.. உள்ளுக்குள் பெண்ணவள் நொருங்கியே போனாள்..
கேட்க கூடாத வார்த்தைகள் முத்தம் தாண்டி ஒரு காலத்திலும் இருவரும் எல்லை மீறியதே இல்லையே .. தன் தூய்மையான காதலை அவளின் தந்தை கொச்சை படுத்திவிட்டாரே! தாங்க முடியவில்லை இதயமே வலிக்கிறது..அவர் கொடுக்கும் அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு வலிகளை தாங்கிக் கொண்டாள் பெண்ணவள்.. வாய்விட்டு அலறவும் இல்லை..
உடலில் ஏற்பட்ட காயத்தை விட மனதில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாவது இட முடியுமா? பாதணியின் கீழ் நசுங்கி போனது இதயம் கதறி துடிக்கிறதே..
ஆறுதல் தேடவும் அரவணைக்கவும் உனக்கு நான் இருக்கிறேன் என்று கூறவும் அவன் தானே இருக்கிறான்..“ சன்ஜு ” அவனின் பெயரை சொல்லி உள்ளம் கதறிதுடித்தது..
இராஜேந்திரன் ஃபோனிற்கு அழைப்பு வந்து கொண்டே இருக்க ஜெனுஷா அழைத்திருந்தால் அவர் பெல்ட்டை அவள் மீதே வீசிவிட்டு அறையை விட்டு வெளியே சென்ற சமயம் அந்த நேரத்தை பயன்படுத்தியவள் வசந்தாவையும் பொருட்படுத்தாது வெளியே ஓடிச் சென்றாள்..
சன்ஜீவ பைக்கில் வந்து கொண்டு இருக்கும் போது நடு ரோட்டில் புடவையில் ஓடி வருபவளை கண்டு அதிர்ந்தே போனான்..“ ஜெ…ஜெனனி தானே ” பைக்கையும் நிறுத்திவிட்டு வண்டியில் இருந்து இறங்கியபோது ஓடி வந்த வேகத்தில்
அவனை கட்டி அணைத்து கதற ஆரம்பித்துவிட்டாள்..
அவளின் நிலை அவனை இன்னும் அதிர்ச்சியில் உள்ளாக்கி உறையச் செய்வதாய்…!
தொடரும்…