Loading

அத்தியாயம் 13

 

 

 

 

மாலை நேரத்தில் ஜெனனி அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.. வீட்டிற்கு வந்த உடனே குளித்துவிட்டு மஞ்சளும் வெள்ளையும் கலந்த கட்டம் போட்ட கவுன் ஒன்றினை அணிந்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்த போது..

 

ஜெனுஷாவின் இரண்டு பெண் பிள்ளைகள் சஞ்சனா , தீபிகா இருவரும் இராஜேந்திரனை பிடித்து ஒரு வழி செய்து கொண்டு இருந்தார்கள்…

 

“ அம்மப்பா கடைக்கு கூட்டி போங்களேன் ” இது சஞ்சனா..

 

“ இங்க வந்தா நிறைய சீஸ், சாக்லேட் வாங்கி தர்றதா சொன்னீங்களே அம்மப்பா..” இது தீபிகா..

 

“ இரவைக்கு வீட்டுக்கு போய்ருவோம் அம்மப்பா ப்ளீஸ் பைக்ல கடைக்கு கூட்டிட்டு போங்க..” இருவரும் அவரின் கையை ஆளுக்கு ஒரு ஆள் பிடித்து கெஞ்சி அடம் பிடித்து கொண்டு இருக்க..அவருக்கு இரு பேத்திகளை பார்த்ததும் பாசம் பொங்கியது..“ கடைக்கு தானே கூட்டிட்டு போறன் ரெண்டு பேரும் கடைக்கு போய் குழப்படி செய்யக்கூடாது சரியா…” எச்சரிக்கையுடன் அவர் கூற..

 

“ சரி அம்மப்பா..” இருவரும் தலையசைத்து வைக்க அவர்களை ஸ்கூட்டியில் ஏற்றிக்கொண்டு கடை தெருவுக்கு சென்றார் அவர்..

 

“ ஜெனனி ” சமயலறையில் இருந்து வசந்தா அவளை அழைத்தார்..

 

“ வந்து கொஞ்ச நேரம் கூட இருக்க விட மாட்டாங்களே ” சலிப்புடன் தாய் முன்பு சென்று நின்றாள்..

 

“ என்ன ம்மா..”

 

“ இதை கொண்டு போய் ருவணி ஆன்டி கிட்ட கொடுத்துட்டு வா..” அவள் கையில் பெரிய பையினுள் பாத்திரம் ஒன்றை வைத்து அவள் கையில் கொடுக்க வாங்கிக் கொண்டவள்..“ இந்த நேரத்துல கொண்டு போய் கொடுக்கணுமா..” முகத்தை சுளிக்க..“ ஆமா இங்க நிற்காம போய் கொடுத்துட்டு வா..” அவளை விரட்டினார்..

 

“ வந்த முதல்னால்லயே வேலை வாங்க வேண்டியது கொஞ்சம் நேரம் கூட ரெஸ்ட் இல்ல..” பெரு மூச்சுவிட்டு புலம்பிக் கொண்டு தினேஷ்சை கடந்து செல்லும்போது அவளை பார்த்தவன்..“ பாவம்டா வீட்டுக்கு வந்த புள்ளைய ம்மா வேலை வாங்கிடாங்களாம்..” உச்சு கொட்டி நக்கலாக அவன் சொல்ல..

 

“ போங்க அத்தான்..” முறைத்து விட்டு அவள் செல்ல , அவன் புன்னகைத்தான்..

 

கவனமாகப் பையை கையில் எடுத்துக் கொண்டு சன்ஜீவ வீட்டிற்குள் நுழைந்தாள் ஜெனனி..வழமை போல் குமாரசிங்க இருக்கவில்லை வேலை காரணமாக நேரம் செல்லவே வீட்டுக்கு வருவார் என்பதால் ருவணி மட்டுமே வீட்டில் இருந்தார்..

 

நேரே சமையலறைக்கு சென்றவள் அங்கு பையினை வைக்க ருவணி குளியலறையில் இருந்தார்…

 

“ ருவணி ஆன்டி..” சத்தமாக அவரை அவள் அழைக்க.. குளியலறையில் நீர் சத்தத்தினால் அவருக்கு ஜெனனி அழைத்தது கேட்கவில்லை..

 

“ குளிக்கிறாங்க போல அதான் நான் கூப்பிட்டது ஆன்டிக்கு கேட்கல்ல..சரி இதை இங்கேயே வச்சிட்டு போகலாம் ஆனா ” மேசையின் மீது பையை வைத்து விட்டு யோசித்தாள் முன்னால் வாசல் கதவு திறந்து இருக்க..ருவணி எப்படி வீட்டை திறந்து வைத்து விட்டு குளியலறைக்கு சென்றார் என்று தான்..

 

“ முன்னால கதவு திறந்து இருக்கு..யார நம்பி கதவை திறந்து போட்டு குளிக்க போனாங்க..” வலது புற கண்ணை கசக்கிக் கொண்டு அவள் இருக்க..

 

கையை எடுத்தவள் கண்ணை சிமிட்டி பார்க்கும்போது பின்னால் இருந்து கருப்பு துணியால் அவள் கண்களை மறைத்தது , அடுத்து அவள் கைகள் கட்டப்பட்டது..

 

அவளுக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை.. திகைப்பில் நின்றால் பெண்ணவள் அவளின் மூளை வேலை நிறுத்தம் செய்தது போல் இருந்தது..

 

அவள் இடையில் வலியகரம் பதிந்ததும் சுய நினைவிற்கு வந்தவள் அப்போது அந்த கரத்திற்கு உரியவனின் தொடுகை உணர்ந்தாள் பெண்ணவள்..

 

தன்னவனின் கரம் என்று உடனே “ சன்ஜு என்ன பண்றீங்க விடுங்க..அடேய் என்ன கீழ இறக்கி விடுடா..” அவள் கத்த ஆரம்பிக்க.. அவள் வாயை பொத்தி மாடியில் அவன் அறைக்கு தூக்கிச் சென்றான் அவன்..

 

கால்களை உதைத்து அவள் வாய்க்குள் கத்த அதெல்லாம் பொருட்படுத்தாது அவனின் அறைக்கு தூக்கி சென்று அவளை கீழ இறக்கிவிட்டதும் தான் அவனுக்கு மூச்சு வாங்கியது…

 

“ ஷப்பா என்ன வெயிட்டு டி நீ..” இடுப்பில் கை வைத்து அவன் மூச்சு வாங்கியபடி சொல்ல..

 

“ வெயிட்டா நானா உன்ன தூக்க சொன்னேன்..முதல்ல கண், கை கட்டை கழட்டி விடு சன்ஜு..” அவள் சொல்ல..

 

“ முடியாது இப்படியே நில்லு..” அவள்படும் அவஸ்தையை ரசித்து கொண்டே சொல்ல..“ நான் வீட்டுக்கு போகணும் கட்ட கழட்டி விடு சன்ஜு..” கையின் கட்டை அவிழ்க்க முடியுமா என்று அவள் பார்க்க.. ம்ஹூம் அவளால் அசைக்க முடியவில்லை..

 

அவன் கட்டிய கட்டு அவ்வளவு உறுதியானதாக இருந்தது..“ மேடம் மெசேஜ்ல என்ன சொன்னீங்க..” அழகாக அவன் தமிழில் பேச..அதை ரசிக்கும் நிலையிலோ கேட்கும் நிலையிலோ அவள் இல்லை..

 

“ மெசேஜ்ல என்ன சொன்னேன் ” அவள் கேட்க..“ மேடம் மறந்துடீங்களோ அப்ப நானே ஞாபகப்படுத்துறேன் ஓகே..” அவள் அருகில் வந்து நின்றவன் காதருகில் குனிந்து “ தமிழ் பொடியனை லவ் பண்றதா சொன்னீங்களே! ” என்றுவிட்டு “ சொறி ப்ராப்ஸ் பண்ணதா சொன்னீங்க..அவன் வீட்டு அட்ரெஸ்சையும் சொன்னா அப்படி கல்யாணமும் பேசி வச்சிடலாம்..” அவளின் காது மடல் உரச சொல்ல.. தொண்டையில் எச்சில் விழுங்க நின்றவள் அவனிடம் இருந்து விலகி நின்றாள் பெண்ணவள்..

 

அவனின் அருகாமை அவளுக்கு ஒருவித நடுக்கத்தை கொடுத்திருந்ததோடு நான்கு வருடம் பிரிந்து இருந்ததால் அவ்வளவாக அவனோடு ஒன்ற முடியவில்லை அவளால்…

 

“ கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்ல அதுவும் விலகி போறீங்களே மேடம்.. நீங்க சொன்னது உண்மையாகிருச்சா என்ன ? ” வேண்டும் என்றே அவன் கேட்க..

 

அவன் சொன்னதில் உள்ளத்தில் சுருக்கென்று தைத்திட உதடு துடிக்க நின்றவள் அழ ஆரம்பித்து விட்டாள்.. தான் விளையாட்டாக அவனை வெறுப்பேற்ற கூறினால் உண்மை என்கிறானே கோபமும் வர..

 

இருக்கும் இடம் கருதி சத்தமில்லாமல் விசும்பிக் கொண்டு அழுக..அந்த சத்தத்தில் திரும்பி பார்த்தவன் பதறி தான் போனான் காவல்காரன்..

 

“ ஜெனி ..இப்ப எதுக்கு அழுகுற நான் சும்மா தானே சொன்னேன்..” அவள் அருகில் வந்து அவள் கண்ணீரை துடைக்க முற்பட..“ முதல்ல கட்ட கழட்டி விடுங்க நான் வீட்டுக்கு போகணும் ” என்று அவள் சொல்ல…

 

“ கீழ கூட்டிட்டு போய் கட்ட கழட்டி விடுறன்..”

 

“ இப்ப கழட்டுனா என்னவாம் ” விசும்பலுடன் கேட்க..

 

“ மாட்டன்.. இன்னும் ஒரு வருஷத்துக்கு பிறகு ரெண்டு பேரும் சந்திக்க போறோம் இப்ப கதைச்சா தான்…” பாக்கெட்டில் கைகளை நுழைத்தவாறு ஜன்னல் வழியாக தெரியும் நிலவை வெறித்து பார்த்தவாறு அவன் சொல்ல…

 

“ ஐஞ்சி வருஷம் எண்டு பொய் சொல்லி நாளாவது வருஷத்துல மீட் பண்ணி இருக்கோம்..முகத்தை பார்க்க வேணாமா? ” அவள் கேட்க..“ இன்னும் ஒரு வருஷம் தானே ஜெனி கண்மூடி திறக்குறதுக்குள்ள இந்த வருஷம் ஓடிடும்..” என்றான்..

 

“ நல்லா பொய் சொல்றீங்க..” 

 

“ உன் படிப்பு முடியட்டுமே..”

 

“ இடைப்பட்ட மாசத்துல எக்ஸாம் கூட படிப்பு முடிஞ்சிடும் அதுக்கு பிறகு வேலைக்கு போவேன்..” அவள் சொல்ல..

 

“ நான் உன்ன வேலைக்கு போக வேணாம் எண்டு சொல்லல்லையே..”

 

“ சரி விடுங்க..உங்க படிப்பு எப்படி வேலைக்கு போறீங்களா? ” அவள் கேட்க..

 

“ ம்ம்..போறேன் நீ எங்க வீட்டுக்கு வந்தது எனக்கு தெரியாது அதான் உன் குரல் கேட்டதும் ஓடி வந்து தூக்கிட்டு வந்துட்டேன்..இல்ல இப்படி ரெண்டு பேரும் கதைக்க முடியுமா? ” என்று அவன் கேட்க..

 

“ கண்ண கட்டி , கைய கட்டி தான் கதைக்கிற எண்டு யாராவது புது ஐடியா சொல்லி கொடுத்தாங்களா என்ன..இதுல பெருமை கதைக்கு குறைச்சல் இல்ல..” உதட்டை அவள் சுழிக்க..

 

“ உனக்கு என் மேல சரியா கோபப்பட கூட தெரியல பார்த்தீயா? ”

 

“ உங்கட கூட எனக்கு கதைக்க இஷ்டம் இல்ல..” சொல்லிவிட்டு ஒவ்வொரு அடியாக வைத்து அவள் நடக்க..அவள் முன்பு வழி மறித்தது போல் நின்றான்..

 

“ நான் எப்படி கூட்டிட்டு வந்தேனோ அதே மாதிரியே கொண்டு போய் விடுறன்..” என்று கூறுபவனை பார்க்க முடியாமல் தவித்தள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் பெண்ணவள்..

 

அவன் நெஞ்சில் சாய்ந்து நின்றவளை விளக்க தோணவில்லை அவனுக்கு இந்த நொடி அவர்களுக்கான நேரம் இதுவே, மீண்டும் எப்போது சந்திப்பார்கள் என்று அவர்களுக்கே தெரியாது..

 

இவ் நான்கு வருடங்களிலும் அவள் நினைத்தது ஒன்று தான் தான் ஒருவனை காதலிக்கிறோம் அதுவும் அந்நிய ஜாதி ஒருவன்.. அவனும் அவளை காதலிக்கிறான் தான் ஆனால் இந்த காதல் நிலைத்திருக்குமா இல்லை பிரிந்துவிட்டு செல்லுமா என்றே அவள் சிந்தித்து மனதில் கலக்கம் உருவானது தான் மிச்சம்..

 

சன்ஜீவ மீது முழு நம்பிக்கை இருந்தது அதே நம்பிக்கையை வீட்டினர் மீது அவளால் வைக்க முடியவில்லை..எது வேண்டுமானாலும் நடக்கலாம் அதற்கு முகம் கொடுக்கும் அளவிற்கு அவளுக்கு தைரியமும் இல்லை..

 

தற்போது அதனை தான் அவள் மனதில் நினைத்து கொண்டு இருந்தாள்.. அவனும் அவளை அணைத்து கொண்டான் அதுவும் இறுக்கமாக, மேனியும் வலித்தது அவளுக்கு அவனின் அணைப்பில் இருக்கும் இந்த நொடியே அவளுக்கு பொக்கிஷமான நொடிகள் தான்..

 

“ சன்ஜு கண் கட்டை கழட்டி விடுங்களேன் உங்கள பார்க்கணும் போல இருக்கு..” அவள் சொல்ல..

 

“ சொறி ஜெனி இது மட்டும் என்னால செய்ய முடியாது..” என்றான்..அவன் அப்படி கூற காரணமே அவன் காவல் அதிகாரி என்று அவள் தெரிந்து கொள்ளாமல் இருக்கத்தான்..“ ப்ளீஸ் சன்ஜு ” கெஞ்சுதலாக கேட்க..

 

அதில் அவன் உறுதியாகவே நின்றான்..“ முதல்ல பார்த்த ஜெனி மாதிரியே இல்ல இப்ப நீ..வளர்ந்துட்டு நிறமும் போட்டு இருக்க..வெயிட்டா வேற இருக்கடி..” சிரிப்புடன் அவன் சொல்ல..

 

“ ஓஹோ..நீங்க என்ன பார்க்கலாம் நான் பார்க்க கூடாதா ? ” என்று அவள் கேட்க..“ பார்க்க கூடாது ” அவன் சொல்ல..

 

அவனின் பிரத்தியேக வாசனையில் அவன் நெஞ்சில் முகத்தை புரட்ட, அவனுக்கு கூச்சமாக இருந்தது..“ ஜெனி ” அவனின் குரலில் ஒரு மாற்றம்..

 

உடனே அவன் அணைப்பில் இருந்து விடுபட்டு ஓட முயன்றாள்..‘ இந்த குரல் அபாய மணி அடிக்குதே ’ அவள் நினைக்க..

 

“ சன்ஜு நான் வந்து நிறைய நேரம் ஆகுது..ம்மா தேடுவாங்க ” பதட்டத்துடன் சொல்ல…

 

“ போகலாம் இரு.. அதுக்கு முதல்..” அவள் முகத்தை கையில் ஏந்தி அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான் ஆடவன்..

 

அவள் மேனி அவன் நெற்றி முத்தத்தில் சிலிர்த்து அடங்கியது..

 

“ எங்க காதல் வீட்டுக்கு தெரிஞ்சா ? ” அடுத்து அவள் சொல்ல..அவன் இதழ்கள் அவள் இதழ்களில் முத்தமிட்டு இருந்தது..

 

ஆழமாக முத்தமிட, அவளும் அவனுடன் ஒன்றினாள் நான்கு வருடம் கழித்து இருவரும் இணைந்து இருக்கின்றனர்..அவன் இதழ் முத்தம் வழியாக அவளை விட்டு கொடுக்க மாட்டேன் என்பது போல் இருந்தது அவனின் இதழ் முத்தம்..

 

ருவணி குளியலறையில் இருந்து வெளியே வரும் முன்பு அவள் இதழை விட்டவன் மீண்டும் இதழில் முத்தமிட்டு விலகினான் அவன்..

 

“ எதை பத்தியும் யோசிக்காத ஜெனி நான் இருக்கேன்..பயப்புடாத சரியா..”

 

“ ம்ம்..” என்றவள் “ அழகா தமிழ் பேசுறீங்க ” என்றாள்..அவள் கன்னத்தில் முத்தமிட்டு விலகினான்..அவளால் அவனை எதையும் செய்ய முடியவில்லையே..

 

“ இப்ப தான் உனக்கு சொல்ல நேரம் வந்துச்சா ஜெனி..” அவன் கேட்க..

 

“ அப்ப வேற மைண்ட்ல இருந்தன் சொல்ல நினைவு வரல்ல சன்ஜு ஆன்டி வர முதல் கொண்டு போய் கீழ விடுங்க.. மறக்காம நீங்களாவது கால் பண்ணுங்க..” என்றாள்..

 

“ பண்றன்..” அவள் இதழில் முத்தமிட்டு “ ஐ லவ் யூ சோ மச் ஜெனி..” சொல்லிவிட்டு அவளை தூக்கிக்கொண்டு கீழே சென்றான்..

 

‘ ஐ லவ் யூ சன்ஜு ’ வாய் வார்த்தையாக அவனிடம் சொல்லவில்லை அவள்..

 

முதலில் கை கட்டை அவிழ்த்தவன் அதன் பிறகு கண்கட்டை அவிழ்த்து விட்டு சிட்டாக பறந்துவிட்டான்..எங்கே அவனை அடையாளம் கண்டு விடுவாளோ என்று தான்..

 

கண்கட்டை அவிழ்த்து விட்டதும் விழிகளை சிமிட்டி பார்த்தாள் இருளாகவே இருந்தது..“ சன்ஜுவால தான்..” முனங்கி விட்டு படியில் அமர்ந்து விட்டாள்..

 

அதன் பிறகு ருவணி வந்ததும் அவருடன் பேசிவிட்டு அவளுக்காக செய்த புகுல்தோசியையும் கையில் கொடுத்து அனுப்பினார் அவர்..

வீட்டுக்கு வந்தவளுக்கு சன்ஜீவனின் இதழ் முத்தமே அவளுக்கு தித்திப்பை கொடுக்க அதன் நினைவிலே கண்ணயர்ந்தாள் அவள்.. அவனும் அவளை நினைத்து உதட்டில் உறைந்த புன்னகையுடன் உறங்கியும் போனான்..

 

 

தொடரும்….

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்