Loading

காதல் – 45

 

அஸ்வதியை   விஹான் வேலை பார்க்கும் கல்லூரிக்கு அழைத்து சென்றான் அங்கு இருந்த அனைவரும் விஹானை வித்தியாசமாக பார்த்தனர் ……

 

ஏனெனில் அவன் ஒரு அழகிய பெண்ணின் கைகளை பிடித்து கொண்டு வந்தான்……

 

அப்பொழுது அனைவரின் அந்த வித்தியாசமான பார்வையை பார்த்து அஸ்வதி விஹானிடம் கேட்டாள் , அவளின் கேள்விக்கு விஹான்னின் நெருங்கிய நண்பனான ஹர்ஷத் பதில் கூறினான்…….

 

ஹர்ஷத்தை பார்த்த அஸ்வதிக்கும் அஸ்வதியை பார்த்த ஹர்ஷத்துக்கும் நீண்ட நாட்கள் பழகிய உணர்வு அதை இருவரும் விஹானிடமே கூற விஹான் யோசித்துக் கொண்டிருந்தான்…….

 

ஒருவேளை இப்படி இருக்குமோ?

 

எப்படி இருக்கும்டா ஹர்ஷத்?

 

போன ஜென்மத்துல நீ ஒரு பெரிய ராஜாவா இருந்திருப்ப அஸ்வதி என்னோட தங்கச்சியா இருந்திருப்பாங்க,  அப்ப நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுவீங்க உங்க லவ்வ நா சேத்து வைச்சிருப்பேன் அதான் இந்த ஜென்மத்துல நீயும் என்னோட நண்பனா ஆகிட்ட அஸ்வதியும் என்னோட தங்கச்சியாக போறாங்க அதான் எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நாளா பழகுனா ஃபீல் ,  நா சொல்றது கரெக்ட் தானே என்று ஹர்ஷத் சிரித்துக் கொண்டே கேட்டான்……..

 

அப்போ அந்த பழைய ஜென்மத்து ஞாபகம் எனக்கும் வந்துருக்கனும்ல எனக்கு அப்படி ஒண்ணுமே வரலையே?

 

அந்த பழைய ஜென்மத்து ஞாபகம் உனக்கு லேட்டா தான் வரும் எங்களுக்கு தான் சீக்கிரம் வந்துருக்கு……

 

ஹர்ஷத் அவ்வாறு கதை அளக்கவும் அவனின் கதையைக் கேட்டு அஸ்வதி சிரித்து விட்டாள்…….

 

விஹான் , ஹர்ஷத் உங்கள கிண்டல் பண்றாங்க நீங்க அது புரியாம அவங்க கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க என்று அஸ்வதி சிரித்தாள்…….

 

எனக்கு தெரியும் அஸ்வதி இந்த லூசுப்பய எப்போதும் இப்படித்தான் ஏதாவது லூசுத்தனமா பேசிட்டு இருப்பான்……

 

சரி சரி கல்சுரல்ஸ் ஆரம்பிச்சிருக்கும் உள்ள போலாம் வாங்க என்று ஹர்ஷத் இருவரையும் அழைத்துக் கொண்டு கல்ச்சுரல்ஸ் நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான்…….

 

அங்கே அனைவரும் அஸ்வதியை பார்த்து விஹானிடம் அந்த பெண் யார் யார் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர்……..

 

அவர்கள் தொடர்ந்து விஹானிடம் கேட்டுக் கொண்டே  இருக்கவும் அஸ்வதி சற்று சங்கடமாக உணர்ந்தாள் அதை பார்த்த ஹர்ஷத் அங்கு இருந்தவர்களை சரி கட்டி அழைத்து சென்றான்…….

 

பிறகு தனது கல்லூரியை விஹான் தன் காதலிக்கு சுற்றி காண்பித்தான்……

 

உங்க காலேஜ் ரொம்ப அழகா இருக்குது விஹான்…….

 

ஹலோ காதல் ஜோடிகளே , இங்க வாங்க சாப்பாட்டை சாப்பிட்டுட்டே உங்கள் காதல் பேச்சுக்கள் தொடரட்டும் என்று ஹர்ஷத் அவர்கள் இருவருக்கும் சாப்பாடு எடுத்து வந்தான்……

 

டேய் ஹர்ஷத் அம்மா அப்பா எப்படிடா இருக்குறாங்க?

 

அடக்கடவுளே ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட?  அம்மா அப்பா இரண்டு பேரும் ரொம்ப நல்லா இருக்காங்க , உன்னதான் அடிக்கடி கேட்டுட்டே இருப்பாங்க , நீதான் இத்தனை நாளா நா போன் பண்ணா கூட எடுக்க மாட்டியே……

 

சரி சரி இந்தா பிரியாணி தின்னு என்று விஹான் கை நிறைய பிரியாணி அள்ளி ஹர்ஷத்தின் வாயில் திணித்தான்……..

 

ஹர்ஷத்தை  அஸ்வதிக்கு மிகவும் பிடித்து விட்டது அவனின் காமெடியான பேச்சுக்களும் , விஹான் மற்றும் ஹர்ஷத்தின் நட்பை பார்த்தும் அஸ்வதிக்கு சந்தோஷமாக இருந்தது, இப்பொழுது ஹர்ஷத் அஸ்வதிக்கும் நல்ல நண்பனாகி போனான்…….

 

கல்ச்சுரல்ஸ் முடிந்து அஸ்வதி மற்றும் விஹான் வீட்டிற்கு வந்தனர்…….

 

இருவரும் இரவு உணவை முடித்துவிட்டு தூங்க சென்றனர்…….

 

மறுநாள் காலை  வழக்கம் போல விஹான் கல்லூரிக்கு கிளம்ப அஸ்வதி அவனை வழி அனுப்ப , பிறகு கல்லூரி முடிந்து விஹான் திரும்பி வர அவனை அஸ்வதி கட்டியணைக்க என்று நாட்கள் அதன் போக்கில் சந்தோஷமாக சென்றது……

 

அங்கே காஷ்மீரில் பணியால் முடிய சாலைகள் சரியாகி விட  அஸ்வதியும் விஹானும் பிரிந்து செல்லும் தருனமும் வந்தது……..

 

விஹான் அன்று வழக்கம் போல கல்லூரிக்கு கிளம்பி கொண்டு இருந்தான்……

 

அப்பொழுது சித்திக் ஹாலில் அமர்ந்து  செய்தி பார்த்து கொண்டு இருந்தார்……

 

அதில்…….

 

காஷ்மீரில் பனி அகற்றல் பணிகள் முடிந்து சாதாரண வாழ்க்கை தொடங்கியதாக செய்திகள்!

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது, இதனால் சாலைகள் மூடப்பட்டு மக்களின் அன்றாட  வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இப்போது பனி அகற்றல் பணிகள் வேகமாக நடந்து 75% சாலைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன, சிறிய சிறிய பாதைகளும் மாலைக்குள் திறக்கப்படும்.

 

சாலைகள் திறப்பு நிலை ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை பகுதியாக திறக்கப்பட்டு, நாவ்யங் டனல் முதல் நாஷ்ரி வரை நிறுத்திய வாகனங்கள் அகற்றப்பட்டன.

முகல் ரோடு, சிந்தான் ரோடு போன்ற சில பாதைகள் இன்னும் மூடியே உள்ளன, ஆனால் BRO மற்றும் போலீஸ் தீவிர பணிகள் செய்கின்றன.

ஸ்ரீநகர் விமான நிலைய விமானங்கள் இயல்பாக இயங்குகின்றன…….

 

என்று அந்த செய்தி வாசிப்பாளர் கூறியதை கேட்டு விஹான் அதிர்ந்து போய் விட்டான்…….

 

அந்த செய்தியை கேட்ட சுலோச்சனா மற்றும் அனந்திக்கு சந்தோஷம் தாளவில்லை அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்…….

 

அஸ்வதிக்கு இந்த செய்தி தெரியவில்லை ஏனெனில் அவள் கிச்செனில் பீவி அம்மாவோடு விஹானுக்கு காலை உணவு சமைத்து கொண்டு இருந்தாள்…….

 

இப்பொழுதெல்லாம் அஸ்வதி பீவி அம்மா மற்றும் விஹானின் உதவியால் நன்றாக சமைக்க கற்று கொண்டாள் , அதனால் இப்பொழுதெல்லாம் அஸ்வதிதான் அவனுக்கு தினமும் சமைத்து கொடுப்பாள்…….

 

விஹான் அந்த  செய்தியை கேட்டு கவலையில் அப்படியே அமர்ந்து விட்டான்……..

 

என்னங்க ஏன் இப்படி ஷர்ட் பட்டன் போடாம அப்படியே உக்காந்துட்டு இருக்கீங்க என்று அவள் அவனின் சட்டை பட்டன்களை ஒழுங்காக போட்டு விட்டு அவனின் தலையை சீவி விட்டு அவனின் கைகளை பிடித்து கொண்டு டைனிங் டேபிள் அழைத்து சென்றாள்……

 

என்ன இப்படி முகமெல்லாம் வேர்த்து போய் இருக்கு?

என்ன ஆச்சு?

உடம்பு எதும் சரி இல்லையா?

என்று அவள் அவனின் நெற்றியில் பூத்திருந்த வியர்வையை தன் ஷாலால் துடைத்து விட்டாள்…….

 

அஸ்….. வி……                              அஸ்விம்மா……

 

என்னாச்சு?                                                         ஏன் இப்படி பேசுறீங்க?

 

விஹானிற்கு பேச்சு வரவில்லை அவன் அவளை வயிற்றோடு இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டு அவளின் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டு அழுக ஆரம்பித்தான்…….

 

என்னங்க என்னாச்சு?அட ஏன் இப்படி அழுகுறீங்க?  யாராவது என்ன நடக்குதுன்னு சொல்லுங்க எனக்கு ஒன்னும் புரியல……

 

நீ உன்னோட பொட்டிய கட்ட வேண்டிய நேரம் வந்துருச்சி அதான் இவங்க எல்லாரும் இப்படி டிராமா பண்ணுறாங்க என்று அங்கு வந்த அனந்தி கூறினாள்…….

 

என்ன சொல்லுற?

 

அஸ்வதி புரியாமல் கேட்கவும் அனந்தி செய்தி சேனலை வைத்தாள் அதில் கூறிய செய்தியை கேட்டு அவளும் சோகத்தில் ஆழ்ந்து அவளின் வயிற்றை கட்டி அணைத்து கொண்டு அழும் அவளின் காதலனை பார்த்து அழுக ஆரம்பித்தாள்…..

 

தன் காதலி அழுவதை பார்த்து பொறுக்க முடியாத விஹான் அவளின் அழகிய முகத்தை தன் இரு கைகளால் ஏந்தி கொண்டு ஒன்னுமில்லடா அஸ்வி நானும் உன்கூட சென்னை வந்துடுறேன் நம்ம ரெண்டு பேரும் அங்க ஒன்னா இருக்கலாம்…..

 

இல்ல இல்ல  இப்போதான் உங்க காலேஜ்ல உங்களுக்கு நல்ல பேரு கிடச்சிட்டு இருக்கு திடீர்னு நீங்க வேலைய விட்டுட்டு என்கூட சென்னை வந்தா அது நல்லா இருக்காது சோ நா செண்ணை போகல உங்க கூடவே இங்கேயே இருந்துடுறேன்……

 

இல்ல இல்ல அஸ்வி உனக்கு டீச்சிங் எவ்வளோ புடிக்கும்னனு எனக்கு ரொம்ப ரொம்ப நல்லாவே தெரியும் சோ நீ சென்னை போ நா உங்கூடவ வந்துடுறேன் என்று இருவரும் மாறி மாறி அழுக ……..

 

ரெண்டு பேரும் நிறுத்துங்க என்று அங்கு விஹான்னா வந்தாள்…..

 

ரெண்டு பேரும் என்கூட ரூம்க்கு வாங்க என்று அவள் இருவரையும் அழைத்து கொண்டு தங்களின் அறைக்கு சென்றாள்……..

 

நீங்க ரெண்டு பேரும் என்ன லூசா? இல்ல நா தெரியாமதான் கேக்குறேன் நீங்க ரெண்டு பேரும் இந்த இடத்த அடைய எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பீங்க, இப்போ எல்லாத்தையும் விட்டுட்டு காதலுக்காக போறேன் போறேன்னு சொல்லுறீங்க???

 

விஹான்னா என்னால விஹான் இல்லாம இருக்க முடியாது…….

 

 

அஸ்வதி உங்க ரெண்டு பேராலையும் ரெண்டு பேரையும் விட்டுட்டு இருக்க முடியாதுன்னு எனக்கு தெரியும் ஆனா இப்போ நீங்க ரெண்டு பேரும் உங்க காதல ஒன்னா வச்சிட்டு நீங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு மட்டும் பிரிஞ்சி போய் உங்க வாழ்க்கைய இன்னும் மேம்படுத்தனும் …….

 

புரியல விஹான்னா……

 

அண்ணே உனக்கு இப்போ காலேஜ்ல சேந்து ஆறு வருஷம் முடிய போகுது இப்போ நீ எச்ஓடி ஆக போற ஸ்டேஜ்ல இருக்க அப்புறம் பிரின்சிபால் ஆகிடாலாம் , அப்புறம் அஸ்வதி நீ வேலைக்கு சேந்து அஞ்சு வருஷம் ஆக போகுது சோ நீயும் அசோசியேட் புரோபெசர் ஆக போற ஸ்டேஜ்ல இருக்க இப்படி நீங்க ரெண்டு பேரும் உங்க வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு போக போற ஸ்டேஜ்ல இருந்துடுட்டு இப்படி பேசலாமா? உங்க காதல் உங்க ரெண்டு பேரையும் உயர்த்தனும் இப்படி கீழ இறக்க வைக்க கூடாது புரியுதா என்று விஹான்னா கூறவும் தான் இருவருக்கும் தங்களின் வாழ்கையை இன்னும் மேம்படுத்தவில்லை என்று புரிந்தது…….

 

அஸ்வி செல்லம் நீ இன்னும் உன்னோட வாழ்க்கையில முன்னேறனும் , அதுக்கு நா என்ன உதவி வேணாலும் செய்யுறேன் சோ நீ சென்னைக்கு போ நீ என்கூட இல்லன்னாலும் உன்னோட காதல் எப்பவும் என்கூடவதான் இருக்கும் அதனால என்னோட செல்ல காதலி அழுகுறதை இப்போ நிப்பட்டிடுவா என்று அவன் அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்……..

 

ஆனா உங்கள பாக்காம நா எப்படி இருப்பேன்?

 

ஹலோ மிஸ் அஸ்வதி இந்த வீடியோ கால், ஸ்கைப் எல்லாம் உனக்கு தெரியாதா?

 

தெரியும் ஆனாலும் நேருல பாக்குறதை போல வராதுல …….

 

அஸ்வா உங்க ரெண்டு பேருக்கும் இந்த பிரிவு தற்காலிகமானதுதான் , கூடிய சீக்கிரம் நீங்க ஒன்னு சேர போறீங்க புரியுதா ?

 

இருந்தாலும்……

 

எல்லாம் சரியா வரும் , வா உன்னோட டிரஸ் எல்லாம் நா பேக் பண்ணி தாரேன் என்று விஹான்னா அஸ்வதியை அழைத்துக் கொண்டு சென்றாள்……

 

ஏய் விஹானா நா கிளம்புறப்போ என்னோட டிரஸ் எல்லாம் பேக் பண்ண ஹெல்ப் பண்ணு இப்போ நியூஸ்ல தானே சொல்லி இருக்காங்க இன்னும் தேவா அப்பா கிளம்ப சொல்லலையே அப்போ பாத்துக்கலாம் …….

 

அது சரி……

 

விஹான் நீங்க வாங்க வந்து சாப்பிடுங்க காலேஜ்க்கு நேரம் ஆகுதுல்ல என்று அஸ்வதி விஹானை சாப்பிட அழைத்து சென்றாள்…….

 

விஹான் சாப்பிட்டு முடித்து விட்டு எனது காரில் ஏறி அமர்ந்து கொண்டு தன் காதலியை பார்த்தான்…….

 

அஸ்வதி என்னதான் விஹானா நமக்கு ஆறுதல் சொன்னாலும் எனக்கு உன்னை விட்டு பிரிய மனசே இல்ல…….

 

நம்ம ரெண்டு பேருக்கும் இந்த பிரிவு தற்காலிகமானது தான் , கூடிய சீக்கிரம் நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருப்போம் இப்போ எந்த கவலையும் இல்லாம என்னோட செல்ல விஹான் காலேஜுக்கு கிளம்பி போவாங்களாம் என்று அஸ்வதி விஹானிற்கு கன்னத்தில் முத்தம் வைத்தாள்……

 

விஹானும் அஸ்வதியின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பி சென்றான்……

 

என்னதான் அஸ்வதி விஹானிற்கு ஆறுதல் கூறினாலும் அவளுக்கும் விஹானை விட்டு பிரிவதில் அத்தனை வருத்தம்…….

 

என்ன நடக்க போகிறதோ????

 

பொறுத்திருந்து பார்ப்போம்……

 

தொடரும்…..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………..

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்