Loading

“அட லூசு மறந்துட்டியா?….இந்த நாள்லதான் உன் கழுத்துல நான் தாலி கட்டுனேன்”

 

“ஓஓ…. அந்த கொடுமை இதே தேதியிலதான் நடந்ததா (இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்)”

 

“ம்ம்ம் ஆமா ஆமா…..காலைல இருந்து வசந்தியும் அம்மாவும் மாறி மாறி கால் பண்ணிட்டேதான் இருந்தாங்க….ஆனா இன்னைக்குனு பாத்து வேல ரொம்ப ஜாஸ்தி…அதுனால அவங்க கிட்ட ஒழுங்காவே பேசல…. ரெண்டு பேருமே உன்னையதான் கேட்டுட்டே இருந்தாங்க…வேலைல இருந்து வந்ததுமே உன்ன அவங்க கிட்ட பேச வைக்கனும் இருந்தேன் ஆனா வேலைல இருந்து நான் வரவே லேட் ஆகிருச்சு…இதோ இப்போக் கூட கால் பண்ணேன் ஆனா எடுக்கல…தூங்கிட்டாங்க போல….”

 

“ஆமா ஆமா இந்நேரம் வரைக்கும் எல்லாம் தூங்காம இருக்க மாட்டாங்க…சரி விடு நாளைக்கு காலைல நேரமே கூப்பிட்டு பேசிக்கலாம்…”

 

“ம்ம்ம்…”

 

உணவு மேஜை முழுவதும் நிரம்பிய பின்னர் பசியாறிய இருவரும் ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்கள்… வீட்டிற்கு போவதற்காக காரில் அமர்ந்த இருவரும்…. போகும் வழி எல்லாம் ஒருவரை ஒருவர் அவ்வப்போது பார்த்துக் கொண்டார்கள் ஆனால் பேசவில்லை….ஆனால் அதற்கு அர்த்தம் என்னவோ அவர்களுக்குப் புரியும்….

 

பயணத்தின் போதே…. மீரா எனக்கு ஒரு ஆசை இருக்கு என்று சொல்லி தன் செல்ஃபோனில் சமூக வலைதளப் பக்கத்தை எடுத்துக் காட்ட அவளும் அதை ஆர்வமாக கையில் வாங்கிப் பார்த்தாள்….இளம் ஜோடியான ஒரு பெண்ணும் ஆனும் வித விதமான போஸ்களில் நின்று காதலை வெளிப்படுத்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் அடுக்கு அது…. ஒவ்வொரு படமும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக ஏதோ ஒரு கதை சொல்வது போல இருந்தது…

 

மீரா இதுக்கு பேரு ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ சூட்…. கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி அவங்கவங்களுக்கு புடிச்ச மாதிரி ஸ்டய்ல எடுத்துப்பாங்க….இதுக்கு எந்த சாங்கிய சம்பர்தாயமு கெடையாது…முழுக்க முழுக்க நம்ம விருப்பம்தான்….

 

நம்ம வாழ்க்கையில இந்த மாதிரியான அழகான தருணங்கள் எதுவுமே நடக்கல….ஆனா அதவே நெனச்சிட்டு ஐயோ நடக்கலையே நடக்கலையேனு பொழம்பிட்டு உக்கார எனக்கு மனசே இல்லை….நீ ஒத்துகிட்டா இந்த வாரம் ஞாயித்து கிழம நம்ம ரெண்டு பேரும் இது மாதிரி ஃபோட்டோ எடுத்துக்கலாமா?…….

 

“ம்ம்ம்….பாக்கவே ரொம்ப ஆசையா இருக்கு…இதுல நான் ஒத்துக்க என்ன இருக்கு….சந்தோஷமா போய் எடுத்துக்கலாம்….”

 

“இல்ல உனக்கு இதெல்லாம் புடிக்குமா புடிக்காதானு எனக்குத் தெரியாதுல அதான் உன் கிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு புக் பண்ணிக்கலாம்னு இருந்தேன்….”

 

இந்த ஒரு விஷயம் அவளை எந்த அளவிற்கு சந்தோஷப் படுத்தியது என்று அவனுக்குத் தெரிந்திருந்தால்…. கண்டிப்பாக வறுந்தியிருப்பான் இத்தனை நாள் இதை செய்யாமல் ஏன் விட்டோம் என்று…..

 

அப்பாடி….இப்போதாவது இவனுக்கு இதெல்லாம் தோனுதே என்று ஒரு ஆச்சரியம் கலந்த சந்தோஷத்துடன் அவனைப் பார்த்தபடியே இருந்தாள்….

 

“என்ன பார்வை இது……”

 

“இல்ல…உனக்கு ஆசையெல்லாம் கூட இருக்கா என்ன ?”

 

“ம்ம்ம் அதெல்லாம் நெறையாவே இருக்கு….”

 

“ஆச்சரியமா இருக்கு “

 

“ஏன் எனக்கெல்லாம் ஆசையே இருக்காதா…நானும் மனுஷன்தான?”

 

“ஆமா ஆமா….வேற என்னென்ன ஆசை எல்லாம் இருக்கு உனக்கு?”

 

“ம்ம்ம் அதுவா…..அது….. அது…..”

 

“என்ன அது அதுனு இழுக்குற…ஒழுங்கா விஷயத்த சொல்லு….”

 

“நான் சொல்ல மாட்டேன் செஞ்சு காட்றேன் புரிஞ்சுக்கோ “

 

“அடேங்கப்பா பெரிய ஆளுதான்…..”

 

அவனின் ஆசை பற்றி பேசிய பின் சில நேரம் மௌனம் கொண்ட இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்… மனநிறைவு பெற்ற பேரின்பத்திலேயே நிம்மதி தழுவி உறங்க நினைத்த இருவரும் தங்கள் செருப்புகளைக் கழற்றி விட்டு கொண்டு சென்ற பையைத் தூக்கி விசிறி விட்டு தங்களுக்கான தனித் தனி போர்வைக்குள் புகுந்தனர்… இருவருக்கும் அசதிதான் ஏனோ….என்ன காரணமோ இருவரின் கண்களையுமே தூக்கம் தீண்டவில்லை…

 

“மீரா…..மீரா”

 

“ம்ம்ம் என்ன”

 

“தூங்கம் வருதா உனக்கு”

 

“தூங்கனும் போல இருக்கு….ஆனா தூக்கமே வரல”

 

“எனக்கும்தான்….தூக்கம் வர வைக்க எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு…..”

 

“என்ன ஐடியா….?”

 

“ஒரு படம் பாக்கலாமா?”

 

“படமா அதெல்லாம் வேணாம்… ரெண்டு மணி நேரம் மூனு மணி நேரம் எல்லாம் என்னால தாக்குப் புடிக்க முடியாது “

 

“இந்தப் படம் அவ்ளோ நேரம் இல்ல… ஒரு மணி நேரம் மட்டும்தான்…. சீக்கிரம் முடிஞ்சுரும்….”

 

“ஐயோ வேணாம் கம்முனு இரு…”

 

“போ எனக்குத் தெரியாது…எந்திரி நீ…. வா பாக்கலாம் “

 

“என்ன படம் அது “

 

“சொப்பனம் “

 

“இப்படி ஒரு படத்த நான் கேள்விப்படவே இல்லையே “

 

“அதான் இப்போ தெரிஞ்சுக்கோ…. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பாக்கலாம் வா “

 

பிடிவாதம் பிடித்து மீராவை வரவழைத்து அமர்த்தி….தனது ஃபோன் வழியாக டிவியில் இணைத்து படத்தை ஓட்டினான்….

 

கருப்புத் திரை கலராக மாறி… திரைப்படத்தின் தலைப்பு மட்டும் தெரிந்தது…உடனே படத்தின் முதல் காட்சி தொடங்கிவிட்டது…. இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், மற்றும் பிறர் என்ற எந்த ஒரு நபரின் பெயருமே அதில் ஒளிபரப்பாகவில்லை….வழக்கமாக அதெல்லாம் இருக்கும் அல்லவா அப்போதே அவள் சந்தேகத்தை அவனிடம் கேக்க…. படத்தின் கடைசியில் வரும் போல….பழைய வழக்கத்தையே எல்லாரும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் சொன்னான்….. ம்ம்ம் இருக்கலாம் என்று நினைத்த அவளின் பார்வை திரை பக்கமே திரும்பியது….

 

இருள் சூழ்ந்த அவ்வறையில் இருவரின் கண்ணெதிரே படத்தின் முதல் காட்சி தெரிந்து கவனத்தை கட்டி இழுத்தது…..

 

பச்சைப் பாய் விரித்தது போன்று பசுந்தாவரங்கள் குடி கொண்ட அந்த குக்கிராமத்தில் ஒரு குட்டி தேவதை பிறந்தாள்…. பெற்றோர்கள் காதல் திருமணம் செய்துகொண்டு வளமாக வாழ்க்கை நடத்தியதற்கு கிடைத்த பரிசுதான் அந்த பிஞ்சு பூங்கொத்து….

 

தாங்கள் கை கால் முழுக்க சேரும் சகதியுமாய் இருந்தாலும் பெற்ற பிள்ளையை சந்தனக் கட்டி போன்று பாராட்டி சீராட்டி அல்லவா வளர்த்தார்கள்….உன் தகுதிக்கு இதெல்லாம் தேவையா என்று பலர் விமர்சனம் எழுப்பினாலும் தன் தகுதிக்கு மிஞ்சிய சந்தோஷங்கள் அத்தனையையும் தன் பிள்ளை அனுபவிக்க அவர்கள் படும் பாடோ ஏராளம்….

 

தவழ்ந்து ,நடந்து, சிரித்து,பேசி,அழுது, அடம்பிடித்து, அவள் வளரும் அழகைப் பார்த்து ரசித்த இருவரும்… எதிர்காலத்தில் இவள் யாரும் அடைந்திடாத உச்சத்தில் சீரும் சிறப்புமாக பெரும் பதவியில் அதிகாரத்திலும் ஆளுமையிலும் சிறக்க வேண்டி தங்களின் உடல் வறுத்தி ரத்தம் சிந்தி சேர்க்கும் அத்தனை காசு பணத்தையும்….

 

 

…கதை தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்