Loading

பிறை -62

 

அனைத்து கேஸ் சம்மந்தமான விஷயங்களை எல்லாம் முடித்து விட்டு நிம்மதியாக வீடு திரும்பியவன், மனைவியை அழைத்து கொண்டு கொடைக்கானல் சென்று விட்டு வீடு திரும்பி இருந்தான்.

 

குளிர் பிரதேசத்தில் குளிரோடு குளிராக இருவருமே ஒரு போர்வையை விட்டு வெளி வரவில்லை என்பதை விட வெளி வர மனமில்லாமல் அதற்குள்ளே சுருண்டு கிடந்தார்கள்.

 

” சும்மா சொல்ல கூடாது மூன்… நீ செம்ம ஃபிகர் டி ” என உதட்டில் முத்தம் வைத்தவனை முறைத்து பார்த்தவள்..

 

” போலீஸ்காரன் இப்படி தான் பேசுவாங்களா..”

 

” பொண்டாட்டி கிட்ட புருஷன் பொசிஷன் மட்டும் தான் டி..  போலீஸ் எல்லாம் கிடையாது.. உன்கிட்ட பேசுனா தப்பும் இல்லை ”

 

” ம்ம் … ம்ம்… ஊருக்கு வந்து அஞ்சு நாள் ஆச்சு.. எப்போ வீட்டுக்கு போறதாம்”

 

” அங்க போனா இப்படி எந்நேரமும் கட்டில்ல இருக்க முடியாதே..”

 

” அப்போ வேலைக்கு போற ஐடியா இல்லையா ”

 

” அதெல்லாம் இருக்கு.. இன்னைக்கு நைட்டு கிளம்பலாம்.. ஊருக்கு போனதும் பார்கவி கிட்ட பேசு மூன் ”

 

” கண்டிப்பா பேசுறேன்.. அவளை சரி பண்ணுறது தான் என் முதல் வேலை”

 

” ம்ம் சீக்கிரமே சரணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும். அதுக்கு அப்பறம் அவன் அவளை சரி பண்ணிடுவான் ” என நம்பிக்கையுடன் கூறினான் ஆதிதேவ்.

 

” நீ நினைச்ச மாதிரி தான் இருக்கேனா இல்ல ஓகே வா ”

 

” என்னது”

 

” இல்ல இந்த ரொமான்ஸ் போதுமா.. இல்ல இன்னும் ஸ்ட்ராங்கா வேணுமான்னு கேட்டேன்.. ”

 

” ஐயோ போங்க தேவ்.. ” என சிணுங்கி அவனுள் ஒளிந்து கொண்டாள்.

 

இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். இவர்கள் வந்தது கூட தெரியாமல் அறைக்குள் அடைந்து கிடந்தாள் பார்கவி.

 

” வெளிய வரவே இல்லையா அத்தை”

 

” இல்ல மா நீ போய் பேசு ” என உள்ளே அனுப்பி இருந்தார் மீனாட்சி.

 

அறை கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்த பிறையை பார்த்ததும்.. தொலைந்த உற்சாகம் திரும்பி வந்ததை போல சிரித்து வைத்தாள்.

 

” வாங்க அண்ணி.. கொடைக்கானல் எல்லாம் எப்படி இருந்துச்சு ”

 

” அதெல்லாம் நல்லா போச்சு.. நீ எப்படி இருக்க.. பொழுது போச்சா ”

 

” அப்படியே போகுது அண்ணி.. நியூஸ் பார்த்தீங்களா.. ”

 

” ம்ம் பார்த்தேன் … அவ்வளவு தான் அர்ஜுனுக்கு இருக்கு ”

 

” ம்ம் … ”

 

” அடுத்த என்ன பண்ணலாம்னு இருக்க ”

 

” அது வந்து… சரண்.. அவரை.. கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் அண்ணி ” என்றதும் அவளுக்கே இன்ப அதிர்ச்சி தான்.

 

” என்ன சொல்லுற பாரு.. உனக்கு ஓகே வா ”

 

” ம்ம் அவர் கூட கல்யாணம் பண்ணா என் லைஃப் நல்லா இருக்கும்னு தோணுது. என்னோட கணக்கு தப்பா ஆகிடுச்சு.. ஆனால் என் அண்ணன் எனக்கு எப்பவும் தப்பானதை தேடி தர மாட்டாரு.. ”

 

” அண்ணன் மேல இருக்கிற நம்பிக்கையில மட்டும் தான் இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லுறியா பாரு.. அப்படி பண்ணா அது சரி வராது.. புதுசா இப்போதான் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணுறாங்க அப்படின்னா ஓகே.. ஆனால் நீ இன்னும் பழைய கதையில இருந்து வெளிய வரல.. இந்த நேரத்துல உன்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்க கூடாது தான். ஆனால் இப்போ நீ பண்ணலைனா எப்பவுமே பண்ண மாட்டியோன்னு பயப்படுறாங்க..

 

சரண் நல்லவர் தான்.. ஆனால் உனக்கு பிடிச்சா தான் கல்யாணம்.. உன்ன யாரும் புஷ் பண்ணல.. புஷ் பண்ணவும் உன் அண்ணன் விட மாட்டார். பொறுமையா யோசி ஒன்னும் அவசரம் இல்ல ” என எடுத்துக் கூறினாள் பிறை.

 

” நல்லா யோசிச்சிட்டேன் அண்ணி.. சரணை நான் பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ”

 

” பிடிச்சா ”

 

” என்ன டா இப்பதான் முன்னால் காதலன் விட்டு போயிருக்கான்.. அதுக்குள்ள அடுத்தவனை பிடிச்சிருக்குன்னு சொல்லுறேன்னு நினைக்கிறீங்களா.. ”

 

” ச்ச… அப்படி எல்லாம் இல்ல பாரு.. எப்படி திடீர்னு இந்த முடிவுல உறுதியா இருக்கனு தான் யோசிச்சேன்.. ”

 

” சரண் வந்து பேசிட்டு போனாரு அண்ணி ” என்றதும் அவளை வியப்பாக பார்த்தவள்..

 

” எப்போ வந்தார் பாரு ”

 

” ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்தாரு.. ”

 

” என்ன சொன்னாரு ”

 

” அவர் கிட்ட பேசுனதுக்கு அப்பறம் தான் இந்த முடிவுல நான் உறுதியா இருக்கேன் ” என சரண் வந்து பேசியதை கூற ஆரம்பித்தாள்.

 

இரண்டு நாட்களுக்கு முன் சரண் வீட்டிற்கு வந்திருந்தான் . ” ஆதி..”

 

” அட வா பா சரண்… ஆதி கொடைக்கானல் போயிருக்கான் … உன்கிட்ட சொல்லலையா ”

 

” ஆமா மா சொன்னான் நான் மறந்துட்டேன்..”

 

” சரி வா டீ போட்டு தரேன்..”

 

” வேண்டாம் மா குடிச்சுட்டு தான் வந்தேன்..”

 

” அட இரு சூடா ஒன்னு போட்டு தர சொல்லுறேன்.. பாரு வேற அவ அண்ணிக்காக எல்லாம் சமைக்க கத்துட்டு இருக்கா.. அவளை போட சொல்லுறேன் ” என பார்கவியை அழைத்தாள்.

 

” என்ன மா.. ” மாடியில் இருந்து இறங்கி வந்தவள்… சரணை பார்த்து வாங்க என்பதை போல தலை அசைத்தாள்.

 

” பாரு நம்ம சரணுக்கு ஒரு டீ போடு மா… நான் போய் கொஞ்சம் கீரையும் , கருவேப்பிலையும் பறிச்சிட்டு வரேன்.. ” என் பின் பக்கம் நட்டு வைத்திருந்த காய்கறிகளை பறிக்க சென்றார்.

 

” நீ பேசிட்டு இரு சரண்… வந்துடுறேன் ” என மீனாட்சி சென்று விட.. இரண்டு நிமிடம் பொறுத்து பார்த்தவன்.. பின் அடுக்களைக்கு சென்றிருந்தான்.

 

அங்கே அவனுக்காக பாலை காய்ச்சி காய்ச்சி.. அதில் டீ தூளை போட்டு விட்டு, சக்கரை போடுவதற்கு கைகளை யோசனையாக கொண்டு செல்ல..

 

” எனக்கு சுகர் எல்லாம் இல்ல.. தாராளமா போடலாம்… ” திடீரென கேட்ட குரலில் சக்கரையை சிதற விட்டவள்.. வாசலில் அவன் நிற்பதை பார்த்து.. பின் கரண்டியை எடுத்து சக்கரையை அளவாக போட்டவள்..

 

” என்ன பேசனும்” அவனது எண்ணத்தை கணித்தவளாக கேட்டாள்.

 

” ஆதி நம்ம கல்யாண விஷயத்தை பத்தி போர்ஸ் பண்ணிட்டு இருக்கானா என்ன ?”

 

” அதெல்லாம் இல்லைங்க.. ”

 

” ம்ம்.. கடைசியா நீ அழுததை பார்க்கும் போது.. நீ அவனை எந்த அளவுக்கு நம்பி காதலிச்சு இருந்திருக்கன்னு தெரிஞ்சது.. ரொம்ப வலிச்சது பாரு.. இந்த மாதிரி ஒரு காதல் எனக்கு கிடைக்கல.. அவனுக்கு கிடைச்சும் அதை இழந்துட்டான்.. உன்னோட காதலை மறந்துட்டு என்னைய கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துன்னு நான் கேட்கல…

 

நான் உனக்காக எத்தனை வருஷம் வேணாலும் வெயிட் பண்றேன்னு சினிமா டயலாக் எல்லாம் பேசல.. உனக்கு தோன்ற அப்போ சொல்லு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்.. உனக்கு பிடிச்சா தான் அதுவும் நடக்கும். உடனே மறந்துட்டு என் கூட வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணுன்னு நான் சொல்ல மாட்டேன்.. உன்னோட வலி என்னனு நீ உன் அண்ணன் சட்டையை பிடிச்சு கதறும் போதே தெரிஞ்சது. அதுனால அந்த அளவுக்கு கொடுமை பண்ணுற சேடிஸ்ட் இல்ல நானு.. உனக்கு எப்போ விருப்பமோ அப்போ தான். கல்யாணம்.. அதே மாதிரி நீ எல்லாத்தையும் விட்டு வெளிய வந்து என்ன பிடிச்சதுக்கு அப்புறம் நம்ம லைஃப் ஸ்டார்ட் பண்ணலாம்..

 

எனக்கு எந்த அவசரமும் இல்ல.. உன்ன அதட்ட உனக்கு மாமியாரும் இல்ல.. எங்க அப்பா மட்டும் தான்.. அவரை பத்தி உனக்கே தெரியும். நீ என்ன பண்ணாலும் அவரு சரின்னு தான் சொல்லுவாரு.. என்னையும் உனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும்.. இந்த கல்யாண விஷயத்தை மனசுல வச்சுட்டு எங்கிட்ட பேசாம இருக்காத.. இந்த கல்யாணம் நடக்காம போனாலும்.. உனக்கு நல்ல வெல் விஷரா நான் இருப்பேன்..

 

இன்னொரு முக்கியமான விஷயம்.. எந்த காரணத்துக்காகவும் உன்னோட பழைய காதலை பேச வேண்டிய அவசியம் எனக்கு இருக்காது.. பேசவும் மாட்டேன்.. இனிமே முடிவு பண்ண வேண்டியது உன் கையில தான் இருக்கு..  யோசிச்சு சொல்லு பாரு.. டீ கொதிச்சிருச்சு எடுத்து தரியா ” என பேச்சோடு கேட்டவனுக்கு டீயை ஊற்றி கொடுத்தாள்.

 

அதை ஒரு மிடறு அருந்தியவன்.. ” ம்ம் நாட் பேட் .. நல்லா சமைக்க ஸ்டார்ட் பண்ணிட்டியா… இத்தனை வருஷம் கடை சாப்பாடு தான்.. நீ வந்தா தான் வீட்டு சாப்பாடு சாப்பிடற பிளான் இருக்கு.. நீ ஓகே சொன்னா சாப்பிடலாம்… ” என டீயை குடித்து விட்டு கப்பை அங்கே வைத்தவன்..

 

” தாங்க்ஸ் பாரு… ” என டீயை காட்டி விட்டு சென்றிருந்தான்.

 

நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் கூறி இருந்தாள் பார்கவி.

 

” வாவ்.. அப்போ சீக்கிரமே கல்யாணம் தான்.. ” என அவளது கன்னத்தை கிள்ளி வைத்தவள் விரைவாக சென்று குடும்பத்தோடு இந்த விஷயத்தை பகிர.. அனைவரும் மகிழ்ச்சியில் தத்தளித்து போனார்கள்.

 

இரண்டு வாரத்தில் ஒரு நல்ல நாளில்   அவளை பெண் பார்த்து நிச்சயம் செய்து விட்டு போனார்கள். அதன் பின்பு அடுத்த ஒரே மாதத்தில்.. திருமணமும், ஆதிக்கும், பிறைக்கும் வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 

திருமண நாளும் வந்தது.. மனதில் சரணை மட்டுமே நினைத்த வண்ணம் அவன் கையால் மாங்கல்யம் வாங்கிக் கொண்டாள் பார்கவி. அதற்கு அடுத்த நாளே ஆதிக்கும் பிறைக்கும் வரவேற்பு கோலாகலமாக நடந்து முடிந்தது. அதற்கு ரஞ்சனி… சுஷ்மிதா, கீதா என அனைவரும் கலந்து கொண்டார்கள்.

 

மனம் மாறி திருமணம் செய்து வந்த பார்கவியை எந்த விதத்திலும் அவளை சீண்டாமல், தீண்டாமல் அவளுக்ககான நேரத்தை கொடுத்திருந்தான் சரண்..

 

கண்டிப்பாக பார்கவி அவனோடு சேர்ந்து வாழத்தான் போகிறாள். தள்ளி நின்று நேரம் கொடுக்கும் கணவனை அவளது கண்கள் எப்போதோ களவாட தொடங்கி இருந்தது.

 

கல்யாணம் , வரவேற்பு என பிசியாக இருந்தாலும் , பிறையும் ஆதியும் கொஞ்சமும் நெருக்கம் குறையாமல் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அதன் விளைவாக…

 

இரவில் அவனருகில் படுத்திருந்தவளை இழுத்து அவனருகில் போட்டுக் கொண்டவன்.. ” எதுக்கு டி இப்போ வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்க ” அதட்டும் கணவனை விழி அகலாது பார்த்து வைத்தாள்.

 

” என்ன விஷயம் மூன்.. ”

 

” உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் தேவ்…”

 

” இதென்ன டி குழந்தை மாதிரி கேள்வி கேக்குற ”

 

” குழந்தை வர போறதுனால தான் கேக்குறேன் தேவ்… ” என்றதும் இன்ப அதிர்ச்சியில் அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டான் .

 

” ஐயோ மெதுவா தேவ்… பாப்பாவுக்கு வலிக்கும்… ”

 

” என் புள்ள ஸ்ட்ராங் டி ” என ஆசையாக அவளது வயிற்றில் முத்தம் பதித்தவன்… அவளது நெற்றியிலும் முத்தம் பதித்தான்.. மறுநாள் மருத்துவமனைக்கு சென்று  பரிசோதனை செய்து உறுதிப் படுத்திக் கொண்டவன்… வீட்டில் உள்ளவர்களிடம் கூற.. அனைவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி.

 

விஷயத்தை கேட்டு ஊரில் இருந்து சிவானந்தம், சிவகாமி வந்து சேர்ந்தார்கள். அவர்களோடு அகிலாண்டேஸ்வரியும் பேத்தியை காண வந்திருந்தார்.

 

மகள் வீட்டில் இரண்டு வாரத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் வந்திருந்தார் அகிலாண்டம். மருமகளின் அருமை புரிந்தாலும்.. மகளையும் விட்டுக் கொடுக்காமல் பேசி உள்ளே வந்திருந்தார். ஆனால் வந்த பின்பு சிவகாமியை எதுவும் அதிகாரம் செய்வதில்லை. அதில் அடங்கிப் போனார்.

 

இதோ அவர்கள் வீட்டு வாரிசு வளர்கிறது என்றதும் ஆசையில் வந்து சேர்ந்தார்.

 

சரணும் பார்கவியும் கூட வந்து விட்டார்கள். குடும்பத்தோடு அனைவரும் புதுவரவை வரவேற்க மகிழ்ச்சியோடு காத்திருந்தார்கள். இனி அவர்களது வாழ்வில் அனைத்தும் நலம் தான்.

 

***

 

கொடைக்கானல் பகுதியில்.. பெரிஜம் லேக் பகுதியை காண சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருந்தனர். அது அடர்ந்த காட்டிற்குள் இருப்பதால் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கிய பிறகே அங்கு செல்ல முடியும். லிமிடெட் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. அதுபோக வனத்துறையில் இருந்து பேருந்துகளும், ஜீப்புகளும் கூட இயங்கி வருகிறது.

 

அந்த அடர்ந்த வனத்திற்குள் சென்று, அந்த ஏரியை பார்த்தால் அத்தனை அழகாக காட்சி அளிக்கும். அப்படி ஒரு இடத்திற்கு செல்லும் வழியில் ஓர் இடத்தில் சோலை காடுகள் இருக்கும்.

 

அது இருள் நிரம்பிய பகுதி. எப்போதுமே அந்த இடம் குளிராகவும்.. ஈரப்பதம் நிறைந்ததாகவும் மட்டுமே இருக்கும். பனி பொழிவுகள் வருவது வழக்கமாக நடக்கும். மக்கள் செல்வதற்கு அப்பகுதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

ஏனென்றால் அடர்ந்த வனத்தில், வன விலங்குகள் அதிகம் இருக்கும். அந்த விலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மக்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அதை விட அந்த அடர்ந்த காட்டிற்குள் சூரிய ஒளி ஊடுருவி செல்வதற்கு கூட வழி இல்லாமல், அங்குள்ள மரங்கள் குடை போல அந்த காட்டை இருளடைய வைத்திருக்கும்.

 

 

ஏனோ அந்த காட்டிற்குள் சென்றால், காட்டில் உள்ள மரங்கள் எல்லாம் நம்மை கண்காணிப்பது போல இருக்கும். அந்த மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று பின்னி, யாரோ ரகசியம் பேசிக்கொள்வது போல சலசலத்தது.

அந்த காடு பார்ப்பதில்லை… கண்காணிக்கிறது.

 

அவைகள் மூச்சு விடும் சத்தம் கூட கேக்கும். அப்படி ஒரு விசித்திரமான காடு தான் சோலை காடு. மனிதன் சென்றாலும் திரும்பி வருவது சத்தியம் அற்ற காடு. 8° – 12° குளிர்ச்சி வருடம் முழுவதும் இருக்கும்.

 

அந்த காட்டிற்குள் மனிதன் காலடி வைக்கலாம்… ஆனால் அவன் திரும்பி வருவான் என்பதற்கு அந்த காடு ஒருபோதும் உறுதி அளிக்காது.

 

இப்படி ஒரு இருள்மூட்டிய சோலைக்காட்டின் நடுவில் தான் அர்ஜுன் இருந்தான். கால்கள் பலவீனமாய் நடுங்கின. உடலில் ஓடிய போதை மருந்தின் வீரியம் இன்னும் அவனை பிடித்து வைத்திருந்தது.

 

குளிர் எலும்பு வரை குத்தியது.

மூச்சு விடும் ஒவ்வொரு தருணமும் அவனுக்கு போராட்டமாக இருந்தது.

 

மனித வாசனைகளை வேட்டையாடி வாழ்ந்தவன்… இப்போது இயற்கையின் வாசனையில் மூழ்கி தத்தளித்தான்.

 

குளிர் அவன் தோலை மட்டும் குத்தவில்லை… அவன் செய்த பாவங்களின் நினைவுகள் எலும்புக்குள் ஊறியது.

 

ஒரு நாள் முழுவதும் போதை மருத்து கொடுக்கும் அவஸ்தையையும், பின் அந்த அடர்ந்த காட்டின் குளிரையும் தாங்கிக் கொண்டவனுக்கு… இயற்கை கொடுத்த அற்புத பரிசு மரணம்.

 

“நீ மனித மணத்தை விலைபேசி விற்றாய்…

இங்கே காடு உன் மூச்சையே விலையில்லாமல் எடுத்துக் கொண்டது.”

 

எப்படி எல்லாம் இருக்க வேண்டியன், இன்று ஆளே இல்லாத அடர்ந்த காட்டிற்குள்  அனாதையாக உயிரை விட்டிருந்தான்.

 

உதவிக் கரங்கள் நீட்டக் கூட முடியாத இடத்தில், ஒருகாலத்தில் உலகை கட்டுப்படுத்த நினைத்தவன், இன்று மூச்சை கூட கட்டுப்படுத்த முடியாமல் கிடந்தான்.

 

நல்ல நண்பர்கள் கிடைத்தும்.. நல்ல படிப்பு கிடைத்தும்.. நல்ல வேலை கிடைத்தும், நல்ல காதலி கிடைத்தும்.. பணம் என்ற மாயையை தேடி சென்ற அற்ப பிறவி இவன். வாழ்க்கையை தொலைத்து, எங்கிருந்து வந்தானோ மீண்டும் அதே இடத்திற்கே சென்றிருந்தான். இன்று அவன் தேடிய பணம் அவனோடு வருமா.. அவனது உடலே அவனுக்கு சொந்தமில்லை என்ற போது பணம் எங்கிருந்து வரும்.

 

கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு…  பிரபஞ்சம் என்ற ஒன்று இருப்பது உண்மை தான்.நாம் பேசுவது அதற்கு கேட்கும்.. நாம் நினைப்பதும் அதற்கு புரியும்.

 

கடவுள்  இருப்பாரோ இல்லையோ தெரியாது.ஆனால் பிரபஞ்சம் பார்த்துக் கொண்டே இருக்கும்.

 

சில தவறுகள் சட்டத்தால் தண்டிக்கப்படாது…ஆனால் அவற்றின் முடிவுகள் தவறாமல் வந்து சேரும்.

 

நகரத்தில் “விபத்து” என்று ஒரு வரி செய்தி. மும்பையில் இருந்து சென்னை வரும் வழியில் அர்ஜுன் வந்த வண்டி, எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் சம்பவ இடத்திலேயே அர்ஜுன் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக தகவல்.  அதிகாரப்பூர்வமாக மட்டுமே.. ஆனால் உண்மையில்…

 

பெரிஜம் சோலைக்காடு

அந்த இரவின் உண்மையை மட்டும் அமைதியாக காத்துக் கொண்டிருந்தது.

 

இருள் எப்போதும் முழுவதுமாக மறையாது.

ஆனால் அதை வெல்ல முழுநிலவு தேவையில்லை…

ஒரு பிறை போதும்.

 

 

சுபம்

 

சஹானா சனா💖

 

கதையை படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க மக்களே…. எதுவும் எழுத மறந்துட்டேனா.. அதையும் சொல்லுங்க… பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணிட்டு போங்க மக்களே… இதுக்கு அப்பறம் நாளை முதல் கதிரவன் கதை வரும். அது முடிஞ்சதும் தான் புதுக் கதை. எப்பவும் உங்க சப்போர்ட் எனக்கு இருக்கு.. அதுக்கு ரொம்ப நன்றி💖💖💖💖💖 லவ் யூ ஆள்💝💝💝

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. நல்ல விறுவிறுப்பாக சென்றது கதை… எல்லா கேரக்டரும் அருமை.. ஒரு வழியா அகிலாண்டேஸ்வரி கொஞ்சம் திருந்தியாச்சு.. அர்ஜுன் முடிவு அவனே தேடி கொண்டது..ஆதி, பிறை வாழ்க்கை இனிமையாக அமைந்துள்ளது.. அதேபோல் சரணுடன் பார்கவியும் இனிதாக வாழ வேண்டும்… வாழ்த்துகள் சனா 💐💐💐💐💐❤️💛