Loading

ரேயன் வீட்டை விட்டு வாகினியுடன் வெளியேறியதும் கொஞ்ச நாட்களில் தமக்கை செய்ததை மறக்க முடியாமல் விஜயனும் வெளியே வந்து தமக்கையின் கணவனுடன் தங்கி கொண்டார்.

 

அதன் பின் வேலைகாரியுடன் தனிமையில் நாட்களை கழித்து பழைய கம்பீரத்தை இழந்தவர் ஒருநாள் மாடிபடியிருந்து உருண்டு விழுந்து விட, அப்போது கை கால்கள் இழுக்கப்பட்டு நாற்காலியில் அமர்ந்தவர் இன்னும் எழும்பவில்லை.

 

அதிலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கவுமே மாப்பிளையுடன் ரேயனின் தந்தையும் வந்திருக்க, அப்போது பிடித்த சக்கர நாற்காலியை இப்போதும் பிடித்திருந்தவர் இனி எப்போதும் அவரே பிடித்திருப்பார் என்றவரின் அன்பை புரிந்து கொள்ளாமல் காலத்தை கழித்ததை நினைத்து கதற, கணவனாக அணைத்து ஆதரவு கொடுத்தார்.

 

தியாவிற்கு அவரின் மேல் கோவம் இருந்தாலும் உடம்பு சரியில்லாதவரை விலக்கி வைப்பது தவறென்று மாமியாராக ஏற்று கொள்ள, ரேயன் பட்டும்படாமல் பேசி வைப்பான்.

 

பின் ரேயன் அருகில் குழந்தையுடன் அமர்ந்திருக்க, குழந்தை காதில் பெயரை சொல்லுங்கோ என்று அய்யரின் கூற்றில் என்ன பெயராக இருக்கும் என்று அனைவரும் ஆர்வமாக பார்த்திருக்க,

 

யாரிடமும் பெயரை கூறாதவள், தன்னை ஆர்வமாக பார்த்திருப்பதை கண்டு புன்னகையுடன் வினிதீஸ்மி என்று தன் அன்னை வாகி அன்னை பெயர் இணைத்து வைத்திருந்தாள்

(அன்னம் லக்ஷ்மி வினிதா, வினி + தீ+ லக்ஷ்மி) மூன்று முறை குழந்தை காதில் சொல்ல, சில கண்கள் அதிர்ச்சியாக சில கண்கள் மகிழ்வாக பார்த்திருக்க, தந்தை பார்த்து வாகி பார்த்து கண்சிமிட்டியவள் ரேயன் கூறி முடித்ததும், அருகில் நின்று கொண்டிருந்த தந்தையின் கையை பற்றி அப்பா.. நீங்களும் உங்க பேத்தி காதுல சொல்லுங்க என்று கூறியவள் அழுகை அடக்கி கொண்டாள்.

 

மகள் அழைத்ததும் சந்தோசத்தில் பேச்சில்லாமல் மகளின் அமர்ந்து குழந்தையை வாங்கி மூன்று முறை பெயரை கூறியவபருக்கு மகிழ்வில் காற்றே வந்திருக்க, கண்களில் வரும் கண்ணீரை துடைத்துவிட்டு பேத்தியை கொஞ்சம் தியாவோ சாரிப்பா என்று அவரின் தோலில் சாய்ந்து கொள்ள, தமக்கை முதல் பேசட்டுமென்று காத்திருந்த இருவரும் இப்போது ஓடி சென்று இருவரையும் அணைத்து கொள்ள, வாகி மற்றும் ஆர்யன் சாரிப்பா என்று மன்னிப்பு வேண்ட மூவரின் உச்சந்தலையில் முத்த்மிட்ட தந்தையின் மனம் நிறைந்ததுவிட்டது.

 

பின் அனைவரும் குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்திருக்க, ரேயனிடம் கண்ணை காட்டிவிட்டு வாகினியுடன் சாமி சன்னதி சென்று நிற்க, ஜோஸப்பையும் ரேயன் நிற்க வைத்தான்.

 

பின் வாகி கழுத்தில் தியா மாலை போட ஜோஸப் கழுத்தில் ரேயன் அணிவித்தான்.

 

அதில் ஜோஸப் மற்றும் வாகினி திகைக்க, வாகியோ கலங்கியப்படி தியாவை பார்க்க, பின் கெட்டிமேளம் சத்தம் முழங்க ஜோஸப் அனைவரின் முன்னிலையிலும் அவனின் வானியின் கழுத்தில் மகிழ்வுடன் மூன்று முடிச்சிட்டான்.

 

பின் அடுத்த ஜோடி வாங்கோ என்று அய்யர் அழைத்ததும் மாலையுடன் தன் முன் வந்த ரேயனை கண்டு பெண்ணவள் விழி விரித்து நிற்க அவளின் கழுத்தில் மாலை அணிவித்து தலை குனிந்து நிற்க, அவளும் நிறைவாக அவனின் கழுத்தில் மாலை பின் கெட்டிமேள சத்ததுடன் பெண்ணவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு உச்சந்தலையில் அழுத்தமாக இதழ் முத்திரையிட்டான்.

 

அனைவரும் நிறைவாக மாலை போல் வீட்டிற்கு வந்திருக்க ஆரத்தி எடுத்து இரு ஜோடிகளையும் வரவேற்க, உள்ளே நுழைந்ததும் பெண்ணவளை குண்டு கட்டாக தூக்கி கொண்டு தன் அறைக்குள் நுழைந்தான்.

 

அவனின் அதிரடியில் திகைத்து பின் வெட்கித்தவள் எல்லார் முன்னாடியும் என்ன பண்ற என்று தலையை கவிழ்த்து விட,

 

பெண்ணவளின் நாடியை நிமிர்த்தி அவளிடம் ஒரு பரிசை கொடுக்க, அதனை வியப்பாக பார்த்தப்படி கையில் வாங்கி பிரித்தவள் நிஷா பிறப்பு சான்றிதலில் இருந்த தந்தை தாய் தன் மற்றும் ரே பெயர் இருப்பதில் அதிர்ந்து கண்கள் கலங்கி கால்கள் தடுமாறினாள்.

 

அவளை தன்னோடு அணைத்து பிடித்து படுக்கையில் அமர்ந்தவன் இன்னைக்கு என்ன தேடி தெரியுமா என்றதும் நிமிர்ந்து நாட்காட்டியில் காட்டிய தேதி

 

ஆம் இன்று தான் நிஷா அவளின் கருவை விட்டு வெளியே வந்த நாள், அந்த நாளில் எதை இழந்தாளோ அதை நாளில் அல்லவா திருப்பி கொடுத்திருக்கிறான்.

 

அவனை கலங்கிய விழிகளுடன் பார்த்திருந்தளின் கண்ணீர் கன்னம் நனைக்க ரே இது உண்மையா நிஷா.. நிஷா என்றவளுக்கு வார்த்தைகள் தண்டியடிக்க,

 

ஆமா தியா நிஷா தான் நம்ம ஃபர்ஸ்ட் பேபி.. இதபத்தி தெரிஞ்சிக்க தான் அஞ்சு நாள் உன்ன பாக்க கூட முடியாம பிஸியாயிட்டன்.. அன்னைக்கு குழந்தை கொல்ல சொல்லி சர்வா டாக்டரோட பொண்ண கடத்தி மிரட்டியிருக்கான்.. அப்போ தான் வாகி டெலிவரிக்காக வந்திருந்தா.. நான் கேஸ் விஷயமா வெளியே மாட்டிக்கிட்டன்.. அவளுக்கும் கேர்ள் பேபி தான் பிறந்துச்சு ஆனா இறந்து போச்சு.. டாக்டர் அப்போ தான் வாகி இறந்த குழந்தை உனக்கும் உன்கிட்ட இருந்த நிஷாவ வாகிக்கும் மாத்தி வச்சி சர்வா முன்ன இறந்து போன பேபிய காட்டிட்டாங்க.. எனக்கு சர்வா பேபி கொன்னத பத்தி சொன்னதும் எப்படி ஒரு டாக்டர் இத பண்ணுறாங்க கோவம் வந்துச்சு ஆக்சன் எடுக்க போனேன் அப்போது தான் நடந்த உண்மைய சொன்னாங்க என்றதும் நிறைவுடன் ரேயனை அணைத்தவளின் முகம் நொடியில் இறுகி இது வாகிக்கு தெரிய கூடாது என்க,

 

டேய் அத்தை மகனே என்கிட்ட சொல்லிடாத என்றப்படி வானரபடைகளுடன் வந்தவளை கண்டு தியா திகைக்க, பேபி பத்தி கண்டுபிடிக்க நானும் ஜோஸப் தான் போனும்.. ஆனாலும் உன்கிட்ட மட்டும் சொல்லிட்டு ரகசியமா வைக்க நினைச்சா இவன் போய் பொண்டாட்டிகிட்ட சொல்ல வாகி தான் உனக்கு இப்படி கிஃப்ட் கொடுக்க சொல்லி சொன்னா என்றதும் நிஷாவை தூக்கி கொண்டு அவளின் அருகில் வந்த வாகியிடமிருந்து குழந்தையை பாதி வாங்கி மீதி அவளிடம் கொடுத்தவள் குழந்தை பெத்தது நான் தான் வாகி ஆனா தாய்பால் கொடுத்து வளத்தது நீ தான் சோ ரெண்டு பேருமே நிஷாக்கு அம்மா தான் என்றதும் அவளை மகிழ்வாக பார்த்த வாகி குழந்தையில் இடது கன்னத்தில் முத்தம் பதிக்க, வலது கன்னத்தில் தியா முத்தமிட, இது ஆர்யனின் திறன்பேசியில் அழகாக பதிந்து கொண்டது.

 

இழந்த அனைத்தும் தன்னவனால் மீட்டதில் அவனையே காதலாக பாவையவள் பார்க்க, ஆடவனோ கண்ணடித்து இதழ் குவித்து ஊதினான்.

 

அதில் சிரித்தவளின் தலை சுற்ற வாகியின் கைக்கு அழுத்தம் கொடுத்து பிடிக்க, அதில் ரேயன் பதறி என்னடி ஆச்சு என்க,

 

அப்போது தான் நிதர்சனம் புரிந்து கண்கள் மின்மின்ன பெண்ணவள் தலை கவிழ்த்து நிற்க, அவளின் செயலில் எல்லாரும் ஒரு மார்க்கமாக பார்த்து வைக்க, தியாவின் நாடியை பற்றி பார்த்த பட்டம்மா அவளின் கன்னத்தை கில்லி வீட்டுக்கு வாரிசு வர போவது என்று பெண்ணவளின் முகத்தில் நெற்றி முறிக்க, துள்ளி குதித்த ரேயன் பொண்டாட்டியை தூக்கி சுற்ற, அனைவரின் கூச்சலில் இறக்கிவிட்டு அசடு வழிய, அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்த ஜோஸப் டேய் மச்சி.. இதுங்க ஒன்னா போகும் போதே நினைச்சேன் போன வாரம் சம்பவத்த பண்ணியிருக்குங்க என்று ருத்ரன் காதை கடிக்க,

 

அவனோ கைகளால் கணக்கு போட்டப்படி மச்சி கூட்டி கழிச்சி பாத்தா ஒரு வாரம் தான் வரும் கணக்கு இடிக்குது.. அப்போ அதுக்கு முன்னமே நடந்த சம்பம் மச்சி என்றவனின் கணிப்பில் எப்புட்ரா என்று வியந்து பார்க்க, அவனோ கெத்து காட்ட, பின் ஆண்கள் அணி சேர்ந்து ரேயனை ஓட்டி ஒரு வழி செய்துவிட்டனர்.

 

அதோடு வாகி ஜோஸப்பிற்கு நண்பர்கள் பட்டாளம் முதலிரவு இரவு ஏற்பாடு செய்ய, அவர்களும் தங்களின் வாழ்க்கையை புதிதாக தொடங்கினர்அதன் பின் அந்த மாதம் முழுவதும் திருமணம் வேலையில் ஈடுப்பட்டதில் ரேயன் தன்னவளுடன் சரியாக நாட்களை செலவிட முடியாமல் போனது, ஆனாலும் அவளின் குழப்பத்தை ஆடவன் கவனிக்கவும் தவறவில்லை.

 

அடுத்த இரு ஜோடிகளின் திருமணம் நாளும் வந்து விட, இரு ஆடவர்களும் தங்களின் இணையின் கழுத்தில் மூன்று முடிச்சியிட, மங்கைகள் இருவரின் கண்களும் ஆனந்தமாய் கண்ணீர் சிந்தியது.

 

அதன் பின் இரவு இரு ஜோடிகளுக்கும் முதலிரவு அறை ரேயன் வீட்டியில் தான் சிறப்பாக முடிய, ஜோடியாக அவர்களின் அறைக்குள் அனுப்பி வைத்தார்கள்.

 

ருத்ரன் – தேவி

 

பட்டு வேஷ்டி சட்டையில் கையை தேய்த்தப்படி எதிர்பார்ப்பு மற்றும் பதற்றம் போட்டி போட அமர்ந்திருந்த ருத்ரன், பால் செம்புடன் உள்ளே வந்த சித்திரா அவனின் நிலையில் தலையில் அடித்து கொண்டு யோவ் மாமா என்னயா இது நான் பண்ண வேண்டியத எல்லாம் நீ பண்ணிட்டு இருக்க.. அடச்சீ என்ன பாரு என்றவளின் பார்வையில் ஆடவனுக்கு வெட்கம் வேறு வந்து விட

 

ஏற்கனவே டென்ஷனா இருக்கு.. இப்படி பாத்து வைக்காதடி என்றதும் தலையாட்டி சிரித்துவிட்டு அவனுடன் உரசி அமர்ந்தவள் யோவ் உன் வெட்கம் கூட அழகு மாமா என்று அவனின் தோலில் சாய்ந்து லவ் யூ மாமா

 

லவ் யூடி சிட்டு என்று அவள் தலையை தடவி கொடுக்க, தொடர்ந்து தடைவியதில் தூக்கம் வருவதை போல் உணர்ந்த சித்திரா வெடுக்கென்று அவனிடமிருந்து தலை நிமிர்த்தி முறைக்க,

 

ஏன்டி மாமாவ ஆசையா பாக்குற

 

யோவ் மாமா எதாவது வண்ணமா பேசிட போறேன்.. இன்னைக்கு என்னன்னு விவரம் தெரியுமா இல்லையா தட்டி கொடுத்து தூங்க வைக்கிற எரும.. உண்மைய சொல்லு உனக்கு இன்னைக்கு என்ன நடக்கும் தெரியுமா

 

தெரியாதே என்று இதழ் பிதுக்கி கூறி பெண்ணவளை ஆழம் பார்க்க,

 

அதில் நொந்து நிமிர்ந்தவள் அவன் கண்கள் பேசும் கதையில் மூச்சு வாங்க, இதழ் கடித்து தலையை கவிழ்த்து விட,

 

அவளின் நாடியை நிமிர்த்தி சிட்டு நீயே ஸ்டார்ட் பண்ணேன் என்றவனுக்கு மோகம் நிரம்பி வழிய,

 

எது நானா என்று முழித்தவள் தயங்கி தயங்கி ஆடவனின் இதழை சிறை செய்ய, அதன் பின் செயலை தனதாக்கி கொண்ட ருத்ரன், பெண்ணவளை தூங்கவே விடாமல் படுத்திவிட்டான்.

****

 

ஆர்யன் – யாழிசை

 

தன்னை பார்வையால் வருடி கொண்டிருந்த ஆடவனின் முன் வந்தவளுக்கு கூச்சம் நாணம் வேறு வந்து இம்சிக்க, வெளியே காட்டிக்கொள்ளாமல் அவனின் அருகில் அமர்ந்து சொல்லுங்க ஆரி என்றதை கேட்டு மண்டையை சொரிந்த ஆர்யன் என்னடி சொல்லணும்.. செய்ய தான செய்யணும் என்க,

 

அதில் செல்லமாக முறைத்தவள் எப்போ பாரு இதை நினைப்பு தானா..

 

இன்னைக்கு அதே நினைக்காம நடக்காம விட்டா தான்டி தப்பு என்றதில் மேலும் பெண்ணவள் முறைக்கவும் என்ன மேட்டர் சொல்லு

 

நீங்க தான ஃபர்ஸ்ட் நைட் அப்போ அன்னைக்கு நடந்தது சொல்லுறேன் சொன்னிங்க.. நான் ஒரு மாசமா மண்ட காஞ்சி போய் இருக்கேன்.. இதுல சித்துவையும் சொல்ல விடாமல் பண்ணிட்டீங்க என்று பொரிந்து தள்ளி மூஞ்சை தூக்கி வைத்து கொள்ள,

 

அதில் பெண்ணவள் இடையில் அழுத்திய ஆர்யன் ஃபர்ஸ்ட் நைட் அப்போ சொல்லுறேன் சொன்ன ஒன் ரவுண்ட் முடிச்சிட்டு சொல்லுறேன் சொன்னேன் சோ என்று அவள் அடுத்து பேசாமல் வாயை அடைத்து மஞ்சத்தில் சரிய,

 

அவனின் சில்மிஷங்களில் கிறங்கி உருகி முணங்கியவள் ஆடவனின் சிகையை அழுத்தி அவனுக்கு இசைந்து கொடுத்து முத்தை எடுக்க அனுமதி கொடுக்க, அவனும் முத்தை எடுத்து விட்டே விலகியிருந்தான்.

 

அவன் விலகியதும் தங்களின் கீழ்யிருந்த விரிப்பிலுள்ள தான் கன்னி கழிந்த அடையாளைத்தை கண்டு கண்கள் கலங்கி மூச்சு வாங்க, அவளை தன் மார்போடு போட்டு தட்டி கொடுக்க, தன்னவன் கூறிய பரிசு இதுதான் என்பதை புரிந்து நிஜ..மா அன்..னைக்கு என்..ன எனக்..கு என்று பாதியாக பேசியவளை தடுத்து அன்று நிகழ்ந்த நிகழவை கூறி முடித்து இது கூட தெரியாம இருந்திருக்கன்னு ஃபீல் பண்ண கூடாதுடி ஏன்னா உன்ன நம்ப வைக்க எல்லாம் பண்ணி இம்ஜெக்சன் போட்டு உங்கள டோட்டலா குழப்பிருக்கான்.. நீ புதுசா வாழ்வோம் என்று முடிப்பதற்குள் புதிதான வாழ்விற்கான ஆட்டத்தை அவளே தொடங்கி விட, அவனும் தன்னவளிடம் சுகமாக தொலைந்தான்.

****

 

வாகினி – ஜோஸப்

 

நிஷாவை மார்பில் தட்டி கொண்டிருந்த ஜோஸப்பின் மேல் தலை சாய்த்தவள் அவனையே விழிகள் அகலாது பார்த்திருக்க, அவள் விழி மொழியில் திணறியவன் அவளை விழக கூறி எழும்பியவன் குழந்தையை ருத்ரன் அன்னை தந்தையிடம் விட்டு மின்னல் வேகத்தில் வந்து கதவை அடைத்து மெத்தையில் பொத்தென்று விழுந்து அவளை இழுக்க,

 

அதனை தடுத்தவள் என்ன பண்ற.. கல்யாணம் வேலை வேற செம டையட் தூங்க போறேன் என்றதில் வடை போச்சே என்று இதழ் பிதுக்கியவன் அப்புறம் எதுக்குடி முழுங்குற பார்வை பார்த்த

 

என் பார்வை அப்படி தான் என்று அவனை தள்ளிவிட்டு முதுகு காட்டி படுத்துவிட, ஆடவன் சிணுங்கி விட்டு தலையணை கட்டியணைத்து உருல,

 

அவனின் செயலில் சிரிக்க, சிரிக்கவா செய்ற என்று கடியானவன் பெண்ணவளின் மேல் படர்ந்து மொத்தமாக கொள்ளையிட்ட, அவளும் தன்னவனின் ஆளுமையில் கிறங்கி தொலைந்து போனாள்.

****

 

ரேயன் – தியா

 

அறைக்குள் இருவரும் தங்களின் இடத்தில் படுத்துக்கொள்ள சற்று நேரத்தில் பெண்ணவளின் திசை கேட்ட, விம்மல் சத்தத்தில் பதறி அவளை இழுத்து தன் மார்பில் புதைத்து என்னடி யாழி

 

தெரியல ரே.. எனக்கு ரொம்ப கில்ட்டாயிருக்கு என்னால எல்லாருக்கும் கஷ்டம்.. என்றவளின் இதழை வன்மையாக கவ்வி விடுவித்தவன் யாழி ஒருத்தர் காதல் இல்லன்னா ஃபோர்ஸ் பண்றது தப்பு.. நீ அவன ஜோஸப் போல தான் பாத்த.. அதோட அவனுக்கு வந்து பிராப்ளம்னால தான் சைக்கோ அதுக்கும் உனக்கும் சம்பதம் இல்ல.. உனக்கு பிரேகணன்ஸி மூட் ஸ்விங்ஸ் நினைக்கேன் அதான் உனக்கு கண்டாத யோசிக்க வைக்க.. இனி யோசிக்க வைக்காம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு என்று நெருங்கியவளின் செயல் புரிந்து தள்ளிவிட்டவள் சரி எப்படி கண்டுபிடிச்ச அவனுங்க டிவின்ஸ் அப்படின்னும் எனக்கு நடந்ததுக்கு அவங்க தான் காரணம்ன்னு எப்படி கண்டு பிடிச்ச

 

ஏன் குழந்தை பிறந்ததும் கேளேன் என்றவனின் மூக்கை செல்லமாக கடித்து வைத்து செல்ல புருஷன்ல சொல்லு

நம்ம தர்மாஜ் வீட்டுக்கு போயிருந்தப்போ அவன் எக்ஸர்சைஸ் பண்ணிட்டு வந்தான்.. அவசரத்துல அவன் முகத்துல மாஸ்க் சரியா ஓட்டிட்டு வரல.. கழுத்து பக்கத்துல ஒரு மாதிரி அது காட்டி கொடுத்திருச்சு.. அப்புறம் தான் அவன் தர்மராஜ் இல்ல அவனுக்குள்ள ஒருத்தன் தெரிஞ்சிது.. அண்ட் டிவி பக்கத்துல சீல்ட்யிருந்துச்சு அதுல ராகவேந்திரன் கெமிக்கல் ரீச்சர்ச்சர் நேம் இருந்துச்சு.. சோ ரெண்டு பேரும் வேற வேற கன்பார்ம் ஆயிடுச்சு.. அப்புறம் ராகவ் பத்தி விசாரிக்கும் போது தான் சர்வா பிரதர் தெரிஞ்சிது.. எப்படியும் ரெண்டு பேருக்கும் கனெக்சன் இருக்க வாய்ப்பு இருக்குன்னு தோணுச்சு

 

ஓ அது ஓகே எனக்கு நடந்ததுக்கு அவனுங்க காரணம் எப்படி கண்டுபிடிச்ச

 

அது மெயில் கண்டுபிடிக்கும் போது நீ அதுல 23/ 08 இத கேட்டு ரொம்ப ஷாக்கான அண்ட் ஃபர்ஸ்ட் டே சார் பாக்கும் போது கூட இந்த டேட் காலண்டர்

பாத்து ஷிவரான சோ சர்வா ஃபிளாஷ்பேக் எல்லாம் சேத்து உனக்கு நடந்தத அவனுங்க காரணம் தோணுச்சு.. சோ அவனுங்ககிட்ட கேட்டேன் என்றவனின் இதழை கவ்வி விடுவித்த தியா லவ் யூ ரே.. அப்போவும் சரி இப்போவும் சரி உன்னோட காதல்ல என்ன ஈர்க்குற

 

லவ் யூ டூ.. என்று கையை பற்றியவன் ஆனா நடந்ததுக்கு நானும் தான காரணம் என்றவனின் இதழில் கைவைத்து தடுத்து இல்ல ரே அப்படியும் நீ என்ன எப்படியோ போன்னு விடல எனக்காக எவ்வளவு பேர ஆக்ட் பண்ண வச்சிருக்க இதுவே போதும் எனக்கு

 

இருந்தாலும் என்றவனை பேச முடியாமல் இதழை கவ்வி கொள்ள, ஆடவன் பெண்ணவளின் செயலை தானதாக்கி கொள்ள, இருவருமே ஒருவருக்குள் ஒருவர் ஆழமாக மூழ்கி கொண்டனர்.

 

முற்றும்

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்