Loading

அத்தியாயம் 30

 

இளமயிலின் முன்பு கவலையுடன் அமர்ந்திருந்தான் அர்ஜூன்.

 

இளங்குமரன் மருத்துவக் கலந்துரையாடல் பணிக்காகச் சென்றிருக்க, இளமயில் தான் மீண்டும் அர்ச்சனா மயங்கியதும் பரிசோதித்து விட்டு வந்தாள்.

 

“என்னாச்சு திடீர்னு அவளுக்கு? அவ இவ்ளோ பயந்து பதட்டப்படுற ஆளே இல்லை மயிலு. எங்களுக்குள்ள எத்தனையோ தடவை சண்டை வந்திருக்கு. நான் திட்டுறதுலாம் காதுலயே வாங்கிக்காம அசால்ட்டா என்னை ஹேண்டில் செய்வா! அவளை இப்படிப் பார்க்க வேதனையா இருக்கு மயிலு” சோகமான குரலில் உரைத்தான் அர்ஜூன்.

 

“நானும் அர்ச்சனாவைப் பார்த்த நாள்லருந்து இதை தான் ஃபீல் செய்றேன் அர்ஜூன். அவங்க முன்னாடி மாதிரி இல்ல. ஒரு வேளை அவங்க குண்டா இருக்கோம்ங்கிற இன்ஃபீரியர் ஃபீல்னால அப்படி இருக்காங்களோனு முதல்ல நினைச்சேன். ஆனா அதையும் தாண்டி எதுவோ இருக்குனு நேத்து நீங்க எல்லாரும் வீட்டுக்கு வந்தப்ப புரிஞ்சிது. வயசாகும் போது வர்ற ஹார்மோன் இம்பேலன்ஸ்னால இப்படி இருக்காங்களோனு நினைச்சு தான் டெஸ்ட் எடுக்க கூட்டிட்டு வந்தேன்” என்ற இளமயில்,

 

“அவங்களுக்கு பிபி, சுகர் எதுவும் இருக்கா?” எனக் கேட்டாள்.

 

இல்லை எனத் தலையசைத்த அர்ஜூன் குற்றவுணர்வில் தத்தளித்தான்.

 

இன்று தான் காலையில் அவளிடம் கோபத்தைக் காட்டி சண்டையிட்டது தான் அவளின் இந்நிலைக்குக் காரணமோ என அவனின் மனசாட்சி அவனைக் கொன்றது.

 

“ஓ” என்றவாறு சில நொடிகள் சிந்தித்த இளமயில் ஒரு தாளில் அர்ச்சனாவுக்குச் செய்ய வேண்டிய பரிசோதனைகளை எழுதி விட்டு, “நர்ஸ்” என்று அழைத்தாள்.

 

செவிலியர் உள்ளே வந்ததும் அந்தத் தாளை அவரிடம் வழங்கி, “அர்ச்சனாகிட்ட ப்ளட் சாம்பிள்ஸ் எடுத்து லேப்ல கொடுத்து இந்த டெஸ்ட்லாம் எடுக்கச் சொல்லுங்க. எனக்கு ஒரு மணி நேரத்துல ரிப்போர்ட் வேணும்” என்று சொல்லி அனுப்பினாள்.

 

“என்னாச்சு மயிலு? அர்ச்சனாவுக்கு எதுவும் பெரிய ஹெல்த் இஷ்யூ இருக்கும்னு நினைக்கிறியா?” பதட்டத்துடன் கேட்டான் அர்ஜூன்.

 

“ரிலாக்ஸ் அர்ஜூன். அதெல்லாம் எதுவும் இல்ல” என்ற இளமயில்,

 

“அவங்களுக்கு எப்ப லாஸ்ட் பீரியட்ஸ் வந்துச்சுனு தெரியுமா அர்ஜூன்” எனக் கேட்டாள்.

 

“சாரி! டேட் சரியா தெரியலை” என்றவன் தடுமாற்றத்துடன் உரைக்க,

 

“இட்ஸ் ஓகே. அவங்களுக்கு மாசாமாசம் சரியா பீரியட்ஸ் வந்துடுமா இல்ல இர்ரெகுலர் பீரியட்ஸ்ஸா?” எனக் கேட்டாள்.

 

“இல்ல அவளுக்கு ரெகுலர் பீரியட்ஸ் தான். கரெக்ட்டா மாசமானா டைமுக்கு வந்துடும். கல்யாணமாகி இத்தனை வருஷத்துல அவளுக்கு பீரியட்ஸ் பிராப்ளம்லாம் எதுவும் வந்ததே இல்லை” என்றான்.

 

யோசனையில் இளமயிலின் புருவங்கள் இடுங்க, “ஆர் யூ ஷ்யர் (Are you sure)?” எனக் கேட்டாள்‌.

 

“யா ஐம் ஷ்யர் மயிலு (Yeah I’m sure). அவளுக்கு இர்ரெகுலர் ஆனதே இல்ல” என்றான்.

 

“அர்ச்சனாக்கு மூட் ஸ்விங்க்ஸ், டக்கு டக்குனு மூட் சேஞ்ச் ஆகுறது, திடீர்னு கோபம் வர்றது, சோர்வு, எரிச்சல், எதுலயுமே கவனம் செலுத்த முடியாம கஷ்டப்படுறதுனு இப்படிப் பிரச்சனைகள்லாம் இருக்கா அர்ஜூன்?” எனக் கேட்டாள்.

 

சில நொடிகள் யோசித்தவனாய், “ஆமா மயிலு. நேத்து நைட் அவளே என்கிட்ட சொன்னா! என்னடா வாழ்க்கை இதுனு வெறுப்பா இருக்கு. எல்லாம் இருந்தும்  எதுவுமே இல்லாத மாதிரி லோன்லியா ஃபீல் ஆகுதுனு சொன்னா. சட்டு சட்டுனு அழுதுடுறா! என்கிட்ட எரிஞ்சி விழுந்து சண்டைப் போடுறா! மென்ட்டலி அவ இவ்ளோ வீக்கான ஆளு இல்ல மயிலு.

 

நான் ரிசார்ட் ஸ்டார்ட் செய்யறதுக்கு முன்னாடி பெங்களூர் ஹோட்டல்ல வேலை பார்த்தேன்னு உனக்குத் தெரியும்ல. அப்பலாம் மாசத்துக்கு ரெண்டு வாரம் அவுட் ஆஃப் ஸ்டேஷன்ல இருக்க மத்த பிரான்ச் ஆபிஸ் பார்க்க போய்டுவேன். இவ தான் தனியா பசங்களையும் கவனிச்சிக்கிட்டு அவளோட சிங்கிங் ஷோஸையும் பார்த்துக்கிட்டு இருந்தா! அவளோட அப்பா அம்மா வீட்டுக்குப் போகச் சொல்லி சொன்னாலும் கேட்காம தனியாவே எல்லாத்தையும் பார்த்துப்பா! அதனால தான் சென்னை வந்த பிறகு அவ பேமிலியைக் கவனிச்சிப்பானு விட்டுட்டு நான் என் வேலையைப் பார்த்துட்டு இருந்தேன்” என்றான்.

 

நெற்றிச் சுருங்க சில நிமிடங்கள் யோசித்தவளாய், “என்னடா வாழ்க்கை இதுங்கிற விரக்தி, எல்லாரும் இருந்தும் யாருமே இல்லனு லோன்லியா ஃபீல் ஆகுறது எல்லாம் இப்ப வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் இருக்க பொதுவான பிரச்சனை தான் அர்ஜூன். இப்ப சின்ன பசங்களுக்கே இப்படிலாம் மனநிலை மாறுதல்கள் ஏற்படுது.

 

ஆனா அர்ச்சனாக்கு அன்பான கணவன், குழந்தைகள், குடும்பம், தேவைக்கேத்த பணம், ஆடம்பர வாழ்க்கைனு எல்லாமே இருந்தும், அவங்களே தனியா எல்லாத்தையும் ஹேண்டில் செய்ற தைரியமும் நிமிர்வும் இருந்தும் ஏன் இப்படி அவங்களுக்கு ஃபீல் ஆகுதுனு யோசிச்சீங்களா அர்ஜூன்” எனக் கேட்டாள் இளமயில்.

 

“நேத்து அவ அப்படிச் சொன்ன பிறகு யோசிச்சேன் மயிலு. அவளோட சிங்கிங் பேஷனை அவ விட்டனால இப்படி அவளுக்கு ஃபீல் ஆகுது போலனு நினைச்சேன். பிள்ளைகளை என் கன்ட்ரோல்ல எடுத்துக்கிட்டு அவளை கான்சர்ட்ஸ்க்கு அனுப்பனும்னு பிளான் செஞ்சேன். இன்னிக்கு இதைப் பத்தி தான் உன்கிட்ட பேசனும்னு நினைச்சிட்டு இருந்தேன் மயிலு. அதுக்குள்ள நிவி பிரச்சனை முன்னாடி வந்துடுச்சு” என்றான் அர்ஜூன்.

 

பெருமூச்செறிந்தவளாய் அர்ஜூனைப் பார்த்த இளமயில், “அர்ச்சனாவோட மன உடல் மாற்றங்களை வச்சி பார்க்கும் போது ஷூ இஸ் இன் பெரிமெனோபாஸ் பேஸ்னு (She is in Peri Menopause Phase) தோணுது அர்ஜூன்” என்றாள்.

 

புரியாத பாவனையில் அவன் அவளைப் பார்க்க விளக்க ஆரம்பித்தாள் இளமயில்.

 

“மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய காலம் தான் பெரிமெனோபாஸ்.

 

ஈஸ்ட்ரோஜன் அண்ட் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் ஏற்ற இறக்கமாகத் தொடங்கும். அப்ப கருப்பைகள் படிப்படியாக குறைவான ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்ய தொடங்கும். இது பொதுவா நாற்பதுகளின் முற்பகுதிலருந்து நடுப்பகுதி வரைல தான் நடக்கும். ஆனா சிலருக்கு இன்னும் முன்னதாகவே அறிகுறிகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கு.

 

பீரியட்ஸ் ரெகுலரா இருக்கும், ஹார்மோன்ஸ் கூட சரியா தான் இருக்கும். இதை ப்ளட் டெஸ்ட்ல கூட கண்டுபிடிக்க முடியாது.

 

சோர்வு, மனநிலை மாற்றங்கள், கவனம் செலுத்துவதில் சிரமங்கள்னு தொடர்ச்சியா ஏதாவது பிரச்சினைகளை அனுபவிக்கிறதா சொல்லுவாங்க ஆனா அவங்க உடம்புல குறிப்பிடத்தக்க ஹார்மோன் மாற்றமோ, வாழ்க்கை முறை மாற்றமோ இல்ல நோயோ இருக்காது.

 

மாதவிடாய் நிக்கப்போகுது அப்படிங்கிறதுக்கான முதல் அறிகுறில ஒன்னு உணர்ச்சிவசப்படுவது தான் அர்ஜூன். சின்ன சின்ன விஷயத்துக்கும் அழுகை மன உளைச்சல்னு ஏன் அழுறோம் எதுக்கு அழுறோம்னு தெரியாமலே அழுவாங்க.

 

பல பெண்கள் எந்தக் காரணமும் இல்லாம அதிக எரிச்சல், கவலை, மனச்சோர்வை ஃபீல் செய்வாங்க.

 

நாற்பதுகளில் உள்ள பல பெண்களின் வயிறு எடை அதிகரிக்கிறதுக்கும் இது தான் காரணம். அவங்களோட உணவு அளவுகள்ல எந்தவிதமான மாறுதல்களும் இல்லாம இருந்தாலும் கூட உடல் எடை ஏறிட்டே போகும். அதுவே ஒரு பக்கம் அவங்களுக்கு ஸ்ட்ரெஸ் கொடுக்கும். அதுக்காக டயட் இருந்து சாப்பிடாம இருந்து என்னென்னமோ செய்வாங்க. ஒன்னும் வேலைக்கு ஆகாது” என்றாள்.

 

“ஆமா அர்ச்சனாவும் உடம்பு குறைக்க நிறைய முயற்சி செஞ்சா. ஒரு மாசத்துக்கு ஒரு கிலோ கூட குறையாம போகவும் கடுப்பாகி விட்டுட்டா! எனக்கு நீ எப்படி இருந்தாலும் பிடிக்கும் அச்சுமானு நான் தான் அவளை அதுக்குப் பிறகு எதுவும் செய்ய விடலை” என்ற அர்ஜூன்,

 

“இந்தப் பிரச்சினையை எப்படி சரி செய்றது மயிலு?” எனக் கேட்டான்.

 

“இது நீங்க நினைக்கிற மாதிரி நோயெல்லாம் கிடையாது அர்ஜூன். இது ஒரு உடல்நிலை மாற்றம். அவ்ளோ தான். இதை எப்படி ஹேண்டில் செஞ்சி கடந்து வர்றதுனு தான் பார்க்கனும்” என்றவள்,

 

“தினமும் அவங்களோட மனநிலை மாறுதல்களை ஒரு பேப்பர்ல எழுத சொல்லுங்க. எப்பலாம், எந்த வேலை செய்யும் போதெல்லாம், எந்த நேரத்துலலாம் அவங்க இப்படி உணர்வுநிலைல மாற்றங்களை உணர்றாங்கனு அந்த பேட்டர்ன்னை கண்டுபிடிச்சி அந்த நேரத்துல அதை வேற விதமா எப்படி ஹேண்டில் செய்றதுனு பார்க்கனும். இது ஒரு வகையான ட்ரீட்மெண்ட்.

 

இன்னொரு பொதுவான ட்ரீட்மெண்ட் என்னன்னா அவங்களோட ரெகுலர் ரொட்டீன் வேலையை மாத்துறது. இடத்தை மாத்துறது. ஊரை மாத்துறது.

 

அவங்க ஷெட்யூலை மாத்துங்க. நீங்க செய்றது எல்லாம் அவங்க செய்யட்டும். அவங்க செய்றதுலாம் நீங்க செய்யுங்க. அதுவும் கொஞ்ச நாள்ல அவங்களுக்கு அலுத்துப் போகும். அப்ப வேற ஏதாவது அவங்களுக்குப் பிடிச்சதை செய்ய விடுங்க. மெனோபாஸ் பேஸ்ஸை கடந்த பிறகு அவங்க கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆகிடுங்க” என்றாள் இளமயில்.

 

“ஹ்ம்ம்” என்று பெருமூச்செறிந்தவன்,

 

“அவளைக் கொஞ்ச நாள் பெங்களூருக்கு அனுப்பலாமானு கூட நேத்து யோசிச்சேன். அவளோட அப்பா அம்மா கூட கொஞ்ச ரிலாக்ஸ்டா இருந்துட்டு வரச் சொல்லலாமானு யோசிச்சேன். பிள்ளைங்களை விட்டு அவ எப்படி இருப்பானு நினைச்சிட்டு விட்டுட்டேன்” என்றான்.

 

அவ்வாறு அவன் சொன்னதும் மின்னலென இளமயிலுக்கு யோசனை ஒன்று தோன்ற,

 

“அர்ஜூன் எனக்கொரு ஐடியா தோணுது?” என்றாள்.

 

“என்ன மயிலு?” என்றவன் கேட்க,

 

“இல்ல அதை சொல்றதுக்கு முன்னாடி, நீங்க நிவி லவ் பத்தி என்ன நினைக்கிறீங்க? அதை சொல்லுங்க?” எனக் கேட்டாள்.

 

“இதுல நினைக்க என்ன இருக்கு மயிலு! இது இந்த வயசுல வர்ற ஈர்ப்பு இன்பாக்சுவேஷன். இதெல்லாம் பெரிசா எடுத்துக்காம அந்தப் பையன்கிட்ட இவளை பேச விடாம ஒதுங்கி இருக்க வைக்கனும்” தீவிரமான குரலில் உரைத்தான் அர்ஜூன்.

 

“நீங்க சொன்னதும் உங்கப் பொண்ணு கேட்பானு நினைக்கிறீங்களா அர்ஜூன்?” சிரிப்புடன் கேட்டாள் இளமயில்.

 

“அவ கேட்குறாளோ இல்லையோ நான் கேட்க வைப்பேன். அந்தப் பையன் குறுக்க வந்தா அவன் முகறையை பேத்துடுவேன்” என்று ஆவேசமாக உரைத்தான் அர்ஜூன்.

 

“அய்யோ அர்ஜூன் அப்படிலாம் எதுவும் செஞ்சி வச்சிடாதீங்க. இதுவே அவங்களை டிரிகர் செஞ்சிடும்” என்றவள்,

 

“இதை வேற மாதிரி ஹேண்டில் செய்யனும் அர்ஜூன். உங்க கோவத்தை ரெண்டு பேர்கிட்டயும் காண்பிக்காதீங்க” என்றாள்.

 

“அப்புறம் அவங்க காதலை வளர்த்து கல்யாணம் செஞ்சி வைக்கச் சொல்றியா?” எனக் கோபத்துடன் கேட்டான்.

 

“ஏன் அர்ஜூன்‌ அவங்க பத்து வருஷத்துக்கு மேலயும் இப்படியே ஒருத்தருக்கொருத்தர் லவ் செஞ்சிட்டு இருந்தா கல்யாணம் செஞ்சி வைக்க மாட்டீங்களா?” எனக் கேட்டாள்.

 

“அந்தளவுக்கு இவங்க லவ் ஸ்ட்ராங்க்னு சொல்றியா மயிலு?” புருவம் சுருங்கக் கேட்டான் அர்ஜூன்.

 

“அது ஸ்ட்ராங்கா இல்லையானு காலம் தான் சொல்லனும். ஆனா அதுக்குள்ள நாம டிசைட் பண்ணி பிரிச்சி விட வேண்டாம்னு தான் சொல்றேன். அதுக்காக இந்த வயசுல சேர்த்து வைக்கவும் வேண்டாம்” என்றவள் சொல்லவும்,

 

“நல்லா குழப்புற மயிலு” கடுப்புடன் உரைத்தான் அர்ஜூன்.

 

வாய்விட்டுச் சிரித்த இளமயில், “காதல்னு வந்த பிறகு ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருக்க வேண்டாம். ஆனா அதே நேரம் அவங்களை முழுசா பிரிக்கவும் செய்யாம லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்ல விட்டுருவோம்.

 

அர்ச்சனாவோட உடல்நிலையை சொல்லி அடுத்த மூனு வருஷம் ஸ்கூல் முடியுற வரைக்கும் நிவியை அர்ச்சனா கூட பெங்களூருக்கு அனுப்பி அங்கே ஸ்கூல் படிப்பை தொடர வையுங்க. மூனு வருஷம் கழிச்சி காலேஜூக்கு எங்க படிக்க போவாங்கனு நமக்கே தெரியாதே. இந்த மூனு வருஷத்துல அவங்க காதல் என்ன ஆகுதுனு பார்ப்போம்” என்றாள் இளமயில்.

 

அமைதியாக சிந்தித்திருந்தான் அர்ஜூன்.

Click on a star to rate it!

Rating 3.3 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்