Loading

காதல் – 70

 

சுலோச்சனாவை பற்றிய உண்மைகள் அனைத்தையும் தேவராஜ் சுலோச்சனாவிடம் கூறவும் அவர் அதிர்ந்து போய் விட்டார்……

 

அஸ்வதி அவளின் நண்பர்களை கண்டு சந்தோஷமாக இருந்தாள்……

 

அஸ்வதி மற்றும் அவளின் காதலன் மற்றும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அவர்களின் நண்பனான சூர்யாவை காண மதுரைக்கு சென்றனர்…….

 

அவர்கள் அனைவருக்கும் சூர்யாவை பார்க்க போகிறோம் என்று சந்தோஷமாக சென்றனர்…….

 

விஹான் ,அஸ்வதி, வள்ளி ,மதன் ஹர்ஷா ஆகிய ஐவருக்கும் கார் ஓட்டத் தெரிந்ததால் அவர்கள் அனைவரும் மாறி மாறி கார் ஓட்டி ஏழு மணி நேர பயணத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் மதுரையை அடைந்தனர்……

 

துவாரகா சூர்யாவோட கடை எங்க இருக்குது?  நம்ம எல்லாரும் அவனோட கடைக்கு போய் பிரச்சனை பண்ற மாதிரி அவன பிரான்ங்க் பன்னுவோம் சரியா??

 

அஸ்வதியின் பிளானிற்கு அனைவரும் சரி என்று தலையை அசைத்தனர்……

 

முதலில் சூர்யாவின் கடைக்குள் ஹர்ஷா சென்றான் அவன் அங்கிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு சென்று சூர்யாவிடம் , சார் கடையில நல்ல ப்ராடக்ட் வச்சிருக்க மாட்டீங்களா? எல்லாம் எக்ஸ்பயராகி இருக்குது……

 

சாரி சார் தெரியாம தப்பு நடந்திருக்கும் நான் உங்களுக்கு வேற ப்ராடக்ட் எடுத்து தரேன்……

 

என்ன சார் இவ்வளோ அசால்ட்டா சொல்றீங்க? நான் படிச்ச ஆளு அதனால போச்சு இதே ஒரு படிக்காத ஆள் எடுத்து அதை சாப்பிட்டு அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்ணுவீங்க? இப்படியா கேர்லெசா இருப்பீங்க? என்று அவன் சூர்யாவை நன்கு திட்டிவிட்டு வந்தான்…….

 

அடுத்து வள்ளி உள்ளே சென்று ஒரு சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு சூர்யாவிடம் சென்று சார் என்ன சார் எந்த சிப்ஸ் பாக்கெட் எடுத்தாலும் இப்படி மேலே கிழிஞ்சு போய் இருக்குது? என்ன சார் கடை நடத்துறீங்க? என்று அவள் பங்கிற்கு சூர்யாவை நன்கு திட்டிவிட்டு சென்றாள்…….

 

எப்படி ஒவ்வொருவராக கடைக்குள் சென்று ஒவ்வொரு பொருளாக அவனிடம் எடுத்துக் கொண்டு சென்று அது சரி இல்லை இது சரி இல்லை என்று புகார் கூறுவது போல அவனை திட்டி தீர்த்தனர்……..

 

சூர்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை அவன் தன்னுடைய கடையில் உள்ள அனைத்து பொருட்களையும் சரிபார்த்தான் அனைத்தும் சரியாக தான் இருந்தது இருந்தாலும் அவர்கள்  இப்படி புகார் கூறுகிறார்களே என்று அவனின் தலை சுற்றியது அவன் அப்படியே தலையில் கைவைத்தபடி அமர்ந்து விட்டான்……

 

அப்பொழுது அஸ்வதி மற்றும் அவளின் படை அங்கே வந்தது……

 

ஹலோ…..

 

சாரி மேடம் நா உங்களுக்கு வேற நல்ல ப்ராடக்ட் எடுத்து தரேன், என்னோட கடையை பத்தி வெளிய தப்பா ரிவ்யூ கொடுத்துடாதீங்க……

 

அப்படியா?

 

ஆமா மேடம்…..

 

சரி அப்போ எனக்கு பால் பன் வேணும் சீக்கிரம் வாங்கி தா போ……

 

மேடம் இது சூப்பர் மார்க்கெட் இங்கே பால் பண் எல்லாம் கிடைக்காது…..

 

டேய் சூர்யா அஸ்வதி பால்பன் கேட்டா வாங்கி தர மாட்டியா ? என்று துவாரகா அங்கே வந்தாள்……

 

அஸ்வதியா? ஹே  துவாரகா நீ  எப்போ இங்க வந்த? இது அஸ்வதியா?

 

ஆமாடா தொழிலதிபரே இங்க நிக்கிறது எல்லாருமே நம்ம பிரண்ட்ஸ் இது நம்ம  அஸ்வதி , இது நம்ம அஸ்வதியோட காதல் கணவர் விஹான்,  இது நம்ம வள்ளி, மதன் ,ஹர்ஷா என்று துவாரகா அனைவரயும் அறிமுகப்படுத்த சூர்யா மகிழ்ச்சியில் அனைவரையும் கட்டிப்பிடித்துக் கொண்டான்…….

 

டேய் எல்லாரும் எப்படிடா இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?

 

ரொம்ப நல்லா இருக்கோம்டா, என்னடா தொழிலதிபர் ஆகிட்ட போல??

 

உங்களுக்கே தெரியும் எனக்கு சூப்பர் மார்க்கெட் திறக்கனும்ன்னு ஆசைன்னு , கடவுள் அருளால மதுரையில ரெண்டு பிரான்ச் இப்போதைக்கு வச்சிருக்கேன்……

 

உன்னுடைய ரெண்டு பிரான்ச் இன்னும் பத்து பதினைந்து பிரான்சா மாறும் பாருடா……..

 

அஸ்வதி பாப்பா உன்னோட வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் சரிடா உங்களுக்கு கடையில் என்ன தேவைன்னாலும் தாராளமா எடுத்துக்கோங்க ……..

 

எங்களுக்கு எங்களுடைய சூரியா போதும் வேற எதுவும் வேணாம் என்று துவாரகா மற்றும் வள்ளி அவனை கட்டி பிடித்துக் கொண்டனர்……

 

பிறகு நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தனர் அப்பொழுது ஒரு பெண் அழுது கொண்டே சூர்யாவை நோக்கி வந்தாள்……

 

அந்த பெண்ணை பார்த்ததும் சூர்யாவும் பதறிப் போய் அவளிடம் ஓடினான்…….

 

துவாரகா யாருடி இந்த பொண்ணு? சூர்யாவை பாத்து அழுதுட்டே ஓடி வருது இவனும் அந்த பொண்ண  பாத்து பதறிப்போய் ஓடுறான்……

 

அந்த பொண்ணு பேரு சந்தியா எங்க கூட தான் ஸ்கூல் ஒன்னா படிச்சா அப்பவே இருந்து ரெண்டு பேரும் லவ் பண்றாங்க ஆனா சந்தியா வீட்டுல சூர்யாவுக்கு அப்பா அம்மா யாரும் இல்லன்னு ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க சந்தியா வீட்டுல சம்மதிக்க மாட்டேங்கிறாங்க அதான் அந்த பொண்ணு அழுதுட்டு ஓடி வருது போல……..

 

அதான் சூர்யாவுக்கு நம்ம எல்லாரும் இருக்கோமே, நம்ம எல்லாரும் சேர்ந்து சூர்யா லவ் பண்ற பொண்ணோட வீட்டுக்கு போய் பொண்ணு கேப்போம்……

 

அஸ்வதி அதெல்லாம் சரியா வருமா??

 

எல்லாம் சரியா வரும் நம்ம எல்லாரும் இப்போ சூர்யாவுக்கு பொண்ணு கேட்டு சந்தியா வீட்டுக்கு கிளம்பறோம் சரியா? யாரெல்லாம் என் கூட வாராங்க?  என்று அவள் கேட்கவும் முதலில் விஹான் கை தூக்கினான் பிறகு துவாரகாவை தவிர அனைவரும் கை தூக்கினார்கள்……

 

ஹே துவாரகா நீ மட்டும் ஏன் கை தூக்காம இருக்க ?எங்க கூட நீ வரலையா?

 

எனக்கும் உங்க கூட வரணும்னு ஆசைதான் ஆனா சந்தியா வீட்டுல நீங்க என்ன ஆளுங்க? நீ எவ்வளவு சொத்து வச்சிருக்கீங்கm அப்படின்னு கேட்டா என்ன பண்றது??

 

துவாரகா இதெல்லாம் நம்ம சந்தியா வீட்டுக்கு போய் யோசிச்சுக்கலாம் , அப்புறம் சந்தியா வீட்டில இன்னும் அவங்க பிரச்சனை பண்ணா நம்ம கிட்ட தான் ஐஏஎஸ் ஆபீஸர்ஸ் ரென்டு பேர் இருக்காங்களே அவங்க பார்த்துப்பாங்க என்ன மதன் வள்ளி ? என்று அஸ்வதி அவர்கள் இருவரையும் பார்த்து கண்ணடித்தாள்……

 

நாங்க பாத்துககுறோம் அஸ்வதி என்று மதன் மற்றும் வள்ளி கூறவும் நண்பர்கள் அனைவரும் சூர்யா மற்றும் சந்தியா  பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு சென்றனர்…….

 

அங்கு சந்தியா சூர்யாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள்………

 

சந்துமா அழாத உங்க அப்பா ஏன் இப்படி பண்றாங்க?

 

என்னடா பண்ணாங்க சந்துமாவோட அப்பா? என்று அங்கு அஸ்வதி மற்றும் அஸ்வதியின் நண்பர்கள் வந்தனர்….

 

அஸ்வதி பாப்பா ……..

அது வந்து……

இவ சந்தியா…..

என்னோட….

கா…..

தலி….

 

தெரியும்டா துவாரகா எல்லாம் சொன்னா , இங்க பாருங்க சந்தியா உங்களுக்கு எங்க சூர்யாவ ரொம்ப புடிச்சிருக்கா?

 

ஆமா , நீங்க?

 

என்னோட பேரு அஸ்வதி சூர்யாவோட பெஸ்ட் பிரண்ட்,  நாங்க எல்லாரும் இவனோட பெஸ்ட் பிரண்ட்ஸ் என்று அஸ்வதி அங்கிருந்த அவளின் அனைத்து நண்பர்களையும் சந்தியாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் பிறகு அவள் நண்பர்களுடன் சேர்ந்து போட்ட பிளானை அவளிடம் கூறினாள்……

 

அஸ்வதி எங்க அப்பா ஒத்துக்கலன்னா என்ன பண்றது??

 

வேற என்ன பண்றது உங்க ரெண்டு பேரையும் தூக்கிட்டு போய் கோவில்ல வச்சு வள்ளி மதன் தலைமையில் கல்யாணம் பண்ணி வச்சுட வேண்டியது தான் என்று அஸ்வதி கூறவும் மதன் மற்றும் வள்ளி அதிர்ச்சியாகி அவளைப் பார்த்தனர்…..

 

அடியே எதுக்குடி எங்களை இதுக்குள்ள கோர்த்து விடுற?

 

அது ஒன்னும் இல்லடா மதனா ஒரு ரெண்டு பேர் சந்தோஷமாக வாழ்றதுக்கு இன்னொரு ரெண்டு பேரு சாகலாம் தப்பில்லை என்று அஸ்வதி கூறிவிட்டு விஹான் பின்னால் ஒளிந்து கொண்டாள்……..

 

விஹான் தள்ளுடா நல்லி எலும்பு சைஸ்ல இருந்துகிட்டு என்ன பேச்சு பேசுறா வாடி உன் மண்டையை உடைச்சி விடுறேன் என்று மதன் அஸ்வதியை பிடிக்க பார்க்க அஸ்வதியை விஹான் அவன் பின்னால் மறைத்துக் கொண்டான்……

 

சரி சரி விளையாட்டு போதும் நம்ம எல்லாரும் சேர்ந்து இப்போ சந்தியா வீட்டுக்கு போவோம் சந்தியா அப்பாகிட்ட பேசுவோம் புரியுதா ?அங்க போய் இந்த மாதிரி குரங்கு சேட்டை எல்லாம் பண்ண கூடாது புரியுதா? அஸ்வதி , மதன் என்று வள்ளி கூறவும் அவர்கள் அனைவரும் சரி என்று கூறிவிட்டு சந்தியாவின் வீட்டிற்கு சென்றனர்……

 

அவர்கள் அனைவரும் சூர்யாவின் காரில் போய் சந்தியாவின் வீட்டிற்கு முன்பு இறங்கினார்கள் , சந்தியாவின் அப்பா வீட்டின் முன்பு உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தார் அவர் சூர்யாவை பார்த்ததும் கோபமாக தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த டியூப்பை கீழே போட்டுவிட்டு அவனை நோக்கி கோபமாக வந்தார் ஆனால் சூர்யாவின் அருகே வரவர  சந்தியா அப்பாவின் கோபம் படிப்படியாக குறைந்தது சூர்யாவிற்கு அருகில் வந்து சூர்யா பின்னால் நிற்கும் அஸ்வதியை பார்த்து சிரித்தார்………

 

வாங்க அஸ்வதி கண்ணா எப்படி இருக்குற?

 

நல்லா இருக்கிறேன் டாடி நீங்க எப்படி இருக்கீங்க?

நீங்க லாயர் தானே ?

இந்த வீட்டுல செடிக்கு தண்ணி பாய்ச்சிட்டு இருக்கீங்க ?

 

அஸ்வதி அவ்வாறு கேட்கவும் சூர்யா அவளின் காதுகளில் இதுதான் சந்தியாவோட அப்பா என்று கூறினான்…..

 

என்னம்மா இந்த பையன உனக்கு தெரியுமா??

 

ரொம்ப நல்லா தெரியும் டாடி சூர்யா என்னோட அண்ணன் மாதிரி ,  மாதிரி எல்லாம் இல்லப்பா அண்ணனே தான் இவன் என்னோட பெஸ்ட் பிரண்டும் கூட……

 

சந்தியாவின் அப்பா ஒரு முறை யோசித்து விட்டு அவர்கள் அனைவரையும் தன்னுடைய வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்…….

 

மீனாட்சி நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வந்துருக்காங்க பாருமா எல்லாருக்கும் டீ போட்டு எடுத்துட்டு வா என்று அவர் கூறவும் அவரின் மனைவி மீனாட்சி அவர்கள் அனைவருக்கும் வணக்கம் கூறிவிட்டு டீ போட சென்றார்…….

 

அஸ்வதி அன்னைக்கு மட்டும் நீ என்ன காப்பாத்தலைன்னா  இந்நேரம் என்னோட ஆன்மா இந்த வீட்டை சுத்திகிட்டு இருந்திருக்குமா உனக்கு ரொம்ப தேங்க்ஸ்ம்மா……..

 

தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு சுந்தர் அப்பா?அப்பா எனக்கு சுத்தி வளைத்து பேச தெரியாது , இது என்னோட அண்ணன் அண்ட் பெஸ்ட் பிரண்ட் சூர்யா மதுரையில ரெண்டு இடத்துல சூப்பர் மார்க்கெட் சொந்தமாக வைச்சிருக்குறான் இவனுக்கு அப்பா அம்மா தான் கிடையாது ஆனா பிரண்ட்ஸ் தங்கச்சின்னு நாங்க இருக்குறோம் என்று அவளின் நண்பர்களை சுந்தர் அப்பாவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள்……

 

டாடி இது விஹான் இவங்க என்ன மாதிரி தான் காலேஜ்ல ப்ரொபஸரா இருக்குறாங்க அப்புறம் டூரிஸ்ட் பிசினஸ் பண்றாங்க இவங்களத்தான் நா கல்யாணம் பண்ணிக்க போறேன் அப்புறம் இது மதன் ,  வள்ளி இவங்க ரெண்டு பேரும் ஐஏஎஸ் ஆபீஸர்ஸ், அப்புறம் இது ஹர்ஷா இவன் காலேஜ் ப்ரொபஸரா இருக்குறான் , அப்புறம் இது துவாரகா இவளும் காலேஜ் ப்ரொபசரா இருக்கிறா , நாங்க எல்லாரும் சூர்யாவோட சொந்தக்காரங்க, கூட பிறந்தவங்க பிரண்ட்ஸ், எல்லாம் நாங்க தான் எங்கள நம்பி சந்தியாவை எங்க சூர்யாவுக்கு கல்யாணம் பண்ணி குடுங்க சூர்யா சந்தியாவை ரொம்ப நல்லா  பார்த்துப்பான்…….

 

அஸ்வதி அவ்வாறு பேசவும் சுந்தர் அப்பா சிறிது நேரம் யோசித்து விட்டு சரி அஸ்வதி கண்ணா சூர்யாவ என்னோட மாப்பிள்ளையா நான் ஏத்துக்குறேன் என் பொண்ணுக்கு என்ன செய்யனுமோ அத நா செஞ்சிடறேன் என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரின் மனைவி மீனாட்சி அவர்கள் அனைவருக்கும் டீ எடுத்து வந்தார் …….

 

அம்மா டீ ட்ரேய நீங்க சந்தியா கையில கொடுங்க இப்ப நாங்க எல்லாரும் சந்தியாவை பொண்ணு பார்க்க வந்திருக்கிறோம் என்று அஸ்வதி கூறவும் மீனாட்சியம்மா சிரித்துக்கொண்டே டீ ட்ரேயயை சந்தியா கையில் கொடுத்தார் சந்தியா வந்திருந்த அனைவருக்கும் டீ கொடுத்தாள்……….

 

சார்  நீங்க என்னோட  சந்தியாவ எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தா மட்டும் போதும் அவளுக்காக நீங்க எதுவும் செய்ய வேணாம் அவள நா ராணி மாதிரி பார்த்துக்கிறேன்…….

 

அது சரி வராது சூர்யா தம்பி சந்தியா எனக்கு ஒரே பொண்ணு எங்களுக்கு அப்புறம் எங்களோட சொத்து பத்து எல்லாம் அவளுக்கு தான் அதான் அவரோட கல்யாணத்தை நான் ஜாம் ஜாம்ன்னு  நடத்தணும்னு விரும்புறேன்…….

 

சுந்தரப்பா எனக்கு வரதட்சணை வாங்குவதும் கொடுக்கிறதும் பிடிக்காது அதனால இதெல்லாம் வேணாமே……..

 

அஸ்வதி கண்ணா இது வரதட்சணை இல்லம்மா என்னோட பொண்ணுக்கு நா கொடுக்கிறது……

 

அவர் அவ்வளவு  இறங்கி கூறவும் , சரிப்பா உங்க இஷ்டம் போல செய்யுங்க என்று அஸ்வதி கூறிவிட்டாள்……..

 

மீனாட்சி அந்த கேலண்டர் எடுத்துட்டு வாம்மா என்று கூறவும் மீனாட்சியம்மா கேலண்டர் எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார்…….

 

கன்னுகளா அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் நல்ல நாள் வருது அதுலயே நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாமா?உங்களுக்கு பிரச்சனை இல்லையே?

 

எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லப்பா  , அன்னைக்கே சூர்யா சந்தியா கல்யாணத்தை வச்சுக்கலாம்…..

 

நல்லதும்மா , மீனாட்சி மதிய சாப்பாடு ரெடி ஆயிடுச்சாம்மா?

 

ஆமாங்க ரெடியா இருக்கு……

 

அப்போ வாங்க கன்னுங்களா எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் …….

 

இல்லப்பா அது வந்து……

 

வாங்கடா கண்ணுங்களா எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று அவர் அனைவரையும் சாப்பிட அழைத்து சென்றார்…….

 

பிறகு அவர்கள் அனைவரும் சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்……..

 

விஹானாவிற்கு சென்னையில் நர்சிங் போஸ்டிங் போட அவள் சென்னைக்கு வந்து அஸ்வதி வீடு அட்ரஸ் தேடி அவள் வீட்டிற்கு வந்து விட்டாள் ஆனால் அஸ்வதி தான் இப்பொழுது மதுரையில் இருக்கிறாளே…….

 

விஹானா , அஸ்வதியின் வீட்டு கேட்டில் போட்டிருந்த பூட்டை பிடித்து இழுத்துக் கொண்டே அந்தப் பக்கமாக திரும்ப நின்று அஸ்வதிக்கு போன் செய்து கொண்டு இருந்தாள்………

 

அப்பொழுது அந்த பக்கமாக வந்த விக்ரம் கருப்பு கலர் பர்தா அணிந்த பெண் ஒருத்தி தன்னுடைய தங்கையின் வீட்டின் பூட்டை பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் திருடி என்று தவறாக நினைத்துக் கொண்டு அவளை பின்னால் இருந்து கழுத்தோடு தூக்கி தள்ளி நிறுத்தினான்……

 

திடீரென்று ஒருவன் தன்னை அவ்வாறு தூக்கம் தூக்கவும் விஹானா பயந்து போய் அவளின் பர்தாவை தூக்கி அவனைப் பார்த்தாள்…..

 

ஹே யாருடா நீ ??எதுக்கு என்னை இப்படி தூக்கி நிறுத்திருக்க??

 

ஒழுங்கா என்கிட்ட உண்மைய சொல்லு இந்த வீட்ல என்ன திருட வந்த?

 

திருட வந்தேனா??

 

பின்ன பொண்ணு பார்க்க வந்தியா? பூட்டுன வீட்டில் பூட்ட புடிச்சு  இழுத்துட்டு இருக்குற?

 

அப்பொழுது அஸ்வதி சரியாக விஹானாவிற்கு அழைக்கவும் விஹானா விக்ரமை முரைத்துக் கொண்டு போன் அட்டென்ட் செய்து பேசினாள் …….

 

ஹலோ அஸ்வதி உனக்கு எத்தன தடவ போன் பண்றது ? ஒரு தடவையாது போன் எடுத்தியா?

 

ஏன் என்னாச்சு விஹான்னா?

 

இன்னும் என்ன ஆகனும் நா உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கும்ன்னு உங்க கிட்ட சொல்லாம உங்க வீட்டுக்கு வந்து உங்க முன்னால நிக்கலாம்ன்னு வந்தா நீங்க எல்லாரும் வீட்டை பூட்டிட்டு எங்க போயிட்டீங்க ? போன் பண்ணா எடுக்கல அதான் உங்க வீட்டு பூட்ட புடிச்சிட்டு நின்னுட்டு இருந்தேன் அத பார்த்து ஒரு போலீஸ் என்னை திருடின்னு நினைச்சி பிடிச்சி வைச்சிருக்குறார்……

 

போலீசா??

 

ஆமா போலீஸ் தான் ……

 

விஹானா போன அந்த போலீஸ் கிட்ட கொடு…….

 

சார் இந்த வீட்டோட ஓனர் பேசுறாங்க பேசுங்க என்று அவனிடம் விஹானா போனை கொடுத்தாள்…..

 

ஹலோ தங்கச்சி  இவங்க உங்க வீட்டுக்கு வந்த விருந்தாளின்னு தெரியாம பண்ணிட்டேன்மா மன்னிச்சிடுமா……

 

விக்ரம் அண்ணா நீங்களா?  ஐயோ அண்ணா உங்க கிட்ட வீட்டோட இன்னொரு சாவி இருக்குல்ல அத விஹானா கிட்ட குடுங்க நாங்க வர்றதுக்கு ராத்திரி ஆகிரும் , அவள கொஞ்சம் பாத்துக்கோங்க……

 

சரிம்மா நா போன அவங்ககிட்ட கொடுக்கிறேன்……

 

விக்ரம் போனை விஹானாவிடம் கொடுத்தான்……

 

விஹானா ரொம்ப சாரிப்பா……..

 

பரவாயில்லை இருக்கட்டும் அஸ்வதி நீ என்ன தெரிஞ்சா பண்ணுன? இந்த போலீசும் கரெக்டா அவங்க வேலைய தான் பார்த்திருக்கிறாங்க , சோ விடு அஸ்வதி நா பாத்துக்குறேன் சீக்கிரம் நீங்க வீட்டுக்கு வாங்க உங்கள நான் எதிர்பார்த்துட்டு இருப்பேன்……

 

கண்டிப்பா நாங்க சீக்கிரம் வந்துடுறோம்  நீ பத்திரமா இரு……

 

அதான் என் கூட உன்னோட போலிஸ் அண்ணா நிக்கிறாங்களே நா பத்திரமா தான் இருப்பேன் என்று  அவள் சிரித்துக் கொண்டே போனை கட் செய்தாள்……

 

தொடரும் ………

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்