Loading

பாகம் – 48

விக்ரம், “அது மட்டும் இல்லை சின்ன வயசில் இருந்தே அவங்க என்னை திட்டியதே கிடையாது”. 

“ஆதித்யா தப்பு பண்ணாலும் சரி நான் தப்பு பண்ணாலும் சரி ஆதித்யாவை தான் லட்சுமி அம்மா அடிப்பாங்க திட்டுவாங்க எல்லாமே பண்ணுவாங்க”. 

“ஆதித்யா பைக் கேட்டால் வாங்கி தர மாட்டாங்க குடும்ப கஷ்டத்தை புருஞ்சுக்கோ அப்படின்னு சொல்லுவாங்க”. 

“அவங்க சொன்ன மாதிரி அப்போ எல்லாம் ராஜேந்திரன் அப்பா பிஸ்னஸ் கொஞ்சம் லாஸ் ல இருந்துச்சு”.

“ஆனால், நான் கேட்டால் மட்டும் அடுத்த செகண்ட் வாங்கி கொடுப்பாங்க. அப்படி பண்ணும் போது என்னை மட்டும் யாரோவாக பார்ப்பது போல் தோன்றும்”.

“என்கிட்ட ஏன் ஒரு வாட்டி கூட குடும்ப கஷ்டம் என்று சொல்லி மறுக்கவே இல்லை”. 

“அவங்க எனக்கு மட்டும் எல்லாமே பண்ணும் போது. அந்த குடும்பத்தில் இருந்து என்னை மட்டும் தள்ளி வைத்தது போல் தோணுச்சு” என்று அவன் ரொம்பவே கவலையுடன் பேசிக் கொண்டு இருந்தான்.

பிறகு நிலா, விக்ரமுக்கு தண்ணிர் கொடுத்தாள். விக்ரம் தண்ணியை குடித்துவிட்டு, “ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் என் மனசு லேசாக இருப்பது போல் தோன்றுது”.

“என் மனசில் இருந்த பாரம் மொத்தத்தையும் இறக்கி வைத்தது போல் இருக்கு” என்றான். 

நிலா, “உங்க லைஃப்ல திரும்ப நான் வந்துட்டேன். இதுக்கு அப்புறம் உங்க லைப்ல எப்பவுமே சந்தோஷம் மட்டும் தான் நிறைஞ்சு இருக்கும்” என்றாள் அவனை கட்டி அணைத்தபடி.

பிறகு விக்ரம், நிலா மடியிலே படுத்து உறங்கிப் போனான்.

மறுநாள் காலை யாருக்கும் காத்தில்லாமல் கதிரவன் வெளியே வந்துவிட சக்தி சந்தோஷமாக விசில் அடித்தபடி கண்ணாடியை பார்த்து தலைவாரிக் கொண்டு இருந்தான். 

சுஜிதா, “என்ன சார் என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்க மாதிரி தெரியுது” என்றாள். 

சக்தி, “ஆமாம் பின்ன சந்தோஷமா இருக்காதா என்ன. நீ எனக்கு சர்ப்ரைஸ் தரதாக சொல்லி இருக்கியே” என்றான். 

சுஜிதா முகம் லேசாக வாடியது போல், “ஆமா நான் தர சர்ப்ரைஸ் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் தான்” என்றாள். 

சக்தி, “சரி நான் ஒரு முக்கியமான வேலையாக வெளியே போறேன். சாயங்காலம் தான் வீட்டிற்கு வருவேன்”. 

“நான் வந்தவுடன் நீ என்ன சர்ப்ரைஸ் என்று என்கிட்ட கண்டிப்பா சொல்லிடனும்”. 

“அப்போ தான் நானும் உனக்கு சர்ப்ரைஸ் தருவேன்” என்றான். ரொம்ப ரொம்ப சந்தோஷமாக அங்கிருந்து கிளம்பினான். பிறகு சுஜிதாவும் எங்கேயோ அவசரமாக கிளம்பி சென்றாள்.

நிலா சுட சுட காபியுடன் விக்ரமை எழுப்பிக் கொண்டு இருந்தாள், “மிஸ்டர் துருவ் சீக்கிரம் எழுந்திரிங்க” என்றாள்.

விக்ரம் எந்த ஒரு அசைவும் இன்றி அப்படியே படுத்து இருந்தான். 

நிலா கோபமாக, “இப்போ உங்களை எப்படி எழுப்புகிறேன் என்று பாருங்க” என்று காப்பியை பக்கத்தில் இருக்கும் டேபிள் மேல் வைத்துவிட்டு.

தன் தலையில் சொட்டும் முடியின் ஈரத்தை விக்ரம் முகத்தில் சாரலை போல் தெளித்தால். 

அப்பொழுதும் விக்ரம் எந்த ஒரு அசைவும் இல்லாமல் அப்படியே இருந்தான். நிலாவுக்கு பயம் தொற்றிக் கொண்டது. 

நிலா வாய்விட்டே புலம்ப ஆரம்பித்தாள், “அச்சச்சோ என்ன ஆச்சுன்னு தெரியலையே” என்று புலம்பியபடி அவன் முகத்தின் அருகே சென்று அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தால்.

ஜுரம் ஏதாவது இருக்கிறதா என்று அந்த சமயம் விக்ரம் அவளை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டான். நிலாவுக்கு வெட்கத்தில் முகமே சிவந்து விட்டது. 

விக்ரம், “சோ க்யூட் டி செல்லம்” என்று அவள் முகத்தைப் பார்த்தவன், “அச்சோ என்ன என் பொண்டாட்டி முகம் இவ்வளவு செகப்பா இருக்கு”.

“அப்படியே செர்ரி பழம் மாதிரி இருக்கு இப்பவே கடிச்சு சாப்பிடனும் போல் இருக்கு” என்று அவள் உதட்டை பதம் பார்த்தான். 

சிறிது நேரம் கழித்து நிலா அவன் கன்னத்தைப் பிடித்து தன்னிடமிருந்து விளக்க முயற்சித்தாள்.

ஆனால், விக்ரம் அவளுக்கு விடை கொடுப்பதாகவே இல்லை. மிகவும் கடினப்பட்டு அவனை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்தாள். 

பிறகு நிலா, “காலையிலேயே என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. நான் குளிச்சிட்டே வந்துட்டேன். இப்போ இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்றாள் வெட்கத்துடன்.

விக்ரம், “ஓ அப்போ குளிக்கறதுக்கு முன்னாடி இப்படி பண்ணி இருந்தால் உனக்கு ஓகேவா? பொண்டாட்டி” என்று கண் அடித்தான். 

நிலா வெட்கத்துடன் சிரிப்பை கடினப்பட்டு மறைத்துக் கொண்டு, “அப்படி ஒரு நாள் நடந்தது என்றால் அப்போ கேளுங்க நான் ஓகேவா இல்லையா என்று சொல்கிறேன்” என்று அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள். 

கீழே சென்ற நிலா டிபன் எல்லாம் தடபுடலாக ரெடி செய்தாள். அனைவரும் காலை உணவை உண்டு முடித்த பின் ராஜேந்திரன் எங்கேயோ அவசரமாக கிளம்பினார். 

ராஜேந்திரன் ராஜலட்சுமியை தனியாக அழைத்து, “இன்னைக்கு அந்த பிரச்சனைக்கான முடிவு கண்டிப்பாக கிடைத்து விடும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறிவிட்டு.

சாமி படத்தின் முன்பு நின்று நன்றாக வேண்டிக் கொண்டு அங்கிருந்து சென்றார். 

அதை கவனித்த நிலா, “துருவ் நீங்க சாப்பிடுங்க எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் போயிட்டு வந்திடுறேன்” என்று அங்கிருந்து அவசரமாக கிளம்பினால்.

விக்ரம், “இரு டி நானே உன்னை கூட்டிட்டு போறேன். எங்க போகணும்?” என்றான். 

நிலா, “அதுக்கெல்லாம் அவசியமே இல்லை. நான் ஒரு முக்கியமான விஷயமாக போகிறேன். நானே சீக்கிரம் வந்திடுவேன்” என்றாள்.

விக்ரம், “சரி ஒரு நிமிஷம் இரு. உன் கிட்ட ஃபோன் கூட இல்லை. நீ பாட்டுக்கு போற அப்புறம் நீ எப்போ வருவ என்று எனக்கு எப்படி தெரியும்” என்றான்.

ஒரு புது மொபைலை நிலா கையில் கொடுத்த விக்ரம், “உனக்காக தான் வாங்கினேன் சர்ப்ரைசாக கொடுக்கலாம் என்று நினைத்தேன்”.

“ஆனால், நீ இப்படி அவசரமாக போகும் போது இப்பவே தர வேண்டியதாக ஆகிடுச்சு” என்று அவளிடம் கொடுத்தான்.

நிலா யாரும் பார்க்காத வண்ணம் உதட்டை சுருக்கி காற்றிலே முத்தம் கொடுத்த படி சிரித்து விட்டு அங்கிருந்து சென்றாள். 

அதன் பிறகு விக்ரம் கிளம்பி தயாராகி ஆபீசுக்கு சென்று விட்டான்.

ஆபீஸில் ராஜேஷ், “என்ன மச்சான் கல்யாணம் பண்ண அடுத்த நாளே ஆபீஸ்க்கு வந்த. நான் கூட பரவாயில்லை ரொம்ப டெடிகேட்டடா இருக்க அப்படின்னு நினைச்சேன்”. 

“ஆனால், அடுத்த நாளில் இருந்து இரண்டு மாசம் கழிச்சு இப்போ தான் டா நீ ஆபீஸ்கே வர”. 

“நீ தான் இந்த ஸ்டார் பில்டர்ஸ் கம்பெனிக்கு ஓனர் ஞாபகம் இருக்கா இல்லையா” என்றான் கிண்டலாக.

விக்ரம், “சரி சரி ரொம்ப பண்ணாத டா மச்சான். நீ இருக்கும் போது எனக்கு என்ன டா கவலை இருக்கு”. 

“நான் இல்லை என்றாலும் நீ நல்லா பார்த்துப்ப என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு டா” என்றான்.

ராஜேஷ், “ஆமா இப்படியே சொல்லி சொல்லி என் வாயை அடைச்சிடு” என்று இருவரும் சேர்ந்து கம்பெனி வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள். 

அவசரமாக வெளியே சென்ற நிலா ராஜேந்திரனை பாலோ செய்ய ஆரம்பித்தாள்.

ராஜேந்திரன் நேராக ஓர் காஃபி ஷாப் வாசலில் காரை நிறுத்தி விட்டு ஓர் லேடியை காரில் ஏற்றிக் கொண்டு மறுபடியும் புறப்பட்டார்.

நிலா ஒன்றும் புரியாமல் ஓர் ஆட்டோவில் ராஜேந்திரனை மறுபடியும் ஃபாலோ செய்தாள்.

ராஜேந்திரனின் கார் கோர்ட் வாசலில் சென்று நின்றது.

நிலா ஒன்றும் புரியாமல் எதுக்கு மாமா கோர்ட்டுக்கு வந்து இருக்காங்க என்று யோசித்தால்.

ராஜேந்திரன் உள்ளே சென்றவுடன் நிலா வாசலிலே நின்று விட்டாள். சில மணி நேரத்திற்கு பிறகு ராஜேந்திரன் வெளியே வந்தார்.

நிலா ஓர் காருக்கு பின்னால் சென்று மறைந்து கொண்டாள். விக்ரம் கூறியது போலவே ஏதோ ஒரு லேடியுடன் ராஜேந்திரன் பேசிக் கொண்டு இருந்தார். 

ஆனால், அந்த லேடி வக்கீல் என்பது இப்பொழுது தான் அவளுக்கு தெரிந்தது. அன்றைய நாள் முழுக்க நிலா ராஜேந்திரன் பின்னாலையே ஃபாலோ செய்து கொண்டிருந்தாள். 

அந்த கோர்ட்டில் ஒரு லேடியிடம் பேசியதை தவிர்த்து வேறு எங்கும் யாருடனும் ராஜேந்திரன் பேசவே இல்லை. 

அவர் கேரக்டரை பார்க்கும் பொழுது நிலாவுக்கு சிறு சந்தேகம் கூட எழவில்லை. தப்பாக இருப்பவர் போல் தோன்றவும் இல்லை. 

பிறகு நிலா மாலை நேரம் வீட்டிற்கு சென்று விட்டாள். அதற்கு இடையில் விக்ரமிடம் இருந்து 20 ஃபோன் கால் வந்து விட்டது. 

எங்க இருக்க? என்ன பண்ற? எப்போ வீட்டுக்கு போவ? என்று பல போன் கால் செய்து கொண்டே இருந்தான்.

நிலா வீட்டை சென்றடைந்தால். ஹாலில் ராஜலட்சுமி ராதிகாவுடன் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து நிலா அவர்கள் அருகில் சென்று நின்றாள்.

ராதிகாவுக்கு ஓர் வேலையை கொடுத்து ராஜலட்சுமி உள்ளே அனுப்பி வைத்தார். பிறகு நிலா மற்றும் ராஜலட்சுமி அமைதியாகவே அமர்ந்திருக்க. 

சிறிது நேரம் கழித்து, ராஜலட்சுமி, “நீ சொன்னதும் சரி தான் மா. நேத்து விக்ரம் கிட்ட நான் சொல்லி இருக்கனும். பேசலாம் உட்காரு என்று சொல்லி இருக்கனும்”. 

“ஆனால், எனக்கு உள்ளுக்குள் சில பயம் இருக்கு. ஏன் என்றால் நான் விக்ரமை பேசுவதற்காக உட்கார சொல்லி அவன் என்கிட்ட எதுவுமே பேசாமல் போய் விட்டான் என்றால் என் மனசு ரொம்பவே உடைந்து போய்விடும்” என்றார்.

நிலா, “சீக்கிரமே உங்க பையன் உங்களை புரிந்துக் கொள்வார் அத்தை கவலைப்படாதீங்க” என்றாள்.

பாகம் – 49

விக்ரம் கம்பெனி வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு சாயங்கால நேரம் வீட்டிற்கு திரும்பினான். 

ஹாலில் நிலா மற்றும் ராஜலட்சுமி அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு விக்ரம் அங்கு நிற்காமல் மேலே சென்று விட்டான்.

நிலா, “அத்தை உங்க பையன் வந்துட்டாரு நான் போயிட்டு ஏதாவது வேண்டுமா என்று கேட்டுட்டு வரேன்” என்று அவளும் விறுவிறு என மாடிக்கு சென்று விட்டாள்.

பிறகு மேலே சென்ற நிலா, “துருவ் என்ன நாங்க வெளியில் ஒக்கார்ந்து இருக்கிறதை கூட கண்டுக்காமல் நீங்க பாட்டுக்கு மேல வந்துட்டீங்க” என்றாள். 

விக்ரம், “அப்படியா நான் கவனிக்க வில்லை” என்று கூறிக்கொண்டே நிலாவை பின்புறம் இருந்து கட்டி அணைத்த படி, “நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் டி தெரியுமா?” என்றான். 

நிலா, “அப்படியா அப்போ தினசரி ஆபீஸ்க்கு போகாமல் வீட்டிலேயே இருக்கீங்களா. நம்ம ஒன்னா ஜாலியா இருக்கலாம்” என்றாள். 

விக்ரம், “நீ சொல்றது கூட நல்லா தான் இருக்கு. பேசாமல் அந்த ராஜேஷை ஆபீஸ் வேலை எல்லாத்தையும் பார்த்துக்க சொல்லிட்டு நான் வீட்டில் உன் கூடவே இருந்திடுறேன்” என்றான் அவள் மூக்கை பிடித்து ஆட்டிய படி. 

நிலா அவன் கையை தட்டி விட்டு, “நீங்க சொல்றது ரொம்ப நல்லா இருக்கு” என்று அவனைப் பார்த்து முறைத்தாள். 

பிறகு விக்ரம் நிலா கன்னத்தில் ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு, “சரி நான் போயிட்டு பிரெஷ் ஆகிட்டு வரேன்” என்று பாத்ரூமுக்குள் சென்று விட்டான். 

நிலா அவனுக்காக அங்கேயே காத்துக் கொண்டு இருந்தாள். 

விக்ரம் வெளிய வந்தவுடன் அவன் கையில் நிலாவுக்காக காலையில் விக்ரம் கொடுத்த போனை திரும்பி கொடுத்தால். 

விக்ரம், “எதுக்கு ஃபோனை என்கிட்ட தர உனக்காக தானே நான் வாங்கி கொடுத்தேன்” என்றான். 

நிலா, “ஆமா நீங்க எனக்காக தான் வாங்கி கொடுத்தீங்க. நான் இல்லை என்று சொல்லலையே”. 

“அதுல ரெக்கார்டர்ல போய் பாருங்க ஒரு சில ரெக்கார்ட்ஸ் இருக்கும் அத கேட்டு பாருங்க” என்றாள்.

விக்ரம், “ஏன் என்ன ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்க” என்றான். நிலா, “அதை கேட்டு பாருங்க உங்களுக்கே தெரியும்” என்று அங்கு இருந்து கீழே சென்று விட்டாள். 

விக்ரம், “இரு டி இரண்டு பேரும் ஒன்னா சேர்ந்து என்ன என்று பார்க்கலாம்” என்றான்.

நிலா, “இல்ல அதை நீங்களே தனியா கேளுங்க அது உங்களோட பர்சனல்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டாள். 

கீழே சென்ற நிலா நேராகா கிச்சனுக்குள் சென்று இரவு உணவை தயார் செய்ய ஆரம்பித்தாள். 

விக்ரம் அவசரமாக அந்த ஃபோனில் ரெக்கார்ட் செய்து இருந்த கிளிப்சை ஆன் செய்தான். 

அதில் ராஜலட்சுமி, “எனக்கு விக்ரமை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவன் அதை புரிஞ்சுக்கவே மாட்டேங்குறான் என்று நினைக்கும் போது எனக்கு ரொம்பவே கவலையாக இருக்கு”.

“அவன் என்கிட்ட பேசாமலே இத்தனை வருஷமா இருந்துட்டான். ஆனால், அதனால் நான் எந்த அளவுக்கு கவலைப் பட்டுக்கிட்டு இருக்கேன் என்று அவன் என்னை பற்றி யோசிக்கவே இல்லை”. 

“சின்ன வயசில் இருந்து விக்ரமை நான் எந்த ஒரு காரணத்திற்காகவும் அவனை அடிச்சதோ, திட்டியதோ கிடையாது”. 

“அதுக்கு காரணம் என்னன்னு தெரியுமா? விக்ரமை நான் அடித்தாலோ அல்லது திட்டினாலோ ஏதாவது ஒரு கட்டத்தில் நம்ப சொந்த அம்மாவாக இருந்திருந்தால் இப்படி அடிச்சிருக்க மாட்டாங்க என்ற எண்ணம் அவன் மனசில் எப்பவும் வந்திடவே கூடாது என்று நான் உறுதியாக இருந்தேன்”. 

“அந்த ஒரு காரணத்திற்காக தான் அவனை நான் இது வரைக்கும் அடிச்சதே கிடையாது. பாசத்தை மட்டுமே காட்டி வளர்த்திருக்கேன்” என்றாள்.

நிலா, “ஆனா அத்தை விக்ரம் சின்ன வயதில் இருக்கும் போதெல்லாம் குடும்பம் கொஞ்சம் கஷ்டத்தில் தானே இருந்துச்சு”. 

“அப்புறம் எப்படி விக்ரம் கேட்டால் மட்டும் நீங்க அவருக்கு பைக் எல்லாம் வாங்கி கொடுத்தீங்க. நல்ல ஸ்கூல்ல சேர்த்து விட்டீங்க” என்றாள். 

ராஜலட்சுமி, “ஆமா நீ கேட்கிறது சரி தான் மா. விக்ரம் எது கேட்டாலும் நான் வாங்கி கொடுத்து இருக்கேன். உன் மாமா கிட்ட சண்டை போட்டு எல்லாம் நான் வாங்கி தர மாட்டேன்”. 

“உன் மாமா கிட்ட விக்ரம் க்கு என்று சொன்னால் உடனே அவரே வாங்கி கொடுத்திடுவார்”. 

“அதுக்கு காரணமும் அவன் மனதில் அவன் அம்மா, அப்பா யாராவது இருந்திருந்தால் எது கேட்டாலும் அது உடனே கிடைத்திருக்கும் என்ற எண்ணம் என்னைக்குமே வரக்கூடாது என்று தான்”.

“அவனுக்கு அம்மா இல்லை என்ற குறை எப்பொழுதும் அவனுக்கு வரவே கூடாது. அதுக்காக தான் அவன் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கஷ்டப்பட்டு நாங்க அதை வாங்கி கொடுத்திருக்கோம்”.

“ஏன்னா அவன் குழந்தையாக இருந்த போதில் இருந்தே அவனுடைய அப்பா, அம்மா அவன் கேட்கும் எல்லாத்தையுமே வாங்கிக் கொடுத்தே பழகிடாங்க”.

“திடீர் என்று ஒரு நாள் குடும்ப கஷ்டத்தை சொல்லி அவனுக்கு எதுவும் வாங்கி தரவில்லை என்றால் அவன் மனதில் வெளியே சொல்லா விட்டாலும் கஷ்டம் இருக்கும்”.

“நம்ம சொந்த அம்மா, அப்பா இருந்தா வாங்கி கொடுத்து இருப்பாங்க அப்படின்னு ஒரு இடத்தில் ஆவது நினைத்து பார்ப்பான்”.

“அந்த மாதிரி ஒரு எண்ணம் கூட அவனுக்கு வரக்கூடாது என்பதற்காக தான் நாங்க எல்லாத்தையுமே பார்த்து பார்த்து ரொம்ப ஸ்பெஷலா பண்ணி இருக்கோம்”. 

“அவனை ரொம்பவே சந்தோஷமாக வச்சு பாத்துகிட்டோம். அவன் சந்தோஷத்தை எங்க சந்தோஷமாக நினைச்சோம்”. 

நிலா, “நான் கேட்கிறேன் என்று நீங்க தப்பா நினைக்காதீங்க அத்தை. விக்ரம் பேசவில்லை என்று நீங்க இவ்ளோ கவலை பட வேண்டிய அவசியமே இல்லையே”.

“உங்க சொந்த பிள்ளைங்க ஆதித்யா அப்புறம் மித்ரா தானே. அவங்க இரண்டு பேரும் உங்க கிட்ட எப்பவும் நல்லா தானே பேசுறாங்க. அப்புறம் ஏன் நீங்க இவ்ளோ கவலை படுறீங்க” என்றாள்.

ராஜலட்சுமி, “இன்னொருவாட்டி இப்படி பிரிச்சு சொல்லாத மா. விக்ரம் தான் என் மூத்த பிள்ளை”. 

“எப்போ அவன் இந்த வீட்டில் கால் எடுத்து வைத்தானோ அப்போத்தில் இருந்து அவனை என் பிள்ளையாக தான் வளர்த்துக்கிட்டு இருக்கேன்”. 

“இப்போ வேண்டும் என்றால் அவன் என்கிட்ட பேசாமல் இருக்கலாம். ஆனால் ஒரு நாள் கண்டிப்பா இந்த அம்மாவையும், அப்பாவையும் அவன் புரிஞ்சுப்பான். புரிஞ்சுகிட்டு எங்க கிட்ட வந்து பேசுவான்”. 

“அது மட்டும் இல்ல நீ சொன்ன மாதிரி ஆதித்யாவும், மித்ராவும் என்கிட்ட தினசரி பேசிக்கிட்டு தான் இருக்காங்க”. 

“ஆனா அவங்க பேசினால் மட்டுமே என்னோட தினசரி நாட்கள் முழுமை அடையாது”.

“விக்ரமை நான் பார்த்தாலோ அல்லது பேசினாலோ மட்டும் தான் எனக்கு அந்த நாள் முழுசா முடிஞ்ச மாதிரி ஒரு நிம்மதி கிடைக்கும்”.

“கண்டிப்பா ஒரு நாள் விக்ரம் எங்களை புரிஞ்சுபான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்றார்.

விக்ரம், ராஜலட்சுமியிடம் சண்டை போட்டு கோவித்துக் கொண்டதற்கு பிறகு இந்த அளவுக்கு விரிவாக ராஜலட்சுமி விக்ரமிடம் பேச முயற்சித்தும் விக்ரம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

ஒரு காலகட்டத்திற்கு மேல் ராஜலட்சுமி முயற்சி செய்வதை விட்டுவிட்டு கவலையில் முழுக ஆரம்பித்தார். 

இந்த ஆடியோ மொத்தத்தையும் கேட்டு முடித்த விக்ரம், இத்தனை வருடம் பேசாமல் தப்பு செய்து விட்டோமோ என்ற எண்ணத்துடன் எழுந்து நின்றான்.

விக்ரம் மனசாட்சியே அவனிடம் சண்டை போட்டது. தப்பு பண்ணது அப்பா. ஆனால் நான் தண்டனை கொடுத்திருக்கிறது அம்மாவுக்கு. 

அப்போ தப்பு என் மேலயும் தான் இருக்கிறது. அப்பா பண்ண தப்புக்கு அம்மா என்ன பண்ணுவாங்க. 

ஒன்னு நான் அதை அப்பவே அவங்களுக்கு ப்ரூப் உடன் நிரூபிச்சு இருக்கணும்‌.

நான் சின்ன பையனா இருக்கும் போது நான் வாயால சொன்ன விஷயம் அவங்களுக்கு விளையாட்டு தனமாக கோவத்தை உண்டாக்கி இருக்கும் நினைக்கிறேன்.

அதனால் தான் அதை அவங்க பெருசாவே எடுத்துக்க வில்லை. அவங்களை நான் இத்தனை நாள் கஷ்டப்படுத்தியதே போதும் என்று யோசித்தவன் ராஜலட்சுமியை பார்க்க அவசரமாக கீழே சென்றான்.

விக்ரம் பாதி படிக்கேட் கீழே இறங்கிய போது ராஜேந்திரன் சந்தோஷமான முகத்தோடு வீட்டிற்குள் நுழைந்தார். 

ராஜேந்திரன், ராஜலட்சுமியை கட்டி அணைத்து அவர் கன்னத்தில் தன் இரு கரங்களையும் வைத்து, “நான் சொன்னேன் இல்ல காலையில் இந்த கேஸ் கண்டிப்பா நம்ம பக்கம் ஜெலித்திடும் என்று”.

“நான் சொன்ன மாதிரியே இப்போ நடந்திருச்சு” என்றார் முகம் நிறைய புன்னகையோடும் ஆனந்த கண்ணீரோடும். 

ராஜலட்சுமி சந்தோஷமாக, “நீங்க சொல்றது உண்மையா? இத்தனை வருஷத்து முயற்சி உங்கள் வெற்றியை கொடுத்திடுச்சா?”. 

“கேஸ் நம்ம பக்கம் வந்திடுச்சா? அந்த ஆளுக்கு தண்டனை கிடைச்சிடுச்சா?” என்றார். 

ராஜேந்திரன், “ஆமாம் அவனுக்கு தண்டனை கிடைச்சிடுச்சு. ஆய்சுக்கும் இனி ஜெயிலை விட்டு வெளியவே வரவே முடியாது”. 

“ரொம்ப கஷ்டப்பட்டு இந்த கேசை நம்ம ஜெயிச்சிருக்கோம். முதலில் இத பத்தி விக்ரம் கிட்ட தான் சொல்லணும். விக்ரம் வீட்டில் இருக்கானா?” என்றார். 

விக்ரமுக்கு ராஜேந்திரனிடம் பேச விருப்பமில்லாமல் சட்டென்று மேலே செல்ல ஆரம்பித்தான்.

ராஜேந்திரன் விக்ரம் படிக்கட்டில் நின்றிருப்பதை பார்த்து, “ஒரு நிமிஷம் இங்க வாப்பா” என்றார். விக்ரம், அதை காதல் வாங்காத படி நின்று இருந்தான். 

ராஜலட்சுமி, “விக்ரம் அம்மாக்காக வரமாட்டியா?. உனக்கு அம்மா, அப்பா மேல இருக்க மரியாதை அவ்வளவு தானா”.

“எங்ககிட்ட வர மாட்டியா? எங்க கிட்ட பேச மாட்டியா? எங்களை நீ அவ்வளவு வெறுக்கிறியா?” என்றார்.

விக்ரம் எதுவும் கூறாமல் மௌனமாக கீழே சென்று அவர்கள் அருகில் நின்றான். 

ராஜேந்திரன், “விக்ரம் உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லவா பா? உன்னோட அப்பா அதாவது என்னோட அண்ணன் இறந்து போனதுக்கு நான் கேஸ் போட்டு இருந்தேன்”. 

“அதுல இன்னைக்கு நம்ம ஜெழிச்சிட்டோம். என்னோட அண்ணனை யார் சாவடிச்சாங்க என்று கண்டுபிடிச்சு நான் அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்துட்டேன் பா” என்றார் சந்தோஷமாக. 

“அது மட்டும் இல்ல பா. நீ இத்தனை வருஷமா நான் உன் அம்மாவுக்கு துரோகம் பண்ணுகிறேன் ஏதோ ஒரு லேடி கிட்ட பேசிக்கிட்டு இருக்கிறேன் என்று நினைச்சு தானே நீ என் மேல் கோவமாக இருந்த”. 

“ஆனால், அந்த லேடி வேறு யாரும் இல்லை. அவங்க ஒரு லாயர். அவங்க தான் இன்னைக்கு நம்ம கேஸ் ஐ ஜெயிச்சு கொடுத்திருக்காங்க பா” என்றார். 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்