Loading

 

பாகம் – 47

 

நிலா, “நீங்க சொல்றது எல்லாம் சரி தான் அத்தை. நான் சொல்றேன் என்று நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க”.

 

“இப்போ நீங்களே சொன்னீங்க இல்ல அவர் உங்களை பார்த்துட்டு அவர் அறைக்கு சென்று விட்டார்”.

 

“உங்க கூட உட்கார்ந்து பேசுவாங்க என்று நீங்க ஆசையாக எதிர் பார்த்ததா சொன்னிங்களே”.

 

“அப்போ நீங்களே அவரை கூப்பிட்டு இருக்கலாமே அஞ்சு நிமிஷம் பேசலாம் உட்காரு டா”.

 

“அப்படின்னு உறிமையா சொல்லி இருந்தால் அடுத்த நொடி அவர் உட்கார்ந்து இருப்பாரே”.

 

“நீங்க ஏன் அத்தை அப்படி சொல்லவே இல்லை. தப்பு எப்போதும் ஒருத்தவங்க மேல் மட்டும் இருக்காது. தப்பு யார் மேல் வேணாலும் இருக்கலாம்”.

 

“ஆனால், அதை திருத்தணும் என்று முழு மனதாக நினைத்தால் எப்படி வேண்டும் என்றாலும் திருத்தலாம்”.

 

“நீங்க கொஞ்சம் யோசிங்க” என்று கூறிவிட்டு நிலா தூங்குவதற்காக அங்கிருந்து சென்று விட்டாள்.

 

நிலா அவள் அறைக்கு சென்று பார்க்க அங்கு விக்ரம் ஏதோ ஒரு குழப்பத்துடன் அமர்ந்திருந்தான்.

 

நிலா, “துருவ் என்ன ஆச்சு? என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க?” என்றாள்.

 

விக்ரம் எழுந்து நிலாவை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டான்.

 

நிலா புரிந்து கொண்டால் அந்த இறுக்கமான அனைப்புக்கு பின்னால் ஏதோ ஒரு வலி இருக்கின்றது என்பதை அவள் உணர்ந்தாள்.

 

விக்ரம் வெகு நேரமாகியும் நிலாவை விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் விக்ரமுடைய இறுக்கமான அணைப்பு நிலாவுக்கு உடல் வலியை ஏற்படுத்தியது.

 

நிலா அவன் முதுகை தட்டிக் கொடுத்த படி, “என்ன ஆச்சு?” என்றாள். விக்ரம் பதில் அளிக்கவே இல்லை.

 

நிலா, “துருவ் நான் உனக்கானவள். நான் என்னமோ உன்னை விட்டுட்டு போக போறேன் என்று சொன்ன மாதிரி நீ இப்படி டைட்டா கட்டி பிடிச்சுகிட்டு இருக்க” என்றாள்.

 

விக்ரம் கோபமாக சட்டென்று அவளை விட்டு பிரிந்தவன் சோகமான முகத்துடன், “இன்னொரு வாட்டி இப்படி சொல்லாத நிலா”.

 

“நீ மட்டும் என் வாழ்க்கையில் இருந்து போயிட்ட அப்படின்னா அடுத்த நொடி நான் என் வாழ்க்கையவே முடிச்சுப்பேன்” என்றான்.

 

நிலா, “அச்சோ துருவ் ஏன் இப்படி சொல்றிங்க? நான் சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன்”.

 

“இதுக்கு எல்லாம் ஏன் நீங்க டென்ஷன் ஆகறீங்க. சரி இனிமே இப்படி சொல்ல மாட்டேன் சாரி” என்றாள் குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு.

 

விக்ரம் அவள் முகத்தைப் பார்த்தவுடன் எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவன் கோபம் பரந்து விட்டது.

 

விக்ரம், “சரி வா தூங்கலாம்” என்றான். நிலா, “அதற்குள்ளயா? நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றாள்.

 

விக்ரம், “எனக்கு புரியுது மேடம் நீங்க ரொம்பவே சந்தோஷமா இருக்கீங்க. உங்க மாமா உங்க பிரண்டு எல்லாரை பற்றியும் நீங்க புரிஞ்சுகிட்டீங்க”.

 

“அதனால் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க. இப்ப என்ன உன் புராணத்தை ஆரம்பிக்க போறியா?. சரி கண்டினியூ பண்ணு” என்றான் கிண்டலாக.

 

நிலா அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு, “உங்களுக்கு கிண்டலா இருக்கு இல்ல”.

 

“நானும் என் மாமாவும் எவ்வளவு ஒத்துமையா இருப்போம் தெரியுமா சின்ன வயசுல இருந்து”.

 

“உங்களுக்கு என்ன தெரியும் அதெல்லாம். எங்களை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

இவளும் விளையாட்டுக்கு கோபித்துக் கொண்டது போல்.

 

விக்ரம், “சரி சொல்லு டி என் செல்ல பொண்டாட்டி என்ன ஆச்சு? என்ன பேசணும்?” என்றான்.

 

நிலா, “நான் கேட்கிறேன் என்று என்கிட்ட நீங்க கோபப்படக் கூடாது. எனக்கு தெரிஞ்சுக்கணும் தோணுது அதனால் கேட்கிறேன்”.

 

“உங்களுக்கு என்கிட்ட சொல்லணும் என்று தோணுச்சுன்னா நீங்க சொல்லலாம்” என்றாள்.

 

விக்ரம், “ரொம்ப வளவளன்னு இழுக்காத டி மேட்டருக்கு வா டக்குனு என்ன ஆச்சு? உன்கிட்ட நான் ஏன் கோபப்பட போறேன்”.

 

“என் வாழ்க்கைக்கு வந்த வெளிச்சம் நீ. வெளிச்சத்திடம் கோபப்பட்டு யாராவது வாழ்க்கையவே இருட்டாக்கிக நினைப்பாங்களா” என்றான்.

 

நிலா கலகலவென சிரித்துவிட்டு, “என்ன கவிதையா?” என்றாள்.

 

விக்ரம், “நான் சொன்னது உனக்கு கவிதை மாதிரியா இருக்கு. உனக்கு பிடிச்சிருந்தா கவிதையாவே வச்சுக்கலாம்” என்றான்.

 

நிலா, “சரி சரி அப்புறம் காமெடி பன்னுங்க. இப்போ நான் விஷயத்துக்கு வரேன்”.

 

“உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் என்ன பிரச்சனை என்று நான் தெரிஞ்சுக்கலாமா” என்றாள்.

 

விக்ரம் முகம் சட்டென்று கோபமாக மாறியது, “இப்போ எதுக்கு உனக்கு அதெல்லாம்” என்றான்.

 

நிலா, “இல்ல தெரிஞ்சுக்கணும் என்று தோணுச்சு உங்களுக்கும், ராஜலட்சுமி அத்தைக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு என்று எனக்கு தெரியுது”.

 

“ஆனால், அது என்ன பிரச்சனை என்று தான் எனக்கு தெரியவில்லை. அதான் கேட்டேன்” என்றாள்.

 

விக்ரம் எதுவும் கூறாமல் மௌனமாகவே இருந்தான்.

 

நிலா, “உங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லை என்றால் நீங்க சொல்ல வேண்டாம்”.

 

“நான் உங்களை வற்புறுத்தி கேட்க நினைக்கலை. சும்மா தெரிஞ்சுக்கணும் என்று தோணுச்சு. அதனால் தான் கேட்டேன்” என்றாள்.

 

பிறகு விக்ரம், “உன்கிட்ட மறைச்சு நான் என்ன பண்ண போகிறேன். என் லைப்பின் ஒரு பாதி நீ”.

 

“அப்போ என்னை பற்றி முழுசாக நீ தெரிஞ்சுக்கணும் என்று நினைக்கிறதில் தப்பு இல்லையே” என்றான்.

 

நிலா அமைதியாக கையை கட்டிக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

 

விக்ரம் ஒரு பெருமூச்சு விட்ட படி, “நான் சின்ன வயசில் உன்னோட துருவ் ஆக உன்னை விட்டு பிரிஞ்சி ஃபாரின்க்கு போறதாக சொல்லிட்டு கிளம்பினேன். உனக்கு ஞாபகம் இருக்கா?”.

 

“அப்போ உன்னை விட்டு போனதுமே என்னோட வாழ்க்கையோட சந்தோஷமே என்னை விட்டு போயிடுச்சு”.

 

“நாங்க அப்பா பிசினஸ்காக லண்டனுக்கு போனோம். அங்க போன கொஞ்சம் நாட்களிலே என்னோட அப்பா பிசினஸில் ரொம்பவே பிராப்ளம் வந்துச்சு”.

 

“அப்போ நானும் சின்ன பையன். அதனால் எனக்கும் பெருசா அதை பத்தி எதுவுமே தெரியாது”.

 

“அதுக்கு அப்புறம் அங்க இருந்து உடனே பிரான்ஸ்க்கு கிளம்பினோம். அப்போ எல்லாம் கூட நான் ஜாலியா தான் இருந்தேன்”.

 

“லண்டனுக்கு போறோம் அடுத்து பிரான்ஸ்க்கு போறோம் இன்னும் ஜாலியா நிறைய ப்ளேஸ்க்கு போக போறோம் அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்தேன்”.

 

“ஆனா அது எல்லாமே எங்க குடும்ப கஷ்டத்துக்காக தான் போகிறோம் என்று எனக்கு அப்போ தெரியாது”.

 

“அங்க இருந்து கிளம்பி நாங்க பிரான்ஸ்க்கு போயிட்டோம். ஆனால் ரீச் ஆனதுமே ஒரு கார் ஆப்போசீட்டில் இருந்து வந்து எங்களை நேருக்கு நேர் மோதிடுச்சு”.

 

“அதுல அந்த நிமிஷமே என்னோட அம்மா, அப்பா எல்லாருமே இறந்து என்னை விட்டு போயிட்டாங்க. நான் மட்டும் மயங்கி விழுந்துட்டேன்”.

 

“அதுக்கு அப்புறம் அங்க இருந்தவங்க எல்லாரும் சேர்ந்து என்னை ஒரு ஹாஸ்பிட்டலில் சேர்த்தாங்க”.

 

“நான் கண்ணு முழிச்சதுக்கு அப்புறம் என்கிட்ட உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா? அப்படின்னு கேட்டாங்க”.

 

“என் அப்பா ஃபோனில் இருந்து என் அப்பாவோட தம்பி ராஜேந்திரன் அப்பா போன் நம்பரை எடுத்துக் கொடுத்தேன்”.

 

“ஆனா அவங்க தமிழ்நாட்டில் இருக்காங்க அப்படின்னும் சொன்னேன். உடனே அங்க இருந்த டாக்டர் என்னோட ராஜேந்திரன் அப்பாவுக்கு ஃபோன் போட்டாங்க”.

 

“இதுபோல் ஆக்சிடென்ட் ஆகிடுச்சு அதுல நான் மட்டும் பிழைச்சிட்டதாகவும் சொன்னாங்க”.

 

“ராஜேந்திரன் அப்பா அடுத்த 15 மணி நேரத்தில் பிரான்ஸ்க்கு வந்துட்டாங்க”.

 

“அதுக்கு அப்புறம் எல்லா ஃபார்மாலிட்டிசையும் முடிச்சிட்டு என்னை கூட்டிட்டு இங்க வந்துட்டாங்க”.

 

“அப்போதில் இருந்து நான் இப்ப வரைக்கும் இவங்க பையனா இங்க தான் இருக்கிறேன்”.

 

“நீ என்னை விட்டுட்டு போன அடுத்த கொஞ்சம் நாட்களிலே என்னோட அம்மா, அப்பா என்னை விட்டுட்டு போயிட்டாங்க”.

 

“என் வாழ்க்கையில் என்னை ஆசையாக துருவ் என்று கூப்பிடும் நீயும் இல்லை என்னோட அம்மாவும் இல்லை. அதனாலேயே எனக்கு அந்தப் பெயர் மேல் வெறுப்பு உண்டாகிடுச்சு”.

 

“இங்க வந்ததும் எல்லார்கிட்டயும் என்னை துருவ் என்று கூப்பிடாதீங்க என்று நானே சொல்லிட்டேன்”.

 

அப்போ தான் ராஜேந்திரன் அப்பா, “சரி அப்படின்னா இப்போதில் இருந்து நீ என்னோட பையன். அதாவது ஆதித்யா தேவ் மாதிரி உனக்கும் விக்ரம் தேவ் என்று பெயர் வைக்கிறேன்” என்றார்.

 

விக்ரம், “எனக்கும் அந்த பெயரில் சந்தோஷம் தான்”. இப்படியே சந்தோஷமாக என்னோட வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது”.

 

“நான் லெவன்த் படிக்கும் போது ஒரு நாள் ஸ்கூல் விட்டு வரும் போது ராஜேந்திரன் அப்பா ஏதோ ஒரு லேடி கிட்ட காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தேன்”.

 

“ஆனால், ஏதோ சீரியஸா பேசிக்கிட்டு இருந்தாங்க. அதுக்கு அப்புறம் யாரோ அடிக்கடி ஃபோன் பண்ணுவாங்க”.

 

“அந்த ஃபோனை எடுத்துகிட்டு தனியா போய் பேச ஆரம்பிச்சாங்க. நான் எல்லாத்தையுமே நோட் பண்ண ஆரம்பிச்சேன்”.

 

“எனக்கு ரொம்பவே கோவம் வந்துச்சு. அம்மா ரொம்பவே பாசத்துடனும், காதலுடனும் அவங்க கூட இருக்காங்க”.

 

“இந்த மாதிரி ஒரு வைஃபை ஏமாத்த எப்படி இவருக்கு மனசு வந்துச்சு?. இன்னொரு லேடி கூட பேசணும் என்று எப்படி தோணுச்சு?”.

 

“ஒரு மாசமா அவரை நான் ஃபாலோ செய்ய ஆரம்பித்தேன். அவர் அந்த காஃபி ஷாப்பில் அந்த லேடி கிட்ட பேசிட்டு இருந்தாரு”.

 

“அதுக்கு அப்புறம் ஒரு நாள் லட்சுமி அம்மாகிட்ட இது எல்லாத்தையும் நான் சொன்னேன்”.

 

“ஸ்கூல் லீவ் போட்டுட்டு அப்பாவை ஃபாலோ பண்ண எல்லாத்தையும் சொன்னேன்”.

 

“ஆனால், லட்சுமி அம்மா இது எல்லாத்தையும் கேட்டுட்டு அடுத்த செகண்ட் என்னை பளார் என்று அறைஞ்சிட்டாங்க. எனக்கு அவங்க அடித்ததில் கோபமே இல்லை”.

 

“ஆனால் அவங்க வாழ்க்கையவே இவரை நம்பி வீணாக்குறாங்க என்று நினைக்கும் பொழுது என்னால் ஒண்ணுமே பண்ண முடியலை அந்த இடத்தில்”.

 

“அதை நினைக்கும் போது தான் எனக்கு கோபம் வந்துச்சு. நான் சொல்றதை நம்பற மாதிரி அவங்க இல்லை. அதுக்கு அப்புறம் லட்சுமி அம்மா என்ன சொன்னாங்க என்றால்”.

 

ராஜலட்சுமி, “இதுக்கு அப்புறம் நீ அவரை ஃபாலோவே பண்ண கூடாது. நீ நினைக்கிற மாதிரி அவர் கிடையாது” என்று கோபமாக கூறினார்.

 

விக்ரம், “அப்படின்னு சொல்லி என்கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்க. அவங்க சொன்ன மாதிரி அதுக்கு அப்புறம் நான் என் வேலையை பாத்துட்டு அமைதியா இருக்க ஆரம்பிச்சுட்டேன்”.

 

“ஆனா இப்போ ரீசண்டா கொஞ்சம் நாளுக்கு முன்னாடி கூட அவரை பார்த்தேன் இன்னும் அந்த லேடி கூட பேசிட்டு தான் இருக்காரு”.

 

“அதோட அவங்க யாரு? என்ன? என்று எதையுமே நான் ஆராய விரும்பவில்லை. உண்மையாவே என்னை அவங்க பையனாக நினைத்து இருந்தால் நான் சொல்றத அவங்க நம்பி இருப்பாங்க”.

 

“ஆனால், அவங்க என்னை நம்பவே இல்லை. அப்பவே புரிந்து கொண்டேன் அவங்க என்னை அவங்க பையனாகவே நினைக்க வில்லை என்று” என்றான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்