Loading

பாகம் – 43

 

அறைக்கு சென்ற விக்ரம், நிலா விடம் பேசாமல் அமைதியாக படுத்துக் கொண்டான். 

 

நிலா, “என்ன நீங்க பாட்டுக்கு போய் படுத்துட்டீங்க என்கிட்ட பேசாமலே” என்றாள். 

 

விக்ரம், “எனக்கு மைண்ட் சரியில்லை எதுவாக இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்” என்றான். நிலா அவனை விடுவதாக இல்லை. நிலா, “ஏன் என்ன ஆச்சு?” என்றாள். 

 

அவளுக்குமே தெரியும் இவன் சக்தியை நினைத்து கோபமாக இருக்கிறான் என்று ஆனாலும் அது தெரியாதது போலவே கேட்டால்.

 

சட்டென்று எழுந்து அமர்ந்த விக்ரம், “அந்த சக்திக்கு எவ்வளவு திமிர் இருந்தால் உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டு இருப்பான்”. 

 

“எனக்கு நினைக்க நினைக்க கோவம் தலைக்கு ஏறுது. இப்பவே அவனை என் கையாலேயே அடிச்சு சாவடிக்கணும் போல் இருக்கு”. 

 

“எல்லாம் சுஜிதாவுக்காக தான் அமைதியாக இருக்கிறேன்” என்றான்.

 

நிலா, “ஐயோ அது சின்ன வயசுல நடந்த ஒரு விஷயம். நான் அதை மறக்கணும்னு நினைக்கிறேன்”. 

 

“ஆனால் நீங்களும் சுஜியும் சேர்ந்து அந்த விஷயத்தை பெருசா ஆக்கிக்கிட்டு இருக்கீங்க” என்றாள். 

 

விக்ரம், “சின்ன வயதில் நடந்தால் அப்படியே விட்டுடனுமா. இது என்ன சாதாரண விஷயமா?” என்றான் பல்லைக் கடித்த படி. 

 

நிலா, “சுஜி சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்குமே கொஞ்சம் சந்தேகமாக இருக்கு”. 

 

“உண்மையில் அன்னைக்கு நைட்டு யார் அந்த அறைக்கு வந்தது என்று எனக்குமே கன்ஃபார்மாக தெரியாது”. 

 

“நானாக தான் சக்தி மாமாவாக இருக்குமோ என்று நினைத்தேன்” என்றாள்.

 

விக்ரம், “நீ நினைத்தது சரியாக தான் இருக்கும் கண்டிப்பாக எல்லாமே அந்த சக்தியோட வேலையாக மட்டும் தான் இருக்கும்”. 

 

“நான் இன்னைக்கு அமைதியாக இருந்ததுக்கு காரணம் சுஜிதா ரெக்வஸ்ட்டாக கேட்டதுனால் மட்டும்தான்”. 

 

“நாளைக்கு இருக்கு அந்த சக்திக்கு ஒரு வழி பண்றேன் பாரு” என்றான் கோபமாக.   

 

விக்ரம் பேசியதை பார்த்து நிலாவுக்கு பயம் தொற்றிக் கொண்டது என்ன ஆகும் நாளைக்கு? என்று நினைக்கும் போதே அவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. 

 

நிலா மனதில் ஒரு பக்கம் சுஜி, சக்தி மாமாவை காதலிச்சுக்கிட்டு இருக்கா. 

 

சக்தி மாமாவை தப்பா சொன்னாலோ அல்லது அவங்க தான் தப்பு பண்ணாங்க என்று கன்ஃபார்ம் பண்ணாலோ அது சுஜி வாழ்க்கைக்கு தான் ஆபத்தாக போய் முடியும். 

 

இன்னொரு பக்கம் விக்ரம், சக்தி மேல் தான் தப்பு என்று கன்ஃபார்ம் ஆகிவிட்டது என்றால் கண்டிப்பாக சக்தியை சும்மா விட மாட்டார். 

 

கண்டிப்பாக விக்ரம் கோபத்தில் சக்தி மாமாவை ஏதாவது செய்து விடுவான். பிறகு போலீஸ் விக்ரமை தான் பிடிக்கும். 

 

ஐயோ இதற்காகவா இத்தனை வருஷம் காத்திருந்து கல்யாணம் பண்ணினோம். எல்லாம் இப்பொழுது பிரிந்து போறதுக்கா என்று நினைத்து வருந்தினாள்.

 

வீட்டிற்கு சென்றடைந்த சுஜிதா எந்த ஒரு குழப்பமும், டென்ஷனும் இல்லாமல் சாதாரணமாக அவள் அன்றாட வேலையை பார்க்க சென்று விட்டாள். 

 

சக்தி அவலையே நோட் செய்து கொண்டு இருந்தான். அவளுக்கு ஒரு துளி பயம் கூட இல்லை என்பதை அவன் புரிந்து கொண்டான். 

 

அவன் மனதில் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது. சமீபத்தில் என் வாழ்க்கையில் வந்தவள் இவள். 

 

எந்த நம்பிக்கையில் நான் தப்பு செய்திருக்க மாட்டேன் என்று நம்புகிறாள். நாளைக்கு இதற்கான முடிவு வந்ததும் கண்டிப்பாக இவ கிட்ட பேச வேண்டியது நிறைய இருக்கு. 

 

என் வாழ்க்கையில் இவள் வந்ததற்கு பிறகு என் வாழ்க்கையே மாறியது போல் தோன்றுகிறது. 

 

எனக்கு இவளை ரொம்பவே பிடிச்சிருக்கு. அதை நான் இவகிட்ட சொன்னால் என்ன ஏத்துப்பாளா என்று தெரியலையே. 

 

இவளுக்கு பிடிக்காமல் நான் இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்று நினைத்து என்னை ஏத்துக்காமல் விட்டு விடுவாளோ. 

 

இத்தனை வருஷமாக நான் நிலாவை பற்றி தப்பாக நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அது தப்பு என்று எனக்கு புரிய வைத்தால். 

 

நிலாவோட சூழ்நிலை என்கிட்ட அவளை அப்படி நடந்துக்க வெச்சிருக்கு. நிலா என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டதுக்கு யாரு காரணம் என்று தெரிந்த பின் அவனை நான் சும்மாவே விடமாட்டேன். 

 

நிலா குட்டி கிட்ட தப்பாக நடந்துக்க முயற்சி பண்ணவனுக்கு நாளைக்கு இருக்கு. அவன் யார் என்று கண்டுபிடித்து அவனை சாவடிக்காமல் விட மாட்டேன் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

 

சுஜிதா மனதில் சக்தி என் காதலை புரிஞ்சுக்க வேண்டும் என்று நான் இதை எல்லாம் பண்ண வில்லை. 

 

ஆனா அவன் மனதில் நிலா மேல் இருக்கும் கோபம் போக வேண்டும். 

 

நிலா, விக்ரமை உண்மையாக தான் காதலிக்கிறாள் என்று அவனுக்கு புரிய வைக்கணும். அதுக்காக மட்டும்தான் நான் இதை பண்றேன். 

 

ஆனால் நான் என் காதலை சொல்லி பல நாட்கள் ஆகிடுச்சு. சக்தி கிட்ட இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. 

 

அப்படி என்றால் அவனுக்கு என்னை பிடிக்க வில்லை என்று தானே அர்த்தம் என்று அவளே யூகித்துக் கொண்டாள்.

 

நாளைக்கு இந்த விஷயம் என்னவென்று ஒரு முடிவுக்கு வந்ததும் சக்தி கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி சொல்லணும் என்று யோசித்து கொண்டு கட்டிலில் படுத்து உறங்கி விட்டாள்.

 

ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்ற பின் யாருக்கோ போனில் தொடர்பு கொண்டால், “ஹலோ நான் ஜெயா பேசுகிறேன். பத்திரம் கைக்கு வந்து விட்டது”. 

 

“சீக்கிரமாக இது என்னோட பெயருக்கு மாற்றணும். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம் மாத்திடனும்” என்றாள். 

 

மறுபக்கம் இருந்தவன், “ஓகே மேடம் இன்னும் ஒன் வீக்ல மாத்திடலாம்” என்றான். ஜெயலட்சுமி, “சரி எப்போ வந்து பத்திரத்தை வாங்கி கிட்டு போறீங்க” என்றாள். 

 

மறுபக்கம் இருந்தவன், “நாளைக்கு ஈவினிங் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் பூங்காவுக்கு வாங்க நானும் அங்க வந்து வாங்கிக்கிறேன் பத்திரத்தை” என்றான். 

 

ஜெயலட்சுமி சந்தோஷமாக, “சரி ஓகே” என்று போன் ஐ துண்டித்தாள்.

 

நிலா பல குழப்பங்களோடு இரவு முழுக்க தூக்கம் இல்லாமல் இருந்தாள். மறுநாள் காலை சீக்கிரமாக விடிந்தது போல் அவளுக்கு தோன்றியது. 

 

விக்ரம் அவசர அவசரமாக குளித்து தயாராகி, “நிலா கிளம்பலாமா” என்றான். 

 

நிலா அவனை அதிர்ச்சியாக பார்த்தால், “என்ன இவ்வளவு காலையில் கிளம்பனுமா” என்றாள்.

 

விக்ரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நிலா, “சரி டூ மினிட்ஸ் இருங்க நானும் போய் ரெடி ஆகிட்டு வந்துடுறேன்” என்று சென்றாள். 

 

ஆனால் வேண்டும் என்றே ஆமை போல் கிளம்பிக் கொண்டு இருந்தாள்.

 

நிலாவுடைய நடவடிக்கைகளில் விக்ரம் புரிந்து கொண்டான் இப்பொழுது அவள் வீட்டிற்கு செல்வதில் அவளுக்கு விருப்பம் இல்லை என்று. 

 

அதை நினைத்து விக்ரமுக்கு கோபம் தான் வந்தது. அவளுக்கு சப்போர்ட் பண்ணி நான் பேசிக் கொண்டு இருக்கிறேன். 

 

ஆனால் இவள் இந்த பிரச்சனையை இப்படியே விட்டு விடலாம் என்று சொல்கிறாள் என்று யோசித்தவன் நிலாவை அழைத்தான்.

 

விக்ரம், “உனக்கு என்ன பிரச்சனை? இந்த விஷயத்தை பற்றி பேசுவது பிரச்சினையா? இல்லை இந்த விஷயத்தில் சக்தி மாட்டிப்பான் என்று பயப்படுறியா? இல்லனா இந்த விஷயத்தில் உன் ஃபிரெண்டு வாழ்க்கை வீணாகிவிடும் என்று பயப்படுறியா?” என்றான்.

 

நிலா மெதுவான குரலில், “எனக்கு உங்களை நினைத்து தான் பயமாக இருக்கு” என்றாள். விக்ரம், “என்னை நெனத்தா?” என்றான் அதிர்ச்சியாக. 

 

நிலா ஆமா என்று தலை அசைத்தவள், “இது எல்லாத்துக்கும் காரணம் யாராக வேணாலும் இருக்கலாம்”. 

 

“அது சக்தி மாமா வா இல்ல வேறு யாராவதா என்று எனக்கும் தெரியலை. மே பி வேறு யாராச்சும் கூட இருக்கலாம்”. 

 

“நீங்க இப்போ இருக்கிற கோவத்துக்கு அவங்கள கண்டுபிடிச்சு ஏதாச்சும் பண்ணிட்டீங்க அப்படின்னா போலீஸ் உங்களைத் தான் பிடிச்சுட்டு போகும்”. 

 

“எனக்கு உங்க கூட சேர்ந்து பல வருஷம் வாழும் என்று ஆசை இருக்கு”. 

 

“என்னோட அம்மா இல்லாமல், அப்பா இல்லாமல், என்னோட சின்ன வயசு துருவ் இல்லாமல் நான் எதெல்லாம் மிஸ் பண்ணேனோ அது எல்லாமே உங்க மூலமாக எனக்கு வேண்டும்“.   

 

“கண்டிப்பாக இது எல்லாம் என்னைக்காவது ஒரு நாள் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இத்தனை வருஷம் நான் வாழ்ந்து கிட்டு இருந்தேன்”. 

 

“எல்லா பிரச்சனைகளையும் தாண்டி திடீரென்று கண்ணு முன்னாடி நீங்க வந்து நின்டிங்க. நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன்”. 

 

“ஆனால் இந்த பிரச்சனையால் திரும்பவும் நீங்க என்னை விட்டு ரொம்ப தூரம் போயிடுவீங்கலோ என்று எனக்கு ரொம்ப பயமா இருக்கு”. 

 

“எனக்கு அதனாலேயே இந்த பிரச்சனையை இதோட விட்டுவிடலாம் என்று தோணுது” என்றாள் அழுது கொண்டே. 

 

அவள் கூறியதில் விக்ரம் கோபத்தையும் தாண்டி அவள் காதல் மேலோங்கியது. 

 

நிலாவை இறுக்கி கட்டி அணைத்த விக்ரம், “இனி எதுக்கும் பயப்படாதே இவ்வளவு நேரம் நான் அது யாருன்னு தெரிஞ்சா கண்டிப்பாக என் கையாலேயா சாவடிக்கனும் என்று தான் யோசித்தேன்”.  

 

“ஆனால் நீ இவ்வளவு தூரம் கவலைப்படும் போது நான் எப்படி அதை செய்வேன். நீ உன் மனசுல இருக்கிறத ஓபனா என்கிட்ட சொன்னா தானே எனக்கு தெரியும்”. 

 

“நீ எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தால் எனக்கு எப்படி புரியும்”.

 

“சரி இப்போ அது யாரா இருந்தாலும் சரி நான் எதுவுமே பண்ண மாட்டேன் போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்திடலாம் இப்போ ஓகேவா என் நிலாவுக்கு” என்றான். 

 

விக்ரம் இப்படி கூறியதும் நிலா மனசு கொஞ்சம் லேசாக ஆனது போல் இருந்தது. விக்ரம், நிலாவை சமாதானம் செய்ய ரொம்பவே கடினப்பட்டான்.

 

பிறகு இருவரும் தயாராகி கீழே சென்றார்கள். அங்கு ராஜலட்சுமியும், ராதிகாவும் சோபாவில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். 

 

நிலா ராஜலட்சுமியை பார்த்தவுடன், “அத்தை மித்ராவும், ஆதித்யாவும் கிளம்பிட்டாங்களா?” என்றாள்.

 

ராஜலட்சுமி, “ஆமாம் மா இப்போ தான் கிளம்புனாங்க. அதான் அவங்களை அனுப்பி விட்டு அப்படியே உட்காந்து இருக்கேன்” என்றார். 

 

நிலா, “மாமா எங்கே காணோம்?” என்றாள். ராஜலட்சுமி, “அவர் ஏதோ முக்கியமான போன் கால் வந்துச்சுன்னு இப்போ தான் வெளியில் கார்டன் பக்கம் போனாங்க” என்றாள்.

 

விக்ரம் கோபமான முகத்துடன் சட்டென்று கார்டனுக்கு சென்று பார்த்தான்.

 

ராதிகா, “ஆமா வீட்டு முதலாளி வந்திருக்காங்க கேள்வி மேல் கேள்வி கேக்குறாங்க”. 

 

“நீ ஒட்காந்து எல்லாத்துக்கும் பதில் சொல்லு. இதை எல்லாம் பார்த்தால் எனக்கு பிபி ஏறுது” என்றார்.

 

நிலா, “இல்ல நான் சும்மாதான் கேட்டேன்” என்றாள். ராஜலட்சுமி, “ராதிகா சும்மா இரு ஏதாச்சும் பேசிக்கிட்டே இருக்காத” என்று வாயை அடைத்தார்.

 

விக்ரம் ராஜேந்திரன் யாருடனோ சீரியஸாக பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தான். 

 

விக்ரம் மனதில் இன்னும் இந்த ஆளு திருந்தவே இல்லை. இந்த அளவுக்கு நம்பற பொண்டாட்டியை எப்படித் தான் ஏமாத்த மனசு வருதோ என்று நினைத்தவன் நிலா என்று சத்தமாக கத்தினான். 

 

அந்தக் குரலில் நிலா, “அத்தை அவங்க கூப்பிடுறாங்க நான் கிளம்புறேன்” என்றாள். 

 

ராதிகா, “இவளை ஒரு வார்த்தை சொல்லிட கூடாது உடனே அவனுக்கு மூக்கு வேர்த்திடும் உடனே கூட்டிட்டு போய்டுவான்” என்றார். 

 

நிலா அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று சிட்டாக பறந்து விட்டாள்.

 

விக்ரம் அருகில் சென்ற நிலா, “ஏன் இவ்வளவு சத்தமாக கத்துரிங்க மாமா போன் பேசிட்டு இருக்காங்க இல்ல டிஸ்டர்ப் ஆகாதா” என்றாள். 

 

விக்ரம் ராஜேந்திரனை பார்த்துக் கொண்டே, “அதெல்லாம் அவருக்கு ஆகாது. அவரால் இந்த குடும்பத்தோட சந்தோஷம் தான் டிஸ்டர்ப் ஆகும்”. 

 

“அது எப்போ இங்க இருக்கிறவங்களுக்கு புரிய போகுதோ தெரியலை” என்று சொல்லிவிட்டு நிலாவை கூட்டிக் கொண்டு ஜெயலட்சுமி வீட்டை நோக்கி சென்றான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்