Loading

பாகம் – 42

 

ஜெயலட்சுமி ஆஹா இங்க ஒரு பிரளயமே வெடிக்க போகுது போலயே என்று ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தார். ராஜலட்சுமி திரும்பி ராதிகாவை ஒரு பார்வை பார்த்தார். 

 

அதில் ராதிகா மெல்லிய குரலில், “நீங்க இவனுக்கு ரொம்பவே இடம் கொடுக்கறீங்க அக்கா நான் அவ்வளவு தான் சொல்லுவேன்” என்று அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

 

ஆதித்யா சோகமான முகத்துடன் ஓரமாக சென்று நின்று கொண்டான். அதை கவனித்த மித்ரா நேராக நிலாவை நோக்கி சென்றாள்.

 

மித்ரா, “அண்ணி எல்லாரும் நம்பளையே பார்க்குறாங்க ப்ளீஸ் நீங்க ஏதாவது செய்யுங்கள்”. 

 

“அண்ணா திடீர்னு சத்தமாக பேசியதும் எல்லாரும் ஆதித்யாவையும் அண்ணாவையும் பாத்துக்கிட்டு இருக்காங்க”. 

 

“இப்படியே எல்லாரும் அமைதியாக இருந்தால் ஏதாச்சு அவங்க இஷ்டத்துக்கு அண்ணாவை பற்றி தப்பா பேசுவாங்க ராதிகா சித்தியை போல்” என்றாள்.

 

நிலா அனைவரையும் திரும்பி பார்த்தாள். மித்ரா சொன்னது போல் தான் அனைவரும் விக்ரமை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். 

 

திடீரென்று அவன் ஆதித்யாவை திட்டியதால் அந்த சூழலை மாற்றுவதற்கு நிலா, “மித்ரா சரி நீ பாட்டு போடு” என்று மித்ராவுடன் சென்றாள். 

 

மித்ரா, ஆதித்யாவுக்கு கண் அசைத்தால் பாட்டு போடுமாறு. ஆதித்யாவும் அதை புரிந்து கொண்டு ஒரு பாட்டை ப்ளே செய்தான்.

 

“என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…

என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…

நான் உன்னில் உன்னில் என்பதால்..

என் தேடல் நீங்கிப் போனதே…

என்னில் நீயே என்பதால்..

என் காதல் மேலும் கூடுதே..

காண வேண்டும் யாதும் நீயாகவே…”

 

என்று பாட்டு ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க நிலா, விக்ரமை பார்த்து அழகாக நடனம் ஆடிக்கொண்டு இருந்தாள்.

 

விக்ரமுக்கு, நிலா நன்றாக நடனம் ஆடுவாள் என்பதே இப்பொழுது தான் தெரிகிறது.

 

அவளை பார்க்க பார்க்க அவன் கோபம் தணிந்து நிலா தனியாக ஆடுவதால் கோபத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு அவனும் நிலாவுடன் இனைந்து நடனம் ஆடினான். 

 

அனைவரும் இவர்கள் பெஸ்ட் கப்பிள்ஸ் என்று வாழ்த்தினார்கள். 

 

பிறகு ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிந்த பின் ஜெயலட்சுமி, “நிலா ஒரு நிமிஷம்” என்று அழைத்தார். 

 

நிலா வேறு ஒரு யோசனையில் இருந்ததால் ஜெயலட்சுமி கூப்பிட்டதை காதிலே வாங்கவில்லை.

 

ஜெயலட்சுமி இவளுக்கு எவ்ளோ திமிர் ஆகிடுச்சு. ஃபஸ்ட் எல்லாம் நிலா என்று சின்னதாக குரல் கொடுத்தாள் கூட அடுத்த நொடி என் கால் கீழே வந்து கிடப்பாள். 

 

ஆனால் இப்போ இந்த விக்ரமை கல்யாணம் பண்ணதும் திமிர் வந்திடுச்சு. 

 

நான் சத்தமாக கூப்பிட்டும் கூட எங்கேயோ பார்த்துக் கொண்டே ஒட்கார்ந்து இருக்காள் என்று நினைத்தார்.

 

ஆனாலும் வேறு வழி இன்றி மறுபடியும் நிலா அருகில் சென்று அவள் தோள் பட்டையில் கை வைத்து அழைத்தார். 

 

பிறகு நிலா, “சொல்லுங்க சித்தி” என்றாள். ஜெயலட்சுமி, “அது வந்து மா என்று வார்த்தைகளை இழுத்த படி அந்த பத்திரம்” என்றார். 

 

நிலா மனதில் கார்டனில் நடந்த விஷயங்கள் மட்டுமே திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டு இருந்தது. அவள் சிந்தனை மொத்தமும் அங்கேயே நின்று விட்டது.

 

அனைவர் முன்பும் சரித்த முகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முயற்சி செய்து சிரித்தாலே தவிர அவளுக்கு அங்கு நிற்க கூட மனம் இல்லை. 

 

சிறிது நேரம் தனியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. 

 

ஆனால் பங்க்ஷன் நேரத்தில் தனியாக சென்று விட்டாள் அனைவரும் தப்பாக எண்ணுவார்கள் என்ற காரணத்திற்காக தான் இவளும் இங்கேயே அமைதியாக ஒரு பக்கம் நின்று இருக்கிறாள். 

 

ஜெயலட்சுமி கேட்டதை கவனிக்காமல் மறுபடியும் அவள் அதே சிந்தனைக்கு சென்று விட்டாள்.

 

ஜெயலட்சுமி, நிலா கைகளைப் பிடித்து “பத்திரம் என்னம் மா ஆச்சு? கடன் அதிகமாக இருக்கிறது அந்த பத்திரத்தை சீக்கிரம் வச்சு காசு வாங்கணும்” என்றார்.

 

நிலா, “ஒரு நிமிஷம் சித்தி” என்று உள்ளே சென்றவள் பத்திரத்துடன் வந்து ஜெயலட்சுமி கையில் கொடுத்தாள். 

 

அதை வாங்கிக் கொண்ட ஜெயலட்சுமி யாரும் பார்க்காத வண்ணம் அவசரமாக பேக்கினுள் வைத்துக் கொண்டு சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்று விட்டாள்.

 

பத்திரம் கைக்கு கிடைத்த பின் அடுத்த நொடி ஜெயலட்சுமி, சக்தி, சுஜி என அனைவரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

 

அனைவரும் சென்ற பின் விக்ரம் அவன் அறைக்கு சென்று யோசனையோடே அமர்ந்து இருந்தான். 

 

ஹாலில் நிலா, ராஜலட்சுமி, மித்ரா, ஆதித்யா என அனைவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். 

 

மித்ரா, “நாளைக்கு எனக்கு காலேஜ் இருக்கு. நாளைக்கு ஊருக்கு போய்டுவேன் நெக்ஸ்ட் எப்போ வர முடியும் என்று எனக்கேத் தெரிய வில்லை” என்றாள் சோகமான முகத்துடன்.

 

நிலா, “அதுக்கு என்ன காலேஜ் டேஸ் எல்லாம் டக்குனு முடிஞ்சிடும் ஜாலியா என்ஜாய் பண்ணு காலேஜ் லைஃபை” என்றாள்.

 

ஆதித்யா, “ஆமாம் அண்ணி எனக்கும் காலேஜ் இருக்கு நாளைக்கு. நானும் கிளம்பிடுவேன்”. 

 

“இதோடு நெக்ஸ்ட் டைம் லீவுக்கு தான் மீட் பண்ண முடியும். சரி இப்போ நம்ப ஒரு செல்பி எடுத்துக்கலாம்” என்று மூவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தார்கள்.  

 

ராஜலட்சுமி, “நிலா நீ இவங்க சொல்லதை எல்லாம் நம்பாத. இவங்க இரண்டு பேரும் இப்படித் தான் பொய் சொல்லுவாங்க”. 

 

“லீவ் இல்லை என்றால் ஐயோ லீவ் இருந்தால் வீட்டுக்கு வரலாம் என்று நினைத்தேனே அப்படின்னு சொல்லுவாங்க”. 

 

“அப்படியே லீவ் கிடைத்து விட்டால் படிக்கனும் வர முடியாது அப்படின்னு சொல்லுவாங்க”. 

 

“வீட்டில் இருந்து கிளம்பும் போது மட்டும் இஷ்டமே இல்லாமல் கிளம்புகிற மாதிரி நடிப்பாங்க” என்றாள். 

 

நிலா சிரித்துக் கொண்டு இருந்தாள். பிறகு நிலா, “சரி எனக்கு தூக்கம் வருது நான் போய் தூங்குகிறேன்” என்று அங்கிருந்து சென்றாள்.

 

அங்கிருந்து செல்லும் பொழுது நிலா மனதில் ஒன்று மட்டுமே தோன்றியது. இவர்கள் எல்லோரும் விக்ரம் மேல் பாசமாக தான் இருக்கிறார்கள். 

 

இன்று ஆதித்யாவை அனைவர் முன்பும் விக்ரம் திட்டியதற்கு கூட ராஜலட்சுமி அத்தை எதுவுமே கூறவில்லை.

 

ஆதித்யா, மித்ரா இருவருமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. ஒரு குறையாக கூட என்னிடம் சொல்ல வில்லை. 

 

விக்ரம் மட்டும் ஏன் இவர்களிடம் சரியாக பேசுவது இல்லை என்று அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் யோசித்துக் கொண்டே சென்றாள்.

 

நிலா ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். விக்ரம் கோபமான முகத்துடன் அமர்ந்திருந்தான். 

 

நிலா கோபமாக உள்ளே சென்றவல், “நீங்க எதுக்காக ஆதித்யா கிட்ட அப்படி நடந்துக்கிட்டீங்க. பாவம் அவன் முகமே வாடி போச்சு” என்றாள். 

 

விக்ரம் நிமிர்ந்து நிலாவை பார்த்தவன், “இப்போ ஆதித்யா கிட்ட நான் அப்படி நடந்துக் கிட்டது மட்டும் தான் உனக்கு பிரச்சனையா?” என்றான். 

 

நிலா, “ஆமா நீங்க என்ன இருந்தாலும் ஆதித்யா கிட்ட அப்படி பேசி இருக்கக் கூடாது. அதுவும் எல்லார் முன்னாடியும்”. 

 

“எல்லாரும் அவனை தான் பாத்துக்கிட்டு இருந்தாங்க. அப்போ அவன் ரொம்ப ஷய்யா பீல் பண்ணியிருப்பான்”

 

“ஆதித்யா என்ன சின்ன பையன்னு நினைச்சீங்களா அவனும் காலேஜ் போறான் அவனுக்கு மெச்சூரிட்டி இருக்கு”.

 

“இப்படி நாளு பேரு முன்னாடி அவமானப் படுத்துற மாதிரி பேசுறீங்க. வெளியே சொல்லா விட்டாலும் மனசுல கஷ்டம் இருக்கும்” என்று அவள் பாட்டுக்கு பொரிந்து தள்ளினாள்.

 

விக்ரம் கோபமாக, “இப்போ என்ன பண்ண சொல்ற அதுக்கு” என்றான்.

 

நிலா, “உங்களை நான் எதுவும் பண்ண சொல்ல வில்லை. ஆனால் நீங்களே இரண்டு நிமிஷம் ஆதித்யா கிட்ட அப்படி நடந்துக் கிட்டது சரியா என்று யோசித்து பாருங்கள்”.

 

“அப்போ உங்களுக்கே புரியும் என்ன பண்ணனும் என்று” என்றாள். மறைமுகமாக ஆதித்யாவிடம் போய் பேசு என்பதை கூறினால். 

 

பிறகு நிலா அங்க நிற்காமல் குளியல் அறைக்குள் சென்று குளித்து முடித்து இரவு உடையை மாற்றிக் கொண்டு வருவதற்காக சென்று விட்டாள்.

 

பிறகு சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்த விக்ரம். ஆதித்யாவை பார்க்க கீழே சென்றான். 

 

ராஜலட்சுமி அப்பொழுது தான் தண்ணீர் குடிக்க அடுப்பங்கரையை நோக்கி சென்றிருந்தார்.

 

விக்ரம் சென்று ஹாலில் பார்க்க அங்கு மித்ராவும், ஆதித்யாவும் பேசிக் கொண்டு இருந்தார்கள். 

 

ஆதித்யா, “அண்ணா ஏன் என்கிட்ட எல்லார் முன்னாடியும் அப்படி பேசுச்சு” என்றான். 

 

மித்ரா, “அண்ணா ஏதாச்சும் ஆபீஸ் வேலையில் இருந்து இருப்பார். அந்த சமயத்தில் நீ போய் ஆடுங்க பாடுங்க என்று சொன்னால் யாராக இருந்தாலும் கோபப்பட தான் செய்வாங்க”. 

 

“அதுவும் நம்ப அண்ணா என்ன சாதாரண ஆளா பிசினஸ் மேன். அப்போ எவ்ளோ டென்ஷன் இருக்கும்”. 

 

“நம்ப அண்ணா பேசினது எல்லாம் ஒரு விஷயமா டா” என்று இருவரும் பேசிக் கொண்டிருக்க அதை காதில் வாங்கிய விக்ரம் லேசாக வருந்தினான். 

 

விக்ரம் நேராக சென்று ஆதித்யா அருகில் அமர்நது அவன் மேல் கை போட்டு, “என்ன டா அண்ணா மேல் கோவமா இருக்கியா?” என்றான். 

 

ஆதித்யா, எதுவும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டான். விக்ரம், “ஹே மித்ரா இங்க பாரேன் சாருக்கு கோவம் எல்லாம் வருது” என்றான் கிண்டலாக. 

 

ஆதித்யா முகத்தை திருப்பிய படி, “நான் ஒன்னும் கோபப்படல. நான் யாரு? உங்க கிட்ட எல்லாம் கோபப்படுவதற்கு” என்றான்.

 

விக்ரம், “சரிடா ரொம்ப ஓவரா பண்ணாத. ஏதோ ஒரு டென்ஷன்ல அப்படி பேசிட்டேன்” என்றான்.

 

ஆதித்யா, “சரி சரி பரவால்ல பொழைச்சு போங்க. நான் எதுவும் மனசுல வச்சுக்கல” என்றான் அவனும் கிண்டலாகவே. 

 

விக்ரமுக்கும் புரிந்தது ஆதித்யா உண்மையாகவே விக்ரம் பேசியதை நினைத்து வருத்தப்பட்டான் என்பது.

 

மித்ரா, “ஆமாம் அண்ணா இது என்ன புது பழக்கம் உங்களுக்கு” என்றால். 

 

விக்ரம் புரியாமல், “என்ன?” என்றான். மித்ரா, “அதான் இப்போ வந்து திட்டினதை பற்றி பேசுறீங்கலே” என்றாள். 

 

வழக்கமாக விக்ரம் கோபமாக பேசி விட்டால் இப்படி திரும்ப வந்து அதை பற்றி எல்லாம் பேச மாட்டான். 

 

மறுநாள் வந்து இயல்பாக பேசுவானே தவிர இப்படி பேசியதற்காக சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்து பேச மாட்டான். அதை தான் சுட்டிக்காட்டி மித்ரா விக்ரமிடம் கேட்கிறாள். 

 

விக்ரம், நிலா கூறியதை யோசித்துவிட்டு, “சும்மா தான் தோணுச்சு அதான் வந்தேன் பேசிட்டு போகலாம் என்று சரி ரெண்டு பேரும் போய் தூங்குங்க நாளைக்கு காலேஜுக்கு போகணும் இல்ல” என்றான். 

 

மித்ரா, “ஆனாலும் அண்ணா நீங்க இது போல் சின்ன வயதில் இவன் சரியாக படிக்க வில்லை என்று திட்டினால் இப்படி தான் இவன் கோபித்துக் கொல்வான்”. 

 

“அதுக்கு அப்புறம் நீங்க வந்து இதே போல் பேசி சமாதானம் செய்விங்க. இப்போ பார்க்க அந்த ஞாபகம் வருது” என்றாள் சிரித்துக் கொண்டு.

 

விக்ரம் லேசாக சிரித்தான். ஆதித்யா, “ஆமாம் இப்போ தான் பார்க்க எங்க அண்ணா மாதிரி இருக்கு” என்றான். 

 

விக்ரம், “சரி சரி போய் தூங்குங்க டைம் ஆச்சு” என்று இருவரையும் அனுப்பிவிட்டு இவனும் அறையை நோக்கி சென்றான்‌. 

 

விக்ரம் இப்படி வந்து பேசியதை எல்லாம் ராஜலட்சுமி கிட்சனில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

விக்ரம் ஆதித்யாவை திட்டியது லேசாக கஷ்டமாக இருந்தாலும் இப்பொழுது அவனாகவே வந்து ஆதித்யாவிடம் சொந்த தம்பியை போல் பேசிவிட்டு செல்வதைப் பார்க்கும் போது சந்தோஷத்தை கொடுத்தது. 

 

பிறகு அனைவரும் சென்று விட்டார்கள். நிலா விக்ரம் காக அறையில் காத்துக் கொண்டு இருந்தாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்